Thursday, October 29, 2015

பூண்டு மருத்துவ மகிமை

மரியாதைக்குரியவர்களே,
           வணக்கம். பூண்டு மருத்துவம் பற்றி அறிவோம் வாங்க.

பூண்டை தனித்து சாப்பிடும்போது எப்படி சாப்பிடனும்..?
நம்முடைய சமையலறையில் இருக்கும் மருத்துவ உணவுப் பொருட்களில் மிகவும் முக்கியப்பங்கு வகிப்பது வெள்ளைப் பூண்டு. தமிழகத்தின் பாரம்பரிய உணவுகளில் கண்டிப்பாக பூண்டுக்கு இடம் உண்டு. மருத்துவ குணம் வாய்ந்த பூண்டின் மகத்துவத்தை இங்கே பார்ப்போம்.
பூண்டை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே மிகவும் நல்லது. பூச்சிக்கடி உள்ள இடத்தில் பூண்டை வைத்து தேய்த்து விடலாம். பூண்டு சாறும், எலுமிச்சை சாறினையும் கலந்து தேமல் உள்ள இடங்களில்போட தேமல் காணாமல் போய் விடும்.
வெள்ளைப்பூண்டை தினமும் சாப்பிட்டு வந்தால் கொழுப்புக் குறையும். பூண்டை சாப்பிட்டவுடன் கொஞ்சம் அரிசி சாப்பிடுங்கள். பூண்டு நாற்றம் போய் விடும்.
சளிப் பிடிக்கக் கூடியவர்களுக்கு பூண்டை உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் ஆகியவற்றை சேர்த்த சூப் கொடுங்கள். வெள்ளைப் பூண்டை பாலில் வேகவைத்து காலை, மாலை அருந்தலாம்.
வெங்காயத்தை நெய்யில் வதக்கியும் காலை மாலை சாப்பிட்டு வரலாம். உடல் நலம் பெறும். பூண்டு, அதே அளவு வெற்றிலையும் சேர்த்து அரைத்து எச்சில் தழும்பின் மீது பூசி ஊறவிட்டு கழுவவும். இப்படி தொடர்ந்து செய்தால் முன்றே நாளில் எச்சில் தழும்பு மறைந்து விடும்.
* குழந்தை பெற்ற பெண்களுக்கு தினந்தோறும் இரவில் பாலில் பூண்டு போட்டு காய்ச்சிக் கொடுத்தால் தாய்ப்பால் பெருகுவதுடன் வயிற்று உப்புசம், பொருமல் எதுவும் வராது.
* கர்ப்பப் பையில் சேர்ந்துள்ள அழுக்கை அகற்றும் தன்மை பூண்டிற்கு உண்டு.
* தசைவலி இருக்கும் இடத்தில் பூண்டை நசுக்கி வைத்துக் கட்டினால் வலி சீக்கிரம் குறையும்.
* உடம்பில் கொழுப்பு சேரவிடாமல் தடுக்கும் ஆற்றல் பூண்டுக்கு உண்டு. ஆகையால்தான் கரையாத கொழுப்பு சத்து உள்ள மாமிச உணவு சமைக்கும்போது பூண்டை அவசியம் சேர்க்கின்றனர்.
* இரவு உணவுடன் பச்சையாகவோ அல்லது பாலிலோ மூன்று பூண்டு பற்களை சாப்பிட்டால் ஆழ்ந்த உறக்கம் ஏற்படும். கனவுத் தொல்லை இருக்காது.
* பூண்டிற்கு ரத்த அழுத்தத்தைக் கண்டிக்கும் சக்தி உண்டு. அதனோடு இதய தசைகளையும் ரத்தக் குழாய் தசைகளையும் வலுப்படுத்தும் சக்தி பூண்டிற்கு உண்டு.
* பூண்டு ஒரு நார்சத்து மிகுந்த உணவு என்பதால் மலச்சிக்கலை அகற்றும் குணம் பூண்டிற்கு உண்டு.
* பூண்டை உணவில் சேர்த்துக்கொள்ளும் வாய்ப்பு இல்லாதவர்கள் பூண்டு மாத்திரைகளை சாப்பிடலாம். இதனால் வயிற்று உப்பிசம் நீங்கி, தொப்பை குறையும் வாய்ப்பு அதிகம்.

Wednesday, October 21, 2015

தற்செயல் விடுப்பு-

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். தற்செயல் விடுப்பு  என்றால் என்ன? அதனை அனுபவிப்பது எப்படி?

கல்வித்துணைவன் தமிழ்நாடு
17 அக்டோபர் இல் 06:38 PM ·
தற்செயல் விடுப்பு(CL) :
1. ஒரு ஆண்டிற்கு 12 நாட்கள் தற்செயல் விடுப்பு வழங்கப்படும். ஒரே நேரத்தில் பத்து நாட்கள் தனியாகவோ , அரசு விடுமுறை அல்லது ஈடுசெய்யும் விடுப்பு முதலியவற்றுடன் சேர்த்தோ அனுபவிக்கலாம்.
2. அவ்வாறு நாட்கள் தொடர்ந்து அனுபவிக்கும் போது , இயற்கை சீற்றம், தேசிய தலைவர் மரணம் , பந்த், பண்டிகை, திடீர் விடுமுறை காரணமாக 11 வது நாள் அரசு விமுறை என அறிவிக்கப்பட்டால் ஊழியர் 10 க்கு மேற்பட்ட அந்த நாளையும் விடுப்பாக அனுபவிக்கலாம். (அ.நி.எண். 309 ப.ம.நி.சி.(அவி.11) நாள் 16.08.93)
3. தற்செயல் விடுப்பை ஈட்டிய விடுப்பு மற்றும் பிற முறையான விடுப்புடன் இணைத்து அனுபவிக்க இயலாது.
4. தற்செயல் விடுப்பு விண்ணப்பத்தில் அதற்கான காரணத்தை குறிப்பிட வேண்டியதில்லை. (அ.க.எண். 1410 ப.ம.நி.சீ துறை 2.12.77 ).
5. தற்காலிக பணியாளர் மற்றும் தகுதிகாண்பருவத்தினருக்கு 3 மாதங்களுக்கு 2 நாட்கள் என்ற அளவில் இவ்வுடுப்பு வழங்கப்படும். (அவி. இணைப்பு VI )
6. தகுதிகாண்பருவம் முடித்தவர் / நிரந்தர பணியாளர் ஆண்டு துவக்கத்திலேயே பணிநிறைவு பெரும் பணியாளருக்கு 12 நாட்கள் தற்செயல் விடுப்பை ஆண்டு துவக்கத்திலேயே வழங்கலாம். (அரசு கடித எண். 61559 /82 -4 ப.ம.சீ துறை நாள். 17.1.83)
7. குறைந்தபட்சம் அரைநாள் சிறுவிடுப்பு அனுமதிக்கப்படும்.
8. அவசர காரணங்களுகளுக்காக முதலில் விடுப்பு எடுத்து விட்டு பின்னர் இதற்கான விண்ணப்பத்தினை அளிக்கலாம். ( அரசுக் கடிதம் 61559 /82 -4 ப.ம.சீ துறை நாள். 17.1.83)

தாளவாடி அரசுப்பேருந்து வழித்தடம் மாற்றி?????????
சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடிக்கு செல்லும் அரசு பஸ்சை திருப்பூர் நோக்கி ஓட்டிய டிரைவர் ஈரோடு மாவட்ட தினத்தந்தி செய்தி

மாற்றம் செய்த நாள்:
புதன், அக்டோபர் 21,2015, 11:08 AM IST
பதிவு செய்த நாள்:
புதன், அக்டோபர் 21,2015, 11:08 AM IST
சத்தியமங்கலம்
சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடிக்கு செல்லும் அரசு பஸ்சை காரில் சென்று எம்.எல்.ஏ. வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அரசு பஸ்
சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடிக்கு தினமும் மாலை 6.30 மணிக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் உள்ள தாளவாடி நிறுத்தத்தில் அந்த அரசு பஸ் நேற்று மாலை 6.30 மணிக்கு நின்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் தாளவாடி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவ–மாணவிகள் உள்பட 70 பயணிகள் இருந்தனர்.
அப்போது பஸ்சின் டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகியோர் இந்த பஸ் தாளவாடி செல்லாது. திருப்பூர் செல்கிறது என்று கூறினர். இதை கேட்டதும் பயணிகளுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. உடனே அவர்கள் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் நோக்கி...
அப்போது பஸ்சில் இருந்த பயணிகள் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம், ‘நாளை (அதாவது இன்று) ஆயுத பூஜை நடைபெறுகிறது. இதனால் தாளவாடி மற்றும் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் சத்தியமங்கலம் வந்து பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்கி இந்த பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருந்து ஏறி அமர்ந்து உள்ளனர்.
மேலும் கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளதால் மாணவ–மாணவிகளும் இந்த பஸ்சுக்காக காத்திருந்து ஏறி உள்ளனர். இப்படி இருக்கையில் திடீரென்று வந்து தாளவாடிக்கு பஸ் செல்லாது. திருப்பூருக்கு செல்கிறது என்று சொன்னால் எப்படி?. நாங்கள் பஸ்சை விட்டு இறங்கமாட்டோம்,’ என்று தெரிவித்ததுடன் பஸ்சிலேயே இருந்தனர். பயணிகள் யாரும் இறங்காததால் டிரைவர் பஸ்சை எடுத்துக்கொண்டு திருப்பூர் நோக்கி சென்றார்.
காரில் வழிமறித்த எம்.எல்.ஏ. அப்போது பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் ‘ஓவென்று’ சத்தம் போட்டு கத்தியதுடன் கண்டக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே இதுகுறித்து பவானிசாகர் பி.எல்.சுந்தரம் எம்.எல்.ஏ.வுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் தெரிந்ததும் பி.எல்.சுந்தரம் எம்.எல்.ஏ. தனது காரில் திருப்பூர் நோக்கி சென்று அரசு பஸ்சை முந்தி சத்தியமங்கலம் எஸ்.ஆர்.டி. சந்திப்பு பெட்ரோல் பங்க் அருகில் வழிமறித்து அதன் குறுக்கே தனது காரை நிறுத்தினார்.
உடனே அவர் பஸ்சின் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் தாளவாடி பயணிகளை நீங்கள் எந்த அடிப்படையில் திருப்பூருக்கு கொண்டு செல்லகிறீர்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
திடீர் பரபரப்பு இதற்கிடையே இதுகுறித்த தகவல் சத்தியமங்கலம் அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளருக்கு செல்போன் மூலம் தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அந்த பஸ் தாளவடிக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
பின்னர் அந்த பஸ் ஒரு மணி நேரம் தாமதமாக 7.30 மணிக்கு சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடிக்கு புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tuesday, October 6, 2015

தமிழ் சொல்லின் முதலில் &இறுதியில் வரும் எழுத்துக்கள்

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். தமிழ் மொழியின் சொல்லுக்கு இறுதியில் வரும் எழுத்துக்களைப்பற்றி அறிந்துகொள்வோம்.
(பதிவிட்டஇணைய கல்விக் கழகம்-தளத்திற்கு நன்றிங்க)
மொழி இறுதி எழுத்துகள்
சொல்லுக்கு இறுதியில் வரும் எழுத்துகளை மொழி இறுதி எழுத்துகள் என்று கூறுவர். மெய் எழுத்துகள் இயல்பாகவே சொல்லுக்கு இறுதியில் வரும். சொல்லுக்கு இறுதியில் வரும் உயிர்மெய் எழுத்துகளை உயிர் எழுத்துகளாகவே கொள்ளவேண்டும் என்று இந்தப் பாடத்தின் முன்பகுதியில் படித்தது நினைவிருக்கிறதா?

5.3.1 சொல்லுக்கு இறுதியில் வரும் உயிர் எழுத்துகள்
உயிர் எழுத்துகள் தனியாகச் சொல்லுக்கு முதலில் மட்டுமே வரும். சொல்லுக்கு இடையிலும் இறுதியிலும் வருவது இல்லை; மெய் எழுத்துடன் சேர்ந்து உயிர்மெய் எழுத்தாகவே சொல்லுக்கு இடையிலும் இறுதியிலும் வரும். அவ்வாறு வரும் உயிர் எழுத்துகளில் எவை சொல்லுக்கு இறுதியில் வரும் என்பதைப் பார்க்கலாம்.
உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் சொல்லுக்கு இறுதியில் வரும். அவற்றில் எகரக் குறில் அளபெடையாக மட்டுமே சொல்லுக்கு இறுதியில் வரும். ஏனைய அ, ஆ, இ, ஈ, உ, ஊ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள ஆகிய உயிர் எழுத்துகள் சொல்லுக்கு இறுதியில் வரும்.
எடுத்துக்காட்டு
பலசிலதிற
நிலாபலாசுறா
பனிஎலி நரி
தேனீதீ
ஏழுகதவுமிளகு
பூதூ (வெண்மை)
சேஎ

எங்கேயானே
மழைதாமரைமலை
நொ (துன்பம்)

நிலவோமலரோ
ஒளகௌ (கொள்) வௌ (திருடு)
குற்றியலுகரமும் சொல்லுக்கு இறுதியில் வரும்.
ஆறுகாடு
பட்டுகாற்று
பந்துபாம்பு
செய்துமூழ்கு
பழகுவிளையாடு
அஃதுஎஃகு

5.3.2 சொல்லுக்கு இறுதியில் வரும் மெய் எழுத்துகள்
வல்லினம், மெல்லினம், இடையினம் என்று மெய் எழுத்துகள் மூன்று வகைப்படும். இவற்றில் வல்லின மெய் எழுத்துகள் சொல்லுக்கு இறுதியில் வருவது இல்லை. மெல்லின மெய் எழுத்துகள் ஐந்தும், இடையின மெய் எழுத்துகள் ஆறும் சொல்லுக்கு இறுதியில் வரும்.
மெல்லின மெய் எழுத்துகளில் ஞ், ண், ந், ம், ன் ஆகிய ஐந்தும் சொல்லுக்கு இறுதியில் வரும்.
உரிஞ்(தேய்க்கும்)
ண் பெண்
வெரிந் (முதுகு) பொருந் (போரிடும், பொருந்தும்)
மரம் வெள்ளம்
மன்னன் பொன்
உரிஞ் என்னும் ஒரு சொல்லில் மட்டும் ‘ஞ்‘ என்னும் மெய்எழுத்து, இறுதியில் வரும்.
வெரிந், பொருந் என்னும் இரு சொற்களில் மட்டும் ‘ந்‘ என்னும் மெய்எழுத்து இறுதியில் வரும்.
இடையின மெய் எழுத்துகள் ஆறும் (ய், ர், ல், வ், ழ், ள்) சொல்லுக்கு இறுதியில் வரும்.
நாய் தாய்
வேர் தண்ணீர்
கால் நடத்தல்
தெவ் (பகை)
கீழ் ழ்
முள் வாள்
அவ், இவ், உவ், தெவ் என்னும் நான்கு சொற்களில் மட்டும் ‘வ்’ என்னும் மெய் எழுத்து இறுதியில் வரும்
ஆவி, ஞ, ண, ந, ம, ன, ய, ர, ல, வ, ழ, ள மெய்
சாயும் உகரம் நால் ஆறும் ஈறே.

(நன்னூல் - 107)
(பொருள் : உயிர் எழுத்துகள் பன்னிரண்டும், ஞ, ண, ந, ம, ன,ய, ர, ல, வ, ழ, ள ஆகிய பதினொரு மெய் எழுத்துகளும் குற்றியலுகரமும் ஆக இருபத்து நான்கும் சொல்லுக்கு இறுதியில் வரும். )
 மொழி இறுதி, முதல் எழுத்துகள்
புணர்ச்சியில் வரும் இரண்டு சொற்களில், முதலாவது சொல்லாகிய நிலைமொழியின் ஈற்றில் உயிர் அல்லது மெய் எழுத்து இருக்கும். இரண்டாவது சொல்லாகிய வருமொழியின் முதலிலும் உயிர் அல்லது மெய் எழுத்து இருக்கும். எனவே நிலைமொழியின் இறுதியிலும், வருமொழியின் முதலிலும் வரும் எழுத்துகளைப் பற்றித் தெரிந்து கொள்வது இன்றியமையாதது. இதுபற்றி நன்னூலார் எழுத்ததிகாரத்தில் முதற்கண் அமைந்த எழுத்தியலில் கூறியுள்ளார். அதனை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டி மீண்டும் இங்கே கூறப்படுகிறது.
2.1.1 மொழி இறுதி எழுத்துகள்
உயிர்கள் பன்னிரண்டும், மெய்களில் ‘ஞ,ண,ந,ம,ன,ய,ர,ல,வ,ழ,ள’ என்னும் பதினொன்றும், குற்றியலுகரம் ஒன்றும் ஆக மொத்தம் இருபத்து நான்கு எழுத்துகள் மொழிக்கு இறுதியில் வரும் என்கிறார் நன்னூலார்.
ஆவி, ஞணநமன யரல வழள மெய்,
சாயும் உகரம் நால்ஆறும் ஈறே              (நன்னூல், 107)
(ஆவி=உயிர்; சாயும் உகரம்=குற்றியலுகரம்; நால்ஆறு=இருபத்து நான்கு.)
உயிர் எழுத்துகள் மொழிக்கு இறுதியில் வரும்போது பெரும்பாலும் மெய்யோடு சேர்ந்தே வரும். அஃதாவது உயிர்மெய்யாகவே வரும்.
சான்று :
(ல்+அ=ல)
ணி (ண்+இ=ணி)
எகரம் மட்டும் மெய்யோடு சேர்ந்து ஈறாகாது. உயிரளபெடையில் மட்டும் ஈறாகும். சான்று சேஎ (சேஎ-எருது). உயிர் எழுத்துகளில் நெட்டெழுத்துகள் ஏழு. இவற்றில் ஔகாரம் நீங்கலான ஏனை ஆறும் தனித்து வந்து ஈறாகும்.
சான்று :
(பசு), ஈ, (மாமிசம்), (அம்பு), (தலைவன்), (மதகுப் பலகை)
உயிர் எழுத்துகளில் குற்றெழுத்துகள் ஐந்து, இவற்றில் ‘அ, இ, உ’ என்பன சுட்டு எழுத்துகள்; ‘எ’ என்பது வினா எழுத்து. இவை நான்கும் நிலைமொழியாக வரும்போது அம்மொழியின் ஈற்று எழுத்தாகக் கருதப்படும்.
சான்று :
அ+பொருள் = அப்பொருள்
இ+பொருள் = இப்பொருள்
எ+பொருள் = எப்பொருள்
குற்றெழுத்துகளில் மற்றோர் எழுத்து ‘ஒ’ என்பதாகும். இது தனித்து வந்து ஈறாவதில்லை. ‘ந்’ என்ற மெய் எழுத்தோடு சேர்ந்து ‘நொ’ என்ற ஒரு சொல்லில் மட்டும் ஈறாகும். (நொ-துன்பப்படு.)
மெய் எழுத்துகள் பதினெட்டு. இவற்றில் வல்லின எழுத்துகளாகிய ‘க், ச், ட், த், ப், ற்’ என்னும் ஆறும், மெல்லின எழுத்துகளில் ‘ங் ’ என்னும் ஒன்றும் ஆகிய ஏழும் மொழிக்கு இறுதியில் வாரா. மெல்லின எழுத்துகளில் ஞ், ண், ந், ம், ன்’ என்னும் ஐந்தும், இடையின எழுத்துக்களாகிய ‘ய், ர், ல், வ், ழ், ள்’ என்னும் ஆறும் ஆகிய பதினொன்று மட்டுமே மொழிக்கு இறுதியில் வரும். இவற்றுள் ‘ஞ், ந், வ்’ ஆகிய மூன்றும் நன்னூலார் காலத்தில் குறிப்பிட்ட ஒரு சில சொற்களில் மட்டுமே மொழிக்கு இறுதியில் வந்தன. ‘ஞ்’ என்பது உரிஞ் (தேய்த்தல்) என்னும் ஒரு சொல்லில் மட்டும் இறுதியில் வந்தது; ‘ந்’ என்பது பொருந் (ஒத்திருத்தல்), வெரிந் (முதுகு) என்னும் இருசொற்களில் மட்டும் இறுதியில் வந்தது; ‘வ்’ என்பது அவ், இவ், உவ், தெவ் (பகை) என்னும் நான்கு சொற்களில் மட்டுமே இறுதியில் வந்தது. இச்சொற்கள் இக்காலத் தமிழில் இல்லை.
குற்றியலுகரம் மொழிக்கு இறுதியில் வல்லின எழுத்துகள் ஆறின்மேல் ஏறி வரும். சான்று: பாக்கு, பஞ்சு, பட்டு, பந்து, அம்பு, கயிறு.
எனவே மொழிக்கு இறுதியில் வரும் என மேலே கூறப்பட்ட இருபத்து நான்கு எழுத்துகளே (உயிர் 12 + மெய் 11 + குற்றியலுகரம் 1 = 24) புணர்ச்சியில் நிலைமொழியின் இறுதியில் வரும் என்பதை அறியலாம்.
2.1.2 மொழி முதல் எழுத்துகள்
பன்னிரண்டு உயிர்களும், ‘க, ச, த, ந, ப, ம, வ, ய, ஞ, ங’ என்னும் பத்து மெய்களும் மொழிக்கு முதலில் வரும் என்கிறார் நன்னூலார்.
பன்னீர் உயிரும் கசதந பமவய
ஞங ஈர் ஐந்து உயிர் மெய்யும் மொழிமுதல்
- (நன்னூல்,102)
இவற்றுள் உயிர்கள் தனித்து மொழிக்கு முதலில் வரும். ஆனால் மெய்கள் தனித்து மொழிக்கு முதலில் வாரா. உயிரோடு சேர்ந்து உயிர்மெய்யாகவே மொழிக்கு முதலில் வரும். உயிர்மெய்க்கு ‘மெய் முன்னும் உயிர் பின்னும்’ வரும்.
சான்று :
க - க்+அ = க (கடல்)
கா - க்+ஆ = கா (காடு)
இங்கே காட்டப்பட்ட கடல், காடு ஆகிய சொற்களில் க் என்ற மெய் முதலில் தனித்து வாராமல், அ,ஆ என்னும் உயிர்களோடு சேர்ந்து உயிர் மெய்யாக வந்தாலும், அச்சொற்களுக்கு முதல் எழுத்து ‘க்’ என்ற மெய்யே ஆகும்.
மெய் எழுத்துகளில் ‘ங்’ என்பது, ‘ஙனம்’ என்ற ஒரு சொல்லில் மட்டுமே முதலாக வரும். ஙனம் என்ற சொல்லும் தனித்து வாராது. ‘அ, இ, உ’ என்னும் சுட்டு எழுத்துகளையும், ‘எ’ என்னும் வினா எழுத்தையும் அடுத்தே வரும்.
சான்று :
அங்ஙனம், இங்ஙனம், உங்ஙனம், எங்ஙனம்
மேலே கூறப்பட்ட இருபத்திரண்டு எழுத்துகளே (உயிர் 12 + மெய் 10  = 22) புணர்ச்சியில் வருமொழியின் முதலில் வரும் என்பதை அறியலாம்.

தமிழ் மொழி சொல்லுக்கு முதலில் வரும் எழுத்துக்கள்...

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். தமிழ் மொழியில் ஒரு சொல்லுக்கு துவக்கத்தில் வரும் எழுத்துக்களைப் பற்றிக் காண்போம்.
மொழி முதல் எழுத்துகள்
ஒரு சொல்லுக்கு முதலில் வரும் எழுத்துகள் பற்றி இந்தப் பாடத்தில் காணலாம். சொல்லுக்கு முதலில் உயிர் எழுத்துகளோ மெய் எழுத்துகளோ வரும். சொல் என்பதும், மொழி என்பதும், பதம் என்பதும் ஒரே பொருள் தரும் சொற்கள் ஆகும். முதலில் சொல்லுக்கு முதலில் வரும் உயிர் எழுத்துகளைப் பற்றிப் பார்ப்போம்.
5.2.1 சொல்லுக்கு முதலில் வரும் உயிர் எழுத்துகள்
உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் சொல்லின் முதலில் வரும்.
எடுத்துக்காட்டு:
ம்மால்லி
டுறு
டைரண்டு
டுரம்
டைடல்
ர்க்கம்
றும்புலி
ணிடு
ந்துப்பசி
ன்றுட்டகம்
டுடம்
ஒளவையார்ஒளவியம் (பொறாமை)
5.2.2 சொல்லுக்கு முதலில் வரும் மெய் எழுத்துகள்
இந்தப் பாடத்தின் முதல் பகுதியில் உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொற்கள் இயல்பாக மெய் எழுத்தில் தொடங்குகின்றன என்பது விளக்கப்பட்டது. இப்போது சொல்லின் முதலில் வரும் மெய் எழுத்துகள் பற்றிக் காணலாம். மெய் எழுத்துகள் உயிர் எழுத்துகளுடன் சேர்ந்தே சொல்லின் முதலில் வரும் என்று கூறப்பட்டது. மெய்எழுத்துகள் எந்தெந்த உயிர்எழுத்துகளுடன் சேர்ந்து சொல்லின் முதலில் வரும் என்றும் பின்வரும் பகுதியில் விளக்கப்படும்.
ஒரு மெய் எழுத்துடன் பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் சேர்ந்து உருவாகும் உயிர்மெய் எழுத்துகளை வருக்க எழுத்துகள் என்று கூறுவர். எடுத்துக்காட்டாக, க் என்ற மெய் எழுத்துடன் பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் சேர்ந்து உருவான க, கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ, கௌ என்னும் பன்னிரண்டு உயிர்மெய் எழுத்துகளையும் ககர வருக்கம் என்று கூறுவர்.
• க் என்னும் மெய்எழுத்து
ககர மெய் எழுத்து, பன்னிரண்டு உயிர் எழுத்துகளுடன் சேர்ந்தும் சொல்லுக்கு முதலில் வரும்.
ல் ரும்பு
கால்காகம்
கிளி கிழமை
கீரி கீரை
குயில் குரங்கு
கூடுகூத்து
கெட்டகெடுதி (அழிவு)
கேள்விகேணி (கிணறு)
கைகைத்தடி
கொடி கொம்பு
கோடுகோட்டை
கௌதாரி
• ங் என்னும் மெய் எழுத்து
ஙகரம். அ, இ ஆகிய சுட்டு எழுத்துகளுக்குப் பின்னும், யா, எ, ஆகிய வினா எழுத்துகளுக்குப் பின்னும் சொல்லுக்கு முதலில் வரும்.
அங்ஙனம் (அப்படி)
இங்ஙனம் (இப்படி)
எங்ஙனம் (எப்படி)
யாங்ஙனம் (எப்படி)
சுட்டு, யா, எகர வினா வழி, அவ்வை
ஒட்டி ஙவ்வும் முதல் ஆகும்மே   (106)
என்னும் நன்னூல் நூற்பா, ஙகர எழுத்து மொழிக்கு முதலில் வருவதை விளக்குகிறது.
• ச் என்னும் மெய்எழுத்து
சகரம் பன்னிரண்டு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து மொழிக்கு முதலில் வரும். ஆனால் பழங்காலத்தில் அ, ஐ, ஒள என்னும் ழூன்று உயிர் எழுத்துகளுடனும் மொழிக்கு முதலில் வருவதில்லை. அ என்னும் எழுத்துடன் சேர்ந்து சக்கரம், சங்கு, சங்கம் முதலான சொற்கள் பழங்காலம் முதலே பயன்படுத்தப் படுகின்றன. ஐ, ஒள ஆகிய உயிர் எழுத்துகளுடன் சகரம் சேர்ந்துவரும் சொற்கள் தமிழில் இல்லை. சைகை, சௌக்கியம் முதலான பிறமொழிச் சொற்களே பயன்படுத்தப்படுகின்றன.
க்கரம் ந்தனம்
சாலைசாறு
சிரிப்புசிலந்தி
சீற்றம் சீப்பு
சுட்டுசுண்ணாம்பு
சூடு சூடாமணி
செறிவு செம்பு
சேறு சேரன்
சைகை சைவம்
சொல் சொட்டு
சோறுசோழன்
• ஞ் என்னும் எழுத்து
ஞகரம் அ, ஆ, எ, ஒ ஆகிய நான்கு உயிர் எழுத்துகளுடன் சேர்ந்து சொல்லுக்கு முதலில் வரும்.
மலி (நாய்)லவல் (மின்மினிப் பூச்சி) =ஞ்+அ
ஞாலம் (உலகம்) ஞாயிறு =ஞ்+ஆ
ஞெகிழி (தீப்பொறி) ஞெலிகோல் (தீக்கடையும் கோல்) =ஞ்+எ
ஞொள்குதல் (இளைத்தல்)   =ஞ்+ஒ
அ, ஆ, எ, ஒவ்வொடு ஆகும் ஞம் முதல்
(நன்னூல்.105)
(பொருள் : ஞகர மெய் எழுத்து அ, ஆ, எ, ஒ, ஆகிய நான்கு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து சொல்லுக்கு முதலில் வரும். )
• த் என்னும் மெய்எழுத்து
தகர மெய் எழுத்து, பன்னிரண்டு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து சொல்லுக்கு முதலில் வரும்.
ரை ம்பி
தாமரைதாய்
திசைதிணை
தீர்ப்பு தீமை
துடிப்புதுன்பம்
தூண்தூக்கம்
தென்னைமரம் தென்றல்
தேன் தேங்காய்
தைமாதம் தையல்
தொழில் தொட்டி
தோட்டம்தோகை
தௌவை (அக்காள்)
• ந் என்னும் மெய்எழுத்து
நகர மெய் எழுத்து, பன்னிரண்டு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து சொல்லுக்கு முதலில் வரும்.
ன்றி கை
நாடு நாள்
நிறம் நிழல்
நீர் நீளம்
நுங்கு நுனி
நூல் நூறு
நெல்நெஞ்சு
நேற்று நேர்மை
நையாண்டி(கேலி) நைதல்
நொடி நொறுங்குதல்
நோக்கம் நோட்டம்
நௌவி (மான்)
• ப் என்னும் மெய்எழுத்து
பகரமெய் எழுத்து, பன்னிரண்டு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து சொல்லுக்கு முதலில் வரும்.
பல்பழம்
பால் பாட்டு
பிடி பிரிவு
பீலி (தோகை) பீடு (பெருமை)
புகழ் புல்
பூங்கா பூட்டு
பெட்டிபெண்
பேச்சுபேழை (பெட்டி)
பைபையன்
பொன் பொங்கல்
போட்டி போர்
பௌத்தர் (புத்த சமயத்தவர்)
• ம் என்னும் மெய் எழுத்து
மகர மெய் எழுத்து, பன்னிரண்டு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து சொல்லுக்கு முதலில் வரும்.
ண் க்கள்
மான்மாடு
மின்னல் மிதியடி
மீன்மீண்டும்
முரசுமுடி
மூங்கில்மூன்று
மெய் மெழுகு
மேடுமேளம்
மைமையம்
மொழிமொட்டு
மோதிரம் மோசடி
மௌனம்மௌவல்(முல்லை மலர்)
• ய் என்னும் மெய்எழுத்து
யகர மெய் எழுத்து அ, ஆ, உ, ஊ, ஓ, ஓள ஆகிய ஆறு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து சொல்லுக்கு முதலில் வரும். யகர மெய் எழுத்து, பழங்காலத்தில் ஆ (ய்+ஆ=யா) என்னும் எழுத்துடன் மட்டுமே பயன்படுத்தப்பட்டது.
வனர் வை (நெல்வகை)
யானையாழ்
யுகம் (கால அளவு)
யூகி (அறிவாளி)
யோகம் (இணைந்து நிற்றல்)
யௌவனம் (இளமை)
அ, ஆ, உ, ஊ, ஓ, ஒள யம் முதல்
(நன்னூல். 104)
(பொருள்: அ, ஆ, ஊ, ஓ, ஒள ஆகிய உயிர் எழுத்துகளுடன் சேர்ந்து யகர மெய் சொல்லுக்கு முதலில் வரும். )
• வ் என்னும் மெய் எழுத்து
வகர மெய் எழுத்து அ, ஆ, இ, ஈ, எ, ஏ, ஐ, ஒள ஆகிய எட்டு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து சொல்லுக்கு முதலில் வரும்.
ணக்கம் ரிசை
வால்வாய்
வில்விண்
வீடுவீண்
வெற்றிவெண்மை
வேல்வேங்கை
வைகை வையகம் (உலகம்)
வௌவால்
உ, ஊ, ஒ, ஓ அலவொடு வம் முதல்
(நன்னூல் - 103)
(பொருள்: வகர மெய் எழுத்து உ, ஊ, ஒ, ஓ ஆகிய நான்கு தவிர மற்ற (அ, ஆ, இ, ஈ, எ, ஏ, ஐ, ஒள) எட்டு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து சொல்லுக்கு முதலில் வரும்.)
5.2.3 சொல்லுக்கு முதலில் வராத மெய் எழுத்துகள்
க, த, ந, ப, ம, ச, ஞ, ய, வ, ங என்னும் பத்து மெய் எழுத்துகளும் மொழிக்கு முதலில் வரும் என்பதை அறிந்தோம். இவை தவிர உள்ள ட, ண, ர, ல, ழ, ள, ற, ன என்னும் எட்டு மெய் எழுத்துகளும் மொழிக்கு முதலில் வருவதில்லை. ஆனால் இந்த எழுத்துகளைக் குறிக்கும் போது இவை மொழிக்கு முதலில் வரும்.
‘ட‘ என்னும் எழுத்து, ‘ண‘ என்னும் எழுத்து என்று எழுத்தைக் குறிப்பிடும் போது இவையும் முதலில் வருகின்றன.
தமிழ்மொழி பேசும் மக்கள் பிறமொழி பேசுகிறவர்களுடன் கலந்து பழகி வாழ்கின்றனர். அவ்வாறு அவர்களுடன் பழகும்போது பிறமொழிச் சொற்களையும் பயன்படுத்துகிறார்கள். அப்படிப் பேச்சுவாக்கில் தமிழ் மொழியில் நுழைந்த பிறமொழிச் சொற்கள் பலவும் தமிழ்மொழியில் பயன்பாட்டில் உள்ளன. அவற்றையும் தமிழ் மக்கள் பயன்படுத்துகிறார்கள். அப்படிப்பட்ட பிறமொழிச் சொற்களில் ட, ண, ர, ல, ற என்னும் ஐந்து மெய்எழுத்துகளும் முதலில் வருகின்றன.
ராமன்
லலிதா
முதலான பிறமொழிப் பெயர்களைத் தமிழில் பயன்படுத்துகிறோம். இவ்வாறு பிறமொழிப் பெயர்களைத் தமிழ்மொழியில் பயன்படுத்தும் போது அவற்றைத் தமிழ்மொழியின் இயல்புக்கு ஏற்பவே காலங்காலமாகப் பயன்படுத்தி வருகிறோம்.
ரகர வருக்க எழுத்துகளும் லகர வருக்க எழுத்துகளும் தமிழ்மொழியில் சொல்லுக்கு முதலில் வருவதில்லை என்பதை அறிந்து அவற்றுக்கு முன் ‘இ’ என்னும் எழுத்தைச் சேர்த்து அப்பெயர்களை எழுதுகிறோம்
ராணி ராணி
வி ரவி
ராமன்ராமன்
லிதாலலிதா
லாபம் லாபம்
லாடம்லாடம்
மேலே ‘இ’ என்னும் எழுத்தைச் சேர்த்தது போல் ‘அ’என்னும் எழுத்தைச் சேர்த்துப் பயன்படுத்துவதும் உண்டு.
ரங்கன்          அரங்கன்
இ, அ என்னும் எழுத்துகளைச் சேர்த்துப் பயன்படுத்துவதுபோல் ‘உ’ என்னும் எழுத்தைச் சேர்த்தும் பிறமொழிப் பெயர்களைப் பயன்படுத்துவது உண்டு.
ரோம் ரோம்
ரோமம் ரோமம்
ரொட்டிரொட்டி
இவ்வாறு பிறமொழியிலிருந்து பெற்றுப் பயன்படுத்தும் சொற்கள் அனைத்தும் பெயர்ச் சொற்கள் என்பதை நாம் புரிந்துகொள்ளுதல் வேண்டும். அந்தப் பிறமொழிப் பெயர்களையும் நம் தமிழ் மொழியின் தன்மைக்கு ஏற்பவே அமைத்துப் பயன்படுத்துகிறோம். பிற மொழிப் பெயர்களைத் தேவை கருதிப் பயன்படுத்துவதைப் போல் பிறமொழி வினைச் சொற்களையும் பிறசொற்களையும் பயன்படுத்தக் கூடாது.
• ஒலிக்குறிப்புச் சொற்கள்
சில ஒலிக்குறிப்புகளை நாம் நமது அன்றாடப் பேச்சில் பயன்படுத்துகிறோம்.
கோழி கொக். . . கொக் என்று கொக்கரிக்கும்
காக்கை கா. . . கா என்று கரையும்
நாய் லொள் . . . லொள் என்று குரைக்கும்
இவற்றில் இடம்பெற்றுள்ள கொக். . . கொக். . ., கா. . .கா. . ., லொள். . . லொள். . .  என்பவை ஒலிக்குறிப்புச் சொற்கள். இவை போன்று வேறு பல ஒலிக்குறிப்புகளையும் பயன்படுத்துகிறோம். இத்தகைய ஒலிக்குறிப்புச் சொற்களில் மொழிக்கு முதலில் வராத எழுத்துகளும் இடம்பெறுவது உண்டு.
மணி டாண். . . .டாண் என்று ஒலித்தது.
பட்டாசு டமார். . . டமார் என்று வெடித்தது.
இவை போன்ற ஒலிக்குறிப்புச் சொற்களைத் தமிழ்மொழியில் இரட்டைக் கிளவி என்று சொல்கிறோம்.
எழுத்து வரிசை எண்ணிக்கை எடுத்துக்காட்டு
உயிர் வரிசை 12 அடை, ஆடை, இலை, ஈயம், உரல், ஊர்தி, எலி, ஏணி, ஐவனம், ஒளி, ஓக்கம், ஔவியம்
க வரிசை 12 கலை, காலை, கிளி, கீரி, குடி, கூடு, கெண்டை, கேயல், கைதை, கொண்டல், கோடை, கௌவை
ச வரிசை 9 அ, ஐ, ஔ நீங்கலாக சாலை, சிலை, சீற்றம், சுரும்பு, சூழ்க, செய்க, சேண், சொல், சோறு
ஞ வரிசை 3 ஆ, எ, ஒ மூன்றில் மட்டும் ஞாலம், ஞெகிழி , ஞொள்கிற்று 
த வரிசை 12 தத்தை, தாடி, திற்றி, தீமை, துணி, தூணி, தெற்றி, தேவர், தையல், தொண்டை, தோடு, தௌவை
ந வரிசை 12 நண்டு, நாரை, நிலம், நீர், நுங்கு, நூல், நெய், நேயம், நைகை , நெடி, நோக்கம், நௌவி 
ப வரிசை 12 படை, பாடி, பிடி, பீர்க்கு, புகழ், பூண்டு, பெண், பேய், பைதல், பொன், போர், பௌவம் 
ம வரிசை 12 மடல், மாடு, மிடல் , மீன், முள், மூடி, மெய், மேனி, மையல், மொழி, மோதகம் , மௌவல் 
ய வரிசை 1 (யா மட்டும்) யான், யாண்டு, யாறு
வ வரிசை 8 உ, ஊ, ஒ, ஓ நீங்கலாக வலை, வானம், விலை, வீடு, வெள்ளி, வேம்பு, வையம், வௌவுதல்
குற்றியலுகரம் 1 நுந்தை
- ஆக மொத்தம் 94 -  

Saturday, October 3, 2015

உலகத் தமிழ் வலைப்பதிவர் திருவிழா-2015

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். இணையதள வாசகர்களே,பரிசு ரெடி!  வாங்க ரெடியா?
      பதிவிட்ட தினமணி நாளிதழுக்கு நன்றிங்க..

வலைப்பதிவர் திருவிழா: விமர்சனப் போட்டியில் பங்கேற்போருக்கு பரிசு

First Published : 04 October 2015 05:35 AM IST
                வலைப்பதிவர் திருவிழாவின் ஒரு பகுதியாக வாசகர்களுக்கான இலக்கிய விமர்சனப் போட்டியில் பங்கேற்போருக்கு பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து வலைப்பதிவர் திருவிழாவின் ஒருங்கிணைப்பாளர்  கவிஞர் நா.முத்துநிலவன் வெளியிட்ட அறிக்கை:
 வருகின்ற அக். 11 அன்று நடைபெற உள்ள வலைப்பதிவர் திருவிழாவுக்கான மின்-இலக்கியப் போட்டிகள் h‌t‌t‌p://​b‌l‌o‌g‌g‌e‌r‌s‌m‌e‌e‌t2015.b‌l‌o‌g‌s‌p‌o‌t.c‌o‌m​ எனும் இணைய தளத்தில் பெறப்பட்டுள்ளன. தற்போது,பெறப்பட்டுள்ள படைப்புகள் குறித்த விமர்சனப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. விமர்சனப் போட்டியில் பங்கேற்க விரும்புவோர், h‌t‌t‌p://​b‌l‌o‌g‌g‌e‌r‌s‌m‌e‌e‌t2015.b‌l‌o‌g‌s‌p‌o‌t.c‌o‌m எனும் இணைய தளத்துக்கு வந்த படைப்புகள் குறித்த விமர்சனங்களை b‌l‌o‌g‌g‌e‌r‌s‌m‌e‌e‌t2015@‌g‌m​a‌i‌l.c‌o‌m என்ற மின்னஞ்சல் முகவரியில் தங்கள் கருத்தைப் பதிவு செய்ய வேண்டும்.
நடுவர் குழு தேர்வு செய்யும் விமர்சகருக்கு முதல் பரிசாக ரூ. 5,000-மும் 2-ஆம் பரிசாக ரூ. 3,000 மற்றும் 3-ஆம் பரிசாக ரூ. 2,000 வழங்கப்படும். விமர்சனம் எழுத வேண்டியதில்லை. மதிப்பிட்டு முடிவுகளைச் சொன்னால் போதும்.
ஒன்றுக்கும் மேற்பட்டோர் எழுத்தாளர்களை தேர்வு செய்து மதிப்பிட்டு இருப்பின், பரிசுத் தொகை பகிர்ந்தளிக்கப்படும்.  மேலும் விவரங்களுக்கு 94431 93293 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 என அன்புடன்,
C.பரமேஸ்வரன்,
http://konguthendral.blogspot.com
சத்தியமங்கலம்,
ஈரோடு மாவட்டம் -638402
ஃபேஸ்புக் முகவரி parameswaran driver
 

புதுக்கோட்டையில் தமிழ்சொற்பெருக்கம்-2015

                             இணையத் தமிழ் வளர்க்கும் 
                         http://bloggersmeet2015.blogspot.com
           புதுக்கோட்டை வலைப்பதிவர் சந்திப்பு திருவிழா-2015
மரியாதைக்குரியவர்களே,
             வணக்கம்.வலைப்பதிவர்களுக்காக மின் தமிழ் இலக்கியப்போட்டிகள் நடத்தியும்,கூடுதலாக இணையத்தின் வாசகர்களுக்கும் முடிவு அறிவிக்கும் போட்டியை அறிவித்து போட்டி அறிவித்த வலைப்பக்கத்தில் கருத்துரை இட்ட சான்றோர்கள்  ஏற்கனவே சொற்பெருக்கம் மிகுந்த தமிழில் சொல்வளம் மிக்க தமிழில்,இன்னும் ,''மண்ணஞ்சல்,விண்ணஞ்சல்' என புதுவகையான தமிழ்ச்சொற்களை பகிர்ந்திருப்பது பாராட்டுக்குரியது.
இன்னும் வளப்போம் தமிழை!,
தரணியெங்கும் பரப்புவோம் தமிழை!!
தமிழார்வலர்களை ஊக்கப்படுத்துவோம்.....
என அன்பன்,
C.பரமேஸ்வரன், 
http://konguthendral.blogspot.com
சத்தியமங்கலம்,
ஈரோடு மாவட்டம்-638402

வலைப்பக்கம் இருக்க வேண்டிய அவசியமில்லை


செய்ய வேண்டியது என்ன?http://bloggersmeet2015.blogspot.com/ எனும் நமது இணைய தளத்திலிருக்கும் →"போட்டிக்கு வந்த படைப்புகளை"← படித்துவிட்டு, “இந்தப் போட்டியில் இவர்கள்தான் பரிசு பெறுவார்கள்" என ஐந்து போட்டிகளுக்கும், போட்டிக்கு மூவர் வீதம் 15 பேரைத் தேர்வு செய்ய வேண்டும். முதல் பரிசு இவர், இரண்டாம் பரிசு இவர், மூன்றாம் பரிசு இவர்தான் என்று ஐந்து போட்டிகளுக்கும் கருத்துத் தெரிவித்தால் போதும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : bloggersmeet2015@gmail.com

உங்கள் கருத்து, ஏற்கெனவே இலக்கிய அனுபவம் மிக்க நடுவர் குழு தேர்வு செய்து தந்திருக்கும் முடிவுகளோடு ஒத்துப் போகுமானால் உங்களுக்குப் பரிசு உண்டு! விமர்சனம் எழுத வேண்டியதில்லை. மதிப்பிட்டு முடிவுகளைச் சொன்னால் போதும்! (எல்லாப் படைப்புகளையும் பற்றி முழுமையாக விமர்சனம் எழுதும் போட்டியை விழாவுக்குப்பின் விதிமுறை அறிவிக்கவும் வாய்ப்பு உண்டு. எனவே நல்ல படைப்புகளைப் படித்து வைத்துக் கொள்ளலாம் பின்னால் உதவும்.)

நமது தேர்தல்களின் போது, பத்திரிகைகள் நடத்தும் கருத்துக் கணிப்புப் போலவே வைத்துக்கொள்ளலாம். சரியான முடிவுகளுடன் ஒப்பிட்டு அதே முடிவை எடுத்து கருத்துச் சொன்னவர்க்கே முதல்பரிசு ரூ.5,000, அடுத்தடுத்து நெருக்கமான முடிவுகளைச் சொன்னவர் முறையே இரண்டாம் பரிசாக ரூ.3,000, மூன்றாம் பரிசாக ரூ.2000 என மொத்தப் பரிசுத் தொகை ரூ.10,000 விழாவில் வழங்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்டோர் சரியான முடிவுகளை எழுதியிருந்தால், பரிசுத் தொகை பகிர்ந்து வழங்கப்படும்.
---------------------------------------
இந்தச் செய்தியை வெளியிட்டிருக்கும்
தினமணி நாளிதழுக்கு நன்றி (04-10-2015 திருச்சிப்பதிப்பு)
----------------------------------------------


போட்டிக்கான விதிமுறைகள் :

(01) யார் வேண்டுமானாலும் இந்த “விமரிசனக் கருத்துப் போட்டி“யில் கலந்துகொள்ளலாம். மின்னஞ்சல் (E.Mail), மண்ணஞ்சல் (Postal Address) இரண்டு முகவரிகள் மட்டும் தந்தால் போதும். அதை வெளியிட மாட்டோம். உங்கள் முடிவுகளையும் வெளியிட மாட்டோம். கலந்துகொள்பவர் பெயர்ப் பட்டியல் மட்டும் இதே தளத்தில் தனிப் பெட்டியில் வரிசைப்படுத்தி வெளியிடப்படும். முடிவு அறிவிக்கப்படும் போது கலந்து கொள்வோர் விருப்பப்படி இரண்டில் ஒரு முகவரி மட்டும் வெளியிடப்படும். அதனை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.

(02) ஒருவர் ஒரு முடிவை மட்டுமே அனுப்பலாம். (ஐந்து போட்டிகளிலும் மூனறு பரிசுக்குரியவர் என்று முடிவுசெய்யப்பட்ட (1) போட்டி வகை, (2) வரிசை எண், (3) பெயர் (4) படைப்புத் தலைப்புகளை இதே வரிசையில் தெரிவித்து பதினைந்து பரிசுக்கும் (5x3=15) தமது முடிவை மின்னஞ்சல் செய்தால் போதுமானது. இதற்கான விளக்கம் விசாரணை எதுவும் தேவையில்லை.

(03) ஒருமுறை அனுப்பிய முடிவை மாற்ற இயலாது.

(04) வரும் 9ஆம் தேதி இரவு இந்திய நேரம் 11.59வரை அனுப்பலாம்.

(05) மறுநாள் (10-10-2015) காலையே போட்டிகளின் நடுவர் முடிவுகள் அறிவிக்கப்படும். அதனைத் தொடர்ந்து இந்தப் போட்டியின் முடிவுகளும் அறிவிக்கப்படும். செய்தித்தாளிலும் பார்த்துக் கொள்ளலாம்.

(06) இரண்டு முடிவுகளுக்குமான ரொக்கப் பரிசுகள் நமது விழாவில் வழங்கப்படும்.

(07) விழாவுக்கு வர இயலாதவர்களுக்கு, பரிசுக் கேடயங்களை (15+3) அஞ்சலில் அனுப்ப இயலாது. விழாவுக்கு வரும் யாரிடம் வழங்கலாம் எனும் விவரத்தை முன்னரே தெரிவிக்க வேண்டும்.

(08) வெளிநாட்டில் வாழ்வோர் இந்திய நாட்டில் உள்ள தம்உறவினரின் அஞ்சல் முகவரியைத் தருதல் வேண்டும். மின்னஞ்சல் முகவரி மற்றும் மண்ணஞ்சல் முகவரி இரண்டும் இல்லாத அனாமதேயப் பங்கேற்பை ஏற்பதற்கில்லை.

(09) மற்ற பொது நடைமுறைகளில் போட்டி அமைப்பாளர் மற்றும் விழாக்குழுவின் முடிவே இறுதியானது.

(10) போட்டியாளர் தவறான முகவரி தந்திருப்பதாகத் தெரியவந்தால், முடிவு திரும்பப் பெறப்படும்.