டிபன் வகைகள்’
புழுங்கலரிசி சேவை
சேவை என்பது இடியாப்பம். எனக்கு இந்த பெயர் முன்பெல்லாம்தெரியாது. சேவை என்றே சொல்லி வழக்கம்.
இந்தப் பெயரும் நன்றாகவே இருக்கிறது. இதனுடன் கலக்கும் பொருளைக்
கொண்டு பெயர் சொல்லுவோம். தேங்காய், எள், எலுமிச்சை,வெல்லம்,
தயிர்,காய்கறி, மோர்க்குழம்பு, தேங்காய்ப் பால் என பட்டியல் நீளும்.
இப்போது இடியாப்பம் குருமா தான் முதலிடத்தில் இருக்கிறது.
நாம் முதலில் ப்ளெயின் சேவை தயாரிப்பதைப் பற்றி அதுதான்
புழுங்கலரிசியில் தயாரிப்பதைப் பற்றி பார்ப்போம்.
வேண்டியவைகள்
புழுங்கலரிசி—3கப். இட்டிலிக்கு உபயோகிக்கும் அ ரிசி
இடியாப்பம் செய்ய உபயோகிக்கும் — சேவை நாழி
அரிசியைக் களைந்து நன்றாக ஊறவைக்கவும்.
செய்முறை-
கிரைண்டரில் , ஊறிய அரிசியை ப் போட்டு அதிகம் ஜலம் விடாமல்
கெட்டியாகவும், நைஸாகவும் அரைத்தெடுக்கவும்.
இட்டிலி வார்ப்பது போல குழித்தட்டுகளில் எண்ணெய் தடவி மாவை
விட்டு ரெடி செய்யவும்.
சேவை நாழியில் உட்புறம் லேசாக எண்ணெய் தடவி வைக்கவும்.
குக்கரில் அளவாக தண்ணீர்விட்டு இட்டிலி ஸ்டேண்டை வைத்து,
வெயிட் போட்டு இரண்டு விஸில் வரும் வரை மிதமான தீயில்
இட்டிலிகளாக வார்க்கவும்.
சாதாரண இட்டிலி வார்க்க வெயிட் போட மாட்டோம்.
நீராவி அடங்கிய பின் இட்டிலிகளை ஒன்றன் பின் ஒன்றாக
எடுத்து அச்சில் போட்டு அழுத்தி சேவைகளாகப் பிழிந்து
எடுக்கவும். சூட்டுடன் பிழியவும்.
திருகு முறையிலும், ப்ரஸ் செய்து பிழியும் முறையிலும்
சேவை நாழிகள் கிடைக்கின்றன.
ப்ளெய்ன் சேவை ரெடி.
இதனுடன் குருமா சேர்த்து சாப்பிடலாம்.
தேங்காய் சாதத்திற்கு தயாரிப்பது போல தாளிதம் செய்து
தேங்காயை வறுத்து சேர்க்கலாம். இது தேங்காய் சேவை.
எலுமிச்சை சாற்றில் தாளித்துக் கலக்கலாம். இது எலுமிச்சை
சேவை.
தயிரில் தாளித்து தயாரித்தால் தயிர் சேவை.
எள்ளில் தயாரித்தால் எள்ளு சேவை.
வெல்லப் பாகு சேர்த்து தயாரித்தால் வெல்ல சேவை.
மோர்க் குழம்பு, தேங்காய்ப் பாலுடனும், சாப்பிடும்
வழக்கம் உண்டு.
எல்லா காய் கறிகளுடனும், உப்பு சேர்த்து வதக்கி
ஸோயா ஸாஸ் கலந்தும் தயாரிக்கலாம்.
தக்காளியை உபயோகப் படுத்தலாம்.
குருமா தயாரித்து உடன் உபயோகிப்பதுதான் பிரபலமாக
உள்ளது.
நம்முடைய ரஸனைக்கு ஏற்றவாறு பலவிதங்கள்.
சுலபமாக மாவை அறைத்து முதல்நாளே பிரிஜ்ஜில்
வைத்துக் கொண்டு வேண்டும் போது தயாரித்து
உபயோகிக்கலாம்.
குருமா செய்முறை முன்பே இருக்கிறது.
சேவை படங்கள் சில.
எந்த விதமான ருசி வேண்டுமோ அந்த விதமான மேல் சாமான்கள்
கலவையைத் தயார் செய்து தக்கபடி ப்ளெயின் சேவையுடன்,
திட்டமாகக் கலந்தால் விருப்பமானது தயார்.
குருமா, தேங்காய்ப்பால், மோர்க்குழம்பு வகைகளை கிண்ணங்களில்
ஸ்பூனுடன் கொடுத்து ப்ளேட்டில் ப்ளெயின் சேவையைக் கொடுக்கவும்.
மற்ற வகைகளைக் கலந்த நிலையிலே சித்ரான்னங்கள் டைப்பில்
அழகாகக் கொடுக்கலாம்.
என்னுடைய சமையல் குறிப்பு புழுங்கலரிசி சேவை உங்கள் தளத்தில் பார்க்க ஆச்சரியமாக இருந்தது.
ReplyDeleteஆனால் என் பெயர் மிஸ்ஸிங். தோசையும் அப்படியே. உபயோகப் படுத்தும்போது பெயரும் கூட போட்டால் நன்றாக இருக்கும் என்பது என் எண்ணம்.சேவை போட்டோவும் போட்டூள்ளீர்கள். எனக்கு விவரம் தெறிந்தால் உபயோகமாக இருக்கும்.
இப்படிக்கு சொல்லுகிறேன் காமாட்சி. வேர்ட்ப்ரஸ்.காம்