Friday, September 16, 2011

அறியாமை

மனிதகுல பிரச்சினைகள் அனைத்துக்கும் காரணமான அறியாமைகள் எங்கிருந்து வந்தன. எப்படி தோன்றின?

ஆதி மனிதன் தோன்றியது தொட்டு தொடருபவைகள் தான் இந்த அறியாமைகள். தன்னை சுற்றிய பிரபஞ்ச இயக்கங்களையும், வாழ்க்கை விதிகளையும் அறிந்துகொள்ள மனிதன் தோன்றியது முதலே முயற்சித்துக் கொண்டுதான் இருக்கிறான். அந்தமுயற்சிகள் தான் அறிவியலும் ஆன்மீகமும்.

அறிவியல் வேறு ஆன்மீகம் வேறு அல்ல. அறிவை தேடி மனிதமனம் பயனிக்கும் இருபாதைகள் தான் அறிவியலும் ஆன்மீகமும். அறிவியலுக்கும் ஆன்மீகத்துக்கும் ஒரே ஒரு வேறுபாடுதான்

மனம் தன் வாழ்வுக்காக தனக்கேற்றவாறு பிரபஞ்சத்தை வளைப்பது அறிவியில். பிரபஞ்சத்துக்கு ஏற்றவாறு தன்னை வளைத்துக்கொள்வது ஆன்மீகம். ஆக இரண்டுமே அறிவின் பயணங்களே தவிர அறிவியல் மட்டுமே அறிவுடமை. ஆன்மீகம் என்பது வெறும் நம்பிக்கை சார்ந்த மூடம் என நாத்திகம் பேசுவது முட்டாள்தனம். பிரபஞ்ச அறியாமைகளை அகற்றிக்கொள்ள மனிதனுக்கு அறிவியல் ஆன்மீகம் என இரண்டுமே தேவைதான்.

(உதாரணம்: சுனாமி தாக்காமல் இருக்க சுவர் எழுப்புவது அறிவியல், சுனாமியில் நீந்த கற்றுக்கொள்வது ஆன்மீகம்.- இது உதாரணம் மட்டுமே ஆன்மீகத்தின் முழுமையான விளக்கம் அல்ல.)

நமக்கு ஏற்றவாறு பிரபஞ்சத்தை வளைப்பதா?
பிரபஞ்சத்துக்கு ஏற்றவாறு நாம் வளைவதா?

இந்த கேள்வியை திரும்பத்திரும்ப ஆராய்ந்த ஆதிகால ஆன்மீகஞானிகளும், சித்தர்களும் தெளிவாகவே நமக்கு வழிகாட்டியுள்ளார்கள்.

நமக்கு ஏற்றவாறு பிரபஞ்சத்தை வளைப்பதை காட்டிலும், பிரபஞ்சத்துக்கு ஏற்றவாறு நம்மை வளைத்துக்கொள்வது தான் எக்காலத்துக்கும் சிறந்தது. ஆனாலும் நமக்கு ஏற்றவாறு பிரபஞ்சத்தை வளைப்பதையும் அவர்கள் ஒதுக்கவில்லை. ஆனால் அது ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்பதை மட்டும் திரும்பத் திரும்ப வலியுருத்தியுள்ளனர்.

ஆன்மீகம் என்பது கட்டுப்பாடுள்ள அறிவியலே அல்லாமல், அறிவியலின் எதிர்வாதமோ அறிவியலுக்கு அப்பாற்பட்ட மூட நம்பிக்கையோ அல்ல. உண்மையில் ஆன்மீக ஞானிகள் சொல்லிய சித்தாந்தங்களும் வேதங்களும் தான் அறிவியலின் அடித்தளங்கள். கட்டுப்பாடுள்ள அறிவியல் - இதுதான் வேதாந்த ஆன்மீகத்தின் அடிப்படை கோள்கை.

நமக்கு ஏற்றவாறு பிரபஞ்சத்தை வளைக்கும் அறிவியல் ஒரு கட்டுப்பாடோடு இருக்கவேண்டும். கட்டுப்பாட்டை மீறுமானால் அது நம்மையே அழித்துவிடும். இப்படி கட்டுப்பாடுகளை சொன்ன ஆன்மீகத்தை ஒதுக்கியது, ஒதுக்குவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்.

இன்று அறியாமைகள், பிரட்சனைகள், வன்முறைகள், அணுஆயுதப் பேரழிவுகள் என நாம் அல்லோலப்பட்டுக் கொண்டிருக்க காரணமே ஆன்மீக கட்டுப்பாடுகளை தாண்டி விரிந்த அறிவியலால் தான்.

பிரபஞ்சத்தை நமக்கு ஏற்றவாறு வளைப்பதும், அதற்கு ஏற்றவாறு நாம் வளைவதும் கால சூழலை பொருத்தது. இத்தகு சூழலில் சரியானதை தேர்ந்தெடுக்கும் போது அறியாமை அகன்று அறிவுத்தெளிவு பிறக்கிறது. இது ஆன்மீகம் வகுத்த வேதாந்த கோட்பாடு. ஆனால் சோம்பேரிதனமும் பேராசைகளும் நிறைந்த மனிதர்கள் ஆன்மீகவிதிகளை அடியோடு ஒதுக்கினர். அறிவியல், அறிவியில் என்று இயன்றவரை பிரபஞ்சத்தை வளைத்து மனதுக்குள் வசியப்படுத்திக் கொண்டர்னர்.

விஞ்ஞானத்தை மட்டுமே முழுமையாக நம்பியவன் மெய்ஞானத்தை அடியோடு மறந்து விட்டான். விளைவு இன்று பொருள் அறிவியலின் மாயைகளுக்குள் விழுந்து மீண்டுவர முடியாமல் தத்தளிக்கிறான். அறிவியலே கடவுள். அதுவே எல்லாமும். அதன் பார்வை மட்டுமே உண்மை. என்று அறிவியலை முழுமையாக நம்பி, ஆன்மீக கண்களை குருடாக்கிக் கொண்ட நமக்கு விதிக்கப்பட்ட சாபம் தான் இன்றைய அறியாமை அவலங்கள்.

இன்று மனிதன் கடவுளுக்காக கூட அடித்துக்கொள்கிறான். எவ்வளவு பெறிய அவலம்?
கடவுள் யார்? இதுதான் இன்றைய மனிதனின் மிகப்பெறிய அறியாமை.

அறிவியில் மோகத்தில் முற்றிப்போன நாம் விதிப்படி தேடிக்கொண்ட விஷம் தான் இன்றைய அறியாமைகள் என ஒரே வாக்கியத்தில் சொல்லிவிடலாம். ஆனால் அறிவியலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நமது மனங்களுக்கு இந்த விதிவிளக்கம் புரியாது. இதற்குமேலும் இப்படி ஆன்மீக சிந்தனைகளையே நான் பேசினால், இவளும் ஒரு குழப்பவாதி என முடிவு செய்து, இந்த வலைபூவை சுருட்டி மூலையில் வீசிவிட்டு போய் விடுவீர்கள்.

ஆம்! இன்று அறிவியலை குற்றமோ குறையோ சொன்னால் யாருக்கும் பிடிப்பதில்லை. காரணம் மனித மனங்கள் அந்த அளவுக்கு அறிவியலுக்கு அடிமையாகி விட்டன. இன்று மனித மனங்களில் எல்லாம் அறிவியலே குடிகொண்டுள்ளது. எதை சொன்னாலும் அறிவியல் ரீதியில் உபகரண உதாரணங்களோடு சொன்னால் தான் புரியும். அறிவியல் இன்றி ஆன்மீக சிந்தனைகளில் எதையும் சொல்ல முடியாது.

உண்மையில் எண்ணயியலை(ஆன்மீகம்) போதிக்க தான் எண்ணியலை(அறிவியல்) கொண்டுவந்தார்கள் ஆன்மீகஞானிகள். ஆனால் இன்று எண்ணயியலை விட்டுவிட்டு எண்ணியல் தான் எல்லாமும் என குதிக்கின்றோம். உண்மையை விட்டுவிட்டு உதாரணத்தை பிடித்துக்கொண்டோம்.

அர்த்தமுள்ள ஆன்மீகத்தை புரிந்து கொள்ள ஒவ்வொரு மனித மனங்களும் ஏங்கத்தான் செய்கின்றது. ஆனால் அறிவியலின் மாயையுள் புதைந்து விட்ட நமது மனங்களுக்கு எப்படி ஆன்மீகத்தை புரிய வைப்பது?

ஆன்மீகத்தை மனதுக்கு புரியவைக்க நமது மனங்கள் அடிமைபட்டுள்ள அறிவியல் வழியையே கையாளலாம். அப்போது தான் உங்களுக்கும் எனக்கும் குழப்பங்கள் தவிர்க்கப்படும். மட்டுமல்ல இரட்டை அர்த்தங்களால் மேலும் மேலும் அறியாமைகள் பெருகாமல் தவிர்க்க முடியும்.

இயேசு கிறிஸ்து, நபிகளார், கிருஷ்ணர் உட்பட இன்னும் பல ஆன்மீக மகான்கள் செய்த தவறு இதுதான். மக்களுக்கு புரியவைப்பதற்காக உதாரணஉவமை நடையில் ஆன்மீகத்தை போதித்தார்கள். பின்னர் அதுவே இரட்டை அர்த்தங்களாக்கப்பட்டு இன்று அறியாமைகளின் உச்சத்துக்கு கொண்டு வந்திருக்கிறது மனிதனை. முத்தாய்ப்பாய் சொன்னால் இன்று அறிவியலை விட ஆன்மீகத்தில் தான் அறியாமைகள் புரையோடிக்கிடக்கின்றன.

புரிதலும் சிந்தனைகளும் தெளிவாக இருக்கவேண்டும். மனம்அதை நேரடியாக உணரக் கூடிய எதார்த்த போதனைகளாக இருக்க வேண்டும். அறிவியலால் ஆக்கிரமிக்கப்படடுள்ள நமது மனங்களுக்கு அறிவியல் வழியில் தான் எதையும் நேரடியாக விளக்கிக்கொள்ள முடியும். அது அல்லாமல் வேறு எந்த வழியில் முயன்றாலும் இரட்டை அர்த்தங்களும் அதனால் விளையும் அறியாமைகளும் தான் தொடரும்.

பொருள் அறிவியலால் விளைந்த போகவாழ்க்கையின் மாயத்திரையை கொஞ்சம் விளக்கிப்பார்த்தால் நமக்குள்ளேயும் உண்மையான, உன்னதமான பேரானந்த மெய்யறிவு ஒளிர்வதை எதார்த்தமாகவே உணரலாம்.

No comments:

Post a Comment