Thursday, September 22, 2011

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை




  அன்பு நண்பர்களே,வணக்கம். 
     இந்தப்பதிவில் ஊழல் என்று நாட்டையே அதிரவைத்த ஸ்பெக்ட்ரம் பற்றிய விபரம் அறிவோம்.    

ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன?
     மின்சாரத்தை கம்பி மூலம் கடத்த முடியும் அதே போல் கம்பி ஏதும் இல்லாமல் குறிப்பிட்ட தூரத்திலிருந்து இரும்பை கவர்ந்து தன்னை நோக்கி இழுக்கும் காந்தத்தையும் நாம் அறிவோம்.

      ஒரு கம்பியில் பாயும் மின்சாரம் தன்னைச்சுற்றி மின்புலத்தையும் , காந்தம் தன்னைச்சுற்றி காந்த புலத்தையும் உருவாக்குகிறது.இந்த மின்புலம் அல்லது காந்தப்புலம் தன்னைச்சுற்றியுள்ள பொருள்கள் மீது ஒரு விசையை செலுத்துகிறது.

     மின்காந்த புலத்தில் பரவும் ஒரு வகை ஆற்றல் அலை வடிவம் உடையது. 

      மின்காந்த அலைகள் வெற்றிடத்தில் வேகமாக பரவும். ஒரு வினாடிக்கு 3,00,000 கி .மீ 

     மின்காந்த அலைகளைக்கொண்டு ரேடியோ,  F.M ,  தூர்தர்ஷன் தரைவழி தொலைக்காட்சி சேனல் ஒளிபரப்பாகின்றன.

      ரிமோட்ப்ளுடூத்,   WI - FI   அனைத்தும் மின்காந்த அலைகளால் இயங்குபவை.
 
      இருவகை மின்காந்த அலைகளை ( நீலம் மற்றும் சிவப்பு ) வேறுபடுத்துவது அதிர்வெண் எனும் பண்பு . 
    ஒரு குறிப்பிட்ட வினாடியில் ஒரு அலை எவ்வளவு முறை அதிர்கிறது என்பதுதான் அதிர்வெண் . 

     இதன் அலகு ஹெர்ட்ஸ் . ஒரு பெண்டுலம் ஒரு வினாடிக்கு ஒரு முறைதான் ஆரம்பித்த இடத்துக்கே மீண்டும் வருகிறது. 

    பெண்டுலத்தில் மாற்றம் செய்து ஒரு வினாடிக்கு இருமுறை வர வைக்கலாம் . அப்போது அது இரண்டு ஹெர்ட்ஸ் . 

     ஒளி அலைகளை எடுத்துக்கொள்வோம் ,இவை காற்றில் எளிதில் ஊடுருவும் . மரமோ , சுவரோ தாண்டி செல்வதில்லை.

     நாம் கண்ணால் காணும் ஒளி அலைகளின் அதிர்வெண் 430-750 டெரா ஹெர்ட்ஸ். 

     ஆனால் இதைவிட குறைந்த அதிர்வெண் கொண்ட மின்காந்த அலைகளால் ஒளியால் ஊடுருவ முடியாத இடங்களையும் ஊடுருவமுடியும் .

     F.M வானொலிகள் அப்படிப்பட்டவை. (85 - 110 மெகா ஹெர்ட்ஸ் வரை ). முழு ரேஞ்ச் அதாவது 110- 85 மெகா ஹெர்ட்ஸ் வரை உள்ள 25 மெகா ஹெர்ட்ஸ் அகலம் கொண்ட இந்த பகுதியை பண்பலை பரவல் என்பர்.

      இந்த அலைப்பரவலுக்கு வெளியே F.M நிகழ்ச்சிகள் தரமுடியாது . 
    அதே போல் செல்போனில் 2G   ( குரல்வழி சேவை மட்டும்) 2G இதன் அர்த்தம் 2- nd Genaration ) இதனை 1710 மெகா ஹெர்ட்ஸ் முதல் 1880 மெகா ஹெர்ட்ஸ் என்ற 170 மெகா ஹெர்ட்ஸ் அகலமுள்ள அலைப்பரவலில் தரமுடியும் . 

       அதே போல் 3G சேவைகளை ( குரல் டேட்டா மற்றும்  வீடியோ ) 1920 - 2170 மெகா ஹெர்ட்ஸ் அலைப்பரவலில் மட்டுமே தரமுடியும்.  
    
    அலைப்பரவலில் அகலம் குறைவாக இருப்பதால் அதைக்கொஞ்சம் பேர்தான் பகிர்ந்து கொள்ள முடியும். எனவே ஸ்பெக்ட்ரத்தை பயன்படுத்துவதில் போட்டிகள் அதிகம். மேலும் ஸ்பெட்ரத்தை பயன்படுத்துவதில் வேறு சில சிக்கல்களும் உள்ளன . 

      ஒரு பண்பலை வானொலி நிலையத்துக்கும் இன்னொரு வானொலி நிலையத்துக்கும் இடையில் 0.8 மெகா ஹெர்ட்ஸ் இருக்க வேண்டும் .

    அப்போதுதான் நிகழ்ச்சிகள் குழம்பாமல் தெளிவாக இருக்கும். பண்பலை வானொலியில் 25 மெகா ஹெர்ட்ஸ் - யை 0.8 -ஆக பிரித்தால் ஒரு நகரில் சுமார் 30 வானொலி நிலையங்கள் மட்டுமே அமைக்கமுடியும் . 
     அதே போல் 2G சேவை என்றால் ஒரு நகரில் 10 சேவை நிறுவனங்கள் 1800 மெகா ஹெர்ட்ஸ் - யை ஒட்டி இருக்க முடியும் .

      3G சேவையை எடுத்துக்கொண்டால் 7 -8 பேர்தான் இருக்க முடியும் .இதனால் ஸ்பெக்ட்ரத்தை பயன்படுத்துவதில் போட்டிகள் அதிகம் .
paramesdriver.blogspot.com 

No comments:

Post a Comment