Wednesday, March 30, 2011

(11)வாரிக்கொடுப்பதை விட வழிகாட்டுதல் சிறப்பானது!

             அனைவரும் வாக்களிப்போம்.


 எங்கள் வாக்கு! இலவசமாக தரமான கல்வி மற்றும் நல்லதொருவழிகாட்டி,வேலைவாய்ப்பு,தொழில்வாய்ப்பு பெருக்க  வாக்குறுதி கொடுப்பவர்களுக்கே!!!!!!


அன்பு நண்பர்களே,வணக்கம்.
     
          தற்போது தேர்தல் திருவிழா! துவங்கி இருக்கிறது.ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் அவரவர் பங்குக்கு எங்கும் இலவசம்,எதிலும் இலவசம் என அறிக்கைகளாக அள்ளி வீசுகின்றனர்.

      சிந்திக்க வேண்டிய தருணத்தில் நாம் உள்ளோம்.

   நமது நாடு மனித வளம் மிக்க நாடு. இளைஞர்வளம் மிக்க நாடு என்பதை அனைவரும் அறிந்ததே.

     மனித வளங்களை நாட்டு முன்னேற்றத்திற்காக பயன்படுத்தும் வகையில் நல்ல நல்ல திட்டங்கள் எவ்வளவோ இருக்கும் நிலையில்

        இளைஞர் சமுதாயம் தன்னம்பிக்கை பெறும் விதத்தில்,வேலைவாய்ப்புகள் பெறும் விதத்தில்,தொழில் வாய்ப்புகள் பெறும் விதத்தில் செயற்படுத்தக்கூடிய திட்டங்கள்,

       இந்த சமூகம் பொருளாதாரத்தில் முன்னேற,வாழ்வாதாரங்களைப் பெறும் விதத்தில் நல்ல நல்ல திட்டங்கள் நேர்மையான,முன்னேற்றப்பாதையில் செல்ல வழி வகுக்கும் திட்டங்களை தேர்தல் அறிக்கைகளாக, அளிக்கவோ அல்லது அது போன்ற திட்டங்களை செயல்படுத்தவோ எவ்வித சிந்தனையும் இன்றி ஆட்சியைப்பிடிக்கும் நோக்கத்திற்காக போட்டியிடும் அரசியல்வாதிகள் இலவசம்!இலவசம்!! என்றே பல  கவர்ச்சித்திட்டங்களை எப்போதும்போல வழங்கியவாறு உள்ளனர்.

         இந்த இலவசங்கள் அதனால் ஏற்படும் கடன் சுமைகள் நம் ஒவ்வொருவரின் தலையில் கட்டப்படுகின்றன.உழைக்கும் வர்க்கங்களை,இளைய சமூகத்தை முழு சோம்பேறிகளாக்கி ,மதுவும் மயக்கமுமாகி அனைவரையும் சோம்பேறிகளாக்குகின்றனர்

          .இதிலிருந்து நாம் மீள வேண்டும்.இதற்கு நாம் விழிப்போடு செயல்படவேண்டும். தேர்தல் வாக்குறுதிகள் நாம் கேட்க வேண்டும் 

       அதாவது  எங்களுக்கு இலவசங்கள் வேண்டாம்  வேலைவாய்ப்புகள் பெருக தொழிற்சாலைகள் அமைத்திட வேண்டும்.

        தொழில் வாய்ப்புகள் பெருகிட தேவையான வழிமுறைகள் உருவாக்க வேண்டும்.விவசாயத்தினைக் காக்க அல்லது பெருக்க முனைந்திட வேண்டும்

         .தரமான கல்வியினைக் கொடுத்திட ஆவண செய்யவேண்டும். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள ,திறமையுள்ள,ஆர்வமுள்ள இளைஞர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு தகுதியான பயிற்சியும் ஊக்கமும் கொடுத்து தன்னம்பிக்கையினை வளர்த்து 

       தொழில் நுட்பம் வளர்ந்துள்ள,நாகரீகம் வளர்ந்துள்ள இந்த நவீன உலகத்தில் தடம் மாறும் தடுமாறும் இளைஞர்களுக்கு ஆலோசனையும்,பயிற்சியும் கொடுத்து இளைஞர்களின் திறமைகளை வெளிக்கொணர உண்டான அனைத்து செலவினங்களைஏற்றுக்கொள்ள உறுதி கொடுக்க வேண்டும் .

   அவர்களுக்கே எங்களது வாக்கு என நாம் வாக்குறுதிகள் பெற வேண்டும்.

       அப்போதுதான் நாமும் முன்னேறுவோம்.நமது நாடும் முன்னேறும்.

No comments:

Post a Comment