Monday, August 31, 2015

ஓட்றது ஒரு ஏரு! அதுல வெளாவுல புடீ

மரியாதைக்குரியவர்களே,
                      வணக்கம். ஓட்டுறது ஒரு ஏரு,அதை வெளாவுலே புடி என்றானாம் என்ற பழமொழிக்கு விளக்கம். இதோ.
 
"ஓட்றது ஒரு ஏரு! அதுல வெளாவுல புடீன்னானாம்!"
ஏர் ஓட்டுவதில் இரண்டு முறை உண்டு.
ஒற்றை ஏர் ஓட்டுவது, ஒன்றுக்கும் மேற்ப்பட்ட ஏர் ஓட்டுவது.
எப்படி ஓட்டினாலும் துவக்கத்தில் மூன்று படைக்கால் ஓட்ட வேண்டும்.
அதை வெளா ஓட்டுவது என்பார்கள். முதல் வெளா, இரண்டாவது வெளா, மூன்றாவது வெளா.
முதல் வெளா முழுமை அடைதவுடன் இரண்டு வெளாதான் மீதம் இருக்கும்.
அப்போது மீண்டும் ஒரு வெளா ஒட்டவேண்டும்.
அப்போதுதான் ஒவ்வொரு வெளா உழவு முடியும்போதும் உழவு பூமி தள்ளிப் பொய்க் கொண்டே இருக்கும்.
ஒரு ஏர் ஓட்டும்போது பிரச்சினை வராது.
ஆனால் பல ஏர் ஓட்டும்போது முதல் வெளா முழுமையடையும் நிலையில் அனைத்து ஏர்களும் அதே வெளாவில் வர இடம் இல்லாமல் இருந்தால் யாருடைய ஏருடன் முதல் வெளா முடிந்து விடுமோ,
அவர் முன்னேச்சரிக்கையாகத் தனக்குப் பின்னால் வருபவரைப் பார்த்து வெளாவுல புடி என்பார்!

உடனே அவருக்குப் பின்னால் உழவோட்டி வருபவர் எல்லோரும் முதல் வெளாவை விட்டுவிட்டு இரண்டாவது வெளாவிலேயே மாட்டைத் திருப்பி விடுவார்கள்.
அடுத்த பக்கம் போய் மீண்டும் இணைந்து கொள்வார்கள்.
இதுதான் வெளாவுல புடி அப்படிங்கிறதுக்குப் பொருள் ஆகும்.
அப்படிப் பிடிக்காமல் எல்லோரும் பின்னாலேயே வந்தால் ஒரு ஏருக்கு மட்டும் உழவு இருக்கும் நிலையில் அனைத்து எர்களும் ஒரே படைக்காலில் உழும்போது தேவையில்லாமல் மாடுகள் சுற்றுவதால் உழவு அதிகம் ஆகாது.
ஆனால் ஒரு ஏர் மட்டும் ஓட்டும்போது இந்தப் பிரச்சினை வராது!
பெரிய விவசாயிகள் பல ஏர்களைக் கொண்டு ஓட்டும்போது வெளாவுல புடி என்று அடிக்கடி சொல்லப்படுவதைக் கேட்கலாம்.
ஆனால் சின்ன விவசாயி தன்னுடைய ஒரு ஏர் கொண்டு ஓட்டுவதால் வெளாவுல புடின்னு சொல்லும் வாய்ப்பு இல்லை!
அதனாலதான் தகுதிக்கும் சக்திக்கும் அதிகமான யோசனை சொல்பவர்களைப் பார்த்துக் கிண்டலாக "ஓட்றது ஒரு ஏரு! அதுல வெளாவுல புடீன்னானாம்!" என்று எகத்தாளமாகப் பழமொழி சொல்வார்கள்!

Wednesday, August 26, 2015

தமிழ்நாடு சட்ட ஆராய்ச்சியாளர்கள் கூட்டமைப்பு,ஈரோடு

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.திண்டல் சுப்ரமணியன் பெருமாள் அவர்களது கொள்கைகளுக்கு உறுதுணையாக இருப்போம்.
http://rtigovindaraj.blogspot.in வலைத்தளத்தை பார்வையிட்டு சட்டம் அறிவோம்.

தமிழ் நாடு சட்ட ஆராய்ச்சியாளர்கள் கூட்டமைப்பு, ஈரோடு. எண் 6, ரோஜா கார்டன், திண்டல், ஈரோடு- 638012. Cell No : 9442090501.
 இந்திய அரசியல் சாசனக் கோட்பாடு 51- A ( 10 ) ன் படியான கடமைகளை செய்வதே இக்குழுவின் முக்கிய நோக்கமாகும். இக்குழு 5 இயக்குனர்களை கொண்டதாக இருக்கும்.பல துறைகள் உள்ளதால் பல குழுக்கள் அவசியமாகிறது. இக்குழு பல உட்குழுக்கள் இருக்கும். கற்பித்தலும் , கற்றுக் கொள்ளுதலும் இக்குழுவின் நோக்கமாக இருக்கும். விதிகளை செயற்கு குழு உருவாக்கும். அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இக் குழுவைப் பதிவு செய்ய வேண்டியது அவசியமாகிறது. செயல்பட ஆர்வம் உள்ளவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

பிராவிடண்ட் ஃபண்டு

மரியாதைக்குரியவர்களே,
             வணக்கம். தொழிலாளர் வைப்பு நிதி பற்றிய தகவல் அறிந்து கொள்வோம்.பதிவிட்ட ஃபேஸ்புக் நண்பர் திரு.செல்வம் பழனிசாமி ஐயா அவர்களுக்கு நன்றிங்க..
 
                      மாதச் சம்பளம் வாங்கும் அனைவருக்கும் P.F. பிஎஃப் கணக்கு என்பது நிச்சயம் இருக்கும்.P.F. பிஎஃப் கணக்கில் தெரிந்து வைத்திருக்க வேண்டிய முக்கிய 10 விஷயங்கள் எவை என்பதை சென்னை மண்டல ஆணையர் எஸ்.டி. பிரசாத் விளக்குகிறார்.

நாமினி!
"முதலீடு செய்யும்போது நாமினி என்பது முக்கியமான விஷயம். P.F.பிஎஃப் முதலீட்டுக்கும் நாமினி என்பது மிகவும் முக்கியம். வேலைக்குச் சேரும்போது பலரும் திருமணம் ஆகாமல் இருப்பார்கள். அப்போது பெற்றோரின் பெயரை நாமினி யாகக் காட்டியிருப்பார்கள். ஆனால், திருமணத்துக்குப் பிறகு நாமினியின் பெயரை மாற்றுவது முக்கியம். அதேபோல, நாமினியாக நாம் காட்டியவர் திடீரென இறந்துவிட்டால் புதிதாக வேறு ஒரு நாமினியை உடனடியாக நியமிப்பது அவசியம். வேலைப் பார்க்கும் நிறுவனத்தின் மூலமாகவோ அல்லது நேரடியாக P.F.பிஎஃப் அலுவலகத்துக்கோ சென்று புதிய நாமினியை நியமிக்கலாம்.
பென்ஷன்!
பத்து வருடத்துக்கு மேல் ஒருவர்P.F. பிஎஃப் கணக்கில் தொடர்ந்து பணம் செலுத்தி யிருந்தால் அவருக்கு P.F.பிஎஃப் பென்ஷன் கிடைக்கும். இந்த பென்ஷன் தொகையை 50 முதல் 58 வயதுக்குள் எப்போது வேண்டு மானாலும் திரும்ப வாங்கிக் கொள்ளலாம். 10 வருடத்துக்கு முன்பு வேலையை விட்டு நிரந்தரமாக விலகும்போது பென்ஷன் தொகை அட்டவணை D-யின்படி கிடைக்கும். இந்தத் தொகைக்கு வட்டி கிடையாது.
மேலும், 1.9.2014-க்கு பிறகு வேலைக்குச் சேர்ந்தவர்கள், மாதச் சம்பளம் 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வாங்குபவர் களுக்கு பென்ஷன் கிடையாது. P.F.பிஎஃப் செலுத்தும் தொகையில் அதிகபட்சமாக பென்ஷனுக்காக ரூ.1,249 பிடிக்கப்படும். இந்தப் பென்ஷன் தொகை P.F.பிஎஃப் உறுப்பினரின் ஆயுட்காலம் முழுவதும் வழங்கப்படும். பென்ஷன் காலத்தில் உறுப்பினர் இறந்துவிட்டால் அவரது வாரிசு தாரருக்கு இந்த பென்ஷன் தொகை கிடைக்கும்.
இடையில் பணம் எடுத்தல்!
  P.F.பிஎஃப் தொகையை சில காரணங்களுக்கு மட்டும் இடையில் எடுக்க முடியும். இதற்கு குறைந்தபட்சம் 5 வருடம் P.F.பிஎஃப் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். அதாவது,  P.F.பிஎஃப் உறுப்பினர், உறுப்பினரின் ரத்த உறவுகள், மகன்/மகளின் திருமணத்துக்கு, மருத்துவச் சிகிச்சை போன்றவற்றுக்குப் பணம் எடுக்கலாம்.
மேலும் வீடு வாங்கவும், வீட்டைப் புதுப்பிக்கவும் கடன் வாங்க முடியும். எந்தெந்த செலவு களுக்கு எவ்வளவு தொகை எடுக்க முடியும் என்பதை http://www.epfindia.com/site_en/WhichClaimForm.php 
இணைய தளத்தில் பார்க்கலாம்.
  P.F.பிஎஃப் கணக்கை முடிப்பது!
  P.F.பிஎஃப் கணக்கில் செலுத்தும் தொகை முழுவதும் இடையில் எடுக்க முடியாது. அதாவது, நிரந்தரமாக வேலையை விட்டுச் செல்லும்போதுதான் பணத்தை எடுக்க முடியும். 58 வயதுக்குமுன் சொந்த தொழில் செய்வதற்காக அல்லது மருத்துவ ரீதியான பிரச்னையினால் பணியிலிருந்து விலகும்போது, நிரந்தர ஊனம் ஏற்படும்போது, நிறுவனத்தை மூடும்போது  P.F.பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை வெளியே எடுக்க முடியும்.
இன்ஷூரன்ஸ்! (Employees’Deposit-Linked Insurance Scheme)
  P.F.பிஎஃப் உறுப்பினராக இருப்பவர்களுக்கு தொழிலாளர் வைப்பு சார் ஈட்டுறுதி காப்பீட்டுத் திட்டத்தில் கவரேஜ் கிடைக்கும். இதில் பணிக் காலத்தில் இறப்பு ஏற்பட்டால் இன்ஷூரன்ஸ் பாலிசியிலிருந்து க்ளெய்ம் பெற முடியும். இந்த பாலிசிக்கான பிரீமியத்தை நிறுவனம் செலுத்தி விடும். இந்த பாலிசியில் அதிகபட்சம் ரூ. 3.6 லட்சம் வரை கவரேஜ் கிடைக்கும். அனைத்து நிறுவனங்களும் இன்ஷூரன்ஸ் பாலிசி பிரீமியத்தைக் கட்டாயம் செலுத்த வேண்டும்.
அனைத்தும் ஆன்லைன்!
  P.F.பிஎஃப் அமைப்பில் உள்ள பெரும்பாலான சேவைகளுக்கு ஆன்லைன் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் இ-பாஸ்புக், P.F.பிஎஃப் பேலன்ஸ் செக் செய்து கொள்வது, P.F.பிஎஃப் ஸ்டேட்மென்ட் எடுப்பது என அனைத்தும் ஆன்லைனிலேயே செய்து கொள்ள முடியும். மேலும், உங்களுடைய செல்போன் எண்ணைப் பதிவு செய்து வைத்தால், ஒவ்வொரு மாதமும் உங்களின் கணக்கில் P.F.பிஎஃப் தொகை வரவு வைக்கப்பட்டதற்கான குறுஞ்செய்தி வரும். 
http://www.epfindia.com/site_en/ 
என்ற இணையதளத்தில் அனைத்துச் சேவைகளும் கிடைக்கிறது.
எதற்கு எந்தப் படிவம்?
  P.F.பிஎஃப் தொகையை வெளியே எடுப்பதற்கு, கடன் வாங்குவதற்கு என ஒவ்வொரு நடைமுறைக்கும் ஒரு படிவம் உள்ளது. அதாவது, P.F.பிஎஃப் வழங்கும் இன்ஷூரன்ஸ் பாலிசியின் கவரேஜ் தொகையைப் பெறுவதற்குப் படிவம் 5 சமர்பிக்க வேண்டும். P.F. பிஎஃப் கடன் வாங்குவதற்குப் படிவம் 31 உள்ளது. எதற்கு எந்தப் படிவம் என்பதை 
 http://www.epfindia.com/site_en/WhichClaimForm.php 
இணையதளத்தில் பார்க்க முடியும். அதற்கான படிவத்தை http://www.epfindia.com/site_en/Downloads.php?id=sm8_index 
டவுன்லோடு செய்துகொள்ள முடியும்.
புகார் தெரிவிக்க!
  P.F.பிஎஃப் தொடர்பான பிரச்னைக்கு, சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் இருந்து சரியான பதில் கிடைக்கவில்லை அல்லது வேலை பார்க்கும் நிறுவனத்தில்  P.F.பிஎஃப் தொடர்பான பிரச்னை இருந்தால் அது குறித்து புகார் தெரிவிக்க முடியும். இந்தப் புகாரை கடிதம் மூலமாகவும் தெரிவிக்கலாம். அல்லது ஆன்லைனிலும் தெரிவிக்க முடியும்.
 http://epfigms.gov.in/grievanceRegnFrm.aspx…
 &
 என்ற இணையதளத்தில் P.F. பிஎஃப் சம்பந்தமான புகார்களைத் தெரிவிக்க முடியும். ஆன்லைனில் புகார் தெரிவிக்கும்போது அந்தப் புகார் மீதான நடவடிக்கை அடுத்த 15 நாட்களுக்குள் எடுக்கப்படும். அப்படி நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனில் அடுத்தடுத்த அதிகாரிகளுக்கு அந்தப் புகார் செல்லும்.
டிடிஎஸ்!
  P.F.பிஎஃப் கணக்கி லிருந்து பணத்தை வெளியே எடுக்கும்போது டிடிஎஸ் (TDS)செலுத்த வேண்டியிருக்கும். அதாவது, ஐந்து வருடத்துக்கு குறைவாகப் பணியாற்றி, வேலையை விட்டு நிரந்தரமாக விலகும்போது வெளியே எடுக்கும் P.F. பிஎஃப் தொகை 30 ஆயிரம் ரூபாய் அல்லது அதற்கு அதிகமாக இருந்தால், அந்தத் தொகைக்கு டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும். இது 1.6.2015-லிருந்து நடைமுறையில் உள்ளது. டிடிஎஸ் குறித்த விரிவான கட்டுரையை படிக்க இங்கே செல்லவும். http://www.vikatan.com/personalfinance/article.php?aid=10541
நிரந்தரக் கணக்கு எண்!
  P.F.பிஎஃப் அமைப்பு UAN(Universal Account Number) என்ற 14 இலக்க எண்ணை நிரந்தரக் கணக்கு எண்ணை வழங்கி உள்ளது. பணிக்காலத்தில் எத்தனை முறை வேலை மாறினாலும் இந்த எண்தான்  P.F.பிஎஃப் நிரந்தர எண்ணாக இருக்கும். இந்த எண் ஒருவருக்கு ஒருமுறைதான் வழங்கப்படும். கேஒய்சி விதிமுறைகளைப் பூர்த்திச் செய்து தந்து இந்த எண்ணைப் பெற முடியும்.
இந்த எண்ணை நேரடியாக வாங்க முடியாது. பணிபுரியும் அலுவலகத்தின் மூலமாகவே வாங்க முடியும். இந்த எண்ணை
 http://uanmembers.epfoservices.in/uan_reg_form.php 
            என்ற இணைய தளத்தில் கேட்கும் தகவல்களைத் தந்து ஆக்டிவேட் செய்து கொள்வது அவசியம்.
இதை ஆக்டிவேட் செய்யும் போது தரும் செல்போன் எண்ணை மாற்ற  P.F.பிஎஃப் அலுவலகத்தின் உதவி தேவைப்படும். எனவே, உங்களின் நிரந்தரமாக பயன்படுத்தும் செல்போன் எண் கொடுத்து ஆக்டிவேட் செய்து கொள்வது நல்லது.”

நீங்களும் சட்டமேதைகளே......

மரியாதைக்குரியவர்களே,
                         வணக்கம். நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம்..அடிப்படைச்சட்டங்கள் பற்றிய அறிவு இருந்தாலே போதுமானது.
(1)இந்திய தண்டனைச்சட்டம்,
(2)குற்ற விசாரணைமுறைச் சட்டம்,
(3)இந்திய சாட்சிய சட்டம்,
(4)இந்திய அரசியல் சாசனம்,
(5)தகவல் அறியும் சட்டம்-2005,
(6)உரிமையியல் விசாரணைமுறைச் சட்டம்,
(7)மோட்டார் வாகனச் சட்டம்,
(8)நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்,
(9)பெண்கள் பாதுகாப்புச் சட்டம்-2010 
(10)தொழிலாளர் நலச்சட்டம்
  இவை போன்று இன்னும் ஏராளமான சட்டங்கள் உள்ளன.இவற்றில்  தங்களுக்குத் தேவைப்படுகின்ற சட்டங்களையாவது தெரிந்துகொள்ளுங்க.....

அதற்காகத்தாங்க
             திரு.திண்டல்  சுப்ரமணியம் பெருமாள் ஐயா அவர்கள் சட்டப்புத்தகங்கள் படிப்பதைப் வழக்கமாக்கிக்கொள்ளுங்க குறிப்பாக தேவையான சட்டப் புத்தகங்களை படிக்க தவறாதீங்க என்று கூறுகிறார்..

                       தவறு தண்டிக்கப்பட வேண்டும்,தண்டனைக்கு ஆளாகும் நிரபராதிகள் உரிய நிவாரணத்துடன் பாதுகாக்கப்பட வேண்டும்..என்பது எனது நிலைப்பாடு ஆகும்..

Sunday, August 16, 2015

தாளவாடி கிளையில் சுதந்திர தினவிழா-2015

தாளவாடி கிளையில் சுதந்திர தினவிழா-
மரியாதைக்குரியவர்களே,
        வணக்கம். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்-கோவை கோட்டம் ,ஈரோடு மண்டலம்,தாளவாடி கிளையில் 15.08.2015தேதி அன்று 69-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. 
அதன் விவரம் தங்களது பார்வைக்காக...
              திரு.சாமிநாதன் அவர்கள்,கிளை மேலாளர் ,தாளவாடி கிளையில் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு சுதந்திரக்கொடி ஏற்றிய காட்சி...நேரம் காலை9.00மணி.
 சுதந்திரதின விழிப்புரை;
  திரு. சாமிநாதன் அவர்கள், கிளை மேலாளர்,தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்,ஈரோடு மண்டலம்,தாளவாடி கிளை. 
 திரு.சாமிநாதன் அவர்கள்,கிளை மேலாளர்,போக்குவரத்து தொழிலாளர்களுக்கு  சுதந்திர தின வாழ்த்து கூறி இனிப்பு வழங்கிய காட்சி....

திரு. சாமிநாதன் கிளை மேலாளர் அவர்கள்,
        2015 -ம் ஆண்டுக்கான சிறந்த ஓட்டுநர் பரிசினை திரு. தங்கராஜ் ஓட்டுநர் அவர்களுக்கு பாராட்டும் பரிசும் வழங்கியபோது.....
 

Wednesday, August 12, 2015

விதையை பாதுக்காக்க ஒரு ஐடியா!....

மரியாதைக்குரியவர்களே,
         வணக்கம். விதையை பாதுகாக்கும் பந்து பற்றி காண்போம்.
விதைப்பந்து 
                         மண் மற்றும் உரம் அல்லது பசுஞ்சாணத்தால் ஆன உருண்டை. இவற்றின் நடுவே மர விதை. உள்ளது.
செம்மண்ணில் பாதியளவு சாணத்தை கலந்து நீரூற்றி பிசைந்து உருண்டையாக உருட்டிக் கொள்ள வேண்டும். அதன் நடுவே நீங்கள் சேகரித்த விதைகளை வைத்து உருண்டையாக்கி விடுங்கள். சூரிய வெப்பத்தில் ஒரு நாள் காய்ந்தால் அது இறுகி விடும்.
நீங்கள் வெளியே செல்லும் போது மரம் நட வாய்ப்புள்ள இடங்களில் வீசி செல்லுங்கள். அவ்விதை மழை வரும்வரை எலி, எறும்பு, குருவிகளிடமிரிந்து பாதுகாப்பாய் இருக்கும். ஒரு வருடம் வரை விதை பத்திரமாக முளைக்க ஏற்றதாக இருக்கும்.
விதைகளைப் பொருத்தவரை சில நாட்களுக்கு தேவையான சத்துக்கள் விதையிலேயே வைக்கப்பட்டிருக்கும். எனவே சில நாட்களுக்குப்பின் உரம் தேவைப்படும். மண்ணில் கலந்துள்ள சாணமானது மண்ணில் நுண்ணுயிர்களை உருவாக்கி செடியின் வேர் மண்ணில் எளிதில் செல்ல ஏற்ற வகையில் பக்குவப்படுத்தி விடும். மண்ணின் கடினத்தன்மையை அகற்றி மிருதுவாக்கி விடும். சாணத்தை உண்ணும் நுண்ணுயிர்களின் கழிவை செடியின் வேர் உண்டு தன்னை அம்மண்ணில் நிலைப்படுத்திக் கொள்ளும்.
ஆனால் வெறும் விதைகளை விதைத்தால் அவை மற்ற உயிரிணங்களால் உணவாக்கப்படலாம். வெப்பத்தால் தன் முளைக்கும் தன்மையை இழந்து விடலாம். நிலமானது செடி வளர்வதற்கான தன்மை இல்லாமல் கடினமானதாக இருக்கலாம். அதனால் விதை முளைக்காது. ஆனால் விதைப்பந்தில் தண்ணீர் பட்டவுடன் இளகுவதுடன் நுண்ணுயிர்களை உண்டாக்கி நிலத்தை உழுது இளகுவாக்கிவிடும்.
எனவே உங்கள் வீடுகளில் சிறிது செம்மண் மன்றும் சாணத்தை சேகரித்து வையுங்கள். பழங்களை சாப்பிட்ட பின் நல்ல விதைகளை எடுத்து சேகரித்து வையுங்கள். ஓய்வு நேரத்தில் விதைப்பந்தை உருவாக்கி வைத்து வெளியே செல்லும் போது நல்ல இடம் பார்த்து வீசி விடுங்கள். கோடை காலமானாலும் வீசி விடுங்கள்.

Monday, August 3, 2015

முதுகு வலி ஏற்பட காரணங்கள்.....

மரியாதைக்குரியவர்களே,
                 வணக்கம். நமக்கு முதுகு வலி ஏற்படுவது ஏன்?  என்பது பற்றி தெரிந்துகொள்வோம்
                    முதுகில் ஏற்படும் பிரச்சினைகளில் முக்கியமானது, கீழ் முதுகு வலி (Low back pain). மனித வாழ்க்கையில் ஏதேனும் ஒரு நேரத்திலாவது கீழ் முதுகு வலியால் அவதிப்படாமல் இருக்க முடியாது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் வலிகளுக்காகச் சிகிச்சை பெறும் பிரச்சினைகளில், கீழ் முதுகு வலி இரண்டாம் இடத்தில் உள்ளது.

காரணம் என்ன?
                 காய்ச்சல் என்பது ஒரு நோயின் அறிகுறி என்பது போலவே, கீழ் முதுகு வலியும் ஏதோ ஒரு நோயின் அறிகுறியே தவிர, இதுவே ஒரு தனிப்பட்ட நோயல்ல! இந்த வலிக்குப் பல காரணங்கள் உண்டு. முதுகுப் பகுதியைச் சார்ந்த எலும்புகள், தசைகள், தசைநாண்கள், இடைவட்டு (Inter vertebral Disc) ஆகியவற்றில் ஏற்படுகிற பிரச்சினைகளை இதற்கு முதன்மைக் காரணங்களாகச் சொல்லலாம்.
            சில நேரம் வயிற்றில் ஏற்படும் பிரச்சினைகளாலும் கீழ் முதுகில் வலி உண்டாகலாம். உதாரணத்துக்கு, சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப் பையில் கல் உள்ளவர்களுக்குக் கீழ் முதுகில் வலி ஆரம்பித்து, முன் வயிற்றுக்குச் செல்லும். வெள்ளைப்படுதல் பிரச்சினை உள்ள பெண்களுக்குக் கீழ் முதுகில்தான் முதலில் வலி ஆரம்பிக்கும். பொதுவாக, கீழ் முதுகு வலிக்கு 90 சதவீதம் முதுகெலும்பில் பிரச்சினை இருக்கும். மீதி 10 சதவீதம் வயிற்றுப் பகுதி தொடர்பாக இருக்கலாம்.
                  கூன் விழுந்த நிலையில் உட்காருவது, வேலை நிமித்தமாகத் தொடர்ச்சியாக கணினி முன்னால் உட்கார்ந்தே இருக்க வேண்டிய சூழல், தினமும் இருசக்கர வாகனங்களில் நெடுந்தொலைவு பயணிப்பது, குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் அடிக்கடி பயணம் செய்வது, அதிக எடையைத் தூக்குவது, உடற்பயிற்சி இல்லாதது, ஊட்டச் சத்துக்குறைவு, தரையில் வழுக்கி விழுவது, உயரமான இடத்திலிருந்து குதிப்பது, திடீரெனக் குனிவது அல்லது திரும்புவது, உடல்பருமன் போன்ற காரணங்களால் முதுகெலும்பு இடைவட்டில் அழுத்தம் அதிகமாகிக் கீழ் முதுகில் வலி ஏற்படும்.
            ‘ஆஸ்டியோமைலிட்டிஸ்’ (Osteomyelitis), ‘ஸ்பாண்டிலிட்டிஸ்’ (Ankylosing spondylitis), காச நோய் போன்றவற்றின் பாதிப்பாலும் கீழ் முதுகில் வலி வரும். வாகன விபத்துகள் அல்லது விளையாடும்போது ஏற்படுகிற விபத்துகள் காரணமாக எலும்பு முறிந்து இந்த வலி ஏற்படலாம். சிலருக்குப் பிறவியிலேயே தண்டுவடம் செல்லும் பாதை குறுகலாக (Spinal canal stenosis) இருக்கும். இவர்களுக்குச் சிறு வயதிலேயே முதுகு வலி ஏற்படும்.                    
                       முதுகெலும்பில் கட்டி அல்லது புற்று நோய் தாக்குவது காரணமாகவும் இந்த வலி வரும். கர்ப்பக் காலம், விபத்துக் காயங்கள், தசைப்பிடிப்பு, தசைநார் வலி, மன அழுத்தம், நீரிழப்பு போன்றவற்றாலும் முதுகு வலி வரும்.
                   வயதானாலும் இந்த வலி தொல்லை கொடுக்கும். காரணம்? முள்ளெலும்புகளுக்கு இடையில் உள்ள வட்டில் ஏற்படும் முதுமைப் பிரச்சினை. இதற்கு ஒரு உதாரணம் சொல்லலாம். புதிதாக வாங்கிய பந்தைக் கீழே எறிந்தால் நன்கு துள்ளியபடி மேலெழும்பும். நாளாக ஆக, அந்தப் பந்துக்கு மேலெழும்பும் தன்மை குறைந்துவிடும். அதுபோலவே வயதாக ஆக இடைவட்டில் நீர்ச்சத்து குறைந்துவிடுவதால் `குஷன்’ போல இயங்குகிற தன்மையும் குறைந்துவிடுகிறது. அதிர்ச்சியைக் கிரகித்துக்கொள்ளும் தன்மை குறைகிறது. இதனால் முதிய வயதில் கீழ் முதுகில் வலி வருகிறது.
எலும்பின் உறுதிக்கும் ஆரோக்கியத்துக்கும் கால்சியம் சத்து தேவை. வயது அதிகமாக அதிகமாகக் கால்சியத்தின் அளவு குறைந்து எலும்பு மெலிந்துவிடும். இதற்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ (ஆஸ்டியோபோரோசிஸ்) என்று பெயர். இது கீழ் முதுகில் வலியை ஏற்படுத்தும்.
சியாட்டிகா என்பது என்ன?
                     முதுகு வலிக்குப் பல காரணங் கள் சொல்லப்பட்டாலும், அடிப்படைக் காரணங்கள் இரண்டு மட்டுமே. ஒன்று, இடைவட்டு விலகுவது (Disc prolapse). அடுத்தது, முதுகு முள்ளெலும்புகளின் (Vertebrae) பின்புறமுள்ள அசையும் மூட்டுகளில் வீக்கம் ஏற்படுவது. 

              இந்தக் காரணங்களால் தண்டுவட நரம்பு செல்லும் பாதை குறுகிவிடுகிறது. இதனால் தண்டுவட நரம்பு அழுத்தப்படுகிறது. இதைச் சுற்றியுள்ள ரத்தக் குழாய்கள் நெரிக்கப்பட்டு, ரத்த ஓட்டம் குறைந்து நரம்பு முறையாக இயங்க வழி இல்லாமல், வலி ஏற்படுகிறது. பொதுவாக, காலுக்கு வரும் சியாட்டிக் நரம்பு இவ்வாறு பாதிக்கப்படும். இதனால்தான் இதற்கு ‘சியாட்டிகா’(Sciatica) என்று பெயர் வந்தது.
                     ஆரம்பத்தில் இந்த வலியானது, அவ்வப்போது கீழ் முதுகில் ஏற்படும். பெரும்பாலானோர் இதை வாய்வு வலி என்று தாங்களாகவே தீர்மானித்துக்கொண்டு, சிகிச்சை செய்யாமல் இருப்பார்கள். திடீரென்று ஒரு நாள் இந்த வலி கடுமையாகித் தொடைக்குப் பின்புறத்திலோ, காலுக்கோ மின்சாரம் பாய்வதைப்போல ‘சுரீர்’ என்று பரவும். படுத்து உறங்கும்போது இந்த வலி குறைந்து, பிறகு நடக்கும்போது வலி அதிகமாகும். கால் குடைச்சல் தூக்கத்தைக் கெடுக்கும். காலில் உணர்ச்சி குறையும். நாளாக ஆக மரத்துப்போன உணர்வும் ஏற்படும். முதுகைப் பின்னாலோ, முன்னாலோ வளைப்பதில் சிரமம் உண்டாகும். பலமாகத் தும்மினாலோ சிறுநீர் / மலம் கழிக்க முக்கினாலோ வலி கடுமையாகும்.

பரிசோதனையும் சிகிச்சையும்
                  கீழ் முதுகு வலிக்குப் பல காரணங்கள் இருப்பதால், முதுகு எக்ஸ்-ரே, சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன், ரத்தப் பரிசோதனைகள் செய்து, காரணம் தெரிந்து சிகிச்சை பெற வேண்டியது முக்கியம். ஜவ்வு விலகுவதன் காரணமாக ஆரம்பத்தில் ஏற்படுகிற கீழ் முதுகு வலிக்கு வலி நிவாரணிகளும் தசைகளைத் தளர்த்தும் மாத்திரை / ஊசிகளும் பலன் தரும். அத்தோடு குறைந்தது 3 வாரம் முழுமையாக ஓய்வு எடுப்பது, இடுப்பில் பெல்ட் அணிவது, பிசியோதெரபி சிகிச்சையில் குணமாக அதிக வாய்ப்புகள் உள்ளன.
             தொடர்ந்து பல வாரங்களுக்கு வலி இருக்குமானால், நடக்கவோ - நிற்கவோ முடியவில்லை என்றால். கால் மரத்துப்போனால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிவரும். இப்போது ‘லம்பார் எண்டோஸ்கோபிக் டிஸ்கெக்டமி’ (Lumbar Endoscopic Discectomy) எனும் நவீன அறுவை சிகிச்சையில் விலகியிருக்கும் இடைவட்டை அகற்றித் தண்டுவட நரம்புப் பகுதியில் இருக்கிற அழுத்தத்தை நீக்கிவிடும்போது, கீழ் முதுகு வலியும் கால் குடைச்சலும் சரியாகிவிடும்.

முதுகு வலியைத் தடுக்க…
                      அலுவலகத்தில் வேலை செய்யும்போது முதுகை நிமிர்த்தி உட்கார்ந்து வேலை செய்ய வேண்டும். நாற்காலியில் அதிக நேரம் உட்காரும்போது, கீழ் முதுகுக்குச் சிறிய தலையணை வைத்துக்கொள்ளலாம்.
கூன் விழாமல் நிமிர்ந்து நடக்க வேண்டும்.
ஒரே மாதிரியான நிலையில் வேலை செய்யும்போது, அவ்வப்போது உடலின் நிலையை மாற்றிக்கொள்ளுங்கள்.
                   எந்த வேலையையும் தொடர்ந்து மணி கணக்கில் ஒரே நிலையில் உட்கார்ந்த வாறு செய்யாதீர்கள். வேலைக்கு நடுவில் சிறிதளவு ஓய்வு அவசியம்.
               அமர்ந்திருக்கும்போதுகூடக் கால்களின் நிலைகளை மாற்றுங்கள்.
சிறு வயதிலிருந்தே உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, மெல்லோட்டம், நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், யோகாசனம் போன்றவற்றில் ஏதாவது ஒன்றைச் செய்வது, முதுகு வலி வராமல் தடுக்கும்.
                   காற்றடைத்த பானங்கள், குளிர் பானங்கள், மென் பானங்கள், கோக் கலந்த பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் போன்றவற்றில் பாஸ்பாரிக் அமிலத்தைச் சேர்ப்பார்கள். கால்சியம் சத்தைக் குடல் உறிஞ்சுவதை இது தடுக்கும். இதனால் இளமையிலேயே எலும்புகள் வலுவிழந்துவிடும். எனவே, இந்தப் பானங்களை அருந்தக் கூடாது.
எலும்பையும் தசையையும் வலுப் படுத்தும் கால்சியம் மற்றும் புரதம் மிகுந்த பால், முட்டை வெள்ளைக் கரு, சோயா, உளுந்து. கொண்டைக் கடலைப் போன்ற உணவு வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
முதுகு வலி உள்ளவர்கள் கயிற்றுக் கட்டிலில் படுத்துத் தூங்கக் கூடாது. சரியான மெத்தையில் ஒருக்களித்துப் படுக்க வேண்டும். கால்களைச் சிறிது மடித்த நிலையில், கால்களுக்கு இடையில் தலையணையை வைத்துப் படுத்துக்கொள்ளலாம்.
                    அதிக எடையைத் தூக்கக் கூடாது. அப்படியே தூக்கவேண்டி இருந்தால், எடையைத் தூக்கும் போது இடுப்பை வளைத்துத் தூக்காமல், முழங்காலை முன்புறம் மடக்கித் தூக்க வேண்டும். சுமையை மார்பில் தாங்கிக் கொள்வது இன்னும் நல்லது.
                   முதுகை அதிகமாக வளைக்கக் கூடாது. திடீரெனத் திரும்பக் கூடாது.
குனிந்து தரையைச் சுத்தம் செய்வதற்குப் பதிலாக, நீளமான துடைப்பத்தைக் கொண்டு நின்றுகொண்டே சுத்தம் செய்வது நல்லது.
இந்தியக் கழிப்பறைக்குப் பதிலாக மேற்கத்தியக் கழிப்பறையைப் பயன்படுத்தினால் நல்லது.
    உயரமான காலணிகளை அணியக் கூடாது.
மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் முதுகில் சுடுநீர் ஒத்தடம் கொடுப்பது, மசாஜ் செய்வது விபரீதங்களை விலைக்கு வாங்குவதற்குச் சமம்.
இருசக்கர வாகனங்களில் கரடு முரடான பாதைகளில் செல்வதைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
நான்கு சக்கர வாகனங்களை ஓட்டும்போது, நிமிர்ந்து ஸ்டியரிங் அருகில் அமர்ந்து ஓட்ட வேண்டும்.
ஏற்கெனவே, முதுகு வலி உள்ளவர்கள் பேருந்தில் பயணம் செய்யும்போது நடுவிலுள்ள இருக்கையில் உட்கார்ந்து பயணிப்பது நல்லது.
முதுகுத் தசைகளை வலுப்படுத்தும் உடற்பயிற்சிகளைத் தினமும் மேற்கொள்ளுங்கள்.
  உடல்பருமன் ஆவதைத் தவிருங்கள்.
                      புகை பிடிக்காதீர்கள். மது அருந்தாதீர்கள். போதை மாத்திரை சாப்பிடாதீர்கள்.
முதுகு வலி உள்ளவர்கள் குதித்து ஓடுதல், டென்னிஸ், இறகுப் பந்து, கூடைப் பந்து ஆகிய விளையாட்டு களை விளையாடக் கூடாது.
மன அழுத்தத்தைத் தவிருங்கள்.

Sunday, August 2, 2015

சமூக நலன் கருதி இதனை பகிருகிறேன்.

 முதலமைச்சர் தனிப்பிரிவு எல்லாம் நம்பாதீங்க.....
TNSTC சட்டப்பிரிவு நீதி தவறி செயல்படுகிறது? .Vijai Kaartik இன் புகைப்படம்.

 மரியாதைக்குரியவர்களே,
            வணக்கம். இன்று அதாவது 2015 ஆகஸ்டு 3 ந்தேதி ஆடிப்பதினெட்டு பண்டிகையின்போது Face Book  நண்பர் Vijai Kaartik அவர்களால் முகநூலில் பகிரப்பட்ட செய்தியும் அதற்கு நான் அனுபவித்த நிகழ்வை அடிப்படையாக வைத்து சமூகத்திற்கு  கொடுத்த பதிலும் தங்களது கவனத்திற்காக..
எதை எதையோ ஷேர் பண்றீங்க முதலில் இத பண்ணுங்க
அவசியம் அனைவரும், அறிய வேண்டிய ஒன்று ......

"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.
(http://cmcell.tn.gov.in/register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் புகார்களை அளிக்கலாம். நீங்கள் அளித்துள்ள
புகார் சம்பந்தமாக

தாங்கள் செய்துள்ள புகார் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை பற்றியும் நீங்கள் அறிந்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
(http://cmcell.tn.gov.in/login.php)

தபால் மூலம் அனுப்பும் புகார்கள்....
Chief Minister's Special Cell ,
Secretariat, Chennai - 600 009.
Phone Number : 044 - 2567 1764
Fax Number : 044 - 2567 6929
E-Mail : cmcell@tn.gov.in
Parameswaran Driver மரியாதைக்குரியவர்களே,வணக்கம். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மட்டும் பொது மக்கள் மீது அக்கறையும்,அன்பும்,பாசமும்,காட்டினால் மட்டும் போதுமா? பொதுமக்களிடம் நேரிடைத்தொடர்பு கொண்ட அரசு அதிகாரிகளும்,அ.தி.மு.க. பொறுப்பாளர்களும் மேற்படி அக்கறைகொள்ள வேண்டும் அல்லவா!....
  கடந்த 2014ஜூன் முதல் தேதியன்று முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு அனுப்பிய புகாருக்கு இன்றுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?
http://paramesdriver.blogspot.com வலைப்பக்கத்தில்
2014ஜூன் 1 ந் தேதியிட்ட பதிவினை பார்வையிடுங்க..
  என அன்பன்
  C.பரமேஸ்வரன். 9585600733
Parameswaran Driver, Vijai Kaartik இன் புகைப்படம் ஐப் பகிர்ந்துள்ளார்.
23 நிமி. · தொகுத்தது · 


 • Balasubramaniam Balasubramaniam, Sankaramuthukumar Sadayan மற்றும் வேறு 2 பேர்கள் ஆகியோரின் விருப்புக்குரியது.
 • Parameswaran Driver மரியாதைக்குரியவர்களே,வணக்கம். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மட்டும் பொது மக்கள் மீது அக்கறையும்,அன்பும்,பாசமும்,காட்டினால் மட்டும் போதுமா? பொதுமக்களிடம் நேரிடைத்தொடர்பு கொண்ட அரசு அதிகாரிகளும்,அ.தி.மு.க. பொறுப்பாளர்களும் மேற்படி அக்கறைகொள்ள வேண்டும் அல்லவா!....
 • Thindal Subramanian Perumal முதலமைச்சர் தனிப்பிரிவு நம்பாதீங்க.....
 • Veeramani A முதலமைச்சரின் தனிப்பரிவு ஒரு போஸ்ட்மேன் போலத்தான்.உங்கள ் மனுவை சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு அனுப்பி அவர்கள் கொடுக்கும் பதிலை உங்களுக்கு அனுப்புவார கள். நீங கள் கூறிய நடத்துனர் செல்வாக்கு மிக்கவராக இருக்கலாம்.எப்படியிருந்தாலும்நீங்கள் கூறுவதுபோல் நடத்துனரிடம் விளக்கம் பெறாமல் மனுவை முடிததுவைக்க வாய்ப்புகுறைவு.உங்களுககு வந்த பதில் கடிதத்தில் என்ன குறிப்பிட்டுள்ளது என்று தெரிந்தால் நல்லது
 • Parameswaran Driver மரியாதைக்குரிய Veeramani A ஐயா அவர்களே,வணக்கம். சம்பந்தப்பட்ட நடத்துநரை மட்டும் விசாரித்தால் உண்மை தெரிந்து கொள்ள முடியுமா? சம்பந்தப்பட்ட புகார்தாரரை அல்லது பாதிக்கப்பட்டவரை அழைத்து விவரம் கேட்டறிய வேண்டாமா? அடுத்து எனக்கு கடிதம் அனுப்பவில்லை அதே சமயம் முதலமைச்சர் தனிப்பிரிவு பக்கத்தில் சம்பந்தப்பட்ட பயணிதான் அவருடைய இடத்தில் அமராமல் அங்கும் இங்கும் இருக்கை மாற்றிக்கொண்டே இருந்ததாகவும் நடத்துநர்தான் எச்சரித்து அமர வைத்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியானால் பயணிக்கு ஒதுக்கப்பட்ட முன்பதிவு இருக்கை எண் 9 ல் அல்லவா! அமர வைத்திருக்க வேண்டும்.9 ம் எண் இருக்கு உள்ள மூன்று நபர் இருக்கையில் இடையில் ஏறிய குடும்பத்தினரை அமரவைத்துவிட்டு 9ம் எண் இருக்கைக்காக முன்பதிவு செய்த பயணியை 22 வது இருக்கைக்கு அனுப்பி அமர வைத்தது ஏன்? இதை இருதரப்பினரையும் நேரில் அழைத்து விசாரித்தால்தாங்க உண்மை தெரியும்.இதை ஏன் செய்யவில்லை.நடத்துநருக்கு செல்வாக்கு இருந்தால் அதற்கு பேருந்து போக்குவரத்திற்கு முதல் எஜமானராகிய பயணிக்கு பாதுகாப்பு கொடுப்பது யார்?பணி புரியும்போது நடத்துநருக்கு உள்ள பொறுப்பும்,கடமையும் என்ன? இந்த நிகழ்வால் தவறு யார் மீது என்பதை விட சட்டப்பிரிவில் புகாரை விசாரிக்கும் முறை என்ன? என்றுதான் அறிந்து கொள்ள வேண்டியுள்ளது.இது சாமானியரும் தெரிந்துகொள்ள வேண்டும். தாங்கள் என்னிட்டம் கேள்வி ஒன்று கேட்கத்தோன்றலாம்.அதாவது இவ்வளவு கூறும் நான் ஏன் நுகர்வோர் மன்றத்தில் புகார் செய்யவில்லை? என்று காரணம் (1) அரசு போக்குவரத்து எனக்கு வாழ்வளித்து வருகிறது.(2)இந்த நிகழ்வை ஆதாரமாக பள்ளிகள்தோறும் விழிப்புணர்வு கொடுத்துவர பயன்படுத்துகிறேன்.(3)தங்ளிடம்கூட தற்போது விவாதம் செய்ய காரணமாக இருக்கிறது.தங்களது ஆலோசனையை எதிர்பார்க்கும் அன்பன் C.பரமேஸ்வரன்.
 • Veeramani A நன்றி திரு பரமேஸ்வரன் அவர்களே நடத்துனரை விசாரித்து அவரது வாக்குமூலத்தை பெற்றபிறகு புகாரின் தன்மை குறித்து நேரடி விசாரணை நடத்துவார்கள்.ஆனால் டத்துனரின் வாக குமூலத்தை மட்டுமே வைத்து வழக்கு முடிக்கப்பட்டுள்தால் நடத்துனர் செல்வாக்கானவர் என்று கூறினேனே தவிர அது சரி என்று கூறவில்ை்.போக்குவரத்து கழகம் இதனைகையாண்டவிதம் சந்தேகத்திறகு இடமளிக்கிறது.
  Parameswaran Driver மரியாதைக்குரிய Veeramani A ஐயா அவர்களே,வணக்கம்.தங்களது பதிலுரைக்கு மிக்க நன்றிங்க.எனது ஆதங்கம் என்னவெனில் இதே பாதிப்பு அரசு போக்குவரத்துக்கழகத்தில் பணியாற்றும் அந்த சட்டப்பிரிவு அதிகாரியின் மகளுக்கு நேர்ந்திருந்தால்? அதிகாரிகளின் மகளுக்கு நேர்ந்திருந்தால்? அரசியல்வாதிகளின் மகளுக்கு நேர்ந்திருந்தால்? ஆகா?ஓகோ? என்று கைகொட்டி சிரித்து மிகுந்த சந்தோசம் அடைந்து இருப்பார்களா? பணம் மட்டுமே குறிக்கோளாக இருக்கிறார்களே! சமூக விரோதப்போக்கை வளர்த்துவிடும் இவர்களுக்கும் இது போன்ற அனுபவம் ஏற்படும்.நிதி என்றுமே நிலையானது இல்லைங்க,அதே சமயம் நீதி என்றும் நிலையானது...விதை விதைப்பவன் நிச்சயம் விதை அறுப்பான்...நன்றியுடன் அன்பன் C.பரமேஸ்வரன்.
  பிடித்திருக்கிறது · 19 நிமி.  • Babugee Nadar தம் சொந்த தொழிலாளருக்கு சாதகமாக நடந்த கிளை மேலாளரின் ஓழுங்கீனம்...இதை குறுப்பிட்டு மீண்டும் பழைய பதிவெண்னையும் பொருளில் காண்பித்து, நகலை இணைத்து அனுப்புங்கள்...நான் இரண்டு கார்பரேசன் மீது நடவடிக்கை எடுத்துள்ளேன்...தனி பிரிவை குறை சொல்லி பயன் இல்லை...பலோ அப் நாம் தான் செய்ய வேண்டும்....தமிழகம் முழுவதும் மனு வரும் பெரும் பணி...

 ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

முதலமைச்சர் தனிப்பிரிவு எல்லாம் நம்பாதீங்க.....
TNSTC சட்டப்பிரிவு யாருக்காக செயல்படுகிறது? .
இந்த கருத்து பற்றி விவாதத்திற்கு நான் என்றும் தயாராவே உள்ளேன். எந்த விசாரணைக்கும் எப்போதும் தயாராகவே உள்ளேன்.

 

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
அரசு போக்குவரத்துக்கழகத்தில் பணியாற்றும் எனது மகளுக்கு கடந்த ஆண்டில் அதுவும் முன்பதிவு செய்து சென்னையிலிருந்து சத்தியமங்கலம் வரை
(PNR NUMBER U7522670 // DATE OF JOURNEY 30/05/2014 // TIME OF DEPARTURE 20;00HRS // TRIP CODE # 2000CHESTMCC020 // ROUTE # 40709 // SEAT # 9 // OB REFERENCE # OB2962896 // TOTAL FARE 297.00RS // ADULT - FEMALE)
             தனியாள் பெண் பயணியாக, இரவுநேர நெடுந்தூர பயணியாக பயணித்தபோது அப்பேருந்தில் பணிபுரியும் நடத்துநராலேயே (எனக்கு மிகவும் பழக்கமானவர்கூட) சட்டத்திற்குட்பட்டபடி உரிய பாதுகாப்பு கொடுக்காமல் வருமானம் ஒன்றே குறிக்கோள் என்ற நோக்கத்தில் பல தொல்லைகளுக்கு ஆளாக்கி வேதனைப்பட வைத்துவிட்டார்..
இந்நிகழ்வால் வேதனைப்பட்ட நான் மற்ற பயணிகளுக்காவது பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இதை நிர்வாகத்திடமோ,தொழிற்சங்கத்திடமோ முறையிட்டால்கூட பேரம் பேசி சமாதானம் செய்து முடக்கிவிடுவார்கள் என்று கருதி முதலமைச்சர் தனிப்பிரிவுக்கே அனுப்பியிருந்தேன்.
முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு
அனுப்பிய கோரிக்கை எண் 2014 / 782012 / KB தேதி 01 - 06 -2014

இந்த செயல் அனைத்தும் இளவயதுடைய தனிநபரான பெண் ஒருத்திக்கு இரவுநேர நீண்டதூர வழித்தட இயக்கத்தில் இருந்த அரசுப்பேருந்தில் பணியில் இருந்த பொறுப்பற்ற நடத்துநரால் நேர்ந்த கதி.
(அப்போது நடத்துனர் என்னிடமே கூறிய பதில் வேறு அதை நேரில் கேட்பவர்களுக்கு மட்டுமே கூறுகிறேன்.அல்லது பொதுவிசாரணை நடத்தப்படும்பட்சத்தில் வெளிப்படையாக அங்கு கூறுகிறேன்.இந்தப்பதிவின் நோக்கமே இனியாவது மற்ற பயணிகளுக்கு இதுபோன்ற தொல்லை &ஆபத்து இருக்கக்கூடாது என்பதுதான்)
மேற்படி புகாரை கோவை கோட்டத்திற்கு அனுப்பி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்திலுள்ள சட்டப்பிரிவு சம்பந்தப்பட்ட புகார்தாரருக்கு இன்றுவரை எவ்வித தகவலும் கொடுக்காமல் தனிப்பட்ட முறையில் சம்பந்தப்பட்ட நடத்துநருக்கு சாதகமாக ஆதரவுகொடுத்து பதிலளித்து அந்தப் புகாரை முடித்துவைத்துவிட்டார்கள். அதாவது பொதுமக்களிக்காக இயங்கும் சட்டப்பிரிவு குறைந்தபட்சம் புகார்தாரரையாவது அழைத்து விவரம் கேட்டறிந்து இருக்கலாம் அல்லவா?
அதைக்கூட செய்யவில்லை என்றால் TNSTC சட்டப்பிரிவு யாருக்காக செயல்படுகிறது? என்பதை இதன்வாயிலாக தெரிந்துகொள்ளுங்க...
எனவே தங்களுக்கு ஒரே தீர்வு நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு அல்லது நீதிமன்றத்தில் புகார் செய்யுங்க...