Thursday, February 12, 2015

திருமணப்பொருத்தம்

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.
 திருமண பொருத்தம்
"திருமணம் ஆயிரம் காலத்து பயிர்", "திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.",  
             இவை திருமணத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பழமொழிகள் ஆகும்.
                  திருமணம் ஒருவருடைய வாழ்வில் திருப்பு முனையாக கருதப்படுகிறது. பல்வேறு நலங்களையும் வளங்களையும் தரக்கூடிய திருமணத்தை பற்றி ஆண் மற்றும் பெண்ணுக்கு பல்வேறு எதிர்பார்ப்புகள் உள்ளன. 
 முன்பின் தெரியாத ஒருவரை மணக்கும் போது அவர் நமக்கு பொருத்தமானவராக இருப்பாரா என்று எப்படி அறிவது?. இதற்குத்தான் ஜோதிடம் உதவுகிறது. 
                 ஆண், பெண் இருவருக்கும் உள்ள மன பொருத்தம், உடல் பொருத்தம் இவற்றை அறிந்து இருவரையும் வாழ்க்கை பயணத்தில் சேர்க்கலாமா? வேண்டாமா? என முடிவெடுக்க உதவுவதே ஜோதிடமாகும்.
         எட்டு வகையான திருமணங்கள் மனுஸ்மிருதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
             அவை தெய்வ விவாகம், பிரம்ம விவாகம், அரிஸ விவாகம், ப்ரஜபடிய விவாகம், அசுர விவாகம், கந்தர்வ விவாகம், ராக்ஷச விவாகம் மற்றும் பிசாச விவாகம் என்பனவாகும்.சாதாரணமாக arranged marriage என்பது ப்ரஜபடிய விவாகமாகும்.
                      ஜாதகத்தின் மூலம் இருவரின் ஆயுள், உடல் நிலை, மன நிலை, குழந்தை பெறும் திறன், விட்டுகொடுக்கும் தன்மை, பாலியல் ஈடுபாடு இவற்றை அறிந்து தகுந்தவர்களை ஜோடி சேர்க்க முடிகிறது.
                     ஜாதகத்தின் இரண்டாம் வீடடை ஆராய்வதன் மூலம் குடும்ப வாழ்க்கை பற்றியும், நான்காம் வீட்டின் மூலம் வீடு, வாகனம் மற்றும் தாயார் பற்றியும் , ஐந்தாம் வீட்டின் மூலம் குழந்தை செல்வத்தை பற்றியும், ஏழாம் வீட்டின் மூலம் வாழ்க்கை துணையை பற்றியும் எட்டாம் வீட்டின் மூலம் ஆயுள் பற்றியும் அறிந்து கொள்ள முடிகிறது. 
                    அத்துடன் இராசி, நட்சத்திர அடிப்படையில் பத்து பொருத்தங்கள் பார்க்கப்படுகிறது. மேலும் செவ்வாய் தோஷம், சர்ப்ப தோஷம், பாவ கிரக தோஷம் இவற்றையும் பார்க்க வேண்டும். 
          ஒரு ஜாதகத்தில் தோஷம் இருப்பின் மற்ற ஜாதகத்திலும் அது போன்ற தோஷம் இருக்க வேண்டும்.
                ஜாதகத்தில் தசா சந்தி இருக்க கூடாது. தாச சந்தி என்பது இருவருக்கும் ஒரே சமயத்தில் ஒரு தசை முடிந்து அடுத்த தசை ஆரம்பமாவதாகும். 6 மாத கால இடைவெளிக்குள் இருவது ஜாதகத்திலும் தசை மாற்றம் ஏற்படுவது நல்லதல்ல. இத்தகைய ஜாதகங்களை சேர்க்க கூடாது. 
              அதே போல் சம தசை என்பது ஆண் பெண் இருவருக்கும் ஒரே கிரகத்தின் தசை நடைபெறுவதாகவும். உதாரணமாக இருவருக்கும் சனி தசை நடைபெற்று சனி இருவருக்கும் ஜாதகத்தில் சரியாக அமையாமல் தீய பலன் தருவதாக இருந்தால் திருமணம் தவிர்க்கப்பட வேண்டும்.

1 comment: