Wednesday, October 31, 2012

KARATTUR-SATHY-சொர்க்க பூமி மேம்பாடு-2012

மரியாதைக்குரிய நண்பர்களே,வணக்கம்.
            பரமேஸ்டிரைவர் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.சத்தியமங்கலம் வட்டம் அரியப்பம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட கரட்டூர் கிராமத்திற்கு சொந்தமான மயானம் என்னும் சொர்க்கபூமி புதர் மண்டி மிக மோசமான அவலநிலையில் இருக்கிறது.




         நீண்டநாள் முயற்சிக்குப்பிறகு தற்போதுதான் கரட்டூர் பொதுமக்கள் வழிகாட்டிதலில் மகாசக்தி ஆண்கள் குழு செயல்பட்டு அதன் முதல் கட்டமாக மரக்கன்றுகள் நடுதல்,அமரர்களை அடக்கம் செய்ய மண் ஓட்டி சமதளத்தை உயர்த்துதல்,மூலிகைப்பண்ணை,மற்றும்பூங்கா அமைத்து பராமரித்தல்,தண்ணீர்த்தொட்டி அமைத்தல்,உள்புற சாலையை தற்காலிகமாக புதுப்பித்தல்,மின்விளக்கு அமைத்தல்,என துவங்கப்பட்டுள்ளது.





















வாருங்கள் பொதுமக்களுக்காக சமூக சேவை செய்யும் இந்த இளைஞர்களை வாழ்த்துவோம்.வரவேற்போம்.

1 comment:

  1. மேலும் சமூக தேவை தொடர வாழ்த்துக்கள்...

    நன்றி...

    ReplyDelete