Wednesday, December 31, 2014

அரசு போக்குவரத்துக்கழகம் தொழிலாளர்களின் போராட்டம் ஏன்?


மரியாதைக்குரியவர்களே,
                   வணக்கம்..பணத்தை எப்போது வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம்..ஆனால் மக்களிடையே மற்றவர்களிடையே நன்மதிப்பை சம்பாதிக்க ஆயுள்வரை நல்லொழுக்கத்தைப்பேணி காக்க வேண்டும்..
              அரசு போக்குவரத்துத்தொழிலாளர்களின் போராட்டம் செய்யக்காரணம் உங்க பார்வைக்காக..
முயற்சிக்கலாம் வாங்க!.
மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.இனிவருங்காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு சம்பந்தப்பட்ட அனைவரும் பொதுவான இடத்தில் அதாவது மக்கள் மன்றத்தில் விவாதிக்க தயாரா? இங்கு குறிப்பிட்ட '' சம்பந்தப்பட்ட அனைவரும்'' என்பவர்கள்(1)அரசு போக்குவரத்துக்கழகத்தின் அனைத்து அதிகாரிகள்,(2)அரசு போக்குவரத்துக்கழகங்களின் அனைத்துப் பிரிவு அலுவலர்கள் மற்றும் தொழிலாளர்கள்,மற்றும் பணியாளர்கள்,(3)நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்டஅரசுத்துறைகள்,(4)மக்கள் பிரதிநிதிகள்,(5)சமூக நல ஆர்வலர்கள்,(6)பொதுமக்கள்(7)போக்குவரத்து வாகன உற்பத்தியாளர்கள்,மற்றும் விற்பனையாளர்கள் மற்றும் பயன்படுத்துபவர்கள்(8)ஊடகங்கள் மற்றும் செய்தியாளர்கள்,(9)நீதித்துறைகள்,(10) பாதிக்கப்பட்டோர்,(11)அன்றாடம் பயணிப்போர் (12)பயணிகள் சங்கங்கள் (13)மக்கள் மன்றங்கள் (14)அனைத்து மாணவர்கள் அமைப்புகள்(15)நடுநிலை சிந்தனையாளர்கள் என அனைவரையும் குறிப்பிடுகிறேன்.பொதுவான இடம் என்பது மக்கள் கூடும் இடங்களில் பொதுமேடை அமைத்து விவாதிப்பது.அதுவும் நாகரீகமாக நியாயமாக விவாதம் செய்வது.அவரவர் தவறுகளை அவர்களே உணர வைப்பது...இன்னும்.... இன்னும்..... இன்னும்........தங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கூறுக....செயல்படுத்துவோம் வாங்க..விவாதிக்கலாம் வாங்க!....
மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.அத்தியாவசிய சேவையான பேருந்துப் போக்குவரத்து நிர்வாகம் மக்களுக்கு உண்மையிலேயே சிறப்பான சேவை செய்கிறதா??? சேவைக்குறைபாட்டிற்கு காரணம் யார்? அரசாங்கமா?அரசு போக்குவரத்துக்கழகமா? போக்குவரத்து தொழிலாளர்களா? பயணிகளா? உங்க எண்ணத்தை மற்றும் அனுபவத்தை பகிருங்க... முதல் கருத்தாக எனது அனுபவமான கருத்து உண்மையிலேயே தொழிலாளர்கள் என்றால் ஏற்க இயலாது..காரணம் அனுபவமிக்க தொழிலாளர்கள் எங்கோ ஒரு மூலையில் யாரும் ஏறாத ஓட்டைப் பேருந்தில் பணி புரிய நிர்ப்பந்தம் செய்யப்பட்டு பணியாற்றுவதால்.முறையான சீனியாரிட்டி முறையில் பணி ஒதுக்கீடு செய்யாமல் ...சொகுசுப்பேருந்து,நீண்டதூரப்பேருந்து இரவுநேர பேருந்து,போன்ற பேருந்துகளில் அனுபவமே இல்லாத,போதிய பயிற்சி இல்லாத நடத்துநர்கள் மற்றும் ஓட்டுநர்கள் அரசியல் செல்வாக்கு மற்றும் பண பலத்தை வைத்து அவ்வாறான பேருந்துகளில்பணியாற்றுவதால்தான் அத்தனை முறைகேடுகளும் நடைபெறுகின்றன..தற்போதைய ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு அவர்களின் பணியின்போது கடமையும்,பொறுப்பும் பற்றியே தெரியாத நிலை..பயணிகளை அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்களாக எண்ணிக்கொள்ளாத நிலை..அதனால்தான் பயணிகளைப்பற்றி சிறிதும் அக்கறை இல்லாமல் செயல்படும் அவலநிலை..இறுதியில் தொழிலாளர்கள் மீது வீண்பழி....இனியாவது பதில் கிடைக்குமா????கண்காணிப்புக் கேமரா பொருத்தப்படுமா??
மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.மக்கள் சேவைக்காக இயக்கப்படும் பேருந்துகளில் நஷ்டத்தைக் கணக்குக் காட்டி டீசலை மிச்சம் செய்...வருமானத்தைப்பெருக்கு..என்று கூடுதலான தொல்லைகளை மாதந்தோறும் கூடுதலாக்கிக்கொண்டே வரும் நிர்வாகத்தின் செயல்பாடு சரியா? ஒரு பேருந்தின் சட்டப்படியான கொள்ளளவு 55 நபர் என்றால் ஏற்றுவதோ 150க்கும் அதிகமான பயணிகள்??? அப்படியானால் இலவசமாக பயணிக்கும் மாணவர்களை கணக்கெடுப்பது எப்படி?..அளவுக்கதிகமாக ஏற்றிக்கொண்டு அபாயமாக இயக்கி வரும் நிலையில் அதே பேருந்தில் இன்னும் ஏற்று என்று கூறும் நிர்வாகம் ஒரு பேருந்தில் எத்தனை பயணிகளை ஏற்றுவது என்று எண்ணிக்கையில் கூறவேண்டும் அல்லவா?அல்லது மக்களே நீங்களாவது கூறுங்க..எத்தனை பயணிகளை ஒரேதடவையில் ஏற்றுவது? என்று கூறுங்க...டீசல் சிக்கனப்படுத்து என்றால் ஒரு லிட்டருக்கு எத்தனை கிலோமீட்டர் ஓட்டலாம் என்று ஓட்டுநர் பயிற்சியாளர்களை வைத்து ஓட்டி அதன்படி அளவு கொடுக்கலாம் அல்லவா?அதையும் செய்வதில்லை..வாகன உற்பத்தியாளரே அதாவது அசோக் லேலண்ட் கம்பெனி பொறியாளருக்கே சித்தோடு பயிற்சியின்போது என் சந்தேகமான கேள்வியான ஒரு பேருந்து ஒரு லிட்டருக்கு எத்தனை கிலோமீட்டர் ஓடும் என்று சொல்லத் தெரியவில்லை?? என்ன கொடுமை இது...தொழிலாளர்களின் ஆயுள்காப்பீட்டுப்பணத்தை,அஞ்சலக சிறுசேமிப்பு மாதாந்திரப்பணத்தை,விடுப்பு சரண்டர் பணத்தை,பிரவிடன்ட் பண்ட் பணத்தை,மாதம் தவறாமல் பிடித்தம் செய்யும் நிர்வாகம் அந்தந்தத்துறைகளுக்கு உரிய முறையில் கட்டாமல் முறைகேடு செய்வது தனியார்துறையில்கூட நடைபெறாத அநீதி அல்லவா? மற்ற அரசுத்துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு,அலுவலர்களுக்கு,பணியாளர்களுக்கு கொடுக்கும் பாதுகாப்பு அரசு போக்குவரத்துக்கழகத்தில் மட்டும் இல்லையே? ஓட்டுநர்,நடத்துநர் மட்டுமல்லங்க,தொழில்நுட்ப பணியாளர்களும் படும் அவஸ்தை வெளியில் சொல்லமுடியாத கொடுமை....

மறக்கமுடியுமா?
உண்மையை சொல்லித்தானே ஆக வேண்டும்!!!.......
மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
போக்குவரத்துத்தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் பற்றி முகநூல் நண்பர் அதிரை தவ்ஹீத் சகோதரி அவர்களின் ஆதங்கம் இதோ...
''அதிரை தவ்ஹீத் சகோதரி - பாவம் ஒருபக்கம் பழிஒருபக்கம்.என்பார்கள்
அதைபோல்தான் உங்களை போன்றோரின்நிலையும்
அரசு என்பது அதிகாரிகள்மட்டும்மல்ல பொதுமக்களும் சேர்த்துதான்
பொதுமக்களுக்கு எவ்வளவு கஸ்டம் யோசித்துபாருங்கள்
உங்களின் நியாயமான கோரிக்கை அரசுக்கு வேறுவழியில் தெரியபடுத்தியிருக்களாம் அல்லது ஒருநாள் விட்டு ஒருநாள் வேளைநிருத்தம் போராட்டம் செய்யலாம்'' என்று
மேற்படி தனது வேதனையை தெரிவித்துள்ள நண்பருக்கு பதில் கொடுக்கவேண்டிய கடமை என் போன்றோருக்கு உள்ளது. அதற்கான பதில்..
கடந்த பதினைந்து மாதங்களாக பல்வேறு தளங்களில் தொழிலாளர்களின் பிரச்சினையையும்,குறைகளையும் தீர்த்து வைக்கச்சொல்லி ஆர்ப்பாட்டம்,பேரணி,என்றெல்லாம் நடத்தியும்,திருச்சிராப்பள்ளியில் எச்சரிக்கைக்கான பேரணி நடத்தியும்,சட்டப்படியான முறையில் வேலைநிறுத்தத்திற்கான அறிவிப்பு நோட்டீஸ் கொடுத்தும் இந்த அரசு மிகவும் அலட்சியம் செய்து விட்டது (2001லேயே வேலை நிறுத்தம் நடந்தவிதம் உணரவில்லைபோலும்)..
தற்போது பேசுவதாக இறங்கி வந்துள்ள அரசாங்கம் முன்னரே செய்து இருந்தால் இந்த அவலம் நடந்திருக்காது அல்லவா?..

இது மட்டும் அல்லாமல் ,தொழிலாளர்களுக்கு கொடுக்கவேண்டிய சம்பளத்தைக்கூட ஒரு மாதம் தள்ளிக்கொடுப்பது..ஆயுள் காப்பீடு ,அஞ்சலக சிறு சேமிப்பு,வீடு கட்ட வாங்கிய வங்கிக்கடன்,பிராவிடன்ட் பண்டு போன்ற தொழிலாளர்களின் சம்பளத்தில் மாதம் தவறாமல் பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை உரிய துறைகளில் செலுத்துவது இல்லை.மாறாக தொழிலாளர்களின் பணத்தை முறைகேடாக நிர்வாகம் செலவழித்து வருகிறது.
இது தனியார் துறையில் கூட நடக்காத கேவலம்.இதனால் பாதிப்பு தொழிலாளிக்குத்தானே!..

தாங்கள் தயவு செய்து ஈரோடு வடக்கு ஆயுள் காப்பீடு அலுவலகத்தைத்தொடர்பு கொண்டு கேளுங்க..மற்றும் ஈரோடு தலைமை அஞ்சலத்தை தொடர்பு கொண்டு கேளுங்க.கோயமுத்தூர் HDFC வங்கியைக் கேளுங்க...
போதாக்குறைக்கு டீசலை செலவழிக்காதே என்றால் எப்படி என்ற வழிமுறைகளை சொல்லிக் கொடுப்பதில்லை..ஓட்டுநர் பயிற்சியாளர்களை வைத்தாவது சம்பந்தப்பட்ட பேருந்தை ஓட்டி டீசல் செலவு நிர்ணயம் செய்து ஓட்டுநர்களுக்கு போதிய விழிப்புணர்வு அறிவிக்கலாம் அல்லவா??
இதைவிட மோசமான அவலநிலை என்னவென்றால் ..அசோக் லேலண்டு கம்பெனியாளரே வருகை தந்து பயிற்சியளித்தபோது எனது கேள்வியான ''ஒருபுதிய பேருந்து அனுமதித்த பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு லிட்டர் டீசல் செலவுக்கு எத்தனை கி.மீ. தூரம் சமதளத்தில்,மலைப்பகுதியில்,நகர்ப்பகுதியில் இயக்கலாம்'' என்று கேட்டபோது தெரியாது? என்று மழுப்பிக்கொண்டு பதில் சொல்லும் படு கேவலமான நிலை..
போதாக்குறைக்கு .சில தரங்கெட்ட அதிகாரிகளின் சுயநலத்திற்காக வேண்டுமென்றே பொய்வழக்குப்போட்டு தொழிலாளர்களை பழிவாங்குவது..இதற்குத்தாங்க கண்காணிப்புக்கேமரா பொருத்துங்க! என்று ஒருமுறை பேட்டியளித்த கலைஞர் டிவியிலும் கூறியுள்ளேன்.தற்போது நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக நான் கருத்துரை ஆற்றச் செல்லும் அனைத்து நிகழ்வுகளிலும்,விழாக்களிலும் சொல்லி வருகிறேன்.நாட்டைக்காக்கும் பணிக்கே பயன்படும் கண்காணிப்புக்கேமரா பேருந்து நடவடிக்கையை கண்காணிக்காதா??? செலவும் ஒரேமுறை செலவு அதுவும் மிகக்குறைவான செலவில் இருபத்தி நான்கு மணி நேரமும் சென்னை தலைமையகத்திலேயே கூட கண்காணிக்கலாம்.நேர்மையான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும்.அநியாயமாக தண்டனை பெற மாட்டார்கள்..ஒரு மாதத்திற்கு வழித்தடப்பரிசோதனை என்ற பெயரில் சொகுசாக உலா வரும் அதிகாரிகளுக்கு? ஆங்காங்கே தொழிலாளர்களிடம் வறட்டுக் கௌரவம் காட்டும் அதிகாரிகளுக்கு
(சம்பளமாக கொடுக்கப்படும் மக்கள் வரிப்பணமான)
மாதாமாதம் ஆகும் இலட்சக்கணக்கானரூபாய் செலவும் மீதமாகும்.அவர்களது சுய தேவைகளை நிவர்த்தி செய்யச்சொல்லி தொழிலாளர்களுக்குத்தொல்லை தரும் கேவலமும் இல்லாமற்போகும்.இது எனது அனுபவம்..தேவைப்பட்டால் தங்களது இன்பாக்ஸ்க்கு அனுப்பி வைக்கிறேன்.அல்லது ஓரிடத்தில் கருத்துக்களம் விவாத மன்றம் அமைத்து அனைத்து தரப்பினரையும் அழைத்து விவாதிக்க ஏற்பாடு செய்தால் நான் தயார்..ஆதாரத்துடன் விவாதிக்க..ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரி வரமாட்டார்..அவர்களையும் வரவழைக்க முடியுமா??
சாப்ட்வேர் கம்பெனிகளில் நடத்தும் 360 டிகிரி அப்ரைசல் முறையை கடைப்பிடிக்க சம்மதம் தெரிவிக்க வேண்டுகிறேன்.அவர்கள் பெறும் சம்பளமும் மக்களின் வரிப்பணம்தாங்க..
முதலில் கீழிருந்து மேல் வரை அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும்.தீய பழக்கங்கள் இல்லாதவர்களை அடையாளப்படுத்த வேண்டும்.அப்போதுதாங்க என் போன்றவர்களின் நல்ல பழக்கங்களான புகைத்தல் இல்லாமை,மது போதை பழக்கம் இல்லாமை,பிறமாது உறவு இல்லாமை போன்றவை தனிமனித ஒழுக்கம் பற்றி அனைவரும் உணர முடியும்..இதற்காக என்போன்றவர்களை பாராட்ட வேண்டாம்.தொல்லை கொடுக்காமல் இருந்தால் சரி..அதாவது அதிகாரிகளுடன் மது அருந்த வரச்சொல்லாமல் இருந்தால் சரி.(இன்னும் பல தீயவைகள் நடந்தேறி வருகின்றன.அவைகள் நாகரீகம் கருதி வெளியிட விரும்பவில்லைங்க).இது.2000இல் தாளவாடியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கிளை மேலாளர் ராமனாதன் அவர்கள் சுய நலனுக்காக என்னிடம் கேவலமாக நடந்துகொண்டது.அதுமட்டுமின்றி அப்போது பணியிலிருந்த செக்யூரிட்டி கார்டு அவர்கள் அந்த மானேஜருக்கு மாமா வேலை பார்த்து காவல் இருந்தது.அதைக் கண்டித்த எனக்கு இட மாறுதல் செய்து சொல்லொண்ணா துன்பங்களைக்கொடுத்தது..மறக்க முடியுமா?? அவசியம் ஒவ்வொரு கிளையிலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த வேண்டும்.அப்போதுதாங்க பணி புரியும் இடம் புனிதம் ஆகும்.பணியாற்றுபவர்களுக்கு பய உணர்வு வரும்..இதோ பகிர்ந்துள்ள போர்டுகளிலுள்ள வாசகங்களைப்படித்துப்பாருங்க...இது தங்களுக்கான மாதிரிதாங்க.தற்போது தாளவாடி கிளையில்பணியாற்றும் கிளை மேலாளர் உட்பட அனைவருமே சிறப்பான முறையில் பணியாற்றுகிறார்கள்..அவர்களுக்கு எனது பதிவால் வருத்தமடைந்தால் அதற்காக அவர்களிடம் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன்.
உண்மையைச்சொல்லித்தானே ஆக வேண்டும்.
மனித நேயம் வேண்டும் முதலில்.மக்களின் துன்பங்களை உணர வேண்டும்..மக்களோடு மக்களாக வாழ்ந்து பார்க்க வேண்டும்.மனச்சாட்சி வேண்டும்.
கீழே  தங்களது பார்வைக்கான ஒரு உதாரணமே! 
        4.12.2011அன்று அனைத்து தொழிற்சங்கங்களின் அறிவிப்பு பலகைகளில் கிளை மேலாளர் பற்றிய விமர்சனம்

No comments:

Post a Comment