Sunday, July 26, 2015

இளைய சமூகமே சாதியுங்க!........

  '' சகாயம் சாரோட 'லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்' கொள்கையை பின்பற்றி செயல்படுவோம்''.-திரு.அருண்ராஜ் IAS அவர்களது கொள்கை.............


மரியாதைக்குரியவர்களே,
             வணக்கம்.முயற்சியும் ஆர்வமும் இருந்தால் எதையும் சாதிக்க முடியும்...
               கோச்சிங் சென்டர் போகாமலேயே ஜெயிச்சேன்: 
                22 வயதில் ஐஏஎஸ் ஆன அருண்ராஜ்
                மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான யு.பி.எஸ்.சி., ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். உள்ளிட்ட பணிகளுக்காக 2014ல் நடத்திய தேர்வில் 1,236 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 118 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

          அகில இந்திய அளவில் 34வது இடத்தையும், தமிழக அளவில் 3வது இடத்தையும் பெற்ற சென்னையைச் சேர்ந்த அருண்ராஜ் தேர்வின் முதல் முயற்சிலேயே வெற்றி பெற்று, 22 வயதிலேயே ஐ.ஏ.எஸ் பணிக்கு தேர்வாகி சிவில் சர்வீஸ் தேர்வு வரலாற்றில் புதியதொரு சரித்திரத்தை உருவாக்கி தமிழகத்திற்கு பெருமை தேடி தந்துள்ளார்.

             இதுவரை சிவில் சர்வீஸ் தேர்வு வரலாற்றில் முதல் முயற்சியில், 22 வயதில் யாரும் இந்த வெற்றி அடைந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நெல்லை மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள கிராமத்தை பூர்வீகமாக கொண்ட அருண்ராஜ், இளம் வயதிலேயே இலக்கை அடைய எடுத்துக் கொண்ட பயணம் பற்றியும், எதிர்கால திட்டங்கள் குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
                  "இந்த சின்ன வயதிலேயே, முதல் முயற்சியில் கிடைத்த ஐ.ஏ.எஸ். வெற்றி எனக்கு அதிக சமூக பொறுப்புகளை தந்திருக்கு. அப்பா ஐ.பி.எஸ். பணியில் இருக்கிறார். அன்புச்செல்வன் ஐ.பி.எஸ்., சத்யதேவ் ஐ.பி.எஸ். 

                       இப்படி பொதுவாகவே சினிமாவுல ஐ.பி.எஸ். ஆபிசர்சை மட்டும்தான் பெரிய பிரம்மாண்டமா காட்டுறாங்க. ஐ.ஏ.எஸ். ஆபிசர்சை அப்படி காட்டுவதில்லை. ஆனால், ஐ.ஏ.எஸ். மூலமா, சமூகத்துல இருக்குற கடைக்கோடி மனிதனுக்கு கூட உதவ முடியும்.

                        கல்வி, மருத்துவம், சுகாதாரம், உணவு இப்படி பல வகைகளில் மக்களுக்கு உதவமுடியும். அவற்றை எல்லாம் சினிமாவில் நிறைய காட்ட வேண்டும். நேர்முகத் தேர்வுக்கு போறதுக்கு முன்னாடி 'ஆயுத எழுத்து' மாதிரி இளைஞர்கள், அரசியல்கள், அதிகார பணிக்கு போகும் நிறைய படங்களை மீண்டும் மீண்டும் பார்த்தேன்.

                     நிறைய செலவு பண்ணி, பெரிய பெரிய கோச்சிங் சென்டர் போனால் தான் ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ். ஆகமுடியும்னு சொல்றது பொய். நான் எந்த கோச்சிங் சென்டருக்கும் போகலை. தினமும் செய்தித்தாள்கள், நியூஸ் பாத்துட்டு, இணையதளங்கள்ல ஏற்கனவே இருக்குற வினா விடைகள், ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள பாடப்புத்தகங்களை எல்லாம் ஆத்துடன் கடுமையாக படிச்சேன், வெற்றி பெற்றேன். 
                           கான்பூர் ஐ.ஐ.டி.யில் கெமிக்கல் இன்ஜினியரிங் இப்போதுதான்முடிச்சேன். ஆரம்பத்துல ஒரு பொறியாளரா ஆகணும்னுதா ஆசைப்பட்டேன். ஆனால், எதிர்காலத்துல அதுல எனக்கு முக்கியத்துவம் கிடைக்காதுன்னு நெனச்சேன். அதுனாலதான் நான் ஐ.ஏ.எஸ் ஆகணும்னு முடிவு பண்ணினேன். கல்லூரி இறுதியாண்டுல இருந்துதான் சிவில் சர்வீசுக்கு படிக்க ஆரம்பிச்சேன்.

                   பயிற்சி முடிச்சுட்டு பணிக்கு போனப் பிறகு நம் மண்ணுக்கும், மக்களுக்கும் நிறைய திட்டங்கள் வச்சிருக்கேன். என்னோட இன்ஜீனியரிங் படிப்பையும் என்னோட பணிகளில் பயன்படுத்துவேன்.

                         அரசு மருத்துவமனைகளை எல்லாம் மேலும் மேலும் மேம்படுத்தி பணப்பாகுபாடு இல்லாம எல்லாருக்கும் சமமான, தரமான மருத்துவம் கொண்டு வரணும். நானும், என் துறைகளுக்கு கீழே வேலை செய்றவங்க எல்லாரும்
           '' சகாயம் சாரோட 'லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்' கொள்கையை பின்பற்றி செயல்படுவோம்''.

            இன்ஜினியரிங், மருத்துவம் மாதிரி செலவு பண்ணி படிச்சாதான் சமூகத்துல மதிப்பு, வேலை, பணம் கிடைக்கும்னு எல்லாரும் நினைக்கிறோம். எல்லோரிடமும் எழுத்து, சினிமா, கலை இப்படினு பல திறமைகள் இருக்கு. அதை எல்லாம் வெளிய கொண்டு வரணும். 

       அதுக்கு இளைஞர்கள் நல அமைப்பு நிறைய கொண்டு வரணும். நாங்கள் கல்லூரியில் கண்டுபிடிச்ச தாவர, விலங்கு கழிவுகளில் எடுக்கப்படும் உயிர் எரிபொருள் திட்டங்களை நடைமுறைப்படுத்தவும், இயற்கை சூழல் பாதுகாப்பு திட்டங்களையும் கொண்டு வரவேண்டும்.

                     பெண்களின் கல்வி, வேலைவாய்ப்புகள், வாழ்வியல் பிரச்னைகள் தீர்க்க பல நல அமைப்புகளை கொண்டு வர வேண்டும். என்னுடைய செயல்பாடுகள் அனைத்தும் மக்களுக்கு தெளிவாகவும், எளிமையாகவும், தொடர்புகொள்ள கூடியதாகவும் இருக்க சமூக வலைத்தளங்களை பெரியளவில் பயன்படுத்த வேண்டும். 

             ஊடகங்களை நன்கு பயன்படுத்தி மக்களிடம் எப்பொழுதும் நல்ல தொடர்பில் இருக்க வேண்டும். இன்னும் நிறைய யோசிச்சு வச்சிருக்கேன். எல்லாத்தையும் அதிகாரங்களை பயன்படுத்தி சாத்தியமாக்க வேண்டும்.
ஆறுமாத கால பயிற்சி முகாமில் வெளி மாநிலங்களில் வெற்றி பெற்றவர்களிடம் நிறைய கலந்து பேசி நம்ம ஊருக்கு வரும்போது பல புதிய திட்டங்களோடு வரணும். 

            குடும்ப கஷ்டம், பண கஷ்டம் உள்ள மாணவ, மாணவிகளின் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி இஸ்ரேல் சென்னையில் இலவசமாக நிறைய உதவி வருகிறார். 

                 பணம், வசதி எல்லாம் வெற்றியை தீர்மானிக்காது. 'லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்' மாதிரி எதிர்காலத்தில் எனக்கென்று ஒரு கொள்கை பெயர் உருவாக வேண்டும்" என்றார்.

திருமணத்திற்கு நாள் பார்க்கலாம் வாங்க!....

மரியாதைக்குரியவர்களே,
          வணக்கம்.திருமணத்திற்கு நாள் பார்ப்பது பற்றிய விவரம் அறிந்துகொள்வோம்..

       உயர்ந்தபட்ச சோதனைகளும், வாய்ப்புகளும் சேர்ந்து வருவதே திருமணத்திற்குப்பின் வரும் வாழ்வு. (பெர்னாட்ஷா)

           நல்ல திருமணவாழ்வு அமையப்பெற்ற ஆண் சிறகுடையவன். மாறான திருமணவாழ்வு அமையப்பெற்றவன் விலங்கிடப்பட்டவன். (வில் ரோஜர்ஸ்)

         வாழ்க்கைப் பாதையை மலர்களால் தூவ முடியாவிட்டாலும், குறைந்த பட்சம் சிரிப்புக்களால் தூவுங்கள். வாழ்க்கை இனிமையாகும் (சார்ள்ஸ் டிக்கன்ஸ்)

திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள‍ வேண்டிய விதிகள்
 
1. முதல் விதி
திருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. (மலமாதம் என்பது
இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருவது.)

 
2. இரண்டாவது விதி
சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி தவிர இதர மாதங்களில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

 
3. மூன்றாவது விதி
இயன்றவரை சுக்கில பட்ச காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது என்பது மூன்றாவது விதி.

 
4. நான்காவது விதி
புதன், வியாழன், வெள்ளிபோன்ற சுப ஆதிபத்தியமுடைய கிழமைகள் மிக ஏற்றவை. இதர கிழமைகள் அவ்வளவு உகந்தவை அல்ல.

…ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய சுப லக்கினங்களில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும் என்பது தான்
 
5. ஐந்தாவது விதி
துவிதியை, திரிதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள் தவிர இதர திதிகளை தவிர்ப்பது

 
6. ஆறாவது விதி
முகூர்த்த லக்கினத்துக்கு 7ம் இடம். முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க வேண்டும்.

 
7. ஏழாவது விதி
அக்கினி நட்சத்திரம், மிருத்யூ பஞ்சகம், கசரயோகங்கள் போன்ற காலகட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது.

 
8. எட்டாவது விதி
திருமணத்தின் போது குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் திருமண லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெற்றிருக்கக்கூடாது.

 
9. ஒன்பதாவது விதி
திருமணநாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிகமிக முக்கியமான விதி.

 
10. பத்தாம் விதி.
மணமக்களின் ஜனன நட்சத்திர நாளிலும் 3, 5, 7, 12, 14, 16, 21, 23, 2வதாக வரும் நட்சத்திர தினங்களிலும் திருமணம் நடத்தக்கூடாது.

 
11. பதினொன்றாம் விதி
கடைசியாக மணமக்களின் பிறந்த தேதி அல்லது கிழமைகளிலும் கல்யாணம் பண்ணக்கூடாது.

 

- இவ்வளவு விஷயங்கள் தெரிந்து கொண்டபின் நீங்களே அனைத்து சுபகாரியங்களுக்கும் நல்ல நாள் பார்த்துவிடுவீர்கள் தானே. அவரவர் குலதெய்வத்தை மனதில் வேண்டிக்கொண்டு உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆசியுடன் நல்லதொரு நாளைக்
குறியுங்கள்.

Sunday, July 12, 2015

விடியல் விருது -2015


மரியாதைக்குரியவர்களே,
             வணக்கம். இன்று புன்செய்ப்புளியம்பட்டியில் நடைபெற்ற,''விடியல் விருதுகள்'' வழங்கும் விழாவில் எனக்கு வழங்கிய விருது....தங்களது பார்வைக்காக......
Thursday, July 9, 2015

ஹெல்மெட் அணியலாமா?

மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
    ஹெல்மெட் அணிவது பற்றிய ஃபேஸ்புக் விமர்சனத்திற்கு எனது பதிலுரை தங்களது மேலான கவனத்திற்காக...


  Rajesh Reddy இன் புகைப்படம்.
  Parameswaran Driver, Rajesh Reddy இன் புகைப்படம் ஐப் பகிர்ந்துள்ளார்.
  ஹெல்மெட் அணிவது யாருடைய நலனுக்காக? என சிந்தியுங்க....அவசியம் படியுங்க!..தங்களுடைய மேலான விமர்சனங்களை தெரிவியுங்க...
  அவசியம் படியுங்க,
  ஹெல்மெட் விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்க..அவசியம் தலைக்கவசம் அணியுங்க....
  .சிந்தியுங்க மக்களே,சிந்தியுங்க!!!!.............
  மரியாதைக்குரியவர்களே,
  வணக்கம். தலைக்கவசம் அணியுமாறு சொல்வது நமது உயிர்ப் பாதுகாப்பிற்கு என்பதை மறந்து விட்டு ஏதோ நீதிமன்றத்தின் அதிகாரத்திற்காக? என்பது போல் அல்லவா ஆளாளுக்கு எதிர்மறையான விமர்சனம் செய்யறாங்க!.
  சாலையில் விபத்து என்று நேர்ந்தால் இழப்பீடு கோரி நீதிமன்றம்தாங்க செல்கிறோம்.விசாரிக்கும் நீதிமன்றமானது விபத்துக்காரணம் தலைக்கவசம் அணியாமையால் ஏற்பட்ட தவறே என வழக்கை தள்ளுபடிசெய்து தீர்ப்பளித்தால் என்ன செய்வீர்கள்? இரு சக்கர வாகன ஓட்டிகள் அனைவருக்கும் சாலை பாதுகாப்பு விதிகள் தெரிந்து வைத்துள்ளனரா? என கேட்டறிய வேண்டும்.அடுத்து புதுப்பிக்கும் சாலைகளின் தரத்தைக் கண்காணித்து அரசு ஒதுக்க்கப்படும் நிதியை முழுமையாக செலவழித்து தரமான மூலப்பொருட்களால்தான் சாலைகள் போடப்படுகின்றனவா? இனிமேலாவது ஏற்கனவே போடப்பட்டுள்ள சாலையை பரிசோதனை செய்ய முன்வருவீர்களா? தரமில்லாமல் போட்ட ஒப்பந்ததாரரைக் கண்டித்து உரிய நடவடிக்கை எடுக்க முன் வருவீர்களா? பக்கத்து மாநிலங்களான கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் செல்ல முடியுமா? (அவைகளும் இந்தியாவின் ஒரு பகுதி தானே) நான் அறிந்தவகையில் கர்நாடகாவில் ஆங்காங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் ஆதாரங்களைக்கொண்டு வேகமாக மோட்டார் வாகனங்களில் வேகமாக சென்றாலோ,தலைக்கவசம் அதாங்க ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் பயணித்தாலோ அந்த வாகனத்தின் பதிவு எண்படி உரிமையாளர் முகவரிக்கே தபால்மூலமாக அபராதம் மற்றும் தண்டனைக்கான அறிவிப்பு சென்றுவிடும்.உடனே அபராதத்தை கட்டியே தீர வேண்டும்...இப்போது சொல்லுங்க தமிழ்நாட்டில் நாம் எங்கே இருக்கிறோம்? பக்கத்து மாநிலம் எப்படி சென்றுகொண்டிருக்கிறது?
  அரசியலில் தங்களுக்கு வேண்டாத கட்சியாக இருந்தாலும் பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர்களும் நமது மந்திரிகளே! என்பதை ஏற்றுக்கொள்ளும் நாம் சட்டத்தை எதிர்ப்பது ஏனோ?.
  நுண்ணறிவு ஜீவிகளே உங்களுக்கு ஒரு வேண்டுகோள்.தங்களுடைய ஒற்றுமை மற்றும் அதிகார பலத்தால்,

           மத்திய மோட்டார் வாகன சட்டம்1988-ன் பிரிவு 129 மற்றும்மத்திய மோட்டார் வாகனச்சட்டம்1988 ன்பிரிவு 206 ஐ நீக்கினால் சந்தோசம்தாங்க!...........

    
     இதுபற்றி தங்களுடைய
  கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொள்ள அல்லது ஏற்றுக்கொள்ள தயாராகவே உள்ளேன்.

       இந்த விமர்சனங்களால் சமூகத்திற்கு பயன் அளிக்க வேண்டும் என்பதே எனது பணிவான எண்ணம்..
  என அன்பன்
  C.பரமேஸ்வரன்.(+919585600733)
  paramesdriver@gmail.com
  www.consumerandroad.blogspot.com
  நியாயமான கோரிக்கை தானே நண்பர்களே
 • Parameswaran Driver மரியாதைக்குரிய ராஜ்பிரின்ஸ் அவர்களே,வணக்கம்.தங்களது விருப்பத்திற்கு மிக்க நன்றிங்க!......
 • Parameswaran Driver

  உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...

Wednesday, July 8, 2015

குளியாடா - தாளவாடி - குளியாடா....

தாளவாடி-குளியாடா வழித்தடமும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும்..

மரியாதைக்குரியவர்களே,
           வணக்கம். மலைவாழ் பள்ளி மாணவர்களுக்காக தாளவாடியிலிருந்து குளியாடா இயக்கப்படும் அரசு பேருந்து படும்பாடு.சொல்லி மாளாது.காரணம் வழித்தடத்தின் அவலநிலைதாங்க.கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் அதே சமயம் அப்பகுதி மக்களை நினைத்தால்தாங்க பரிதாபமாக இருக்கிறது.

             மேலே கண்டுள்ள புகைப்படங்கள் 2015ஜூலை 08 ந் தேதி இன்று காலை   அரே பாளையம் ,மாவள்ளம் தாண்டி தேவர் நத்தம் ஊருக்கு முன்னதாக உள்ள சாலைவளைவில்  ஏற்பட்ட சரக்கு வாகனம் ஒன்று விபத்துக்கு ஆளாகியபோது பேருந்து மேற்படி இயக்கமுடியாமல் தடை ஏற்பட்டு நின்றபோது காலை ஏழுமணியளவில் எடுத்த படங்கள். வளைவு நெளிவாகவும் ஏற்ற இறக்கமாகவும் இருக்கும் ஒருவாகன மலைப்பாதையான இந்தச்சாலை   மிகவும் மோசமான நிலையில் பழுது ஏற்பட்டு இருப்பதே காரணமாகும்.
 ஆனால் பேருந்து இயக்கும் கால அட்டவணையோ????குளியாடா தொடங்கி ஆசனூர், தாளவாடி,திகனாரை,பனகஹள்ளி வரை பள்ளி மாணவர்களுக்காக இடைவிடாது ஓட்டவேண்டிய சூழ்நிலை!.....
  ஒருமுறையாவது அந்த சாலையினை சென்று பார்வையிட்டு வாங்க..அரசுப் பேருந்தும் அப்பகுதி மக்களும் படும்பாடு புரியும்..