Friday, September 16, 2011

பேரழிவு ஆயுதங்கள்


         பூமி வெடித்து சிதறிவிடும்













           பேரழிவு ஆயுதங்களின் விளைவுகளைப்பற்றி விவரிக்க தேவையில்லை அனேகமாக எல்லோருக்கும் தெரிந்திருக்கும். வெறும் ஆயுதங்களால் மட்டுமே நடந்த இரண்டு உலக போர்களில் பாதி உலகே நாசம் அடைந்தது என்றால், ஆணுஆயுதங்கள் மற்றும் பேரழிவு ஆயுதங்கள் பெருகியுள்ள இந்த காலகட்டத்தில் மூன்றாம் உலகப்போர் மூண்டால் உலகின் நிலையை கொஞ்சம் எதார்த்தமாக சிந்தித்துபாருங்கள்.

           இந்த கணம் அணுஆயுதப்போர் வந்தாலும் அடுத்த 2 மணிநேரத்தில் பூமி வெடித்துச் சிதறி கருகி சாம்பலாகிவிடும். ஒரு ஈ, எரும்பு கூட மிஞ்சாது.

           ஒரு மீச்சிறு ஆணுகுண்டானதே கண்ணிமைக்கும் நேரத்தில் பலகோடி மக்களை கொன்று குவிக்கும் ஆற்றல் பெற்றது என்றால், இன்று உலக வல்லரசுகளிடம் மட்டும் 80,000 ரகத்திற்கும் மேற்பட்ட பேரழிவு ஆயுதங்கள் இருக்கின்றனவாம். இந்த 80,000 ரக பேரழிவு ஆயுதங்களும் அழிவு பாதையை துவங்குமானால் நாம் வாழும் பூமி தாங்குமா? நிலம் சற்று அசைந்தாலே நிலநடுக்கம், பூகம்பம் என பேரழிவு நிகழும்போது பூமியே வெடித்து சிதறினால் மிஞ்சுவது யார்?

            என் அறிவுக்கு எட்டியமட்டும் இன்று உலக வல்லரசுகளிடம் இரசாயன குண்டுகள், ஜலவாயு குண்டுகள், கிருமிநாசினி குண்டுகள், நியூட்ரான் குண்டுகள், ஆக்சிஜன் உறிஞ்சு குண்டுகள், நாபாம் குண்டுகள், வாக்கும் குண்டுகள், எண்ணை காற்று வெடிகள், நிலத்தடி தாக்குதல் ஏவுகணைகள், விண்வெளி தாக்குதல் ஏவுகணைகள், பேரழிவு நோய்கிருமி ஏவுகணைகள், விசவாயு ஏவுகனைகள், உயிர்கொல்லி ஏவுகணைகள், கதிர்வீச்சு ஆயுதங்கள், கண்ணி வெடிகள், அபாயகர அணுகுண்டுகள்; இதுமட்டுமல்லாது இதனிலும் மேலான சக்தி வாய்ந்த கொடூர ஆயுதங்கள் உலக வல்லரசுகளிடம் மறைக்கப்பட்டுள்ளதாம். இத்தனை குண்டு களும் ஏவுகணைகளும் எதற்காக காத்திருக்கின்றன. உலகை காப்பாற்றி மேம்படுத்திக் கொள்ளவா? அல்லது அழித்து சாம்பலாக்கிக் கொள்ளவா?

        வல்லரசுகளின் கண்டுபிடிப்பை பார்த்தீர்களா?
விஷவாயு குண்டுகள், உயிர்கொல்லி ஏவுகணைகள், ஆக்சிஜன் உறிஞ்சு குண்டுகள், பேரழிவு நோய்கிருமிகள். இதெல்லாம் தான் பாதுகாப்பு ஆயுதங்களா? பாதுகாப்பு! பாதுகாப்பு! இதுதான் இந்தியா உட்பட எல்லா நாடுகளும் சொல்லிக் கொள்ளும் முக்கிய சாக்கு. பாதுகாப்பிற்கு தான் பேரழிவு ஆயுதங்களா?

பாதுகாப்பு என்பது எதிரி அழிந்து
நாம் காக்கப்படுவது தான் - மாறாக
எதிரியோடு நாமும் சேர்ந்து அழிவது பாதுகாப்பா?
விசவாயுவுக்கு தெரியுமா எதிரி யார்?
நண்பன் யார்? அப்பாவி யார்? என.

நாட்டுக்கு நாடு தீவிரவாதம், வன்முறை போர், பகை, பொருளாதார சுரண்டல்கள் என பிரிவினைகள் பெருகியுள்ள இந்த காலகட்டத்தில் அணுஆயுதங்கள் எவ்வளவுதூரம் கைகட்டி காத்திருக்கும் என நினைக்கிறீர்கள்? போட்டிக்கு போட்டி அணுஆயுதங்களை பெருக்கிக்கொண்டு பகைக்கு பகை பேரழிவுஆயுதங்களை கையில் எடுத்தால் இந்த பூமி தாங்குமா? அத்தனை ஏன் போர், தீவிரவாதம் இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும் எப்போது வேண்டுமானாலும் வெடித்து சிதறும் என்ற எரிமலைமீது கோட்டை கட்டிக் கொண்டு வாழ்வது தான் பாதுகாப்பா?

எவ்வளவு பெரிய முட்டாள் தனம்?
பாதுகாப்பு பாதுகாப்பு என பேரழிவு பாதாளத்திற்குள் அல்லவா விழுந்து கிடக்கிறோம்.

No comments:

Post a Comment