Friday, February 21, 2014

"பரமசிவம்' பார்த்துக்கொள்வார்...

மரியாதைக்குரியவர்களே,
             வணக்கம்.
                    பரமேஸ் டிரைவர் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.இதோ ஒரு பரமசிவம்.படித்து பாருங்கள்.பதிவிட்ட திருமிகு.நாகூர் கனி காதர் மைதீன் பாஷா அவர்களுக்கு நன்றிங்க.   Nagoorkani Kader Mohideen Basha உடன் Parameswaran Driver    
                   கோவை டவுன்ஹால் வீதியில் உள்ள அந்த சின்னஞ்சிறு வீட்டின் முன் விதவைகளும், வயதானவர்களும், எளிய தொழிலாளர்களுமாக ஒரு சிறு கூட்டம் அவர் எப்போது வருவார் என்று கண்களில் கடைசி நம்பிக்கையை வைத்துக் கொண்டு காத்திருக்கிறது.

வரப்போவது யார் மருத்துவரா, கவுன்சிலரா, அதிகாரியா என்றால் அப்படி எல்லாம் கிடையாது. அவர் சாதாரண பேருந்து ஒட்டுனர். மாதம் பத்தாயிரம் ரூபாய் வருமானத்தில மனைவி, குழந்தைகளுடன் வாழும் சராசரி எளிய இந்தியன்.

ஆனால் அந்த இந்தியனுக்குள் அடுத்தவருக்கு உதவுவது ஒன்றே தன் வாழ்க்கையின் லட்சியம் என்று எரியும் ஜோதிதான் அவரைப்பற்றிய இந்த கட்டுரை.

பெயர் பரமசிவம், வயது 47 ஆகிறது. கோவையில் ஏஜேகே கல்லூரியின் பேருந்து ஒட்டுனராக உள்ளார்.

பத்து வருடங்களுக்கு முன் சில ஆவணங்கள் வாங்குவதற்காக அரசு அலுவலகங்களின் படிக்கட்டுகளில் ஏறி இறங்கவேண்டிய நிலை .அப்போது அவருக்கு ஏற்பட்ட அலைச்சலும், மன உளைச்சலும்தான் அவரை புதிய பாதைக்கு திருப்பியது.

நம்மைப் போலவே அன்றாடம் இதே வேலையாக அலையும் பலருக்கு நமது அனுபவத்தை வைத்து உதவினால் என்ன என்று சிந்தித்தார்.அதன்படி விதவைகள் பென்ஷன், வயதானவர்கள் ஒய்வூதியம் போன்றவைகளை வாங்கிக் கொடுத்தார். வாங்கியவர்களின் கண்களில் ஆனந்தக் கண்ணீரை பார்த்தார் அதன்பிறகு இதுவே தனது வாழ்க்கை என்பதாகக் கொண்டுவிட்டார்.

உதவியதை எல்லாம் நான் கணக்கு வைத்துக் கொள்ளவில்லை என்றாலும் கடந்த பத்து ஆண்டுகளில் இதுவரை பதினைந்தாயிரம் பேர்களுக்கு உதவியிருப்பேன்.

கல்லூரியில் வாகனம் ஒட்டும் வேலை காலை 8 மணியில் இருந்து 10 மணிவரையிலும்,மாலை 4 மணியில் இருந்து 6 மணிவரையிலும்தான்.இந்த நேரம் போக இடைப்பட்ட நேரங்களில் மக்களுக்கு உதவுவது என்று முடிவு செய்தார். இந்த முடிவை கல்லூரி நிர்வாகத்திடமும் சொல்லி அனுமதியும், ஆசியும் வாங்கிக் கொண்டார்.

பத்து மணிக்கு தனது வீட்டிற்கு வந்ததும் காத்திருக்கும் மக்களிடம் பேசுகிறார். மனுதாரர்கள் பேச்சிலும், தரும் தகவல்களிலும்,வழங்கப்படும் சான்றுகளிலும் பொய்யோ, வில்லங்கமோ இல்லாத மனுக்களை மட்டும் எடுத்துக் கொள்கிறார். அவர்களது பிரச்னைகளை அறிந்து கொள்கிறார்அ வர்களுக்கான மனுக்களை தயார் செய்கிறார். பிறகு அது தொடர்பான அரசு அலுவலகங்களுக்கு சென்று அதிகாரிகளை பார்த்து அவர்களுக்கான காரியங்களை செய்து கொடுக்கிறார்.

இதற்காக பத்து பைசா கூட வாங்கியதும் கிடையாது, வாழ்நாள் முழுவதும் வாங்கப்போவதும் கிடையாது. மனிதனாகப் பிறந்தால் மற்றவர்களுக்கு உதவ வேண்டும். எனக்கு இப்படி ஏழை எளியவர்களுக்கு உதவும் வாய்ப்பு கிடைத்ததை பாக்கியமாகவே கருதுகிறேன். இதனால் என் மனசு நிறைந்து இருக்கிறது. திருப்தியும் சந்தோஷமும் உண்டாகிறது. இன்னும், இன்னும் இவர்களுக்காக உழைக்கத் தோன்றுகிறது.

என்னோட நேர்மை மற்றும் அணுகுமுறை பற்றி அனைவருக்கும் தெரியும் என்பதாலும், நான் நியாயமான காரியமாகத்தான் வருவேன் என்பதாலும் அதிகாரிகளும் எனக்கு உதவுகிறார்கள்.

தன் பிள்ளைகளுக்கு கடந்த 12 வருடமாக சாதிச்சான்றிதழ் கிடைக்காமல் அலைந்த ஒருவருக்கு ஒரே நாளில் சாதி சான்றிதழ் வாங்கிக் கொடுத்தபோது " என் பிள்ளைகள் வாழ வழி காட்டியதற்கு எப்படி நன்றி சொல்வேன்' என்று கைகூப்பி சொன்ன ஒரு பெரியவரின் வாழ்த்தையும், ஆட்டோ ஓட்டிய பிள்ளை இறந்த துக்கத்தில் இருந்த ஒரு குடும்பத்திற்கு அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தின் மூலமாக ஒரு லட்சம் பணம் பெற்றுக் கொடுத்ததும் " இருண்ட வாழ்வில் ஒளி ஏற்றிவைத்த நீ நாங்க பெறாத புள்ளைப்பா நல்லாயிரு' என்று சொல்லப்பட்ட வார்த்தைகளையும் விட பெரிய வாழ்த்தும், வாழ்க்கையும் வேறு என்ன இருக்கப்போகிறது என்று சொல்லும் பரமசிவம் இப்போது இந்த அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தை மக்களிடம் பிரபலப்படுத்துவதில் முனைப்பாக இருக்கிறார்.

மக்களுக்கான அரசின் சலுகைகள் நிறையவே இருக்கிறது, அதே போல அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்திடமும் நிறைய திட்டங்கள் இருக்கிறது கொஞ்சம் முயற்சித்தால் நியாயமான எதையும் பெற முடியும். நீங்கள் என்னிடம் வாருங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லும் பரமசிவம் , விதவை பென்ஷன் கேட்டு விண்ணப்பம் எழுத வந்த ஒரு பெண்ணிடம் ஒண்ணும் கவலைப்படாதம்மா ,நிச்சயம் கிடைச்சுடும் என்று ஆறுதலாகவும், அன்பாகவும் நம்பிக்கை வார்த்தைகளை விதைக்கிறார்.

சுயநலமே பிரதானமாக போய்விட்ட இன்றைய உலகில் பொதுநலமே தனது வாழ்க்கையின் பிரதானம் என்று வாழும் பரமசிவம் நீடுழி வாழ வாழ்த்துவோம். இவரை நமக்கு அறிமுகம் செய்துவைத்த ஈரநெஞ்சம் மகேந்தினுக்கு நன்றிகள் பல.

பரமசிவத்துடன் தொடர்பு கொள்ள: 9629105471.

- எல்.முருகராஜ்

Sunday, February 9, 2014

ROAD SAFETY ORGANIZATION OF FACE BOOK FRIENDS IN TAMIL NADU.

சாலை பாதுகாப்பு இயக்கம்.
மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்தில் ''சாலை பாதுகாப்பு இயக்கம்'' என்ற தலைப்பில் மக்கள் நலனுக்கான சாலை பாதுகாப்பு விவாதக்களம் நடத்த புதிய தளம் அமைத்து உள்ளோம்.அனைவரும் பங்கேற்று அவரவர் பகுதியில் நடக்கும் விபத்துக்கள் அதற்கான காரணங்கள்,இழப்புகள்,பாதிப்புகள்.துன்பங்கள்,போன்ற காரணங்களை பகிர்ந்து கொள்ளலாம்.மக்களுக்கு விழிப்பு கொடுக்கலாம்.வாங்க.
   என 
   அன்புடன் 
    பரமேஸ் டிரைவர் - 
       தாளவாடி -
    ஈரோடு மாவட்டம்.

Monday, December 2, 2013

தமிழ்99 தட்டச்ச( மறுபதிவு)

அன்பு நண்பர்களே,
                           paramesdriver.blogspot.com வலைப்பதிவிற்கு தங்களை வணங்கி வரவேற்கிறேன்.
 
          முயற்சியும், விருப்பமும் இருந்தால் அதிக பட்சம் ஒரு வாரத்தில் பழகி விடலாம்.
  
   தமிழில் பலமுறை விசைகள் பயன்படுத்தப்படுகின்றன.அது ஒரு வியாபார தந்திரம்.ஒரு நிறுவனத்தில் வாங்கும் மென்பொருளை அந்த நிறுவனத்தை தவிர எதுவும் ஒத்துழைக்கக்கூடாது என்பதே அதன் ரகசியம்.ஆங்கிலத்தில் பொதுமுறை விசை புழக்கத்தில் உள்ளன.எளிமையான தமிழ்99 விசைமுறை இன்னும் பின்தங்கி இருக்க காரணம்  தட்டச்சு செய்யும் ஏறக்குறைய அனைவரும் தட்டச்சு முறையினை தட்டச்சு இயந்திரத்தில் பழகியவர்கள்.எனவே  தாம் பழகிவிட்ட தட்டச்சு இயந்திரத்தில் உள்ள பாமினி முறையை விட்டு வெளியே வர அதிக தயக்கம் காட்டுகின்றனர்.
           தமிழ் 99 தட்டச்சு முறை தமிழ் '99 விசைப் பலகை தமிழுக்கு சீர் தரமான விசைப் பலகையாகும். மற்றும் எளியமுறையாகும்.இருப்பினும் புழக்கத்தில் உள்ள தமிழ் தட்டச்சு முறைகளை ஒப்பீடு செய்து பார்ப்போம்.

    (1)    ரோமன் அல்லது அஞ்சல் அல்லது எழுத்துப் பெயர்ப்பு என்னும் தமிங்கிலம் தட்டச்சு முறை.
    
       ஆ,ஈ,ஊ,ஐ,ஏ,ஓ,ஔ போன்ற உயிர் எழுத்து நெடில்களை எழுத இரண்டு விசைகளை அழுத்த வேண்டும்.
      
         கா,கீ,கூ,கை,கே,கோ,கௌ போன்ற உயிர் மெய் நெடில் எழுத்துக்களை எழுத மூன்று அல்லது நான்கு விசைகளை அழுத்த வேண்டும்.
    
         ங,ஞ,த,ண,ள போன்ற உயிர் மெய் குறில் எழுத்துக்களை எழுத மூன்று விசைகள் அழுத்த வேண்டும்.

      (2)   பாமினி தட்டச்சு முறை
        
          ஆ,ஈ,ஊ,ஐ,ஏ,ஓ போன்ற உயிர் எழுத்து நெடில்களை எழுத shift key (அழுத்தி) உடன் சேர்த்து இரண்டு விசைகள் அழுத்த வேண்டும்.
       
         கீ,ஙீ,சீ,ஞீ,டீ,ணீ,தீ,நீ,பீ,மீ,யீ,ரீ,லீ,வீ,ழீ,ளீ,றீ,னீ -  வரிசை எழுத்துக்களுக்கும், கே,ஙே,சே,ஞே,டே,ணே,தே,நே,பே,மே,யே,ரே,லே,வே,ழே,ளே,றே,னே - வரிசை எழுத்துக்களுக்கும் மூன்று விசைகள் அழுத்த வேண்டும்.
          கோ,ஙோ,சோ,ஞோ,டோ,ணோ,தோ,நோ,போ,மோ,யோ,ரோ,லோ,வோ,ழோ,ளோ,றோ,னோ-வரிசை எழுத்துக்களுக்கு நான்கு விசைகள் அழுத்த வேண்டும்.
             
       (3)   தமிழ் தட்டெழுத்து  தட்டச்சு முறை
             
           பாமினியைப்போலவே அதே விசைகள்பயன்படுத்த வேண்டும்.
       
            ' ழ' வரிசை எழுத்துக்களை எழுத அதிகமான விசைகள்
         அதாவது

         ' ழ ' எழுத்து எழுத-இரண்டு விசைகள் அழுத்த வேண்டும்.
     
       ழொ,ழோ,ழௌ எழுத்துக்களுக்கு - நான்கு விசைகள் அழுத்த வேண்டும்.

       ழ-வின் மற்ற எழுத்துக்களுக்கு மூன்று விசைகள் அழுத்த வேண்டும்.

          (4)   தமிழ்'99 தட்டச்சு முறை

            அனைத்து உயிர் எழுத்துக்களுக்கும் (அ முதல் ஔ வரை)-ஒரு விசை மட்டும் அழுத்தினால் போதும்.
        
           ஃ -ஒரு விசை அழுத்தினால் போதும்.
     
       க,ங,ச,ஞ,ட,ண,த,ந,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன,-எழுத்துக்களுக்கு ஒரு விசை அழுத்தினால் போதும்.( ஆக 31 எழுத்துக்கள் எழுத ஒரு விசை அழுத்தம் கொடுக்க வேண்டும்)

          மீதமுள்ள 216 எழுத்துக்கள் எழுத இரண்டு விசைகள் அழுத்த வேண்டும்.

         தமிழ் எழுத்துக்களில் எந்த எழுத்து எழுதவும் இரண்டு விசைகள் அழுத்தத்திற்கு மேல் இல்லை.

            ஸ,ஷ,ஜ,ஹ,க்ஷ,ஸ்ரீ-ஆகிய எழுத்துக்களுக்கு மட்டும்' ஷிப்ட்' உடன் சேர்த்து இரண்டு விசைகள் மட்டுமே அழுத்தினால் போதும்.

     இந்த அறிவியல் பூர்வமான தமிழ் '99 தட்டச்சு முறையில் குறைந்த விசையழுத்தங்களில், விரல்களுக்கு எளிமையான வரிசையமைப்புகளில்
  
       ,அதிக நேரம், அதிக வேகத்தில்,அதிகப் பக்கங்களை களைப்பின்றி தொடர்ச்சியாக தட்டச்சு செய்யலாம்.
  
       இம்முறை கற்றுக் கொள்ளவும், விசைகளை மனதில் பதிய வைப்பதும் மிக எளிமையானதாகும். paramesdriver.blogspot.com // Sathy & Thalavadi

NHM Writer 1.5.1.1 - New Horizon Media

software.nhm.in/products/writer1511

Thursday, October 17, 2013

ராக்கெட் ராஜேந்திரன்- ஓட்டுனர்

மரியாதைக்குரியவர்களே,
                வணக்கம்.''பரமேஸ் டிரைவர்'' வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
   ஜனனம் என்பது புத்தம்புதியது! மரணம் என்பது மிகவும் பழையது?!?..

       மேலே உள்ள படம் கடந்த (2013)அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி சத்தியமங்கலம்- பேருந்து நிலையத்தில்''அம்மா குடிநீர் விற்பனை நிலையத்தில்'' போதையின் தீமைகளை நினைவுபடுத்தும்வகையில் கொடுத்த விழிப்புணர்வு நோட்டீஸ் எனது நண்பன் படிக்கும்போது எடுத்த படம்.       

               எனது நண்பன் ''ராக்கெட் ராஜேந்திரன்'' என்னும் R.ராஜேந்திரன், அரசு பேருந்து ஓட்டுனர்-(தாளவாடி கிளை,ஈரோடு மண்டலம்) 17-10-2013 இன்று காலை கோவையில் ஒரு தனியார்  மருத்துவமனையில் மரணமடைந்தார்.ஏற்கனவே உடல்நலம் சரியில்லாமல் மருத்துமனை சிகிச்சை பெற்று வந்தவர்.அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

    நண்பனுக்கு சமர்ப்பணம் இந்தப்பாடல்கள்

ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க
சிந்தை களங்கிட நின்றவர்
வாழ்க
  பூமியில் ஜனனத்தைப்போல் ஒரு  புதியது
இல்லை மரணத்தை
போல் ஒரு பழையது இல்லை
இரண்டும் இல்லாவிடில்
இயற்கையும் இல்லை
இயற்கையின் ஆணைதான்
ஞானத்தின் எல்லை
பாசம் உளாவிய கண்களும்
எங்கே
மகிழ்ந்து குழாவிய கைகளும்
எங்கே
தேசம் உளாவிய கால்களும்
எங்கே
தீயுண்டது என்றது சாம்பலும்
இங்கே
பூமிக்கு நாம் ஒரு யாத்திரை
வந்தோம்
யாத்திரை தீரும் முன்
நித்திரை கொள்வோம்
நித்திரை கொள்வது நியதி
என்றாலும் யாத்திரை
என்றும் தொடர்கதையாகும்
கண்ணில் கண்டது காற்றுடன்
போக
மண்ணில் முளைத்தது
மண்ணுடன் சேர்க
எலும்பு சதை கொண்ட
உருவங்கள் போக
எச்சங்களாய் அந்த இன்னுயிர் வாழ்க
மாண்டவர் சுவாசங்கள்
காற்றுடன் சேர்க
பார்வைகள் அனைத்தும்
சூரியனில் சேர்க
போனவர் புண்ணியம்
நம்முடன் சேர்க
நீரில் மிதக்கும் கண்களும் காய்க
நிம்மதி நிம்மதி இவ்விடம்
சேர்க.

Thursday, August 1, 2013

Tamil cube Dictionary - online ல்

மரியாதைக்குரியவர்களே,வணக்கம். Tamil cube .com என்னும் தமிழ் க்யூப் டிக்ஸ்னரி ஆன்லைனில் மிக சிறந்த அகராதி.

Tamil Dictionary

                                                                                    Powered by Tamilcube.com

      நன்றிங்க என பரமேஸ் டிரைவர் - தாளவாடி....

Tuesday, July 30, 2013

பார்கோடு முறை ஒரு பார்வை

 மரியாதைக்குரியவர்களே,
                  வணக்கம். இங்கு பார்கோடு முறை பற்றி அறிந்த விபரத்தை பதிவிடுகிறேன்.தவறு இருந்தால் சுட்டிக்காட்டவும்.திருத்திக்கொள்ள வாய்ப்பை கொடுக்கவும்.

Free Barcode Generator - Barcoding Inc.

   இப்படிக்கு அன்பன்,
    சி,   பரமேஸ்வரன்.செயலாளர்,
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-
  தமிழ்நாடு-26 / 2013

Friday, July 5, 2013

ConsumerProtection And Road Safety Organisation - TamilNadu

                துவக்கவிழா அழைப்பிதழ்-சிபர்ஸ்ஆர்க்.
                         
                                       (வாழு,வாழவிடு.)
                 நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை
                    பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.
                               (பதிவு எண்=26-2013).
                           மாநில மையம்-
                         அன்பு இல்லம்,
                          5,முருகமுதலியார் வீதி,
                        அரியப்பம்பாளையம் அஞ்சல்,
                       சத்தியமங்கலம்-638402,
                      ஈரோடு மாவட்டம்.
                                                துவக்கவிழா அழைப்பிதழ்.
       நிகழிடம்;-புனித ஜேம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 
        ( லாரி உரிமையாளர்கள் சங்கம் அருகில்),
                                                     சத்தியமங்கலம்.   நாள்;-07-07-2013,ஞயிற்றுக்கிழமை.
                   நேரம்;-மாலை;-2-30மணி.
        தமிழ்த்தாய் வாழ்த்து -
              புனித ஜேம்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவியர்.
        துவக்கி வைப்பவர்;-
                            திருமிகு.இரா.தா.முத்துமாணிக்கம்,M.A.,D.Pharm.,அவர்கள்,
                          துணைக் காவல் கண்காணிப்பாளர்,சத்தியமங்கலம்.
 தலைமை;-
                  திருமிகு.A.A.ராமசாமி அவர்கள்,தலைவர்-
                        நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் 
                      சாலை பாதுகாப்பு சங்கம்-      தமிழ்நாடு.
முன்னிலை;-
                 திருமிகு.K.கண்ணப்பன்,M.S.c.,B.Ed.,B.L.அவர்கள்,
                       வட்டாட்சியர்,சத்தியமங்கலம்.
               திருமிகு.K.குமரன்,B.E., அவர்கள்,
                           உதவி கோட்ட பொறியாளர்-
                          கட்டுமானம் மற்றும் பராமரிப்பு,
                   நெடுஞ்சாலைத்துறை சத்தியமங்கலம்.
திருமிகு.T.ஆறுமுகம் அவர்கள்., 
               கிளை மேலாளர்,
    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் -தாளவாடி கிளை.
திருமிகு. K.லோகநாதன் அவர்கள்,
     ஒருங்கிணைப்பாளர்-நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.மற்றும்
          லோகு கனரக வாகன ஓட்டுனர் பயிற்சிப்பள்ளி-சத்தியமங்கலம்.
வரவேற்புரை;-
                        திருமிகு,A.P.ராஜூ,அவர்கள்-செயற்குழு உறுப்பினர்- 
    நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.
தொடக்கவுரை;-
                 திருமிகு.S.ரவி அவர்கள்-துணைத்தலைவர்-
       நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.
வீர வணக்கம்;-
       நம் பாதுகாப்புக்காக உயிர் நீத்த தியாகிகள்,ராணுவத்தினர்,மீட்பு பணியினர்,மற்றும் காவலர்களுக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலி.
உறுதிமொழி;-
             திருமிகு,இரா.தா.முத்துமாணிக்கம்,M.A.D.Pharm., ,துணைக்காவல் கண்காணிப்பாளர் சத்தி-அவர்கள், முன்னிலையில் நல்வாழ்வுக்கான உறுதிமொழி ஏற்பு.
பெயர்ப்பலகை திறப்பு;-
          திருமிகு.K.கண்ணப்பன்,M.S.c.,B.Ed.,B.L.அவர்கள்,
                                                  வட்டாட்சியர்,
                                             சத்தியமங்கலம்.
சங்கத்தின் பெயர் அறிமுகவுரை;- 
                                 திருமிகு.V.ராஜன் அவர்கள்,துணைச்செயலாளர்-
    நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.
சங்கத்தின் நோக்கம் விளக்கவுரை;-
           திருமிகு. C.பரமேஸ்வரன் அவர்கள்,செயலாளர்,-
      நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்;-
                   திருமிகு.S.L.வெங்கடேஸ்வரன்,B.A.B.L., அவர்கள்,
   சட்ட ஆலோசகர் மற்றும் BAR PRESIDENT-BAR ASSOCIATION Sathyamangalam
முதலுதவியின் நோக்கம்;-
                      திருமிகு.Dr.R.சின்னச்சாமி,M.B.B.S.,M.R.H.S.,(LOND)அவர்கள்,
         மருத்துவ ஆலோசகர்-
      நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.
சிறப்புரை;-
     திருமிகு.S.P. சுப்பிரமணியம்,B.E., அவர்கள்,
       தலைவர்-பேருந்து உரிமையாளர்கள் சங்கம்,சத்தியமங்கலம்- 
  துணைத்தலைவர்- மக்கள் சங்கம்-சத்தியமங்கலம்.
 இணைச்செயலாளர்-தமிழ்நாடு பேருந்து உரிமையாளர்கள் 
                      சங்கக் கூட்டமைப்பு -சென்னை.
வாழ்த்துரை;-
      திருமிகு.S.N.ஜவஹர் - அவர்கள்   தலைவர் ,
                     அனைத்து வணிகர்கள் சங்கம்-சத்தியமங்கலம்.
   திருமிகு,S.R.முத்துச்சாமி  அவர்கள்- தலைவர்,
   மலர் உற்பத்தி விவசாயிகள் தலைமைச்சங்கம்-சத்தியமங்கலம்.,
திருமிகு.P.ஜேம்ஸ் குணராஜ்,M.A.B.ED.,அவர்கள்,
                                              நிர்வாகி-
  புனித ஜேம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி-சத்தியமங்கலம்.
நிறைவுரை;-
           திருமிகு. R.மாதேஷ் M.A.B.Ed.,அவர்கள்,
              தலைமை ஆசிரியர்,  
        ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தாளவாடி&
     நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.
நன்றியுரை;-
            திருமிகு,V.பாலமுருகன்,B.A., அவர்கள்,பொருளாளர்-
    நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.
நாட்டுப்பண்.;-
            புனித  ஜேம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி                                                 மாணவ,மாணவியர்.-சத்தி.
                              நூலகம் ஒரு அறிவுத்திருக்கோயில்