Tuesday, December 27, 2011

ROAD SAFETY- POEM

             அன்பு நண்பர்களே,வணக்கம். 
                     PARAMESDRIVER.BLOGSPOT.COM வலைப்பதிவிற்கு தங்களை வரவேற்கிறேன். 
                  திருமிகு. அ.ப.முத்துசாமி,இயக்கூர்தி ஆய்வாளர் அவர்களது   கவிதை....
சாலைப் பாதுகாப்புக்காக...........தங்களது சிந்தனைக்காக...........
      
          தானங்களில் செயற்கரிய தானம்
                சாலையில் நிதானம்
   
        ஆற்றல்மிக்க மனித சக்தியை
            ஆஸிலேட்டர் அமுக்கத்திலா அழித்துவிடுவது

      விலைமதிப்பில்லா மனித உயிரினை
           விபத்திலா பறி கொடுப்பது

      கண்கூசும் விளக்கின் ஒளி
        கல்லறைக்கு செல்லும் வழி

     காற்று ஒலிப்பானின் அதிர்வுகளால்
         கருவறைக்குழந்தைக்கு கனவில்கூட அச்சம்

    அதிவேகப் பயணத்தால்
       அஸ்தமிக்கப்படுகிறது மனித ஜன்னம்

   100-ல் வாகனத்தை இயக்குவதால்
        108 பின் தொடரும் அவலம்

    தலைக்கவசம் இல்லாததால் 
        தலைமுறையை இழக்கும் அபாயம்

    போதையில் ஏற்படும் விபத்துகளுக்கு
       மேதைகள் கூட விதிவிலக்கல்ல

    சாதனைகள் புரிவதற்கும்
        சாலைப்பாதுகாப்பு அவசியம் வேண்டும்..


          மிதமான வாகனப்பயணம்
                   
மீதமாகும் வாழ்க்கைப்பயணம்!
                  
சாலை ஞானம் வளர்ப்போம்
                 
சாலை விபத்தை தடுப்போம்!
                
மனிதனை கொண்டு செல்வதற்குத் தான்
                
வாகனம். கொன்று செல்வதற்கு அல்ல!
                
விழி பூட்டைத் திற……
                
விழிப்பூட்டைப் பெற
                
மூன்று கண்ணாடி பொருத்திடு
                
மூன்றாம் கண்ணைத் திறந்திடு!
                
மனம் உழன்றது
               
வாழ்க்கைச் சக்கரத்தில்….
               
உடல் சுழன்றது
               
வண்டிச் சக்கரத்தில்….
              
சேமிக்க நினைத்து சில நொடிகள்
              
சேதம் அடைந்தது பல உயிர்கள்
              
சிகப்பு விளக்கை மதித்திடு
              
இரத்தம் சிந்தாமல் பிழைத்திடு!





                              பதிவேற்றம்..
                         PARAMESDRIVER // 
                    TAMILNADU SCIENCE FORUM - 
                         THALAVADY - ERODE(DT)

No comments:

Post a Comment