அன்பு நண்பர்களே,
paramesdriver.blogspot.com வலைப்பதிவிற்கு தங்களை வணங்கி வரவேற்கிறேன்.
மக்கள் சிந்தனைப் பேரவை-ஈரோடு
வ.உ.சி. பூங்காவில் நுழைவு வாயில்
கண்காட்சியினைக்காண பள்ளிக்குழந்தைகளின் ஆர்வம்
தினசரி நடக்கும் கலைநிகழ்ச்சிப்பட்டியல் விவரம்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தொண்டர்கள் (ஆசிரியர் மற்றும் மாணவர்)
நம்ம ஈரோடு மாநகரில் மக்கள் சிந்தனைப் பேரவை சார்பாக ஏழாம் ஆண்டு புத்தகத்திருவிழா வ.உ.சி. பூங்கா மைதானத்தில் தற்போது நடைபெறுகிறது. இந்த புத்தகத் திருவிழா-2011 கண்காட்சியில் பெயருக்கேற்றவாறு ,புத்தகக் கடைகள் 200-க்கும் அதிகமாக நிறுவப்பட்டு ,புத்தகங்களும் மிக அதிக எண்ணிக்கையில் பல அரிய வகைப் புத்தகங்கள்,தொழில் நுட்பப் புத்தகங்கள்,மேலாண்மை நிர்வாகத்திற்கான புத்தகங்கள்,அறிவியல் ,புவியியல்,வரலாறு,அரசியல்,கணினி சம்பந்தமான புத்தகங்கள்,சுய முன்னேற்றத்திற்கான புத்தகங்கள்,பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான பாட சம்பந்தமான புத்தகங்கள்,போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள், என பல ஆயிரக் கணக்கில் குவிக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளன.
மக்கள் சிந்தனைப்பேரவைத் தொண்டர்கள்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாகவும் புத்தக அரங்கு அமைக்கப்பட்டு உள்ளது. மக்கள் சிந்தனைப் பேரவைத் தன்னார்வத் தொண்டர்கள் ஆங்காங்கு சுறு சுறுப்பாக இயங்கி பார்வையாளர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருவது மிகவும் பாராட்டுக்கு உரியதாகும்.
இது போன்ற அரியவகை கண்காட்சிகளுக்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,மாணவியர்,கல்வியாளர்கள்,அவசியம் கலந்து அறிவுச்செல்வங்களை அள்ளிச்செல்ல வேண்டும்.மேலும் அதிக அளவில் வருகையாகும்போது இக்கண்காட்சியை நடத்தும் மரியாதைக்குரிய மக்கள்சிந்தனைப் பேரவை நண்பர்களுக்கு ஊக்கம் கொடுத்ததுபோலவும் இருக்கும்.
paramesdriver.blogspot.com //Sathy & Thalavadi