Sunday, August 28, 2016

வாட்ஸ் அப் பயன்படுத்துபவர்களுக்கு ...

#வாட்ஸ்அப்_பயன்படுத்தும்_நண்பர்களின்_கவனத்திற்கும் !
வாட்ஸ்அப் நாம் install செய்யும் போது Agree terms and conditions என்பதை கிளிக் செய்தால் தான் நாம் மேலும் தொடர முடியும். அன்மையில் புதிய வாட்ஸ்அப் டவுன்லோடு செய்து அதன் TERM AND CONDITIONS ஒப்புக்கொண்டிருந்தால், அது தானாகவே Facebook உடன் இனைக்கப்படுகிறது. நமது தகவல்களும் கடத்தப்பட வாய்ப்புள்ளது. எனவே இதனை தடுக்க......
வாட்ஸ்அப் settings போய் accountsல் share my info என்பதற்கு அருகில் இருக்கும் டிக் uncheck செய்யவும்.
இது நம் தனிநபர் தகவல்கள் களவு போகாமல் காக்கும்.
#நன்றி

Saturday, August 6, 2016

ஓட்டுநரின் நிலை

எங்க பொளப்பு இப்படி தாங்க
போகுது...
ஓட்டுனர்(டிரைவர்)
நெத்தியில பொட்டு,
கழுத்துல நீளமான துண்டு,
அனைவரையும் கவர
கோல்டுல செயினு,
தப்பு னு தெரிஞ்சும் காக்கிசட்டை
போடாமல் வண்டியை ஓட்டுவது,
காக்கிசட்டை போட்டுருந்தாலும்
எங்க மீது பொய் வழக்கு போடும்
போஸீஸ்,
எங்க உயிரை பெரிதும் மதிக்காமல்
எங்களை நம்பி வந்தவர்களை
பாதுகாப்பாக இறக்குவது,
வழியில் எத்தனை விபத்துகளை
பார்த்தாலும்,
நாம் இந்த தொழிலை விட்டு போக கூடாது ன்னு என்னுவது,
பயணத்தில் தூக்கம் வராமல்
இருக்க,
தவறு என்று தெரிந்தும் போதை பொருள் பயன் படுத்துவது,
மணிக்கு ஒரு முறை இரவில்
டீ குடிப்பது,
வெளியில் எப்படி இருந்தாலும்
ஓட்டுனர் சீட்டில் உக்கந்த உடன்
தனக்கென ஒரு பாணியை வகுத்து கொள்வது (கெத்து)..
யாதர்த்தமான பார்வையில்
அனைவரையும் கவருவது,
வழியில் எந்த ஒரு பிரச்சனை
என்றாலும் தானாக தீர்த்துக்கொள்வது..
ஆயிரம் வழக்குகள் எங்க மீது
இருந்தாலும் அசால்ட்டாக
இருப்பது,
ஒரு பொருளை எங்களை நம்பி
ஏத்தி விட்டால் தான் பொருள் போல் மதித்து பாதுகாப்பாக
கொண்டு சேர்ப்பது,
சம்பளம் கட்டுதோ இல்லையோ
இந்த தொழிலை விட கூடாது
என்று நினைப்பது,
நாங்கள் வீட்டை விட்டு சென்றால் வீட்டுக்கு வந்தால் தான்
நாம் என இருந்தாலும்,
இதை ஏற்று நம்மளை
இத்தொழிலுக்கு அனுப்புவது
தாய் தந்தையின் ‪#‎நம்பிக்கையே‬...

Monday, August 1, 2016

பசி இருந்தால் புசிக்கலாம்.

ஒரு நாட்டில் ஒரு இளவரசன் இருந்தான். அவன் சிறந்த போர் வீரன். அவனுடைய வாள் வீச்சிற்கு அந்த நாடே ஈடு கொடுக்க முடியாது. அந்த அளவிற்குச் சிறந்த வீரன்.
அவன் ஒருமுறை அரண்மனையில் வாள் வீசி பயிற்சி செய்துக் கொண்டிருக்கையில், ஒரு எலி குறுக்கே ஓடியது. உடனே அதன் மீது வாளை வீசினான். அந்த எலி லாவகமாக தப்பித்துச் சென்றது. பிறகு மீண்டும் அதனைத் துரத்தி வாளை வீசினான், மீண்டும் தப்பித்து வளைக்குள் புகுந்துகொண்டது. உடனே மனம் உடைந்து போனான்.
அப்போது வந்த அரசர் "ஏன் சோகமாக இருக்கிறாய்?" என கேட்க "இந்த நாடே எனது வாள் வீசும் திறமைக்கு ஈடு கொடுக்க முடியாது போது, இந்த சாதாரண எலியை என்னால் கொல்ல முடியவில்லையே!" என விவரித்தான் இளவரசன்.
மன்னர் சிரித்துவிட்டு "எலியைக் கொள்ள வாள் பயிற்சி எதற்கு? அரண்மனைப் பூனையைக் கொண்டு வந்தாலே போதுமே!" என்றார்.உடனே அரண்மனை பூனை வரவழைக்கப்பட்டது.
அந்தப் பூனையும் எலியை வேட்டையாட முயன்றது. ஆனாலும் அந்த எலி எளிதாக அதனிடம் இருந்து தப்பித்து, தப்பித்துச் சென்றது. மீண்டும் இளவரசருடன் அரசரும் சோகமானார். அப்போது மந்திரி வந்தார். "என்ன அரசே..நீங்களும் இளவரசரும் சோகமாக இருக்கிறீர்கள்?" என்றார்.
அதற்கு அரசர் நடந்ததை கூறினார். "நம் நாட்டு பூனைகள் எதற்கு லாயக்கு...? ஜப்பான், பாரசீகம் போன்ற நாடுகளில் உள்ள பூனைகள் புலி உயரம் உள்ளன. எனவே அங்கிருந்து வரவழைப்போம்" என்றார் மந்திரி. அதேபோல் அவ் நாடுகளில் இருந்து பூனைகள் வரவழைக்கப்பட்டன.
ஆனால் அவற்றிடமிருந்தும் அந்த எலி சாமர்த்தியமாகத் தப்பித்துச் சென்று வளைக்குள் புகுந்தது. எலிக்கு இவ்வளவு திறமையா! என அனைவரும் வியந்து கொண்டிருக்கையில், அங்கே இருந்த அரண்மனைக் காவலன் "இளவரசே! இந்த எலிக்குப் போய் ஜப்பான், பாரசீகப் பூனையெல்லாம் எதுக்கு? எங்க வீட்டுப் பூனையே போதும்" என்றான். மன்னருக்கு நப்பிக்கை ஏற்படவில்லை. "என்ன.. அரண்மனையில் வளர்ந்து வரும் பூனையால் முடியாதது சாதாரண பூனையால் முடியுமா?" என்றார்.
உடனே இளவரசர் மறித்து "சரி...எடுத்து வா உனது பூனையை" என்றார். வீட்டிற்குச் சென்று தனது பூனையைக் கொண்டு வந்தான் காவலன். அந்தப் பூனை அந்த எலியை ஒரே தாவலில் "லபக்" என்று கவ்விச்சென்றது. இதனைப் பார்த்த இளவரசருக்குப் பெருத்த ஆச்சரியம். "என்ன இது அதியசம்!
ஜப்பான்,பாரசீக, அரண்மனையில் வளர்ந்த பூனைகளிடம் இல்லாத திறமை எப்படி இந்தச் சாதாரண பூனைக்கு ஏற்பட்டது? எப்படி சாத்தியம்? என்ன பயிற்சி கொடுத்துப் பூனையை வளர்க்கிறீர்கள்?" என்று வியந்தவாறே கேள்விகளை கேட்க தொடங்கினார்.
அதற்குக் காவலாளி *"பெரிதாக என் பூனைக்குத் திறமையோ, பயிற்சிகளோ எதுவும் இல்லை இளவரசே... என் பூனைக்கு ரொம்பப் பசி அவ்வளவுதான்" என்றான்.*
உடனே இளவரசருக்கு "சுரீர்" என்றது. அரண்மனைக்குள் பூனைகள் நன்கு தின்று கொழுத்திருப்பதால் அவற்றுக்கு பசி என்பதே என்னவெற்று தெரிய வாய்பில்லை, எனவே அவற்றால் எலியை எப்படி பிடிக்கமுடியும்?.
ஆக எந்த ஒரு வேலையையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்க வேண்டுமென்றாள், முதலில் அதனைப் பற்றிய பசி அல்லது தேவை இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தக் காரியத்தை கச்சிதமாக செய்து முடிக்க முடியும்.