Wednesday, August 12, 2015

விதையை பாதுக்காக்க ஒரு ஐடியா!....

மரியாதைக்குரியவர்களே,
         வணக்கம். விதையை பாதுகாக்கும் பந்து பற்றி காண்போம்.
விதைப்பந்து 
                         மண் மற்றும் உரம் அல்லது பசுஞ்சாணத்தால் ஆன உருண்டை. இவற்றின் நடுவே மர விதை. உள்ளது.
செம்மண்ணில் பாதியளவு சாணத்தை கலந்து நீரூற்றி பிசைந்து உருண்டையாக உருட்டிக் கொள்ள வேண்டும். அதன் நடுவே நீங்கள் சேகரித்த விதைகளை வைத்து உருண்டையாக்கி விடுங்கள். சூரிய வெப்பத்தில் ஒரு நாள் காய்ந்தால் அது இறுகி விடும்.
நீங்கள் வெளியே செல்லும் போது மரம் நட வாய்ப்புள்ள இடங்களில் வீசி செல்லுங்கள். அவ்விதை மழை வரும்வரை எலி, எறும்பு, குருவிகளிடமிரிந்து பாதுகாப்பாய் இருக்கும். ஒரு வருடம் வரை விதை பத்திரமாக முளைக்க ஏற்றதாக இருக்கும்.
விதைகளைப் பொருத்தவரை சில நாட்களுக்கு தேவையான சத்துக்கள் விதையிலேயே வைக்கப்பட்டிருக்கும். எனவே சில நாட்களுக்குப்பின் உரம் தேவைப்படும். மண்ணில் கலந்துள்ள சாணமானது மண்ணில் நுண்ணுயிர்களை உருவாக்கி செடியின் வேர் மண்ணில் எளிதில் செல்ல ஏற்ற வகையில் பக்குவப்படுத்தி விடும். மண்ணின் கடினத்தன்மையை அகற்றி மிருதுவாக்கி விடும். சாணத்தை உண்ணும் நுண்ணுயிர்களின் கழிவை செடியின் வேர் உண்டு தன்னை அம்மண்ணில் நிலைப்படுத்திக் கொள்ளும்.
ஆனால் வெறும் விதைகளை விதைத்தால் அவை மற்ற உயிரிணங்களால் உணவாக்கப்படலாம். வெப்பத்தால் தன் முளைக்கும் தன்மையை இழந்து விடலாம். நிலமானது செடி வளர்வதற்கான தன்மை இல்லாமல் கடினமானதாக இருக்கலாம். அதனால் விதை முளைக்காது. ஆனால் விதைப்பந்தில் தண்ணீர் பட்டவுடன் இளகுவதுடன் நுண்ணுயிர்களை உண்டாக்கி நிலத்தை உழுது இளகுவாக்கிவிடும்.
எனவே உங்கள் வீடுகளில் சிறிது செம்மண் மன்றும் சாணத்தை சேகரித்து வையுங்கள். பழங்களை சாப்பிட்ட பின் நல்ல விதைகளை எடுத்து சேகரித்து வையுங்கள். ஓய்வு நேரத்தில் விதைப்பந்தை உருவாக்கி வைத்து வெளியே செல்லும் போது நல்ல இடம் பார்த்து வீசி விடுங்கள். கோடை காலமானாலும் வீசி விடுங்கள்.

No comments:

Post a Comment