Tuesday, December 18, 2012

கணினி ‘ – ஆணா… பெண்ணா..?

மரியாதைக்குரிய நண்பர்களே,
              வணக்கம். 
    இதென்ன சோதனைங்க? நீங்கள்தான் தீர்வு சொல்லுங்களேன்!.



        கணினி ‘ – ஆணாபெண்ணா..?
          
 
      ஆசிரியைக்கு உண்மையிலேயே விடை தெரியவில்லை..
எனவே, மாணவர்கள் அனைவரையும் அழைத்து மாணவர்கள்  தனியாகவும், மாணவிகள் தனியாகவும் கூடிப்பேசி இதற்கு முடிவு காணுமாறு அறிவுறுத்தினார்……….
 
      மாணவிகள் கணினி ஆண்பால்தான் என்ற முடிவுக்கு வந்தார்கள் 

           அதற்கு அவர்கள் சொன்ன காரணங்கள் இதோ
1)
அதுக்கு எதையும் சுலபமா புரிய வைக்க முடியாது..
2) உருவாக்கினவனைத் தவிர வேறே யாருக்கும் அதோட நடைமுறையை புரிஞ்சிக்க முடியாது..
3)
நாம ஏதாவது தப்பு பண்ணா மனசுலேயே வச்சிருந்து நேரம் பார்த்து மானத்தை வாங்கும்..
4)
எந்த நேரத்துல புகையும்…. எந்த நேரத்துல மயங்கும்ன்னு சொல்லவே முடியாது..
5)
நம்ம கிட்ட இருக்கறதைவிட அடுத்தவங்க வச்சிருக்கறது நல்லா வேலை செய்யறது மாதிரி தோணும்…!

மாணவர்களோ கணிணி பெண்பால்தான் என்ற முடிவுக்கு வந்தனர்.               
        அதுக்கு ஆதாரமா அவங்க சொன்னது இதோ
1)
எப்பவுமே அடுத்த கணிணியோட ஒத்துப் போகவே போகாது..
2)
எட்ட இருந்து பார்க்க கவர்ச்சிகரமா இருக்கும்.. ஆனா கிட்டபோனாதான் அதோட வண்டவாளம் தெரியும்..
3)
நிறைய ஸ்டோர் பண்ணி வச்சிருக்கும்ஆனா எப்படி பயன்படுத்தணும்ன்னு அதுக்கு தெரியாது..
4)
பிரச்சினையை குறைக்கறத்துக்காக கண்டுபிடிக்கப்பட்டவைஆனா பெரும்பாலான சமயங்கள்ல அதுகளேதான் பிரச்சினையே..
5)
அதை சொந்தமாக்கிக்கிட்ட பிறகுதான் நமக்கு புரியும்.. அடடா இன்னும் கொஞ்சம் பொறுமையா இருந்திருந்தா இதைவிட அருமையான மாடல் கிடைச்சிருக்குமேன்னு…!
Top of Form
Bottom of Form