Tuesday, December 27, 2011

சாலைப் பாதுகாப்பு கோஷங்கள்-2012 / 02

                          '' ROAD SAFETY SLOGANS - 02
           சாலை பாதுகாப்பு கோஷங்கள்''-02

அன்பு நண்பர்களே,
            வணக்கம்.PARAMESDRIVER . BLOGSPOT.COM வலைப்பதிவிற்கு தங்களை வருக,வருக, என வரவேற்கிறேன்.அடிக்கடி மின்தடை............ காரணமாக பதிவிடுதலில் தடங்கல் ஏற்படுகிறது,மன்னிக்கவும்!.
                             சாலை பாதுகாப்பு கோஷங்கள்-2012-ன் ,சென்ற பதிவின் தொடர்ச்சி...........
 (1)சாலைப்பாதுகாப்பு, உயிர்ப்பாதுகாப்பு,
 (2) சாலைப்பாதுகாப்பு,நமது பாதுகாப்பு,
 (3) சாலைப்பாதுகாப்பு,சமூகப்பாதுகாப்பு,
 (4)சாலைப்பாதுகாப்பு,நாட்டின் பாதுகாப்பு,
 (5) சாலைப்பாதுகாப்பு,அனைவரின் பாதுகாப்பு,
(6)தலைக்கவசம்,உயிர்க்கவசம்,
 (7) பாதுகாப்பே நமது குறிக்கோள்,
  (8) பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வோம்,
  (9) சாலை சந்திப்புகளில் கவனம் தேவை,
 (10) சாலை விதிகளை மதிப்போம்,விபத்தினைத் தவிர்ப்போம்,
  (11) சாலையைக்கடக்கும்போது கவனம் தேவை,
 (12) சாலையை ஆக்கிரமிப்பு செய்யாதீர்,
 (13) சாலையின் குறுக்கே திடீரெனத் திரும்பாதீர்,
 (14) சாலையின் குறுக்கே சைகை கொடுக்காமல் நுழையாதீர்,
 (15) சாலையின் குறுக்கே வாகனங்களை நிறுத்தாதீர்,
 (16) சாலையில் கால்நடைகளை உலவ விடாதீர்,
 (17) சாலைப் பயணம் அனைவருக்கும் பொதுவானது,
 (18) அவசர ஊர்திகளுக்கு வழி கொடுப்போம்,
 (19) அனுசரித்து வாகனம் ஓட்டுவீர்,
 (20) அமைதிகாக்கும் இடங்களில் ஆரன் அடிக்காதீர்,
 (21) அனைத்து வளைவுகளிலும் ஆரன் அடியுங்கள்,
 (22) ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு வழி கொடுப்போம்,
 (23) ஆத்திரப்படாதீர் - அவதிப்படாதீர்,
(24) இன்றைய பாதுகாப்பே நாளைய சேமிப்பு,
 (25) இன்றைய குறிக்கோள் சாலைப்பாதுகாப்பு,
 (26) உங்கள் கவனம் ரோட்டின் மேலே,
 (27) உங்களை நம்பி உங்கள் குடும்பம்,
   (28)    உத்தரவுச்சின்னங்களை மதியுங்கள்,
  (29) இடது புறமாகச்செல்வீர்,
 (30)இடதுபுறமாக முந்தாதீர்,
 (31) இனிய பயணத்தை உறுதி செய்வோம்,
 (32) ஏட்டிக்குப்போட்டி நமக்கு எதற்கு,
  (33) ஒருவழிப்பாதையின் எதிரே ஓட்டாதீர்,
 (34) ஓடும் பேருந்தில் ஏறாதீர்,
 (35) ஓடும் பேருந்தில் இறங்காதீர்,
 (36) கவனச்சிதறல் கண்டிப்பாக விபத்து,
 (37) கவனக்குறைவு கண்டிப்பாக விபத்து,
 (38) அரைநாழிகை கவனக்குறைவு-ஆயுள் முழுவதும் அங்கக்குறைவு,
 (39) கூட்ட நெரிசலில் பொறுமையைக்கடைப்பிடியுங்கள்,
 (40) குடிபோதையில் வாகனம் ஓட்டாதீர்,
 (41) குறுகிய சாலைகளில் முந்தாதீர்,
 (42)குறுகிய பாலங்களில் முந்தாதீர்,
 (43) எல்லைக்கோட்டைத்தாண்டாதீர்,
 (44) நகர எல்லைக்குள் ஆரன் அடிக்காதீர்,
 (45) நடு ரோட்டில் செல்லாதீர்,
 (46) நமக்கு நாமே பாதுகாப்பு,
 (47) நமது குடும்பம் நம்மை நம்பி,
 (48) செல்பேச்சு,உயிர் போச்சு,
 (49) செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டாதீர்,
 (50) சர்க்கஸ் சாகசம் சாலையில் வேண்டாம்,
 (51) விபத்துக்குக் காரணம் தவறுகளே,
 (52) வேக வரம்பை மீறாதீர்,
 (53) வேகமா? விவேகமா?
 (54) வீரமா?விவேகமா?
 (55) படியில்பயணம் நொடியில் மரணம்,
 (56) பள்ளிக்குழந்தைகள் பாதையிலே - பார்த்துச்செல்லுங்கள் சாலையிலே,
 (57) பள்ளிக்கு அருகில் ஆரன் அடிக்காதீர்,
 (58) பொறுமை கடலினும் பெரிது,மனித உயிர் அதனினும் பெரிது,
  (59) போக்குவரத்துச்சின்னங்களை மதிப்போம்,
  (60) போக்குவரத்து விதிகளை மதிப்போம்,
  (61) போக்குவரத்துச்சட்டங்களை மதிப்போம்,
  (62) போனால் வராது உயிர்,பொறுமையாகச்செல்வீர் சாலையில்,
  (63) கைசைகை சாலையின் மொழியாகும்,
 (64) போக்குவரத்துச்சின்னங்கள் சாலையின் குரலாகும்,
 (65) பாதசாரிகளுக்கு வழிகொடுங்கள்,
 (66) சந்தேகத்தோடு முந்தாதீர்,
 (67)பாதுகாப்பே நமது குறிக்கோள்,
 (68) அதிவேகம் ஆபத்தில் முடியும்,
 (69) ஆபத்தின்றி பயணிப்பது அருங்கலை,
 (70)பாதுகாப்பான வேகமே,பத்திரமான பயணம்,
 (71)திரும்பம் முன் சிக்னல் செய்யவும்,
 (72) சிக்னல் பெற்றே முந்திச்செல்லவும்,
 (73) வேகம் விவேகமல்ல,
(74) வாகனம் ஓட்டும்போது பேசாதீர்,
 (75) பிற வாகனத்தை நெருங்கிச்செல்லாதீர்,
 (76) வளைவுகளில் வேகத்தைக்குறைப்பீர்,
 (77) போட்டிமனபான்மை வேண்டாம்,
 (78) கவனம் சிதறாமல் வாகனம் ஓட்டுங்கள்,
 (79) உங்கள் வாழ்க்கை உங்கள கையில்,
 (80) உங்கள் குடும்பம் உங்களை நம்பி,
 (81) சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றாதீர்,
 (82) சரக்கு வாகனங்களில் பயணம் செய்யாதீர்,
 (83) மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர்,
 (84) மருந்துண்ட மயக்கத்தில் வாகனம் ஓட்டாதீர்,
 (85) போதைப்பொருள் உட்கொண்டு வாகனம் ஓட்டாதிர்,
 (86) புகை நமக்குப் பகை,
 (87) சீரான வேகமே சிறப்பானது,
(88) வாழ்க்கையில் முந்துங்கள்,வாகனத்தில் அல்ல,
 (89) சாலையில் குறுக்கீடு வேண்டாம்,குறிக்கோள் வேண்டும்,
 (90) ஓய்வின்றி தொடர்ந்து ஓட்டாதீர்,
 (91) தூக்கக்கலக்கத்தில் வாகனம் ஓட்டாதீர்,
 (92) மனக்கலக்கத்தில் வாகனம் ஓட்டாதீர்,
 (93) மனதை அலைபாய விடாதீர்,
 (94) இனக்கவர்ச்சியில் வாகனம் ஓட்டாதீர்,
(95) விளக்கு சிக்னல் விளையாட்டல்ல,
 (96) எச்சரிக்கைச்சின்னங்களைத் தெரிந்து கொள்வோம்,
 (97)உத்தரவுச்சின்னங்களைத் தெரிந்து கொள்வோம்,
 (98) தகவல் சின்னங்களைத் தெரிந்து கொள்வோம்,
 (99)விளக்குச் சிக்னல்களைத் தெரிந்து கொள்வோம்,

 (100) 100-ல் செல்லாதீர்,108-ல் போகாதீர்,
 (101) முதல் உதவி தெரிந்து கொள்வோம்,
 (102)அவசர உதவிக்கான தொலைபேசி எண்களை தன்வசம் வைத்திருப்போம்,
 (103) சாலையின் தன்மைகளை அறிந்து கொள்வோம்,
 (104) சாலையின் வகைகளை அறிந்துகொள்வோம்,
 (105) வாகனப்புலமை பெற்றிடுவோம்,
 (106) கை சைகைகளைத் தெரிந்து கொள்வோம்,
 (107) பாதுகாப்பாக வாகனத்தை ஓட்டுவோம்,
 (108) பிறரை மதித்து வாகனம் ஓட்டுவோம்,
 (109) எண்பதுகளில் சென்று அப்பளமாக நொறுங்குவதை விட 
              ஐம்பதுகளில் பாதுகாப்பாகச் செல்வதே மேல்,
             
                                                                                                         தொடர்ச்சி................            அடுத்த பதிவில்.
          PARAMESDRIVER / THALAVADY.
 

  

1 comment: