Thursday, July 21, 2016

நீதிமன்றத்தில் பயன்படுத்தும் ஆங்கிலச்சொற்களின் தமிழாக்கம்.


மரியாதைக்குரியவர்களே,
வணக்கம். பரமேஸ் டிரைவர் பதிவிடுவது.
நீதிமன்றத்தில் பயன்படுத்தும் ஆங்கில வார்த்தையின் தமிழ் ஆக்கம் இதோ தங்களது கவனத்திற்காக..உதவிய முகநூல் நண்பர் அருண்குமார் அவர்களுக்கு நன்றிங்க.
>உயர்நீதிமன்றம் - High Court
நீதித்துறை நடுவர் நீதிமன்றம் - Judicial Magistrate Court
மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் - District Munsif Court
தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் - Chief Judicial Magistrate Court
சிறப்பு நீதித்துறை நடுவர் நீதிமன்றம் - Special Judicial Magistrate Court
அமர்வு நீதிமன்றம் - Sessions Court
உரிமையியல் வழக்குகள் - Civil Cases
குற்றவியல் வழக்குகள் - Criminal Cases
எதிர்வாதி / எதிர்மனுதாரர் / பிரதிவாதி - Defendant
வாதி / மனுதாரர் /புகார்தாரர் - Plaintiff / Complainant /Petitioner
குற்றஞ்சாட்டப்பட்டவர் - Accused
பாதிக்கப்பட்ட தரப்பு - Adverse Party
கட்சிக்காரர் - Client
சங்கதி - Fact
மறு விசாரனை - Re Examination
ஆபத்தான கேள்வி - Risky Question
தடாலடி பதில் - Fatal Reply
குறுக்கு விசாரனை - Cross Examination
உண்மை உறுதிமொழி ஆவணம் - Affidavit
குற்றவாளி - Offender
குற்றச்சாட்டு - Charge
மெய்ப்பிப்பு - Proof
சொத்து - Property
குற்றம் - Offense
கட்டைவிரல் ரேகைப்பதிவு - Thumb Impression
திருட்டு வழக்கு - Theft Case
திருட்டுப் பொருள் - Stolen Property
பைத்தியம் - Insanity
சான்றொப்பம் - Attestation
சச்சரவு - Affray
தீர்ப்பு - Sentence
அவசரத்தன்மை மனு - Emergent Petition
கீழமை நீதிமன்றம் - Lower court
பரிகாரம் - Remedy
உறுத்துக் கட்டளை - Injection Order
நிரந்தர உறுத்துக் கட்டளை - Permanent Injection Order
வழக்கின் மதிப்பு - Suit Valuation
வழக்குரை - Plaint
வழக்குரையில் திருத்தம் - Amendment in Plaint
பண வழக்கு - Money Suit
அவதூறு வழக்கு - Defamation Suit
வறியவர் வழக்கு - Pauper Suit
எதிர்வுரை - Counter
எழுவினாக்கள் (சிக்கல்) - Issues
மேல்முறையீடு -Appeal
வரைமொழி வாதுரை - Written Argument
குற்றப்பத்திரிக்கை - Charge Sheet
தற்காலிக நிறுத்த மனு - Caveat petition
கோருரிமை மனு - Claim Petition
தடை நீக்கம் - Removal of obstruction
வழக்கில் சமரசம் செய்து கொள்ளல் - Compromise of suit
எதிர் மேல்முறையீடு - Cross Appeal
எதிர் மறுப்பு - Cross-objection
வறியவர்களால் தொடுக்கப்படும் வழக்குகள் - Suits by Indigent Persons
நீதிமன்றக் காப்பாளர் - Court Guardian
ஒத்தி வைத்தல் - Adjournment
சாட்சி - Witness

Tuesday, April 5, 2016

சாலையில் கவனம் சகலருக்கும் அவசியம்.





சிந்தியுங்க!
                     சைக்கிள் ஓட்டி குறுக்கிடாமல் இருந்திருந்தால் இரண்டு நிமிடத்தில் நாங்கள் செல்லவேண்டிய இடத்திற்கு சென்று அடைந்திருப்போம்.இந்த விபத்தே நடந்திருக்காது.

09 மார்ச் 2016 தேதியன்று கோபிசெட்டிபாளையத்தில்  பயணிகள் ஆட்டோவில் பயணித்தபோது சந்தித்த விபத்து.....



 
 மறுநாள் தினத்தந்தி மற்றும் தினகரன் நாளிதழ்களில்  வெளிவந்த செய்தி.
 
மரியாதைக்குரியவர்களே,
                 அனைவருக்கும் வணக்கம். 
           கடந்த 2016 மார்ச் 6 ந்தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை கோபி அருகிலுள்ள பவளமலை அருள்மிகு முத்துக்குமார சுவாமி திருக்கோயில் திருமண மண்டபத்தில் நடைபெற்ற எனது உறவினர் இல்ல திருமண விழாவிற்காக அன்றை அதிகாலை5.45 மணிக்கு கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்திலிருந்து TN59/ 0304 எண்ணிட்ட பயணிகள் ஆட்டோவில் என் உறவினர் லோகநாதன்,சரஸ்வதி ஆகியோருடன் பயணித்தபோது கோபி - பாரியூர் நஞ்சகவுண்டம்பாளையம் பிரிவு கறிக்கடை அருகில் சைக்கிளுடன் மோதி ஆட்டோ கவிழ்ந்து உருண்டதில் எனக்கு தலையில் ஆட்டோவின் இரும்பு பட்டா குத்தி வெட்டுக்காயமும்,இடுப்பில் மொக்கை அடியும்,காலிலும் கையிலும் சிராய்ப்புக்காயமும்,லோகநாதனுக்கு நெற்றியிலும் கையிலும் சிராய்ப்பு மற்றும் மொக்கை அடியும்,சரஸ்வதிக்கு தோள்பட்டையின் இரு பக்கமும் உள்ள முன் காரை எலும்புகளும் உடைந்தும் ,ஆட்டோ ஓட்டுநருக்கு காலில் அடியும்,சைக்கிள் ஓட்டிவந்தவருக்கு தோள்பட்டை அடிபட்டும் மோசமான விபத்து ஏற்பட்டுவிட்டது.தகவலறிந்த உடனே கோபி பேருந்துநிலைய ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் விரைந்து வந்து எங்களை மீட்டு கோபி அபி மருத்துவமனையில் சேர்த்தனர்.சைக்கிள் ஓட்டியை அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் மீட்டு ஈரோடு மருத்துவமனைக்கு கொண்டு சென்றது.
 


சரி...
        விபத்துக்கு காரணம் என்ன? என்பதை அறிவோம்.
நாங்கள் பயணித்த ஆட்டோ ஓட்டுநரின் எதிர்பார்ப்பில்லா இயக்கமும்,எதிரில் வந்த மற்ற வாகனங்களின் டிம் செய்யாத பிரகாசமான ஹெட்லைட் வெளிச்சமும்,சாலைவிதி அறியாத சைக்கிளோட்டியின் சாலையில் குறுக்கிட்டதும்தான்! மிக எளிதான சாலைப்பயணத்தை மிக மோசமான விபத்துக்கு ஆளாக்கிவிட்டன.
(1)ஆட்டோ ஓட்டுநர் எதிரில் வந்த வாகனங்களின் ஹெட்லைட் வெளிச்சத்தால் கண் கூச்சமடைந்தபோது பாதையின் தன்மை தெரியாத சூழலில் ஆட்டோவின் வேகத்தை குறைத்து தற்காப்புடன் ஓட்டத் தவறியது.
(வேகத்தை குறைத்தோ அல்லது நிறுத்தியோ இருந்தால் விபத்து ஏற்பட்டிருக்காது).
(2)எதிரில் வந்த வாகனங்கள் பிற வாகன ஓட்டிகளுக்கு கண் கூச்சத்தை ஏற்படுத்தும் ஹெட்லைட்களின் வெளிச்சத்தை தாழ்த்தாமல் பிரகாசமான வெளிச்சத்துடன் ஓட்டியது.
(இரவு நேர இயக்கத்தில் வாகன ஓட்டிகள் எதிரில் வரும் வாகன ஓட்டிக்கு கண் கூசும் பிரகாசமான வெளிச்சத்தை தாழ்த்தி இயக்கியிருந்தால் விபத்து ஏற்பட்டிருக்காது.)
(3)சாலையைக் கடக்க முயன்ற சைக்கிள் ஓட்டி பொதுச்சாலையில் போக்குவரத்து வாகனங்கள் கடந்த பிறகும்  வாகனங்களின் போக்குவரத்து தொடர்கிறதா? என கவனிக்கத் தவறியது. 

(வாகனங்கள் கடந்தவுடன் சாலையில் தொடர்ந்து  வாகனங்கள் போக்குவரத்து செய்கின்றனவா?என இரு புறமும் கவனித்து சாலையை கடந்திருந்தால் விபத்து ஏற்பட்டிருக்காது.)

           இது போன்ற காரணங்களால் ஆட்டோ ஓட்டுநர் மிக குறைந்த இடைவெளியில் கண்ட சைக்கிள் மீது மோதாமல் இருக்க தான் சென்ற வேகத்திலேயே வலது பக்கமாக திருப்பியும்
 
                   சைக்கிள் மீது மோதி ஆட்டோ உருண்டு கவிழ்ந்து மிக மோசமான விபத்தை ஏற்பட்டது. 
 
        இதனால் எங்கள் உறவினர் இல்லத்திருமண விழாவில் கலந்துகொள்ள இயலாமல் போனதுடன், பணிக்கு செல்லமுடியாமலும்,உடல்வலி,மன வேதனை,எனக்கு தலைக்காயம் மற்றும் தலையில் மொக்கை அடி,இடுப்பில் மொக்கை அடி,வலது கை ஆட்டோவின் அடியில் சிக்கி மொக்க அடி இவ்வாறாக அடிபட்ட நான் முதலில்  கோபி அபி Ortho மருத்துவமனை, பிறகு பவானி லோகநாதன் Ortho மருத்துவமனை,சத்தி பேருந்து நிலையம் எதிரிலுள்ள செல்வக்குமார் Ortho மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சை ஒரு மாதகாலமாகப் பெற்றும் இதனால் காலவிரயம்,செலவுகளால் பொருளாதாரம் இழப்பு,எனது குடும்பத்தார் உட்பட உறவினர்கள் அனைவருக்கும் நேர இழப்பும்,வேதனையும் ஏற்பட்டுள்ளன.சமூகப்பணியும் தடைபட்டு விட்டன.
  என் உறவினருக்கு இருபக்க தோள்பட்டை காரை எழும்புகளும் உடைந்து எலும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கைகளை அசைக்கமுடியாமல் படுக்கை நோயாளியாக இருந்து வருகிறார். அடிபட்ட சைக்கிளோட்டி இறந்துவிட்டதாக தகவல்.


               நாங்கள் பயணித்தது பயணிகள் ஆட்டோ அதுவும் பயணிகளான நாங்கள் மூன்று பேர் மட்டுமே.நேரான பொதுச்சாலையில் அதிகாலையில் 5.45மணியளவில் போக்குவரத்து நெரிசலே இல்லாத நேரத்தில் பயணிக்கும்போது  அதுவும் பயணிக்கவேண்டிய  இரண்டு கிலோமீட்டர் மொத்த தூரத்திற்கு பொதுவாக அனைவரும் செல்லும் வேகத்தில் ஆட்டோவும் சென்றது இயல்பானதுதாங்க.சைக்கிள் ஓட்டி குறுக்கிடாமல் இருந்திருந்தால் இரண்டு நிமிடத்தில் நாங்கள் செல்லவேண்டிய இடத்திற்கு சென்று அடைந்திருப்போம்.இந்த விபத்தே நடந்திருக்காது.

  கணப்பொழுதில் சைக்கிள்மீது மோதி ஆட்டோ கவிழ்ந்து இடது பக்கத்திலிருந்து வலது பக்கம் அமைந்திருந்த கறிக்கடை பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஒரு டி.வி.எஸ் மோட்டார் சைக்கிள் மீதும் மோதி ?!?!?!?!??!?!??!?!!?........மிக மோசமான விபத்தாக நிகழ்ந்தது.எங்களுக்கு உதவி செய்த  அந்த கறிக்கடை உரிமையாளர் (ஞாயிற்றுக்கிழமையல்லவா!) மற்றும்  கறிக்கடையில் நின்றுகொண்டிருந்தவர்களுக்குத்தாங்க தெரியும் அந்த விபத்தின் கொடுமை பற்றி.......
 
 
2016எப்ரல் 6 ந் தேதி இன்று உடல் தேறியுள்ளதால் பணிக்கு செல்கிறேன்.
 
இந்த விபத்து பற்றி கேள்விப்பட்டு என் மீது அக்கறைகொண்டுமுகநூல் தளத்திலும்,தொலைபேசியிலும்,நேரிலும் உடல் நலம் விசாரித்தும்,நான் பூரண நலமடையவேண்டி பிரார்த்தனை செய்தும் எனக்காக தங்கள் நேரத்தையும்,எண்ணங்களையும்,நோக்கங்களையும் செலவிட்ட அனைத்து ஆசிரியப்பெருமக்களுக்கும்,மாணவர்களுக்கும், முகநூல் நண்பர்களுக்கும்,சமூக ஆர்வலர்களுக்கும்,என் வாழ்நாள் நன்றிங்க...
என்றும் சமூக நலப்பணியில்,
 அன்பன், 
C.பரமேஸ்வரன், 9585600733  paramesdriver@gmail.com
அரசுப்பேருந்து ஓட்டுநர், 
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்,
தாளவாடி கிளை,
 ஈரோடு மண்டலம்.
 
 
 
     

Saturday, January 9, 2016

சாலை பாதுகாப்பு கல்வி - சாலை பற்றிய அறிவு - 01

                              ROAD SAFETY EDUCATIONAL IN TAMIL.-01
    
மரியாதைக்குரியவர்களே,
                 வணக்கம்.சாலை பாதுகாப்பு கருதி அன்பன் பரமேஸ் டிரைவர் சத்தியமங்கலத்திலிருந்து உங்களுக்காக எழுதுவது......
           நாம் உயிர்வாழ்வதற்கான அனைத்து தேவைகளையும் போக்குவரத்து மூலமாகவே நிறைவேற்றி வருகிறோம்.குறிப்பாக சாலை போக்குவரத்து மிகவும் முக்கியமாக பயன்படுகிறது.  சக்கரமும் சாலையும் பயன்படுத்தத் தொடங்கிய பிறகு போக்குவரத்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன.வாகனங்களும் பெருகிக்கொண்டே வருகின்றன.நடந்துசெல்வது தொடங்கி இரு சக்கர வாகனங்கள் முதல் பல சக்கர வாகனங்கள்வரை பலரும் பல வடிவங்களிலும் பல்வேறு வேகங்களிலும் வாகனங்களை ஓட்டிக் கொண்டோ,வாகனங்களில் பயணம் செய்துகொண்டோ இருக்கிறோம்.
        சாலையில் பாதசாரிகளாக,பயணிகளாக,பொருட்களை எடுத்துச்செல்பவர்களாக,வாகனம் ஓட்டுபவர்களாக போக்குவரத்து செய்கிறோம்.  நமது பாதுகாப்பிற்காகவே சாலைவிதிகளும்,மோட்டார் வாகன சட்டங்களும்,காவல்துறைசட்டங்களில் சிலவும் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்பதை அறியாமல் பயணத்தின்போது சாலைவிதிகள் மற்றும் சாலை பற்றிய அறிவு இல்லாமலும்,வாகனங்கள் பற்றிய அறிவு இல்லாமலும் பயணிப்பது எப்படி என்றுகூடத்தெரியாமலும் சாலையில் போக்குவரத்து செய்து விபத்துக்கு காரணமாகிறோம்.

  விபத்து ஏற்படும்போது கொடுங்காயம்,நிரந்தர ஊனம்,உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன.மோதிய வாகனங்கள் சேதம்,ஏற்றிவந்த பொருட்கள் சேதம் போன்ற இழப்புகளும் ஏற்படுகின்றன.அவ்வழியே போக்குவரத்து தடங்கல் ஏற்பட்டு  அந்த சாலையில் பயணிக்கும் மற்றவர்களுக்கும் மன உளைச்சல்,தேவைகள் இழப்புடன்,நேர இழப்பும் ஏற்படுகின்றன.
  விபத்தில் சிக்குண்ட நமக்கு வருமான இழப்புடன்,பொருளாதார இழப்பும் ஏற்பட்டு நம் குடும்பத்தாருக்கும் நம்பியுள்ளவர்களுக்கும் மன உளைச்சல் மற்றும்  உடல் வேதனையோடு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்படுகிறது.அத்துடன் காவல்துறை,போக்குவரத்துத்துறை,மீட்பு பணித்துறை,மருத்துவத்துறை,சட்டத்துறை,காப்பீட்டுத்துறை, போன்ற சம்பந்தப்படவர்களுக்கு வேலைப்பளுவும் ஏற்படுகிறது.

        அடிக்கடி சாலையில் நடக்கும் விபத்துக்களை வேடிக்கை பார்க்கிறோமே தவிர விபத்தில் சிக்குண்டவர்கள் அனுபவிக்கும் வேதனைகளையோ,இழப்புகளையோ,விபத்துக்கான காரணங்களையோ,விபத்தை தவிர்ப்பதற்கான செயல்பாடுகளையோ  சிந்தனை கூட செய்வது இல்லை.   ( parameswaran driver)
'சாலை பாதுகாப்பு  நம் உயிர் பாதுகாப்பு'மட்டுமின்றி  'சமூகத்தின் கூட்டுப்பொறுப்பு'.ஆதலால்  போக்குவரத்து அவசியமாகிவிட்ட இன்றைய சூழலில் சாலை பாதுகாப்பு கல்வி அனைவரும் பெறுவது அவசியம்.ஆதலால் பாதுகாப்பான பயணத்திற்கு சாலைவிதிகள் பற்றியும்,மோட்டார் வாகன சட்டங்கள் பற்றியும் கற்போம்.
(1) சாலை அறிவு (2)பயணப்பாதுகாப்பு (3)வாகன அறிவு (4)மோட்டார் வாகன சட்டங்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

(1) சாலை பற்றிய அறிவு................. 
        சாலைகள் நமது நாட்டின் நிலப்பரப்பிற்கேற்ப சரிவுகளாகவோ,மேடு பள்ளமாகவோ,வளைவுகளாகவோ,குறுகிய பாதைகளாகவோ, கிளைச்சாலைகள் மற்றும் பிரதானச்சாலைகள் சந்திப்புகளாகவோ,அமைந்துள்ளன.அரசாங்கத்தின் பொருளாதாரம் மற்றும் போக்குவரத்துக் குறைவுக்கேற்ப பராமரிப்பு குறைவாக பழுதடைந்தோ உள்ளன.
                    சாலைகளை, நகர்ப்புறச் சாலைகள் என்றும்,கிராமப்புறச் சாலைகள் என்றும் இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
 (1)நகர்ப்புறச் சாலைகளை, வீதி,பிரதான சாலை,நேர்ச்சாலை,ஆர்டீரியல் சாலை , எனவும், 
   (2)கிராமப்புறச் சாலைகளை, விரைவுச்சாலைகள்,தேசிய நெடுஞ்சாலைகள்,பெரிய மாவட்டச்சாலைகள்,மற்ற மாவட்ட சாலைகள்,கிராமச்சாலைகள் எனவும் பலவகைப்படுத்தலாம்.

 நகர்ப்புறச்சாலைகள்,
 வீதி.
       பொதுமக்கள் குடியிருப்புகளில் அமைக்கப்பட்டுள்ள பாதையாகும்.வீதிகள்  நகரின் பிரதானச்சாலைக்கு செல்ல பயன்படுகின்றன. 

பிரதானச்சாலை.
    இது நகரத்தின் பல பகுதிகளில் முக்கிய போக்குவரத்தை எடுத்துச்செல்கிறது.

நேர்ச்சாலை.
    நகரத்தின் பல பகுதிகளிலிருந்து நகரத்தின் மையத்திற்குப் போக்குவரத்தை நேராக எடுத்துச் செல்லும் சாலையாகும்.

ஆர்டீரியல் சாலை.

        இது நகரத்தின் மிகவும் முக்கியமான சாலையாகும். கிராமப்புறச்சாலைகள்  நகரத்தினுள் நுழையும் போது ஆர்டீரியல் சாலைகளாக மாறிவிடும்.

கிராமப்புறச் சாலைகள்,
 விரைவுச்சாலைகள்,
    விரைவுச்சாலைகளை  தங்க நாற்கரச் சாலைகள் என்றும் கூறப்படுகிறது.
 மத்திய அரசால் பராமரிக்கப்படுகிறது.நான்கு முதல்  ஆறு தடச்சாலைகளாக பயன்படுத்தப்படுகிறது.நாட்டின் பாதுகாப்பு மற்றும் துரிதப்போக்குவரத்துக்காக விரைவுச்சாலைகள் போடப்படுகின்றன.கி.மீ.கற்களில் மஞ்சள் நிறம் பூசப்பட்டு இருக்கும்.
  
தேசிய நெடுஞ்சாலைகள்,
           தேசிய நெடுஞ்சாலைகளை மத்திய அரசு பராமரிக்கிறது.இரண்டு தடம் முதல் நான்கு தடச்சாலைகளாக பராமரிக்கப்படுகிறது.விரைவான போக்குவரத்திற்கு பயன்படுகிறது.மாநிலங்களின் தலைநகரங்களை இணைக்கிறது.கிலோ மீட்டர் கற்களில் மஞ்சள் நிறம் பூசப்பட்டு இருக்கும்.

மாநில நெடுஞ்சாலைகள்,
             மாநில நெடுஞ்சாலைகளை மாநில அரசு பராமரிக்கிறது.இருதடப்போக்குவரத்திற்கு ஏற்ற சாலையாகும்.கிலோமீட்டர் கற்களில் பச்சை வர்ணம் பூசப்பட்டு இருக்கும்.

பெரிய மாவட்டச்சாலைகள்,
          பெரிய மாவட்டச்சாலைகளை மாநில அரசு பராமரிக்கிறது.இருதடப்போக்குவரத்திற்கு ஏற்ற சாலையாகும்.கிலோ மீட்டர் கற்களில் நீல வர்ணம் பூசப்பட்டு இருக்கும்.

மற்ற மாவட்டச்சாலைகள்,
           மற்ற மாவட்டச்சாலைகளை மாநில அரசின் உதவியுடன் பஞ்சாயத்து யூனியன் பராமரிக்கிறது.கிலோ மீட்டர் கற்களில் ஆரஞ்சு வர்ணம் பூசப்பட்டு இருக்கும்.

கிராமச்சாலைகள்,
            கிராமச்சாலைகளை பஞ்சாயத்துக்கள் பராமரிக்கின்றன.ஒரு தடச்சாலையாகும்.எதிரில் வாகனம் வந்தால்  இரு வாகனங்களும் சாலையை விட்டு விலகிச்செல்ல வேண்டும்.கிலோ மீட்டர் கற்களில் வெள்ளை வர்ணம் பூசப்பட்டு இருக்கும்.  (பரமேஸ்வரன் டிரைவர்)
                   
   சாலையின் பாகங்களாக,,,,,
               வாகனம் செல்லும் பாதை,பக்கவாட்டிலுள்ள புயங்கள்,கேம்பர்,நடைபாதை,கெர்ப்,வேகத்தடை,தொடர்வேகத்தடை,சூப்பர் எலிவேசன்,காப்புக்கற்கள்,பிரதிபலிப்பான்கள்,காப்புச்சுவர்,வட்டச்சுற்றுப்பாதை,தீவுத்திடல்,சேனலைசர்,வழிப்படுத்தும் சேனலைசர்,தொடர்ச்சியாக கட்டப்பட்டுள்ள மீடியன்,விட்டு விட்டு கட்டப்பட்டுள்ள மீடியன்,தடுப்புச்சுவர்,மாற்றுப்பாதை,சுரங்கப்பாதை,சிறு பாலங்கள்,தரைமட்டப்பாலம்,உயர் பாலம்,தாழ்வான பாலம்,மேம்பாலம் என பலவகைகளாகப்பிரிக்கலாம். 

சாலை வரைகோடுகள்,
       போக்குவரத்து ஒழுங்குபடுத்துவதற்காக சாலையில் வரையப்படும் கோடுகளை மூன்று வகைகளாகப்பிரிக்கலாம்.அவை நீளவாட்டில் வரையப்படும் கோடுகள்,அகலவாட்டில் வரையப்படும் கோடுகள்,மற்ற வரைகோடுகள் ஆகும்.

 சாலையின் நடுவில் வரையப்படும் கோடுகளும்,தடங்களின் கோடுகளும் நீளவாட்டில் வரையப்படுகின்றன.

சாலையின் அகலவாட்டில் , ஜீப்ரா கிராஸிங் கோடுகள்,பாதசாரிகள் கடக்கும் கோடுகள்,வாகனங்களை நிறுத்தும் கோடுகள் வரையப்படுகின்றன.

மற்ற வரைகோடுகளாக சாலை ஓரக்கல் கோடுகள்,திசை காட்டும் கோடுகள்,தடங்களின் எண்கள், கொண்டை ஊசி திருப்பம் கோடுகள்,வேகத்தடைக்கோடுகள்,நிறுத்தி வைக்கும் கோடுகள்,பேருந்து நிறுத்தும் கோடுகள்,ஐலேண்ட்,சேனலைசர்,மீடியன்,ரவுண்டானா போன்ற வரைகோடுகள்,
 ஸ்டாப்,ஸ்லோ,கார்,சைக்கிள் போன்ற எழுத்துக்கள் என வரையப்பட்டிருக்கும்.

     இன்னும் தொடரும்......
 அன்புடன்
 C.பரமேஸ்வரன்,    
         9585600733
சத்தியமங்கலம்,
ஈரோடு மாவட்டம்.

தொடரும்.......................2016 ஜனவரி 9 ந் தேதி 

Thursday, January 7, 2016

நடிகர் சோ...பத்திரிக்கையாளர் சோ...

மரியாதைக்குரியவர்களே,
             வணக்கம். தனி மனிதரின் சுதந்திரத்தை எள்ளி நகையாடலாமா? இதோ சோ என்ற தனிப்பட்ட சிந்தனையுள்ள மனிதரின் செயல்பாடு பற்றி பார்ப்போம்.
..
சோவைக் குறித்து எல்லோரும் சொல்லும் ஒரு குறை அவர் ஒரு பார்ப்பனர் என்பதுவே..
அதைத்தாண்டி அவரிடம் என்ன குறை கண்டீர்கள் என்று கேள்வி கேட்டால் அதற்கு விடை எவரிடமும் இருக்காது.
அவர் ஒரு அரசியல் புரோக்கர்..சரிதான்..அதனால் அவர் அடைந்த பலன் என்ன? ஆதாயம் என்ன? பணம் சம்பாதித்துவிட்டாரா? அதிகாரத்திற்கு வந்தாரா..அல்லது தன் செல்வாக்கைப் பயன்படுத்தி துஷ்பிரயோகம் செய்துவிட்டாரா..
அவர் அவாளுக்கு சப்போர்ட் பண்ணுகிறார்..சரி அதனால் என்ன? ஒரு நாடார் இன்னொரு நநாடாருக்கும் ஒரு தேவர் இன்னொரு தேவருக்கும் ஒரு முதலியார் இன்னொரு முதலியாருக்கும் சப்போர்ட் செய்வதில்லையா.. நமக்கிருக்கும் அந்த உரிமை அவருக்கு மட்டும் அந்தணராய் பிறந்துவிட்டதாலேயே இருக்கக்கூடாதா?
சரி..அப்படியே வைத்துக்கொள்வோம்..தன் செல்வாக்கைப் பயன்படுத்தி ‘அவாளுக்கு’ அவர் செய்த நன்மைகள் என்ன? அவர் தனது சமூகத்திற்கு வாங்கிக்கொடுத்த சலுகைகள்தான் என்ன?
ம்..அவர் ஏன் ஜெயலலிதாவிற்கு வக்காலத்து வாங்குகிறார்? ஜாதி உணர்வில்தானே..? ஓ அப்படியா..அப்படியென்றால் 1991 முதல் 1996 முடிய நடந்த ஜெயலலிதா ஆட்சியை அதிகம் எதிர்த்தவர்கள் யார்? இரண்டு பேர்தான். ஒருவர் சுப்பிரமணியம் சுவாமி..இன்னொருவர் சோ.. ஆனால் அதற்கான பலனை அனுபவித்தது கலைஞர். அதுதானே உண்மை? தமிழ்மாநிலக் காங்கிரஸை உருவாக்கி..ரஜினியை அதற்கு ஆதரவாக வாய்ஸ் கொடுக்க வைத்து..அதிமுக ஆட்சியை விரட்டியது சோ..தானே? ஏன் அன்றைக்கு ஜெயலலிதா ஜாதி மாறியிருந்ததா? அல்லது அன்றைக்கு கலைஞர் பிராமண ஜாதிக்கு மாறியிருந்தாரா?
இன்றைக்கு நாமெல்லாரும் தூக்கிப்பிடிக்கும் காமராஜரை அன்றைக்கு உயரத் தூக்கிப்பிடித்தது..சோ..மட்டும்தான். அன்றைக்கு காங்கிரஸே காமராஜரைத் தூக்கி எறிந்துவிட்டதே.. காமராஜர் தோற்கடிக்கப்பட்டதற்கு வருத்தப்பட்டது சோ மட்டும்தானே. திமுக அன்றைக்கு காமராஜரை எள்ளி நகையாடியது. தமிழர்கள் எள்ளி நகையாடினார்கள். ஆனால் இன்றைக்கு வெட்கமேயில்லாமல் காமராஜர் இறந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது புகழை நாம் பாடிக்கொண்டிருக்கின்றோம்.
விடுதலைப்புலிகளைக் குறித்து எம்.ஜி.ஆர் காலத்திலேயே தீர்க்கதரிசனமாய் சொன்ன ஒரே மனிதர் சோ..மட்டும் தான். அவர்களால் தான் இலங்கைத் தமிழர்களுக்கு அழிவு ஏற்படும் என்று. அதன்படியே இலங்கைத் தமிழ்த் தலைவர்கள் எல்லோரும் விடுதலைப்புலிகளாலேயே சுட்டுக்கொல்லப்பட்டனர். மீனம்பாக்க விமான நிலையத்திலேயே வைத்து இலங்கைத் தமிழ் தலைவர்களை வேட்டையாடினர். அதன்பிறகுதான் எம்.ஜி.ஆர் விழித்துக்கொண்டார். தேவாரத்திற்கு அதிகாரம் கொடுத்து விடுதலைப்புலிகளை தமிழகத்திலிருந்து விரட்டி ஒடுக்கினார். பின்னர் கலைஞர் ஆட்சியில் தரைவிரித்து ஆடினர். தமிழர்களுக்கு தனி மாநிலம் கொடுத்து ஒரு உடன்படிக்கையைக் கொண்டு வந்து சிங்கள அரசை ராஜீவ்காந்தி அடிபணிய வைத்தார். ஆனால் விடுதலைப்புலிகள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையில்லாமல் அதற்கு உடன்பட மறுத்தனர். இந்தியாவிலிருந்து படை அனுப்பிவைக்கப்பட்டது.வரதராஜப் பெருமாள் முதல் இலங்கைத் தமிழக முதல்வரானார்.பதிலுக்கு ராஜீவ்காந்தியை நமது நாட்டிற்கே வந்து கொலை செய்தனர். இந்தியாவின் ஆதரவு தமிழகத்தின் ஒட்டுமொத்த ஆதரவும் விடுதலைப்புலிகளுக்கு பறிபோனது. கடைசியில் விடுதலைப்புலிகளின் தவறான அணுகுமுறைகளினாலேயே ஒட்டுமொத்த இலங்கைத் தமிழினமும் அழிந்தது.
இதை 1980களிலேயே சொன்னவர் சோ ஒருவர்தான்.
திமுகவை கடுமையாக எதிர்க்கிறார். அதில் தவறென்ன? அவரது விமர்சனங்களுக்கு பதில் என்ன? அவர் பார்ப்பனர் என்பதா?
விடுதலைப்புலிகளை..தீவிரவாதத்தை..தமிழ்த் தீவிரவாதத்தை அவர் எதிர்க்கிறார். அதிலும் அவர் தவறென்ன?
தேசீய அரசியலிலும் பெரும் பங்கு வகிக்கிறார்..இந்திராகாந்திக்கு மாற்றாக ஒரு அரசாங்கத்தைக் கொண்டு வர உதவினார். காரணம்..இந்திராகாந்தி காமராஜரை உதாசீதனப்படுத்தினார்..அதிகார மமதை கொண்டார்..அந்த ஆட்சி தூக்கி எறியப்பட்ட பிறகு தான் இந்திராகாந்தி நிதானத்திற்கு வந்தார். 1996ல் ஜெயலலிதா ஆட்சியிலிருந்து எறியப்பட்ட பிறகுதான் அவரும் பெருமளவிற்கு நிதானத்திற்கு வந்திருக்கிறார்.
அந்தணர் என்போர் யார் என்று சோ..விடத்திலே துக்ளக் பத்திரிக்கையில் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது.அவர் பதில்..” மனு தர்மத்தின்படி மனிதர்களுள் 4 ஜாதிகள் உண்டு. அவர்கள்,1.சத்ரியர்கள்..(அரசர்கள்), 2.அந்தணர்கள்(அரசர்களுக்கு ஆலோசனை சொல்லுபவர்கள்),3.சூத்திரர்கள்(அரசர்களின் உத்தரவை செயல்படுத்துபவர்கள்) மற்றும் 4.வைசியர்கள்(அந்த 3 பேருக்கும் தேவையான பொருட்களைக் கண்டறிந்து கொண்டுவந்து விற்பனை செய்யும் வியாபாரிகள்). ஆனால் இன்றைக்கு யாரும் சத்ரியர்கள் அல்ல..அந்தணர்கள் அல்ல..சூத்திரர்களும் அல்ல..எல்லோரும் ஒரே ஜாதி..அது வியாபாரிகள் என்ற வைசியர்களே” இப்படி ஒரு பதிலைத் துணிகரமாய் சொல்வதற்கு ஒரு பார்ப்பானுக்கு துணிவு இருக்கிறதே..வேறு யாருக்கு அப்படி ஒரு நேர்மை இருக்கிறது?
சரி..நான் சொல்ல வந்தது அதுவல்ல செய்தி..படத்தைப் பாருங்கள்..எவ்வளவு அரசியல்வீதியாக எதிர்த்தாலும் கலைஞரால் அவரைப் புறக்கணிக்கவோ பகைக்கவோ முடியவில்லை. அதுதான் சோ..வின் பலம்.
ஒரே நேரத்தில் கலைஞரையும் தன் வீட்டிற்கு அழைக்க முடிகிறது..ஜெயலலிதாவையும் அழைக்க முடிகிறது. அததான் சோ..வின் நேர்மை.
அவர் கையில் வைத்திருக்கும் பத்திரிகையைப் பாருங்களேன்..அதுதான் சோ..வின் எளிமை. அதுதான் சூத்திரனாகிய (கலைஞர் பாஷையில்) என்னையும் சோ..வை ரசிக்க வைத்திருக்கிறது 1991ம் ஆண்டிலிருந்தே..(என்னால்எல்லாம் மற்றவர்களைப் போல் சோ இறந்து 40 அண்டுகளுக்குப் பிறகு புகழ்ந்து பாடிக் கொண்டிருக்க விருப்பம் இல்லை.அவர் உயிரோடு இருக்கும் போதே பாராட்டிவிடுகின்றேன். அதுதான் நான் கற்றதற்கு அடையாளம்..!)

Tuesday, December 8, 2015

உசாரய்யா! உசாரு!!...........வெள்ள நிவாரண உதவி செய்பவர்களே உசாரு!!!......

மரியாதைக்குரியவர்களே,
          வணக்கம். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தங்களது உழைப்பையும்,நேரத்தையும்,நிதியையும் செலவழித்துக்கொண்டு கடலூர் சென்றால் அங்கு சுறையாடி திருடி கொள்ளையடிக்கும் சிலரைப்பற்றி நினைத்தால் மிகவும் வேதனையை தருகிறது...கோபிசெட்டிபாளையத்திலிருந்து உதவும் எண்ணத்துடன் சென்ற நமது நண்பர்கள் பட்ட வேதனையை இங்கு பதிவிட்டுள்ளேன். கடலூர் நோக்கி நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்லும் உதவும் நெஞ்சங்களே எதற்கும் கொஞ்சம் கவனமாக இருங்கள். ஒரு ஆளும்கட்சி அடிமை எங்களுக்கு ஏற்படுத்திய இன்னல் மிகுந்த வலி கொண்டது. மஞ்சக்குப்பம் என்ற கிராமத்தில் 11 லாரி வைத்திருக்கும் ராகவன் என்ற நபர்தான் அவர். ஆதலால் உங்களின் பாதுகாப்பிற்காக மாவட்ட ஆட்சியர் கைப்பேசி எண்ணும் 9444139000, மாவட்ட வருவாய் அலுவலர் எண்ணும் தந்துள்ளேன். 9445000907


 எங்கள் குழுவிற்கு தங்குவதற்கும் இன்னபிற வசதிகளும் செய்து கொடுத்த திண்டிவனம் மருத்துவர் illayaraja அவர்களுக்கு எங்கள் புல்வெளி அறக்கட்டளை மற்றும் தென்றல் கலைக்கூடம், கோபி ஆயுள் காப்பீட்டுக்கழக பணியாளர்கள், கோபி காவல்துறை ஆய்வாளர் உள்ளிட்ட நண்பர்கள், போக்குவரத்து ஊழியர் நண்பர்கள், சமையல் கலைஞர் சங்கர் உள்ளிட்ட நண்பர்கள், ல.கள்ளிப்பட்டி கண்ணப்பர் அறக்கட்டளை பெருமக்கள் அனைவரின் பங்களிப்பும் பாராட்டிற்குரியது.