Monday, June 13, 2011

(21)GOBI ARTS & SCIENCE COLLEGE- GOBI CHETTI PALAYAM.

                               தமிழகத்திலேயே முதல் கல்லூரி
                                          மற்றும் சிறந்த கல்லூரி
                                ====================================

        அன்பு நண்பர்களே, வணக்கம்.

                       நம்ம ஊர் கல்லூரியாம் கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று (13-06-2011) முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அறிமுக வகுப்பு நடைபெற்றது.
                  காலை 08-00 மணி முதலே மாணவ,மாணவியர்கள் அவரவர் பெற்றோருடன் வருகை தர கல்லூரி வளாகம் சுமார் இரண்டாயிரம் பேருடன்  திருவிழாக் கோலம் பூண்டிருந்தது.
                அனைவரும்K.M.R.MAHAL-ல் குழுமியிருக்க  காலை 10-00மணிக்கு மரியாதைக்குரிய தலைவர்P.கருப்பணன்.B.A.B.L. அவர்கள் முதலாக வாழ்த்துரை வழங்கினார்கள்.
     அய்யா அவர்களது வாழ்த்துரையில் மாணவ,மாணவியர் அனைவரும் பல்வேறு ஊர்களிலிருந்தும்,பல்வேறு பள்ளிகளிலிருந்தும் வருகை தந்துள்ளீர்கள்.
          இக்கல்லூரி மற்ற கல்லூரிகளை விட மாறுபட்ட கல்லூரி.
         கோபி வட்டாரத்தில் உள்ள கிராமப்பகுதி மாணவருக்காக 11-07-1967- ல் ஆரம்பிக்கப்பட்டு  பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு சோதனைகளை எல்லாம் சாதனைகளாக்கி பல வளர்ச்சிகளைக் கண்டு இன்று சிறந்த கல்லூரியாக உருவாகி உள்ளது.
          இங்கு முதலில் ஒழுக்கம் அடுத்ததே கல்வி என கடைப்பிடிக்கப்படுகிறது.             
              முதலில் பெற்றோருக்கு மதிப்புக்கொடுங்கள். அடுத்து பெரியோர்களுக்கும்,ஆசிரியப் பெருமக்களையும் மதித்து நடந்தால் அதுவே கல்வியில் பாதி நிலை தாண்டியமைக்கு சமம்.                                        
          எனவே அனைவரும் நம்ம கிராமச் சூழலுக்கேற்றவாறு ஒழுக்கத்துடன் கல்வியையும் கற்று நீங்களும் முன்னேற வேண்டும், இந்த சமூகத்திற்கும் நல்ல பணியாற்ற வேண்டும்.  என்று உரையாற்றினார்.

          அடுத்து மரியாதைக்குரிய செயலர் மற்றும் தாளாளர் K.M..நடராஜன்.B.A.B.L.,.அவர்கள் தமது வாழ்த்துரையில்      
            கிராமப்பகுதியிலிருந்து வருகை தந்துள்ள அனைத்து மாணவச் செல்வங்கள் மற்றும் அவர்தம் பெற்றோர்கள் அனைவருக்கும் முதல் வணக்கம்.
             இக்கல்லூரி 46 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மிகச்சிறப்பான கல்லூரி
          .கிராமப்பகுதியைச் சார்ந்த ஏழைக் குடும்பத்தைச் சார்ந்த மாணவ,மாணவியரும் உயர் கல்வி பெற்று முன்னேற்றமடையும் பொருட்டு             கடந்த 43 ஆண்டுகளாக மிகக்குறைவான கட்டணத்தில் சிறப்பான உயர் கல்வியினை இங்குள்ள பேராசிரியப் பெருமக்கள் அன்புடனும் அதே சமயத்தில் நட்புடனும் ஒழுக்கம் நிறைந்த கல்வியினைக் கற்றுக் கொடுக்கின்றனர்.

          இந்த அரிய வாய்ப்பினை அனைத்து மாணவ,மாணவியரும் பயன்படுத்திக் கொண்டு தமது வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பதோடு இந்த நாட்டின் முன்னேற்றத்திற்கும் சமூக சேவை அக்கறையோடு பாடுபட வேண்டும்.
          இக்கல்லூரியில் குற்றம் குறை இருந்தால் பெற்றோர்களாகிய நீங்கள் அவசியம் எங்களிடமோ அல்லது முதல்வரிடமோ இக்கல்லூரி சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருப்பினும் அவர்களிடம் சொல்லுங்கள்.
         கண்டிப்பாக குறைகள் களைந்தெறிய எந்நேரமும் இந்தக் கல்லூரி நிர்வாகம் தயாராக உள்ளது. என்று உரையாற்றினார்.

          அடுத்து உரையாற்றிய மரியாதைக்குரிய முதல்வர் DR.R..செல்லப்பன்.M.B.A.,M.COM.,M.PHIL.,D.L.L.P.hD,அவர்கள் தமது உரையில்   
           1987-ல் தன்னாட்சி அனுமதி பெற்ற இக்கல்லூரியில் நடத்தப்படும் அனைத்து தேர்வுத்தாள்களையும் பிற மாவட்டங்களைச் சார்ந்த கல்லூரிப் பேராசிரியர்கள்தான் திருத்துவார்கள்.
          இன்னும் பல கட்டுப்பாடுகளைக் கொண்டது இக்கல்லூரி.
           எனவே இங்கு முறைப்படி அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு சரியாக நடைபெற்று வருகிறது.
           கடந்த ஆண்டு சிறந்த கல்லூரிக்கான முதல்வர் விருது எனக்குக்கொடுத்து கௌரவித்தது கல்வி மற்றும் மேலாண்மைக்கான பன்னாட்டு நிறுவனம்.

         அந்த விருது இங்கு சிறந்த முறையில் பணியாற்றிய அனைத்து பேராசிரியர்களின் ஒத்துழைப்பாலும் பிற அலுவலகப் பணியாளர்கள் மற்றும் இங்கு கல்வி கற்கும் அனைத்து மாணவச்செல்வங்களின் ஒத்துழைப்பாலும்தான் கிடைத்தது.

          எனவே, அவ்விருதினை இக்கல்லூரிக்கே ஒப்படைக்கிறேன் என்றார்.
        பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளுக்கு நடைபெறுவதைப் போல்
       கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இங்கு மட்டுமே கலந்தாய்வு  முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்
        .மேலும் இக்கல்லூரியில் மின் வெட்டு என்பதே கிடையாது என்ற வகையில் ஜெனரேட்டர் இயக்கப்படுகிறது.எனவே கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற பாடங்களுக்கு  மின் வெட்டுப் பிரச்சினையே கிடையாது.என்றார்.
            இங்கு உள் கட்டமைப்பு வசதிகள் மிகச் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளன.
         உணவு விடுதி  ஒரே சமயத்தில் 250 பேர் அமர்ந்து உணவருந்தும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
        தரமான சுகாதாரமான உணவு குறைந்த விலையில் தரப்படுகிறது.கிராமச் சூழலுக்கேற்றவாறு கலாச்சார சீர்கேடு ஏற்படாவண்ணம் ஒழுக்கத்திற்கும்,பண்பாட்டிற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
         எனவே உடை அணிவதில் மிகவும் கட்டுப்பாடு கடைப்பிடிக்கப்படுகிறது.
         ஆண்கள் பேண்ட் மற்றும் சர்ட் மட்டுமே நாகரிகமாக அணிந்து வர வேண்டும்.
        பெண்கள் சுடிதார்-துப்பட்டா அல்லது சேலை அல்லது பாவாடை தாவணி மட்டுமே அணிந்து வர வேண்டும் . என்றார்.
       எக்காரணம் கொண்டும் மொபைல் போன் அனுமதி இக்கல்லூரி வளாகத்தினுள் இல்லை
         ,மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
      இதற்கு பெற்றோர்களாகிய நீங்கள் முழு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும் என்றார்.
        இக்கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவ,மாணவியரின் வருகைப்பதிவேடு, தேர்வு மதிப்பெண் விபரம் அன்றாடம் பெற்றோர்களின் மொபைல் போன் நெம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
      எனவே முடிந்தவரை ஒரே எண்ணைப் பயன்படுத்துங்கள்,அல்லது மாற்றப்பட்ட எண்ணை அவ்வப்போது கல்லூரிக்கு பெற்றோர்களாகிய நீங்கள் நேரடியாகத் தெரியப்படுத்துங்கள்,
     மேலும் அடிக்கடி கல்லூரிக்கு வருகை தந்து மாணவர்களின் செயல்பாடுகளைக் கேட்டறிந்தும் , இக்கல்லூரி செயல்பாடுகளைக் கேட்டறிந்தும் குறைகள் இருந்தால் தெரியப்படுத்தி நிர்வாகம் செம்மைபட உதவுங்கள் என்றார்.
                   பெற்றோர்கள் சாதி,மத வேறுபாடின்றி தாழ்வு மனப்பான்மை கொள்ளாமல் அடிக்கடி உரிமையோடு முதல்வரிடம் அணுகி மாணவர்களின் முன்னேற்றம் குறித்து விபரம் அறிந்து கொள்ளலாம். அதற்காக தாம் எப்போதும் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
             வன்பகடி எனப்படும் ராக்கிங்  இக்கல்லூரியில் நடைபெறுவதுமுழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
            எனவே முதலாம் ஆண்டு மாணவர்கள் எவ்வித பயமும் இன்றி நடமாடலாம் என்றும் மீறி யாராவது உடலையோ,மனதையோ சிறிதளவும் புண்படும்படி நடந்து கொள்வதாக உணர்ந்தால்
        உடனடியாக ஆங்காங்கு வைக்கப்பட்டுள்ள புகார்ப்பெட்டிகளில் அல்லது முதல்வர் அல்லது கல்லூரி பேராசிரியர்கள் அல்லது காவல்துறை அல்லது பெற்றோர் சங்க நிர்வாகிகள் என ஆங்காங்கு ஒட்ட வைத்துள்ள நோட்டீஸ்களில் கண்டுள்ள நபர்களின் மொபைல் எண்களுக்குத் தொடர்பு கொண்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
          அதேபோல் அரசுப் பேருந்துகளுக்கு இலவசப் பயண அட்டை கல்லூரி வளாகத்தினுள்ளேயே பெற்றுத்தரப்படுவதாலும்
         அனைத்துப் பேருந்துகளும் கல்லூரிக்குள்ளேயே வந்து செல்வதாலும் அனைவரும் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு
              இரு சக்கர வாகனப் பயணத்தினை முற்றாகத் தவிர்த்து படிப்பில் நன்கு ஈடுபாடு காட்டவேண்டும் என்றார்.
            அதேபோல் பேருந்தில் படிக்கட்டுப் பயணத்தினை முழுமையாகத் தவிர்த்து பாதுகாப்பான பயணத்தினை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
           இங்குள்ள நூலகம் மற்ற கல்லூரிகளை விட மிகச்சிறந்த முறையில் மிக அதிக எண்ணிக்கையில் புத்தகங்களும், அன்றாட உலக நடப்புகளை அறிந்து கொள்ளவும் ,பொது அறிவினை வளர்க்கும் விதமாக நூலகத்திற்கு அனைத்து தினசரி செய்தித்தாள்கள் மற்றும் வாராந்திர, மாதாந்திர  பத்திரிக்கைகள் வாங்கப்பட்டு வருகின்றன.
              அதேபோல கடந்த ஆண்டுகளின் அனைத்து பத்திரிக்கைகளும் பாதுகாக்கப்பட்டு வருவதால் கடந்த கால செய்திகளை உடனடியாகப் பெற்றுக்கொள்ளவும் முடியும்.
           வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக் கொள்வது மாணவர்களுடைய பொறுப்பாகும்.என்றார்.
             உதவித்தொகை அரசு,மற்றும் கல்லூரி நிர்வாகம் மற்றும் பெற்றோர் சங்கம் மற்றும் முன்னாள் மாணவர் சங்கம் என பல தரப்பு களிலிருந்து  250க்கும் அதிகமான மாணவர்களுக்கு இலவசக் கல்வி வருடா வருடம் வழங்கப் பட்டு வருகிறது.
            எனவே அந்தச் சலுகையினையும் பெற மாணவர்கள் முயற்சி செய்து அதிக மதிப்பெண்கள் பெற்று பெற்றோர்களது நிதிச் சுமையினைக் குறைக்க வேண்டும் .என்றார்  ........        

         paramesdriver.blogspot.com

No comments:

Post a Comment