சென்ற பதிப்பில் காலத்தின் அடிப்படையை பார்த்தோம். காலம் என்பது
இயக்கத்தின் அளவீடு என்பதையும் பார்த்தோம். இயக்கமும் அறிவும் சேர்ந்தது
தான் காலம்
இந்த பகுதியில் அறிவு மற்றும் மாயை குறித்து பார்ககலாம்.
அறிவு என்பது என்ன? என பார்க்கும் முன்னர் அறிவு எப்படி வருகிறது. அல்லது அறிவு இயக்கம் என்பது என்ன என தெளிவுபடுத்திக்கொள்வோம் அப்போது குழப்பங்கள் தவிர்க்கப்படும் என நினைக்கிறேன்.
இரு நிலைகள் பரஸ்பரம் பறிமாறும்போது இயக்கம் வருகிறது. இயக்கத்தின் படிப்படியான நிலைகள் காலமாகிறது. காலத்தின் பதிவுகள் அறிவு இயக்கமாகிறது.
இங்கு மீண்டும் குவாண்டவியலுக்கு போவோம்
எலக்ட்ரான்கள் உட்பட அடிப்படை துகள்கள் கணப்பொழுதில் அலையாகவும் பொருளாகவும் இருக்கும் என்பது அறிவியலாளர்கள் அறிந்ததே.
இங்கு பொருளாக இருக்கும் துகள் அலையாவதை இயக்கம் என்றும் பொருள் அலையாகி மீண்டும் பொருளாவதை ஒரு கால சுற்று என்றும் குறிப்பிடுகிறோம். இந்த கால சுற்றில் இறுதிக்கும் துவக்கத்துக்குமான தொடர்பு அறிவாகிறது. இடைப்பட்டதற்கான தொடர்பு மாயையாகிறது.
மேற்சொன்ன கருத்தை கம்பியூட்டர் மொழி கணக்கீடில் எளிமையாக புரிந்து கொள்ளலாம் 1 - 0 -1 இது தான் கம்பியூட்டர் மொழி. இதில் 1 பொருள் என்றும் 0 அலை என்றும் உதாரணப்படுத்திக்கொள்ளலாம். இங்கு முந்தை ஒன்றுக்கும் பிந்தைய ஒன்றுக்கும் நேரடி தொடர்ப்பு இருக்கிறது. ஆனால் 0 க்கு இல்லை. உண்மையில் 0 தான் பிந்தைய முந்தைய ஒன்றுகளுக்கு நெருக்கமானது. ஆனால் பிந்தைய ஒன்று அறிவதெல்லாம் முந்தைய ஒன்றை மட்டுமே. இப்படி முந்தைய ஒன்றும் இடைப்பட்ட 0 வாகி பிந்தைய ஒன்றாக மாறுவது ஒரு கால சுற்று. ஆனால் இயக்கம் என்பது இதில் பாதி. முந்தைய ஒன்று 0 ஆனாலே அங்கு இயக்கம் வந்துவிடுகிறது. ஆனால் மீண்டும் 1 வந்தால் மட்டுமே அறிவு வருகிறது. இந்த அறிவின் அளவீடாக காலமும் வருகிறது.
அடுத்த அறிவு கட்டமைப்பை பார்ப்போம்.
1 - 0 - 1 என்ற தொடர்ச்சியின் கட்டமைப்பு 0, 1, 1, 2, 3, 5, 8, 13, 21 இப்படி அமைகிறது. இதை பைனாரி முறை என்று அறிவியலாளர்கள் குறிப்பிடுவார்கள். அதாவது 0+1 = 1, 1 +1 =2, 2+1=3, 3+2=5, 5+3=8, 8+5=13 இப்படி கட்டமைக்கப்படுகிறது. இதில் 1, 0 வும் தான் அனைத்து முழுமையிலுமே இருக்கிறது என்றாலும் 0 இல்லாததாகவே இருக்கிறது. இதை தான் மாயை என்கிறது ஆன்மீகம். அதாவது 5 க்கும் 8 க்கும் இடையில் எண்கள் இல்லாமல் இல்லை ஆனால் பைனாரி கட்டமைப்பில் இல்லாத நிலைதான் அறியப்படுகிறது. அதே போல தான் அறிவும் காலமும் இயக்கமும்.
துகள் அலையானலே அங்கு இயக்கம் வந்துவிடுகிறது. ஆனால் அறிவு முழு சுற்றுகளில் மட்டுமே அறியப்படுகிறது. இந்த முழுச்சுற்றுகளின் அறிவுபடியே காலமும் இருக்கிறது.
ஒரு பொருளின் அடுத்தடுத்த பொருள் நிலைகள் அறிவாகவும் அதன் அளவீடு காலமாகவும் கட்டமைக்கப்படுகிறது. இந்த கட்டமைப்பில் இருக்கும் எதிர்மறைகள் எல்லாம் மா¬யாயாக கொள்ளப்படுகிறது.
இங்கு கவனிக்க வேண்டியது மாயை இருந்தால் தான் அறிவும் காலமும் இயக்கமும் சாத்தியப்படுகிறது. அறிவும் மாயையும் இந்த இரண்டையும் ஆட்டிப்படைக்கும் மெய்யறிவும் தான் இந்த பிரபஞ்ச திருவிளையாடல்கள். (விரிவாக அடுத்த பதிவுகளில் பார்க்கலாம்)
ஒவ்வொரு பொருளுக்கும் அது எலக்ட்ரான் ஆனாலும் சரி, ஃபோட்டான் சரி மரம் மனிதனானாலும் சரி அதற்கு இணையான எதிர் அலை இருக்கிறது. அதே போல ஒவ்வொரு அலைக்கும் அது ஒளியானாலும் சரி, மின்காந்த அலையானாலும் சரி அதற்கு இணையான பொருள் இருக்கிறது. இதற்கு அது மாயை அதற்கு இது மாயை அவ்வளவு தான்.
காலசுற்று அடிப்படையில் அறிவு இயக்கம் இருப்பது புரிந்து இருக்கும் என நினைக்கிறேன். அடுத்து நமது எதார்த்த மாயைகளை கொஞ்சம் அலசிவிட்டு பிரபஞ்ச தோற்றம் குறித்து பார்க்கலாம்
மனிதனுக்குள் மடடுமல்ல பிரபஞ்சத்தில் இருக்கும் அத்துனை பொருளுக்குள்ளும் இருக்கக்கூடிய அறிவும் கால அளவீடுகளை மட்டுமே வைத்து தீர்மானிக்கப்படுவது. மனிதனுக்கு இருக்கும் அறிவு விலங்குக்கு இருப்பதில்லை. விலங்குக்கு இருக்கும் அறிவு, தாவரத்துக்கு இருப்பதில்ல. தாவரத்துக்கு இருக்கும் அறிவு சட பொருளுக்கு இருப்பதில்லை. மனிதன் முதல் சட பொருள் வரை பிரபஞ்சத்துள் எல்லாம் பொருள் தான். ஆனால் இந்த பொருள்களுக்குள்ளேயே இருக்கும் அறிவு ஏற்றத்தாழ்வுடையது.
பொருளுக்கிடையே மட்டுமல்ல மனிதர்களுக்குள்ளேயே அறிவு ஏற்றத்தாழ்வுகள் உடையது தான். மனிதர்களுக்கு எல்லாம் ஒத்த தன்மையுடைய உணர்வு உறுப்புக்களை அறிவு நல்கியிருக்கிறது. அதனால் பேனா எல்லோருக்கும் பேனாவாக தெரிகிறது. ஒரு வேளை ஒவ்வொருவருக்கும் அதிகப்படியான அறிவு ஏற்றத்தாழ்வுகள் இருக்குமானால், நான் பேனா என்பதை நீங்கள் தூசு என்பீர்கள், நீங்கள் புழுக்கள் என்பதை நான்நீளமான ராட்சத பாம்புகள் என்பேன். நான் எரும்புகள் என்பதை நீங்கள் யானை கூட்டம் என்பீர்கள். நல்லவேளை இந்த கொடுமைகளை எல்லாம் இறைவன் செய்யவில்லை. பாரபட்சமின்றி எல்லோருக்கும் ஒத்த அறிவை நல்கியிருக்கிறான். என்றாலும் நுண்ணிய ஏற்றத்தாழ்வுகள் இருக்கதான் செய்கிறது.
தீயை தொட்டால் எல்லோருக்கும் சுடுவதால் தீயை வெப்பம் என்கிறோம். ஒரு வேளை நீங்கள் தீயை தொடும்போது விரல் வெப்பத்தை உணராமல் குளிர்வதாக வைத் துக்கொள்ளுங்கள், நானோ தீயை வெப்பம் என்பேன். நீங்களோ குளிர் என்பீர்கள். இதில் யார் சொல்வது உண்மை? யார் சொல்வது பொய்? அதேபோல எனக்கு எலக்ட்ரான் களை மட்டுமே அறியக்கூடிய கண்கள்(விழிகரு) இருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள் எனக்கு பேனாவும் தெரியாது, புத்தகளும் தெரியாது. எல்லாம் எலக்ட்ரான்களாக தான் தெரியும்.
பொருளறிவு என்பது பொருளுக்கு பொருள், இயக்கத்துக்கு இயக்கம், நிலைக்கு நிலை மாறக்கூடியது. எந்தப் பொருளறிவும் நிலையானதோ முழுமையானதோ அல்ல.
இயக்கம் என்பது சார்புடையது. இரு நிலைகளின் சார்பு இன்றி இயக்கம் நிகழாது. அதேபோல தான் இயக்கத்தால் வரும் காலமும் அறிவும் சார்புடையது. காலமும் அறிவும் இருநிலை களையும் வைத்து தீர்மானிக்கப்படுவது. அதில் ஒரு நிலையை மட்டும் அறிந்துகொண்டு அதின் ஏற்றதாழ்வுகளை அறிவாக, காலமாக உணர்வதால் தான் பொருளறிவையும், பொருளறிவில் பொதிந்த பிரபஞ்சத்தையும் மாயை என்கிறது ஆன்மீகம்.
பிரபஞ்சக் கட்டமைப்பு என்பது ஒற்றையறிவாக அறியப்படுவதில்லை. எல்லாம் இரட்டையறிவாக தான் அறியப்படுகிறது. இதை எளிமையாகவே புறிந்து கொள்ளலாம்
அறிநிலை - அறியாநிலை, பரல் - பரவல், துகள் - அலை, பொருள் - வெளி, ஈர்ப்பு - விலக்கு, வெப்பம் - குளிர், நேர் - எதிர், உயர் - உயிரற்றவை, ஆண் - பெண், உள்ளே - வெளியே, மெய் - பொய், என பிரபஞ்சத்தின் அனைத்துமே இரட்டை நிலைகளில் தான் அறியக்கிடக்கிறது. இந்த இரட்டை தன்மைகள் ஒன்றை ஒன்று சார்ந்தது மட்டுமல்ல ஒன்றை ஒன்று பொய்யாக்கக் கூடியதும் தான்.
பரலை அறியும் போது பரவல் மறைக்கப்படுகிறது. அதேநேரத்தில் பரவல் இல்லாமல் பரல் இல்லை என்பதையும் அறிவு அறிகிறது. இது எப்படி சாத்தியப்படுகிறது? என்பதில் தான் பிரபஞ்ச விதிகளுக்கான ரகசியங்கள் அடங்கிக்கிடக்கிறது. ( இது குறித்து விதிகள் பகுதியில பார்க்கலாம்).
வெளி, பொருள் இந்தஇரு அறிவுகளும் ஒன்றை ஒன்று சார்ந்து, அதேநேரத்தில், ஒன்றை ஒன்று அழித்து(மறைத்து) அறியப்படுகிறது.
பொருளறிவின் சார்புநிலையான வெளியறிவை முழுமையாக அறியமால், பொருள் அறிவு அறிந்தவற்றை மட்டும் பிரபஞ்சம், வாழ்க்கை என கூறுவதை தான் ஆன்மீக ஞானிகள் மாயை(பொய்யறிவு) என்கிறார்கள்.
பொருளறிவும் மாயையானது. வெளியறிவும் மாயையானது. இந்தஇரு அறிவுகளையும் சீர்தூக்கிக்பார்க்கும் அறிவே உண்மையான மெய்யறிவு என்கிறது ஆன்மீகம்.

No comments:
Post a Comment