Friday, February 21, 2014

"பரமசிவம்' பார்த்துக்கொள்வார்...

மரியாதைக்குரியவர்களே,
             வணக்கம்.
                    பரமேஸ் டிரைவர் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.இதோ ஒரு பரமசிவம்.படித்து பாருங்கள்.பதிவிட்ட திருமிகு.நாகூர் கனி காதர் மைதீன் பாஷா அவர்களுக்கு நன்றிங்க.   Nagoorkani Kader Mohideen Basha உடன் Parameswaran Driver    
                   கோவை டவுன்ஹால் வீதியில் உள்ள அந்த சின்னஞ்சிறு வீட்டின் முன் விதவைகளும், வயதானவர்களும், எளிய தொழிலாளர்களுமாக ஒரு சிறு கூட்டம் அவர் எப்போது வருவார் என்று கண்களில் கடைசி நம்பிக்கையை வைத்துக் கொண்டு காத்திருக்கிறது.

வரப்போவது யார் மருத்துவரா, கவுன்சிலரா, அதிகாரியா என்றால் அப்படி எல்லாம் கிடையாது. அவர் சாதாரண பேருந்து ஒட்டுனர். மாதம் பத்தாயிரம் ரூபாய் வருமானத்தில மனைவி, குழந்தைகளுடன் வாழும் சராசரி எளிய இந்தியன்.

ஆனால் அந்த இந்தியனுக்குள் அடுத்தவருக்கு உதவுவது ஒன்றே தன் வாழ்க்கையின் லட்சியம் என்று எரியும் ஜோதிதான் அவரைப்பற்றிய இந்த கட்டுரை.

பெயர் பரமசிவம், வயது 47 ஆகிறது. கோவையில் ஏஜேகே கல்லூரியின் பேருந்து ஒட்டுனராக உள்ளார்.

பத்து வருடங்களுக்கு முன் சில ஆவணங்கள் வாங்குவதற்காக அரசு அலுவலகங்களின் படிக்கட்டுகளில் ஏறி இறங்கவேண்டிய நிலை .அப்போது அவருக்கு ஏற்பட்ட அலைச்சலும், மன உளைச்சலும்தான் அவரை புதிய பாதைக்கு திருப்பியது.

நம்மைப் போலவே அன்றாடம் இதே வேலையாக அலையும் பலருக்கு நமது அனுபவத்தை வைத்து உதவினால் என்ன என்று சிந்தித்தார்.அதன்படி விதவைகள் பென்ஷன், வயதானவர்கள் ஒய்வூதியம் போன்றவைகளை வாங்கிக் கொடுத்தார். வாங்கியவர்களின் கண்களில் ஆனந்தக் கண்ணீரை பார்த்தார் அதன்பிறகு இதுவே தனது வாழ்க்கை என்பதாகக் கொண்டுவிட்டார்.

உதவியதை எல்லாம் நான் கணக்கு வைத்துக் கொள்ளவில்லை என்றாலும் கடந்த பத்து ஆண்டுகளில் இதுவரை பதினைந்தாயிரம் பேர்களுக்கு உதவியிருப்பேன்.

கல்லூரியில் வாகனம் ஒட்டும் வேலை காலை 8 மணியில் இருந்து 10 மணிவரையிலும்,மாலை 4 மணியில் இருந்து 6 மணிவரையிலும்தான்.இந்த நேரம் போக இடைப்பட்ட நேரங்களில் மக்களுக்கு உதவுவது என்று முடிவு செய்தார். இந்த முடிவை கல்லூரி நிர்வாகத்திடமும் சொல்லி அனுமதியும், ஆசியும் வாங்கிக் கொண்டார்.

பத்து மணிக்கு தனது வீட்டிற்கு வந்ததும் காத்திருக்கும் மக்களிடம் பேசுகிறார். மனுதாரர்கள் பேச்சிலும், தரும் தகவல்களிலும்,வழங்கப்படும் சான்றுகளிலும் பொய்யோ, வில்லங்கமோ இல்லாத மனுக்களை மட்டும் எடுத்துக் கொள்கிறார். அவர்களது பிரச்னைகளை அறிந்து கொள்கிறார்அ வர்களுக்கான மனுக்களை தயார் செய்கிறார். பிறகு அது தொடர்பான அரசு அலுவலகங்களுக்கு சென்று அதிகாரிகளை பார்த்து அவர்களுக்கான காரியங்களை செய்து கொடுக்கிறார்.

இதற்காக பத்து பைசா கூட வாங்கியதும் கிடையாது, வாழ்நாள் முழுவதும் வாங்கப்போவதும் கிடையாது. மனிதனாகப் பிறந்தால் மற்றவர்களுக்கு உதவ வேண்டும். எனக்கு இப்படி ஏழை எளியவர்களுக்கு உதவும் வாய்ப்பு கிடைத்ததை பாக்கியமாகவே கருதுகிறேன். இதனால் என் மனசு நிறைந்து இருக்கிறது. திருப்தியும் சந்தோஷமும் உண்டாகிறது. இன்னும், இன்னும் இவர்களுக்காக உழைக்கத் தோன்றுகிறது.

என்னோட நேர்மை மற்றும் அணுகுமுறை பற்றி அனைவருக்கும் தெரியும் என்பதாலும், நான் நியாயமான காரியமாகத்தான் வருவேன் என்பதாலும் அதிகாரிகளும் எனக்கு உதவுகிறார்கள்.

தன் பிள்ளைகளுக்கு கடந்த 12 வருடமாக சாதிச்சான்றிதழ் கிடைக்காமல் அலைந்த ஒருவருக்கு ஒரே நாளில் சாதி சான்றிதழ் வாங்கிக் கொடுத்தபோது " என் பிள்ளைகள் வாழ வழி காட்டியதற்கு எப்படி நன்றி சொல்வேன்' என்று கைகூப்பி சொன்ன ஒரு பெரியவரின் வாழ்த்தையும், ஆட்டோ ஓட்டிய பிள்ளை இறந்த துக்கத்தில் இருந்த ஒரு குடும்பத்திற்கு அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தின் மூலமாக ஒரு லட்சம் பணம் பெற்றுக் கொடுத்ததும் " இருண்ட வாழ்வில் ஒளி ஏற்றிவைத்த நீ நாங்க பெறாத புள்ளைப்பா நல்லாயிரு' என்று சொல்லப்பட்ட வார்த்தைகளையும் விட பெரிய வாழ்த்தும், வாழ்க்கையும் வேறு என்ன இருக்கப்போகிறது என்று சொல்லும் பரமசிவம் இப்போது இந்த அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தை மக்களிடம் பிரபலப்படுத்துவதில் முனைப்பாக இருக்கிறார்.

மக்களுக்கான அரசின் சலுகைகள் நிறையவே இருக்கிறது, அதே போல அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்திடமும் நிறைய திட்டங்கள் இருக்கிறது கொஞ்சம் முயற்சித்தால் நியாயமான எதையும் பெற முடியும். நீங்கள் என்னிடம் வாருங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லும் பரமசிவம் , விதவை பென்ஷன் கேட்டு விண்ணப்பம் எழுத வந்த ஒரு பெண்ணிடம் ஒண்ணும் கவலைப்படாதம்மா ,நிச்சயம் கிடைச்சுடும் என்று ஆறுதலாகவும், அன்பாகவும் நம்பிக்கை வார்த்தைகளை விதைக்கிறார்.

சுயநலமே பிரதானமாக போய்விட்ட இன்றைய உலகில் பொதுநலமே தனது வாழ்க்கையின் பிரதானம் என்று வாழும் பரமசிவம் நீடுழி வாழ வாழ்த்துவோம். இவரை நமக்கு அறிமுகம் செய்துவைத்த ஈரநெஞ்சம் மகேந்தினுக்கு நன்றிகள் பல.

பரமசிவத்துடன் தொடர்பு கொள்ள: 9629105471.

- எல்.முருகராஜ்

3 comments:

  1. பரமசிவம் அவர்களின் லட்சியம் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

    திருமிகு.நாகூர் கனி காதர் மைதீன் பாஷா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்... நன்றிகள்...

    ReplyDelete
    Replies
    1. மரியாதைக்குரியவரே,திருமிகு.திண்டுக்கல் தனபாலன் ஐயா அவர்களே,வணக்கம்.தாங்கள் மறவாமல் கருத்து இடுகிறீர்கள்.எனது பதிலுக்கும் காத்திராமல் அளித்துவரும் தங்களது ஆதரவுக்கு மிக்க நன்றிங்க.

      Delete
  2. நேற்று இவரை வெள்ளியங்கிரி மலையில் சந்தித்தேன். இதற்குமுன் இவரை நான் கேள்விப்பட்டது கிடையாது. பல விடயங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டார். அதைப்பற்றி தனிப்பதிவு எழுத வேண்டும். நன்கு பழகிவிட்ட பின்னர் மலையிருங்கும்போது தன்னைப்பற்றி இணையத்திலெல்லாம் எழுதியிருப்பதாக சொன்னார். சன் டிவி, ஜெயா டிவி, கலைஞர் தொலைகாட்சிகளில் சிறப்பு விருந்தினாராக பங்கு பெற்றிருந்ததாகவும் சொன்னார். நான் முதலில் நம்பவில்லை என்பதே உண்மை. திருப்பிப் போட்ட சட்டையுடன் கசங்கிய முழுக்கால் சட்டையுடனும் இருந்துவரை காட்டி இவர் பல விருதுகளை வாங்கியிருக்கிறார் எனச் சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். தான் ஓட்டுனர் என்று சொன்னவுடன், நீங்கள் சத்தியமங்கலத்தை சேர்ந்தவரா எனக் கேட்டேன். அது நீங்களாக இருக்குமோ எனத் தோன்றியதால் அவ்வாறு கேட்டேன். அவரைப் பற்றி தாங்கள் பதிவு எழுதியிருப்பது நான் எதிர்ப்பார்க்காத திருப்பம்.
    செய்தியை முகநூலில் பகிர்ந்தவர்களில் நாகூர் கனியும் ஒருவர். ஆனால் செய்தியின் மூலம் http://www.dinamalar.com/news_detail.asp?id=920070

    ReplyDelete