Tuesday, December 27, 2011

சாலைப் பாதுகாப்பு கோஷங்கள்-2012 / 01

                    '' ROAD SAFETY SLOGANS - 
         சாலை பாதுகாப்பு கோஷங்கள்''

அன்பு நண்பர்களே,வணக்கம்.
                PARAMESDRIVER- வலைப்பதிவிற்கு வருகை தந்துள்ள தங்களை வருக!வருக!! என வரவேற்கிறேன். 
                     மனித சமூகத்திற்கு உண்ண உணவு,உடுக்க உடை,இருக்க இருப்பிடம்.இவைகளைத்தேடிக்கொள்ள போக்குவரத்து என- போக்குவரத்து என்பது தற்காலத்தில் தவிர்க்க முடியாத அத்தியாவசியமானதாகிவிட்டது.  
             நாகரீகம் வளர,வளர அறிவியல் கண்டுபிடிப்புகளால்,தொழில்நுட்ப வளர்ச்சியினால் பலவேறு கம்பெனிகள்,பல்வேறு வாகனங்களை,பல்வேறு வாகனங்களை,பல்வேறு வடிவங்களில்,பல்வேறு வேகங்களில்,பல்வேறு அளவுகளில்,தயாரித்து வெளியிட,அந்த வாகனங்களை இளைஞர் முதல் பெரியவர் வரை ஆண்,பெண் பாகுபாடு இன்றி அனைவரும் ஆனால்!                         
           அந்தக்காலத்தில் போடப்பட்ட, கட்டமைப்பு வசதிகுறைந்த, குறுகலான, அதே ரோட்டில் அனைத்து வாகனங்களையும் இயக்குவதால் போக்குவரத்து மிகுந்து ,நெரிசல் மிகுதியால் தடைகள் ஏற்பட்டு அதனால்,மிகுந்த கால தாமதமும்,கால தாமதத்தால் ஏற்படும் பதற்றம்,படபடப்பு,ஆத்திரம்,மன அழுத்தம் ஏற்படுகிறது. 
        இதன் விளைவாக அதிவேகம்,கவனக்குறைவு,அலட்சியம்,ஆத்திரம்,அறியாமை,அதன் விளைவாக ஏற்படும்  விபத்துக்களால்  விலை மதிப்புமிக்க மனித உயிரிழப்பும்,பொருள் சேதமும்,கால விரயமும் ஏற்படுகிறது.
        விபத்துக்களால் ஏற்படும் இழப்பு நமது இழப்பு,நமதுஇழப்பு,சமூகத்தின் இழப்பு,சமூகத்தின் இழப்பு இந்த நாட்டின் இழப்பு ஆகும்.''விபத்து ஏற்படும் வரை சாலைப்பாதுகாப்பின் அவசியத்தை உணருவதில்லை! விபத்து ஏற்பட்ட பிறகு உணருவதற்கு நாம் உயிரோடு இருப்பதில்லை!!''
           இது போன்ற விபத்துக்களைத்தவிர்த்து சமூகத்தைப்பாதுகாக்க சாலை பாதுகாப்பு அவசியமானதாகிவிட்டது.உலக அளவில் அதிகரித்து வரும் விபத்துக்கள்,அதனால் ஏற்படும் மனித உயிர்இழப்புகள் என மனித சமூகமே அழியும் நிலை ஏற்படுமோ என அச்சமடைந்த  ''உலக சுகாதார அமைப்பு''(WHO) சாலை விபத்துக்களை தவிர்த்து மனித உயிர்களைக்காக்கும் பொருட்டு,வருடந்தோறும் உலகம் முழுவதும் சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வினை ஏற்படுத்த ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி முதல் ஏழாம் தேதி வரை சாலை பாதுகாப்பு வாரமாக அறிவித்து அதன் தொடர்ச்சியாக இந்த வருடம் 23-வது சாலை பாதுகாப்பு வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
            இந்த (2012)வருடத்திற்கான ''சாலை பாதுகாப்புக் கோஷம்'',
                               
           ''Accidents bring tears - Safety brings cheer '' 
 ''விபத்தினால் வருவது துன்பம் - பாதுகாப்பினால் வருவது இன்பம்'' 
                                                

                                        -நன்றி;-
                 வட்டார போக்குவரத்து அலுவலகம்-
                               கோபி செட்டிபாளையம்-
                               ஈரோடு மாவட்டம்.
               தேதி;-   27-12-2011மாலை 05.00 மணி.
                 
          கோபி கலை & அறிவியல் கல்லூரி (தன்னாட்சி)
                   இளஞ்செஞ்சிலுவைச் சங்கம்-(Y.R.C)
                  சமுதாய சேவைக் கூட்டமைப்பு- (S.S.L)
                 பெற்றோர் ஆசிரியர் சங்கம்- (P.T.A)  மற்றும் 
                கோபி வட்டார போக்குவரத்து அலுவலகம்
                            கோபி செட்டிபாளையம் 
                               இணைந்து நடத்தும்
      
                 23-வது சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப்பேரணி
    (1) மதிப்போம்,மதிப்போம்-சாலைவிதிகளை மதிப்போம்,
    (2)திரும்புவோம்,திரும்புவோம் - சைகை காட்டித் திரும்புவோம்,
    (3)பின்பற்றுவோம்,பின்பற்றுவோம் -
                  சாலை விதிகளைப் பின்பற்றுவோம்,
   (4) பின்பற்றுவோம்,பின்பற்றுவோம் -
          போக்குவரத்து சின்னங்களைப் பின்பற்றுவோம்,
   (5)வழிகொடுப்போம்,வழிகொடுப்போம் -
                   அவசர ஊர்திகளுக்கு வழிகொடுப்போம்,
  (6)வழிகொடுப்போம்,வழிகொடுப்போம் -
                   ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு வழிகொடுப்போம்,

  (7)   வழிகொடுப்போம்,வழிகொடுப்போம் - 
                   தீயணைப்பு வாகனங்களுக்கு வழிகொடுப்போம்,
  (8)வழிகொடுப்போம்,வழிகொடுப்போம் - 
                   எஸ்கார்ட் வாகனங்களுக்கு வழிகொடுப்போம்,

 (9)தெரிந்து கொள்வோம்,தெரிந்துகொள்வோம் -
           போக்குவரத்து சட்டங்களைத் தெரிந்து கொள்வோம்,
 (10)தெரிந்து கொள்வோம்,தெரிந்துகொள்வோம் - 
           போக்குவரத்து சின்னங்களைத் தெரிந்து கொள்வோம்,
 (11)தெரிந்து கொள்வோம்,தெரிந்துகொள்வோம் - 
           போக்குவரத்து விதிகளைத் தெரிந்து கொள்வோம்,

 (12)  தெரிந்து கொள்வோம்,தெரிந்துகொள்வோம் - 
           போக்குவரத்து சைகைகளைத் தெரிந்து கொள்வோம்,
  (13) தெரிந்து கொள்வோம்,தெரிந்துகொள்வோம் - 
           சாலையின் தன்மைகளைத் தெரிந்து கொள்வோம்,
  (14) தெரிந்து கொள்வோம்,தெரிந்துகொள்வோம் - 
           சாலையின் வகைகளைத் தெரிந்து கொள்வோம்,
  (15) தெரிந்து கொள்வோம்,தெரிந்துகொள்வோம் - 
           விளக்குச்சின்னங்களைத் தெரிந்து கொள்வோம்,
  (16) முந்திச் செல்வோம்,முந்திச்செல்வோம் -
                   வலதுபுறமே முந்திச்செல்வோம்,
  (17)உரிமம் எடுக்க எட்டுப் போடு -
                உயிரைக்காக்க ஹெல்மெட் போடு,
  (18) உயிர்க்கவசம்,உயிர்க்கவசம்-தலைக்கவசம் உயிர்கவசம்,
  (19) தர்மம் தலை காக்கும் - தலைக்கவசம் உயிர் காக்கும்,
  (20) ரோட்டின் மேலே,ரோட்டின் மேலே -
     உங்கள் கவனம் ரோட்டின் மேலே,
  (21)பள்ளிக்குழந்தைகள் பாதையிலே,பார்த்துச் செல்லுங்கள் போகையிலே,
(22) பாதசாரிகளே,பாதசாரிகளே-பார்த்துச் செல்லுங்கள் பாதையிலே,
  (23) சைகை கொடுப்போம்,சைகை கொடுப்போம்-
             திரும்பும் முன் சைகை கொடுப்போம்,
   (24)பார்த்துச்செல்வோம்,பார்த்துச்செல்வோம்-
           சாலையைக் கடக்கும்போது பார்த்துச்செல்வோம்,
   (25) வாகனம் ஓட்டுவோம்,வாகனம் ஓட்டுவோம்-
                     அனுசரித்து வாகனம் ஓட்டுவோம்,
  (26) வாகனம் ஓட்டுவோம்,வாகனம் ஓட்டுவோம்-
                     பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவோம்,
  (27) முன்னுரிமை,முன்னுரிமை -
            பாதசாரிகளுக்கே முன்னுரிமை,
 (28) ஏறுவோம்,ஏறுவோம் - பேருந்து நின்றபிறகு ஏறுவோம்,
  (29) இறங்குவோம்,இறங்குவோம் - பேருந்து நின்றபிறகு இறங்குவோம்,
   (30) பொறுமை வேண்டும்,பொறுமை வேண்டும் -
             கூட்டநெரிசலில் பொறுமை வேண்டும்,
  

    (1) வேண்டாங்க,வேண்டாங்க - படிக்கட்டுப் பயணம் வேண்டாங்க,
   (2) வேண்டாங்க,வேண்டாங்க - அதிக பாரம் வேண்டாங்க,
  (3) வேண்டாங்க,வேண்டாங்க - அவசரப்பட வேண்டாங்க,
   (4) வேண்டாங்க,வேண்டாங்க - கவனக்குறைவு வேண்டாங்க,
  (5) வேண்டாங்க,வேண்டாங்க - அதிக வேகம் வேண்டாங்க,
  (6) வேண்டாங்க,வேண்டாங்க - சாலை ஆக்கிரமிப்பு வேண்டாங்க,
  (7) வேண்டாங்க,வேண்டாங்க - மனக்கலக்கம் வேண்டாங்க,
  (8) வேண்டாங்க,வேண்டாங்க - பொறுமை இழக்க வேண்டாங்க,
  (9) வேண்டாங்க,வேண்டாங்க - இனக்கவர்ச்சி வேண்டாங்க,
  (10)வேண்டாங்க,வேண்டாங்க - போட்டி போட வேண்டாங்க,
  (11)வேண்டாங்க,வேண்டாங்க- திடீர் குறுக்கீடு வேண்டாங்க,
  (12) வேண்டாங்க,வேண்டாங்க - மது,போதை வேண்டாங்க,
  (13) வேண்டாங்க,வேண்டாங்க - வளைவுகளில் முந்த வேண்டாங்க,
  (14)வேண்டாங்க,வேண்டாங்க - சட்டங்களை மீற வேண்டாங்க,
  (15)வேண்டாங்க,வேண்டாங்க- சாலைவிதிகளை மீறுவது வேண்டாங்க,
  (16)போகாதீங்க,போகாதீங்க - நடுரோட்டில் போகாதீங்க,
  (17)மீறாதீங்க,மீறாதீங்க - வேக எல்லையை மீறாதீங்க,
  (18)தாண்டாதீங்க,தாண்டாதீங்க -எல்லைக்கோட்டைத் தாண்டாதீங்க,
  (19)தடுக்காதீங்க,தடுக்காதீங்க -போக்குவரத்தைத் தடுக்காதீங்க,
  (20)தடுக்காதீங்க,தடுக்காதீங்க- ஆம்புலன்ஸ் வாகனத்தைத் தடுக்காதீங்க,
  (21)தடுக்காதீங்க,தடுக்காதீங்க- எஸ்கார்ட் வாகனத்தைத் தடுக்காதீங்க,
 (22) தடுக்காதீங்க,தடுக்காதீங்க- தீயணைப்பு  வாகனத்தைத் தடுக்காதீங்க,
  (23)தடுக்காதீங்க,தடுக்காதீங்க- அவசர வாகனத்தைத் தடுக்காதீங்க,
  (24) முந்தாதீங்க,முந்தாதீங்க-வளைவுகளில் முந்தாதீங்க,
  (25)முந்தாதீங்க,முந்தாதீங்க-பாலங்களில்  முந்தாதீங்க,
 (26) முந்தாதீங்க,முந்தாதீங்க-இடதுபுறமாக  முந்தாதீங்க,
 (27) முந்தாதீங்க,முந்தாதீங்க- குறுகிய சாலைகளில் முந்தாதீங்க,
 (28)   முந்தாதீங்க,முந்தாதீங்க- சந்தேகப்பட்டால் முந்தாதீங்க,
 (29)  முந்தாதீங்க,முந்தாதீங்க- அனுமதி இல்லாமல் முந்தாதீங்க,
(30) பேசாதீங்க,பேசாதீங்க - வாகன ஓட்டும்போது பேசாதீங்க,
  (31)பேசாதீங்க,பேசாதீங்க - ஓட்டுனரிடம் பேசாதீங்க,
(32) ஏற்றாதீங்க,ஏற்றாதீங்க - அதிக பாரம் ஏற்றாதீங்க,
  (33) ஏற்றாதீங்க,ஏற்றாதீங்க - அகல பாரம் ஏற்றாதீங்க,
  (34)ஏறாதீங்க,ஏறாதீங்க - சரக்கு வாகனங்களில் ஏறாதீங்க,
  (35)ஏறாதீங்க,ஏறாதீங்க - ஓடும் பேருந்தில் ஏறாதீங்க,
  (36)இறங்காதீங்க,இறங்காதீங்க - ஓடும் பேருந்தில் இறங்காதீங்க,
  (37)கவனக்குறைவு,கவனக்குறைவு-கண்டிப்பாக விபத்துங்க,
  (38)கவனச்சிதறல்,கவனச்சிதறல் - கண்டிப்பாக விபத்துங்க,
  (39)குடிபோதையில்,குடிபோதையில் - 
                               வாகனத்தை ஓட்டாதீங்க,
  (40)தூக்கக்கலக்கத்தில்,தூக்கக்கலக்கத்தில்-
                              வாகனத்தை ஓட்டாதீங்க,
  (41)ஓய்வில்லாமல்,ஓய்வில்லாமல் - 
                               வாகனத்தை ஓட்டாதீங்க,
  (42)செல்போன் பேசிக்கொண்டு,பேசிக்கொண்டு - 
                             வாகனத்தை ஓட்டாதீங்க,
  (43) உடல்நலக்குறைவால்,உடல்நலக்குறைவால் - 
                          வாகனத்தை ஓட்டாதீங்க,
  (44) மனக்கலக்கத்தில்,மனக்கலக்கத்தில் - 
                      வாகனத்தை ஓட்டாதீங்க,
  (45) நமது தவறுகளே,தவறுகளே - 
                  விபத்துக்குக் காரணம் என்றுணர்வீர்,
   (46) உரிமம் எடுக்க எட்டுப்போடுங்க, -
                           உயிரைக்காக்க ஹெல்மெட் போடுங்க,
 (47) ஓட்டுனரின் முதல் கடமை-பாதுகாப்பே குறிக்கோளுங்க
  (47) தர்மம் தலை காக்கும் - தலைக்கவசம் உயிரைக்காக்கும்,
  (48) சாலையின் வேகம்- வாழ்வினில் சோகம்,
  (49) மெதுவாக சென்று வாங்க ரோட்டில்-
                    உங்க குடும்பம் காத்திருக்குதுங்க வீட்டில்,
   (50) முந்தாதீங்க வளைவில் - வரவேற்காதீங்க விளைவை,
   (51) வாகனத்தில் செல்போன் பேச்சு - ஒரே நொடியில் உயிர் போச்சு,
  (52)படியில் பயணம்-நொடியில் மரணம்,
          அடுத்த பதிவில் தொடரும்.............
   PARAMESDRIVER // THALAVADY - TAMILNADU SCIENCE FORUM
        




No comments:

Post a Comment