Wednesday, February 22, 2012

இரவு வானம்

புதன், 10 ஆகஸ்ட், 2011

இரவு வான் நோக்குதல் ஆகஸ்ட் 2011

கோள்களின் நிலைகள்
ஆகஸ்ட் 10 முதல் செப்டம்பர் 9 வரை

சூரியன் உதிக்கும் முன் தெரியும் கோள்கள்:
புதன்: இம்மாத ஆரம்பத்தில் மாலை நேரக் கோளாக இருக்கும் புதன், மூன்றாம் வாரத்தில் Aகாலை நேர கோளாக மாறுகின்றது. செப்டம்பர் மாத முதல் வாரத்தில் ஓரளவு இக்கோளைக் காண இயலும். இக்கோள் சிம்மம் விண்மீன் தொகுதியில் உள்ளது.
செவ்வாய்: காலை சுமார் 2 மணிக்கு இக்கோள் உதமாகிறாது. அதிகாலை கிழக்கு வானில் நன்கு தெரியும். இக்கோள் மிதுனம் தொகுதியில் உள்ளது.
வியாழன்: இம்மாதம் காலைவானில் பிரகாசமான இருப்பது இதுவே ஆகும். இதைக் காலை மேற்கு வானில் நன்கு காணலாம். இது மேஷம் தொகுதியில் உள்ளது.
( குறிப்பு : காலை நேர விண்மீன் தொகுதிகளை அடையாளம் காண கடந்த ஜனவரி மாத துளிர் இரவு வான் வரைபடத்தை உபயோகிக்கலாம்)
சூரியன் மறைந்தபின் தெரியும் கோள்கள்:
வெள்ளி: இம்மாத அதிகாலை விடியும் நேரத்தில் கிழக்கு அடிவானில் உள்ளது. பின்னர் இம்மாத மூன்றாம் வாரத்திலிருந்து மாலை நேர கோளாக மாறுகின்றது. இக்காலம் முழுவதும் சூரியனுக்கு மிகமிக அருகில் உள்ளதால் இதைக்காண இயலாது இக்கோள் கடகம் விண்மீன்தொகுதியிலிருந்து சிம்மம் தொகுதிக்குச் செல்கிறது
சனி: சனிக்கோளை சூரியன் மறையவும் மேற்கு அடிவானிலிருந்து சுமார் 30 டிகிரி உயரத்தில் தெரியத் தொடங்கும். இம்மாதம் முழுவதும் கன்னி விண்மீன் தொகுதியில் சித்திரை நட்சத்திரத்திற்கு சற்று மேற்கில் காணலாம்.
சில முக்கிய வான் நிகழ்வுகள்:
ஆகஸ்ட் 13: முழுநிலவு
ஆகஸ்ட் 16: வெள்ளிக் கோள் சூரியனுக்கு நேர் பின்புறமாக அமைதல் (superior conjucation)
ஆகஸ்ட் 17: புதன் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் அமைதல்.
ஆகஸ்ட் 18: நிலவு சேய்மைத் தொலைவில் இருத்தல் ( apogee).
ஆகஸ்ட் 23: நெப்டியூன் சூரியனுக்கு நேர் எதிரே அமைவதால் சூரியன் மறையவும் கிழக்கே உதிக்கும். தொலை நோக்கி வழியாக இக்கோளை காணலாம்.
ஆகஸ்ட் 25: செவ்வாய் அதிகாலை கிழக்குவானில் பிறைநிலவுக்கு சுமார் 5 டிகிரி கிழக்கே இருத்தல்
ஆகஸ்ட் 29: அமாவாசை.
ஆகஸ்ட் 30: நிலவு பூமிக்கு அண்மைத் தொலைவில் உள்ளது (perigee)
செப்டம்பர் 3: புதன் சூரியனிலிருந்து அதிகபட்சமாக 18 டிகிரி மேற்காக பிரிந்து இருத்தல். அதிகாலை கிழக்குவானில் புதனை சுமார் 5.15 5.45 மணிக்குள் ஓரளவு காண இயலும் நாள்.
சர்வதேச விண்வெளி நிலையம் (ISS) தமிழகத்தில் நன்கு தெரியும் சில நாட்கள்:
ஆகஸ்ட் 12: பிரகாசமான நட்சத்திரம் போன்று தெரியும் இது தென்மேற்கு திசையில் மாலை சுமார் 7.04க்குத் தெரியத்தொடங்கி வடகிழக்கு நோக்கி சுமார் 7.11 வரை செல்லக் காணலாம். அடிவானிலிருந்து அதன் அதிகபட்ச உயரயமானது தென் மாவட்டங்களில் சுமார் 76டிகிரியாகவும் வட மாவட்டங்களில் சுமார் 67 டிகிரியாகவும் இருக்கும்.

வியாழன், 17 ஜூன், 2010

ஆனி மாத இரவு வான் (June 2010 sky chart)


ஆனி மாத இரவு வான் ( June 2010 sky chart for Tamil Nadu)
June 2010 sky chart

சனி, 3 ஏப்ரல், 2010

சித்திரை மாத இரவு வான்

சித்திரை மாத இரவு வான்
உபயோகிக்கும் முறை:
தலைக்கு மேலாக இவ்வரைபடத்தை அதில் உள்ள திசைகளுக்கு நேராக பிடித்துக்கொண்டு பார்க்கவும்.

ஞாயிறு, 6 டிசம்பர், 2009

டிசம்பர் மாத இரவு வான்
உபயோகிக்கும் முறை:
தலைக்கு மேலாக இவ்வரைபடத்தை அதில் உள்ள திசைகளுக்கு நேராக பிடித்துக்கொண்டு பார்க்கவும்.

திங்கள், 1 ஜூன், 2009

June 2009 sky chart for Tamil Nadu

Night Sky Map for Tamil Nadu- June 2009
2009 ஜூன் மாத தமிழ் நாட்டிற்கான வான் வரை படம்

படத்தினை தெளிவாகக் காண அதை சொடுக்கவும்


Night Sky Chart for TamilNadu in May 2009

தமிழ் நாட்டிற்கான மே மாத இரவு வானம்

Tuesday, February 7, 2012

கிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-02



அன்பு நண்பர்களே,
          PARAMESDRIVER.BLOGSPOT.COM வலைப்பதிவிற்கு வருகை புரிந்துள்ள அனைவரையும் தலைவணங்கி வரவேற்கிறேன். அனைவருக்கும் கல்வி இயக்கம் வட்டார வள மையம் சத்தியமங்கலம் சார்பாக நடைபெறும் கிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சிமுகாம் பற்றி இங்கு காண்போம்.




                 சத்தி ஊராட்சி ஒன்றிய வட்டார வள மையத்தின்  கிராமக் கல்வி குழு மற்றும் கல்வி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் 07-02-2012 இன்று  இரண்டாம் நாள்.


           மரியாதைக்குரிய வட்டார வள மேற்பார்வையாளர் அவர்கள்சத்தி ஒன்றியம்- பெரியூர் மையத்தில் கல்விக்குழு உறுப்பினர்களின் பங்கேற்பில்  விளக்கவுரை நிகழ்த்திய காட்சி மேலே உள்ள படம்.அருகில் இடது கோபி சுகாதார ஆய்வாளர் திருமிகு.மணி அவர்கள் மற்றும் வலது தமிழ்நாடு அறிவியல் இயக்கம்  சத்தி மற்றும் தாளவாடி வட்டார பொறுப்பாளர் திரு.பரமேஸ்வரன் அவர்கள்.

                  
               திருமிகு.சுகாதார ஆய்வாளர் அவர்கள் சுகாதாரம் பற்றி குறிப்பாக பள்ளியில்  ஏழாம் வகுப்புக்கு மேல் பயிலும் பெண் குழந்தைகளுக்கு உடலியல் ரீதியாக தோன்றும் பிரச்சினைகள் அதற்கான தீர்வுகள் பற்றிய தெளிவுரை கொடுக்க ஆசிரியைகளுக்கான,பெற்றோர்களுக்கான கடமைகள் பற்றி மிகத்தெளிவாக விளக்கிய காட்சி மேலே உள்ள படம்.



    திருமிகு.மு.பாலகிருஷ்ணன் M.A.,D.T.Ed., இடைநிலை ஆசிரியர்-ஊராட்சி ஒன்றிய அரசுப்பள்ளி,வேடர்நகர்,புதுவடவள்ளி-சத்தியமங்கலம் அவர்கள் பள்ளிக்குழந்தைகளிடம் சூழலுக்கேற்ப,குழந்தைகளோடு ஒன்றி உறவுக்கு உறவாக,நட்புக்கு நட்பாக பழகி பாடங்களை சுமையில்லாமல் ஆர்வத்தோடு கற்க ஏற்றவாறு கற்பிப்பது பற்றி விளக்கவுரை அதாவது
         ''ஆசிரியர் பணி அறப்பணி!,அதற்கே உன்னை அர்ப்பணி!!''
        என வார்த்தைகளுக்கேற்ப சுமார் இரண்டு மணி நேரம் தொய்வின்றி  கிராமக்கல்விக்குழு உறுப்பினர்களிடையே உரை நிகழ்த்திய காட்சி மேலே உள்ள படம்.
       மரியாதைக்குரிய மக்கள் பிரதிநிதி அவர்கள் அரசுப்பள்ளி குழந்தைகள் சேர்க்கை மிகவும் குறைந்து வருவதாக குறைபட்டு அதனை நிவர்த்தி செய்ய பொதுமக்களாகிய நமது செயலாற்றல் எவ்வாறு இருக்க வேண்டும்.அரசு மானியங்கள் பள்ளிக்கு சரியானமுறையில் பயன்படுத்தப்படுகிறதா?எனக் கண்காணிப்பது பற்றிய  விழிப்புரை நிகழ்த்திய காட்சி மேலே உள்ள படம்.அருகில் வார்டு உறுப்பினர் உட்பட மேலும் பல உள்ளூர் பொறுப்பாளர்கள்.
         அரசியலில் நாங்கள் பல்வேறு அணிகளில் இருந்தாலும் கல்வி என்பது பொதுமக்கள் என்ற வகையில் எங்களது குழந்தைகளுக்கும் அவசியம். என பயிற்சியில் கலந்துகொள்ள வருகை தந்துள்ள பழைய கலையனூர்  மக்கள் பிரதிநிதி அவர்கள்.அருகில் திருமிகு. ஆசிரியர் பயிற்றுனர் அவர்கள்.
         வருகை புரிந்த கிராமப் பெரியோர்களுக்கு வழிகொடுத்து, பிறகு மீண்டும் தமது தமிழ்ச்சொல்லாடலால் கிராமக்கல்விக்குழு உறுப்பினர்களுக்கு எடுத்துரைத்த சிந்திக்கத்தூண்டும் கதைகளால் அரங்கத்தை கலகலக்க வைத்த திருமிகு.மு.பாலகிருஷ்ணன்.M.A.,D.T.Ed.,  இடைநிலை ஆசிரியர் அவர்கள்.


             மரியாதைக்குரிய ஆசிரியர் பயிற்றுனர் அவர்கள் அரசு கல்விக்காக செலவிடப்படும் நிதிகள் மற்றும் கட்டுமானங்கள்,அதனைக் கண்காணிப்பது,பாதுகாப்பது என  கிராமக்கல்விக்குழு உறுப்பினர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கடமைகள் & உரிமைகள் பற்றி விளக்கிய காட்சி மேலே உள்ள படம்.

      பெரியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் கணிணியில் சர்வ சாதாரணமாக நுட்பங்களைக் கையாண்ட காட்சி மேலே மற்றும் கீழே உள்ள படங்கள்.



         கிராமக்கல்விக்குழு உறுப்பினர்களுக்கு மதிய உணவு பரிமாற பள்ளி ஆசிரிய,ஆசிரியைகள் இவர்களுடன் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற காட்சி மேலே உள்ள படம்.மற்றும் கீழே உள்ள படம்.








          கோபி செட்டிபாளையம் சுகாதார ஆய்வாளர்  திருமிகு.மணி அவர்கள்  கிராம கல்விக்குழு உறுப்பினர்கள் சுகாதாரம் பற்றி கேட்ட சந்தேகங்களுக்கு விளக்கமளித்த காட்சி.மேலே உள்ளபடம்.(அதோடு பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்,என அனைவருக்கும் அவரது கைபேசி எண் கொடுத்த பாங்கு பாராட்டுக்குரியது)



      தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பொறுப்பாளர் திருமிகு.பரமேஸ்வரன் அவர்கள் அரசுப்பள்ளி மற்றும் அதில் பணி புரியும் தற்போதைய ஆசிரியர்கள் எவ்விதத்திலும் திறமை குறைந்தவர்களல்லர்!. என ஈரோடு மாவட்ட முன்னாள் ஆட்சியரின் செயல்,மற்றும் கோவை மாவட்டம்-காரமடை ஊராட்சி ஒன்றியம்-ராமாம்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியின் செயல்பாடு பற்றி ஆதாரத்துடன் விளக்கி இங்கும் பொதுமக்கள் மனது வைத்தால் இங்குள்ள அரசுப்பள்ளிகளையும் சர்வதேச தரமுள்ள பள்ளிகளுக்கு இணையாக மாற்ற முடியும்.என தெளிவுரை நிகழ்த்தினார்.அதற்காக கையாண்ட ஆதாரங்கள் கீழ் கண்டவாறு. ஐந்து ஆதாரங்களை பிற வலைப்பதிவுகளிலிருந்து குறுந்தட்டில் பதிவிட்டுக்கொண்டுவந்து பெரியூர்- முகாமில் திரையிட்டு கிராமக்கல்விக்குழு உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வூட்டினார்.

                  மேலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்குப் பயனுள்ள தகவலாக - கணிணியில் தமிழில் தட்டச்சு செய்வது பலமுறைகள் வியாபார ரீதியாகக் கையாள்வதன் சூழ்ச்சியினையும் அவ்வாறு பலவகைகளைக் கையாண்டு மனம் சோர்வடையாமல் எளிதில் பயன்படுத்த முப்பது எழுத்துக்களைக்கொண்டு ஷிப்ட் அழுத்தாமல்  தமிழ்'99 முறையில்  தமிழ் தட்டச்சு செய்வது மிக எளிமையானது என்பதனையும், விசைப்பலகையில் கைவிரல்களை எவ்வாறு பதிந்து எளிமையாக கையாளலாம் என்பது பற்றியும்,தமிழ்'99 க்கான மென்பொருளை http://www.nhmwriter.inவலைத்தளத்தில் இலவசமாகத் தரவிறக்கம் செய்து அதனை கணிணியில் உள்ளீடு செய்து பயன்படுத்துவது பற்றியும் திரையிட்டு  எளிய விளக்கவுரை நிகழ்த்தினார்.

                                    பதிவேற்றம்;-PARAMESDRIVER-
                                      TAMILNADU SCIENCE FORUM
                                                SATHY & THALAVADY







கிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-01

06 February, 2012


அன்பு நண்பர்களே,
   தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஈரோடு மாவட்டம் சார்பாக PARAMESDRIVER.BLOGSPOT.COM வலைப்பதிவிற்கு வருகை தந்துள்ள தங்களை வருக! வருக !! என வரவேற்கிறோம்.
    
         அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டம்-சத்தியமங்கலம் வட்டார வள மையத்தின் சார்பாக கிராமக் கல்வி உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் 2012-ம் அதாவது இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 06-ந்தேதி இன்று துவங்கி  மூன்று நாட்கள் நடைபெறுகின்றன.
                

           சத்தியமங்கலம் ஒன்றியம் சார்பாக சத்தி-1, சதுமுகை,பகுதிகளுக்கான மையம் சத்தியமங்கலம் காவல்நிலையம் எதிரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த கிராமக் கல்விக் குழு மற்றும் கல்வி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கான  பயிற்சி முகாமின் துவக்கவிழா காலை 10-00 மணிக்குத் துவங்கியது.

              சத்தியமங்கலம் அரசு ஆண்கள்மேனிலைப்பள்ளி துணைத்தலைமைஆசிரியர்                           திருமிகு.செ.தங்கராஜ் அவர்கள்.இடமிருந்து இரண்டாவதாக அமர்ந்திருப்பவர்.மேலே உள்ள படம்.

         
   மரியாதைக்குரிய வட்டார வள மையத்தின்  திட்ட மேற்பார்வையாளர் அவர்கள் VEC பயிற்சி முகாமின் துவக்கவுரை ஆற்றிய காட்சி மேலே உள்ள படங்கள்.அருகில் திருமிகு.தொடக்கக்கல்வி முன்னாள் அலுவலர் அவர்கள் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-சத்தி மற்றும் தாளவாடி வட்டார  பொறுப்பாளர் திரு.பரமேஸ்வரன் அவர்கள்..


   கிராமக்கல்விக்குழு உறுப்பினர்கள்,பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள்  மற்றும் மக்கள்பிரதிநிதிகள் மற்றும் ஆசிரிய,ஆசிரியைப்பெருமக்கள் இவர்களுடன் ஏனைய பெற்றொர்கள்.


         வட்டார வள மைய  ஆசிரியர் பயிற்றுனர் திருமிகு.G.R. ரகுபதி அவர்கள் கிரமக்கல்விக்குழு உறுப்பினர்களின் கடமையும்,உரிமையும் பற்றி விளக்குகிறார்.அருகில் வட்டார வள மைய திருமிகு.மேற்பார்வையாளர் அவர்களுடன்  கல்வியின் சட்டப்படியான உரிமைகள் பற்றி உரைநிகழ்த்த வருகைபுரிந்த  திருமிகு.வழக்குரைஞர் அவர்கள்.மேலே உள்ள படம்.
   
   
         திருமிகு.ப.மெய்யப்பன் ஆசிரியர் பயிற்றுனர் அவர்கள், கல்வியின் உரிமைகள்,அரசின் சலுகைகள் பற்றிய விளக்கவுரையினை ஒளிப்படமாக திரையிட அதனை விளக்குகிறார் திருமிகு.G.R.ரகுபதி ஆசிரியர் பயிற்றுனர் அவர்கள்.


                      முட்டாள் வேலைக்காரி-முனியம்மா-01மேலே உள்ள படம் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் ஓரங்க நாடகம்.


                     முட்டாள் வேலைக்காரி-முனியம்மா-02


     

                      முட்டாள் வேலைக்காரி-முனியம்மா-03

                        முட்டாள் வேலைக்காரி-முனியம்மா-04

     
              முட்டாள் வேலைக்காரி-முனியம்மா-05

                திருமிகு.நம்பிக்கை மேரி.தலைமை ஆசிரியை அவர்கள்.

        திருமிகு.நம்பிக்கை மேரி.தலைமை ஆசிரியை-( காளியப்ப கவுண்டன் புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி) அவர்களது படைப்பால் கல்வி கற்றலின் அவசியத்தை வலியுறுத்தும் ''வேலைக்காரி முனியம்மா'' என்னும் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் சமூக சீர்திருத்த நாடகம்.மற்றும்நாடகத்தில் நடிப்பால் அசத்திய மாணவக்குழந்தைகள்.மேலே உள்ள படங்கள் ஐந்தும்.


    
 அனைவருக்கும் மதிய உணவு...........பரிமாறும் ஆசிரிய பயிற்றுனர்கள் மற்றும் ஆசிரியைகள்.(இவை தவிர இடையிடையே தேநீர் மற்றும் பிஸ்கட் வழங்கப்பட்டன.)



     மதியத்திற்குப்பிறகு திருமிகு.ப.மெய்யப்பன் ஆசிரியர் பயிற்றுனர் அவர்களால் கருத்துச்செறிவுள்ள குறும்படமான '' வேலம்மா'' திரையிடப்பட்டது.இதுவும் கல்விக்கான விழிப்புணர்வுகொண்ட சிறந்த மற்றும் ரசனையுள்ள படமாகும்.
                 தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பொறுப்பாளர் திரு. பரமேஸ்வரன் அவர்கள் கிராமக்கல்விக்குழு மற்றும் கல்வி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்காக  போக்குவரத்தின் அத்தியாவசியம் மற்றும் சாலைப்பாதுகாப்பு விதிகள் பற்றிய கருத்துக்களை விளக்கினார். 
           மேலும், முகாமில் கலந்து கொண்ட ஆசிரிய,ஆசிரியைகளுக்காக மற்றும் மாணவ,மாணவியருக்காக  தமிழில்  வியாபார தந்திரங்களால் கணிணியில் தட்டச்சு செய்ய பலமுறைகள் கையாளப்பட்டு தமிழையே வெறுக்கும் போக்கு உருவாக்கப்பட்டுள்ளது என்றும்  நமது நுண்ணுணர்வினையும் வெளிப்படுத்தும் இனிய தமிழை ஆர்வமாக,மிக எளிமையாகக் கையாள தமிழ் இணைய ஆய்வறிஞர்களால் உருவாக்கப்பட்ட பொதுமுறையான ''தமிழ்'99'' முறையைப்பயன்படுத்தி மெய்-18 மற்றும் உயிர்-12 ஆக முப்பது எழுத்துக்களைக் கொண்டு மிக எளிமையாகக் கணிணியைக் கையாளலாம் எனவும்.தமிழ்'99 மென்பொருள் http://www.nhm.in  இணையதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கணிணியில் உள்ளீடு செய்வது பற்றியும்  விளக்கினார்.
                 பதிவேற்றம்;-PARAMES DRIVER- 
     TAMIL NADU SCIENCE FORUM-THALAVADY & SATHY.