2012-ம் ஆண்டுக்கான SLOGAN;-
அன்பு நண்பர்களே,வணக்கம்.
"ACCIDENTS BRING TEARS - SAFETY BRINGS CHEER"
"விபத்தினால் வருவது துன்பம் - பாதுகாப்பினால் வருவது இன்பம்''அன்பு நண்பர்களே,வணக்கம்.
PARAMESDRIVER.BLOGSPOT.COM வலைப்பக்கத்திற்கு வருகை தந்துள்ள தங்களை வரவேற்கிறேன். சாலை விபத்துக்கள் பற்றி மற்ற பதிவுகளிலிருந்து தங்களது சிந்தனைக்கு.................
இந்தியாவில் தான் சாலை விபத்துக்களால் நிமிடத்திற்கு ஒருவர் பலி
[ Fri, Nov 18, 2011, 10:25 am ]
புதுடில்லி: உலகிலேயே இந்தியாவில் தான் சாலை விபத்துக்களால் ஒவ்வொரு நிமிடத்திற்கு ஒருவர் பலியாகின்றனர், 4 பேர் காயமடைகின்றனர். இதில் வாகன ஓட்டுனர்களின் தவறும் முக்கிய காரணமாகிறது. இப்படியே போனால் 2030-ம் ஆண்டில் எச்.ஐ.வி, எய்ட்ஸ்,மற்றும் சர்க்கரை வியாதியை விட சாலை விபத்துக்களால் உயிர்பலி அதிகரித்துவிடும் என மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.இந்தியாவில் பெருகி வரும் வாகனங்களால், விபத்துக்களும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. மக்கள் தொகையும் அதிகம், வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகம், போதுமான அளவு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படாததும் ஒரு காரணமாக இருக்கலாம்.இது குறித்து மத்தியஅரசின் நெடுஞ்சாலை மற்றும் தரைவழி போக்குவரத்து துறையின் செயலர் ஏ.கே. உபாத்யாயா கூறியதாவது:கடந்த 2009-ம் ஆண்டு இந்தியாவில் 4.9 லட்சம் சாலை விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. இதில் 1 லட்சத்து 25 ஆயிரத்து 660 பேர் பலியாகியுள்ளனர். 5 லட்சம் காயமடைந்துள்ளனர். ஆனால் 2010-ம் ஆண்டில் பலியானவர்கள் எண்ணிக்கை 1.3 லட்சம் அதிகரித்து 4.1 சதவீதம் அதிகரித்துள்ளது. வளர்ந்த நாடுகளில் சாலை போக்குவரத்து விதிமுறைகள் நன்கு திட்டமிட்டு பின்பற்றப்பட்டு வருகின்றன. இதனால் அங்கு சாலை விபத்துக்களை குறைப்பதில் வெற்றி பெற்றுள்ளனர்.. பக்கத்துநாடான சீனாவில் மக்கள் தொகை அதிகம் ஆனால் சாலைவிபத்துக்கள் குறைவு, அமெரிக்காவில் வாகனங்கள் அதிகம் ஆனால் அங்கு சாலைவிபத்துக்கள் குறைவு ஆனால் இந்தியாவில் மட்டும் ஏன் இப்படி ஒரு நிலைமை. சாலை விபத்துக்கள் மோசமான நிலையில் உள்ளது . இந்தியாவில் சாலை விபத்துக்களால் பெரும்பாலும் 25 முதல் 65 வயது வரை உள்ளவர்களில் 52 சதவீதத்தினரும், நடந்து செல்பவர்கள், சைக்கிள், மோட்டார் சைக்கிளின் செல்பவர்கள் 39 சதவீதத்தினர் என ஒவ்வொரு நிமிடத்திற்கு ஒருவர் பலியாகின்றனர். 4 பேர் காயமடைகின்றனர். மேலும் டிரைவர்களின் கவனக்குறைவும் உயிர்பலிக்கு முக்கிய காரணமாக அமைகிறது.. இந்நிலை தொடர்ந்தால் வரும் 2030-ம் ஆண்டில் எச்.ஐ.வி. , எய்ட்ஸ், சர்க்கரை நோயால் இறப்பவர்களைவிட சாலை விபத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.இத்தகைய சாலை விபத்துக்களை குறைப்பதற்கும் உயிர்பலியாவதை தடுப்பதற்கும் மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் படி 5 குழுக்களை நியமித்துள்ளது. இக்குழு சில பரிந்துரைகளை சமர்பித்துள்ளது. இதனை மத்திய தரை வழி போக்குவரத்துதுறை அமைச்சரின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தேசிய சாலை பாதுகாப்பு கமிஷன் . 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் இம்முறை செயல்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் அதிகபட்சம் சாலை விபத்துக்களை குறைத்திடவும் உயிர்பலி ஆவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி;-THAALAM NEWS
நன்றி;-THAALAM NEWS
சாலை விபத்துக்களில் திண்டுக்கல் தொடர்ந்து இரண்டாவது இடம்
தினமலர் – பு, 2011 நவ. 16
- சாலை விபத்துக்களில் திண்டுக்கல் தொடர்ந்து இரண்டாவது இடம்
திண்டுக்கல் : தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம், சாலை விபத்துக்களில் பலியாவோர் எண்ணிக்கையில், தொடர்ந்து இரண்டாமிடம் வகிக்கிறது. தமிழகத்தில் நோய்களால் இறப்பவர்களை விட, சாலை விபத்துக்களில் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.
விழுப்புரம் மாவட்டம், தமிழகத்திலேயே அதிகம் பேர் விபத்துக்களில் உயிரிழக்கும் மாவட்டமாக முதலிடத்தை பிடித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில், மதுரை, திருச்சி, கோவை, தேனி, கரூர் என தேசிய நெடுஞ்சாலைகள் செல்கிறது. விபத்தை தடுப்பதற்கு, நான்கு வழிச்சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் விபத்துக்களை தடுக்க முடியவில்லை.
திண்டுக்கல் மாவட்டத்தில், 2010 ஜனவரி முதல் நவ., 15 வரை, 505 பேர் சாலை விபத்துக்களில் இறந்துள்ளனர்; 2,310 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த ஜனவரி முதல் நவ., 15 வரை, 520 பேர் இறந்துள்ளனர்; 1,935 பேர் காயமடைந்துள்ளனர். வாகன ஓட்டிகளின் அதிவேகம், குடிபோதையில் வாகனம் ஓட்டுவது ஆகியவையே விபத்துக்களுக்கு காரணமாக இருக்கின்றன. இரவு 9 முதல் அதிகாலை 5 மணிவரை 75 சதவீதம் விபத்துக்கள் நடக்கின்றன. 25 சதவீதம் விபத்துக்கள் பகல் நேரத்தில் நடக்கின்றன.
நன்றி-; தினமலர்.
PARAMESDRIVER// TNSFTHALAVADY.BLOGSPOT.COM
No comments:
Post a Comment