Friday, May 22, 2015

கனரக சரக்கு வாகன பெண் ஓட்டுநர்-2015


மரியாதைக்குரியவர்களே,
        வணக்கம். கனரக வாகன பெண் ஓட்டுநரை வாழ்த்துவோம் வாங்க..
(தி இந்து மற்றும் மாலை மலர் நாளிதழ்களில் வெளியான செய்திகள்)

30 வயதினிலே... வல்லமை மிகு லாரி ஓட்டுநர் ஜோதிமணி


பெட்லீ பீட்டர்
ஜோதிமணி | படம்: எம்.கோவர்த்தன்
ஜோதிமணி | படம்: எம்.கோவர்த்தன்

நீங்கள் பெண்கள் சுயமுன்னேற்றத்தைப் பறை சாற்றும் ஜோதிகாவின் '36 வயதினிலே' திரைப்படத்தை பார்த்துவிட்டு புத்துணர்ச்சியுடன் இருக்கிறீர்களா? அதே புத்துணர்ச்சியுடன் ஜோதிமணியின் வெற்றியையும் கொண்டாடுங்கள்.
ஆணுக்குப் பெண் சரிசமமாக வேலை செய்தாலும் அவர்களுக்கு சவால்கள் நிறைய இருக்கின்றன. அதுவும் லாரி ஓட்டுநர் என்றால் அவர் சந்திக்கும் சவால்கள் குறித்து சொல்லவே வேண்டாம்.
ஜோதிமணி கவுதமன் (30) தமிழகத்தின் ஒரே பெண் லாரி டிரைவர் என்று சொல்லலாம். கனரக வாகனமான லாரியை ஓட்டுவதில் அவர் அனுபவிக்கும் மகிழ்ச்சியும், அவர் சந்திக்கும் சவால்களும் என்ன?
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் இருக்கிறது கள்ளிப்பட்டி கிராமம். இதுவே, ஜோதிமணியின் சொந்த கிராமம். இரண்டு குழந்தைகளுக்கு அம்மா.
16 டன் எடை கொண்ட கனரக வாகனமான லாரியை ஓட்ட எப்படிக் கற்றுக் கொண்டார் ஜோதிமணி.
அவரே சொல்கிறார், "என் கணவர் லாரி ஓட்டுநர். அவருக்கு சொந்தமாக ஒரு லாரி இருந்தது. அவர் பணி முடிந்து வந்த லாரியை வீட்டில் நிறுத்தும் போதெல்லாம். அதை ஓட்ட வேண்டும் என்ற ஆசை ஏற்படும். அதை என் கணவரிடம் சொன்னேன். அவரும் எனக்கு லாரி ஓட்டக் கத்துக் கொடுத்தார். ஆனால், அவர் மிகப் பெரிய பொறுமைசாலி. நான் லாரி ஓட்ட கற்றுக் கொள்கிறேன் என்ற பெயரில் அங்கும், இங்கும் லாரியை மோத விட்டுக் கொண்டிருந்தேன். ஆனால், எனக்கு மிக நிதானமாக பொறுமையுடன் சொல்லிக் கொடுத்தார்.
இப்படி விளையாட்டாக நான் கற்றுக் கொண்டதே என் தொழிலாக மாறிவிட்டது. நாங்கள் இரண்டாவதாக ஒரு லாரி வாங்கினோம். அதற்கு ஒரு ஓட்டுநரை பணியமர்த்தினோம். ஆனால், வேலைக்கு குறித்த நேரத்தில் வராமல் பொறுப்பில்லாமல் இருந்தார். இதனால் எங்களுக்கு பெரிய அளவில் நட்டம் ஏற்பட்டது.
எனவே, நானே அந்த லாரியை ஓட்டுவது என்று முடிவு செய்தேன்" என்றார். அப்படித்தான் என் பயணம் தொடங்கியது. (இதை நம்மிடம் சொல்லும்போது அவர் அப்போதுதான் சூரத் பயணத்தை முடித்து திரும்பியிருந்தார்)
2009-ல் தான் முதன்முதலில் தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு லாரி பயணத்தை துவக்கி இருக்கிறார் ஜோதிமணி. அப்போது அவரது கணவர் கவுதமனும் அவருடன் சென்றார். ஆனால், இப்போது அவருக்கு துணைக்கு யாரும் தேவையில்லை. அவரே தனியாக செல்கிறார். குஜராத் வரை செல்கிறார். சில முறை ஒரு வார கால பயணம், சில தருணங்களில் ஒரு மாத காலம் கூட பயணம் நீடிக்கிறது. அப்போதெல்லாம் அவரது பிள்ளைகள் மோனிக் சுபாஷ் (9), விஜயபானு (7) ஆகியோரை அவர்களது பாட்டியே கவனித்துக் கொள்கிறார்.
அவர் விளையாட்டாக ஆரம்பித்த விஷயம் முழு நேர தொழிலாக உருவெடுத்து 5 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. லாரி சக்கரத்தைப் போல் காலச் சக்கரமும் வேகமாக சுழன்று கொண்டிருக்கிறது. ஆனால், ஜோதிமணிக்கு ஒரே ஒரு வருத்தம் மட்டும் இருக்கிறது. அது அசோக் லேலாண்ட் தயாரிப்பு லாரியை ஓட்டுவதில் மட்டும் தன்னால் திறம்பட செயல்பட முடியவில்லை என்பதே அது.
ஒரே ஒரு முறை விபத்தை சந்தித்த அவர் உயிர் பிழைத்த நேரத்தை பயத்துடன் நினைவு கூர்ந்தார். ஆனால், விபத்து அவரை அச்சுறுத்தி முடக்கிவிடவில்லை. இப்போது இன்னமும் திறமையுடன் லாரியை ஓட்டுகிறார்.
அவரது கனவு, சொந்தமாக ஒரு கனரக வாகன போக்குவரத்து ஏஜென்சியை உருவாக்க வேண்டும் என்பதே.
மனைவி, அம்மா, மருமகள், அலுவலக வேலை என பெண்களின் அவதாரங்கள் பற்பல. இதில் பொறுமை, நிதானம், கவனம், விட்டுக்கொடுத்தல், வேதனை, துயரம், அவமானம் என அவள் சந்திக்கும் உணர்வுகள் எண்ணில் அடங்காதவை.
இவற்றுக்கு மத்தியில், அவள் கனவுகள் காணாமல் போகலாம். சுய முன்னேற்றச் சிந்தனைகள் சுவடுகள் தெரியாமல் மாறலாம். ஆனால் அப்படி எல்லாம் நடப்பது இயல்பானது என்பதுபோல் அதற்கு 'தியாகம்' என்று பெயர் வைத்து முத்திரை பதித்துவிடுகிறது சமூகம்.
அத்தகைய சமூகத்தில் ஜோதிமணி 30 வயதினில் அடைந்திருக்கும் இலக்கு பாராட்டுக்குரியதே. அவரது அடுத்த இலக்கு நோக்கி நகரட்டும் லாரியின் சக்கரம்.
© தி இந்து (ஆங்கிலம்) - | தமிழில் சுருக்கமாக பாரதி ஆனந்த்
தன்னம்பிக்கையின் மறுபெயர் ஜோதிமணி: தமிழகத்தின் ஒரே பெண் லாரி டிரைவரின் வாழ்க்கை பயணம்...


கோவை, மே 19-

தமிழகத்தின் ஒரே பெண் லாரி டிரைவர் என்ற பெருமையுடன் தன்னம்பிக்கையின் மறுபெயராக விளங்குகிறார் ஈரோடு மாவட்டம், கள்ளிப்பட்டியை சேர்ந்த 30 வயது ஜோதிமணி.

இரு குழந்தைகளுக்கு தாயான ஜோதிமணி தனது குடும்பத்துக்கு சொந்தமான லாரியில் இன்று நாட்டின் பல பகுதிகளுக்கும் பாரம் ஏற்றிசெல்கிறார். 2009 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டன்று தனது கணவருக்கு சொந்தமான லாரியை முதன் முதலில் ஓட்ட பயிற்சி எடுத்ததாக கூறிய ஜோதிமணி, தனது ஆர்வத்தை கண்ட கணவரும் அவ்வப்போது லாரியை ஓட்டக்கற்றுக்கொடுத்து வந்தார் என்று மெலிதான சிரிப்புடன் கூறினார்.

தனது சுவையான, சுமையான பயணம் குறித்த அனுபவங்கள் பற்றி ஜோதிமணி மேலும் கூறுகையில்;

இப்படி நாட்கள் கடந்து கொண்டிருந்த போது, எங்கள் லாரியில் டிரைவராக வேலை செய்து கொண்டிருந்த நபர் சில நாட்கள் வேலைக்கு வராமல் இருந்தார். இதனால் நாங்கள் பெருத்த நஷ்டத்துக்கு உள்ளானோம். இதையடுத்து எனது கணவருடன் சேர்ந்து நானும் லாரி ஓட்டத்தயாரானேன். முதன் முதலில் கடந்த 2009 ஆம் ஆண்டு மத்தியில் எனது கணவருடன் சேர்ந்து ஐதராபாத்துக்கு லாரி ஓட்டிச்சென்றேன்.

தற்போது குஜராத் மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் ஆயத்த ஆடைகளை தனியாகவே ஏற்றிச்செல்கிறேன். அவ்வாறு சென்றுவிட்டு திரும்பும்போது பருத்தி, மரம் மற்றும் இயந்திர பாகங்களை தமிழகத்திற்கு பாரம் ஏற்றிவருவேன். ஒரு சில நேரங்களில் இரண்டு வாரங்கள் முதல் ஒரு மாதம் வரை கூட தொடர்ந்து லாரியை இயக்கியுள்ளேன். ஏறத்தாழ ஐந்து வருட கால பயண அனுபவங்களில் நான் ஒரே ஒரு முறை மட்டும் விபத்தை சந்தித்துள்ளேன். கடந்த 2012 ஆம் ஆண்டு லாரியின் பிரேக் செயலிழந்ததால், மற்றொரு லாரியுடன் எனது லாரி மோதியது. இதில் அதிஷ்டவசமாக நான் உயிர் தப்பினேன் என்று தனது பயணத்தை விவரித்த ஜோதிமணி சில தினங்களுக்கு முன் தான் சூரத்திற்கு சென்றுவிட்டு திரும்பியுள்ளார்.

ஜோதிமணியின் கணவர் கவுதமன் கூறுகையில், ‘‘லாரி டிரைவரான என்னால் தொடர்ந்து இந்த பணியை செய்ய முடியுமோ... என்ற நிலையை மாற்றி எனக்கு தைரிய மூட்டியவர் என் மனைவி ஜோதிமணி. அவரது மன தைரியத்தால் மற்றொரு லாரியை வாங்கினேன் என்னுடன் கிளீனர் வேலைக்கு வந்து எனக்கு ஒத்தாசையாக இருந்த அவர் பிறகு தனியாகவே ஒரு லாரியை ஓட்டி செல்லும் அளவுக்கு துணிச்சலான பெண்ணாக மாறி விட்டார். கணவன் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். ஆனால்  ஜோதிமணி மனைவியாக கிடைத்தது கடவுள் எனக்கு கொடுத்த வரம் என்று கூறினார்.

ஜோதிமணியும் அவரது கணவரும் இவ்வாறு வெளியூர்களுக்கு செல்லும்போது, அவர்களின் குழந்தைகளான 9 வயது மோனிக் சுபாஷ் மற்றும் 7 வயது விஜயபானு ஆகியோரை 78 வயதான பாட்டி சரஸ்வதி கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொள்கிறார்.

போதுமான வருமானத்தை சம்பாதித்து, சுயமாக ஒரு போக்குவரத்து நிறுவனம் தொடங்கும் வரை எனது இந்த பயணம் தொடரும் என்றும் ஜோதிமணி உறுதிபடுத்தியுள்ளார். அவரது வெற்றிப்பயணம் தொடர நாமும் வாழ்த்துவோமா...

Tuesday, May 19, 2015

தமிழ்நாடு சட்ட ஆராய்ச்சியாளர்கள் கூட்டம்-2015


 மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.தமிழ்நாடு  சட்ட ஆராய்ச்சியாளர்கள் கூட்டமைப்பு - நடத்திய கரூர் கூட்டம் பற்றி தங்களது கவனத்திற்காக.....


 16.05.2015 அன்று கருர் கூட்டத்திற்கு வருகை தந்த அனைத்து அமைப்புகளுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கருர் கூட்டத்திற்கு வருகை தந்தவர்களில் சிலர் தமிழ்நாடு சட்ட ஆராய்ச்சியாளர்கள் கூட்டமைப்புக்கு இயக்குனராக செயல்பட இசைந்து உள்ளார்கள். அவர்களது பெயர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
.
1. திரு. சரவண அர்விந்த் ...... லா பவுண்டேஷன் law foundation, சென்னை.
2. திரு. சிவபாரதி ....................... சட்ட விழிப்புணர்வு இயக்கம், கரூர்
3. திரு அ.கோவிந்தராஜன்....... பாதிக்கப்பட்டோர் கழகம், திருப்பூர்
4. திரு. பொ.செல்லப்பன் .......... .இந்திய ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பு, நாமக்கல்.
5. திரு வாசுதேவன் .............. சட்ட விழிப்புணர்வு இயக்கம், கரூர்.
6. திரு. பெ. சுப்ரமணியன் ....... பாதிக்கப்பட்டோர் கழகம், ஈரோடு.
7. திரு. ராஜசேகர் ........................ போடி


சொல்லுவது எல்லோருக்கும் எளிது செய்வது அரிது..... செயற்கரிய செய்வர் பெரியர்.... . அந்த வகையில், செயற்கரிய செயலை செய்து காண்பித்துக் கொண்டு இருப்பவர் நண்பர் கரூர் law சிவபாரதி அவர்கள். எண்ணம் இருந்தால் மட்டும் போதாது அதனைச் செயல்படுத்தவும் வேண்டும். விடா முயற்சியே வெற்றியைத் தரும். விடாமுயற்சியால் வெற்றி பெற்றவர் கரூர் law சிவபாரதி அவர்கள். தமிழ்நாடு சட்ட ஆராய்ச்சியாளர்கள் கூட்டமைப்பில் அவரும் ஒரு இயக்குனராக இருப்பதில் பெருமை கொள்கிறோம்.
.
திரு. செல்லப்பன் நாமக்கல் அவர்கள் செயல் வீரர். அவரைப் போன்ற நல்ல எண்ணமும், துணிவும் தைரியமும் தளராத விடா முயற்சியும் நம் அனைவருக்கும் வர வேண்டும். தமிழ்நாடு சட்ட ஆராய்ச்சியாளர்கள் கூட்டமைப்பில் அவரும் ஒரு இயக்குனராக இருப்பது அமைப்பு பெற்ற பாக்கியம்.ஆகும்.
.
திரு. திரு. சரவண அர்விந்த் அவர்கள் law foundation நிறுவனர் ஆவர். அவரது எண்ணமும் செயலும் விடாமுயற்சியும் சுறுசுறுப்பும் தைரியமும், நம்மை வியக்க வைக்கிறது. துணிந்து பல சாதனைகளைச் செய்துவருகிறார். பழகுவதற்கு இனியவர். தமிழ்நாடு சட்ட ஆராய்ச்சியாளர்கள் கூட்டமைப்பில் அவரும் ஒரு இயக்குனராக இருப்பதில் பெருமை கொள்கிறோம்.
.
திரு.போடி. ராஜசேகரன் அவர்கள் சட்டத்தைப் பயன்படுத்தி பல சாதனைகள் செய்து உள்ளார். துணிச்சலை அள்ளித் தருபவர். பிறருக்கு உதவும் நல்ல எண்ணம் கொண்டவர். தமிழ்நாடு சட்ட ஆராய்ச்சியாளர்கள் கூட்டமைப்பில் அவரும் ஒரு இயக்குனராக இருப்பதால் அமைப்பு பலம் பெறுகிறது.
.
திரு. கோவிந்தராஜ் R.T.I. அவர்கள் பிறருக்கு உதவி செய்வதில் ஆர்வமுள்ளவர். ஆவணங்களை சேகரித்து உங்கள் நன்மைக்காக அளித்து வருகிறார். சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் ஆர்வம் உள்ளவர். அவரும் ஒரு இயக்குனராக இருப்பதால் அமைப்பு பலம் பெறுகிறது. நீதிமன்றத்தில் பல வழக்குகளை சந்தித்து வருகிறார். அவரும் ஒரு இயக்குனராக இருப்பதால் அமைப்பு சிறப்படைகிறது.
.
திரு. வாசுதேவன் சட்ட விழிப்புணர்வு இயக்கம் கரூர். சட்டத்தைப் பயன்படுத்தி பல சாதனைகள் செய்து உள்ளார். குற்றங்களும் தீர்வுகளும் என்ற புத்தகத்தின் ஆசிரியர். அவரும் ஒரு இயக்குனராக இருப்பதால் அமைப்பு களை கட்டுகிறது.
.
திரு.பெ.சுப்ரமணியன் ஈரோடு. அருப்புக் கோட்டை செந்தமிழ்கிழாரின் மாணவர். சட்ட விழிப்புணர்வை நல்ல மக்களிடையே பரப்ப வேண்டும் என்பதில் ஆர்வமுடையவர். நீதித்துறையைச் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்பதில் மிகுந்த தீவிரம் காட்டுபவர். அரசுத் துறைகள் அனைத்திலும் நிர்வாகச் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையும் ஆர்வமும் உடையவர். பள்ளிகளில் சட்டக் கல்வியைக் கொண்டு வர வேண்டும் என்ற சிந்தனை உடையவர் இவரும் ஒரு இயக்குனராக உள்ளார்.
.
இயக்குனர்களின் காலம்.......
இயக்குனர்களின் கடமைகள்.
இயக்குனர்களின் பணிகள்....
இயக்குனர்களின் பொறுப்புகள்.
ஆகியவைகள் பற்றி பின்னர் அறிவிப்போம்.


சட்ட ஆராய்ச்சியாளர்கள் விருப்பத்திற்கு இணங்க தமிழ்நாடு சட்ட ஆராய்ச்சியாளர்கள் கூட்டமைப்பு பதிவு செய்யப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

  • YOU CAN'T GET JUSTICE WHERE LAW IS BEING DENIED.
   Thindal Subramanian Perumal -ஆல் · சுமார் 6 மாதங்களுக்கு முன்
   I AM SURE THAT YOU CAN'T GET JUSTICE WHERE THE LAW IS BEING DENIED. EACH AND EVERY PLACE THERE IS CHEATING, FRAUD, CORRUPTION. COURT IS NOT EXCEPTION. THE COURT MUST FUNCTION AS PER LAW UNLESS YOU CAN
   431
  • நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் .
   Thindal Subramanian Perumal -ஆல் · சுமார் 7 மாதங்களுக்கு முன்
   நீதிமன்றத்தில் வாதட கல்வித் தகுதி தேவை இல்லை. நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம். சட்டம் தெரிந்து இருக்க வேண்டியது அவசியமாகும். இப்போது சட்டப் புத்தகங்கள் தமிழிலேயே  கிடைகிறது. திரு நடராசன் M.A. M.Com
   23912
    
    
   ஆலோசனைகள்.
   1. நாமக்கல்லில் நடக்க உள்ள கூட்டத்தை இரண்டு நாட்களுக்கு நடத்தலாம்.
   2. நாமக்கல்லில் நடக்க உள்ள கூட்டத்தில் அடையாள அட்டை அளிக்கும் இடத்தில் இயக்குனர் ஒருவராவது இருக்க வேண்டும். யார் யார் வருகிறார்கள் ? என்பதை அறிய / கண்காணிக்க வேண்டும்.
   3. பெண்களுக்கு முன் வரிசையில் இருக்கை ஒதுக்க வேண்டும்.
   4. பெண்களுக்கு வசதி செய்ய வேண்டும்.
   5. வருகை தரும் நபர்கள் அனைவரின் கருத்துக்களையும் எழுத்து மூலமாகப் பெற வேண்டும். அதனை மேடையில் வாசிக்க வேண்டும்.
   6. வருகை தந்தவர்களின் ஆலோசனை மற்றும் கருத்துப் பதிவு ஏடு வைக்க வேண்டும்.
   7. மண்டபத்தில் சட்டங்கள் எழுதி வைக்கப்பட வேண்டும்.
   உதாரணமாக......
   * சட்டப்படி உங்கள் வழக்கில் நீங்களே வாதாடலாம்.
   * நீதிமன்றத்தில் அமர உங்களுக்கு சட்டப்படியான உரிமை உள்ளது.
   * ஒரு குற்றம் தொடர்ந்து செய்யப்படும் போது அதன் காலவரம்பு ஒவ்வொரு முறையும் புதியதாகத் தொடங்குகிறது.
   * ஏற்கத் தகாத வழக்கை ஏற்க நீதிபதிகளுக்கு அதிகார வரம்பு கிடையாது.
   * கேட்கப் படுவதற்கான உரிமை உங்களுக்கு உள்ளது.
   * எந்த சட்டப்படி உங்களுக்கு நீதி வேண்டும் என்று நீங்கள் சொல்லுங்கள்.
   * நீதிபதிகள் மீது புகார் அளிப்பது நீதிமன்ற அவமதிப்பு ஆகாது.
   * நீதிபதிகளின் செயல்பாடு குறித்து உள்ளது உள்ளபடி விமர்சிப்பது என்பது நீதிமன்ற அவமதிப்பு ஆகாது.
   * சட்டத்தின் ஆட்சி வேண்டும் என்பதில் உறுதியாய் இருப்போம்.
   * நாம் அரசியல் சாசனத்தை மதித்து ஏற்று அதன்படி செயல்படுவோம் என உறுதி மொழி ஏற்போம்.
   * அரசியல் சாசனம் நீங்கள் உருவாக்கிய சட்டம் ஆகும். நீங்கள் தான் அரசுக்கு கட்டளை பிறப்பித்து உள்ளீர்கள்.
   * உங்களின் கட்டளையை மற்றும் அரசியல்சாசனக் கட்டளையை ஏற்க மறுக்கும் அரசியல் வாதிகளுக்கு / வேட்பாளர்களுக்கு ஓட்டுப் போட மாட்டோம் என்று உறுதி மொழி ஏற்போம்.
   * நீதிபதி ஒரு பொது ஊழியர் ஆவார். நீதிபதி சட்ட விரோதமான முடிவை / தீர்ப்பை அளிப்பது என்பது இ.தா.ச. பிரிவு 219 –ன்படி குற்றமாகும்.
   * அரசியல்சாசனக் கோட்பாடு 2௦ - ன்படி குற்றம் செய்த நீதிபதி தண்டிக்கப்பட வேண்டும்.
   * அரசியல்சாசனக் கோட்பாடு 14 –ன்படி நீதிபதி சட்டத்தின் முன் சமம் ஆவார். *
   * அரசியல் சாசனம் செயல்பட வேண்டும்.
   * அரசியல் சாசனம் செயல்பட ஆவன செய்ய வேண்டியது குடியரசுத் தலைவரின் கடமை ஆகும்.
   * குடியரசுத் தலைவரைக் கடமையைச் செய்ய வைப்போம்.
   * தேர்தலில் நிற்கும் வேட்பாளர் சட்டப்படியான மற்றும் எழுத்துப் பூர்வமான உடன்படிக்கையை தொகுதி மக்களிடம் செய்து கொள்ள வேண்டும். இல்லையெனில், அவர் தேர்தலில் நிற்க தகுதி அற்ற வேட்பாளர் என்று முடிவு செய்து மக்கள் ஓட்டுப் போடக் கூடாது.

Sunday, May 3, 2015

நுரையீரலை சுத்தம் செய்யலாம் வாங்க..

மரியாதைக்குரியவர்களே,
     வணக்கம்.

நுரையீரலை சுத்தம் செய்வது பற்றி காண்போம்.
 
ஆரோக்கியமான வாழ்வு
எவ்வாறு மூன்று நாட்களில் எளிதாக நுரையீரலை சுத்தம் செய்வது ?

புகை பிடிப்பவர்கள் அல்லாமல் மற்றவர்களுக்கு அலர்ஜி, சுற்றுப்புற சூழ்நிலை, தூசுகளினால் நுரையீரல் அழற்சி ஏற்படுவதுண்டு. அதே சமயம் 45 வருடமாக புகை பிடித்தாலும் எந்த பாதிப்பு இல்லாமல் நுரையீரல் நன்றாக இயங்குபவர்களும் உண்டு. இது ஆளாளுக்கு வித்தியாசப்படலாம்.
எவ்வாறு இருப்பினும், இப்பொழுது மூன்று நாட்களில் நுரையீரல் சுத்தம் செய்வது என்று பார்ப்போம்.
✔ இதை செய்வதற்க்கு இரண்டு நாட்கள் முன்பே எல்லா பால் பொருட்கள் சாப்பிடுவதை நிறுத்தி விட வேண்டும். உதாரணத்திறக்கு பால், தேநீர், தயிர், மோர், வெண்னெய், சீஸ் போன்றவை. உடலிருந்து நச்சுகளை நீக்க வேண்டியது அவசியம். எனவே தவறாது இதை கடைபிடிக்க வேண்டும்.
✔ சுத்தம் செய்வதற்க்கு முந்தைய நாள் இரவு ஒரு கப் மூலிகை தேநீரை குடிக்கவும். இது குடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவும். சுத்தம் செய்ய நுரையீரலுக்கும், உடலுக்கும் ஒய்வு தேவை. எனவே கடுமையான பயிற்சிகள், வேலைகளை செய்ய வேண்டாம்.
முதல் நாள்:
✔ இரண்டு எலுமிச்சை பழங்களின் சாற்றை 300 மில்லி தண்ணீரில் கலந்து காலை உணவுக்கு முன்பு குடிக்கவும்.
✔ ஒரு மணி நேர இடைவெளிக்கு பிறகு 300 மில்லி சுத்தமான கிரேப்புரூட் சாற்றை குடிக்கவும். இதன் சுவை பிடிக்காவிட்டால் கிரேப்புரூட் சாற்றுக்கு பதிலாக பைனாப்பிள் சாற்றை குடிக்கலாம். எல்லாம் சுத்தமான தண்ணீர், சர்க்கரை கலக்காத சாறாக இருக்கட்டும். இந்த சாறுகளில் இயற்கையான சுவாசத்தை சீராக்கும் ஆன்டிஆக்ஸிடன்டஸ் நிறைந்துள்ளதால் நமது நுரையீரலுக்கு நன்மை பயக்கும்.
✔ மதிய உணவிறக்கு முன்பாக 300 மில்லி சுத்தமான கேரட் சாற்றை பருகவும். இதில் தண்ணீரோ சர்க்கரையோ சேர்க்கக்கூடாது. கேரட் சாறு சுத்தம் செய்யும் மூன்று நாட்களும் இரத்தத்தை அமில நிலையிலிருந்து காரத்தன்மைக்கு மாற்றுகிறது.
✔ இரவு படுக்கபோகும் முன்பு 400 மில்லி பொட்டாசியம் நிறைந்த கிரேன்பெரி போன்ற சாற்றை குடிக்க வேண்டும். பொட்டாசியம் சுத்தம் செய்ய ஒரு டானிக்காக உதவுகிறது. இது உடலின் உள்ளுறுப்புகளில் முக்கியமாக சிறுநீர்பாதை, நுரையீரல் தொற்றுகளை உண்டாக்கும் பாக்டீரியாக்களை நீக்குகின்றது. கிரேன்பெரி கிடைக்காதவர்கள் சுத்தமான சிகப்பு திராட்சை அல்லது பைனாப்பிள், ஆரஞ்சு சாற்றை கலப்பிடமில்லாமல் குடிக்கலாம்.
✔ இதை மூன்று நாட்கள் கடைபிடிக்கும் போது எளிதில் ஜீரணிக்ககூடிய உணவுகளை சாப்பிடவேண்டும். குறைந்தது 20 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்து வேர்வையை வெளியேற்றவும்.
அல்லது 20 நிமிடங்களில் சுடுதண்ணீரில் குளிக்கலாம். வியர்வை வெளியேறும்போது நச்சுகளும் வெளியேறும்.

✔ இரவில் கொதிநீர் ஆவி பிடிக்கவேண்டும். 5 முதல் 10 சொட்டுவரை யூகாலிப்ட்டஸ் ஆயில் கொதிநீரில் சேர்த்து தலையினை சுத்தமான போர்வையைக்கொண்டு மூடி ஆவியை நன்றாக உள்ளுக்குள் இழுத்து சுவாசிக்கவும். இவ்வாறு கொதிநீர் ஆறும்வரை ஆவி பிடிக்கவும்.
✔ மூன்று நாட்கள் இவ்வாறு கடைபிடிக்கவும். ஆஸ்த்துமா, நுரையீரல் அழற்ச்சி, சைனஸ் தொல்லை உள்ளவர்களுக்கும் நல்ல பலனை அளிக்கும்.

பத்திரிக்கை -

மரியாதைக்குரியவர்களே,
                                   வணக்கம். பத்திரிக்கை என்பதன் விரிவாக்கம் பற்றி காண்போம்.
பத்திரிக்கை : சில சுவையான செய்திகள்
* சென்னையிலிருந்து 1856 &ம் ஆண்டு தமிழ் வார இதழ் ‘தின வர்த்தவானி’ முதன் முதலில் வெளிவந்தது.
* இந்தியாவில் முதல் வார இதழ் ‘தேசோப்காரி’ 1861&ம் ஆண்டு வெளிவந்தது. இது ஒரு தமிழ் இதழ்.
* இந்தியாவில் முதல் அரசியல் பத்திரிக்கையாக ‘இந்தியன் ஹெரால்டு’ உத்தரபிரதேசத்திலிருந்து 1879-ம் ஆண்டு வெளிவந்தது.
* முதல் தமிழ்த் தினசரி ‘சுதேசமித்திரன்’, 1882-ம் ஆண்டு
* இந்தியாவின் முதல் பெண் பத்திரிக்கை ஆசிரியை ஸ்வர்ணகுமாரி. அவர் 1889-ல் வெளிவந்த ’பாமா போதினி’ என்னும் பத்திரிக்கையில் ஆசிரியராக பணியாற்றினார்.
* இந்தியாவில் குழந்தைகளுக்க்கான முதல் பத்திரிக்கை 1840-ம் ஆண்டு தமிழில் வெளிவந்தது. அதன் பெயர் ’பாலதீபிகை’
P - People (மக்கள்),
R - Royal (ராஜ்ஜியம்),
E - Education (கல்வி),
S - Sound- (காதால் கேட்பது),
S - Sight- (கண்களால் பார்ப்ப்து).
இவை எல்லாம் இனணந்துதான் ’பிரஸ்’ என்ற ஆங்கிலச் சொல் உருவானது.

* ‘செய்தி’ என்பதை ஆங்கிலத்தில் ‘News’ என்கிறோம்.இது எப்படி ஏற்பட்டது?
நான்கு திசைகளிலிருந்து செய்தி கிடைக்கிறது.அதைக் குறிக்கும் விதமாக வடக்கு (North) கிழக்கு (East) மேற்கு (West) தெற்கு (South)என்னும் சொற்களின் முதல் எழுத்துகள் இணைந்துதான் ‘நியூஸ்’.
தமிழ்ச்செல்வி நிக்கோலஸ்-ன் படம்.

வலைப்பதிவு - Blogger - வலைப்பதிவு

மரியாதைக்குரியவர்களே,

வணக்கம்.வலைப்பதிவு என்றால் என்ன என்பது பற்றி காண்போம்.

வலைப்பதிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வலைப்பதிவு (Blog) என்பது, அடிக்கடி இற்றைப்படுத்துவதற்கும், கடைசிப்பதிவு முதலில் வருமாறு ஒழுங்குபடுத்தப்படுத்துவதற்கும் என சிறப்பாக வடிவமைத்த தனிப்பட்ட வலைத்தளமாகும். இற்றைப்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் வாசகர் ஊடாடுவதற்குமான வழிமுறைகள், வலைத்தளங்களைக் காட்டிலும் வலைப்பதிவுகளில் இலகுவானதாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.
சில நிறுவனங்கள் சாதாரண இணையப்பயனரும் இலகுவாக பயன்படுத்தும் வகையில் இற்றைப்படுத்துவதற்குத் தயாரான நிலையில் வலைப்பதிவுகளை வடிவமைத்து வழங்குகின்றன. வலைப்பதிவுகளை தனிப்பட்ட வழங்கிகளிலோ, வலைத்தளங்களில் ஒரு பகுதியாகவோ வடிவமைத்து வைத்துக்கொள்ள முடியும்.

பொருளடக்கம்

வலைப்பதிவுகளின் பொதுவான இயல்புகள்

அடிக்கடி இற்றைப்படுத்தப்படல்

பெரும்பாலும் வலைப்பதிவுகள் எல்லாவற்றுக்குமான பொது இயல்பாக அவை அடிக்கடி இற்றைப்படுத்தப்படுவதைச் சொல்லலாம். புதிய பதிவுகளை, ஆக்கங்களை அடிக்கடி வலைப்பதிவாளர்கள் தம் வலைப்பதிவுகளில் வெளியிடுவர். சில வலைப்பதிவுகள் தனி நபர்களின் சொந்த நாட்குறிப்பேடுகளாகக்கூட உள்ளன.

இலக்கு வாசகர்கள்

அநேகமான வலைப்பதிவுகள், வாசகர்களை இலக்காகக் கொண்டே எழுதப்படுகின்றன. ஒவ்வொரு வலைப்பதிவுகளுக்கும் சிறப்பான ஒரு வாசகர் வட்டம் இருக்கும்.

வாசகர் ஊடாட்டம்

தொழிநுட்ப அடிப்படையில் வாசகர் ஊடாடுவதற்கென வலைப்பதிவுகள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கும். பதிவுகளைப் படித்த வாசகர்கள் அதற்கான தமது எதிர்வினையை, கருத்துக்களை மறுமொழிகளாக உடனடியாகவே அவ்வலைப்பதிவில் பதிவு செய்துகொள்ளக்கூடிய வசதி வழங்கப்பட்டிருக்கும். மறுமொழிகளை அடுத்து வரும் வாசகர்கள் பார்க்கக்கூடியதாயிருக்கும். தேவையேற்படும் பட்சத்தில் மறுமொழிகள் விடயத்தில் வலைப்பதிவாளர் மட்டுறுத்தல்களையும் மேற்கொள்ள முடியும்.

செய்தியோடை வசதி

வலைப்பதிவுகளின் இற்றைப்படுத்தல்கள் உடனுக்குடன் செய்தியோடைகள் வழியாக அனுப்பப்படும். இவ்வசதியைப் பயன்படுத்தி வாசகர்கள் தமக்குப்பிடித்த வலைப்பதிவுகளின் செய்தியோடைகளை தத்தமது கணினிகளில் அதற்கான மென்பொருட்களின் உதவியுடன் இணைத்துக்கொண்டு, வலைப்பதிவுகளுக்குச் செல்லாமலேயே இற்றைப்படுத்தல்களைக் கணினியில் பெற்றுக்கொள்ளலாம். இச்செய்தியோடை வசதியே, வலைப்பதிவுத் திரட்டிகளையும், வலைப்பதிவர் சமுதாயங்களையும் சாத்தியப்படுத்தியுள்ளது.

வலைப்பதிவொன்றின் பகுதிகள்

வலைப்பதிவொன்றில் பொதுவாக இருக்கக்கூடிய பகுதிகள் அல்லது உறுப்புக்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.

வலைப்பதிவுத் தலைப்பு

வலைப்பதிவுகள் தமக்கென பெயரொன்றைக் கொண்டிருக்கும். இப்பெயர் வலைப்பதிவின் உள்ளடக்கம் பற்றிய சிறு அறிமுகத்தை வாசகர்களுக்கு சில வேளைகளில் கொடுக்கக்கூடும். பெரும்பாலும் வித்தியாசமான, கவரத்தக்க தலைப்புக்கள் வழங்கப்படுகின்றன.

விபரிப்பு/சுலோகம்

வலைப்பதிவர், தனது வலைப்பதிவு பற்றியோ, அதன் நோக்கங்கள் பற்றியோ விவரிக்கும் ஓரிரு சொற்களை, வரிகளை இது கொண்டிருக்கும். சிலவேளை, விளையாட்டாக, நகைச்சுவைக்காகக்கூட இது எழுதப்பட்டிருக்கும். வலைப்பதிவர் விரும்பும் வாசகமொன்றாகக்கூட இது அமையலாம்.

பதிவின் தலைப்பு

ஒவ்வொரு பதிவும் (அல்லது பதிப்பிக்கும் ஆக்கங்களும்) தலைப்பொன்றினைக் கொண்டிருக்கும். வலைப்பதிவுத் திரட்டிகளில் உறுப்பினராக உள்ள வலைப்பதிவர்கள், இத்தலைப்புக்களை மிக கவர்ச்சிகரமாகவும், பதிவின் உள்ளடக்கத்தை ஓரளவுக்கேனும் தெரியப்படுத்தும் விதமாகவும் அமைப்பர்.

பதிவு/உள்ளடக்கம்

இதுவே வலைப்பதிவில் அடிக்கடி இற்றைப்படுத்தப்படும் பகுதியாக இருக்கும். இவ்வுள்ளடக்கம் எழுத்தாக்கமாகவோ, ஒலி வடிவமாகவோ, சலனப்படக் காட்சியாகவோ, படமாகவோ அமையலாம். இவ்வுள்ளடக்கம் இணையத்தின் பொதுவான உள்ளடக்கங்களைப் போன்று மீயுரை வடிவங்களுக்கே உரித்தான பல்வேறு சிறப்புக் கூறுகளைக் கொண்டிருக்கலாம்.

மறுமொழிகள்

பதிவின் உள்ளடக்கத்தைப் படிக்கும் வாசகர்கள் வலைப்பதிவொன்றில் பதிவுசெய்த மறுமொழிகள் இங்கே காட்சிப்படுத்தப்படும். ஏற்கனவே உள்ள மறுமொழிகளோடு, புதிதாக மறுமொழி இடுவதற்கான தொடுப்பும் அங்கே இருக்கும்.

இடுகைகளுக்கான தனிப்பக்கங்கள்

வலைப்பதிவின் முகப்புப் பக்கத்தில் காண்பிக்கப்படும் இடுகைகளை விட, ஒவ்வொரு இடுகைக்கென்றும் தனித்தனிப் பக்கங்கள் ஒதுக்கப்பட்டிருக்கும். அவ்விடுகைகளுக்கான மறுமொழிகளையும் அப்பக்கங்களில் காணலாம். அனைத்துப் பக்கங்களும் தமக்கெனத் தனியான முகவரிகளைக் கொண்டிருக்கும். இப்பக்கங்கள் வலைப்பதிவொன்றின் முகப்பில் தொடுப்பாகச் சேர்க்கப்பட்டிருக்கும். பொதுவாக அண்மையில் எழுதிய பத்து, இருபது இடுகைகளின் தொடுப்புக்கள் தலைப்புக்களோடு முகப்பில் பட்டியலிடப்பட்டிருப்பதை வலைப்பதிவுகளில் காணலாம்.

சேமிப்பகம்

வலைப்பதிவு தொடர்ச்சியாக இற்றைப்படுத்தபட்டு வருவதால், முன்னர் எழுதிய பதிவுகள் முகப்புப்பக்கத்தில் இடம்பெறாமலோ, பட்டியலிடப்படும் தனிப்பக்கங்களில் கூட இடம்பிடிக்காமலோ போகலாம். அவற்றை வாசகர்கள் பார்ப்பதற்கும், வலைப்பதிவொன்றின் அத்தனை ஆக்கங்களும் பட்டியலிடப்படுவதற்கும் இத்தகைய சேமிப்பகங்கள் உதவுகின்றன. சேமிப்பகம் ஓர் அவிழ் பட்டியலாகவோ தனிப்பக்கமாகவோ, சாதாரண பட்டியலாகவோ இருக்கலாம். சேமிப்பகத்தில் பதிவுகள் மாதவாரியாகவோ, வார வாரியாகவோ பட்டியற்படுத்தப்பட்டிருக்கலாம்.

தொடுப்புகள்

வலைப்பதிவரது விருப்பங்களுக்கு ஏற்ப, வெளி இணையத்தளங்களுக்கான தொடுப்புகள் வலைப்பதிவில் கொடுக்கப்பட்டிருக்கும்.

மேலதிக நிரற் துண்டுகள்

வலைப்பதிவரின் நிரலாக்க அறிவு, தேவை என்பவற்றைப் பொறுத்து பல சிறப்பான பணிகளை ஆற்றக்கூடிய நிரல் துண்டுகள் வலைப்பதிவொன்றில் சேர்க்கப்பட்டிருக்கலாம். வருனர்களின் எண்ணிக்கையை அறியவோ, அல்லது எழிலூட்டுவதற்காகவோ இவை பொருத்தப்பட்டிருக்கலாம்.
சிறந்த எடுத்துக்காட்டாக, தமிழ்மணம் திரட்டியில் இணைந்திருக்கும் தமிழ் வலைப்பதிவர்களில் பலர், தமது வலைப்பதிவிலே அத்திரட்டியினால் வழங்கப்படும் சிறப்புப் பட்டை ஒன்றினைப் பொருத்தியிருப்பர்.

வலைப்பதிவோடு தொடர்புடைய தமிழ்க் கலைச்சொற்கள்

 • வலைப்பதிவு; பதிவு
 • வலைப்பதிவர்; பதிவர், வலைப்பதிவில் எழுதுபவர், இணையம் மூலமாக தனது கருத்துக்களையும், சிந்தனைகளையும் முன்வைக்கும் கட்டுப்படுத்த முடியாத ஒரு ஊடகவியலாளர்.
 • வாசகர் - வலைப்பதிவினைப் பார்ப்பவர்கள்.
 • பின்னூட்டம்/கருத்து / மறுமொழி - வாசகரால் வலைப்பதிவின்மீது செய்யப்படும் கருத்து வழங்கல்கள்.
 • செய்தியோடை; ஓடை - - இற்றைப்படுத்தல்களை உடனுக்குடன் பரிமாற உதவும் xml முகவரி
 • தட்டெழுதல் - வலைப்பதிவுகளை விசைப்பலகை கொண்டு உள்ளிடுதல். "தட்டச்சு செய்தல்" என்ற பழைய சொல்லின் தொழிநுட்பரீதியான மருவல்.
 • நிரலாக்கம்ஆணைத்தொடர்களை எழுதுதல்
 • நிரல் துண்டு - சிறப்பான தேவைகளுக்கென வலைப்பதிவொன்றில் பொருத்தப்படும் மேலதிக ஆணைத்தொடர். அநேகமாக ஜாவாஸ்க்ரிப்ட், HTML,XMl ஆக இருக்கலாம்
 • வார்ப்புரு – template - வலைப்பதிவொன்றின் அத்தனை செயற்பாடுகளையும் கவனித்துக்கொண்டு, பின்னணியிலுள்ள php போன்ற வழங்கிசார் நிரலுடன் தொடர்புகளைப்பேணி வலைப்பதிவை ஆக்கும் சட்டகம்.இது css எழிலூட்டு நிரல்களையும் தன்னகத்தே கொண்டிருக்கும். வார்ப்புருவை மாற்றியமைப்பதன்மூலம் வலைப்பதிவொன்றின் வடிவத்தையும் செயற்பாடுகளையும் மாற்றியமைக்கலாம்.
 • திரட்டி - வலைப்பதிவுகளின் செய்தியோடைகளை ஓரிடத்தில் திரட்டி, இற்றைப்படுத்தல்களை உடனுக்குடன் காண்பிக்கும் வலைத்தளம், வலைச்செயலி.
 • வலைப்பதிவர் சமுதாயம் - திரட்டிகள் மூலம் இணைந்து தம்முள் இடைத்தொடர்புகளைப் பேணும் வலைப்பதிவர்கள்.
 • மட்டுறுத்தல் - பின்னூட்டங்களைப் பரிசீலித்து தேவையானவற்றை மட்டும் வலைப்பதிவில் தோன்றச்செய்தல் (எல்லாவகையான "பரிசீலிப்பின் பின்னான பிரசுரிப்பும்" இதனுள் அடக்கம்
 • பதிவிடல் - உள்ளடக்கத்தினை வலைப்பதிவொன்றில் பிரசுரித்தல்.
 • பெயரிலி/முகமூடி - தன்னை அடையாளப்படுத்தாது மறுமொழிகள் இடுபவர். தமிழ் வலைப்பதிவர் சமுதாயத்தில் பொதுவாகிப்போன சொற்கள்.(இப்பெயர்களை சில வலைப்பதிவாளர்கள் தமக்கு வைத்துக்கொண்டுள்ளனர்.)
 • வழங்கி - வலைப்பதிவுகளுக்குத் தேவையான கோபுக்களை வைத்திருந்து இணையத்திற்குப் பரிமாறும் சிறப்புக் கணினி.
 • வலைப்பதிவர் சந்திப்பு - வலைப்பதிவர்கள், தமது வலைப்பதிவர் அடையாளத்தை முன்னிறுத்திக் கூடுதல்.
 • கூட்டுப்பதிவு/கூட்டு வலைப்பதிவு - ஒன்றுக்கு மேற்பட்டவர்களால் பராமரிக்கப்படும் வலைப்பதிவுகள்.
 • இடுகை - வலைப்பதிவில் உள்ளடக்கம் ஒன்றினை இடும் செயல் (வினை). வலைப்பதிவொன்றில் உள்ளிடப்பட்ட உள்ளடக்கம் (பெயர்)
 • பின்தொடர்தல் - குறித்த இடுகை சார்ந்து எழுதப்படும் மறுமொழிகள், வெவ்வேறு இடங்களில் அதைத்தொட்டு எழுதப்படும் விடயங்கள் அனைத்தையும் ஓரிடத்தில் கணினியில் மென்பொருட்களின் உதவியுடன் தெரிவிக்கும் வசதி.
 • வலைப்பூ - வலைப்பதிவு ஆரம்பமான காலத்தில் உருவாக்கப்பட்ட கலைச்சொல். இது வலைப்பதிவையே குறிக்கும். வலைக்குறிப்பு, வலைக்குடில் போன்ற சொற்களும் வழக்கத்திலிருந்தன. தற்போது வலைப்பதிவு என்பதே பொதுச்சொல்லாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

வலைத்தளங்களுக்கும் வலைப்பதிவுகளுக்குமான வேறுபாடுகள்

[[படிமம்:Thamizmanam.png|thumbnail|தமிழ் வலைப்பதிவுத் திரட்டி ஒன்று... வலைப்பதிவுகளின் இற்றைப்படுத்தல்கள் ஓரிடத்தில் திரட்டப்படுதலைக் காண்க... நன்றி: தமிழ் மணம் திரட்டி
 • வலைப்பதிவுகளில், புதிய வலைப்பக்கங்களை உருவாக்குவது மிகவும் இலகுவானது. ஏற்கனவே உருவாக்கப்பட்டிருக்கும் படிவங்களில் உள்ளடக்கத்தை உள்ளிட்டுவிட்டு இலகுவாக ஒரு விசை மூலம் சமர்ப்பித்துவிட்டால் தானாக பக்கம் ஒன்று உருவாக்கப்பட்டுவிடும். வார்ப்புருக்கள் இந்தப் பணியைச் செய்து முடிக்கின்றன.
 • வாசகர்கள் உடனுக்குடன் தமது கருத்துக்களை வலைபப்திவிலேயே பதிவு செய்யும் வசதிகள் உண்டு.
 • வலைப்பதிவுகள் செய்தியோடையைப் பயன்படுத்தி பெரும் சமுதாயமாக திரட்டி ஒன்றினைச்சுற்றி உருவாகிக்கொள்ளும் வாய்ப்பு உண்டு.
 • நிறுவனங்கள் வலைப்பதிவுகளை வைத்திருப்பதற்கான இடவசதியையும் வார்ப்புருக்களையும் மின்னஞ்சல் போன்று இலவசமாகவே வழங்குவதால், வழங்கி, ஆள்களப்பெயர் போன்றவற்றுக்கு எந்தவிதமான கட்டணங்களும் செலுத்தவேண்டியதில்லை.
 • தேடுபொறிகள் தமக்கென தனியான வலைப்பதிவுத் தேடல்களை வைத்திருப்பதாலும், வலைப்பதிவுகள் எல்லாம் பெரும் வலையமைப்புடன் இணைந்திருப்பதாலும் சில நாட்களிலேயே வலைப்பதிவு உள்ளடக்கங்கள் தேடுபொறிகளில் பட்டியலிடப்பட்டுவிடும்.
 • செய்தியோடை வசதி, தன்னியக்க ஒழுங்குபடுத்தல்களுக்கான நிரலாக்கம் எல்லாம் சேவை வழங்குநர்களாலேயே பெரும்பாலும் தரப்பட்டுவிடுவதால், பராமரிப்பதற்கோ, உருவாக்குவதற்கோ கணினி இயல் அறிவு பெரிதாகத் தேவைப்படாது.

வலைப்பதிவின் வரலாறு

 • WebLog என்ற பெயர் முதன் முதலில் 17-12-1997 இல் Jorn Barger என்பவரால் உருவாக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டது.
 • குறுக்க வடிவமான blog என்ற சொல்லை Peter Merholz என்பவரே முதன் முதலில் பயன்படுத்தினார். 1999 ஏப்ரல் அல்லது மே மாதமளவில் இவரது வலைப்பதிவின் பக்கப்பட்டையில் WebLog என்ற சொல் இரண்டாக உடைக்கப்பட்டு we blog என்றவாறு காண்பிக்கப்பட்டிருந்தது.
 • 1994 இலிருந்து தனது தனிப்பட்ட வலைப்பதிவை எழுதிவரும் Justin Hall என்பவர் வலைப்பதிவின் முன்னோடிகளுள் ஒருவராக பொதுவில் கருதப்படுகிறார்.
 • 1996 இல் 'Xanga என்ற வலைத்தளம் வலைப்பதிவுச் சேவையை வழங்கத் தொடங்கியது. 1997 அளவில் 100 நாட்குறிப்பேடுகள் அங்கே வைக்கப்பட்டிருந்தன. டிசம்பர் 2005 அளவில் அவற்றின் எண்ணிக்கை 50,000 இனைத் தாண்டியது, தற்போது உலக அளவில் 3639-ம் இடத்தில் உள்ளதாக அலெக்ஸா தெரிவிக்கின்றது.[1]
 • ஏறத்தாழ இதே காலப்பகுதியில் blogger.com என்ற வலைப்பதிவுச் சேவை வழங்குநர்கள் தமது சேவையைத் தொடங்கினர். இச்சேவை பின்னர் 2003 பெப்ரவரியில் google நிறுவனத்தினரால் கொள்வனவு செய்யப்பட்டது.
 • ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் கடைசி நாள் (31.08) அன்று உலக வலைப்பதிவாளர்கள் நாளாகக் கொண்டாடப்படுகிறது.

வெளி இணைப்புக்கள்

தமிழ் வலைப்பதிவுத் திரட்டிகள்

தமிழ் விருப்பப் பகிர்வுகள்

பதிவுகளை வலைப்பதிவுகளில் இருந்து திரட்டும் திரட்டிகள் போன்று அல்லாமல், "தமிழ் விருப்பப் பகிரவுகள்" எனும் வசதியானது, இணையத்தில் தமிழில் காணக்கிடைக்கும் தகவல்களை, செய்திகளை, நிழல் படத் தொகுப்புகளை, விரும்புவோர் இணைத்து பகிரவுதவும் தளங்களாகும்.

தமிழ் வலைப்பதிவுத் தொகுப்புகள்

பட்டியல்கள்

வலைப்பதிவு சேவை வழங்குநர்கள்

வலைப்பதிவு பற்றிய தமிழ் கட்டுரைகள்

வலைப்பதிவுகளில் சிறப்பு வடிவமைப்புகள் சில

குறிப்புகள்


 • அலெக்ஸா தளத்தில் xanga.com பற்றி, பார்த்த நாள்: 30, மார்ச்சு, 2012.

  1. கார்த்திகேயன் ராமசாமியை தொடர்புகொள்ள, பார்த்த நாள்: 30, மார்ச்சு, 2012.