உலகில் அதிவேகமாக செல்வது ஒளிதான். 1675-ம் ஆண்டுவாக்கில் ’டேனிஷ்’ என்ற வானவியல் அறிஞர் ‘ஒலே ரோய்மர்’ கணக்கின் அடிப்படையில் ஒளியின் வேகம் ஒரு வினாடிக்கு இரண்டு லட்சத்து இருபதாயிரம் கிலோமீட்டர் செல்வதாக கணக்கிட்டார்.
கடந்த சில நூற்றாண்டுகளாகவே ஒளியின் வேகத்தை பல்வேறு அறிஞர்கள் ஆராயத் தொடங்கினர். அவர்களில் ‘ஒலே ரோய்மர்’, ‘ஆர்மண்ட் பிசியு’, ’லியான் பாகட்’ போன்றவர்கள் முக்கியமானவர்கள்.
*வெற்றிடத்தில் ஒளி ஒரு வினாடியில் 3 லட்சம் கிலோமீட்டர் தூரத்திற்கு செல்கிறது.
*நீரில் ஒரு வினாடியில் ஒளியின் வேகம் 2 லட்சத்து 25 ஆயிரம் கிலோமீட்டர்.
*கண்ணாடியில்
ஒரு வினாடியில் 2 லட்சம் கிலோமீட்டரும், வைரத்தில் ஒரு வினாடியில் ஒரு
லட்சத்து 25 ஆயிரம் கிலோமீட்டர் தூரமும் செல்கிறது.
No comments:
Post a Comment