Wednesday, February 11, 2015

கடக ராசி ஆயில்ய நட்சத்திரம் பிறந்தவர்களா?

கடக ராசி ஆயில்ய நட்சத்திரம் பிறந்தவர்களா?

மரியாதைக்குரியவர்களே,
            வணக்கம்.கடகராசி ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கான பதிவு இது.மற்ற வலைத்தளங்களிலிருந்து எடுக்கப்பட்ட தகவல்களும் அடங்கும்.

(1) ஆயில்யம் நட்சத்திரம்  பற்றிய ஆய்வு தகவல்: - ஜோதிடர் P .பாலச்சந்திரன் அவர்களுக்கு நன்றி....

      ஆயில்யம் நட்சத்திரம் உடைய ஒரு பெண்ணை மணந்தால், அந்தப் பெண்ணுடைய மாமனாரோ, மாமியாரோ இறந்துவிடுவார்கள் என்று சொல்கிறார்கள். இது உண்மையா?
இதெல்லாம் பொதுவாக சொல்லப்படுவது. மகம் என்றால் ஜகத்தை ஆள்வார் என்பது பொதுவானவை. மகம் நட்சத்திரத்தில் பிறந்து மாடு மேய்ப்பவர்களையும் பார்க்கிறோம். மகம் நட்சத்திரத்தில் பிறந்து ஐ.பி.எஸ். அதிகாரிகளாக இருப்பவர்களையும் பார்க்கிறோம். நட்சத்திரத்தை மட்டுமே அடிப்படையாக எடுத்து நாம் எதையும் சொல்லக்கூடாது.

மாமியார் ஸ்தானம் அந்தப் பெண்ணிற்கு நன்றாக இருக்கிறது. மாமியார் ஸ்தானம் நன்றாக இருந்தால் ஆயில்யமாவது, விசாகமாவது தைரியமாக பெண் எடுக்கலாம். நீங்க நல்லா இருக்கணும்னு சொல்லிதானே இதை எடுத்துத் தருகிறேன் என்று சொன்னேன்.

பொதுவாக ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கலகலப்பாக பேசுவார்கள். முகத்தை உம்மென்று வைத்திருக்க மாட்டார்கள். கஷ்டமான சூழ்நிலையிலும் லட்சுமி கடாட்சமாக இருப்பார்கள். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எழுத்தாற்றல், பேச்சாற்றல் எல்லாம் அதிகமாக இருக்கும். விட்டுக் கொடுக்கும் குணம் அதிகமாக இருக்கும்.

கடக ராசிக்கார்கள்தா‌ன் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். கடக ராசியில் புனர்பூசம், பூசம், ஆயில்யம் என்று மூன்று நட்சத்திரங்கள் இருக்கிறது. ஆனால் ஆயில்யத்தில்தான் "ப்ளக்சிபிளிட்டி ஸ்டார்" என்று எங்க தாத்தா சொல்வார். எந்தத் தருணத்திலும் தன்னை மாற்றிக்கொண்டு மற்றவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நட்சத்திரம் அது.

யார் இதனுடைய அதிபதி? 

புதன். புதனுடைய நட்சத்திரம். புதன் கூட்டுக் குடும்பங்கள், பாரம்பரிய பெருமைகள் இதையெல்லாம் காப்பாற்றுவதற்கு உரிய கிரகம். அது ந‌ன்றாக இரு‌ந்தா‌ல் இ‌ந்த ந‌ட்ச‌த்‌திர‌ங்களை‌‌த் த‌வி‌ர்‌க்கவே கூடாது. இ‌தி‌ல் ந‌ல்ல அ‌றிவா‌ளிக‌ள், பு‌த்‌திசா‌லிக‌ள், பெரு‌ம் பண‌க்கார‌ர்க‌ள், ‌நிறுவன‌ங்க‌ள் நட‌த்து‌கிறவ‌ர்க‌ள், அர‌சிய‌ல் தலைவ‌ர்‌க‌ள் இதுபோ‌ன்று பல கோண‌ங்க‌ளி‌ல் பல மேதைகளை நா‌ம் பா‌‌ர்‌த்து‌க் கொ‌ண்டிரு‌க்‌கிறோ‌ம்.

ஆ‌யி‌ல்ய‌ம் ந‌ட்ச‌த்‌திர‌ம் பெ‌ண்க‌ள் 90 ‌விழு‌க்காடு, மாமனா‌ர், மா‌மியாரை ந‌ல்ல முறை‌யி‌ல் அனுச‌ரி‌த்து‌ப் போ‌கிறவர்க‌ள் இரு‌க்‌கிறா‌ர்க‌ள். அதனா‌ல் ஆ‌யி‌ல்ய‌ம் ந‌ட்ச‌த்‌திர‌ம் இரு‌க்கு‌ம் பெ‌ண்களை ஏ‌ற்று‌க் கொ‌ள்வது ந‌ல்லது. மா‌‌மியா‌ர் ‌ஸ்தான‌ம் ந‌‌ன்றாக இரு‌க்கு‌ம் ப‌ட்ச‌த்‌தி‌ல் ஒ‌ன்று‌ம் பா‌தி‌ப்பு இ‌ரு‌க்காது.(2)கடக ராசியும் வாழ்க்கை அமைப்பும்-பதிவிட்ட பூக்கள் வலைப்பூவிற்கு நன்றி...  

கடகம் (புனர்பூசம், 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) 

கடக ராசியின் அதிபதி மாதக்கோள் என வர்ணிக்கப்படக் கூடிய சந்திர பகவானாவார். இது இரண்டாவது சர ராசியாகும். பஞ்ச பூதங்களில் நீர் தத்துவத்தை குறிக்கும் கடக ராசி ஒரு பெண் ராசியாகும். புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களை கடக ராசிகாரர்கள் என்கிறார்கள். இந்த ராசிக்கு ரிஷபம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகியவை நட்பு ராசிகளாகும்.

உடலமைப்பு,
கடக ராசிக்காரர்களுக்கு மேலோரிடத்தில் மரியாதையும், சாந்தமும், சகிப்பு தன்மையும், கடவுள் பக்தியும் அதிகம் இருக்கும். நடுத்தர உயரம் கொண்ட இவர்கள் சிறு வயதில் ஒல்லியாக இருந்தாலும் வயது ஏற ஏற உடல் பெருத்து உருண்டு திரண்ட அங்க அமைப்புகளுடன் குண்டாக காணப்படுவார்கள். இவர்களுக்கு கூர்மையான மூக்கும், உயர்ந்த நாசியும், அழகான உதடுகளும், அழகான வில் போன்ற புருவங்களும் அமைந்திருக்கும். பேச்சில் உறுதியிருந்தாலும் மெல்லிய குரலில் தான்பேசுவார்கள். பார்வையில் ஓர் அழகிருக்கும். நல்ல ஞாபக சக்தியும் அறிவாற்றலும் பெற்றிருப்பர்.
குண அமைப்பு,
கடக ராசியில் பிறந்தவர்கள் வாழ்வில் உயர்ந்த லட்சியங்களை கொண்டவர்கள். சுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டவர்கள். எல்லோரிடத்திலும் சகஜமாக பழகி எதையும் எளிதில் கிரகித்துக் கொள்வார்கள். எந்த ஒரு காரியத்திலும் தீர ஆலோசித்து செயல்படும் இவர்கள் துணிந்தபின் துயரம் இல்லை என்ற சொல்லிற்கேற்ப நண்டுபிடி போட்டு செய்து முடிப்பார்கள். இரக்க குணமும் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவராகவும் இருந்தாலும் எதையும் முன்கூட்டியே அறிந்து செயல்படுவார்கள். ஜலாராசிகள் என்பதால் கற்பனை திறன் அதிகமிருக்கும். நல்ல ஞாபக சக்தியும் உண்டு. இவர்களிடம் பழகுவது கடினம் என்றாலும் பழகியபின் பிரிய முடியாது. தன்னை நம்பியவர்களுக்கு எல்லாவித உதவியும் செய்வார்கள். இதனால் அடிக்கடி ஏமாந்து போவதும் உண்டு. பிடிவாத குணம் கொண்டவர்கள். என்னதான் தியாக மனப்பான்மை இருந்தாலும் வாக்களித்தவர்களையும் சொன்னதை செய்ய மறந்தவர்களையும் விடாமல் தங்கள் தேவையை பூர்த்தி செய்து கொள்வார்கள். கள்ளம் கபடமின்றி வெளிப்படையாக பேசும் வெகுளித்தனம் உள்ளவர்கள் என்பதால் இவர்களால் பிறருக்கு எந்தவித இடையூறும் ஏற்படாது. பிறர் விருப்பத்திற்கு மதிப்பு கொடுக்காமல் தங்களுடைய கருத்துகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருவதால் பலரின் வெறுப்பிற்கு ஆளாகி விடுவார்கள்.
மண வாழ்க்கை,
இவர்களுக்கு வாய்க்கக் கூடிய வாழ்க்கைத் துணை சலிப்பில்லாமல் உழைக்கக் கூடியவராக இருப்பார். எவ்வளவுதான் உழைத்தாலும் கடக ராசிகாரர்கள் ஏதாவது குறைகூறிக் கொண்டும், தங்களுடைய அதிகாரத்தை செலுத்திக் கொண்டும் இருப்பார்கள். சில நேரங்களில் கொஞ்சிப் பேசுகிறார்களே என நினைத்தால் அடுத்த கணமே திட்டு வாங்க வேண்டியிருக்கும். ஆரம்ப கால வாழ்க்கை வசதி குறைந்து இருந்தாலும் இல்வாழ்க்கை அமைந்தது முதல் உற்சாகத்திற்கு பஞ்சம் இருக்காது. சுகமும், துக்கமும் மாறி மாறி வந்தாலும் அதிகம் பொருட்படுத்தாமல் வாழ்வார்கள். தன் வாழ்நாளில் ஆடம்பர வசதியுடன் சுகபோக வாழ்க்கையை வாழ்வார். குடும்பத்தின் மீது அக்கறையுடன் இருப்பார்.
பொருளாதார நிலை,
கடக ராசியில் பிறந்தவர்கள் சுகவாசிகளாக வாழ்வதையே விரும்புவார்கள். எந்த விதத்திலும் பணத்தை சம்பாதிக்கக் கூடிய திறமைப் பெற்றவர்கள். கையில் பணம் இல்லாமல் இவர்களால் இருக்க முடியாது. இவர் கடனாக கொடுக்கும் பணம் எதுவும் திரும்ப வராது என்பதால் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கவனமுடன் இருப்பது நல்லது. பணத்தால் நெருங்கிப் பழகுபவர்களிடம் கூட பிரச்சினைகள் உண்டாகும். ஆடம்பர செலவிற்கேற்ப பண வரவுகள் இருந்தாலும் சேமிப்பு என்பது இருக்காது. சிறு வயதிலிருந்தே சுயமாக வீடு, மனை, வாசல், வண்டி, வாகனங்கள் யாவும் சிறப்பாக அமைந்து சுகபோக வாழ்க்கை வாழ்வார்கள். கடக ராசிகாரர்களுக்கு கடன் வாங்குவது என்பது பிடிக்காத ஓர் விஷயமாகும். பெற்றோர் ஏற்படுத்தி விட்டு சென்ற கடனாக இருந்தாலும் தன்னுடைய சொத்துக்களை விற்றாவது அனைத்தையும் தன் வாழ்நாட்களிலேயே அடைத்து விடுவார். சுபகாரியங்களுக்காக அடிக்கடி செலவு செய்வதும், பொது நல காரியங்களுக்காக செலவு செய்வதும் இவர்களுக்கு வாடிக்கையான ஒன்றாகும்.
புத்திரபாக்கியம்,
கடக ராசி பெண் குழந்தை யோகமே உண்டு. அப்படியே இருந்தாலும் பிள்ளைகளுக்கும் இவர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். ஒரு சிலர் ஆண் வாரிசுக்காக தத்தெடுத்து வளர்ப்பதும் உண்டு.

தொழில்
எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வெற்றிபெறச் கூடிய கடக ராசிக்காரர்கள் அடிக்கடி தூர தேசங்களுக்கு சென்று பொருளீட்டக்கூடிய வாய்ப்பினைப் பெறுவார்கள். கலை நடிப்பு, ஆராய்ச்சித் துறைகளிலும், உணவுப் பொருட்கள் செய்யும் சமையல் கலைகளிலும் சிறந்து விளங்குவார்கள். கலைநுட்பமும், வாக்கு சாதுர்யமும், சங்கீதமும் இவர்களிடத்தில் அதிகம் குடி கொண்டிருக்கும். ஓவியம் தீட்டுதல், போலீஸ், இராணுவம் போன்றவற்றிலும் ஒரு சிலருக்கு அரசு வழியில் உயர் பதவிகளை வகிக்கும் யோகமும் உண்டாகும். இவர்கள் லாட்டரி ரேஸ் போட்டி, பந்தயம் போன்றவற்றில் ஈடுபட்டால் வீண் விரயங்களை சந்திப்பார்கள்.
உணவு வகைகள்,
கடக ராசிகாரர்கள் தங்களை நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள பால், முட்டை, முட்டை கோஸ், கீரை வகைகள், பரங்கிக்காய், வெள்ளரிக்காய் போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அதிர்ஷ்டம் அளிப்பைத் தரும்

எண் - 1,2,3,9,10,11,12,18
நிறம் - வெள்ளை, சிவப்பு
கிழமை - திங்கள், வியாழன்
கல் - முத்து
திசை - வடகிழக்கு
தெய்வம் - வெங்கடாசலபதி
 ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனிஸ்வரர் ,திருபரங்குன்றம்

நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்றால் வாழ்வில் ஒரு முறையாவது மேற்கண்ட கோவில்கள் சென்று வந்தால் வாழ்வில் வளம் உண்டாகும்.

(3)ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்;

இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் ஒன்பதாவது இடத்தை பெறுவது ஆயில்ய  நட்சத்திரமாகும். இதன் அதிபதி புதன் பகவானாவார். இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இது உடலில் நுரையீரல், வயிறு கல்லீரல் போன்ற பாகங்களை ஆளுமை செய்கிறது. இது கடக ராசிக்குரிய நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் டி, டு, டே, டோ ஆகியவை. தொடர் எழுத்துக்கள் மெ, மை ஆகியவை யாகும்.

குண அமைப்பு;
ஆயில்ய நட்சத்திரத்தின் அதிபதி புதன் பகவான் என்பதால் நல்ல பேச்சாற்றலும் கல்வி அறிவும், சகல வித்தைகளையும் கற்றறியக்கூடிய ஆர்வமும் இருக்கும். அழகிய கண்களையும் சுருட்டை முடியையும் கொண்டவர்கள். எதிரிகளையும் நண்பர்களாக்கி கொள்வார்கள். தங்களுடை கனிவான பேச்சினால் கல்லையும் கரைய வைக்கும் சிறந்த அறிவாற்றல் கொண்டவர்கள் மன வலிமை¬யும், உடல் வலிமையும் ஒருக்கே பெற்றவர்கள். எந்த பிரச்சனையையும் எதிர் கொள்ள கூடிய திறனிருக்கும். நாளை நடப்பதை கூட முன் கூட்டியே அறிவர். மற்றவர்களின் ஆலோசனைகளை எளிதில் ஏற்க மாட்டார்கள் கண்களால் ஆயிரம் கதை பேசுவார்கள். சற்றே சஞ்சல குணமும் உண்டு. இவர்களின் வயதை தோற்றத்தை கொண்டு எடை போட முடியாது. இயற்கையை அதிகம் நேரிப்பவர்கள் பயணங்களில் அதிக ஆர்வம் உண்டு. ஒரே நேரத்தில் இரண்டு காரியங்களை சாதிக்க கூடிய ஆற்றல் கொண்டவர்கள்.
குடும்பம்;  
ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இளமையிலேயே சுக்கிர திசை வருவதால் விரைவிலேயே திருமண வாழ்க்கை அமைந்து விடும். இளமையில் வறுமை வயப்பட்டாலும் மத்திம வயதில் யோகம் உண்டாகும். மனைவி பிள்ளைகள் மீது அதிக பாசம் கொண்டவர்கள் இவர்களின் தேவைகளுக்காக அதிகம் செலவு செய்தால் பல தகிடு தத்த வேலைகளிலும் ஈடுபட்டு பணம் சம்பாதிப்பார்கள். பெற்றவர்கள் மீது அதிக பாசம் கொண்டவர்கள். ஆடம்பர வாழ்க்கையை வாழ விரும்புவதால் வண்டி வாகனம், பூமி மனை அனைத்தையும் சேர்ப்பார்கள். வாழ்க்கையையும் திட்டமிட்டு வாழ்வார்கள் நொறுக்கு தீனி விரும்பிகள் என்பதால் எப்பொழுதும் எதையாவது சாப்பிட்டு கொண்டேயிருப்பார்கள்.
தொழில்;
ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வேலை செய்யும் இடத்தில் நீதி நேர்மை தவறாமல் நாணயத்துடன் நடப்பார்கள். மனசாட்சிக்கு மீறி எந்த பணியிலும் ஈடுபடமாட்டார்கள். குறிப்பாக கெட்டவர்களுக்கு துணை போக மாட்டார்கள். அதிக மன தைரியம் கொண்டவர்கள் இவர்களில் பலர் கல்லூரிகளில் பேராசியர்களாகவும், ஆய்வு கூடத்தில் அறிவியல் அறிஞர்களாகவும், இருப்பார்கள். மற்றவர்களை போல நடித்து காட்டுவதிலும், பழமொழிகளை உதாரணமாக கொண்டு பேசுவதிலும் வல்லவர்கள். 40 முதல் 47 வயதுக்குள் சொத்துக்களை வாங்கி குவிப்பார்கள். பெயர் புகழ் அந்தஸ்து யாவும் பெருகும். அதிகாரமிக்க பதவிகளிலும் அமர்வார்கள். பலரை நிர்வாகிக்கும் ஆற்றல் ஆலோசனை கூற கூடிய வல்லமையும் உண்டாகும் மெக்கானிக்கல், பொறியியல் துறைகளிலும் வல்லவர்கள்.
நோய்கள்; 
  இவர்களுக்கு, நுரையீரல், வயிறு, உணவு குழாய் மற்றும் குடலுக்கு இடையிலுள்ள ஜவ்வு கல்லீரல், கணையம், ஈரல் போன்ற பாகங்களில் பிரச்சனைகள் உண்டாவதுடன், மூச்சு விடுவதில் சிக்கல்களும், மூட்டுகளில் வலியும், கால்களில் வீக்கமும், நரம்பு சம்மந்த பிரச்சனைகளும் உண்டாகி மருத்துவ செலவினை ஏற்படுத்தும்.
திசை பலன்கள்;
ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக புதன் திசை வரும். இதன் மொத்த வருடங்கள் 17 என்றாலும் பிறந்த நேரத்தைக் கொண்டு கணக்கிட்டு மீதமுள்ள புதன்  தசா காலங்களை அறியலாம். முதல் திசையாக வரும் புதன் திசை காலங்களில் கல்வியில் உயர்வு நல்ல அறிவாற்றல் பேச்சாற்றல் ஆகியவை உண்டாகும். புதன் பலமிழந்திருந்தால் நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் கல்வியில் மந்த நிலையை கொடுக்கும். ஆயில்ய நட்சத்திரம் மாமியாருக்கு ஆகாது என்று பண்டைய நூல்களில் எழுதியிருந்தாலும் அது உண்மையா என்ற பல கேள்விகள் இன்றும் உள்ளது.
இரண்டாவதாக வரும் கேது திசையானது மொத்தம் 7 வருடங்கள் நடைபெறும் கேது திசை காலங்களில் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள், நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள், கல்வியில் மந்த நிலை ஆகியவை உண்டாகும்.
மூன்றாவதாக வரும் சுக்கிர திசை இருபது வருடங்கள் நடைபெறும் இத்திசை காலங்களில் சுக்கிரன் பலம் பெற்று அமைந்திருந்தால் எல்லா வகையிலும் மேன்மை, செல்வம் செல்வாக்கு சேரும் வாய்ப்பு, குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்.சூரியன் 6வருடம் சந்திரன் 10 வருடம் செவ்வாய் 7 வருடம் என நடைபெறும் இத்திசை காலங்களில் கிரகங்கள் பலம் பெற்று அமைந்திருந்தால் மேன்மையான பலன்களை பெற முடியும். பலமிழந்திருந்தால் அதற்கேற்றபடி நன்மை தீமை கலந்த பலன்களை தான் பெற இயலும்.
ஆயில்ய நட்சத்திர காரங்களுக்கு ராகு திசை மாரக திசையாகும். ஆயில்ய நட்சத்திர காரர்களின் ஸ்தல விருட்சம் புன்னை மரமாகும். இம்மரத்தை வழிபாடு செய்வதால் நற்பலன்கள் உண்டாகும். இந்த நட்சத்திரத்தை பிப்ரவரி மாதத்தில் இரவு பதினோறு மணியளவில் வானத்தில் காணலாம்.
செய்ய வேண்டிய நற்காரியங்கள்
     நவ கிரக சாந்தி செய்தல், ஆயுத பயிற்சி மேற்கொள்ளுதல், கிணறு, குளம் வெட்டுதல் மந்திர பிரயோகம் செய்தல் போன்றவற்றை இந்த நட்சத்திர நாளில் செய்யலாம்.
வழி பாட்டு  ஸ்தலங்கள்
சங்கரன் கோவில்;
     திருநெல்வேலிக்கு  வடக்கே 50.கி.மீ தொலைவில் அமைந்துள்ள திருத்தலத்தில் சங்கரலிங்கத்துக்கும், கோமதி அம்மனுக்கும் இடையில் சங்கர நாராயணன் சந்தியில் வழங்கப்படும் புன்னை மரப்பட்டையில் செல்லரித்து உருவான புற்று மண் பிரசாதம் எல்லா வித நோய்களையும் தீர்க்கும்.
புள்ள பூதங்குடி;
     கும்பகோணத்து வடமேற்கில் 11.கி.மீ தொலையில் உள்ள புஜாங்க சயனராக காட்சி தரும் ஸ்ரீராமர் ஸ்தலம் இங்கும் புண்ணை மரம் உள்ளது.
திருப்புகலூர்;
     திருவாரூர் மாவட்டம் நன்னிலத்துக்கு கிழக்கே 8.கி.மீ தொலைவிலுள்ள அக்னிஸ்வரர் அருள் பாலிக்கும் ஸ்தலம்.
நாகூர்;
     நாகை மாவட்டம் நாகபட்டினத்திற்கு வடக்கே 4.கி.மீ தொலைவில் உள்ள நாகநாதர் நாகவல்லி உள்ள ஸ்தலம். தல மரம் புன்னை.
திருவாரூர்;
     அருகிலுள்ள எண்கண் என்ற ஊரில் அருள் பாலிக்கும் ஸ்ரீ சுப்ரமண்ய சுவாமிகள் ஸ்தலம். இவற்றை வழிபாடு செய்வது சிறப்பு.
கூற வேண்டிய மந்திரம்
  ஓம் ஸஹஸ்ரபனாய வித்மஹே
     சர்ப்ப ராஜாய தீமஹி
     தந்நோ அனந்த ப்ரசோதயாத்
ஆயில்ய நட்சத்திரத்திற்கு பொருந்தாத நட்சத்திரங்கள்
அஸ்வினி, ஆயில்யம், மகம், கேட்டை, மூலம், ரேவதி ஆகிய ஆண் பெண் நட்சத்திர காரர்களை திருமணம் செய்ய கூடாது.
ஜோதிடமாமணி முருகு பாலமுருகன் அவர்களுக்கு நன்றி.


        வெண்மை நிறத்துடன் ஒளி பொருந்திய உருண்டை வடிவத்தில் சிப்பிக்குள் உருவாவது முத்தாகும். சிப்பிக்குள் நுழையும் அந்நிய பொருள் சிப்பியின் உட்புறம் உறுத்துவதால் சிப்பிக்குள் சுரக்கும் திரவமே முத்தாக உருவாகிறது. கடல்நீரில் உள்ள சிப்பிகள் முத்தை உருவாக்கும் தன்மை கொண்டவை. இந்தியாவில் அதிகமாக தூத்துக்குடியில் தான் முத்து குளித்தல் நடைபெறுகிறது. சிப்பியில் உருவாகும் முத்துக்களில் உருண்டை வடிவமுள்ள முத்துக்களே சிறப்பானவை. மிகவும் உயர்ந்தவகை முத்துக்களை, ஆணிமுத்து என்று அழைக்கின்றனர். இந்த ஆணி முத்து அளவில் சற்-று பெரியதாகவும், மிகுந்த அழுத்தம் உடையதாகவும், ஒளிரும் தன்மையுடனும், பளபளப்பாகவும் காணப்படும். முத்துக்களைப் பொதுவாக மணி, துளி என்ற பெயர்களில் அவற்றின் வடிவ அமைப்பைக் கொண்டு அழைக்கிறார்கள். அரை வட்டம் உள்ள முத்தை பட்டன் முத்து என்பார்கள். ஒழுங்கான வடிவம் இல்லாத முத்தை ஙிணீக்ஷீஷீரீuமீ ஜீமீணீக்ஷீறீ என்று கூறுகிறார்கள். சில முத்துக்கள் கருமை, பால் நிறம், இளம் சிவப்பு போன்ற நிறங்களில் கிடைக்கிறது. நல்ல முத்தை மேல் நோக்கி உற்று பார்க்கும் போத வானவில்லைப் போல ஏழு நிறங்கள் தெரியும். இதற்கு ஆராய்ச்சியாளர்கள் ஷீன் என்று பெயரிட்டுள்ளனர்.

உலகிலேயே பட்டை தீட்டப்படாத பட்டை தீட்ட வேண்டிய அவசியமே இல்லாத ஒரு ரத்தினம் உண்டு என்றால் அது முத்தே ஆகும். எல்லா ரத்தினங்களும் பட்டை தீட்டப்படும் பொழுதுதான் நல்ல பொலிவினைப் பெறும். ஆனால் இயற்கையிலேயே நல்ல பொலிவுடன் கிடைப்பது முத்து ஒன்றுதான்.

இயற்கையாக முத்து கிடைக்க அதிக காலம் காத்திருப்பதைவிட செயற்கை முறையில் முத்து சிப்பியைத் துளையிட்டு அந்நிய பொருளை உட்புக வைத்து, அவற்றை முத்தாக மாற்றி செயற்கை முறையில் இயற்கை முத்தைப் பெறக்கூடிய வழியாகும். இப்படிப்பட்ட செயற்கை முத்துக்களை 1920 ம் வருடம் முதலே தயார் செய்கிறார்கள். சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் செயற்கை முத்துக்கள் அதிகமாக உற்பத்தி செய்கிறார்கள்.

இங்கு தயாரிக்கப்படும் செய்ற்கை முத்துக்களை நெடுங்காலமாகவே ஹைதராபாத்தில் பிரித்தெடுத்து விற்பனை செய்வதால், இதற்கு ஹைதராபாத் முத்துக்கள் என்றே பெயர் வந்து விட்டது. இந்த செயற்கை முத்துக்களும் இறக்கை முத்தைப்போலவே விலை உயர்ந்ததாகவும் இருக்கின்றன. சில முத்துக்கள் குறைந்த விலையிலும் கிடைக்கின்றன.

ஹைதராபாத் முத்துக்களை மோதிரமாகவும், கழுத்தில் அணியும் மாலைகளாகவும், காதில் அணியும் கம்மல்களாகவும் தங்கம் அல்லது வெள்ளியில் பதித்தும் அணியலாம். முத்தை மோதிரமாக அணிவதென்றால், மோதிரவிரல் அல்லது நடுவிரலில் அணியலாம். இவற்றின் எடை 2,4,6,9 ரட்டிஸ்களாக இருப்பது நல்லது. நவரத்தினங்களில் சந்திரனுடைய ஆதிக்கத்திற்குரிய ரத்தினம் முத்தாகும்.

முத்தின் நன்மைகள்


முத்தை அணியும்போது சந்திரனுடைய ஒளிக்கதிர்கள் திருப்பி விடப்பட்டு உடல் நலமானது சிறப்பாக இருக்கும். மனக்குழப்பங்கள் மறையும். பெண்களுக்கு கர்ப்பை பிரச்சினைகள் இருந்தால் அதிலிருக்கும் குறைகள் விலகி குழந்தைப் பேறும் உண்டாகும்.

முத்து உடலுக்குக் குளிர்ச்சியையும் உள்ளத்திற்கு அமைதியையும் முகத்திற்கு வசீகரத்தையும் உடலழகையும் கொடுக்கிறது.


யாரெல்லாம் முத்து அணியலாம்?

முத்துக்களை சந்திரனுடைய வீடான கடக ராசியில் பிறந்தவர்களும், சந்திரனுடைய திசை நடப்பில் உள்ளவர்களும், சந்திரனால் பாதிக்கப்பட்டவர்களும் அணிவது மிகவும் நல்லது. அதுபோல எண்கணிதப்படி 2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் அணிய வேண்டிய ரத்தினம் முத்தே ஆகும்.

முத்துக்கள் சீக்கிரத்தில் நிறம் மங்குவதில்லை. நூறு ஆண்டுகளுக்குப் பிறகு தான் அதன் நிறம் மங்கும் எடை குறையும். முத்தை பயன் படுத்தாத போது ஒரு பஞ்சிலோ, துணியிலோ சுற்றி வைத்தால் இயற்கை தன்மை மாறாமல் அப்படியே இருக்கும். சோப்பு நீரோ ஏனைய கெமிக்கல் பொருட்களோ முத்தை பாதிக்கும் தன்மை கொண்டவையாகும்.

முத்திற்கு பதிலாக சந்திரகாந்த கல்லையும் பயன்படுத்தலாம். ஆங்கிலத்தில் மூன்ஸ்டோன் என அழைக்கப்படும் இக்கல் நிறத்தில் சற்று மங்கலாக இருந்தாலும் சந்திரன் போன்றே அழகுடையதாக இருக்கிறது.

3 comments:

  1. சிறப்பான பதிவு. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. சிறப்பு மிகச்சிறப்பு

    ReplyDelete