Wednesday, March 9, 2011

(9) தமிழ் தட்டச்சுமுறைகள்-ஒரு ஒப்பீடு

       முயற்சியும், விருப்பமும் இருந்தால் அதிக பட்சம் ஒரு வாரத்தில் பழகி விடலாம்.
  
  


அன்பு நண்பர்களே,
                           paramesdriver.blogspot.com வலைப்பதிவிற்கு தங்களை வணங்கி வரவேற்கிறேன்.
         
           தமிழ் 99 தட்டச்சு முறை தமிழ் '99 விசைப் பலகை தமிழுக்கு சீர் தரமான விசைப் பலகையாகும். மற்றும் எளியமுறையாகும்.இருப்பினும் புழக்கத்தில் உள்ள தமிழ் தட்டச்சு முறைகளை ஒப்பீடு செய்து பார்ப்போம்.

    (1)    ரோமன் அல்லது அஞ்சல் அல்லது எழுத்துப் பெயர்ப்பு என்னும் தமிங்கிலம் தட்டச்சு முறை.
    
       ஆ,ஈ,ஊ,ஐ,ஏ,ஓ,ஔ போன்ற உயிர் எழுத்து நெடில்களை எழுத இரண்டு விசைகளை அழுத்த வேண்டும்.
      
         கா,கீ,கூ,கை,கே,கோ,கௌ போன்ற உயிர் மெய் நெடில் எழுத்துக்களை எழுத மூன்று அல்லது நான்கு விசைகளை அழுத்த வேண்டும்.
    
         ங,ஞ,த,ண,ள போன்ற உயிர் மெய் குறில் எழுத்துக்களை எழுத மூன்று விசைகள் அழுத்த வேண்டும்.

      (2)   பாமினி தட்டச்சு முறை
        
          ஆ,ஈ,ஊ,ஐ,ஏ,ஓ போன்ற உயிர் எழுத்து நெடில்களை எழுத shift key (அழுத்தி) உடன் சேர்த்து இரண்டு விசைகள் அழுத்த வேண்டும்.
       
         கீ,ஙீ,சீ,ஞீ,டீ,ணீ,தீ,நீ,பீ,மீ,யீ,ரீ,லீ,வீ,ழீ,ளீ,றீ,னீ -  வரிசை எழுத்துக்களுக்கும், கே,ஙே,சே,ஞே,டே,ணே,தே,நே,பே,மே,யே,ரே,லே,வே,ழே,ளே,றே,னே - வரிசை எழுத்துக்களுக்கும் மூன்று விசைகள் அழுத்த வேண்டும்.
          கோ,ஙோ,சோ,ஞோ,டோ,ணோ,தோ,நோ,போ,மோ,யோ,ரோ,லோ,வோ,ழோ,ளோ,றோ,னோ-வரிசை எழுத்துக்களுக்கு நான்கு விசைகள் அழுத்த வேண்டும்.
             
       (3)   தமிழ் தட்டெழுத்து  தட்டச்சு முறை
             
           பாமினியைப்போலவே அதே விசைகள்பயன்படுத்த வேண்டும்.
       
            ' ழ' வரிசை எழுத்துக்களை எழுத அதிகமான விசைகள்
         அதாவது

         ' ழ ' எழுத்து எழுத-இரண்டு விசைகள் அழுத்த வேண்டும்.
     
       ழொ,ழோ,ழௌ எழுத்துக்களுக்கு - நான்கு விசைகள் அழுத்த வேண்டும்.

       ழ-வின் மற்ற எழுத்துக்களுக்கு மூன்று விசைகள் அழுத்த வேண்டும்.

  
          (4)   தமிழ்'99 தட்டச்சு முறை

            அனைத்து உயிர் எழுத்துக்களுக்கும் (அ முதல் ஔ வரை)-ஒரு விசை மட்டும் அழுத்தினால் போதும்.
        
           ஃ -ஒரு விசை அழுத்தினால் போதும்.
     
       க,ங,ச,ஞ,ட,ண,த,ந,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன,-எழுத்துக்களுக்கு ஒரு விசை அழுத்தினால் போதும்.( ஆக 31 எழுத்துக்கள் எழுத ஒரு விசை அழுத்தம் கொடுக்க வேண்டும்)

          மீதமுள்ள 216 எழுத்துக்கள் எழுத இரண்டு விசைகள் அழுத்த வேண்டும்.

         தமிழ் எழுத்துக்களில் எந்த எழுத்து எழுதவும் இரண்டு விசைகள் அழுத்தத்திற்கு மேல் இல்லை.

            ஸ,ஷ,ஜ,ஹ,க்ஷ,ஸ்ரீ-ஆகிய எழுத்துக்களுக்கு மட்டும்' ஷிப்ட்' உடன் சேர்த்து இரண்டு விசைகள் மட்டுமே அழுத்தினால் போதும்.

     இந்த அறிவியல் பூர்வமான தமிழ் '99 தட்டச்சு முறையில் குறைந்த விசையழுத்தங்களில், விரல்களுக்கு எளிமையான வரிசையமைப்புகளில்
  
       ,அதிக நேரம், அதிக வேகத்தில்,அதிகப் பக்கங்களை களைப்பின்றி தொடர்ச்சியாக தட்டச்சு செய்யலாம்.
  
       இம்முறை கற்றுக் கொள்ளவும், விசைகளை மனதில் பதிய வைப்பதும் மிக எளிமையானதாகும். paramesdriver.blogspot.com // Sathy & Thalavadi

(8) தமிழ் விசைப்பலகை-இணைய எழுதி.

அன்பு நண்பர்களே,
             paramesdriver.blogspot.com வலைப்பதிவிற்கு வருகை தந்துள்ள தங்களை வணங்கி வரவேற்கிறேன்.
           
    கணினியில் விரைவாகத் தட்டச்சு செய்யவும்,தமிழில் சிந்திக்கவும் 
                TAMIL "99 பயன்படுத்துங்கள்.இம்முறை எளிமையானது.

       தமிழ்'99 விசைப் பலகையில் எழுத இந்தப் பதிவில் உள்ள, 
          ''இணைய எழுதி'' என்னும் பொத்தானை அழுத்தவும்.
           பிறகு திரையில் தோன்றும் விசைப் பலகையில் உள்ள பட்டன்களில் எழுத்துக்களைக் கிளிக் செய்தால் அதிலுள்ள மானிட்டரில் எழுத்துக்கள் தானாக பதிவாகும். பிறகு அதனை காப்பி எடுத்து அல்லது வெட்டி எடுத்து தேவையான பகுதியில் ஒட்டிக்கொள்ளலாம்.
             ஆனால் இம்முறையை ஆரம்ப காலத்தில் மட்டும் அதாவது புதியவர்கள் மட்டும் பயன்படுத்துங்கள்.
         விரைவில் தட்டச்சு செய்து பழகியபிறகு தமிழ் 99 விசைப்பலகையின் உதவியால் மட்டுமே தட்டச்சு செய்யுங்கள் .
          அதாவது டிரைவர் பணி செய்யும் நானே இரண்டு நாட்களில் தட்டச்சு செய்யப் பழகி விட்டேன். நன்றி!
                      இங்கு கீழேஉள்ள ''இணைய எழுதி'' என்னும் சதுர கட்டம் கட்டியுள்ள பெட்டியை  ஒரு கிளிக் மட்டும் செய்யுங்கள்.இதில் உங்களது விருப்பம் போல விளையாடுங்கள்.பயப்பட வேண்டியதில்லைங்க!.















                        மேலே உள்ள சதுர கட்டம் போட்ட பெட்டியில் உள்ள ''இணைய எழுதி''  என்னும் இடத்தில் கிளிக் செய்து பயன்படுத்தி இருப்பீர்.  இந்த முறை உலக அளவில் கணினியில் ஒருமித்த கீ போர்டை பயன்படுத்த 1999-ம் ஆண்டு பிப்ரவரி 8-ந் தேதி சென்னையில் நடந்த இரண்டாம் உலகத் தமிழ் இணைய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. 
         தமிழறிஞர்கள் ஆலோசனைக்கேற்ப 1999-ல் தமிழக அரசு- TAMIL'99 போர்டு முறையை அனைவரும் பயன்படுத்த அரசாணையும் பிறப்பித்தது.
           தற்போது அனைத்து அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தட்டச்சு செய்யும் போது இந்த விசைப் பலகையின் நன்மைகள் பின்வருமாறு;-------

       1) உயிர்க் குறில் எழுத்துக்கள் இடது புறம் நடுவரிசையிலும் (அ,இ,உ,எ-A,S,D,G  )

      2)உயிர் நெடில் எழுத்துக்கள் இடது புறம் மேல் வரிசையிலும்( ஆ,ஈ,ஊ,ஐ,ஏ-Q,W,E,T,R  )

      3) ஒ,ஓ,ஔ இந்த எழுத்துக்கள் அதிகம் பயன் படாத காரணத்தால் இவைகளை இடது புறம் கீழ் வரிசையிலும் (ஔ,ஓ,ஒ-Z,X,C,V,B  )

    4)அதிகம் பயன்படுத்தும் க,ப,ம,த எழுத்துக்கள் வலது புறம் நடு வரிசையிலும் (ய,ந,த,ம,ப,க -' , ; ,;L,K,J,H )
  5)அடிக்கடி ஒன்றாக வரும் எழுத்துக்களான ஞ்ச-],[,ண்ட-P,O,ந்த-;,L,ங்க-B,H,ம்ப-K,J,ன்ற-I,U,போன்ற எழுத்துக்கள் அருகருகே இருக்குமாறும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இவைகளுக்கும், மற்றும் ச்ச,ண்ண,ட்ட,ன்ன,ற்ற,ள்ள,ய்ய,ந்ந,த்த,ம்ம,ப்ப,க்க,ர்ர,ல்ல,ழ்ழ,ங்ங,,வ்வ போன்ற  இரட்டை எழுத்துக்கள் தட்டச்ச
         புள்ளி வைப்பதற்கென கூடுதலாக விசைகள் அழுத்த வேண்டியதில்லை.முயன்று பாருங்கள். பயிற்சி செய்து பாருங்கள். ஒவ்வொரு பட்டனாக,எழுத்தாக அழுத்திப் பாருங்கள்.அதனை ''காப்பி''
எடுத்துப்பாருங்கள். அடுத்த இடத்தில் ''பேஸ்ட்''செய்து பாருங்கள். அதற்கு மேலும் முடியவில்லையா? எனக்கு நேரமும் இடமும் ஒதுக்குங்கள்.ஐந்து நிமிட வேலை! அப்புறம் பாருங்கள்.ஒரு இரண்டு வார்த்தையாவது தட்டச்சிப் பாருங்கள்.    

       அல்லது 
இந்த வலைப்பக்கத்தில் வலது புறம் உள்ள TNSF-LOGO விற்கு  கீழுள்ள, அல்லது BLOG Archive என்னும் கட்டத்திற்கு மேலே உள்ள  
                       '' W3 தமிழ்'99விசைப்பலகை''
   என்னும்  கட்டத்தினுள் ''மவுஸால்'' அதாங்க! அம்புக்குறியால் கீ போர்டு படத்தைத் தொடுங்கள்.அம்புக்குறி, ''கை'' வடிவமாக மாறினால் உடனே அழுத்துங்கள்.தமிழ்'99 கீபோர்டு மானிட்டர் தோன்றும்.இதிலும் தட்டச்சி விளையாடுங்கள்.            நன்றிங்க!. 
                                                பரமேஸ்வரன்.சி,
                        அரசுப் பேருந்து ஓட்டுனர்,
                  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்-கோவை கோட்டம்,
                    தாளவாடி கிளை - ஈரோடு மண்டலம்.







Tuesday, March 1, 2011

Saturday, February 26, 2011

(6) GOBI ARTS & SCINCE COLLEGE- சிறந்த கல்லூரி முதல்வர்

                             


          அன்பு நண்பர்களே,
                                           paramesdriver.blogspot.com வலைப்பதிவிற்கு தங்களை வணங்கி வரவேற்கிறேன்.
                          நம்ம ஊர் கல்லூரியாம் 

       கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மரியாதைக்குரிய Dr.R .செல்லப்பன்,M.B.A.,M.Com.,M.Phil.,D.L.L.,Ph.D., அவர்களுக்கு

   கல்வி மற்றும் மேலாண்மைக்கான பன்னாட்டு நிறுவனம் - சார்பில்
 சிறந்த கல்லூரி முதல்வருக்கான விருதினை வழங்கி கௌரவித்துள்ளது.

        சிறந்த கல்லூரி முதல்வருக்கான விருது பெறும் அளவு நமது பகுதி கல்லூரியாம்
  
         கோபி கலை & அறிவியல் கல்லூரியின் செயல்பாடு குறித்து கிராமப் பகுதியைச் சேர்ந்த நாமெல்லாம் பெருமைப்பட வேண்டிய விசயமாகும்.மரியாதைக்குரிய முதல்வர் அவர்களின் கனிவுடன் கூடிய கண்டிப்பு மற்றும் நம்மைப் போன்ற

               பெற்றோர்களிடம் அது கிராமவாசியாயினும் அணுகும் முறை சிறப்பானது.என்பது நாமெல்லாரும் அறிந்த விசயம்தான்.
     
          சரியான கல்லூரியைத் தேர்வு செய்துள்ள கல்வி மற்றும் மேலாண்மைக்கான பன்னாட்டு நிறுவனத்திற்கு தேனீக்கள் சமூக சேவை அமைப்பின் - சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். 
 
          மரியாதைக்குரிய கல்லூரி முதல்வர் அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.அவர் தம் கல்விப் பணி இந்த சமூக முன்னேற்றத்திற்கும், நாட்டின் நலனுக்கும் பயன்படும் வகையில் மேலும், மேலும் சிறக்க ''தேனீக்கள் சமூக சேவை'' சார்பாக வாழ்த்துகிறோம்!
       
     மரியாதைக்குரிய முதல்வர் அவர்களின் செயல்பாடுகளில் சில;-

        பெற்றோர்  சங்கத்தின் வாயிலாகவும் சரி,தனிப்பட்ட முறையிலும் சரி அடிக்கடி கல்லூரி வர வேண்டும் கல்லூரி நடவடிக்கைகள் குறித்து அறிந்து செல்ல வேண்டும் என பெற்றோர்களை வலியுறுத்துவது,

        கல்லூரியின் செயல்பாடு குறித்து , குறைகள்  மற்றும் மாணவ,மாணவியர் முன்னேற்றம்குறித்து பெற்றோர்களிடமே கருத்துக்கள் கேட்டறிவது. பெற்றோரிடமே கலந்துரையாடல் செய்வது.மேலும்

        பெற்றோர்கள் அடிக்கடி கல்லூரி வந்து சென்றால்தான் மாணவர்களும் (விளையாட்டுப் பருவமாதலால்) கட்டுப்பாடாக செயல்படுவார்கள்.எனவும்,

        கல்லூரி பேராசிரியர்கள் உட்பட எங்களுக்கும் சிறப்பாகச் செயல்பட ஊக்கமளிக்கக்கூடியதாக இருக்கும். எனவும்

          கல்வியறிவில்லாத மற்றும் கிராமப் பகுதியைச் சார்ந்த பெற்றோர்களுக்கும் உற்சாகமூட்டுவது,நம்பிக்கையூட்டுவது,தைரியமூட்டுவது போன்ற செயல்முறைகள் எல்லாம் வரவேற்கத்தக்கவை......

      .பெற்றோர் சங்கத்தினைக் கூட்ட வேண்டும் எனப் போராட்டங்கள் நடத்தி வரும் இக்கால கட்டத்தில்

         பெற்றோர்கள் அடிக்கடி வருகை தந்து நெருக்கடிகள்  கொடுக்க வேண்டும் எனக்  கேட்டுப் பெறுவதில் இவருக்கு நிகர் இவரே! எனலாம்.
          
         இந்த நிகழ்வுகளெல்லாம் இக்கல்லூரியில் பயில்பவருக்கும் இக் கல்லூரியில் தொடர்புடைய பெற்றோர்களுக்கு நன்றாகத் தெரியும்.

           அதே சமயத்தில் பேராசிரியப் பெருமக்களையும் ஊக்கப்படுத்தி மாணவர்களுக்கு சிறப்பான கல்வியினை கொடுக்க வைத்து

          மிகுந்த ஆர்வமாக,சிறந்த கல்லூரியாக செயல்படுத்துவதில் கல்லூரி முதல்வர் அவர்கள் உறுதியாக இருப்பதைக் காணும்போது நமக்கும் பாராட்டி வணங்கத் தோன்றும்.
   
          ஆச்சரியமாக இருந்தால் நீங்களும் ஒரு முறை கோபி கலை &அறிவியல் கல்லூரிக்குச் சென்று பாருங்கள்! மரியாதைக்குரிய கல்லூரி முதல்வர் அவர்களை நேரில் சந்தியுங்கள்!!   உண்மை நிலை அறிந்து கொள்ளுங்கள்.என paramesdriver.blogspot.com // Sathy & Thalavadi

Tuesday, February 22, 2011

(5) Honey Bees


Sunday, February 20, 2011

(4) உலகத் தாய் மொழி தினம்...

உலகத் தாய்மொழி தினம் தமிழுக்கும் பொருந்தும்

தமிழ் மொழிக்கு விழா எடுக்க நினைவூட்டிய ஈரோடு சிக்கய்ய   நாயக்கர் கல்லூரி  தமிழ்த் துறைப் பேராசிரியர் மரியாதைக்குரிய ப.கமலக் கண்ணன் மற்றும்

ஸ்ரீவாசவி கல்லூரி முதல்வர் மரியாதைக்குரிய எ.அகிலன் அவர்களுக்கும்

நன்றி!

இப்படிக்கு,

தேனீக்கள் தன்னார்வத் தொண்டு நிறுவனம்-

சத்தி மற்றும் தாளவாடி

Friday, February 18, 2011