Friday, March 29, 2013

நுகர்வோர் நலன் மற்றும் சாலைப்பாதுகாப்பு இயக்கம்-தமிழ்நாடு - 2013

 மரியாதைக்குரிய நண்பர்களே,
     வணக்கம். 
      நுகர்வோர் நலன் மற்றும் சாலைப்பாதுகாப்பு இயக்கம்-தமிழ்நாடு வலைப்பக்க முகவரி
  consumerandroad.blogspot.in 

      மற்றும் மின்னஞ்சல் முகவரி
consumerandroad@gmail.com 
     
      தொடர்பு கொள்ள வேண்டுகிறோம். 
         நன்றிங்க என 
      C.PARAMESWARAN -
        THALAVADY -ERODE DT.

Saturday, March 16, 2013

சத்தியில் முப்பெரும் விழா-15-03-2013



சத்தியமங்கலத்தில் முப்பெரும் விழா-15-03-2013

    
   மரியாதைக்குரிய நண்பர்களே,
                               வணக்கம். 15-03-2013 இன்று
     உலக முக்கிய தினங்களில் ஒன்றான ''உலக நுகர்வோர் தினவிழா'' ஆகும்.இன்றைய தினத்தில் ஈரோடு மாவட்டம் - சத்தியமங்கலத்தில் சமூக நலனுக்கான பொதுச் சேவை அமைப்பு  இனிய உதயமாகி உள்ளது.அது பற்றிய விவரம் காண்க.






 
                சத்தியில் முப்பெரும் விழா.
     சத்தியமங்கலத்தில்15-03-2013 அன்று உலக நுகர்வோர் தினவிழா மற்றும் தேசிய தினவிழா மற்றும் சமூக சேவைக்கான புதிய அமைப்பு துவக்க விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
     சத்தியமங்கலம் லோகு கனரக வாகன ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் நடைபெற்ற இவ்விழாவில் ‘’நுகர்வோர் நலன் மற்றும் சாலைப்பாதுகாப்பு இயக்கம்-தமிழ்நாடு’’ என்ற பெயரில் புதிய சமூக சேவை அமைப்பு உருவாக்கப்பட்டது.

    விழாவிற்கு 
            திரு.A.A. இராமசாமி அவர்கள் தலைமை வகித்தார்.       
           திரு,K. லோகநாதன் அவர்கள் முன்னிலை வகித்தார்.
           திரு. V.ராஜன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். 
           திரு. C. பரமேஸ்வரன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். 
           திரு.V. பாலமுருகன்-தாளவாடி அவர்கள் நன்றி கூறினார்.

   நுகர்வோர் நலன் மற்றும் சாலைப் பாதுகாப்பு இயக்கம் – தமிழ்நாடு என்ற புதிய சமூக சேவை அமைப்பிற்கு நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.
     இந்த இயக்கம் ‘வாழு வாழ விடு’ என்ற குறிக்கோளை அடிப்படையாகக் கொண்டு சாதி,மத,இன,மொழி வேறுபாடின்றி பொதுநலனுக்காக செயல்படும்.
 மேலும்,பொது மக்களுக்கு
      (1) நுகர்வோர் கல்வி கொடுப்பதற்காக, சட்ட விழிப்புணர்வு கொடுப்பது, நுகர்வோர் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு பற்றிய கருத்தரங்கு , பயிலரங்கம் நடத்துவது.
      (2) சாலைப்பாதுகாப்புக் கல்வி கொடுப்பதற்காக,ஓட்டுநர் தினவிழா,பயணிகள் தினவிழா,பாதசாரிகள் தினவிழா,நடத்துவது.முதலுதவிப் பயிற்சி மற்றும் மருத்துவ ஆலோசனை& சிகிச்சை முகாம்.மற்றும் மன அழுத்தம் போக்க யோகா வகுப்புகள் ஆகியன இலவசமாக நடத்துவது.
    (3)இளைய சமுதாய நலனுக்காக கலாச்சாரச் சீர்கேடு,மது போதையின் தீமைகள்,மற்றும் நமது பண்பாடும் குடும்ப உறவும் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்துவது.
    (4) மலைப்பகுதி மக்களுக்காக சமூக முன்னேற்றத்திற்கான விழிப்புணர்வு, வனப்பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு,உயர் கல்விக்கான விழிப்புணர்வு கொடுப்பது..
  (5) மக்கள் நலனுக்காக நடத்தப்படும் அரசுத்துறைகள் சார்ந்த நிகழ்ச்சிகளிலும்,அரசு சாரா சமூக சேவை அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் இணைந்து செயல்படுவது.
        போன்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  விழா ஏற்பாட்டினை திரு. S.ரவி கடம்பூர் மலை, மற்றும் தனபால் – தனம் மொபைல் ஆட்டோ சத்தி ஆகியோர் செய்து இருந்தனர்.
          நிர்வாகிகள் பட்டியல் விவரம் காண்க.

            ++++++++++++++++++++++++++++
  நுகர்வோர் நலன் மற்றும் சாலைப் பாதுகாப்பு இயக்கம்.-
                     தமிழ்நாடு.

   
     DATE;- 15-03-2013 FRI DAY. 05-00P.M.

       
         நிர்வாகிகள் பட்டியல் விவரம்;-

தலைவர்- திரு.A.A. இராமசாமி அவர்கள்,

             ஸ்ரீகணபதி அரிசி மண்டி -சத்தியமங்கலம்.

துணைத் தலைவர்- திரு.S. ரவி அவர்கள்,

                    கடம்பூர் மலை.

செயலாளர் – திரு. C.பரமேஸ்வரன் அவர்கள் -சத்தியமங்கலம்.

துணைச் செயலாளர் – திரு.V. ராஜன் அவர்கள் -காசிபாளையம்.(கோபி)

பொருளாளர் – திரு. V.பாலமுருகன் அவர்கள்,

                 முத்திரைத்தாள் விற்பனையாளர் -தாளவாடி.

ஒருங்கிணைப்பாளர் – திரு.K. லோகநாதன் அவர்கள்,

                    லோகு கனரக வாகன ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி,

                     209 தேசிய நெடுஞ்சாலை- சத்தியமங்கலம்.

தகவல் தொடர்பு ஆலோசகர் – திரு. வேலுச்சாமி அவர்கள்,

                          செய்தியாளர்- சத்தியமங்கலம்.

செயற்குழு உறுப்பினர்கள்.

திரு. தனபால் அவர்கள்,

        தனம் மொபைல் ஆட்டோ.- சத்தியமங்கலம்.

திரு. A.P.ராஜூ அவர்கள், தாளவாடி

திரு.A.D. பிரபு காந்த் அவர்கள்,

     ஸ்ரீவாசவி தங்க மாளிகை- சத்தியமங்கலம்.

திரு. K.A.B.சதீஷ்குமார் அவர்கள்,

     கிருஷ்ணா கல்யாண் ஸ்டோர்ஸ்-,சத்தியமங்கலம்.

திரு.மனோஜ் பாண்டியன் அவர்கள்,

            செய்தியாளர் -சத்தியமங்கலம்.

திரு. சிவக்குமார் அவர்கள்,

      செய்தியாளர் -சத்தியமங்கலம்.

திரு. S.பரமேஸ்வரன் அவர்கள்,

       எல்.ஐ.சி.முகவர்,- கோபி செட்டிபாளையம்.
                       பதிவேற்றம்;- 
          திரு. C.பரமேஸ்வரன் அவர்கள், செயலாளர்- 
       நுகர்வோர் நலன் மற்றும் சாலைப்பாதுகாப்பு இயக்கம்-
                       தமிழ்நாடு.

02 பிப்ரவரி 2013

சாலைப்பாதுகாப்பு-பட்டறிவும்! கேட்டறிவும்

மரியாதைக்குரிய நண்பர்களே,
                        வணக்கம். 
                  சாலைபாதுகாப்பு வாரவிழா கடந்த ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி முதல் ஏழாம் தேதி வரை விளம்பரத்திற்காக என்றில்லாமல் விழிப்புணர்வுக்காக என்ற சமூக நலன் நோக்கத்தோடு தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி,வட்டார போக்குவரத்து பகுதிநேர அலுவலகம் சத்தியமங்கலம்,ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள் சத்தியமங்கலம்,காவல் துறை தாளவாடி,அரசு போக்குவரத்துக்கழகம் தாளவாடி, காவல்துறை ஆசனூர்,மதுவிலக்கு அமல் பிரிவு ஆசனூர்,தீயணைப்பு மற்றும் மீட்பு பணித் துறை ஆசனூர்,வனத்துறை ஆசனூர்,ரோட்டரி கிளப் ஆப் தாளவாடி,ஒய்ஸ்மென் கிளப் ஆப் தாளவாடி,மனித உரிமைகள் கழகம் தாளவாடி,பாம்2 என்.ஜி.ஓ. தாளவாடி,ஜெ.எஸ்.எஸ்.தொழிற்பயிற்சி நிலையம் தாளவாடி,ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தாளவாடி,டிவைன் மெட்ரிக் பள்ளி தாளவாடி,புனித அன்னாள் உயர்நிலைப்பள்ளி தாளவாடி,மற்றும் மக்கள் பிரதிநிதிகள்,பண்ணாரி அம்மன் கரும்பு அலுவலகம் தாளவாடி,அனைத்து தனியார் மற்றும் அரசு ஓட்டுனர்கள்,கனரக வாகன ஓட்டுனர்கள் தாளவாடி,சமூக தன்னார்வலர்கள்,ஆகிய அனைவரையும் இணைத்து கருத்தரங்கம்,விவாத மேடை,கருத்துக்கள் தொகுப்பு என சேகரித்து அதனடிப்படையில் நான் சாலைப்பாதுகாப்பு பற்றிய புத்தகம் ஒன்று எழுதி வருகிறேன்.கிட்டத்தட்ட முடிவுறும் நிலையில் உள்ளது. அதில் சாலைகளின் வகைகள்,பாகங்கள்,தன்மைகள், வாகனங்களின் பாகங்கள்,தன்மைகள்,பிரிவுகள், வாகனம் ஓட்டுனர்கள்தொழில் செய்பவர்கள்,சொந்த தேவைக்காக ஓட்டுபவர்கள் பற்றிய விபரங்கள்,வாகனம் ஓட்டும் முறைகள்,சாலை விதிகள்,போக்குவரத்துசின்னங்கள்,சைகைகள்,சட்டங்களும்,குற்றங்களும்,
  தண்டனைகளும்,முதலுதவி சிகிச்சை பற்றிய விபரங்கள்,மன அழுத்தங்களைப்போக்க யோகா,தியானம்,மூச்சுப்பயிற்சி,மற்றும் உடல் நலக்குறிப்புகள்,உணவு கொள்ளும் முறைகள் என நூறு பக்கங்களுக்கும் அதிகமாக கொண்ட புத்தகம் வெளியிட உள்ளேன்.கண்டிப்பாக அனைவருக்கும் பயனுள்ள வகையில் இருக்கும் என நம்புகிறேன்.விரைவில் மீண்டும் சந்திக்கும்வரை நன்றி கூறி விடை பெறுவது 
      அன்பன்- PARAMES DRIVER

Tuesday, December 18, 2012

கணினி ‘ – ஆணா… பெண்ணா..?

மரியாதைக்குரிய நண்பர்களே,
              வணக்கம். 
    இதென்ன சோதனைங்க? நீங்கள்தான் தீர்வு சொல்லுங்களேன்!.



        கணினி ‘ – ஆணாபெண்ணா..?
          
 
      ஆசிரியைக்கு உண்மையிலேயே விடை தெரியவில்லை..
எனவே, மாணவர்கள் அனைவரையும் அழைத்து மாணவர்கள்  தனியாகவும், மாணவிகள் தனியாகவும் கூடிப்பேசி இதற்கு முடிவு காணுமாறு அறிவுறுத்தினார்……….
 
      மாணவிகள் கணினி ஆண்பால்தான் என்ற முடிவுக்கு வந்தார்கள் 

           அதற்கு அவர்கள் சொன்ன காரணங்கள் இதோ
1)
அதுக்கு எதையும் சுலபமா புரிய வைக்க முடியாது..
2) உருவாக்கினவனைத் தவிர வேறே யாருக்கும் அதோட நடைமுறையை புரிஞ்சிக்க முடியாது..
3)
நாம ஏதாவது தப்பு பண்ணா மனசுலேயே வச்சிருந்து நேரம் பார்த்து மானத்தை வாங்கும்..
4)
எந்த நேரத்துல புகையும்…. எந்த நேரத்துல மயங்கும்ன்னு சொல்லவே முடியாது..
5)
நம்ம கிட்ட இருக்கறதைவிட அடுத்தவங்க வச்சிருக்கறது நல்லா வேலை செய்யறது மாதிரி தோணும்…!

மாணவர்களோ கணிணி பெண்பால்தான் என்ற முடிவுக்கு வந்தனர்.               
        அதுக்கு ஆதாரமா அவங்க சொன்னது இதோ
1)
எப்பவுமே அடுத்த கணிணியோட ஒத்துப் போகவே போகாது..
2)
எட்ட இருந்து பார்க்க கவர்ச்சிகரமா இருக்கும்.. ஆனா கிட்டபோனாதான் அதோட வண்டவாளம் தெரியும்..
3)
நிறைய ஸ்டோர் பண்ணி வச்சிருக்கும்ஆனா எப்படி பயன்படுத்தணும்ன்னு அதுக்கு தெரியாது..
4)
பிரச்சினையை குறைக்கறத்துக்காக கண்டுபிடிக்கப்பட்டவைஆனா பெரும்பாலான சமயங்கள்ல அதுகளேதான் பிரச்சினையே..
5)
அதை சொந்தமாக்கிக்கிட்ட பிறகுதான் நமக்கு புரியும்.. அடடா இன்னும் கொஞ்சம் பொறுமையா இருந்திருந்தா இதைவிட அருமையான மாடல் கிடைச்சிருக்குமேன்னு…!
Top of Form
Bottom of Form

Sunday, November 4, 2012

அன்பு நண்பர்களே,வணக்கம். இது நம்ம ஊர் சமூக சேவைங்க!



















Wednesday, October 31, 2012

KARATTUR-SATHY-சொர்க்க பூமி மேம்பாடு-2012

மரியாதைக்குரிய நண்பர்களே,வணக்கம்.
            பரமேஸ்டிரைவர் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.சத்தியமங்கலம் வட்டம் அரியப்பம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட கரட்டூர் கிராமத்திற்கு சொந்தமான மயானம் என்னும் சொர்க்கபூமி புதர் மண்டி மிக மோசமான அவலநிலையில் இருக்கிறது.




         நீண்டநாள் முயற்சிக்குப்பிறகு தற்போதுதான் கரட்டூர் பொதுமக்கள் வழிகாட்டிதலில் மகாசக்தி ஆண்கள் குழு செயல்பட்டு அதன் முதல் கட்டமாக மரக்கன்றுகள் நடுதல்,அமரர்களை அடக்கம் செய்ய மண் ஓட்டி சமதளத்தை உயர்த்துதல்,மூலிகைப்பண்ணை,மற்றும்பூங்கா அமைத்து பராமரித்தல்,தண்ணீர்த்தொட்டி அமைத்தல்,உள்புற சாலையை தற்காலிகமாக புதுப்பித்தல்,மின்விளக்கு அமைத்தல்,என துவங்கப்பட்டுள்ளது.





















வாருங்கள் பொதுமக்களுக்காக சமூக சேவை செய்யும் இந்த இளைஞர்களை வாழ்த்துவோம்.வரவேற்போம்.

Friday, October 5, 2012

கொங்குத் தென்றல்: தேசிய கணித ஆண்டு விழா- வரவேற்புக்குழு கூட்டம்-2012...

கொங்குத் தென்றல்: தேசிய கணித ஆண்டு விழா- வரவேற்புக்குழு கூட்டம்-2012...: மரியாதைக்குரிய நண்பர்களே,             வணக்கம். கொங்கு தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.கணித மேதை ராமானுஜருக்கு சிறப்பளி...

கொங்குத் தென்றல்: உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்-தேசியக் கருத்தரங்கம்-2...

கொங்குத் தென்றல்: உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்-தேசியக் கருத்தரங்கம்-2...: மரியாதைக்குரிய நண்பர்களே,        வணக்கம்.                  சென்னை தரமணி-மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகத்தில் அமைந்துள்ள உலகத்தமிழாராய்...