Wednesday, March 30, 2011

13)இந்திய தேர்தல் ஆணையத்தின் விழிப்புணர்வு பிரச்சாரம்

(11)வாரிக்கொடுப்பதை விட வழிகாட்டுதல் சிறப்பானது!

             அனைவரும் வாக்களிப்போம்.


 எங்கள் வாக்கு! இலவசமாக தரமான கல்வி மற்றும் நல்லதொருவழிகாட்டி,வேலைவாய்ப்பு,தொழில்வாய்ப்பு பெருக்க  வாக்குறுதி கொடுப்பவர்களுக்கே!!!!!!


அன்பு நண்பர்களே,வணக்கம்.
     
          தற்போது தேர்தல் திருவிழா! துவங்கி இருக்கிறது.ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் அவரவர் பங்குக்கு எங்கும் இலவசம்,எதிலும் இலவசம் என அறிக்கைகளாக அள்ளி வீசுகின்றனர்.

      சிந்திக்க வேண்டிய தருணத்தில் நாம் உள்ளோம்.

   நமது நாடு மனித வளம் மிக்க நாடு. இளைஞர்வளம் மிக்க நாடு என்பதை அனைவரும் அறிந்ததே.

     மனித வளங்களை நாட்டு முன்னேற்றத்திற்காக பயன்படுத்தும் வகையில் நல்ல நல்ல திட்டங்கள் எவ்வளவோ இருக்கும் நிலையில்

        இளைஞர் சமுதாயம் தன்னம்பிக்கை பெறும் விதத்தில்,வேலைவாய்ப்புகள் பெறும் விதத்தில்,தொழில் வாய்ப்புகள் பெறும் விதத்தில் செயற்படுத்தக்கூடிய திட்டங்கள்,

       இந்த சமூகம் பொருளாதாரத்தில் முன்னேற,வாழ்வாதாரங்களைப் பெறும் விதத்தில் நல்ல நல்ல திட்டங்கள் நேர்மையான,முன்னேற்றப்பாதையில் செல்ல வழி வகுக்கும் திட்டங்களை தேர்தல் அறிக்கைகளாக, அளிக்கவோ அல்லது அது போன்ற திட்டங்களை செயல்படுத்தவோ எவ்வித சிந்தனையும் இன்றி ஆட்சியைப்பிடிக்கும் நோக்கத்திற்காக போட்டியிடும் அரசியல்வாதிகள் இலவசம்!இலவசம்!! என்றே பல  கவர்ச்சித்திட்டங்களை எப்போதும்போல வழங்கியவாறு உள்ளனர்.

         இந்த இலவசங்கள் அதனால் ஏற்படும் கடன் சுமைகள் நம் ஒவ்வொருவரின் தலையில் கட்டப்படுகின்றன.உழைக்கும் வர்க்கங்களை,இளைய சமூகத்தை முழு சோம்பேறிகளாக்கி ,மதுவும் மயக்கமுமாகி அனைவரையும் சோம்பேறிகளாக்குகின்றனர்

          .இதிலிருந்து நாம் மீள வேண்டும்.இதற்கு நாம் விழிப்போடு செயல்படவேண்டும். தேர்தல் வாக்குறுதிகள் நாம் கேட்க வேண்டும் 

       அதாவது  எங்களுக்கு இலவசங்கள் வேண்டாம்  வேலைவாய்ப்புகள் பெருக தொழிற்சாலைகள் அமைத்திட வேண்டும்.

        தொழில் வாய்ப்புகள் பெருகிட தேவையான வழிமுறைகள் உருவாக்க வேண்டும்.விவசாயத்தினைக் காக்க அல்லது பெருக்க முனைந்திட வேண்டும்

         .தரமான கல்வியினைக் கொடுத்திட ஆவண செய்யவேண்டும். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள ,திறமையுள்ள,ஆர்வமுள்ள இளைஞர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு தகுதியான பயிற்சியும் ஊக்கமும் கொடுத்து தன்னம்பிக்கையினை வளர்த்து 

       தொழில் நுட்பம் வளர்ந்துள்ள,நாகரீகம் வளர்ந்துள்ள இந்த நவீன உலகத்தில் தடம் மாறும் தடுமாறும் இளைஞர்களுக்கு ஆலோசனையும்,பயிற்சியும் கொடுத்து இளைஞர்களின் திறமைகளை வெளிக்கொணர உண்டான அனைத்து செலவினங்களைஏற்றுக்கொள்ள உறுதி கொடுக்க வேண்டும் .

   அவர்களுக்கே எங்களது வாக்கு என நாம் வாக்குறுதிகள் பெற வேண்டும்.

       அப்போதுதான் நாமும் முன்னேறுவோம்.நமது நாடும் முன்னேறும்.

Wednesday, March 9, 2011

(9) தமிழ் தட்டச்சுமுறைகள்-ஒரு ஒப்பீடு

       முயற்சியும், விருப்பமும் இருந்தால் அதிக பட்சம் ஒரு வாரத்தில் பழகி விடலாம்.
  
  


அன்பு நண்பர்களே,
                           paramesdriver.blogspot.com வலைப்பதிவிற்கு தங்களை வணங்கி வரவேற்கிறேன்.
         
           தமிழ் 99 தட்டச்சு முறை தமிழ் '99 விசைப் பலகை தமிழுக்கு சீர் தரமான விசைப் பலகையாகும். மற்றும் எளியமுறையாகும்.இருப்பினும் புழக்கத்தில் உள்ள தமிழ் தட்டச்சு முறைகளை ஒப்பீடு செய்து பார்ப்போம்.

    (1)    ரோமன் அல்லது அஞ்சல் அல்லது எழுத்துப் பெயர்ப்பு என்னும் தமிங்கிலம் தட்டச்சு முறை.
    
       ஆ,ஈ,ஊ,ஐ,ஏ,ஓ,ஔ போன்ற உயிர் எழுத்து நெடில்களை எழுத இரண்டு விசைகளை அழுத்த வேண்டும்.
      
         கா,கீ,கூ,கை,கே,கோ,கௌ போன்ற உயிர் மெய் நெடில் எழுத்துக்களை எழுத மூன்று அல்லது நான்கு விசைகளை அழுத்த வேண்டும்.
    
         ங,ஞ,த,ண,ள போன்ற உயிர் மெய் குறில் எழுத்துக்களை எழுத மூன்று விசைகள் அழுத்த வேண்டும்.

      (2)   பாமினி தட்டச்சு முறை
        
          ஆ,ஈ,ஊ,ஐ,ஏ,ஓ போன்ற உயிர் எழுத்து நெடில்களை எழுத shift key (அழுத்தி) உடன் சேர்த்து இரண்டு விசைகள் அழுத்த வேண்டும்.
       
         கீ,ஙீ,சீ,ஞீ,டீ,ணீ,தீ,நீ,பீ,மீ,யீ,ரீ,லீ,வீ,ழீ,ளீ,றீ,னீ -  வரிசை எழுத்துக்களுக்கும், கே,ஙே,சே,ஞே,டே,ணே,தே,நே,பே,மே,யே,ரே,லே,வே,ழே,ளே,றே,னே - வரிசை எழுத்துக்களுக்கும் மூன்று விசைகள் அழுத்த வேண்டும்.
          கோ,ஙோ,சோ,ஞோ,டோ,ணோ,தோ,நோ,போ,மோ,யோ,ரோ,லோ,வோ,ழோ,ளோ,றோ,னோ-வரிசை எழுத்துக்களுக்கு நான்கு விசைகள் அழுத்த வேண்டும்.
             
       (3)   தமிழ் தட்டெழுத்து  தட்டச்சு முறை
             
           பாமினியைப்போலவே அதே விசைகள்பயன்படுத்த வேண்டும்.
       
            ' ழ' வரிசை எழுத்துக்களை எழுத அதிகமான விசைகள்
         அதாவது

         ' ழ ' எழுத்து எழுத-இரண்டு விசைகள் அழுத்த வேண்டும்.
     
       ழொ,ழோ,ழௌ எழுத்துக்களுக்கு - நான்கு விசைகள் அழுத்த வேண்டும்.

       ழ-வின் மற்ற எழுத்துக்களுக்கு மூன்று விசைகள் அழுத்த வேண்டும்.

  
          (4)   தமிழ்'99 தட்டச்சு முறை

            அனைத்து உயிர் எழுத்துக்களுக்கும் (அ முதல் ஔ வரை)-ஒரு விசை மட்டும் அழுத்தினால் போதும்.
        
           ஃ -ஒரு விசை அழுத்தினால் போதும்.
     
       க,ங,ச,ஞ,ட,ண,த,ந,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன,-எழுத்துக்களுக்கு ஒரு விசை அழுத்தினால் போதும்.( ஆக 31 எழுத்துக்கள் எழுத ஒரு விசை அழுத்தம் கொடுக்க வேண்டும்)

          மீதமுள்ள 216 எழுத்துக்கள் எழுத இரண்டு விசைகள் அழுத்த வேண்டும்.

         தமிழ் எழுத்துக்களில் எந்த எழுத்து எழுதவும் இரண்டு விசைகள் அழுத்தத்திற்கு மேல் இல்லை.

            ஸ,ஷ,ஜ,ஹ,க்ஷ,ஸ்ரீ-ஆகிய எழுத்துக்களுக்கு மட்டும்' ஷிப்ட்' உடன் சேர்த்து இரண்டு விசைகள் மட்டுமே அழுத்தினால் போதும்.

     இந்த அறிவியல் பூர்வமான தமிழ் '99 தட்டச்சு முறையில் குறைந்த விசையழுத்தங்களில், விரல்களுக்கு எளிமையான வரிசையமைப்புகளில்
  
       ,அதிக நேரம், அதிக வேகத்தில்,அதிகப் பக்கங்களை களைப்பின்றி தொடர்ச்சியாக தட்டச்சு செய்யலாம்.
  
       இம்முறை கற்றுக் கொள்ளவும், விசைகளை மனதில் பதிய வைப்பதும் மிக எளிமையானதாகும். paramesdriver.blogspot.com // Sathy & Thalavadi

(8) தமிழ் விசைப்பலகை-இணைய எழுதி.

அன்பு நண்பர்களே,
             paramesdriver.blogspot.com வலைப்பதிவிற்கு வருகை தந்துள்ள தங்களை வணங்கி வரவேற்கிறேன்.
           
    கணினியில் விரைவாகத் தட்டச்சு செய்யவும்,தமிழில் சிந்திக்கவும் 
                TAMIL "99 பயன்படுத்துங்கள்.இம்முறை எளிமையானது.

       தமிழ்'99 விசைப் பலகையில் எழுத இந்தப் பதிவில் உள்ள, 
          ''இணைய எழுதி'' என்னும் பொத்தானை அழுத்தவும்.
           பிறகு திரையில் தோன்றும் விசைப் பலகையில் உள்ள பட்டன்களில் எழுத்துக்களைக் கிளிக் செய்தால் அதிலுள்ள மானிட்டரில் எழுத்துக்கள் தானாக பதிவாகும். பிறகு அதனை காப்பி எடுத்து அல்லது வெட்டி எடுத்து தேவையான பகுதியில் ஒட்டிக்கொள்ளலாம்.
             ஆனால் இம்முறையை ஆரம்ப காலத்தில் மட்டும் அதாவது புதியவர்கள் மட்டும் பயன்படுத்துங்கள்.
         விரைவில் தட்டச்சு செய்து பழகியபிறகு தமிழ் 99 விசைப்பலகையின் உதவியால் மட்டுமே தட்டச்சு செய்யுங்கள் .
          அதாவது டிரைவர் பணி செய்யும் நானே இரண்டு நாட்களில் தட்டச்சு செய்யப் பழகி விட்டேன். நன்றி!
                      இங்கு கீழேஉள்ள ''இணைய எழுதி'' என்னும் சதுர கட்டம் கட்டியுள்ள பெட்டியை  ஒரு கிளிக் மட்டும் செய்யுங்கள்.இதில் உங்களது விருப்பம் போல விளையாடுங்கள்.பயப்பட வேண்டியதில்லைங்க!.                        மேலே உள்ள சதுர கட்டம் போட்ட பெட்டியில் உள்ள ''இணைய எழுதி''  என்னும் இடத்தில் கிளிக் செய்து பயன்படுத்தி இருப்பீர்.  இந்த முறை உலக அளவில் கணினியில் ஒருமித்த கீ போர்டை பயன்படுத்த 1999-ம் ஆண்டு பிப்ரவரி 8-ந் தேதி சென்னையில் நடந்த இரண்டாம் உலகத் தமிழ் இணைய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. 
         தமிழறிஞர்கள் ஆலோசனைக்கேற்ப 1999-ல் தமிழக அரசு- TAMIL'99 போர்டு முறையை அனைவரும் பயன்படுத்த அரசாணையும் பிறப்பித்தது.
           தற்போது அனைத்து அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தட்டச்சு செய்யும் போது இந்த விசைப் பலகையின் நன்மைகள் பின்வருமாறு;-------

       1) உயிர்க் குறில் எழுத்துக்கள் இடது புறம் நடுவரிசையிலும் (அ,இ,உ,எ-A,S,D,G  )

      2)உயிர் நெடில் எழுத்துக்கள் இடது புறம் மேல் வரிசையிலும்( ஆ,ஈ,ஊ,ஐ,ஏ-Q,W,E,T,R  )

      3) ஒ,ஓ,ஔ இந்த எழுத்துக்கள் அதிகம் பயன் படாத காரணத்தால் இவைகளை இடது புறம் கீழ் வரிசையிலும் (ஔ,ஓ,ஒ-Z,X,C,V,B  )

    4)அதிகம் பயன்படுத்தும் க,ப,ம,த எழுத்துக்கள் வலது புறம் நடு வரிசையிலும் (ய,ந,த,ம,ப,க -' , ; ,;L,K,J,H )
  5)அடிக்கடி ஒன்றாக வரும் எழுத்துக்களான ஞ்ச-],[,ண்ட-P,O,ந்த-;,L,ங்க-B,H,ம்ப-K,J,ன்ற-I,U,போன்ற எழுத்துக்கள் அருகருகே இருக்குமாறும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இவைகளுக்கும், மற்றும் ச்ச,ண்ண,ட்ட,ன்ன,ற்ற,ள்ள,ய்ய,ந்ந,த்த,ம்ம,ப்ப,க்க,ர்ர,ல்ல,ழ்ழ,ங்ங,,வ்வ போன்ற  இரட்டை எழுத்துக்கள் தட்டச்ச
         புள்ளி வைப்பதற்கென கூடுதலாக விசைகள் அழுத்த வேண்டியதில்லை.முயன்று பாருங்கள். பயிற்சி செய்து பாருங்கள். ஒவ்வொரு பட்டனாக,எழுத்தாக அழுத்திப் பாருங்கள்.அதனை ''காப்பி''
எடுத்துப்பாருங்கள். அடுத்த இடத்தில் ''பேஸ்ட்''செய்து பாருங்கள். அதற்கு மேலும் முடியவில்லையா? எனக்கு நேரமும் இடமும் ஒதுக்குங்கள்.ஐந்து நிமிட வேலை! அப்புறம் பாருங்கள்.ஒரு இரண்டு வார்த்தையாவது தட்டச்சிப் பாருங்கள்.    

       அல்லது 
இந்த வலைப்பக்கத்தில் வலது புறம் உள்ள TNSF-LOGO விற்கு  கீழுள்ள, அல்லது BLOG Archive என்னும் கட்டத்திற்கு மேலே உள்ள  
                       '' W3 தமிழ்'99விசைப்பலகை''
   என்னும்  கட்டத்தினுள் ''மவுஸால்'' அதாங்க! அம்புக்குறியால் கீ போர்டு படத்தைத் தொடுங்கள்.அம்புக்குறி, ''கை'' வடிவமாக மாறினால் உடனே அழுத்துங்கள்.தமிழ்'99 கீபோர்டு மானிட்டர் தோன்றும்.இதிலும் தட்டச்சி விளையாடுங்கள்.            நன்றிங்க!. 
                                                பரமேஸ்வரன்.சி,
                        அரசுப் பேருந்து ஓட்டுனர்,
                  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்-கோவை கோட்டம்,
                    தாளவாடி கிளை - ஈரோடு மண்டலம்.