Friday, January 20, 2012

தென்னிந்திய அறிவியல் பயிற்சி முகாம் புதுவையில்- ஜனவரி 2012

          

                               அன்பு நண்பர்களே,
              PARAMESDRIVER.BLOGSPOT.COM வலைப்பதிவு காண வருகை தந்துள்ள தங்களை இனிதே வரவேற்கிறேன்.
         கடந்த 17-ந்தேதி 18-ந்தேதி மற்றும் 19-ந்தேதி-அதாவது ஜனவரி2012-ல் புதுவை அறிவியல் இயக்கம் மற்றும் புது டெல்லி-விஞ்ஞான் பிரச்சார் சார்பாக நடத்தப்பட்ட  புதுமையான எளிய அறிவியல் செய்முறைப்பயிற்சிப் பயிலரங்கத்தின் கண்ணோட்டம் பற்றி சிறிது இங்கு காண்போம்.

            அறிவியல் பயிற்சிப்பட்டறையின்  விழாப் பெயர்ப் பலகையின் தோற்றம் இது மேலே உள்ள படம்.


              புதுவை அறிவியல் இயக்கம், புதுடெல்லி விஞ்ஞான் பிரச்சார் அமைப்புடன் இணைந்து நடத்திய புதுமையான எளிய அறிவியல் செய்முறைப்பயிற்சி பயிலரங்கு நடைபெற்ற பள்ளியின் முகப்பு அறைத்தோற்றம் மேலே உள்ள படம்.(கர்நாடக மாநில நண்பர்(KSF),தமிழ்நாடு மாநில நண்பர்(TNSF),புதுவை மாநில நண்பர்(PSF) ஆகியோர் ஆர்வமுடன் பங்கேற்ற காட்சியுடன்.)      
 

     
            புதுடெல்லி விஞ்ஞான் பிரச்சார் அமைப்பின் நிர்வாகி திருமிகு.T.V.வெங்கடேஷ்வரன் அவர்கள் அறிவியல் செய்முறைப் பயிலரங்கத்தினைத் துவக்கி வைத்து உரையாற்றிய காட்சி மேலே உள்ள படம்.அருகில் திருமிகு.ஸ்ரீதரன் அவர்கள்,திருமிகு.பியர் பான்த்ஸ் அவர்கள்,திருமிகு.T.P.ரகுநாத் அவர்கள்,திருமிகு.S.சீனிவாசன் அவர்கள்.

       
               புதுவை அறிவியல் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் திருமிகு.T.P.ரகுநாத் அவர்கள் பயிலரங்கத் துவக்கத்தின்போது இந்தப் பயிற்சிப்பட்டறையின் அவசியத்தை எடுத்துரைத்த காட்சி மேலே உள்ள படம்.



             எளிதில் கிடைக்கும் சாதாரண பொருட்களைக்கொண்டு செய்யும் அறிவியல் பயிற்சியின் எளிமை மற்றும் அதன் பயன்பாடு பற்றி விளக்குகிறார் பிரான்ஸ் நாட்டின் ஒடிசா பாரீஸ் சௌத்-11 பல்கலைக்கழகப் பேராசிரியர் திருமிகு.பியர் பான்த்ஸ் (ஓய்வு) அவர்கள் மேலே உள்ள படம்.



     

             புதுவை அறிவியல் இயக்கத் துணைத்தலைவர்களில் ஒருவரான திருமிகு.A.ஹேமாவதி அவர்களது உரையில்  பயிற்சியில் கலந்து கொள்ள வருகை தந்துள்ள தென்னிந்திய வட்டார அறிவியல் ஆர்வலர்கள் உட்பட அனைவரும் இந்த வாய்ப்பினை அனைத்து எளிய மக்களுக்கும்,மாணவர்களுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என கேட்டுக்கொண்ட  காட்சி மேலே உள்ள படம்.


திருமிகு.பேரா.பியர் பான்த்ஸ் அவர்கள்  அறிவியல் செய்முறை விளக்கம் கொடுத்த காட்சி மேலே உள்ள படம்.



திருமிகு.பியர் பான்த்ஸ் அவர்களதுஅறிவியல் விளக்கத்திற்கான  பிரெஞ்ச் மொழியின்  உரையினை, புதுவையில் உள்ள பிரெஞ்ச் பள்ளி இயற்பியல் ஆசிரியர் அவர்கள் ஆங்கிலம் மற்றும் தமிழில் அறிவியல் இயக்க நண்பர்களுக்காக மொழி பெயர்த்து விளக்கிய காட்சி மேலே உள்ள படம்.

            ஆந்திரா மாநில அறிவியல் இயக்க ஆசிரியப்பெருமக்கள் அறிவியல் விளக்கத்தினை ஏற்கும் காட்சி மேலே உள்ள படம்.


       கர்நாடகா மாநில அறிவியல் இயக்க அமைப்பாளர் அவர்கள் அறிவியல் செய்முறை விளக்கத்தினை சோதித்து தெளிவு பெறும் காட்சி.அதனை நோக்குபவர் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி மையத்தினைச் சேர்ந்த ஆசிரியர் அவர்கள் மேலே உள்ள படம்.

           கேரளா மாநில அறிவியல் இயக்கத்தினைச் சேர்ந்த அறிவியல் ஆசிரியர்கள் அறிவியல் செய்முறைகளைப் பரிசோதிக்கும் காட்சி மேலே உள்ள படம்.



      தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினைச் சேர்ந்த காஞ்சிபுரம் மாவட்ட அறிவியல் இயக்க நண்பர் பொறியியல் கல்லூரி மாணவர் மற்றும் ஈரோடு மாவட்ட தாளவாடி மையம்-பள்ளி ஆசிரியர் அறிவியல் பரிசோதனை செய்து பார்க்கும் காட்சி மேலே உள்ள படம்.



அறிவியல் பரிசோதனை எல்லாம் கடைகளில் கிடைக்கும் சோப்பு ஆயில் மற்றும் தண்ணீரிலும் செய்யலாங்க! என்கின்றனர்,கர்நாடகா அறிவியல் இயக்க நண்பர் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்க நண்பர் மேலே உள்ள படம்.


  ஆந்திர மாநில அறிவியல் இயக்க ஆசிரியர் சந்தேகத்திற்கான விளக்கம் பெற அந்த விளக்கம் தனக்கும் தேவை என்ற நோக்கில் அருகில் ஆர்வமுடன் கேட்டறிகிறார் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி ஆசிரியர் அவர்கள் மேலே உள்ள படம்.



           கர்நாடகா அறிவியல் இயக்க நண்பர்கள் தமிழ்நாடு அறிவியல் இயக்க நண்பர்கள் தங்கிஇருந்த விடுதிக்கு வந்து உடன் ஊக்கமும் உற்சாகமும் அளித்த ஆசிரியர் திருமிகு.விசாகன்-புதுச்சேரி, அவர்கள் மேலே உள்ள படம்.
       
The Alliance Francaise Of  Pondicherry வழங்கிய பொங்கல் திருவிழா 18-ந்தேதி இரவு 7-00மணிக்கு கடற்கரை அருகில் உள்ள  Maison Colombani -இல் நடந்த Clowns Sans Frontieres circus என்னும்  கலை நிகழ்ச்சியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-ஈரோடு மாவட்டம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் அறிவியல் இயக்க நண்பர்கள் கலந்துகொண்டு இன்புற்ற காட்சி மேலே உள்ள படம். (இந்நிகழ்ச்சியினைக் கண்டுகளிக்க உதவிய புதுச்சேரி ஆசிரியர் திருமிகு. விசாகன் அவர்களுக்கு நன்றி!)
           கீழே உள்ள படத்தின் வலது கடைசியில் உள்ளவர் திருமிகு.விசாகன் புதுச்சேரி ஆசிரியர் அவர்கள் அவர்தம் வாரிசுடன்.!!!


   
                அன்பு நண்பர்களே,வணக்கம்.


              புதுவை அறிவியல் இயக்கம் மத்திய அரசின் விஞ்ஞான் பிரச்சார அமைப்பு என்னும் அறிவியல் தொழில்நுட்பத்துறையுடன் இணைந்து கடந்த 17,18 & 19 ஜனவரி-2012 ஆகிய மூன்று நாட்கள்

          புதுச்சேரி, கண்ணன் நகரில் அமைந்துள்ள கோவிந்தபிள்ளை வீதியில் செயல்படும்- வெற்றி வெங்கடேஷ்வரா வித்யாலயா மெட்ரிக் பள்ளியின் மேல்தளத்தில் அமைந்துள்ள
     
          வெற்றி வெங்கடேஷ்வரா ஆசிரியர் பயிற்சிப்பள்ளியில்-

           நூதன எளிய அறிவியல் செய்முறைப் பயிலரங்கு  நடத்தியது.இங்கு மூன்று நாட்களும் சுமார் 15+22+31 என 68-க்கும் அதிகமான அறிவியல் பயிற்சிகள் கொடுக்கப்பட்டன. சிறு கிராமத்தில் எளிமையாகக்கிடைக்கும் சமையல் பொருட்கள் உட்பட அன்றாடம் பயன்படுத்தும் விலை மலிவான பொருட்களைக்கொண்டு நிகழும் அறிவியல் விளைவுகளைச் செய்து காட்டிப் பயிற்சி அளிக்கப்பட்டன.
              இந்தப்பயிற்சியில் நியூட்டன் விதி,பாஸ்கல் விதி,கலிலியோ விதி, வேதிவினை மாற்றம் மற்றும் இயற்கையின் மாற்றம்&தோற்றம் எனப் பலவிதப் பயன்பாடுகள் அடங்கிய செய்முறைகள் எளிமையாக,தெளிவாக,ஆர்வமூட்டும் வகையில் எடுத்தாளப்பட்டன.

          ஆந்திரா,கர்நாடகா,கேரளா,தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த அறிவியல் ஆசிரியப்பெருமக்களும்,அறிவியல் ஆர்வலர்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.இந்த அறிவியல் ஆக்கங்களை பள்ளி மற்றும் கல்லூரி மாணவக் கண்மணிகள் உட்பட சாதாரணப் பொதுமக்கள் மத்தியிலும் எடுத்துச் செல்லப்படும். என அந்தப்பயனாளர்கள் தெரிவித்தனர்.
                அடுத்து வரும்  21, 22 & 23 தேதிகளில் போபால் அறிவியல் இயக்கத்துடன் இணைந்து  போபாலிலும்,அடுத்ததாக ஹிமாசலப்பிரதேச மாநிலம் -மாண்டியிலும் இந்த நூதன எளிய அறிவியல் பயிற்சி அளிக்கப்போவதாக இந்த அறிவியல் பயிற்சி அமைப்பினர் தெரிவித்தனர்.
                          
               இதன் நோக்கம் நமக்கு முன்னே இருக்கும் அறிவியல் நிகழ்வுகளை கண்டறியவைப்பதும்,அதனால் கிராமப்பகுதியினைச் சேர்ந்த ஏழை மாணவர்களும் தங்களுக்கு அருகிலேயே கிடைக்கும் சமையல் பொருட்கள் உட்பட அன்றாடம் கிடைக்கும் எளிய பொருட்களைக்கொண்டு அறிவியல் நிகழ்வுகளைச் செய்யவைத்து அதன்விளைவாக அறிவியலில் ஆர்வத்தினைத் தூண்டச் செய்வதும்   ஆகும் எனவும் தெரிவித்தனர்.  தென்னிந்திய அளவிலான அறிவியல் பயிற்சி பயிலரங்கத்தினை நடத்திய புதுச்சேரி அறிவியல் இயக்கத்தினர் கலந்துகொண்ட அனைவருக்கும் மூன்று நாட்களும்  உண்ண உணவு    தங்குவதற்கு  ஏற்ற  உறைவிடம் சிறப்பாக ஏற்பாடு செய்து தந்துள்ள விதம் மிகவும் பாராட்டுக்குரியது.இரவு பகல் பாராமல் தேவைக்கேற்ப உதவிகள் செய்த  புதுச்சேரி அறிவியல் இயக்க அனைத்து அறிவியல்ஆர்வலர்கள் & ஆசிரியர்களுக்கு  எங்களது தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக மிக்க நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். என,,,,,,,,,,

                                              பதிவேற்றம்;- PARAMESDRIVER
                                   TAMILNADU SCIENCE FORUM- THALAVADY
                                                         ERODE DISTRICT-
                                       DATE:-20-JANUARY - 2012 FRI DAY.

Thursday, January 12, 2012

BONAFIDE CERTIFICATE -MODEL

       அன்பு நண்பர்களே,வணக்கம்.
       இங்கு போனfபைடு (BONAFIDE ) சர்டிபிகேட் பற்றிய மாதிரி வடிவம் இங்கு காண்போம்.இது பாஸ்போர்ட் என்னும் கடவுச்சீட்டு பெற விண்ணப்பிக்கும்போது பெறவேண்டிய சான்று ஆகும்.
       
       மாணவர்கள் படிக்கும் கல்லூரி அல்லது பள்ளிக்குரிய விலாசமிட்ட (LETTER PAD) கடிதத்தில்   '' BONAFIDE CERTIFICATE ''என்ற தலைப்பில் தேதியிட்டு கீழ்கண்டவாறு வாசகத்தை எழுதுக.
          This is certify that Mr/Mrs (மாணவர் பெயர் & பதிவு எண் ) Is a bonafide student of this Department doing ( எத்தனையாவது பருவம்) Semester of ( துறை மற்றும் உட்பிரிவு) At present he is residing in (Address அதாங்க உங்களுடைய முழு தற்போது வசிக்கும் விலாசம்)
   He / She Conduct is good . This certificate is issued for the purpose of appiying passport.
      
         ++++++++++++++
      signature of the student


     ++++++++++++                                                                         +++++++++++++++
   Signature of Staff Advisor                                               signature of principal (அல்லது)
                                                                                                 proffessor & Head
                                                                                                     அலுவலக முத்திரையுடன்                                                                                                            கையெழுத்து.
   +++++++++++++++++

  மாணவர் புகைப்படம்ஒட்டவும்.
   இதன்மேல் கல்லூரி அல்லது பள்ளி முத்திரையுடன்
  முதல்வர் அல்லது தலைமை ஆசிரியர் கையெழுத்து.

==========================================================================
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
===========================================================================

    இன்னொரு மாதிரி வாசகம். This is to certify that Mr.(மாணவர் பெயர் ) has studied in (படிப்பு வருடம் ) in this Institute during 2009-2011 During he studied in the following Address.
        Address
    -----------
      name;-
     Address:-முழு விவரம் எழுதுக.
       This certificate is issued on this own Interest for passport verfication purpose. என்று எழுதலாம்.

 =======================================================================
   புகைப்படம் அளவு; 4.5 செமீ. 3.5செமீ. உருவத்தின் பின்பக்கம் (Back ground colour) வெள்ளை நிறமாக இருக்க வேண்டும்.

Friday, January 6, 2012

23-வது சாலைப் பாதுகாப்பு விழா -2012 தாளவாடி

06 January, 2012

23-வது சாலைப் பாதுகாப்பு விழா -2012 தாளவாடி


     அன்பு நண்பர்களே,வணக்கம்.
                   tnsfthalavady.blogspot.com    வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
      
    '' விபத்தினால் வருவது துன்பம்-பாதுகாப்பினால் வருவது இன்பம்''

          23-வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி-
                  (1) ரோட்டரி கிளப் தாளவாடி,  (2)தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தாளவாடி,  (3)காவல்துறை தாளவாடி,   (4)சத்தி வட்டார போக்குவரத்து அலுவலகம்,  இணைந்து  சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தினர். 
           தாளவாடி வட்டார அனைத்து பள்ளிகள்,
            (1)அரசு மேல்நிலைப்பள்ளி-தாளவாடி   (2) அரசு உயர்நிலைப்பள்ளி-சிக்கள்ளி,  (3)புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி - சூசைபுரம்,   (4) புனித அன்னாள் உயர்நிலைப்பள்ளி-திகனாரை,  (5)டிவைன் மெட்ரிக் பள்ளி-காஜனூர் -ஆகிய அனைத்து பள்ளிகள் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கோஷங்கள் இட்டு பேரணியில் கலந்து கொண்டனர்.
             
       முன்னதாக '' விபத்துக்குக்காரணங்கள்-விபத்தைத்தவிர்க்க நமது பங்கு'' என்ற தலைப்பில் கட்டுரைகள் எழுதி சமர்ப்பித்தனர்.

         அனைத்து பள்ளிக்குழந்தைகள்&ஆசிரியர்கள் குழுவின்  பேரணியை தாளவாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் வளாத்தினுள் ''கொடி அசைத்து துவக்கி வைக்கிறார்'' திருமிகு.M.சிங்காரவேலு B.E.,மோட்டார் வாகன ஆய்வாளர் சத்தியமங்கலம் அவர்கள்.அருகில்  தாளவாடி பஞ்சாயத்துத்தலைவர் அவர்கள் மற்றும் திகினாரை பஞ்சாயத்து தலைவர் திருமிகு. காளநாயக்கர் அவர்கள்.இவர்களுடன் தாளவாடி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அரசு அலுவலர்கள்&பணியாளர்கள்,பொது மக்கள்.(மேலே)





    பேரணியில் கலந்து கொண்ட பள்ளிக்குழந்தைகள் பேருந்து நிலையத்தினுள் ,(வெயில் காரணமாக).(மேலே)




 பள்ளிக்குழந்தைகள் ''மத ஒற்றுமைக்கு நல்லிணக்கமாக விளங்கும்'' கோவில்கள் முன்பு ''சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்'' வந்த காட்சி.(மேலே)



                         ''சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக் குழு'' 
         திருமிகு.சாந்தமல்லப்பா -ரோட்டரி கிளப் தாளவாடித் தலைவர் -அவர்கள் தலைமையுரை ஆற்றிய காட்சி.(மேலே)


         திருமிகு.M.சிங்காரவேலு.B.E.,மோட்டார் வாகன ஆய்வாளர்  சத்தியமங்கலம் அவர்கள்   சாலைப்பாதுகாப்பின் அவசியத்தையும்,விபத்திலிருந்து நம்மைக்காத்துக்கொள்வது பற்றியும் சிறப்புரை ஆற்றிய காட்சி.(மேலே).




             தாளவாடி(CIRCLE) காவல்துறை ஆய்வாளர் திருமிகு.கா.தங்கவேல் -அவர்கள் போக்குவரத்துக்குற்றங்களும்,சட்டங்களும் பற்றி விவரித்த காட்சி.(மேலே)


             திருமிகு.அரிமா.K.லோகநாதன் கோபி&சத்தி வட்ட ஓட்டுனர் பயிற்சிப்பள்ளி சங்கத்தலைவர் அவர்கள்- ஓட்டுனர் உரிமம் எடுப்பதன் அவசியத்தையும்,வாகனம் ஓட்டும் முறைகள்,சாலை விதிகள்,இன்சூரன்ஸ் எடுப்பதன் அவசியத்தையும் விளக்கிய காட்சி.(மேலே)




     திருமிகு.S.வியானி (DIVINE & ROTARY CLUB)அவர்கள் தனிநபர் வாகனக்குறைப்பின் அவசியத்தையும், அதனால் போக்குவரத்து நெரிசல் குறைவும்,சுற்றுச்சூழல் மாசு குறைவும் பற்றி விவரித்த காட்சி.(மேலே)



          திருமிகு. அந்தோணி முத்து-(PALM-2 & TNSF) அவர்கள் அங்குள்ள கன்னட மொழி மட்டும் தெரிந்த மக்களுக்காக ''கன்னடமொழியில்'' சாலை விபத்துக்கு நமது அறியாமை  ,தெரிந்தும் செய்யும் தவறுகள் பற்றியும் - சாலைப் பயணத்தின் பாதுகாப்பு பற்றியும் கன்னடமொழியில் விவரித்த காட்சி.(மேலே)


      திருமிகு.மனோஜ் ஆசிரியர் மற்றும் குழுமத்தினர்- டிவைன் மெட்ரிக் பள்ளி ஆகியோர் சாலை விழிப்புணர்வுப்பாடல் பாடிய காட்சி.(மேலே)








             திருமிகு. A.P.ராஜ் (TNSF)அவர்கள் சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தில் சமூக அக்கறையின்பேரில் சாலைப்பாதுகாப்பு விழா எடுத்த (1)ரோட்டரி கிளப்,(2)தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,(3)தாளவாடி காவல்துறை,(4)கோபி மற்றும் சத்தி வட்டார போக்குவரத்துத்துறை இவர்களுடன் துணை நின்ற சத்தி&கோபி வட்டஓட்டுனர் பயிற்சிப்பள்ளி நிர்வாகிகள்,தாளவாடி தனியார் வாகன ஓட்டுனர்&உரிமையாளர்கள்,பொதுமக்கள்,பேரணியில் கலந்து கொண்ட அனைத்துப்பள்ளி மாணவ,மாணவியர் மற்றும்ஆசிரிய,ஆசிரியைப் பெருமக்களுக்கும்,சமூக ஆர்வலர்களுக்கும் சாலை பாதுகாப்பு பற்றி கட்டுரைகள் எழுதிக்கொடுத்த அனைத்து மாணவ,மாணவியருக்கும்   நன்றி! நவிழ்ந்த காட்சி.(மேலே)





             வரவேற்புரை வழங்கிய  திருமிகு.பரமேஸ்வரன்(TNSF) அவர்கள்        '' விபத்துக்குக்காரணங்கள்-விபத்தைத்தவிர்க்க நமது பங்கு'' என்ற தலைப்பிற்கு கட்டுரை எழுதிய அனைத்து பள்ளி மாணவ,மாணவியருக்கும் அவரவர் பயிலும் பள்ளிகளின் இந்த வருடம் நடைபெறும் ஆண்டு விழாவின்போது பாராட்டுச்சான்றும்,பரிசும் வழங்கப்படும் என அறிவித்த காட்சி.மேலும் சூசைபுரம் மேல்நிலைப்பள்ளியில் சாலைப்பாதுகாப்பு இயக்கம் (R.S.P)  மற்றும் டிவைன் மெட்ரிக் பள்ளியில் சாலைப்பாதுகாப்புக் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது அறிந்து பாராட்டு நல்கிய காட்சி.(மேலே)
               23-வது சாலை பாதுகாப்பு 
      விழிப்புணர்வுப் பொதுக்கூட்டம்.
             நாள்;- 06-01-2012.
      இடம்;- தாளவாடி பேருந்து நிலையம்.
    நேரம்;-காலை 10-00மணி முதல் 12-00மணிவரை.

       தலைமை;- திருமிகு.சாந்தமல்லப்பா  அவர்கள்,
                          தலைவர்-  ரோட்டரி சங்கம்-தாளவாடி.

     முன்னிலை;- திருமிகு.கா.தங்கவேல் அவர்கள்,
                              காவல்துறை ஆய்வாளர் - தாளவாடி,

வரவேற்புரை;- திருமிகு.C.பரமேஸ்வரன்  அவர்கள்,
                      தலைவர்-தமிழ்நாடு அறிவியல் இயக்கம் - தாளவாடி,
  
      தலைமையுரை;- திருமிகு.சாந்தமல்லப்பா அவர்கள்,
             தலைவர்-ரோட்டரி கிளப் - தாளவாடி.
   
      சிறப்புரை;- திருமிகு. சிங்காரவேலு அவர்கள்,
           மோட்டார் வாகன ஆய்வாளர் -சத்தியமங்கலம்.
       திருமிகு.கா.தங்கவேல் அவர்கள்,
                            காவல்துறை ஆய்வாளர் - தாளவாடி(CIRCLE).
       
       திருமிகு.அரிமா.K.லோகநாதன் அவர்கள்,
                  தலைவர்- கோபி & சத்தி வட்ட ஓட்டுனர்பயிற்சிப்பள்ளி.
    
        திருமிகு.S.மரிய அருள் வியானி அவர்கள்,
                      டிவைன் பள்ளி  மற்றும் ரோட்டரி கிளப் - தாளவாடி.
   
        திருமிகு.அந்தோணி முத்து அவர்கள்,(PALM-2)
                    தமிழ்நாடு அறிவியல் இயக்கம் - தாளவாடி.

          விழிப்புணர்வுப்பாடல்;- 
         திருமிகு.மனோஜ் ஆசிரியர்,மற்றும் 
                                 குழுமத்தினர்
                            டிவைன் மெட்ரிக் பள்ளி - தாளவாடி.

          நன்றியுரை;-திருமிகு.A.P.ராஜூ அவர்கள்,
                       தமிழ்நாடு அறிவியல் இயக்கம் - தாளவாடி. 

நன்றிகள்;-             
(1)திருமிகு.சகாயம்-சூசைபுரம்  அவர்களுக்கும் (ஒலிபெருக்கி உதவி மற்றும் மின்தடை ஏற்பட்டவுடன் உடனடியாக ஜெனரேட்டர் உதவி செய்தமைக்கு),
                (2)திருமிகு.சேத்தன் பிரஸ்-தாளவாடி அவர்களுக்கும் (வேலைப்பளு இருப்பினும் சமூக நலனுக்கான நிகழ்வு என அறிந்து உடனடியாக பத்திரிக்கை 2000 எண்ணிக்கை அச்சடித்துக்கொடுத்தமைக்கு)
     ''தாளவாடி வட்டார  சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுக்குழு'' 
    சார்பாக மனமார்ந்த நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கிறோம்.       
                        ROTARY CLUB OF THALAVADY,
               TAMIL NADU SCIENCE FORUM- THALAVADY,
               POLICE DEPARTMENT-THALAVADY CIRCLE,
            REGIONAL TRANSPORT OFFICE-GOBI & SATHY,
                    ASSOCIATION OF DRIVING SCHOOLS,
                         ALL SCHOOLS OF THALAVADY.
 ======================================================================
 tnsfthalavady.blogspot.com //  paramesdriver.blogspot.com // konguthendral.blogspot.com //



Tuesday, January 3, 2012

23-வது சாலைப் பாதுகாப்பு பேரணி-கோபி

அன்பு நண்பர்களே,வணக்கம். 
                     இன்று 23-வது சாலைபாதுகாப்பு வார விழாவின் மூன்றாவது நாள்.இன்று கோபி கலைமற்றும் அறிவியல் கல்லூரியின்  முதலாம் ஆண்டு மாணவ,மாணவியர் மட்டும் கலந்து கொண்ட ''சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு'' பேரணி பற்றி இந்தப்பதிவில் காண்போம்.

                " ACCIDENTS BRING TEARS - SAFETY BRING CHEER " 
"விபத்தினால் வருவது துன்பம்-பாதுகாப்பினால் வருவது இன்பம்"

                                                     
      மரியாதைக்குரிய மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மரியாதைக்குரியM.ரகுபதி அவர்கள் மற்றும் மரியாதைக்குரிய நடேசன் அவர்கள்,இவர்களுடன்  கோபி கலை அறிவியல் கல்லூரி பெற்றோர் சங்க நிர்வாகிகள் மேலே உள்ள படம்.
                                                   

    கல்லூரி மாணவக்கண்மணிகள் வாசகங்களைத்தாங்கிவரும் காட்சி மேலே உள்ள படம்.           
      கல்லூரி மாணவி ஒருவர்(1)  மற்றும் 
    மரியாதைக்குரிய வட்டார போக்குவரத்து அலுவலர் திருமிகு.J.ஜெயக்குமார்  அவர்கள்(2) சாலை பாதுகாப்பு பேரணியின் நோக்கம் பற்றி ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கும் காட்சி மேலே உள்ள இரண்டு படங்களும்.  அருகில் மரியாதைக்குரிய முதல்வர் அவர்கள் & கல்லூரிப் பேராசிரியர் அவர்கள்.
                                    

      
                            பேரணியின் ஒரு பகுதி மற்றும் போக்குவரத்து சின்னங்கள் பற்றிய விபரங்கள் மேலே.             

         23-வது சாலைபாதுகாப்பு வார விழிப்புணர்வு பேரணி கோபி செட்டிபாளையம் கலை& அறிவியல் கல்லூரியின் உள் அமைப்புகள் மற்றும் கோபி வட்டார போக்குவரத்து அலுவலகம் இணைந்து நடத்தின.
           

        சரியாக மாலை3-00மணியளவில் கோபி வட்டார போக்குவரத்து அலுவலர் அவர்கள் கல்லூரி வாயிற் முன்பு கொடி அசைத்துத்துவக்கிவைத்தார்.அவருடன் மரியாதைக்குரிய மோட்டார் வாகன ஆய்வாளர்களும்,அலுவலகப்பணியாளர்களும் கலந்துகொண்டனர்.இதில் சிறப்பு என்னவெனில் கோபி வட்டார போக்குவரத்து அலுவலர் உட்பட அனைவரும் பேரணி முடிவுறும் இடம் வரை வெயில் பாராமல் கல்லூரி மாணவ,மாணவியருடன் நடந்து வந்து ஊக்கமளித்தவிதம்,பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கொடுத்தவிதம்  மிகவும் பாராட்டுக்குரியது ஆகும்.

           கோபி கலை&அறிவியல் கல்லூரியின் நிர்வாகக்குழு மரியாதைக்குரிய நிர்வாகிகளும்,மரியாதைக்குரிய கல்லூரி முதல்வர் அவர்களும் இளஞ்செஞ்சிலுவைச் சங்கம் (Y.R.C) சமுதாய சேவைக் கூட்டமைப்பு (S.S.L)  பெற்றோர் ஆசிரியர் சங்கம் (P.T.A) ஆகிய அமைப்புகள் சார்ந்த மாணவ,மாணவியர்களும் அந்தந்த இயக்கங்களின் பொறுப்பேற்ற பேராசிரியப் பெருமக்களும்,

         இவர்களுடன் அனைத்து பேராசிரிய,பேராசிரியைகளும் மற்றும் பெற்றோர் சங்க நிர்வாகிகளும் இந்த மிக நீண்ட பேரணியில் பங்கேற்று விழிப்புணர்வுப்பிரச்சாரம் கோஷமிட்டும்,கோபி வட்டார பொதுமக்களுக்கும்,பிற வாகன ஓட்டிகளுக்கும்,பாதசாரிகளுக்கும் துண்டுபிரசுரங்கள் வழங்கியும்,பாதுகாப்பு பற்றிய கோஷங்கள் போட்டும் பேரணியை சிறப்பாக நடத்தினர்.சுமார் ஆயிரத்து ஐநூறு மாணவ,மாணவியர் கலந்து கொண்டனர். 

  சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகத்தை மாணவர்கள் தாங்கிவர இவர்களுடன்
 பெற்றோர் சங்க பெயர் பொறித்த வாசகத்தை S.வினோத்குமார் B.B.M-Ist year மற்றும் S.ராஜ்குமார்B.B.M-Ist year தாங்கி வர, இளஞ்செஞ்சிலுவைச் சங்க பெயர் பொறித்த வாசகத்தை S.ராம மூர்த்தி Physics-Ist year மற்றும் E.நந்தகோபால் Physics-Ist year தாங்கி வர, நகர நுகர்வோர் அமைப்பு பெயர் பொறித்த வாசகத்தை K.J.கிஷோர்B.Com-Ist year மற்றும் S.லோகேஸ்வரன்B.Com-Ist year தாங்கிவந்து கல்லூரிக்கு பெருமை சேர்த்தனர்.மேற்கண்ட பணி புரிந்த மாணவர்களை கூடுதலாகப் பாராட்டி வாழ்த்தலாம்.ஏனெனில் ஐந்து கிலோமீட்டர் தூரம் என்பது சாதாரணமல்லவே!. 

             இடையில் ஜெயா தொலைக்காட்சி நிருபர்கள் மற்றும் பல்வேறு தொலைக்காட்சி & பத்திரிக்கை நிருபர்கள் மரியாதைக்குரிய வட்டார போக்குவரத்து அலுவலர் திருமிகு.ஜெயக்குமார் அவர்களிடம் மற்றும் கல்லூரி மாணவிகளிடம் மற்றும் பெற்றோர் சங்க நிர்வாகிகளிடம்பேரணியின் நோக்கம் பற்றி  பேட்டி கண்டனர்.
         
            பேரணி கலை அறிவியல் கல்லூரி வாயிற்முன்பு துவங்கி கோபி மத்திய பேருந்து நிலையம் வரை சுமார் ஐந்து கிலோமீட்டர் நடந்தது.இடைஇடையே கல்லூரி வாகனத்தின் மூலம் குடிநீர் வழங்கி மாணவக்குழந்தைகளின்  தாகத்தைப் போக்கி சிறப்பித்தனர்.பேருந்து நிலையம் சென்றடைய ஏறக்குறைய இரண்டு மணிக்கும் கூடுதலான  நேரம் ஆனது.
பதிவிட்டவர்.PARAMESDRIVER // TAMIL NADU SCIENCE FORUM- THALAVADY .
  
     தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்ஈரோடு மண்டலம் சார்பாக நகர்வலம் வரும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு வாகனம் கீழே காணீர். 


       
    பேரணி இடையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்-ஈரோடு மண்டலம் சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாகனம் கோபி நகரத்தினுள் பாதுகாப்பு பற்றிய விளம்பரப்பலகை மற்றும் ஒலிபெருக்கி வாயிலாக திருமிகு.சுப்பிரமணியம்.ஓட்டுனர் பயிற்றுனர் அவர்கள் விழிப்புணர்வுக்கான உரையாற்றிக்கொண்டு இருந்தபோது எடுத்த படம் இதுங்க.              நன்றி!    
                         PARAMESDRIVER // THALAVADY.