அன்பு நண்பர்களே,வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்! ஆமாங்க,இன்றைக்கு காலை ஈரோடு பழையபாளையம் ரோட்டரி சி.டி.ஹாலில் சரியாக 9-30 மணிக்கு சென்றபோது கூட்டம் கூட்டமாக ஆனந்தக்களிப்புடன் ஆங்காங்கு குழுமியிருந்த வலைப்பதிவர்கள் படையினைக்கண்டவுடன் எனக்கு சந்தோசம் தாங்க முடியலைங்க! ஈரோடு மாவட்டம் மட்டுமல்லங்க, தமிழகம் முழுவதும் இருந்து எழுத்தாளர்,திரைப்பட இயக்குனர்,வலைப்பதிவர்கள்,முகநூல் பதிவர்கள்,ட்விட்டர் பதிவர்கள் என பட்டாளம் பட்டாளமாக, குழுமம் குழுமமாக அடடா! என்னவென்று சொல்வது? சரி இதற்கு மேல் எனக்கு பதிவிடவும் தெரியலை? பிறகு யோசனை செய்து பதிவிடுகிறேன். இப்போதைக்கு படங்கள் பற்றி!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!??!!?
முதலில் சமையல்.ஏனுங்க! காலை சிற்றுண்டி,மதியம் சாப்பாடுஅசைவம்,சைவம் என வகைவகையான சாப்பாடு .நானும் விட்டேனா! வயிறுமுட்ட ஒருபிடி பிடிச்சுட்டுத்தான் மறுவேலை பார்த்தேனுங்க. உண்மையிலேயே சமையல்காரருக்கு அனைவரின் சார்பாக வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!!வாழ்த்துக்கள்!!!
அடுத்து சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த மரியாதைக்குரிய ஸ்டாலின் குணசேகரன் அவர்கள்!இந்த வருடம் மக்கள்சிந்தனைப்பேரவை நடத்திய புத்தத்திருவிழாவில் நானே ஆயிரத்து இருநூறு ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கினேங்க! கண்டவர்கள் எல்லாம் வந்து வாசிக்கவே புத்தகத்திருவிழா! என்ன பெருந்தன்மை பாருங்க.அதற்காகவே அவர்களை ஊக்குவிக்க நான் புத்தகம் வாங்கினேங்க.(இவரு நடத்திய புத்தகத்திருவிழாவில் இதுவரை சிறிதும் இலாபம் என்பதே இல்லை.அதுவும் இலட்சக்கணக்கில் நஷ்டபடுவதாகவும் தகவலுங்க! இவரது குறிக்கோள் ஈரோடு மாவட்ட மக்கள் வாசிப்புத்திறனை மேம்படுத்த வேண்டும் என்ற சமூக நல சிந்தனைங்க!)
அந்த மாமனிதர் உரையாற்றியபோது எடுத்த படங்க! கீழே,
அடுத்து ''கூகுள் ''ஆண்டவரைப்போல (என்னைப்போல சாதாரண எழுதப்படிக்கத்தெரிந்தவர்கள் கூட புகைப்படக்கலையில் ஆர்வம் மேலிடும் அளவுக்கு) தமிழ் ஆர்வலர்களுக்கு கிடைத்த ஆண்டவருங்க,இந்த ''கருவாயன்'' !?!என்ற புனைப்பெயரில் வலம் வரும் திரு; சுரேஷ்பாபு !....இவரு சத்தியமாக கருப்பு இல்லைங்க! இவரது குழுமத்தின் PHOTOGRAPHY.IN.TAMIL வலைப்பக்கம் சென்று பாருங்க! நீங்களும் புகைப்பட நிபுணர்தான். தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தேனியைச் சேர்ந்த நண்பர் ஒருவர் எனது தகவல் வழி P.I.T. அதாவது தமிழில் புகைப்படக்கலை என்ற வலைப்பக்கம் சென்று பயனடைந்து இன்று தேனி மாவட்டத்தில் புகைப்பட நிபுணராக விளங்கி வருகிறார்.இந்த தகவலை கடந்த 24& 25 மற்றும் 26ந்தேதிகளில் 19-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாடு சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றபோது வருகை தந்தவர் என்னிடம் சொன்னாருங்க.மரியாதைக்குரிய நண்பர் சுரேஷ்பாபு அவர்களை நேரில் கண்டு உரையாடி மகிழ்ந்தேனுங்க! அந்த சுரேஷ் பாபு தாங்க கீழே உள்ள படம்.(கட்டம் போட்ட சர்ட் அணிந்தவர்)
அடுத்து திருப்பூர் வலைப்பதிவர்கள் சங்கமம் சார்ந்த நண்பர் பட்டாளங்க! நீங்க கீழே காண்பது,
அடுத்து சென்னையைச் சேர்ந்த நண்பர் மரியாதைக்குரிய பிரபு அவர்கள் , இவரிடம் மென்பொருள் பற்றிய மற்றும் கணிணி சார்ந்த உபயோகமுள்ள பல வலைத்தள முகவரிகள் கேட்டறிந்தேனுங்க.அவருதாங்க கீழே காணும் படம்.
நன்றி!
PARAMES DRIVER //
TNSFTHALAVADY.BLOGSPOT.COM
No comments:
Post a Comment