Thursday, October 29, 2015

பூண்டு மருத்துவ மகிமை

மரியாதைக்குரியவர்களே,
           வணக்கம். பூண்டு மருத்துவம் பற்றி அறிவோம் வாங்க.

பூண்டை தனித்து சாப்பிடும்போது எப்படி சாப்பிடனும்..?
நம்முடைய சமையலறையில் இருக்கும் மருத்துவ உணவுப் பொருட்களில் மிகவும் முக்கியப்பங்கு வகிப்பது வெள்ளைப் பூண்டு. தமிழகத்தின் பாரம்பரிய உணவுகளில் கண்டிப்பாக பூண்டுக்கு இடம் உண்டு. மருத்துவ குணம் வாய்ந்த பூண்டின் மகத்துவத்தை இங்கே பார்ப்போம்.
பூண்டை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே மிகவும் நல்லது. பூச்சிக்கடி உள்ள இடத்தில் பூண்டை வைத்து தேய்த்து விடலாம். பூண்டு சாறும், எலுமிச்சை சாறினையும் கலந்து தேமல் உள்ள இடங்களில்போட தேமல் காணாமல் போய் விடும்.
வெள்ளைப்பூண்டை தினமும் சாப்பிட்டு வந்தால் கொழுப்புக் குறையும். பூண்டை சாப்பிட்டவுடன் கொஞ்சம் அரிசி சாப்பிடுங்கள். பூண்டு நாற்றம் போய் விடும்.
சளிப் பிடிக்கக் கூடியவர்களுக்கு பூண்டை உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் ஆகியவற்றை சேர்த்த சூப் கொடுங்கள். வெள்ளைப் பூண்டை பாலில் வேகவைத்து காலை, மாலை அருந்தலாம்.
வெங்காயத்தை நெய்யில் வதக்கியும் காலை மாலை சாப்பிட்டு வரலாம். உடல் நலம் பெறும். பூண்டு, அதே அளவு வெற்றிலையும் சேர்த்து அரைத்து எச்சில் தழும்பின் மீது பூசி ஊறவிட்டு கழுவவும். இப்படி தொடர்ந்து செய்தால் முன்றே நாளில் எச்சில் தழும்பு மறைந்து விடும்.
* குழந்தை பெற்ற பெண்களுக்கு தினந்தோறும் இரவில் பாலில் பூண்டு போட்டு காய்ச்சிக் கொடுத்தால் தாய்ப்பால் பெருகுவதுடன் வயிற்று உப்புசம், பொருமல் எதுவும் வராது.
* கர்ப்பப் பையில் சேர்ந்துள்ள அழுக்கை அகற்றும் தன்மை பூண்டிற்கு உண்டு.
* தசைவலி இருக்கும் இடத்தில் பூண்டை நசுக்கி வைத்துக் கட்டினால் வலி சீக்கிரம் குறையும்.
* உடம்பில் கொழுப்பு சேரவிடாமல் தடுக்கும் ஆற்றல் பூண்டுக்கு உண்டு. ஆகையால்தான் கரையாத கொழுப்பு சத்து உள்ள மாமிச உணவு சமைக்கும்போது பூண்டை அவசியம் சேர்க்கின்றனர்.
* இரவு உணவுடன் பச்சையாகவோ அல்லது பாலிலோ மூன்று பூண்டு பற்களை சாப்பிட்டால் ஆழ்ந்த உறக்கம் ஏற்படும். கனவுத் தொல்லை இருக்காது.
* பூண்டிற்கு ரத்த அழுத்தத்தைக் கண்டிக்கும் சக்தி உண்டு. அதனோடு இதய தசைகளையும் ரத்தக் குழாய் தசைகளையும் வலுப்படுத்தும் சக்தி பூண்டிற்கு உண்டு.
* பூண்டு ஒரு நார்சத்து மிகுந்த உணவு என்பதால் மலச்சிக்கலை அகற்றும் குணம் பூண்டிற்கு உண்டு.
* பூண்டை உணவில் சேர்த்துக்கொள்ளும் வாய்ப்பு இல்லாதவர்கள் பூண்டு மாத்திரைகளை சாப்பிடலாம். இதனால் வயிற்று உப்பிசம் நீங்கி, தொப்பை குறையும் வாய்ப்பு அதிகம்.

1 comment: