மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.''பரமேஸ் டிரைவர்'' வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
ஜனனம் என்பது புத்தம்புதியது! மரணம் என்பது மிகவும் பழையது?!?..
மேலே உள்ள படம் கடந்த (2013)அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி சத்தியமங்கலம்- பேருந்து நிலையத்தில்''அம்மா குடிநீர் விற்பனை நிலையத்தில்'' போதையின் தீமைகளை நினைவுபடுத்தும்வகையில் கொடுத்த விழிப்புணர்வு நோட்டீஸ் எனது நண்பன் படிக்கும்போது எடுத்த படம்.
எனது நண்பன் ''ராக்கெட் ராஜேந்திரன்'' என்னும் R.ராஜேந்திரன், அரசு பேருந்து ஓட்டுனர்-(தாளவாடி கிளை,ஈரோடு மண்டலம்) 17-10-2013 இன்று காலை கோவையில் ஒரு தனியார் மருத்துவமனையில் மரணமடைந்தார்.ஏற்கனவே உடல்நலம் சரியில்லாமல் மருத்துமனை சிகிச்சை பெற்று வந்தவர்.அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
நண்பனுக்கு சமர்ப்பணம் இந்தப்பாடல்கள்
ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க
சிந்தை களங்கிட நின்றவர்
வாழ்க
பூமியில் ஜனனத்தைப்போல் ஒரு புதியது
இல்லை மரணத்தை
போல் ஒரு பழையது இல்லை
இரண்டும் இல்லாவிடில்
இயற்கையும் இல்லை
இயற்கையின் ஆணைதான்
ஞானத்தின் எல்லை
பாசம் உளாவிய கண்களும்
எங்கே
மகிழ்ந்து குழாவிய கைகளும்
எங்கே
தேசம் உளாவிய கால்களும்
எங்கே
தீயுண்டது என்றது சாம்பலும்
இங்கே
பூமிக்கு நாம் ஒரு யாத்திரை
வந்தோம்
யாத்திரை தீரும் முன்
நித்திரை கொள்வோம்
நித்திரை கொள்வது நியதி
என்றாலும் யாத்திரை
என்றும் தொடர்கதையாகும்
கண்ணில் கண்டது காற்றுடன்
போக
மண்ணில் முளைத்தது
மண்ணுடன் சேர்க
எலும்பு சதை கொண்ட
உருவங்கள் போக
எச்சங்களாய் அந்த இன்னுயிர் வாழ்க
மாண்டவர் சுவாசங்கள்
காற்றுடன் சேர்க
பார்வைகள் அனைத்தும்
சூரியனில் சேர்க
போனவர் புண்ணியம்
நம்முடன் சேர்க
நீரில் மிதக்கும் கண்களும் காய்க
நிம்மதி நிம்மதி இவ்விடம்
சேர்க.

அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...
ReplyDeleteமரியாதைக்குரியவரே,ஐயா திண்டுக்கல் தனபாலன் அவர்களே,வணக்கம்.தங்களது எண்ணப்படியே நடக்க வேண்டும்.என்பதே எனது ஆவல்.மிக்க நன்றிங்க.ஐயா,தங்களது கருத்துக்கு!..மிகச்சிறந்த ஓட்டுனர்.எதற்கும் அஞ்சாநெஞ்சன்! நியாயவாதி.நேர்மையை விரும்புபவன்.போதையின் பிடியில்! அவரது வாழ்வை இப்படி வீணாக்கிவிட்டார்.இன்று அவரது குடும்பத்தின் நிலை?வசதி படைத்தவர்தான்.நிதிப்பிரச்சினை இல்லைங்க!ஆனால் குடும்பத்தலைவன் இருப்பது போல நிம்மதி கிடைக்குமா?இன்றைய சமுதாயம் இவர் போன்றோர் வாழ்க்கையை கண்டாவது திருந்தினால் சரிங்க!அவரது வாரிசுகளை பார்த்தால் வேதனை தொண்டையை அடைக்கிறதுங்க!.......
ReplyDelete