Saturday, January 29, 2011

(1) REPUBLIC DAY 2011 AT GTRHSS-ASANUR

            குடியரசு தின விழா

    அன்பு நண்பர்களே,
           paramesdriver.blogspot.com வலைப்பதிவிற்கு தங்களை வணங்கி வரவேற்கிறேன். 

   62 -வது குடியரசு தினவிழா ஆசனூர் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட மேல்நிலைப் பள்ளியில் 26-01-2011 அன்று சிறப்பாக நடைபெற்றது.

      மதிப்பிற்குரிய தலைமையாசிரியர் அவர்கள் தலைமை வகிக்க ஈஷா யோக மையம் , பெற்றோர் ஆசிரியர் சங்கம்,கல்வி வளர்ச்சிக் குழு,அனைத்து ஆசிரிய,ஆசிரியைப் பெருமக்களும் ,மாணவ,மாணவியரும் இவர்களுடன் HONEY BEES SOCIAL ORGANIZATION-ம் கலந்துகொண்டது .

        காலை 09 .௦௦ மணிக்குத் துவங்கிய இவ்விழா மதியம் 01 .00 மணிக்கு மகிழ்ச்சிகரமாக நிறைவுற்றது.ஏனைய பகுதிகளைவிட

       கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் பின்தங்கியுள்ள இந்த மலைப்பகுதி மாணவச் செல்வங்கள் சூழ்நிலைக் கேற்ப தங்களைத் தயார்படுத்திக் கொள்வது பற்றி அனைத்து பெரியோர்களும் அறிவுரை வழங்கினர்.

     இறுதியாக தேனீக்கள் சமூக சேவை அமைப்பு  கடந்த 07-01-2011 அன்று தாளவாடியில் நடத்திய சாலைப் பாதுகாப்பு வாரவிழாவினை ஒட்டி நடத்திய வினாடிவினா நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவக் கண்மணிகளுக்கு பரிசுப் புத்தகங்கள் மற்றும் சுய முன்னேற்ற நூல்கள் வழங்கப்பட்டன.paramesdriver.blogspot.com // Sathy & Thalavadi

1 comment:

  1. மதிப்பிற்குரிய நண்பர்களே,வணக்கம்.ஓட்டுனர் பணி மேற்கொண்டுள்ள நான் தமிழுக்கும்,இந்த சமூகத்திற்கும் நம்மால் இயன்ற அளவு சேவை மற்றும் உதவிட வேண்டும்.என்ற ஆதங்கத்தின் காரணமாக,தாளவாடி,சத்தி,கோபி வட்டாரப் பகுதிகளின் நிகழ்வுகளை அனைவருக்கும் சென்றடையவேண்டும்.பல நல்ல விசயங்களை,விழிப்புணர்வினை,சமூகத்திற்கு வழங்க இவ்வாறு ஒரு சிறிய முயற்சியினை மேற்கொண்டுள்ளேன்.தங்களது மேலான ஆலோசனைகளை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்.நன்றி!BY-PARAMESDRIVER / HONEY BEES SOCIAL ORGANIZATION / SATHY & THALAVADY

    ReplyDelete