Wednesday, December 31, 2014

LOGO - LIST


மரியாதைக்குரியவர்களே,
             வணக்கம்.பரமேஸ் டிரைவர் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.நமது இயக்கம் சம்பந்தப்பட்ட லோகோ மற்றும் பிற படங்கள் தேவைப்படும்போது தேடல் காரணமாக நேரம் விரயமாகிறது.எனவே இங்கு பதிவிட்டுள்ளேன்.

அரசு போக்குவரத்துக்கழகம் தொழிலாளர்களின் போராட்டம் ஏன்?


மரியாதைக்குரியவர்களே,
                   வணக்கம்..பணத்தை எப்போது வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம்..ஆனால் மக்களிடையே மற்றவர்களிடையே நன்மதிப்பை சம்பாதிக்க ஆயுள்வரை நல்லொழுக்கத்தைப்பேணி காக்க வேண்டும்..
              அரசு போக்குவரத்துத்தொழிலாளர்களின் போராட்டம் செய்யக்காரணம் உங்க பார்வைக்காக..
முயற்சிக்கலாம் வாங்க!.
மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.இனிவருங்காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு சம்பந்தப்பட்ட அனைவரும் பொதுவான இடத்தில் அதாவது மக்கள் மன்றத்தில் விவாதிக்க தயாரா? இங்கு குறிப்பிட்ட '' சம்பந்தப்பட்ட அனைவரும்'' என்பவர்கள்(1)அரசு போக்குவரத்துக்கழகத்தின் அனைத்து அதிகாரிகள்,(2)அரசு போக்குவரத்துக்கழகங்களின் அனைத்துப் பிரிவு அலுவலர்கள் மற்றும் தொழிலாளர்கள்,மற்றும் பணியாளர்கள்,(3)நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்டஅரசுத்துறைகள்,(4)மக்கள் பிரதிநிதிகள்,(5)சமூக நல ஆர்வலர்கள்,(6)பொதுமக்கள்(7)போக்குவரத்து வாகன உற்பத்தியாளர்கள்,மற்றும் விற்பனையாளர்கள் மற்றும் பயன்படுத்துபவர்கள்(8)ஊடகங்கள் மற்றும் செய்தியாளர்கள்,(9)நீதித்துறைகள்,(10) பாதிக்கப்பட்டோர்,(11)அன்றாடம் பயணிப்போர் (12)பயணிகள் சங்கங்கள் (13)மக்கள் மன்றங்கள் (14)அனைத்து மாணவர்கள் அமைப்புகள்(15)நடுநிலை சிந்தனையாளர்கள் என அனைவரையும் குறிப்பிடுகிறேன்.பொதுவான இடம் என்பது மக்கள் கூடும் இடங்களில் பொதுமேடை அமைத்து விவாதிப்பது.அதுவும் நாகரீகமாக நியாயமாக விவாதம் செய்வது.அவரவர் தவறுகளை அவர்களே உணர வைப்பது...இன்னும்.... இன்னும்..... இன்னும்........தங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கூறுக....செயல்படுத்துவோம் வாங்க..விவாதிக்கலாம் வாங்க!....
மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.அத்தியாவசிய சேவையான பேருந்துப் போக்குவரத்து நிர்வாகம் மக்களுக்கு உண்மையிலேயே சிறப்பான சேவை செய்கிறதா??? சேவைக்குறைபாட்டிற்கு காரணம் யார்? அரசாங்கமா?அரசு போக்குவரத்துக்கழகமா? போக்குவரத்து தொழிலாளர்களா? பயணிகளா? உங்க எண்ணத்தை மற்றும் அனுபவத்தை பகிருங்க... முதல் கருத்தாக எனது அனுபவமான கருத்து உண்மையிலேயே தொழிலாளர்கள் என்றால் ஏற்க இயலாது..காரணம் அனுபவமிக்க தொழிலாளர்கள் எங்கோ ஒரு மூலையில் யாரும் ஏறாத ஓட்டைப் பேருந்தில் பணி புரிய நிர்ப்பந்தம் செய்யப்பட்டு பணியாற்றுவதால்.முறையான சீனியாரிட்டி முறையில் பணி ஒதுக்கீடு செய்யாமல் ...சொகுசுப்பேருந்து,நீண்டதூரப்பேருந்து இரவுநேர பேருந்து,போன்ற பேருந்துகளில் அனுபவமே இல்லாத,போதிய பயிற்சி இல்லாத நடத்துநர்கள் மற்றும் ஓட்டுநர்கள் அரசியல் செல்வாக்கு மற்றும் பண பலத்தை வைத்து அவ்வாறான பேருந்துகளில்பணியாற்றுவதால்தான் அத்தனை முறைகேடுகளும் நடைபெறுகின்றன..தற்போதைய ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு அவர்களின் பணியின்போது கடமையும்,பொறுப்பும் பற்றியே தெரியாத நிலை..பயணிகளை அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்களாக எண்ணிக்கொள்ளாத நிலை..அதனால்தான் பயணிகளைப்பற்றி சிறிதும் அக்கறை இல்லாமல் செயல்படும் அவலநிலை..இறுதியில் தொழிலாளர்கள் மீது வீண்பழி....இனியாவது பதில் கிடைக்குமா????கண்காணிப்புக் கேமரா பொருத்தப்படுமா??
மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.மக்கள் சேவைக்காக இயக்கப்படும் பேருந்துகளில் நஷ்டத்தைக் கணக்குக் காட்டி டீசலை மிச்சம் செய்...வருமானத்தைப்பெருக்கு..என்று கூடுதலான தொல்லைகளை மாதந்தோறும் கூடுதலாக்கிக்கொண்டே வரும் நிர்வாகத்தின் செயல்பாடு சரியா? ஒரு பேருந்தின் சட்டப்படியான கொள்ளளவு 55 நபர் என்றால் ஏற்றுவதோ 150க்கும் அதிகமான பயணிகள்??? அப்படியானால் இலவசமாக பயணிக்கும் மாணவர்களை கணக்கெடுப்பது எப்படி?..அளவுக்கதிகமாக ஏற்றிக்கொண்டு அபாயமாக இயக்கி வரும் நிலையில் அதே பேருந்தில் இன்னும் ஏற்று என்று கூறும் நிர்வாகம் ஒரு பேருந்தில் எத்தனை பயணிகளை ஏற்றுவது என்று எண்ணிக்கையில் கூறவேண்டும் அல்லவா?அல்லது மக்களே நீங்களாவது கூறுங்க..எத்தனை பயணிகளை ஒரேதடவையில் ஏற்றுவது? என்று கூறுங்க...டீசல் சிக்கனப்படுத்து என்றால் ஒரு லிட்டருக்கு எத்தனை கிலோமீட்டர் ஓட்டலாம் என்று ஓட்டுநர் பயிற்சியாளர்களை வைத்து ஓட்டி அதன்படி அளவு கொடுக்கலாம் அல்லவா?அதையும் செய்வதில்லை..வாகன உற்பத்தியாளரே அதாவது அசோக் லேலண்ட் கம்பெனி பொறியாளருக்கே சித்தோடு பயிற்சியின்போது என் சந்தேகமான கேள்வியான ஒரு பேருந்து ஒரு லிட்டருக்கு எத்தனை கிலோமீட்டர் ஓடும் என்று சொல்லத் தெரியவில்லை?? என்ன கொடுமை இது...தொழிலாளர்களின் ஆயுள்காப்பீட்டுப்பணத்தை,அஞ்சலக சிறுசேமிப்பு மாதாந்திரப்பணத்தை,விடுப்பு சரண்டர் பணத்தை,பிரவிடன்ட் பண்ட் பணத்தை,மாதம் தவறாமல் பிடித்தம் செய்யும் நிர்வாகம் அந்தந்தத்துறைகளுக்கு உரிய முறையில் கட்டாமல் முறைகேடு செய்வது தனியார்துறையில்கூட நடைபெறாத அநீதி அல்லவா? மற்ற அரசுத்துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு,அலுவலர்களுக்கு,பணியாளர்களுக்கு கொடுக்கும் பாதுகாப்பு அரசு போக்குவரத்துக்கழகத்தில் மட்டும் இல்லையே? ஓட்டுநர்,நடத்துநர் மட்டுமல்லங்க,தொழில்நுட்ப பணியாளர்களும் படும் அவஸ்தை வெளியில் சொல்லமுடியாத கொடுமை....

மறக்கமுடியுமா?
உண்மையை சொல்லித்தானே ஆக வேண்டும்!!!.......
மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
போக்குவரத்துத்தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் பற்றி முகநூல் நண்பர் அதிரை தவ்ஹீத் சகோதரி அவர்களின் ஆதங்கம் இதோ...
''அதிரை தவ்ஹீத் சகோதரி - பாவம் ஒருபக்கம் பழிஒருபக்கம்.என்பார்கள்
அதைபோல்தான் உங்களை போன்றோரின்நிலையும்
அரசு என்பது அதிகாரிகள்மட்டும்மல்ல பொதுமக்களும் சேர்த்துதான்
பொதுமக்களுக்கு எவ்வளவு கஸ்டம் யோசித்துபாருங்கள்
உங்களின் நியாயமான கோரிக்கை அரசுக்கு வேறுவழியில் தெரியபடுத்தியிருக்களாம் அல்லது ஒருநாள் விட்டு ஒருநாள் வேளைநிருத்தம் போராட்டம் செய்யலாம்'' என்று
மேற்படி தனது வேதனையை தெரிவித்துள்ள நண்பருக்கு பதில் கொடுக்கவேண்டிய கடமை என் போன்றோருக்கு உள்ளது. அதற்கான பதில்..
கடந்த பதினைந்து மாதங்களாக பல்வேறு தளங்களில் தொழிலாளர்களின் பிரச்சினையையும்,குறைகளையும் தீர்த்து வைக்கச்சொல்லி ஆர்ப்பாட்டம்,பேரணி,என்றெல்லாம் நடத்தியும்,திருச்சிராப்பள்ளியில் எச்சரிக்கைக்கான பேரணி நடத்தியும்,சட்டப்படியான முறையில் வேலைநிறுத்தத்திற்கான அறிவிப்பு நோட்டீஸ் கொடுத்தும் இந்த அரசு மிகவும் அலட்சியம் செய்து விட்டது (2001லேயே வேலை நிறுத்தம் நடந்தவிதம் உணரவில்லைபோலும்)..
தற்போது பேசுவதாக இறங்கி வந்துள்ள அரசாங்கம் முன்னரே செய்து இருந்தால் இந்த அவலம் நடந்திருக்காது அல்லவா?..

இது மட்டும் அல்லாமல் ,தொழிலாளர்களுக்கு கொடுக்கவேண்டிய சம்பளத்தைக்கூட ஒரு மாதம் தள்ளிக்கொடுப்பது..ஆயுள் காப்பீடு ,அஞ்சலக சிறு சேமிப்பு,வீடு கட்ட வாங்கிய வங்கிக்கடன்,பிராவிடன்ட் பண்டு போன்ற தொழிலாளர்களின் சம்பளத்தில் மாதம் தவறாமல் பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை உரிய துறைகளில் செலுத்துவது இல்லை.மாறாக தொழிலாளர்களின் பணத்தை முறைகேடாக நிர்வாகம் செலவழித்து வருகிறது.
இது தனியார் துறையில் கூட நடக்காத கேவலம்.இதனால் பாதிப்பு தொழிலாளிக்குத்தானே!..

தாங்கள் தயவு செய்து ஈரோடு வடக்கு ஆயுள் காப்பீடு அலுவலகத்தைத்தொடர்பு கொண்டு கேளுங்க..மற்றும் ஈரோடு தலைமை அஞ்சலத்தை தொடர்பு கொண்டு கேளுங்க.கோயமுத்தூர் HDFC வங்கியைக் கேளுங்க...
போதாக்குறைக்கு டீசலை செலவழிக்காதே என்றால் எப்படி என்ற வழிமுறைகளை சொல்லிக் கொடுப்பதில்லை..ஓட்டுநர் பயிற்சியாளர்களை வைத்தாவது சம்பந்தப்பட்ட பேருந்தை ஓட்டி டீசல் செலவு நிர்ணயம் செய்து ஓட்டுநர்களுக்கு போதிய விழிப்புணர்வு அறிவிக்கலாம் அல்லவா??
இதைவிட மோசமான அவலநிலை என்னவென்றால் ..அசோக் லேலண்டு கம்பெனியாளரே வருகை தந்து பயிற்சியளித்தபோது எனது கேள்வியான ''ஒருபுதிய பேருந்து அனுமதித்த பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு லிட்டர் டீசல் செலவுக்கு எத்தனை கி.மீ. தூரம் சமதளத்தில்,மலைப்பகுதியில்,நகர்ப்பகுதியில் இயக்கலாம்'' என்று கேட்டபோது தெரியாது? என்று மழுப்பிக்கொண்டு பதில் சொல்லும் படு கேவலமான நிலை..
போதாக்குறைக்கு .சில தரங்கெட்ட அதிகாரிகளின் சுயநலத்திற்காக வேண்டுமென்றே பொய்வழக்குப்போட்டு தொழிலாளர்களை பழிவாங்குவது..இதற்குத்தாங்க கண்காணிப்புக்கேமரா பொருத்துங்க! என்று ஒருமுறை பேட்டியளித்த கலைஞர் டிவியிலும் கூறியுள்ளேன்.தற்போது நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக நான் கருத்துரை ஆற்றச் செல்லும் அனைத்து நிகழ்வுகளிலும்,விழாக்களிலும் சொல்லி வருகிறேன்.நாட்டைக்காக்கும் பணிக்கே பயன்படும் கண்காணிப்புக்கேமரா பேருந்து நடவடிக்கையை கண்காணிக்காதா??? செலவும் ஒரேமுறை செலவு அதுவும் மிகக்குறைவான செலவில் இருபத்தி நான்கு மணி நேரமும் சென்னை தலைமையகத்திலேயே கூட கண்காணிக்கலாம்.நேர்மையான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும்.அநியாயமாக தண்டனை பெற மாட்டார்கள்..ஒரு மாதத்திற்கு வழித்தடப்பரிசோதனை என்ற பெயரில் சொகுசாக உலா வரும் அதிகாரிகளுக்கு? ஆங்காங்கே தொழிலாளர்களிடம் வறட்டுக் கௌரவம் காட்டும் அதிகாரிகளுக்கு
(சம்பளமாக கொடுக்கப்படும் மக்கள் வரிப்பணமான)
மாதாமாதம் ஆகும் இலட்சக்கணக்கானரூபாய் செலவும் மீதமாகும்.அவர்களது சுய தேவைகளை நிவர்த்தி செய்யச்சொல்லி தொழிலாளர்களுக்குத்தொல்லை தரும் கேவலமும் இல்லாமற்போகும்.இது எனது அனுபவம்..தேவைப்பட்டால் தங்களது இன்பாக்ஸ்க்கு அனுப்பி வைக்கிறேன்.அல்லது ஓரிடத்தில் கருத்துக்களம் விவாத மன்றம் அமைத்து அனைத்து தரப்பினரையும் அழைத்து விவாதிக்க ஏற்பாடு செய்தால் நான் தயார்..ஆதாரத்துடன் விவாதிக்க..ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரி வரமாட்டார்..அவர்களையும் வரவழைக்க முடியுமா??
சாப்ட்வேர் கம்பெனிகளில் நடத்தும் 360 டிகிரி அப்ரைசல் முறையை கடைப்பிடிக்க சம்மதம் தெரிவிக்க வேண்டுகிறேன்.அவர்கள் பெறும் சம்பளமும் மக்களின் வரிப்பணம்தாங்க..
முதலில் கீழிருந்து மேல் வரை அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும்.தீய பழக்கங்கள் இல்லாதவர்களை அடையாளப்படுத்த வேண்டும்.அப்போதுதாங்க என் போன்றவர்களின் நல்ல பழக்கங்களான புகைத்தல் இல்லாமை,மது போதை பழக்கம் இல்லாமை,பிறமாது உறவு இல்லாமை போன்றவை தனிமனித ஒழுக்கம் பற்றி அனைவரும் உணர முடியும்..இதற்காக என்போன்றவர்களை பாராட்ட வேண்டாம்.தொல்லை கொடுக்காமல் இருந்தால் சரி..அதாவது அதிகாரிகளுடன் மது அருந்த வரச்சொல்லாமல் இருந்தால் சரி.(இன்னும் பல தீயவைகள் நடந்தேறி வருகின்றன.அவைகள் நாகரீகம் கருதி வெளியிட விரும்பவில்லைங்க).இது.2000இல் தாளவாடியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கிளை மேலாளர் ராமனாதன் அவர்கள் சுய நலனுக்காக என்னிடம் கேவலமாக நடந்துகொண்டது.அதுமட்டுமின்றி அப்போது பணியிலிருந்த செக்யூரிட்டி கார்டு அவர்கள் அந்த மானேஜருக்கு மாமா வேலை பார்த்து காவல் இருந்தது.அதைக் கண்டித்த எனக்கு இட மாறுதல் செய்து சொல்லொண்ணா துன்பங்களைக்கொடுத்தது..மறக்க முடியுமா?? அவசியம் ஒவ்வொரு கிளையிலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த வேண்டும்.அப்போதுதாங்க பணி புரியும் இடம் புனிதம் ஆகும்.பணியாற்றுபவர்களுக்கு பய உணர்வு வரும்..இதோ பகிர்ந்துள்ள போர்டுகளிலுள்ள வாசகங்களைப்படித்துப்பாருங்க...இது தங்களுக்கான மாதிரிதாங்க.தற்போது தாளவாடி கிளையில்பணியாற்றும் கிளை மேலாளர் உட்பட அனைவருமே சிறப்பான முறையில் பணியாற்றுகிறார்கள்..அவர்களுக்கு எனது பதிவால் வருத்தமடைந்தால் அதற்காக அவர்களிடம் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன்.
உண்மையைச்சொல்லித்தானே ஆக வேண்டும்.
மனித நேயம் வேண்டும் முதலில்.மக்களின் துன்பங்களை உணர வேண்டும்..மக்களோடு மக்களாக வாழ்ந்து பார்க்க வேண்டும்.மனச்சாட்சி வேண்டும்.
கீழே  தங்களது பார்வைக்கான ஒரு உதாரணமே! 
        4.12.2011அன்று அனைத்து தொழிற்சங்கங்களின் அறிவிப்பு பலகைகளில் கிளை மேலாளர் பற்றிய விமர்சனம்

Tuesday, December 30, 2014

அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் கடவுளா?மந்திரவாதிகளா?

மரியாதைக்குரியவர்களே,
          வணக்கம்.பரமேஸ் டிரைவர் வலைப்பக்கத்திற்கு அனைவரையும் இனிதே வரவேற்கிறேன்.28.12.2014 ஞாயிறு முதல் தற்போது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களின் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப்போராட்டத்தால் தமிழக மக்கள் அனைவரும் பெரும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கான காரணங்களில் சில தங்களது பார்வைக்காக..
ஓட்டுநர்களுக்கு கொடுக்கப்படும் நெருக்கடி பற்றி பார்ப்போம்.
            (1) பேருந்து வாகன உற்பத்தியாளர்களுக்கே புதிய பேருந்து ஒருலிட்டர் டீசல் செலவழித்தால் எத்தனை கிலோமீட்டர் ஓடும்
என்று கூறத்தெரியாத நிலையில்
(டீசலிலும் மூன்று வகையான தரம் உள்ளன.அவற்றில் எந்த தரமுள்ள டீசல் கழகத்தில் உபயோகம் எனத்தெரியாது)   
          ஓட்டுநர் பயிற்சியாளர்களை வைத்து வழித்தடத்தில் இயக்கி டீசல் செலவு நிர்ணயம் செய்யாத நிலையில் பணியிலிருக்கும் ஓட்டுநர்களே  பழைய பேருந்துகளில்,அதிக பயணிகளை ஏற்றிய நிலையில்,வழித்தடக்குறுக்கீடு,தடைகள்,அதிக நிறுத்தங்கள்,குறைவான பிரேக் என பல்வேறு சிக்கல்களில் பேருந்து பராமரிப்பு குறைந்தநிலையில்,முகப்பு விளக்குகள் வெளிச்சமே இல்லாத இரவு இயக்கத்தில்,வாகன வேகத்தைக் குறைத்துள்ள நிலையில்,இஞ்சின் சக்தியைக் குறைத்துள்ள நிலையில்,தனியார் பேருந்துகளுக்கு இணையாக நிமிட நேர இடைவெளியில் போட்டியிட்டு அதுவும் அனைத்து நிறுத்தங்களிலும் நிறுத்தி எடுத்து இயக்கி பயணநேரத்தை நிர்வகித்து வரும் சிக்கலான நிலையில் ஒரு லிட்டர் டீசலுக்கு ஆறு கிலோமீட்டர் தூரம் இயக்க வேண்டும் என்ற கிளை நிர்வாகம் கொடுக்கும் நெருக்கடி?(இதன் விளக்கம் கடைசியில் பதிவிடுகிறேன்.)
            (2)தற்போது ''புதிய தலைமுறை தொலைக்காட்சி''யில் ஆளும் கட்சி முக்கிய பிரமுகர் ஒருவர் கொடுத்த பேட்டியில் வாகனம் ஓட்ட உரிமம் இருந்தாலே அவர்கள் சிறந்த ஓட்டுநர்கள்தான் அவர்களை வைத்து பேருந்துகளை இயக்குகிறோம் என்று உரிமம் இருந்தாலே சிறந்த ஓட்டுநர் என்று சான்றளித்துள்ள நிலையில்  தனியார் வாகனங்களிலும்,பல மாநிலங்களுக்கும் ஓட்டும் தொழிலைச்செய்து தற்போது அரசுப் பேருந்து ஓட்டும் என்னைப்போல முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பணி (உரிமம் எடுத்துள்ள தேதியின்படி) அனுபவம் பெற்று இருந்தும்,எங்களைப்போன்றவர்களை  அப்போதைய பொதுமேலாளர் அவர்கள் சோதனை ஓட்டம் பார்த்து மூன்று மாதங்கள் பவானிசாகர் பயிற்சிப்பள்ளியில் பயிற்சி கொடுத்து பிறகு வாகனம் ஓட்ட அனுமதியளித்துள்ள நிலையில் தற்போது பணிக்கு வந்துள்ள புதிய அதிகாரிகள் எங்களைப்பார்த்து ஓட்டுநர் பணிக்கே லாயக்கில்லை? எவனய்யா லைசென்ஸ்கொடுத்தது? யாருய்யா வேலைக்கு சேர்த்தது? என்று கேவலமாகத்திட்டும் அவலநிலை!..
              (3)மனநிலை மற்றும் உடல்நிலை சரியில்லை என்றாலும் ஒரு ஷிப்டு பணி புரிந்துவிட்டு விடுப்பு எடு! என்று நிர்ப்பந்தித்து மனித உயிருடன் விளையாடும் ஆபத்தான பணி என்ற உண்மை தெரிந்தும்? மோட்டார் வாகன சட்டத்தையே குழிதோண்டி புதைக்கும் அவலநிலை  அவலநிலை!(உடல்நிலையும்,மனநிலையும் பொறுமை காத்து வேலை செய்யுமோ?)
           (4)அனைத்து போக்குவரத்துக்கழகங்களிலும் தினமும் அனைத்து தொழிலாளர்களுக்கும்  புத்தாக்கப்பயிற்சி அளிக்கப்படுகின்றன. அதே பயிற்சியாளர்களை ஓட்டுநர் பயிற்றுநர்களை வைத்து வழித்தடங்களில் ஒரு பேருந்தை ஓட்டவைத்து ஒரு லிட்டர் டீசலுக்கு இயக்கும் தூரத்தை நிர்ணயம் செய்யாமல் (வாகன உற்பத்தியாளர்களுக்கே ஒரு லிட்டர் செலவுக்கு எத்தனை கிலோமீட்டர் தூரம் செல்லும் என்று தெரியாது அதனால் அவர்களை விடுங்க) பாதையின் தன்மை பயணிகளின் ஏறும் மற்றும் இறங்கும் தன்மை  கொள்ளளவுக்கும் அதிகமாக ஏறும் பயணிகளின் ஆரோக்கியம்,மற்றும் நோயாளிகள்,வயதானவர்கள்,மாற்றுத்திறனாளிகள்,என பயணிகளின் தன்மை பற்றி கவலைப்படாத நிலை,
          (5) வானூர்திக்கு தனிவழி, கப்பலுக்கு தனிவழி, புகைவண்டிக்குக்கூட தனிவழி,ஆனால் சாலைப்போக்குவரத்தில் பேருந்துக்கு மட்டும் பொது வழி?!?...அதாவது பல்வேறு தன்மையுள்ள ,பராமரிப்புள்ள ,ஒரு வாகனம் செல்லும் பாதையில்,பல்வேறு வேகங்களில்,பல்வேறு எடைகளுள்ள,பல்வேறு வடிங்களுள்ள, பல வாகனங்கள் செல்லும் நிலையில் பல்வேறு மனநிலையிலுள்ள பொதுச்சாலை அனைவருக்கும் சொந்தம் என்று தெரிந்தும் சாலைவிதிகளை அலட்சியம் செய்து போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் பெரும் நிறுவன அதிபர்கள்,பெரும்முதலாளிகள்  போன்ற சொந்த வாகன ஓட்டிகள்,அதிகார வர்க்கம்,உள்ளூர்வாசிகள்,அரசியல்வர்க்கம்,அதிகாரிகளின் தாமதமான தவறான போக்கு,பிற வாகன ஓட்டிகளின் தவறான ஓட்டம் மற்றும் வழிவிடாமல் மெதுவாக நடுப்பாதையில் வாகனம் ஓட்டுவது,(அதாவது பேருந்துஓட்டுநர்களை பழி எடுப்பதாக நினைத்து பேருந்தில் பயணிப்பவர்களை பாதிப்படையச்செய்வது) தற்காலிக குறுக்கீடுகள்,தடைகள்,சாலை ஆக்கிரமிப்புகள்,என எத்தனையோ பிரச்சினைகளை எதிர்கொண்டு இயக்கும் பரிதாப நிலையில் ஒரு பேருந்து ஒரு லிட்டருக்கு அது என்ன தரம்?என்றும் தெரியாது..வாகன உற்பத்தியாளருக்கும் தெரியாது...ஓட்டுநர் பயிற்சியாளர்களை வைத்து ஒருமுறை ஓட்டி சோதித்தும் டீசல் செலவு நிர்ணயம் செய்யமுடியாது....கண்காணிப்புக்கேமராவும் பொருத்த முடியாது..கடமையாற்றும் நேர்மையான ஓட்டுநர்களையும் தெரியாது...ஏதோ ஒரு கேஸ் எழுதியாக வேண்டும் என்ற கட்டாயத்தில் மலைப்பகுதியில்,அதுவும் இரவு நேரத்தில் போக்குவரத்தே இல்லாத இடத்தில் பேருந்தை சோதிக்கிறேன் என்ற தோற்றத்தில் பொய்யான வழக்கினைப்போட்டு பழிவாங்கும்  படு கேவலமான நிலை..
      (6) ஒரு பேருந்தின் கொள்ளளவு 55 பயணிகள் என்றாலும் சூழ்நிலை காரணமாக 150 பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்தினுள் காலியாக இடமே  இல்லாதநிலையில் வழித்தடத்தில் பயணிகளையோ,பள்ளி மாணவர்களையோ ஏற்ற இயலாமல் விட்டுவர வேண்டிய சூழ்நிலையில் ஏற்றி வராமைக்கு கொடுக்கப்படும் தண்டனைகள்..இதை எப்படி ஏற்க முடியும்?உண்மைநிலை அறியவேண்டியது நிர்வாகத்தின் கடமையல்லவா?..
           (7)அனுபவமுள்ள மற்றும் ஒழுக்கமான தொழிலாளர்களுக்கு உரிய மரியாதை கொடுக்காதது...
இன்னும் ஏராளமான பிரச்சினைகளை,நெருக்கடிகளை,பல்வேறு தரப்பிலிருந்தும் சந்தித்து.சகித்து.பொறுமையுடன் குடும்பத்தைக்காப்பாற்ற வேண்டும் என்ற கடமையின் காரணமாக மந்திரவாதிகளாகவும்,கடவுள்போலவும் (கடவுளுக்கு உணர்வு உள்ளதா?) உணர்ச்சியற்று பணி புரியும் நிலை..
இதற்கெல்லாம் தற்போதைக்கு ஒரே வழி.. அனைத்து பேருந்துகளிலும் கண்காணிப்புக் கேமராக்களை அதுவும் TWO FACE என்னும் இருமுகமுள்ள கேமராக்களைப்  பொருத்தி பேருந்தின் உள்ளே மற்றும் வெளியே  இருபத்திநான்கு மணி நேரமும் கண்காணித்து  உண்மையான நிலை அறிய வேண்டும்.செலவு ஒரே முறை அதுவும் குறைந்து செலவு..தற்போதுள்ள பரிசோதனை முறையால் ஏகப்பட்ட செலவு  அதுவும் ஒரு பேருந்தை சில நிமிடங்கள் மட்டுமே சோதிக்கும் குறைபாடான சோதனை..(செலவு ஒரு அதிகாரிக்கு மாத சம்பளம் ரூபாய் 60,000.00க்கும் மேல். உடன் வரும் பரிசோதகர்கள் இருவருக்கு மாதம் ரூபாய்30,000.00 வீதம் 60000.00 ரூபாய் சம்பளம்,ஜீப் ஓட்டுநருக்கு மாதம் ரூபாய்20000.00 அதுபோக ஜீப் பராமரிப்புக்கான செலவு மற்றும் எரிபொருள் செலவு நீங்களே கணக்கிட்டுக்கொள்ளுங்க இவ்வாறு ஒரு மாதத்திற்கான செலவால் அனைத்து பேருந்துகளுக்கும் கேமரா பொருத்திவிடலாம்..


 சாதாரண டீக்கடையில் கூட கண்காணிப்புக்கேமரா பொருத்தி பாதுகாப்பினை ஏற்படுத்தியுள்ள இன்றைய நிலையில்...பேருந்துகளுக்கும் பொருத்தி  பயணிகளுக்கும்  முழு நேரப் பாதுகாப்பு, பணியிலிருக்கும் தொழிலாளர்களின் செயல்பாடுகளை நேரடியாக கண்காணிப்பும்  செய்யலாம்...
               இந்த அரசு செய்யுமா???


Monday, December 29, 2014

அரசு போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் சரியா?

மரியாதைக்குரியவர்களே,
                வணக்கம்.அனைவரையும் இனிதே வரவேற்கிறேன்.இன்றைய விரும்பத்தகாத நிகழ்வான அரசு போக்குவரத்துத்தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் சரியா?அதாவது  2014 டிசம்பர் 28 ஆம் தேதி முதல் நடைபெற்றுவரும் அரசு பேருந்துகளின் வேலை நிறுத்தத்திற்கான காரணங்களில் சிலவற்றை  எனது அனுபவம் மற்றும் எண்ணத்திற்கு எட்டிய சில தகவல்களை இங்கு பொதுமக்களாகிய தங்களுக்காக பகிர்கிறேன்.
  தற்போது  புதிய தலைமுறை தொலைக்காட்சி உட்பட பல்வேறு ஊடகங்கள் அரசுப்பேருந்தையே நம்பி தினமும் பயணிக்கும் கிராமப்பகுதியிலுள்ள,மலைப்பகுதியிலுள்ள ஏழை மக்கள்  மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறார்கள் என்ற உண்மையான நிலையை எடுத்துரைக்கும் நிலையை உணர்கிறோம் காரணம் அரசுப்போக்குவரத்துக்கழகங்களில் தொழிலாளர்களாகிய எங்களது குடும்பம் உட்பட உறவினர்கள்,நண்பர்கள் என மற்ற அனைவருமே பேருந்துகளில் பயணிப்பவர்களே!..அனைவரின் சிரமங்களையும் உணர்ந்து   இதற்காக மிகுந்த வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.......இருப்பினும் பெரும்பாலான தொழிலாளர்கள் சொல்லொண்ணாத் துன்பங்களுக்கு ஆளாகிவரும் காரணத்தால் தவிர்க்கமுடியாததாகிவிட்ட இந்த நியாயமான வேலை நிறுத்தத்திற்கு காரணத்தை இங்கு தங்களின் பார்வைக்காக பதிவிடுகிறேன்.


        மேற்கண்ட அறிவிப்பு மூலமாக அனைத்து தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தப்போராட்டத்திற்கான காரணம் என்றாலும் என் போன்ற ஒவ்வொரு தொழிலாளர்களின்  தனிப்பட்ட காரணம் மற்றும் தொழிலாளர்கள் அனுபவித்து வரும் நேர்மையற்ற கஷ்டங்கள், சில தொழிளர்களால் பயணிகள் அனுபவித்து வரும் துன்பங்கள் இவைகளுக்கு உரிய நிவாரணம் வேண்டி உடனடி நடவடிக்கை எடுத்து சீர்படுத்தக்கோரி இந்தபதிவின் வாயிலாக தங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.
 முதலில் பயணிகளுக்கான கோரிக்கை;
   அரசு போக்குவரத்துக்கழகங்களில் நீண்ட தூர,அதுவும் இரவு நேர வழத்தடங்களில் உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் உள்ள ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களே கடமையை மறந்து விட்டு தனியாக பயணிக்கும் இளவயது பெண் பயணி என்று பாராமல் அலட்சியம் செய்யும் கேவலமான நிலையை சீர்படுத்த வேண்டும்.முன்பதிவு செய்த பயணிக்கே உரிய இருக்கையை வழங்க வேண்டும்.நடத்துநர் சொந்தம் ,நண்பர்கள் என்ற காரணத்திற்காக முன்பதிவு செய்த இருக்கையை மாற்றச்சொல்லி துன்புறுத்தி பயணிகளுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையை ஏற்படுத்தக்கூடாது.இரவுநேர மற்றும் நீண்ட தூரப்பயணிக்கும்போது ஏற்படும் இன்னல்களை உடனே புகார் கொடுக்க அனைத்து பேருந்துகளிலும் கிளை மேலாளர்,பொதுமேலாளர்,சம்பந்தப்பட்ட காவல்துறை தொடர்பு எண்களை எழுதி அனைத்து பயணிகள் பார்வைக்குப் படும்வகையில் வைத்து பராமரித்துப் பாதுகாக்க வேண்டும்.அனைவரையும் பெயர்வில்லை அணிந்திருக்க கட்டாயமாக்க வேண்டும்.
முதலில் அனுபவமுள்ள ஓட்டுநர்களை மட்டும் நீண்டதூர வழித்தடப் பேருந்துகளில் பணிபுரிய ஒதுக்கீடு செய்தால் மட்டும் போதாது.நடத்துநர்களையும் அவ்வாறு அனுபவம்,ஒழுக்கம்,அனுசரிப்பு,சகிப்புத்தன்மையுள்ளவர்களை நியமித்து பயணிகளுக்கு பாதுகாப்பு தர வேண்டும்.குறுக்குவழியில் யாருக்கோ ஏதோ ஒரு பணம் மட்டும் மாதந்தோறும் வருமானமாக வந்தால் போதும்?என்ற கேவலநிலையை ஒழித்து பயணிகளுக்கு பாதுகாப்பு கொடுக்கும் கடமையை கடைபிடிக்க வேண்டும்.(கடந்த காலத்தில் சென்னையிலிருந்து  சத்தியமங்கலத்திற்கு அரசுப்பேருந்துவில்  இரவு பயணத்திற்காக முன்பதிவு செய்து பயணித்த  பெண் இளவயது பெண் பயணி ஒருவர் நடத்துநரால் துன்பத்திற்கு ஆளாகி அந்த நிகழ்வின் உண்மை நிலை அறிய முதலமைச்சர் தனிப்பிரிவிற்கே புகார் அனுப்பியும் அந்தப்புகார் சம்பந்தப்பட்ட ஈரோடு மண்டலத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டும் இன்றுவரை பாதிப்புக்குள்ளான பயணிக்கு எவ்வித தகவலும் கொடுக்காமல் பயணியே முழுத்தவறுக்கும்? காரணம் என தவறான முடிவை தயாரித்து முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு அனுப்பியுள்ள கொடுமை?நீதி விசாரணை என்பது இருவர்களையும் அழைத்து விசாரிக்க வேண்டும்.ஆனால் இங்கு குற்றவாளியை மட்டும் அழைத்து பேசி முடிவு எடுத்து முடிக்கப்பட்டுள்ளது.இந்தக்கொடுமையை எங்கே சென்று முறையிடுவது?..ஆதாரம் என்னிடம் உள்ளது.)
அடுத்து தொழிலாளர்களுக்கான கோரிக்கை;
அரசு போக்குவரத்துக்கழக நிர்வாகம் 
(1)தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காக செலுத்தப்படும் ஆயுள் காப்பீடு,அஞ்சலக சிறுசேமிப்பு,வீடு கட்ட வாங்கிய கடன்,போன்ற அத்தியாவசிய காரணங்களுக்காக மாதந்தோறும் தொழிலாளர்கள் செலுத்தும் அதாவது தொழிலாளிகளிடத்தில் பிடித்தம் செய்யும் தொகையினை அந்தந்த துறைகளுக்கே உரியமுறையில் செலுத்தி தொழிலாளர்களுக்கு உரியத் தார்மீக உரிமையை,கடமையைச் செய்ய வேண்டும்.
(2)எரிபொருள் சேமிப்பு அவசியம் தேவையே!ஆனால் வாகன உற்பத்தியாளர்களான அசோக் லைலேண்டு கம்பெனியாளரே பயிற்சியளிக்கும்போது ஒரு லிட்டர் டீசலுக்கு எத்தனை கி.மீ. என்ற நிர்ணயத்தைக் கூற மறுப்பது அல்லது தெரியாது என்று மறுப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.உண்மைநிலை கூற வேண்டும்.அல்லது அரசு போக்குவரத்துக்கழகமே ஓட்டுநர் பயிற்சியாளரை வைத்து சமதளம் மற்றும் மலைப்பகுதி மற்றும் நகர வழித்தடங்களில் இயக்கி டீசல் செலவு நிர்ணயம் செய்ய வேண்டும்.அதிக நெருக்கடி கொடுத்து வாகனத்தை உருட்டுவது மற்றும் நியூட்டரல் செய்து ஓட்டும் அவலநிலையை போக்கி பயணிகளுக்கு பாதுகாப்புத்தர வேண்டும்.
(3) சாலைப்போக்குவரத்தில் பேருந்து இயக்குவது வான்வழித்தடத்தைப்போல,நீர்வழித்தடத்தைப்போல,புகைவண்டி வழித்தடத்தைப்போல தனி வழித்தடம் இல்லை என்பதை உணர்ந்து பேருந்து இயக்கத்தின்போது ஏற்படும் திடீர் குறுக்கீடுகள்,தடைகள்,நெரிசல்கள்,போன்ற நிகழ்வுகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

(4)அரசு போக்குவரத்துக்கழகம் ஒவ்வொரு பேருந்துகளுக்கும் ஏற்றப்படும் பயணிகள் அனுமதி கொள்ளளவு எண்ணிக்கையையும்  கவனத்தில் கொண்டு நிர்வாகம் எத்தனை பயணிகளை அதிகபட்சமாக ஏற்றலாம் என்ற  அளவை நிர்ணயம் செய்ய வேண்டும்.அதை விடுத்து 150பயணிகள் ஏற்றப்பட்ட நிலையில் இடையில் நிறுத்தங்களில் ஏற்ற இயலாத சூழலில் புகார் பெறும்போது நடவடிக்கை எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

(5)தற்போதைய போக்குவரத்துப்பயன்பாட்டில் பேருந்து நிறுத்த,இயக்க,மாணவர்கள்,குழந்தைகள்,நோயாளிகள்,முதியோர்,மாற்றுதிறனாளிகள்,
பெண்கள் போன்ற பயணிகள் ஏற,இறங்க  ஆகும் கால தாமதத்தையும் கணக்கில் கொண்டு இயக்க நேரத்தை நிர்வகிக்க வேண்டும்.
(5)அனைத்து தொழிலாளர்களுக்கும் மாதம் முதல் தேதியே சம்பளம் வழங்க வேண்டும்.
(6)அரசுப்பேருந்துகள் அனைத்தும் பொதுமக்கள் சேவைக்காக இயக்கப்படுகின்றன என்ற போதிலும் வருமானத்தை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு தொழிலாளர்களைத் துன்புறுத்தக் கூடாது.
(7)அரசு போக்குவரத்து அதிகாரிகள் அவர்களது சுயநலத்திற்காக தொழிலாளர்களை பழிவாங்குதல்,பொய்வழக்குப்போடுதல் போன்ற கேவலமான நடவடிக்கையை விட்டுஒழிக்க வேண்டும்.
(8)உள்ளக விசாரணைப்பிரிவு போதிய காரணங்களையும்,சாட்சியங்களையும் வைத்து நடுநிலையாக விசாரிது முடிவு எடுக்க வேண்டும்.உதாரணமாக ஸ்பிரிங் பிளேட்டுகள் நடுப்பகுதி உடைவதற்கு காரணம் என்பதை உணராமல் ஓட்டுநரே என்பதை தவிர்க்க வேண்டும்.தண்டனையை விலக்க வேண்டும்.அந்த ஸ்பிரிங் பிளேட்டுகள் தயாரிப்பாளர்கள் கொடுத்துள்ள ஆயுட்காலத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.அவை தாங்கும் எடை அளவினையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
(9) பணி முடித்த ஓட்டுநர்களுக்கு  டீசல் செலவு பற்றி தொலைபேசி வாயிலாக வீட்டிற்கே தொடர்பு கொண்டு கேவலமாக திட்டுவதை தவிர்க்க வேண்டும்.
(10)அரசியல் காரணங்களுக்காக அனுபவம் வாய்ந்த ,உண்மையாக உழைக்கும் தொழிலாளர்களை! பயணிகள் வரத்தே இல்லாத கடைக்கோடி கிராமங்களில் இயக்கப்படும் பேருந்துகளில் பணி ஒதுக்கீடு செய்துவிட்டு அனுபவமில்லாத,பயிற்சியில்லாத,பணியின் தன்மை தெரியாத,தான் பயணிகளின் வேலையாள் என்பதை மறந்து அதிகாரப்போக்கு செய்யும் அறியாத தன்மையுள்ளவர்களை நீண்டதூர மற்றும் இரவு நேர இயக்கப் பேருந்துகளில் பணி ஒதுக்கீடு செய்து அதன் விளைவுகளால்? பொதுமக்களிடையே அவப்பெயர் ஏற்படும் செயலை தவிர்க்க வேண்டும்.
அரசுப்பேருந்துகளின் இயக்கத்தைக் கண்காணிக்கும் அதிகாரிகள் சோதனைக்காக செலவிடும் மாதந்திரச்செலவு தொகை கணக்கிட்டுப்பார்த்தால் மிக அதிக அளவு.அதே சமயம்  அதற்கேற்ற பயன் முறைக்கேடாகவே உள்ளது.ஒவ்வொரு பேருந்துகளிலும் கண்காணிப்புக்கேமரா பொருத்தி கண்காணித்தால் வாரத்தின் ஏழு நாட்களும் இருபத்திநான்கு மணி நேரமும்  உண்மையான நிலையை அறிய முடியும்.இதனால் பொதுமக்களுக்கும் உரிய பாதுகாப்பு கிடைக்கும்.நேர்மையாக நிர்வாகமும் நடைபெறும்.இதனால் ஒரேமுறை குறைந்த செலவே ஆகும்.குறிப்பாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளாகும் அவலநிலை இல்லாமற் போகும்.தவறு செய்ய நினைப்பவர்களும்  பயணிகளிடம் கனிவாகவும் எச்சரிக்கையாகவும் பணி புரிவார்கள்...
          இவற்றில் தவறான கோரிக்கை என்று நிர்வாகமோ,பொதுமக்களோ,தொழிலாளர்களோ  கருதினால் அதற்காக எவ்வித நடவடிக்கை எடுத்தாலும் அதனை சட்டப்படியாக எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்.
         காரணம் மக்களுக்கு நல்ல சேவை செய்யவேண்டும் என்பதே எனது எண்ணம்...
    இன்னும் பல காரணங்கள் உள்ளன இருப்பினும் தங்களது கவனத்திற்கு இதுவே  போதும் என்று கூறி இத்துடன் நிறைவு செய்கிறேன். நன்றிங்க..
     (இடுகையிட்ட தேதி;30.12.2014 காலை 8.00மணி) (பார்வை 19568)

Thursday, October 16, 2014

விடுதலைப் புலிகள் ஒரு பார்வை...

மரியாதைக்குரியவர்களே,
                வணக்கம். தமிழீழ விடுதலைப்புலிகளின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிய வரலாற்றுச்சிறப்பு மிக்க கட்டுரை இதோ தங்களது பார்வைக்காக....

                                தமிழீழ விடுதலைப் புலிகள் –(16 - 10 -2014) தமிழினம் தலை நிமிர்ந்த தினம் தமிழீழ மக்களின் அடையாளமாகவும், தமிழர்களைத் தனிப் பெரும் சக்தியாக உலகிற்கு அடையாளப்படுத்திய அமைப்பாகவும் விளங்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு.
                               1972-ம் ஆண்டின் மத்தியில் தனது 17வது வயதில், “புதிய தமிழ்ப்புலிகள்” என்ற இயக்கத்தைத் தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தொடங்கினார்.
                                   அதன்பின்னர் தமிழ்த் தேசியத் தலைவர் அவர்கள் “புதிய தமிழ்ப் புலிகள்” என்ற பெயரில் இருந்த இயக்கத்தை ஒரு பெரிய இராணுவமாக உருவாக்க முடிவெடுத்து, “தமிழீழ விடுதலைப்புலிகள்” அமைப்பை (எல்.டி.டி.ஈ) 1976ம் ஆண்டு மே மாதம் 5ம் தேதி தொடங்கினார்.
தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற இயக்கத்தை தனது சிறந்த கட்டுப்பாடான நெறிப்படுத்தலினாலும், தனது அயாரத உழைப்பாலும், தமிழ் மக்களின் ஆதரவாலும் மிகப் பெரிய அமைப்பாக மாற்றினார்.
                           தமிழர்களுக்கென தனியான ஒரு தேசத்தையும், அதற்கான அரச கட்டமைப்பும் திறம்பட வைத்து, உலகின் பார்வையைத் தம்மகத்தே மூன்றாவது ஈழப் போரின்போது திருப்பிய தமிழீழ விடுதலைப்புலிகள் உலக படை வரலாற்றில் பல நிகழ்வுகளிற்கு முன்னூதாரணமாகத் திகழ்ந்தார்கள்.
உலக வல்லரசுகளின் இராணுவப் படிமுறைகளிற்கும் வரையறைகளிற்கும் சவாலாக விளங்கிய பல சிறந்த தாக்குதல்களின் மூலம் உலகின் பார்வையைத் தம்மகத்தே திருப்பிய விடுதலைப்புலிகளின் போராட்ட வரலாற்றில் ஓயாத அலைகள் தாக்குதல்கள் போராட்டத் தந்திரோபாயங்களையெல்லாம் புரட்டிப் போட்ட மரபு வழித் தாக்குதலாக உலக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது.
அத்தோடு எதிரி உச்சவிழிப்பில் இருந்து எதிர்பார்த்துக் காத்திருந்த ஆனையிறவு இராணுவத் தளம் மீதான முப்பரிமாணத் தாக்குதலை தமது திட்டமிடலின்படியே நடத்தி மூன்று மாத காலத்தில் படைகளை அகற்றி உலகில் தமக்கெனத் தனி அங்கீகாரம் பெற்றார்கள் விடுதலைப்புலிகள்.
அத்தோடு பல முறியடிப்புச் சமர்கள் குறிப்பாக யாழ்தேவி முறியடிப்புச் சமர், சூரியக்கிரன முறியடிப்புச் சமர், ஜெயசிக்குறு எதிர்ச்சமர், தீச்சுவாலை முறியடிப்புச் சமர் என பல முறியடிப்புச் சமர்களின் மூலம் தமது தற்காத்தல் போராட்ட முறையை உலகிற்குப் பாடவிதானமாக்கிய விடுதலைப்புலிகளின் ஜெயசிக்குறு எதிர்ச்சமர் 18 மாதங்களாக நீடித்த ஒரு பாரிய சமராக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது.
                         முப்படைகளையும் அதற்கான சிறந்த ஒழுங்கமைக்கப்பட்ட கட்டுமாணத்தோடு உருவாக்கிய தமிழீழ விடுதலைப்புலிகள் அவற்றிற்கான தனிச்சீருடைகள், முகாம்கள் என அவற்றைப் பராமரித்ததோடு அவற்றின் சண்டையிடும் திறன் மூலம் இந்தியப் பிராந்தியத்திற்கே படைபல அச்சமேற்படுத்தும் படையணிகளாக அவற்றை சிறீலங்கா மற்றும் அவற்றின் நேச நாடுகள் நோக்குமளிவிற்குப் பேணிப் பாதுகாத்தனர்.
இராணுவப் படைக் கட்டுமாணத்தின் கீழ் பல சிறப்புப் படையணிகளைக் கொண்டிருந்த விடுதலைப்புலிகள் ஜெயந்தன் படையணி, சிறுத்தைப் படையணி, மகளீர் படையணி, சார்லஸ் அன்ரணிப் படையணி, மோட்டார்ப் படையணி, ஆட்லறிப் படையணி, டாங்கிப் படையணி என இன்னும் பல பிரிவுகளையும் திறம்படச் செயற்படுத்தி வந்தனர்.
                     குறிப்பாக ஈழப் போர் நான்கில் தமிழீழ தேசப் படையணிகள் முழுப் பரிமாணம் பெற்றதற்கான அடையாளமாக உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய வான்புலிகளின் தோற்றமும் அவற்றின் செயற்பாடும் மிக நேர்த்தியான தாக்குதல்கள், உச்ச இலக்குகள், இலாவகமாகத் திரும்பித் தளமடையும் செயற்திறன் என ஒரு வான்படைக்கான அங்கீகாரத்தை அதற்கு வழங்கியிருந்தது.
                           போராட்டத்தின் பெயர் சொல்லவல்ல 70-க்கும் மேற்பட்ட சிறந்த தளபதிகளைக் கொண்டிருந்தார்கள் தமிழீழ விடுலைப்புலிகள். பல வல்லாதிக்க சக்திகளின் ஆதரவு இன்றி சிங்கள இனவாத அரசை எதிர்கொண்டு போராடினார்கள்.
ஆயுதங்களை மௌனிப்பதாக முள்ளிவாய்க்கால் இறுதிச் சமரில் அறிவிக்கும்வரை கொண்ட கொள்கை மீதான பற்றுறுதியுடன் போராடிய தமிழர்களின் போராட்ட சக்தி தோற்றம் பெற்ற நாள் தமிழர்களின் வாழ்வில் ஒரு முக்கியமான நாளாகும்.
                           தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் இயங்கியவை:
                      
            01. இராணுவம் (தரைப் படை -பல்வேறு படை அணிகள்) இம்ரான் பாண்டியன் படையணி, ஜெயந்தன் படையணி, சார்ள்ஸ் அந்தோனி சிறப்புப் படையணி, கிட்டு பீரங்கிப் படையணி, ராதா வான்காப்புப் படையணி, குட்டிஸ்ரீ மோட்டார் படையணி, சிறப்பு உந்துகணை செலுத்திப் படையணி, விக்டர் கவச எதிர்ப்புப் படையணி, சோதியா படையணி, மாலதி படையணி, அன்பரசி படையணி, ஈருடப் படையணி, குறிபார்த்து சுடும் படையணி, சிறுத்தைப் படையணி, எல்லைப்படை, துணைப்படை, பொன்னம்மான் மிதிவெடிப் பிரிவு, ஆயுதக் களஞ்சிய சேர்க்கை, பாதுகாத்தல் பிரிவு.

                02. கடற்புலிகள் நீரடி நீச்சல் பிரிவு கடல் வேவு அணி சார்லஸ் சிறப்புக் கடற்புலிகள் அணி அங்கயற்கண்ணி ஆழ்கடல் நீச்சல் அணி (பெண்கள்) நிரோஜன் ஆழ்கடல் நீச்சல் அணி கடல் சிறுத்தைகள் சிறப்பு அணி
 

03. வான்படை
04. கரும்புலிகள்
05. அரசியற்துறை அரசியல்துறை – பரப்புரைப் பிரிவு.
06. புலனாய்வுத்துறை
07. வேவுப்பிரிவு
08. ஒளிப்பதிவுப் பிரிவு
09. மருத்துவப் பிரிவு லெப். கேர்ணல் திலீபன் சிறப்பு மருத்துவப் பிரிவு
10. கணணிப் பிரிவு
11. மாணவர் அமைப்பு
12. தமிழீழ வைப்பகம்
13. தமிழர் புனர்வாழ்வுக் கழகம்
14. அனைத்துலகச் செயலகம்
15. சுங்கவரித் துறை
16. தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகம்
17. தமிழீழப் படைத்துறைப் பயிற்சிப் பள்ளி
18. அரசறிவியற் கல்லூரி
19. தமிழீழக் காவற்துறை காவல்துறை – குற்றத் தடுப்புப் பிரிவு காவல்துறை – குற்ற புலனாய்வுப் பிரிவு
20. வன வளத்துறை
21. தமிழீழ நிதித்துறை
22. விடுதலைப்புலிகள் கலை, பண்பாட்டுக் கழகம்
23. தமிழீழ சட்டக்கல்லூரி, தமிழீழ நீதித்துறை, நீதிமன்றுகள்
24. தமிழீழக் கல்வி மேம்பாட்டுப் பேரவை
25. காந்தரூபன் அறிவுச்சோலை (ஆதரவற்ற ஆண் குழந்தைகள்)
26. செந்தளிர் இல்லம் (5 வயதுக்குட்பட்ட ஆதரவற்ற குழந்தைகள்)
27. செஞ்சோலைச் சிறார் இல்லம் (ஆதரவற்ற பெண் குழந்தைகள்)
28. வெற்றிமனை (வலுவிழந்தோர்)
29. அன்பு இல்லம் (முதியோர்)
30. பொத்தகசாலை
31. விடுதலைப் புலிகள் செய்தி இதழ்
32. ஈழநாதம் செய்தி இதழ்
33. வெளிச்சம் செய்தி இதழ்
34. ஆவணப்படுத்தல்-பதிப்புத்துறை
35. தமிழீழ தேசியத் தொலைக்காட்சி
36. நிதர்சனம்
37. புலிகளின் குரல் வானொலி
38. மாவீரர் பணிமனை
39. நவம் அறிவுக்கூடம் (பார்வை இழந்த போராளிகளுக்கான)
40. மயூரி இல்லம் (இடுப்பின்கீழ் வலுவிழந்த பெண் போராளிகளுக்கானது)
41. சேரன் வாணிபம்
42. சேரன் சுவையகம்
43. பாண்டியன் உற்பத்திப் பிரிவு
44. பாண்டியன் வாணிபம்
45. பாண்டியன் சுவையூற்று
46. சோழன் தயாரிப்புகள்
47. வழங்கற் பிரிவு
48. சூழல் நல்லாட்சி ஆணையகம்
49. நிர்வாக சேவை
50. ஆயுத ஆராய்ச்சி மற்றும் உருவாக்கல் பிரிவு
51. மின்னணுவியல் சிறப்பு உதவிப் பிரிவு
52. திரைப்பட வெளியீட்டுப்பிரிவு, மொழியாக்கப்பிரிவு
53. பெண்கள் மறுவாழ்வு அபிவிருத்தி மையம்
54. தமிழீழ பொறியியல் தொழில்நுட்ப வளர்ச்சித் துறை
55. தமிழீழ விளையாட்டுத்துறை
56. தமிழீழ காலநிலை அறிவுறுத்தல் வாரியம்.


                     தமிழீழ போராட்டட மரபியல் வரலாறுகள் சிலவற்றை ” தமிழீழ படைத்துறைகள் – தமிழீழ போராட்ட வரலாறுகள்” பக்கத்தில் உள்ளடக்கப்பட்டவையின் இணைப்புக்கள்………….
தமிழீழ போராட்ட வரலாறு….
பிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்
ஆரம்பகால புரட்சித் தோழர்கள்
புதிய தமிழ்ப் புலிகளும் அவர்களின் செயற்பாடுகளும்
புதிய தமிழ்ப் புலிகள்
தமிழீழ விடுதலைப் புலிகள்
சிறீலங்கா இராணுவத்துக்கு எதிரான முதலாவது தாக்குதல்
தமிழீழப் போர் 1
இந்தியத் தலையீடு
திம்புப் பேச்சுவார்த்தை
சாகும்வரையிலான உண்ணாவிரதம்
பெங்களுர் மாநாடு
தமிழீழம் திரும்புதல்
தமிழீழத்தில் இந்தியாவின் நேரடி இராணுவத் தலையீடு
இந்திய – சிறீலங்கா ஒப்பந்தம்
சுதுமலைப் பிரகடனம்
படையணிகள் மற்றும் துறைகள்…..

லெப். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி
தமிழீழக் கடற்புலிகள்
கடற்கரும்புலி கப்டன் ஜெயந்தன் படையணி
கரும்புலிகள்
தமிழீழ வான்படை
கேணல் கிட்டு பீரங்கிப் படையணி
தமிழீழ விடுதலைப் புலிகள் மகளிர் அமைப்பு
2ம் லெப் மாலதி படையணி
விடுதலைப் புலிகளின் மகளிர் படையணிகள்
தமிழீழ காவல்துறை
தமிழீழ தேசிய துணைப்படை
ஈழநாதம் பத்திரிகை
புலிகளின் குரல்
அருச்சுனா ஒளிக்கலைப் பிரிவு
அன்புச்சோலை மூதாளர் பேணலகம்
காந்தரூபன் அறிவுச்சோலை
செஞ்சோலை
தமிழீழ நீதித்துறை
தமிழீழ சட்டக் கல்லூரி
தமிழீழ படைத்துறைப் பள்ளி
விடுதலைப் புலிகள் கலை பண்பாட்டுக் கழகம்
தமிழீழ கல்வி மேம்பாட்டுப் பேரவை
தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம்
தமிழர் புனர்வாழ்வுக் கழகம்

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
தமிழீழ விடுதலைப் புலிகள் – தமிழினம் தலை நிமிர்ந்த தினம் தமிழீழ மக்களின் அடையாளமாகவும், தமிழர்களைத் தனிப் பெரும் சக்தியாக உலகிற்கு அடையாளப்படுத்திய அமைப்பாகவும் விளங்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு.

1972-ம் ஆண்டின் மத்தியில் தனது 17வது வயதில், “புதிய தமிழ்ப்புலிகள்” என்ற இயக்கத்தைத் தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தொடங்கினார்.

அதன்பின்னர் தமிழ்த் தேசியத் தலைவர் அவர்கள் “புதிய தமிழ்ப் புலிகள்” என்ற பெயரில் இருந்த இயக்கத்தை ஒரு பெரிய இராணுவமாக உருவாக்க முடிவெடுத்து, “தமிழீழ விடுதலைப்புலிகள்” அமைப்பை (எல்.டி.டி.ஈ) 1976ம் ஆண்டு மே மாதம் 5ம் தேதி தொடங்கினார்.

தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற இயக்கத்தை தனது சிறந்த கட்டுப்பாடான நெறிப்படுத்தலினாலும், தனது அயாரத உழைப்பாலும், தமிழ் மக்களின் ஆதரவாலும் மிகப் பெரிய அமைப்பாக மாற்றினார்.

தமிழர்களுக்கென தனியான ஒரு தேசத்தையும், அதற்கான அரச கட்டமைப்பும் திறம்பட வைத்து, உலகின் பார்வையைத் தம்மகத்தே மூன்றாவது ஈழப் போரின்போது திருப்பிய தமிழீழ விடுதலைப்புலிகள் உலக படை வரலாற்றில் பல நிகழ்வுகளிற்கு முன்னூதாரணமாகத் திகழ்ந்தார்கள்.

உலக வல்லரசுகளின் இராணுவப் படிமுறைகளிற்கும் வரையறைகளிற்கும் சவாலாக விளங்கிய பல சிறந்த தாக்குதல்களின் மூலம் உலகின் பார்வையைத் தம்மகத்தே திருப்பிய விடுதலைப்புலிகளின் போராட்ட வரலாற்றில் ஓயாத அலைகள் தாக்குதல்கள் போராட்டத் தந்திரோபாயங்களையெல்லாம் புரட்டிப் போட்ட மரபு வழித் தாக்குதலாக உலக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது.

அத்தோடு எதிரி உச்சவிழிப்பில் இருந்து எதிர்பார்த்துக் காத்திருந்த ஆனையிறவு இராணுவத் தளம் மீதான முப்பரிமாணத் தாக்குதலை தமது திட்டமிடலின்படியே நடத்தி மூன்று மாத காலத்தில் படைகளை அகற்றி உலகில் தமக்கெனத் தனி அங்கீகாரம் பெற்றார்கள் விடுதலைப்புலிகள்.

அத்தோடு பல முறியடிப்புச் சமர்கள் குறிப்பாக யாழ்தேவி முறியடிப்புச் சமர், சூரியக்கிரன முறியடிப்புச் சமர், ஜெயசிக்குறு எதிர்ச்சமர், தீச்சுவாலை முறியடிப்புச் சமர் என பல முறியடிப்புச் சமர்களின் மூலம் தமது தற்காத்தல் போராட்ட முறையை உலகிற்குப் பாடவிதானமாக்கிய விடுதலைப்புலிகளின் ஜெயசிக்குறு எதிர்ச்சமர் 18 மாதங்களாக நீடித்த ஒரு பாரிய சமராக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது.

முப்படைகளையும் அதற்கான சிறந்த ஒழுங்கமைக்கப்பட்ட கட்டுமாணத்தோடு உருவாக்கிய தமிழீழ விடுதலைப்புலிகள் அவற்றிற்கான தனிச்சீருடைகள், முகாம்கள் என அவற்றைப் பராமரித்ததோடு அவற்றின் சண்டையிடும் திறன் மூலம் இந்தியப் பிராந்தியத்திற்கே படைபல அச்சமேற்படுத்தும் படையணிகளாக அவற்றை சிறீலங்கா மற்றும் அவற்றின் நேச நாடுகள் நோக்குமளிவிற்குப் பேணிப் பாதுகாத்தனர்.

இராணுவப் படைக் கட்டுமாணத்தின் கீழ் பல சிறப்புப் படையணிகளைக் கொண்டிருந்த விடுதலைப்புலிகள் ஜெயந்தன் படையணி, சிறுத்தைப் படையணி, மகளீர் படையணி, சார்லஸ் அன்ரணிப் படையணி, மோட்டார்ப் படையணி, ஆட்லறிப் படையணி, டாங்கிப் படையணி என இன்னும் பல பிரிவுகளையும் திறம்படச் செயற்படுத்தி வந்தனர்.

குறிப்பாக ஈழப் போர் நான்கில் தமிழீழ தேசப் படையணிகள் முழுப் பரிமாணம் பெற்றதற்கான அடையாளமாக உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய வான்புலிகளின் தோற்றமும் அவற்றின் செயற்பாடும் மிக நேர்த்தியான தாக்குதல்கள், உச்ச இலக்குகள், இலாவகமாகத் திரும்பித் தளமடையும் செயற்திறன் என ஒரு வான்படைக்கான அங்கீகாரத்தை அதற்கு வழங்கியிருந்தது.

போராட்டத்தின் பெயர் சொல்லவல்ல 70-க்கும் மேற்பட்ட சிறந்த தளபதிகளைக் கொண்டிருந்தார்கள் தமிழீழ விடுலைப்புலிகள். பல வல்லாதிக்க சக்திகளின் ஆதரவு இன்றி சிங்கள இனவாத அரசை எதிர்கொண்டு போராடினார்கள்.

ஆயுதங்களை மௌனிப்பதாக முள்ளிவாய்க்கால் இறுதிச் சமரில் அறிவிக்கும்வரை கொண்ட கொள்கை மீதான பற்றுறுதியுடன் போராடிய தமிழர்களின் போராட்ட சக்தி தோற்றம் பெற்ற நாள் தமிழர்களின் வாழ்வில் ஒரு முக்கியமான நாளாகும்.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் இயங்கியவை:

01. இராணுவம் (தரைப் படை -பல்வேறு படை அணிகள்) இம்ரான் பாண்டியன் படையணி, ஜெயந்தன் படையணி, சார்ள்ஸ் அந்தோனி சிறப்புப் படையணி, கிட்டு பீரங்கிப் படையணி, ராதா வான்காப்புப் படையணி, குட்டிஸ்ரீ மோட்டார் படையணி, சிறப்பு உந்துகணை செலுத்திப் படையணி, விக்டர் கவச எதிர்ப்புப் படையணி, சோதியா படையணி, மாலதி படையணி, அன்பரசி படையணி, ஈருடப் படையணி, குறிபார்த்து சுடும் படையணி, சிறுத்தைப் படையணி, எல்லைப்படை, துணைப்படை, பொன்னம்மான் மிதிவெடிப் பிரிவு, ஆயுதக் களஞ்சிய சேர்க்கை, பாதுகாத்தல் பிரிவு.

02. கடற்புலிகள் நீரடி நீச்சல் பிரிவு கடல் வேவு அணி சார்லஸ் சிறப்புக் கடற்புலிகள் அணி அங்கயற்கண்ணி ஆழ்கடல் நீச்சல் அணி (பெண்கள்) நிரோஜன் ஆழ்கடல் நீச்சல் அணி கடல் சிறுத்தைகள் சிறப்பு அணி
03. வான்படை
04. கரும்புலிகள்
05. அரசியற்துறை அரசியல்துறை – பரப்புரைப் பிரிவு.
06. புலனாய்வுத்துறை
07. வேவுப்பிரிவு
08. ஒளிப்பதிவுப் பிரிவு
09. மருத்துவப் பிரிவு லெப். கேர்ணல் திலீபன் சிறப்பு மருத்துவப் பிரிவு
10. கணணிப் பிரிவு
11. மாணவர் அமைப்பு
12. தமிழீழ வைப்பகம்
13. தமிழர் புனர்வாழ்வுக் கழகம்
14. அனைத்துலகச் செயலகம்
15. சுங்கவரித் துறை
16. தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகம்
17. தமிழீழப் படைத்துறைப் பயிற்சிப் பள்ளி
18. அரசறிவியற் கல்லூரி
19. தமிழீழக் காவற்துறை காவல்துறை – குற்றத் தடுப்புப் பிரிவு காவல்துறை – குற்ற புலனாய்வுப் பிரிவு
20. வன வளத்துறை
21. தமிழீழ நிதித்துறை
22. விடுதலைப்புலிகள் கலை, பண்பாட்டுக் கழகம்
23. தமிழீழ சட்டக்கல்லூரி, தமிழீழ நீதித்துறை, நீதிமன்றுகள்
24. தமிழீழக் கல்வி மேம்பாட்டுப் பேரவை
25. காந்தரூபன் அறிவுச்சோலை (ஆதரவற்ற ஆண் குழந்தைகள்)
26. செந்தளிர் இல்லம் (5 வயதுக்குட்பட்ட ஆதரவற்ற குழந்தைகள்)
27. செஞ்சோலைச் சிறார் இல்லம் (ஆதரவற்ற பெண் குழந்தைகள்)
28. வெற்றிமனை (வலுவிழந்தோர்)
29. அன்பு இல்லம் (முதியோர்)
30. பொத்தகசாலை
31. விடுதலைப் புலிகள் செய்தி இதழ்
32. ஈழநாதம் செய்தி இதழ்
33. வெளிச்சம் செய்தி இதழ்
34. ஆவணப்படுத்தல்-பதிப்புத்துறை
35. தமிழீழ தேசியத் தொலைக்காட்சி
36. நிதர்சனம்
37. புலிகளின் குரல் வானொலி
38. மாவீரர் பணிமனை
39. நவம் அறிவுக்கூடம் (பார்வை இழந்த போராளிகளுக்கான)
40. மயூரி இல்லம் (இடுப்பின்கீழ் வலுவிழந்த பெண் போராளிகளுக்கானது)
41. சேரன் வாணிபம்
42. சேரன் சுவையகம்
43. பாண்டியன் உற்பத்திப் பிரிவு
44. பாண்டியன் வாணிபம்
45. பாண்டியன் சுவையூற்று
46. சோழன் தயாரிப்புகள்
47. வழங்கற் பிரிவு
48. சூழல் நல்லாட்சி ஆணையகம்
49. நிர்வாக சேவை
50. ஆயுத ஆராய்ச்சி மற்றும் உருவாக்கல் பிரிவு
51. மின்னணுவியல் சிறப்பு உதவிப் பிரிவு
52. திரைப்பட வெளியீட்டுப்பிரிவு, மொழியாக்கப்பிரிவு
53. பெண்கள் மறுவாழ்வு அபிவிருத்தி மையம்
54. தமிழீழ பொறியியல் தொழில்நுட்ப வளர்ச்சித் துறை
55. தமிழீழ விளையாட்டுத்துறை
56. தமிழீழ காலநிலை அறிவுறுத்தல் வாரியம்.

தமிழீழ போராட்டட மரபியல் வரலாறுகள் சிலவற்றை ” தமிழீழ படைத்துறைகள் – தமிழீழ போராட்ட வரலாறுகள்” பக்கத்தில் உள்ளடக்கப்பட்டவையின் இணைப்புக்கள்………….

தமிழீழ போராட்ட வரலாறு….

பிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்
ஆரம்பகால புரட்சித் தோழர்கள்
புதிய தமிழ்ப் புலிகளும் அவர்களின் செயற்பாடுகளும்
புதிய தமிழ்ப் புலிகள்
தமிழீழ விடுதலைப் புலிகள்
சிறீலங்கா இராணுவத்துக்கு எதிரான முதலாவது தாக்குதல்
தமிழீழப் போர் 1
இந்தியத் தலையீடு
திம்புப் பேச்சுவார்த்தை
சாகும்வரையிலான உண்ணாவிரதம்
பெங்களுர் மாநாடு
தமிழீழம் திரும்புதல்
தமிழீழத்தில் இந்தியாவின் நேரடி இராணுவத் தலையீடு
இந்திய – சிறீலங்கா ஒப்பந்தம்
சுதுமலைப் பிரகடனம்
படையணிகள் மற்றும் துறைகள்…..

லெப். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி
தமிழீழக் கடற்புலிகள்
கடற்கரும்புலி கப்டன் ஜெயந்தன் படையணி
கரும்புலிகள்
தமிழீழ வான்படை
கேணல் கிட்டு பீரங்கிப் படையணி
தமிழீழ விடுதலைப் புலிகள் மகளிர் அமைப்பு
2ம் லெப் மாலதி படையணி
விடுதலைப் புலிகளின் மகளிர் படையணிகள்
தமிழீழ காவல்துறை
தமிழீழ தேசிய துணைப்படை
ஈழநாதம் பத்திரிகை
புலிகளின் குரல்
அருச்சுனா ஒளிக்கலைப் பிரிவு
அன்புச்சோலை மூதாளர் பேணலகம்
காந்தரூபன் அறிவுச்சோலை
செஞ்சோலை
தமிழீழ நீதித்துறை
தமிழீழ சட்டக் கல்லூரி
தமிழீழ படைத்துறைப் பள்ளி
விடுதலைப் புலிகள் கலை பண்பாட்டுக் கழகம்
தமிழீழ கல்வி மேம்பாட்டுப் பேரவை
தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம்
தமிழர் புனர்வாழ்வுக் கழகம்

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

Sunday, October 12, 2014

Monday, August 11, 2014

இணையதள நண்பர்கள் இயக்கம்-சத்தியமங்கலம்.

                              அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
                                           அதற்குப ஆங்கே செயல் - குறள் 333
மரியாதைக்குரியவர்களே,
                  வணக்கம். சந்தன நகரமாம் நம்ம சத்தியமங்கலத்தில்,வருகிற ஆகஸ்டு 15 ஆம் தேதி லோகு டிரைவிங் ஸ்கூல் வளாகத்தில் - இணையதள நண்பர்கள் இயக்கம் என்ற ஒரு புதிய சமூக சேவை அமைப்பு துவக்கம்.அனைவரும் வருக!, ஆலோசனை தருக!!.
 மேலும் விவரங்களுக்கு
 http://www.ilovesathy.blogspot.com 
                    என்ற வலைப்பக்கம் செல்க.....


Sunday, August 10, 2014

பொறுப்பே இல்லை!........அப்படியா?

மரியாதைக்குரியவர்களே,
              வணக்கம். இந்த பதிவு யாருக்கு பொருந்துமோ? இல்லையோ? நான் பணியாற்றும் அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு பொருந்தும்!.

ஒரு நாய் கடைக்கு வந்துச்சு : படித்ததில் பிடித்தது !
ஒரு நாய் கடைக்கு வந்துச்சு கடைக்காரர் விரட்டி விட்டார். திரும்ப திரும்ப அந்த நாய் கடைக்கு வந்துச்சு. என்னடா, பெரிய தொல்லையா போச்சுன்னு வெளிய வந்து பார்த்தால், அந்த நாய் வாயில ஒரு சீட்டும் பணமும் இருந்துச்சு.கடைக்காரர் ஆச்சர்யமாகி அந்த சீட்டை எடுத்து அதில் உள்ள சாமான்களை போட்டு, மீதி பணத்தையும் அதே பையில் நாய் கழுத்தில் மாட்டிவிட்டார்.
நாய் திரும்பி நடக்க ஆரம்பிச்சுது. கடைக்காரர் சுவாரசியமாகி நாய் பின்னாலே நடக்க ஆரம்பித்தார்.அந்த நாய் தெருவை கடந்து மெயின் ரோட்டிற்கு வந்தது. அப்போது ரெட் சிக்னல் அந்த நாய் ரோட்’டை கடக்காமல் நின்றது. பச்சை லைட் விழுந்தவுடன் ரோட்டை கடந்தது.கடைக்காரருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. அது பின்னாலே அதன் வீடு செல்ல முடிவெடுத்தார்.
அந்த நாய் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றது.ஒரு குறிப்பிட்ட பேருந்து வந்தவுடன் நாய் பேருந்தில் ஏறியது.கண்டக்டரும் நாய் வாயில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு டிக்கெட் கொடுத்தார்.
இரண்டு நிறுத்தங்கள் கடந்து நாய் பேருந்தில் இருந்து இறங்கியது.
கடைகாரரும் அதன் பின்னால் இறங்கினார்.நாய் ஒரு தெருவை கடந்து ஒரு வீட்டின் முன் நின்று கதவை தட்டியது.கதவு திறந்து ஒரு ஆள் வந்தார்.

நாயின் கழுத்தில் உள்ள பையை கழட்டி விட்டு நாயை அடித்தார்.
 

             கடைக்காரர் ஓடி சென்று நிறுத்துங்க ?    ஏன் அடிக்கறீங்க??
அது எவ்வளவு பொறுப்பா கடைக்கு போயிட்டு, சிக்னல் மதிச்சு, பஸ்ல டிக்கெட் எடுத்துகிட்டு வருது அதை போய் அடிக்கறீங்களே ? என்று கேட்டார்.

அதுக்கு அந்த ஆள் சொன்னார் வீட்டு சாவிய எடுத்துட்டு போகாம வந்து கதவ தட்டுது பாருங்க.நாய்க்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லன்னு.
 
               Note : நமக்கு மேல உள்ள முதலாளிங்க!, மேனேஜர் எல்லாரும் இப்படி தான்.. நீ எவ்வளவு தான் பொறுப்பா இருந்தாலும் உனக்கு நல்ல? பெயரே கிடைக்காது...தேதி;10-08-2014

Friday, August 8, 2014

சென்னை வலைப்பதிவர்கள் சந்திப்பு =2012


மரியாதைக்குரிய நண்பர்களே,
                    வணக்கம்.பரமேஸ் டிரைவர் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன். http://veeduthirumbal.blogspot.com/2012/08/blog-post_27.html,
http://chennaibloggersmeet2012.blogspot.in/ வலைப்பக்கம் செல்லுங்க. கடந்த 2012ஆம் ஆண்டு  சென்னை வலைப்பதிவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது எனது சமூகப்பணி.
அதனை மிகப்பெரியதாக வெளிப்படுத்தி என்னை பெருமைப்படுத்திய நண்பர் திரு. மோகன்குமார் அவர்களுக்கு மிக்க நன்றிங்க.மேலும் பார்க்க

காலை அனைத்து சேர்களும் எடுத்து போட்ட மூத்த பதிவர்கள்  பேருந்து ஓட்டுனர்   பரமேஷ்; நடன சபாபதி  ஒரு அறையினுள் மலை போல் உயரமாய் அடுக்கப்பட்ட சேர்கள் மீது ஏறி அனாயாசமாய் அவற்றை எடுத்து தந்தார் பஸ் ஓட்டுனர் சக பதிவர் பரமேஷ் அவர்கள் ! மூத்த பதிவர்கள் தங்கள் வயதை பொருட்படுத்தாது உழைத்தனர்.
  

Sunday, August 3, 2014

மிளகு!

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
                   பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் !
இந்த பழமொழி மிளகின் மகத்துவத்தை உணர்த்துவதற்காக கூறப்பட்ட பழமொழி.. அப்படி என்ன மகத்துவம் இந்த நல்ல மிளகில்...? ...
உலகின் தலைசிறந்த எதிர் மருந்து (Antidote) தான் இந்த மிளகு. இந்த மிளகு இந்தியாவில் மிக அதிகமாக பயிரிடப்படுகிறது .
தென்னிந்தியாவில் முக்கியமாக கேரளா, மைசூர், மற்றும் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும், கிழக்குத் தொடர்ச்சி மலைகளான கொல்லிமலை, சேர்வராயன் மலைகளிலும் நல்லமிளகு அதிகம் விளைகிறது.
உலகிலேயே தலைசிறந்த தரம் வாய்ந்த நல்ல மிளகு தென்னிந்தியாவில் மட்டுமே கிடைக்கிறது என்பது நவீன ஆராய்ச்சி கூறும் தகவல்.

மிளகில் உள்ள வேதிப் பொருட்கள் அனைத்தும் நம்மை நோயிலிருந்து காக்கும் வேலையைச் செய்கிறது மேலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.மிளகிற்கு வீக்கத்தைக் குறைக்கும் பண்பும் (Anti-inflamattory) வாதத்தை அடக்கும் பண்பும் (Anti vatha)பசியைத் தூண்டும் பண்பும் (Appetizer), வெப்பத்தைக் குறைக்கும் பண்பும் (Antypyretic), கோழையை அகற்றும் பண்பும் (Expectorant), பூச்சிக்கொல்லியாக செயல்படும் பண்பும் (Anti-helmenthetic) உள்ளது. நரம்புத்தளர்ச்சி, கை கால் நடுக்கம், உதறல், ஞாபக சக்தி குறைபாடு, முதுமையில் உண்டாகும் மதிமயக்கம், இவற்றிற்கு நல்ல மிளகு சிறந்த மருந்தாகும்.வீரியத்தை அதிகரிக்கும் தன்மையும் இதற்குண்டு.
நல்ல மிளகில் பொட்டாசியம், கால்சியம், ஜிங்க், மாங்கனீசு, இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம், வைட்டமின் சி, சத்துக்கள் அதிகம் உள்ளது. வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளதால் ஆண்டி ஆக்ஸிடென்டாக செயல்பட்டு நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்கிறது.நல்ல மிளகில் piperine என்ற ஆல்கலாய்டு இருப்பதால் பசியைத் தூண்டுகிறது.வயிற்றில் சுரக்கும் என்ஸைம்களை தூண்டி சுரக்கச் செய்கிறது. மேலும் உமிழ்நீரை சுரக்கச் செய்கிறது. இதனால் ஜீரணத் தன்மை அதிகரிக்கப்படுகிறது. உணவு சரியான முறையில் செரிக்கப் பட்டால் தான் வாயுத் தொந்தரவு இருக்காது. மேலும் நச்சுக் கழிவுகள் உடலில் தங்காது. இந்த நச்சுக் கழிவுகளை வெளியேற்றும் தன்மை மிளகில் அதிகம் இருப்பதால்தான் நம் முன்னோர்கள் இந்த பழமொழியை பயன்படுத்தினார்கள். இதனாலேயே நம் முன்னோர்கள் வெளியிடங்களில் சாப்பிட்டு வரும்போது பத்து மிளகை வாயில் போட்டு சுவைத்து சாப்பிட்டுவிடுவார்கள். வெளியில் தயாரிக்கப் படும் உணவினால் ஏற்படும் நச்சுத்தன்மை அனைத்தையும் இந்த பத்து மிளகு முறித்து விடும்.

நமது உடல்!.

மரியாதைக்குரியவர்களே,
              வணக்கம்.
            நமது உடலை பற்றி தெரிந்ததும் தெரியாததும் !
* நமது மூக்கினால் 50 ஆயிரம் விதமான வாசனைகளை நுகர முடியும். ஆனால் தூங்கும் போது நமது மூக்கினால் வாசனை பிடிக்க முடியாது.
* நமது மூளை 80 சதவீதம் தண்ணீரால் ஆனது. பகலைவிட இரவில் மூளை சுறுசுறுப்பான இருக்கும். அதிகமாக சிந்தனைகள் தோன்றும். வலி என்ற உணர்வே மூளையின் உதவியால் தான் உணரப்படுகிறது. ஆனால் மூளையில் காயம்பட்டால் வலி தெரியாது.
* சராசரி மனிதன் ஆண்டுக்கு ஆயிரத்து 460 கனவுகள் காண்கிறான். அதாவது தினமும் குறைந்தபட்சம் 4 கனவுகள்.
* நாம் ஒரு அடியை எடுத்து வைக்கும் போது நமது உடலில் 200 தசைகள் செயல்படுகின்றன.
* நமது கண்விழியின் சராசரி எடை 28 கிராம் இருக்கும்.
* தும்மும் போது நமது கண்களை திறந்து வைத்திருக்க முடியாது. மூக்குத் துவாரங்களை மூடிக்கொண்டு முனக முடியாது.
* நம்மால் வாசனை பிடிக்க முடியாத நிலை அனோஸ்மியா எனப்படுகிறது. அதிகமாக வாசனை பிடிக்கும் சக்தியை ஹைபரோஸ்மியா என்கிறார்கள்.
* நமது உடலில் 'உவுலா' என்ற உறுப்பு எங்கிருக்கிறது தெரியுமா? அடிநாக்கு பகுதியில் நாக்கின் மேற்புறம் காணப்படும் சிறுதசையே 'உவுலா' எனப்படுகிறது. நாம் இதனை உள்நாக்கு என்கிறோம். மனித உடலில் உள்ள உறுதியான தசை நமது நாக்குதான்.
* பிறக்கும் போது நமது உடலில் 300 எலும்புகள் இருக்கின்றன. ஆனால் வளர்ச்சி அடைந்த மனித உடலில் 206 எலும்புகளே உள்ளன. பல எலும்புகள் ஒன்றிணைந்து விடுவது தான் இதற்கு காரணம்.
* எலும்புகள் வலிமையானவை என்று எண்ணுகிறீர்களா? அதன் வெளிப்புறமே கடினமானது. உப்புறம் எலும்புகள் மென்மையாகத்தான் இருக்கும். ஏனெனில் எலும்புகள் 75 சதவீதம் தண்ணீரால் ஆனது. மனித எடையில் எலும்புகளின் பங்கு 14 சதவீதமாகும்.
* நமது ரத்தம் தண்ணீரை விட 6 மடங்கு அடர்த்தியானது. பெண்களின் உடலில் 4.5 லிட்டர் ரத்தமும், ஆண்களின் உடலில் 5.6 லிட்டர் ரத்தமும் காணப்படுகிறது.
* நமது உடலில் உள்ள ரத்த நாளங்களை ஒன்றிணைத்தால் 60 ஆயிரம் மைல்கள் நீளத்திற்கு இருக்கும்.
* சிறுநீரகம் ஒரு நிமிடத்திற்கு 1.3 லிட்டர் ரத்தத்தை சுத்திகரிக்கிறது. தினமும் 1.4 லிட்டர் சிறுநீரை வெளியேற்றுகிறது
.* ஒவ்வொரு மனிதனின் கைரேகையைப் போலவே கால்ரேகை மற்றும் நாக்கு ரேகைகள் தனித்தன்மை வாய்ந்தவை.

இரத்த அழுத்தம்?

மரியாதைக்குரியவர்களே,
               வணக்கம்.பரமேஸ் டிரைவர் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.
 
இரத்த அழுத்தம் (இரத்த கொதிப்பு )பற்றிய தகவல்கள் !
அதிக இரத்த அழுத்தத்தை இரத்தக் கொதிப்பு (Hypertension) என்று கூறுகிறோம். இரத்த அழுத்தம் குறைந்தால் லோ பிரஷர் (Hypotension) என்று கூறுகிறோம். இரத்த அழுத்தம், இரத்த குழாய்களின் தன்மை, இரத்தத்தின் தன்மை, இருதய துடிப்பின் அளவு போன்றவற்றிற்கேற்ப மாறுபடும். சிஸ்டாலிக் பிரஷர் இரத்தக் குழாய்களின் தன்மையை காட்டுவதாகும். உடற்பயிற்சி, கடின வேலைகள், ஓடுதல், கோபம், பயம் போன்ற உணர்ச்சிகளின் போது இதயத்துடிப்பை அதிகமாக்கி தற்காலிக இரத்த குழாய்கள் இரப்பர் தன்மையுடன் விளங்கும். வயது ஆக ஆக நரை எப்படி தோன்றுகிறதோ அதுபோல குழாய்கள் கடின தன்மை பெறுகின்றன. இரத்த அழுத்தத்தைகண்டிறிய ஸ்பிக்மோ மோன மீட்டர் என்ற கருவி பயன்படுகிறது. பொதுவாக நடுத்தர வயதினர்களுக்கு 120/80 mm of Hg. இரத்த அழுத்தம் வயதிற்கேற்ப மாறுபடும் சிஸ்டோரிக் பிரஷர் 100-140 வரை இருக்கலாம். டயஸ்டோஸிக் பிரஷர் 60௯0 வரை இருக்கலாம்.
அறிகுறிகள் :
லேசான தலை சுற்றல்
மயக்கம்
தூக்கமின்மை
படபடப்பு
தலைவலி
வயதானவர்கள் அவ்வப்பொழுது மருத்துவரிடம் இரத்த அழுத்தத்தை சோதித்துக் கொள்வது நல்லது ஒழுங்காக மருத்துவம் பார்த்துக் கொண்டால் இரத்த கொதிப்பின் பின் விளைவு நோய்களின் மாரடைப்பு, பக்கவாதம் சிறுநீரக பழுது போன்றவற்றிலிருந்து காத்துக் கொள்ளலாம்.

காரணங்களும், நிவர்த்திக்கும் முறைகளும்:
1. கொலஸ்ட்ரால் :-
நாம் உண்ணும் உணவில் நடுத்தர வயதிற்கு பின் கொழுப்பு சத்து மிகுந்த உணவு பொருள்களை தவிர்த்தல் நன்று. உணவில் மாமிச வகைகள், மீன், முட்டை முதலியவைகளை நீக்கி சைவ உணவு சாப்பிடலாம், மூட்டை வெள்ளை கரு சாப்பிடலாம். எண்ணெய் பதார்த்தங்களை குறைக்கவும். அதிக கொழுப்பு சத்து உடம்பின் பல்வேறு பாகங்களில் சேமிக்கப்படுகிறது. இரத்த குழாய்களின் உடற்பகுதிகளிலும் கொலஸ்ட்ரால் படிந்து இரத்தக் குழாயின் துவாரத்தை குறைத்துவிடுகின்றன. எனவே இரத்த அழுத்தம் அதிகமாக ஆரம்பிக்கின்றது. பெரும் பான்மையான இரத்த கொதிப்பு நோயாளிகள் இந்த வகையை சார்ந்தவர்கள்தான். இரத்தத்தில கொலஸ்ட்ரால் 250/100-க்கு அதிகமானால் ஆபத்து.
2. புகை பிடித்தல் :-
சிகரெட், பீடி, சுருட்டு, புகையிலை, பொடிபோடுதல் இவையாவும் இரத்த குழயை பாதிக்கும். இரத்த குழாயின் சுருங்கி விரியும் தன்மையை இழக்க செய்து கடினமாக மாற்றிவிடும். பெரும்பான்மையான நோயாளிகள் புகை பழக்கத்தை விட்டவுடன் பிரஷர் நார்மலுக்கு வந்துவிடும்.
3. சர்க்கரை வியாதி :-
சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு சரியான சிகிச்சை இல்லாமல் இருந்தால் இரத்தக் குழாய்களை பாதிக்கிறது. ஆரம்ப காலங்களில் சீராக தோன்றும் இரத்த அழுத்தம் படிப்படியாக அதிகமாகும். நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரை சிகிச்சையின் போது 180 மி.கி. குறைவாக இருக்குமாறு பார்த்துக் கொள்வது நல்லது.
4. உடல்பருத்தலும், உடற்பயிற்சி இன்மையும் :-
உடற்பயிற்சியின்மை உடல்பருமனை கூட்டுகின்றன. உடல் பருமனை சமாளிக்க இருதயம் அதிகமான வேலை பளுவை ஏற்று நாளடைவில் இரத்த கொதிப்பு, சர்க்கரை வியாதி போன்ற பல்வேறு உபாதைகளை ஏற்படுத்தும் இதயம் நாளடைவில் பலவீனமடைகிறது. மதுபழக்கம், பகலில் தூங்குதல் போன்றவைகளும் உடற்பளுவை கூட்டுகின்றன. சிறுநீரக கோளாறுகள், நாளமில்லா சுரப்பிகள் சீர்கேடுகளினாலும் இரத்த கொதிப்பு தோன்றலாம். சுரப்பிகள் சீர் கேடுகளினாலும் இரத்த கொதிப்பு தோன்றலாம். பிரசவ காலத்தில் பெண்களுக்கு தற்காலிகமாக இரத்த கொதிப்பு ஏற்படும். சில பெண்களுக்கு கடைசி மாதங்களில் முகம், கை கால்கள் வீக்கம் இருந்தால் பிரஷர் அதிகமாக இருக்கும். டாக்சீமியா எனப்படும் இந்தக் குறைக்கு தகுந்த மருத்துவம் செய்யாவிடில் பிரசவத்தின் போது ஜன்னி போன்ற ஆபத்தான நிலைமையை ஏற்படுத்தலாம்.
5. உணர்ச்சி வசப்படுதல் :-
அடிக்கடி கோபப்படுதல், படபடப்புடன் இருத்தல், ஒரு செயல் நடக்கம் முன்பே பல கற்பனைகளை செய்து கொண்டு அனாவசியாமாக பயப்படுதல், எப்போதும் ஒரு பதற்றத்துடன் இருத்தல் போன்றவைகளும் இரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தலாம். இதற்கு ஹோமியோபதி மருந்துகள் உகந்தவை தியானம், யோகா போன்ற மனநல பயிற்சிகளையும் மேற்கொண்டு இரத்த அழுத்தத்தை குறைக்கலாம்.
பின்விளைவுகள் :
1. மாரடைப்பு :
இரத்த கொதிப்பு உள்ள நோயாளிகளின் இதய இரத்தக் குழாய்களை ரப்பர் தன்மை குறைவதும், கொலஸ்ட்ரால் போன்ற கொழுப்பு கட்டிகள் இரத்த குழாயை அடைப்பதாலும் மாரடைப்பு தோன்றுகிறது.
2. மூளையில் இரத்த குழாய்களின் பாதிப்பு :
மூளையில் உள்ள ரத்த குழாய்கள் பாதிக்கப்பட்டால் பாதிக்கப்பட்ட இரத்தத்திற்கு தக்கவாறு கைகள், கால்களை செயலிழக்க செய்து பக்கவாதம் போன்ற நரம்பு மண்டல பாதிப்புகளை ஏற்படுத்தும்.
3. சிறுநீரக கோளாறுகள் :
தொடர்ந்து இரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கு நாளடைவில் சிறுநீரக பழுது ( சுநயேட கயடைரசந ) ஏற்படலாம். இரத்த குழாய்கள் சுருங்கி செயலிழக்கமின்றி சிறுநீரில் அல்புமினை வெளியேற்றும் இரத்ததில் யூரியா 40 மி.கி. மேல் அதிகமாகும். நாளடைவில் கால்களில் வீக்கமும் ஏற்படலாம்.
4. இதய செயலின்மை (Vertricular failure) :
அதிக நாள்பட இதயம் அதிகமாக வேலை செய்வதால் பலவீனமடைந்து இடது வென்டிரிக்கிள் வீங்க ஆரம்பிக்கும். படிப்படியாக ஹார்ட் பெய்லியர் ஏற்பட ஆரம்பிக்கிறது. இதபோல இரத்த கொதிப்பு பல்வேறு உபாதைகளுக்கு அடிகோலுகிறது.

Tuesday, June 24, 2014

பாஸ்போர்ட் அப்ளை செய்ய தேவையான ஆவணங்கள், கட்டணங்கள், விதிமுறைகள் என்ன? எப்படி செய்வது?
ஒரு நாட்டைக் கடந்து மற்றொரு நாட்டிற்கு செல்கிற எவரும் கடவுச்சீட்டு (Passport) பெற வேண்டியது அவசியமாக உள்ளது. அதனால் பாஸ்போர்ட் நமக்கு தேவை என்றால் முதலில் நாம் அணுகுவது இடை தரகர்களை தான், ஆனால் தற்போது எந்த இடை தரகர்களும் இல்லாமலே நாமே நேரடியாக பாஸ்போர்ட் எடுக்க இந்திய அரசாங்கம் வழிவகை செய்துள்ளது. பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் செயல்முறை இப்போது ஆன்லைனில் மாறிவிட்டது. புதியதாக நிறுவப்பட்டுள்ள “பாஸ்போர்ட் சேவக் கேந்திரா”Passport Seva Kendras (PSK) என்கிற செயல்பாட்டின் மூலம், ஆன்லைனில் விண்ணப்பித்து…..
விண்ணப்பித்த 30 நாட்களுக்குள்ளேயே உங்களது பாஸ்போர்ட்டைப் பெற்று விடலாம். அந்த அதிகாரப்பூர்வ இணையதளம் இப்போது டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TATA Consultancy Services) மூலம் பராமரிக்கப்படுகிறது. நம்மில் பலருக்கு நேரடியாக பாஸ்போர்ட் எடுக்க விருப்பம் இருந்தாலும் அதற்கான வழிமுறைகள் தெரியாததால் தரகர்களிடம் சென்று எடுக்கிறோம், இனி அந்த அவசியம் தேவையில்லை. உங்கள் பாஸ்போர்ட்டை ஆன்லைனிலேயே நீங்கள் அப்ளை செய்யும் செயல்முறையையும், பாஸ்போர்ட் எடுக்க என்ன விதிமுறை மற்றும் வழிமுறை அனைத்தையும் தெரிந்து கொள்ள போகிறோம்.

1) பாஸ்போர்ட் எத்தனை வகைப்படும்?
• ஆர்டினரி (Ordinary)
• அப்பிசியல் (Official)
• டிப்ளோமேட்டிக் (Diplomatic)
• ஜம்போ (Jumbo)
என நான்கு விதமான பாஸ்போர்ட்கள் வழங்கப்படுகின்றன. Ordinary பாஸ்போர்ட் சாதாரண குடிமக்களுக்கும், Official பாஸ்போர்ட் அரசாங்க ஊழியர்களுக்கும்,Diplomatic பாஸ்போர்ட் முதல்வர், பிரதமர் போன்ற உயர்மட்டத் தலைவர்களுக்கும், Jumbo பாஸ்போர்ட் வியாபார நிமித்தமாக அடிக்கடி வெளிநாடு செல்பவர்களுக்கும் வழங்கப்படுகின்றன.
2) பாஸ்போர்ட் பெறுவதில் எத்தனை முறைகள் உள்ளன?
இரண்டு முறைகள் உள்ளன. ஒன்று ஆர்டினரி (Ordinary), மற்றொன்று தட்கல்(Tatkal).
3) ஒரு முறை வாங்கும் பாஸ்போர்ட்டை எத்தனை வருடங்களுக்குப் பயன்படுத்தலாம்?
ஒரு முறை கொடுத்த பாஸ்போர்ட்டைப் பத்து வருடங்களுக்குப் பயன்படுத்தலாம்
. மீண்டும் அதை அதற்கான கட்டணத்தைக் கட்டிப் புதுப்பித்துக் கொள்ளலாம்
. ஒன்பது வருடங்கள் முடிந்தவுடன் எப்போது வேண்டுமானாலும் புதுப்பித்துக் கொள்ளலாம். மீண்டும் 10 வருடங்களுக்கு வழங்கப்படும். இப்படி புதுப்பிக்கும்போது, 15 நாட்களுக்குள் புதிய பாஸ்போர்ட் கிடைத்துவிடும்.
4) பாஸ்போர்ட் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்?
முக்கியமாக இரண்டு ஆவணங்கள் வேண்டும்.
1. இருப்பிடச் சான்றிதழ் (ஏதாவது இரண்டு)
• ரேசன் கார்டு
• பான் கார்டு
• வாக்காளர் அடையாள அட்டை
• வங்கி கணக்கு புத்தகம் (கடந்த ஒரு வருடமாக பணம் எடுக்கவும் போடவும் செய்து அதை பதிவு செய்திருக்கவேண்டும்)
• தொலைபேசி ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
• எரிவாயு இணைப்பிற்கான ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
2. பிறப்புச் சான்றிதழ். (ஏதாவது ஓன்று)
• விண்ணப்பதாரர் 26.01.89 அன்றைக்கு பிறந்த அல்லது அதற்குப் பிறகு பிறந்தவராக இருந்தால் மட்டும் நகராட்சி ஆணையாளரால் அல்லது பிறப்பு & இறப்பு பதிவாளர் அலுவலகத்தில் கொடுக்கும் பிறப்பு/இறப்பு சான்றிதல் ஏற்கதக்கதாகும்.என்றால் அரசாங்கத்தால் தரும் பிறப்பு சான்றிதழ்
• பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ்
• கெஜட்டடு (நோட்ரி பப்ளிக்) ஆபிசர் மூலம் வாங்கவேண்டும்
வேறு சான்றிதழ்கள்
• 10வது மேல் படித்திருந்தால் ECNR முத்திரை இருக்காது, அதற்காக கடைசியாக எதை படித்து முடித்தீர்களோ அதனை கொண்டுபோகவும்.
• உங்களது பெயரை (மதம் மாறும்போது/ எண்கணித முறையில்) மாற்றி இருந்தால் அதற்கு உண்டான சான்றிதழ்.
• பழைய பாஸ்போர்ட் எடுக்கும் போது திருமணம் ஆகாமல் இருந்து, பழையது முடிந்து ரினிவல் பாஸ்போர்ட் அப்ளை செய்ய போனாலும் மேற்கன்ட அனைத்தையும் கொண்டு போகவேண்டும்,
• மேலும் திருமண சான்றிதழ் இணைக்க வேண்டும் அல்லது மாவட்ட நீதிமன்றத்தில்/ நோட்ரி பப்ளிக் மூலமாக கணவனும் மனைவியும் சென்று வாங்கவேண்டும்.
• பழைய பாஸ்போர்ட்டை கொண்டு செல்ல வேண்டும்.
• எட்டாம் வகுப்புக்கு குறைவாகப் படித்திருந்தால் அல்லது படிக்கவே இல்லை என்றால் நோட்டரி பப்ளிக் மூலம் அபிடவிட் பெற்று விண் ணப்
பிக்கலாம்.26.01.1989-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்திருந்தால் பிறப்பு சான்றிதழ் கட்டாயம் தேவை.
சிறுவர்-சிறுமியர்
சிறுவர்-சிறுமியர்க்கு (14 வயதுக்கு உட்பட்டவர்) கடவுச்சீட்டு எடுக்க விரும்பினால், பெற்றோர்கள் கடவுச்சீட்டு இருப்பவராக இருந்தால், காவல்துறை அறிக்கை தேவைப்படாது. பெற்றோர்க்கு கடவுச்சீட்டு இல்லாவிட்டால் அவர்தம் விண்ணப்பங்களும் காவல் துறைக்கு அனுப்பி அறிக்கை பெற்ற பின்னரே கடவுச்சீட்டு அளிப்பர்.
5) இணையதளம் மூலம் விண்ணப்பிபதால் என்ன பயன்கள்?
• விண்ணப்பதாரர்கள் வட்டார பாஸ்போர்ட் அலுவலகத்திலுள்ள அதற்குரிய அலுவலரிடம் சமர்ப்பிக்கவேண்டியதற்கான திட்டமிட்ட தேதி, நேரம், தேவையான ஆவணங்கள் மற்றும் கட்டணம் ஆகியவைகளை பெறமுடியும்
• நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய தேவையில்லை
6) பாஸ்போர்ட் பெறுவதற்க்கான கட்டணம்?
பாஸ்போர்ட் கட்டணம் தெரிந்து கொள்ள :http://passport.gov.in/cpv/FeeStructure.htm
• புதிய மற்றும் புதுபிக்க : 1500 ரூ (சாதரணமான முறை)
• காணாமல் போனால் – சேதமடைந்தால் – 1500 ரூ (பாஸ்போர்டு முடிந்து இருந்தால் – Expired)
• காணாமல் போனால் – சேதமடைந்தால் – 3000 ரூ (பாஸ்போர்டு Expireஆகவில்லை எனில்)
• 60 பக்கங்கள் வேண்டுமெனில் 500 ரூபாயைச் சேர்த்துக் கொள்ளவும்
• தட்கல் முறையில் பெற 2000 ரூபாயைச் சேர்துக் கொள்ளவும்
7) தொலைந்து போனால்?
பாஸ்போர்ட் தொலைந்து போனால் காவல் துறையினரிடம் புகார் செய்து, எஃப்.ஐ.ஆர். பெற வேண்டும். அவர்கள் “Non Traceable” சான்றிதழ் தருவார்கள். அதை ஒப்படைத்தால் டூப்ளி கேட் பாஸ்போர்ட் வழங்கப்படும். இதற்கு ஆர்டினரிக்கு 2500 ரூபாய் மற்றும் தட்கலுக்கு 5000 ரூபாய் கட்டணம்.
தட்கல் திட்டம்:
பொதுவாக, பாஸ்போர்ட் விண்ணப்பங்களை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் செலுத்தி 30 நாள்களில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டு விடுகின்றன. அவசரமாக வெளிநாடு செல்பவர்க்கு உதவியாக விரைந்து பாஸ்போர்ட் பெறவும் வகையிருக்கிறது. இதற்கு “தட்கல் திட்டம்” என்ற புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டத்தில் சிறப்புரிமை அடிப்படையில் விரைந்து பாஸ்போர்ட் பெற முடியும்.
தட்கல் திட்டத்தின் கீழ் வழங்கும் அனைத்து பாஸ்போர்ட்களைச் சார்ந்த காவல்துறையின் சரிப்பார்க்கும் பணி பாஸ்போர்ட் வழங்கிய பின் இருக்கும் கீழே சொல்லப்பட்ட பட்டியலிலிருந்து மூன்று ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலம் தட்கால் திட்டத்தின் கீழ் பாஸ்போர்ட் பெறுவதற்கு விண்ணப்பதார்ர் பெறமுடியும். மூன்று ஆவணங்களில் ஒன்று புகைப்படைத்துடன் கூடிய அடையாள அட்டையாக இருக்க வேண்டும்
அவ்வாறு விரைந்து பாஸ்போர்ட் பெற விழைவோர் ரூ.2500/- கட்டணமாக செலுத்த வேண்டும். 3 ஆவணங்கள் கட்டாயமாக சமர்பிக்க வேண்டும்.
கீழ் வரும் ஆவணங்களின் பட்டியலிலிருந்து, பாஸ்போர்ட்-க்காக மூன்றை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்
• வாக்காளர் அடையாள அட்டை
• இரயில்வே அடையாள அட்டைகள்
• வருமான வரி அடையாள (Pan Card) அட்டைகள்
• வங்கி அலுவலக புத்தகம்
• எரிவாயு இணைப்பிற்கான ரசீது
• ஓட்டுனர் உரிமம்
• பிறப்பு சான்றிதழ்கள் (Birth Certificate)
• தாழ்த்தப்பட்ட(எஸ்சி)/பழங்குடியினர் (எஸ்டி)/மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) சான்றிதழ்கள்
• சொத்து ஆவணங்களான பட்டா, பதிவுசெய்யப்பட்ட ஒப்பந்தபத்திரங்கள் இன்னும் பிற குடும்ப அட்டைகள்
• அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களால் வழங்கப்பட்ட மாணவர்களுக்கான புகைப்பட அடையாள அட்டைகள்
• ஓய்வூதிய ஆவணங்களான முன்னாள் இராணுவ வீரரின் ஓய்வூதிய புத்தகம்/ ஓய்வூதியம் செலுத்துவதற்கான ஆணை, முன்னாள் இராணுவ வீரரின் விதவை/சார்ந்தவர்கள் சான்றிதழ்கள், முதியோர் ஓய்வூதிய ஆணை, விதவை ஓய்வூதிய ஆணை
• மத்திய/மாநில அரசுகளால் வழங்கப்பட்ட பணிக்கான புகைப்பட அடையாள அட்டை, பொது நிறுவனங்கள், உள்ளூர் அமைப்புகள் அல்லது பொது வரையறை நிறுவனங்கள்
குறிப்பு: பதிவின் நீளம் கருதி அடுத்த பதிவில் பாஸ்போர்ட் ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி, அப்பாய்ன்மெண்ட் வாங்குவது எப்படி, அப்ளை செய்த பாஸ்போர்ட் என்ன ஸ்டேட்டஸில் இருக்கு என்பதையும் பார்க்கலாம்.
இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்....அப்படியே உங்களது ஓட்டுகளையும் பதிவிட்டு செல்லுங்கள் நண்பர்களே..
http://passport.gov.in/
விசா பெற வழிகாட்டும் இனையத்தளங்கள்!........
வெளிநாட்டு பயணங்களைத் திட்டமிடும்போது எழக்கூடிய முக்கிய கேள்வி, விசா பெறுவது எப்படி? இந்த கேள்விக்கு பதில் தெரிய கொஞ்சம் இணைய ஆராய்ச்சி தேவை.
முதலில் பயணம் செல்ல உள்ள நாட்டிற்கு விசா தேவையா என தெரிந்துகொள்ள வேண்டும். அதன்பிறகு விசாவுக்கு விண்ணப்பிப்பது எப்படி என அறிய வேண்டும். ஒரு சில நாடுகளுக்கு விசா தேவையில்லை. ஒரு சில நாடுகளுக்கு அங்கே போய் இறங்கியவுடன் விசா வாங்கி கொள்ளலாம். பெரும்பாலான நாடுகளை பொருத்தவரை முன்கூட்டியே விசா பெற வேண்டும். நாடுகளுக்கு நாடு இது மாறக்கூடியது.
குறிப்பிட்ட சில நாடுகள் மட்டும் விசா இன்றி வரும் சலுகையை வழங்குகின்றன. இப்படி விசாவுக்கான நடைமுறைகள் பல இருக்கின்றன.
இந்தத் தகவல்களை எல்லாம் தேடி இணையத்தில் அங்கும் இங்கும் அல்லாடாமல், ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளும் வகையில் விசாமேப்பர்.காம் (http://www.visamapper.com/) வலைத்தளம் அமைந்துள்ளது.
எந்த எந்த நாடுகளுக்கு எல்லாம் விசா இல்லாமல் செல்லலாம், எந்த எந்த நாடுகளுக்கு எல்லாம் அங்கே போய் சாவகாசமாக விசா வாங்கலாம் போன்ற தகவலகளை இந்தத் தளம் தருகிறது. அதுவும் எப்படி.., அதிகம் தேடாமல் எடுத்த எடுப்பிலேயே தெரிந்து கொள்ளும் வகையில் அழகாக உலக வரைபடத்தின் மீது விசா விவரங்களை புரிய வைக்கிறது.
இந்த தளத்தில் தோன்றும் உலக வரைபடத்தில் நாடுகள் பல்வேறு வண்ணங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அந்த வண்ணங்களுக்கான அர்த்தம் அருகே உள்ள கட்டங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வண்ணங்களை வைத்தே குறிப்பிட்ட ஒரு நாட்டின் விசா நடைமுறையை தெரிந்து கொள்ளலாம். உதாரணத்திற்கு பச்சை வண்ணத்தில் மின்னும் நாடுகளுக்கு அங்கே போய் விசா பெறலாம். மெரூன் நிறம் என்றால் முன்னதாகவே விசா பெற வேண்டும். வெளிர் பச்சை என்றால் விசாவே வேண்டாம். மஞ்சள் வண்ணம் என்றால் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சிவப்பு என்றால் விசாவே கிடையாது.
ஆக, இந்த வரைபடத்தை பார்த்தே ஒருவர் பயணம் செய்ய உள்ள நாட்டிற்கான விசா முறை என்ன என அறிந்து கொள்ளலாம். இந்த வரைபடத்தில் மேலும் ஒரு சிறப்பம்சம், நீங்கள் தேடக்கூட வேண்டாம், அதுவாகவே விவரங்களை காட்டுகிறது என்பது தான். அதாவது இந்த தளத்தில் நுழைந்ததுமே, பயனாளி எந்த நாட்டிலிருந்து விவரங்களைத் தேடுகிறார் என புரிந்து கொண்டு அந்த நாட்டுக்கான விசா நடைமுறையை வரைபடமாக காட்டுகிறது.
உதாரணத்திற்கு இந்தியாவில் இருந்து பயன்படுத்தும் போது, இந்தியாவுக்கான இடம் குடியிருக்கும் நாடு என காட்டப்படுகிறது. இந்தியர்களுக்கு மற்ற நாடுகள் எப்படி விசா தருகின்றன என்பது வண்ணங்களாக காட்டப்படுகிறது. ஆக, பயனாளி வேறு நாட்டில் இருந்து அணுகும் போது அவரது நாட்டுக்கான விசா வரைபடம் தோன்றும். அற்புதம் தான் இல்லையா?
அதே நேரத்தில் வரைபடத்தின் மீது உள்ள, 'நான் இந்த நாட்டு குடிமகன்' என குறிக்கும் கட்டத்தில் ஒருவர் தனக்கான நாட்டை தேர்வு செய்து பார்த்தால் அந்த நாட்டுக்கான உலக விசா நடைமுறையை தெரிந்து கொள்ளலாம். இந்த பகுதியில் பல்வேறு நாடுகளை கிளிக் செய்து பார்த்தால் எந்த எந்த நாடுகள் எந்த எந்த நாடுகளுக்கு விசா சலுகை அளிக்கின்றன போன்ற தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். உலக அரசியலை அறிவதற்கான சின்ன ஆய்வாகவும் இது அமையும். உலக அரசியல் யாதார்த்ததையும் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
விசா பற்றி அறிய விரும்புகிறவர்களுக்கு இந்த தளம் நிச்சயம் உதவியாக இருக்கும். ஆனால் ஒன்று, இது ஒரு வழிகாட்டித் தளமே. இதில் உள்ள விவரங்களை அதிகாரபூர்வமானதாக கொள்வதற்கில்லை. தகவலை எளிதாக தெரிந்து கொண்டு அதனை அதிகாரபூர்வ தளங்களின் வாயிலாக உறுதி செய்து கொள்வது நல்லது. மேலும் இந்த தளத்திலேயே, விடுபட்டிருக்கும் நாட்டை சேர்கக அல்லது பிழையான தகவலை சரி செய்யும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
இதைப் போலவே விசாமேப்.நெட் (http://www.visamap.net/) எனும் வலைத்தளமும் விசா தொடர்பான தகவல்களை வரைபடம் மூலம் தருகிறது. விசா தகவல்களோடு தூதரக அலுலகங்கள் எங்கே உள்ளன போன்ற தகவல்களையும் அளிக்கிறது. விசா நோக்கில் பிரபலமான நாடுகளின் பட்டியலும் இருக்கிறது. ஐபோனுக்கான செயலி வடிவமும் இருக்கிறது. ஆனால் இந்த தளமும் வழிகாட்டி நோக்கிலானது தான். இதில் உள்ள தகவல்களை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
வெளிநாட்டுக்கு போக ஆசைப்படுபவர்களுக்கும், போக இருப்பவர்களுக்கும் இந்தத் தளங்கள் பயனுள்ளவைகளாக இருக்கின்றன