Monday, December 2, 2013

தமிழ்99 தட்டச்ச( மறுபதிவு)

 



அன்பு நண்பர்களே,
                           paramesdriver.blogspot.com வலைப்பதிவிற்கு தங்களை வணங்கி வரவேற்கிறேன்.
 
          முயற்சியும், விருப்பமும் இருந்தால் அதிக பட்சம் ஒரு வாரத்தில் பழகி விடலாம்.
  
   தமிழில் பலமுறை விசைகள் பயன்படுத்தப்படுகின்றன.அது ஒரு வியாபார தந்திரம்.ஒரு நிறுவனத்தில் வாங்கும் மென்பொருளை அந்த நிறுவனத்தை தவிர எதுவும் ஒத்துழைக்கக்கூடாது என்பதே அதன் ரகசியம்.ஆங்கிலத்தில் பொதுமுறை விசை புழக்கத்தில் உள்ளன.எளிமையான தமிழ்99 விசைமுறை இன்னும் பின்தங்கி இருக்க காரணம்  தட்டச்சு செய்யும் ஏறக்குறைய அனைவரும் தட்டச்சு முறையினை தட்டச்சு இயந்திரத்தில் பழகியவர்கள்.எனவே  தாம் பழகிவிட்ட தட்டச்சு இயந்திரத்தில் உள்ள பாமினி முறையை விட்டு வெளியே வர அதிக தயக்கம் காட்டுகின்றனர்.
           தமிழ் 99 தட்டச்சு முறை தமிழ் '99 விசைப் பலகை தமிழுக்கு சீர் தரமான விசைப் பலகையாகும். மற்றும் எளியமுறையாகும்.இருப்பினும் புழக்கத்தில் உள்ள தமிழ் தட்டச்சு முறைகளை ஒப்பீடு செய்து பார்ப்போம்.

    (1)    ரோமன் அல்லது அஞ்சல் அல்லது எழுத்துப் பெயர்ப்பு என்னும் தமிங்கிலம் தட்டச்சு முறை.
    
       ஆ,ஈ,ஊ,ஐ,ஏ,ஓ,ஔ போன்ற உயிர் எழுத்து நெடில்களை எழுத இரண்டு விசைகளை அழுத்த வேண்டும்.
      
         கா,கீ,கூ,கை,கே,கோ,கௌ போன்ற உயிர் மெய் நெடில் எழுத்துக்களை எழுத மூன்று அல்லது நான்கு விசைகளை அழுத்த வேண்டும்.
    
         ங,ஞ,த,ண,ள போன்ற உயிர் மெய் குறில் எழுத்துக்களை எழுத மூன்று விசைகள் அழுத்த வேண்டும்.

      (2)   பாமினி தட்டச்சு முறை
        
          ஆ,ஈ,ஊ,ஐ,ஏ,ஓ போன்ற உயிர் எழுத்து நெடில்களை எழுத shift key (அழுத்தி) உடன் சேர்த்து இரண்டு விசைகள் அழுத்த வேண்டும்.
       
         கீ,ஙீ,சீ,ஞீ,டீ,ணீ,தீ,நீ,பீ,மீ,யீ,ரீ,லீ,வீ,ழீ,ளீ,றீ,னீ -  வரிசை எழுத்துக்களுக்கும், கே,ஙே,சே,ஞே,டே,ணே,தே,நே,பே,மே,யே,ரே,லே,வே,ழே,ளே,றே,னே - வரிசை எழுத்துக்களுக்கும் மூன்று விசைகள் அழுத்த வேண்டும்.
          கோ,ஙோ,சோ,ஞோ,டோ,ணோ,தோ,நோ,போ,மோ,யோ,ரோ,லோ,வோ,ழோ,ளோ,றோ,னோ-வரிசை எழுத்துக்களுக்கு நான்கு விசைகள் அழுத்த வேண்டும்.
             
       (3)   தமிழ் தட்டெழுத்து  தட்டச்சு முறை
             
           பாமினியைப்போலவே அதே விசைகள்பயன்படுத்த வேண்டும்.
       
            ' ழ' வரிசை எழுத்துக்களை எழுத அதிகமான விசைகள்
         அதாவது

         ' ழ ' எழுத்து எழுத-இரண்டு விசைகள் அழுத்த வேண்டும்.
     
       ழொ,ழோ,ழௌ எழுத்துக்களுக்கு - நான்கு விசைகள் அழுத்த வேண்டும்.

       ழ-வின் மற்ற எழுத்துக்களுக்கு மூன்று விசைகள் அழுத்த வேண்டும்.

  
          (4)   தமிழ்'99 தட்டச்சு முறை

            அனைத்து உயிர் எழுத்துக்களுக்கும் (அ முதல் ஔ வரை)-ஒரு விசை மட்டும் அழுத்தினால் போதும்.
        
           ஃ -ஒரு விசை அழுத்தினால் போதும்.
     
       க,ங,ச,ஞ,ட,ண,த,ந,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன,-எழுத்துக்களுக்கு ஒரு விசை அழுத்தினால் போதும்.( ஆக 31 எழுத்துக்கள் எழுத ஒரு விசை அழுத்தம் கொடுக்க வேண்டும்)

          மீதமுள்ள 216 எழுத்துக்கள் எழுத இரண்டு விசைகள் அழுத்த வேண்டும்.

         தமிழ் எழுத்துக்களில் எந்த எழுத்து எழுதவும் இரண்டு விசைகள் அழுத்தத்திற்கு மேல் இல்லை.

            ஸ,ஷ,ஜ,ஹ,க்ஷ,ஸ்ரீ-ஆகிய எழுத்துக்களுக்கு மட்டும்' ஷிப்ட்' உடன் சேர்த்து இரண்டு விசைகள் மட்டுமே அழுத்தினால் போதும்.

     இந்த அறிவியல் பூர்வமான தமிழ் '99 தட்டச்சு முறையில் குறைந்த விசையழுத்தங்களில், விரல்களுக்கு எளிமையான வரிசையமைப்புகளில்
  
       ,அதிக நேரம், அதிக வேகத்தில்,அதிகப் பக்கங்களை களைப்பின்றி தொடர்ச்சியாக தட்டச்சு செய்யலாம்.
  
       இம்முறை கற்றுக் கொள்ளவும், விசைகளை மனதில் பதிய வைப்பதும் மிக எளிமையானதாகும். paramesdriver.blogspot.com // Sathy & Thalavadi

NHM Writer 1.5.1.1 - New Horizon Media

software.nhm.in/products/writer1511

No comments:

Post a Comment