Monday, September 5, 2011

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்(1) -ஈரோடு மாவட்டம்.

அன்பு நண்பர்களே, 
paramesdriver.blogspot.com வலைப்பதிவிற்கு தங்களை வணங்கி வரவேற்கிறேன்.
                  66-ஆம் ஆண்டு உலக ஹிரோஷிமா தினம்
         
             
                                                   
                                              Liitle Boy (code name) மற்றும்  
                                              Fat Man(codename)               



        இரண்டாம் உலகப் போரின்போது 1945-ஆம் ஆண்டு ஆகஸ்டுமாதம் 06-ந்தேதி அன்று   அமெரிக்காவின் முதல் அணுகுண்டு தாக்குதலால் ஜப்பான் நாட்டின் "ஹிரோஷிமா" மற்றும் "நாகசாகி" நகரங்கள் மிகக்கடுமையான உயிர்ச்சேதங்களுக்கும், பொருட்சேதங்களுக்கும் ஆளாகிய  ( இன்றும் அந்நகர மக்கள் சொல்லொண்ணாத் துயரங்களுக்கு ஆளாகிவருகின்றனர்) 
  
    
         உலகையே நடுங்கச்செய்த இதன் 
நினைவுநாள்ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் ஆறாம் ஆம் தேதி  "உலக ஹிரோஷிமா தினம்''  கடைப்பிடிக்கப்படுகிறது.  அணுகுண்டு பாதிப்பால் ஹிரோஷிமா நகரில் பலியான ஆயிரக்கணக்கான மக்களுக்குஅஞ்சலி செலுத்தும் வகையிலும், அணு ஆயுதத்தின் பேரழிவை உலகுக்கஉணர்த்தும் நாளாகவும், இத்தினம்
  அனுசரிக்கப்படுகிறது.
 

       அந்த வகையில் இந்த ஆண்டும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாநில அளவிலான கட்டுரை,கவிதை மற்றும் ஓவியப்போட்டிகள் நடத்தியது.-TNSF-ஈரோடு மாவட்டத்தின் சார்பாக 
        'அணுசக்திகள் ஆக்கத்திற்கே பயன்படுத்தப்பட வேண்டும்'  
        என்ற கருத்தினை மையப்படுத்தி 20-08-2011க்குள் ஈரோடு மாவட்ட அறிவியல் இயக்க ஒருங்கிணைப்பாளர் அவர்களிடம் சேரும் வகையில் 
        மாநில அளவிலான ஓவியம்,கவிதை மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டன.அதாவது
         
       (1) பள்ளி மாணவ,மாணவியர் ஆறாம்,ஏழாம்,எட்டாம் வகுப்பு பயில்பவருக்கு ''போரின் பிடியில் பிஞ்சுகள்'' என்ற தலைப்பில் ஓவியப்போட்டியும்,
          (2)ஒன்பது முதல் +2 வரையிலான மாணவ,மாணவியருக்கு 'இது போல் துயரம் இனிமேல் வேண்டாம்' என்ற தலைப்பில் கட்டுரையும்,
        (3) கல்லூரி மாணவ,மாணவியருக்கு ''அன்னை பூமியில் அமைதி தவழட்டும்'' என்ற தலைப்பில் கவிதைப் போட்டியும் 
        (4) ஆசிரியர் மற்றும் அலுவலர்களுக்கு ''அணு ஆயுதப் போட்டியும், மானுடத்தின் தலைக்குனிவும்'' என்ற தலைப்பில் கட்டுரைப்போட்டியும் நடத்தப்பட்டன.
    
       போட்டிகளின்  ''ஈரோடு மாவட்ட முடிவுகள்'' ஆசிரியர் தினமான 05-09-2011 இன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் - ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர், திரு ; N.நடராஜன் -ஈரோடு அவர்களால் அறிவிக்கப்பட்டது. 
    
    ;-ஈரோடு மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்கள் விவரம்;-
  
           (1) ஓவியப்போட்டி-ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கானது.
          தலைப்பு= போரின் பிடியில் பிஞ்சுகள்.

   முதல் இடம் =     K.R.ராகுல்ராஜா,-(Bharathi Vidya Bhavan Matric School-Erode )

   இரண்டாம் இடம்=அபினேஷ், 6 th "E"-(U.R.C.Palaniyammal Matric school - Erode)

    மூன்றாம்இடம் =U.ராகிணி , 6th "E" - (Bharathi Vidya Bhavan Matric School -Erode )


      (2) ஆசிரியர்கள்  மற்றும் அலுவலர்களுக்கான கட்டுரைப்போட்டி
   தலைப்பு;- அணு ஆயுதப்போட்டியும்,மானுடத்தின் தலைக்குனிவும் 

      முதல் இடம்=   மரியாதைக்குரிய; R. ராதா அவர்கள்-
                                (U.R.C.Palaniyammal Matric school-Erode)

     இரண்டாம்இடம் = திரு; C.பரமேஸ்வரன்,
              (  TamilNadu State Transport Corporation-Thalavadi Branch-Erode division )

        மூன்றாம் இடம் = திரு;S.T.ஐயப்பன், அவர்கள்,
                      (Sathyamangalam )

     
     (3) ஒன்பது முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான                                           மாணவர்களுக்கானகட்டுரைப் போட்டி
    தலைப்பு ;-இதுபோல் துயரம் இனிமேல் வேண்டாம்.
  
      முதல்இடம்= C.உதயக்குமார், +1 - B (Biology)
           U.R.C.Palaniyammal Matric School_Erode)
    
     இரண்டாம் இடம்=G.பிருந்தா, 9-th Std "F"
         U.R.C.Palaniyammal Matric School - Erode )
   
     மூன்றாம் இடம்=G.கண்ணன்,
   
       (4) கல்லூரி மாணவர்களுக்கான  கவிதைப் போட்டி.
      தலைப்பு ;- அன்னை பூமியில் அமைதி தவழட்டும்.
  
          முதல்இடம்= நேசவேணி,
             ( Kongu Engineering College -Erode )
  
      இரண்டாம்இடம் = K.அருள் பிரசன்னா,
         ( Kongu Engineering College - Erode )
  
        மூன்றாம் இடம் = V.ஜெயப்பிரியா,
          (Vellalar College - Erode )
   

          ஜாதி,மத,மொழி, இன, வேறுபாடின்றி அனைவரும் மனித சமூகம் என மனித நேயம் போற்ற வேண்டும்.
    சமூக முன்னேற்றத்திற்காகவும்,நாட்டின் நலனுக்காகவும், அனைவரின் சிந்தனை இருக்க வேண்டும் .
     சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும் உலக வெப்பமயமாதலைத் தடுக்க வகை செய்யவேண்டும்,
      இந்த இயற்கையினை நம் சந்ததியினருக்கு விட்டுச் செல்ல வேண்டும் என்பதனையும் அனைவரும் உணர வேண்டும்,உணரச்செய்ய வேண்டும்.

paramesdriver.blogspot.com //Sathy & Thalavadi

     முதல் அணுகுண்டு சில தகவல்கள்.
      ஹிரோஷிமா, நாகாசாஹி நகரங்களின் மீது வீசப்பட்ட முதல் அணுகுண்டு வெடிப்பு உலகப்பிரசித்தம். இன்னமும் கூட அணுகுண்டு வெடித்த இடத்தில் பாதிப்பின் சுவடுகள் அழியாமல் இருக்கின்றன. ஆனாலும் இந்த அணுகுண்டு வெடிப்புக்கு பின் மிகப்பெரிய ராஜதந்திரம் இருந்தது. அதை நடத்தியவர் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஹேரி எஸ்.ட்ரூமன்.ரூஸ்வெல்ட் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஹேரி எஸ்.ட்ரூமன் உதவி ஜனாதிபதியாக பதவி வகித்து வந்தார். அமெரிக்காவில் ஜனாதிபதி பதவி வகிப்பவர் இறக்க நேரிட்டால் உதவி ஜனாதிபதிஉடனே நாட்டின் ஜனாதிபதியாக நியமிக்கப்படுவார். ரூஸ்வெல்ட் மாரடைப்பால் இறந்த பின் உதவி ஜனாதிபதி ட்ரூமன் அமெரிக்காவின் 33 வது ஜனாதிபதியாக பதவி ஏற்றுக் கொண்டார். இந்த பதவி ஏற்ற ஒரு மாதத்துக்குள் உலகப்போரில் உலகநாடுகளை ஆட்டிப்படைத்து வந்த ஜெர்மனி நாடு தோல்வி கண்டு நேச நாடுகளில் சரண் அடைந்தது. ஐரோப்பாவில் 5 ஆண்டுகள் தொடர்ந்து நடந்து வந்த யுத்தம் முடிவுக்கு வந்தது. ஆனால் ஜப்பான் மட்டும் தொடர்ந்து போராடி வந்தது. சீனாவை தனது ஆதிக்கத்திலேயே வைத்திருந்தது. பசிபிக் கடலில் இருந்த தீவுகள் ஜப்பானின் கட்டுப்பாட்டுக்குள்ளே இருந்தது.
அமெரிக்க ஜனாதிபதிகள் யாரும் சந்திக்காத இக்கட்டான மிகப்பெரிய பிரச்சினைகளுக்கு ட்ரூமன் முடிவு காண வேண்டி இருந்தது. இரண்டாம் உலகப்போரை முடிவுக்கு கொண்டு வர ஜப்பானை உடனடியாக சரணடைய செய்ய வேண்டும். அதற்கு ஜப்பான் நாட்டின் மீது அணு குண்டுகளை பயன்படுத்துவதை பற்றி முடிவு எடுக்கும் அதிகாரம் ட்ரூமன் ஒருவரிடம் தான் கொடுக்கப்பட்டிருந்தது.அணுகுண்டை பயன்படுத்தாவிட்டால் ஜப்பான் நாட்டை தோற்கடிக்க மேலும் பல மாதம் தொடர்ந்து போராட வேண்டியிருக்கும். அமெரிக்காவில் லட்சக்கணக்கான போர் வீரர்களை ஜப்பான் நாட்டின் மீதான தாக்குதலுக்கு பயன்படுத்த வேண்டியிருக்கும். ஜப்பான் நாட்டின் மீது தொடுக்கப்படும் போரில் பல்லாயிரக்கணக்கான அமெரிக்கா, இங்கிலாந்து இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளின் போர் வீரர்கள் உயிரிழக்க நேரிடும். மேலும் யுத்தத்தை தொடர்ந்து நடத்துவதற்கு நிறைய பணத்தை செலவு செய்ய வேண்டி வரும். தன் நாட்டிற்கும், தன் கூட்டணி நாடுகளுக்கும்ஏற்படும் உயிரிழப்புகளையும் பொருள் சேதத்தையும் தடுத்து நிறுத்த ட்ரூமன் அணுகுண்டுகளை பயன்படுத்துவதற்கு அங்கீகாரம் அளித்தார். அங்கீகாரம் கொடுத்த சில மணி நேரத்தில் லிட்டில்பாய்’(LITTLE BOY) என்ற முதல் அணுகுண்டு வீசப்பட்டது. அதனை தொடர்ந்து பேட்மேன்’(FAT MAN) என்ற இரண்டாவது அணுகுண்டு போடப்பட்டது, அவ்வளவுதான் ஜப்பான் ஆடிப்போய் விட்டது. உடனே போர் நிறுத்தம் செய்தது. அமெரிக்காவிடம் சரண் அடைந்தது.
இத்தாக்குதல்களால் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது 
  
   


    

        மரியாதைக்குரிய ஐயா;சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா







            Glenn Seaborg       
                    (1912-1999)

அணு ஆயுதப் புளுடோனியம்- ஆக்கிய விஞ்ஞானி கெலென் ஸீபோர்க்

பூமண்டலத்தைச் சிதைத்துவிடப் போர்கள் மூண்டு விடுமா, அல்லது மனித இனத்தை உயர்நிலைக்கு மேம்படுத்த அமைதி நிலவி விடுமா என்று மாந்தருக்கு அச்சத்தையும், எதிர்பார்ப்பையும் உண்டாக்கும் ஒரு பெரும் இக்கட்டான நிலை நமது காலத்தின் தவிர்க்க முடியாத போக்காகும்!



                         கெலென் ஸீபோர்க்-    
                             Glenn Seaborg  


   நாகசாகில் போட்ட இரண்டாம் அமெரிக்க அணுகுண்டு


1945 ஆகஸ்டு 9 ஆம் தேதி இரண்டாம் உலகப் போர் முடியும் தருவாயில், ஜப்பான் நாகாசாகியின் மீது அமெரிக்கா 'ஃபாட் மான்' [Fat Man, Code Name] என்னும் அணுகுண்டை வீசி பெரும் உயிர்ச் சேதத்தையும், பொருட் சேதத்தையும் உண்டாக்கியது!


       அதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, முதல் அணுகுண்டு 'லிட்டில் பாய்' [Little Boy, Code Name] ஹிரோஷிமாவில் வெடித்து பெரும் சேதத்தை விளைவித்தது!


        அவை இரண்டும் வெவ்வேறான அணுப்பிளவு உலோகத்தைக் கொண்டவை.


       முதல் அணுகுண்டில் பயன்பட்ட அணுஎரு, யுரேனியம் 235 ! இரண்டாவது அணுகுண்டில் வைத்திருந்தது, புளுடோனியம் 239 !


        புளுடோனியத்தை முதன் முதல் தயாரித்துப் பிளவுப் பிண்டமாய்ப் [Fissile Material] பயன்படுத்த உதவிய ரசாயன விஞ்ஞானி, டாக்டர் கெலென் ஸீபோர்க்! 1940 ஆம் ஆண்டில் பெர்கெலி, காலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தின் 'சுழல் விரைவாக்கியில்' [Cyclotron] யுரேனியம் 238 மூலகத்தை நியூட்டிரான் கணைகளால் தாக்கிப் புதிய மூலகம் ஒன்றைப் படைத்தவர், ஸீபோர்க்! அதற்குப் 'புளுடோனியம்' என்று முதலில் பெயர் வைத்தவரும், ஸீபோர்க்!





               Plutonium Bomb




ஸீபோர்க் கண்டு பிடித்த போது, அந்த உலோகம் அதி விரைவில் தீவிர அணு ஆயுதத்துக்குப் பயன்படப் போவதையோ அல்லது ஆக்க வினைகளில் எதிர் காலத்தில் அணுமின்சாரம் தயாரிக்கப் பயன்படப் போவதையோ அவர் எள்ளளவும் அறிய மாட்டார்! அணுப்பிளவு எருக்கள் அனைத்தையும் [யுரேனியம் 235, யுரேனியம் 233, புளுடோனியம் 239], ஒப்பு நோக்கினால் புளுடோனியம் 239 உலோகத்தைத் தயாரிப்பது, தனித் தெடுப்பது யாவும் மற்றவற்றை விட எளியது! சிக்கனச் செலவில் ஆக்க வல்லது! சிறிய அளவே பூரணத் தொடரியக்கத்தைத் [Ciritical Chain Reaction] தூண்ட வல்லது! அரிய அணுசக்தி மூலகம் 'புளுடோனியம்' கண்டு பிடித்ததற்கு 1951 ஆம் ஆண்டு டாக்டர் கெலென் ஸீபோர்க் அவரது துணையாளி டாக்டர் எட்வின் மெக்மில்லன் [Edwin McMillan] ஆகியோர் இருவரும் ரசாயன விஞ்ஞானத்துக்கு மகத்தான நோபெல் பரிசைப் பெற்றார்கள்!





                         Glenn Seaborg




விஞ்ஞான உலகில் ஸீபோர்க் சாதித்தவை என்ன ?


மேரி கியூரி 1898 ஆம் ஆண்டில் பிட்ச்பிளண்டி [Pitchblende] தாதுக் கற்களில் ரசாயன முறையில் சுத்திகரித்து இயற்கையான போலொனியம், ரேடியம் [Polonium, Radium] ஆகிய புதிய கதிரியக்க மூலகங்களைக் [Radioactive Elements] கண்டு பிடித்து அவற்றைப் பிரித்தெடுத்தார்.


       மேரி கியூரியின் புதல்வி ஐரீன் கியூரி ஆல்ஃபாக் கணைகளை ஏவி மூலகங்களைத் தாக்கி, 1934 இல் புதிதாகச் செயற்கைக் கதிரியக்க மூலகங்களை உண்டாக்கினார்!


           பிரிட்டிஷ் விஞ்ஞானி ஜேம்ஸ் சாட்விக் [James Chadwick] 1932 இல் அணுக்கருவினுள் இருந்த நியூட்டிரான் பரமாணுவைக் கண்டு பிடித்து அணுயுகத்தில் ஓர் புரட்சியைத் தூண்டினார்! நியூட்டிரான் கணைக்கு ஆஃல்பா, பீட்டா கணைகள் போன்று மின்கொடை [Electrical Charge] எதுவும் இல்லை!


        இத்தாலிய விஞ்ஞானி என்ரிகோ ஃபெர்மி, ஐரீன் கியூரியைப் பின்பற்றி 1934 இல் யுரேனியத்தை முதன் முதலாக நியூட்டிரான் கணைகளால் தாக்கிப், புதிய கதிரியக்க மூலகங்கள் விளைவதைக் கண்டார்! அப்போது நேர்ந்த அணுப்பிளவை [Nuclear Fission] அறியாமல் போனதுடன், விளைந்த புது மூலகங்கள் யாவற்றையும் பிரித்து விபரம் தெரியாமல் போனார், என்ரிகோ ஃபெர்மி!


         அப்பணி ஜெர்மன் விஞ்ஞானி ஆட்டோ ஹானுக்கும் [Otto Hahn], அமெரிக்க விஞ்ஞானி கெலென் ஸீபோர்க்கும் ஒரு பெரும் வாய்ப்பாக அமைந்து, இருவருக்கும் நோபெல் பரிசையும் வாங்கித் தந்தது!


                       சுழல்விரைவாக்கி இயந்திரம்











1940 ஆம் ஆண்டில் பெர்கெலி, காலிஃபோர்னியா பலகலைக் கழகத்தில் ஸீபோர்க் 'சுழல் விரைவாக்கியில்' [Cyclotron] யுரேனியம்238 மூலகத்தை நியூட்டிரான் கணைகளால் தாக்கி ஓர் புதிய மூலகத்தைப் படைத்தார்!


       அது ரேடியத்தைப் போன்று தீவிர ஆல்ஃபாக் கதிர்வீச்சை [Alpha particle emitter] எழுப்பியது! அது யுரேனியத்தைப் போல் மிகக் கனமானது! மேலும் யுரேனியம் 235 மூலகத்தைப் போல் புது உலோகம் எளிதில் நியூட்டிரான்களால் பிளக்கப்பட்டு [Fissionable] அளவற்ற வெப்பசக்தியை உண்டாக்க வல்லது!


         அவர் 1940-1955 ஆண்டுகளில் மூலகங்களின் அணி அட்டவணையில் [Periodic Table of Elements] யுரேனியத்திற்குப் பின் அமையும் பத்து புதிய கன மூலகங்களையும் [Heavy Elements], அவற்றைச் சார்ந்த நூற்றுக் கணக்கான செயற்கைக் கதிர் ஏகமூலங்களையும் [Radio Isotpoes] சுழல்வீச்சு யந்திரங்களிலும், அணு உலைகளிலும் ஆக்கி யிருக்கிறார்!


        அணு எண்கள் [Atomic Numbers (Proton Numbers in Nucleus)] 94 முதல் 102 வரை மற்றும் 106 உட்பட அப்பத்து மூலகங்கள் செயற்கையான முறையில் ஆக்கப் பட்டன!


      அவற்றில் தனித்துவம் கொண்ட புளுடோனியம் 239 பெரும் பான்மையாக அணு ஆயுத வெடிப்புக்கும், சிறு பான்மையாக அணு மின்சக்தி ஆக்கத்திற்கும் உலக நாடுகளில் உபயோக மாகிறது.


    






                     Parts of Cyclotron





 
 
ஸீபோர்க் இரண்டாம் உலகப் போரின் சமயம் சிகாகோ பல்கலைக் கழகத்தின் உலோகவியல் ஆய்வுக்கூடத்தின் [Metallurgical

Laboratory] ஒரு பகுதிக்கு அதிபராய்ப் பணி செய்து, புதிய அணு ஆராய்ச்சி உலையில் [Atomic Research Reactor] புளுடோனியத்தை உண்டாக்கி, அதைக் கதிரியக்க பிளவு விளைவுத் துணுக்குகளிலிருந்து [Radioactive Fission Products] பிரித்தெடுத்து, ஆயுதத் தரமான புளுடோனியத்தைத் [Weapon grade Plutonium] தயாரித்தார்.


      அந்தப் புளுடோனியம் பின்னால் நியூ மெக்ஸிகோ லாஸ் அலமாஸில், 1945 ஜூலை 16 இல் சோதித்த முதல் அணுகுண்டாகவும், அடுத்து நாகசாக்கியில் போட்ட ஆகஸ்டு 9 இல் 'ஃபாட் மான்' அணுகுண்டாகவும் வெடித்தது!


         ஸீபோர்க் குழுவினர் ஆக்கிய மற்ற புதிய கன மூலகங்கள்: அமெரிகியம், கியூரியம், பெர்கெலியம், காலிஃபோர்னியம், ஐன்ஸ்டைனியம், ஃபெர்மியம், மெண்டெலிவியம், நொபெலியம், உன்னில்ஹெக்ஸியம் [Americium (95), Curium (96), Berkelium (97), Californium (98), Einsteinium (99), Fermium (100), Mendelevium (101), Nobelium (102), Unnilhexium (106)]. 1944 இல் ஸீபோர்க் அறிவித்த 'ஆக்டினைடு கோட்பாடு' [Actinide Concept] மூலக அணி அட்டவணையில் [Periodic Table of Elements] இறுதியில் அமையும் அப்புதிய கன மூலகங்களின் பண்புகள், இடங்கள் [Properties, Places] ஆகியவற்றைச் சீராக இணைத்து ஒழுங்கு படுத்தியது! அக்கோட்பாடின் முறைப்படி ஆக்டினியத்தை [Actinium] விடக் கனமான 14 கதிரியக்க மூலகங்கள், அணி அட்டவணையில் தனிக் குழுவைச் சேர்ந்தவையாகக் கருதப் படுகின்றன.


புதிய யுரேனியச் சந்ததி மூலகங்கள்





                      Transuranium Elements
                        First Made






     கெலென் ஸீபோர்க்கின் மகத்தான வாழ்க்கை வரலாறு


      அமெரிக்காவில் மிச்சிகன் மாநிலத்தின் இஸ்பெமிங் [Ishpeming, Michigan] என்னும் சிற்றூரில் 1912 ஏப்ரல் 19 ஆம் தேதி கெலென் ஸீபெர்க் பிறந்தார்.


    சிறுவன் கெலென் பத்து வயதாகும் போது, குடும்பம் காலிஃபோர்னியாவுக்கு மாறியது. 1929 இல் லாஸ் ஏஞ்செலஸ் டேவிட் ஸ்டார் ஜார்டன் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்று சிறப்பாகத் தேர்ச்சி பெற்றார். 1934 இல் லாஸ் ஏஞ்செலஸ் காலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தில் B.A. பட்டம் பெற்றுப் பிறகு, 1937 இல் ரசாயனத்தில் Ph.D. பட்டத்தைப் பெர்கெலி காலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தில் பெற்றார்.


       அங்கே பயிற்சி ஆசிரியராகச் சேர்ந்து, 1941 இல் உதவிப் பேராசிரியராகி, அதன் பின் 1945 இல் ரசாயனப் பேராசிரியராக உயர்பதவி அடைந்தார். அதே சமயத்தில் லாரென்ஸ் கதிர்வீச்சுக் கூடத்தில் [Lawrence Radiation Laboratory] அணுக்கரு ரசாயன ஆராய்ச்சிப் [Nuclear Chemical Research] பிரிவகத்தின் ஆணை யாளராகவும் பணி யாற்றினார்.


       1942 இல் கெலென் ஸீபோர்க் ஹெலென் கிரிக்ஸ் [Helen Criggs] என்னும் மாதை மணந்து கொண்டார். அவர்களுக்கு நான்கு ஆண், இரண்டு பெண் ஆக ஆறு குழந்தைகள்!





                    Periodic Table of Elements




         1942-1946 வரை இரண்டாம் உலகப் போரின் தருவாயில், 'மறைமுக மன்ஹாட்டன் திட்டத்தில்' [Secret Manhattan Project] அணு ஆயுதத் தயாரிப்புக்குப் புளுடோனிய உலோக உற்பத்திப் பிரிவில் சேர்ந்தார்.


       1946 இல் ஜனாதிபதி ட்ரூமன் ஸீபோர்க்கை அணுசக்திப் பேரவையின் [Atomic Energy Commission] ஆலோசகராக நியமித்தார். ஜனாதிபதி ஜான் கென்னடி 1961 இல் பதவி ஏற்றதும், ஸீபோர்க்கை அணுசக்திப் பேரவையின் அதிபதி யாக்கினார். அப்போது ஜனாதிபதியின் விஞ்ஞான ஆலோசனைக் குழுவினருள் ஒருவராகவும் பணி செய்தார்.


         கெலென் ஸீபோர்க் ஏறக்குறைய 200 விஞ்ஞான வெளியீடுகளை வெளியிட்டிருக்கிறார். ரசாயனத்தை பற்றியும், மூலகங்களைப் பற்றியும் [Chemistry & Elemets] அநேக புத்தகங்கள் எழுதி யிருக்கிறார்.




      கெலென் ஸீபோர்க் தனது 87 ஆவது வயதில் காலிஃபோர்னியா லாஃபாயட் [Lafayette, Calif] நகரில் காலமானார்.




    முதல் செயற்கைப் புளுடோனிய உலோகம் கண்டுபிடிப்பு


     அணு ஆயுத உற்பத்திக்கு உதவியா யிருக்கும் புளுடோனியம் பூமியில் இயற்கையாகக் கிடைப்ப தில்லை!


       யுரேனியத்தை [U238] நியூட்ரான்களால் தாக்கி அதை அணு உலைகளிலோ அல்லது விரைவாக்கி யந்திரங்களிலோ செயற்கை முறையில் உண்டாக்கிப் பிரிக்க வேண்டும்!


       அம்முயற்சியில் வெற்றி பெற்ற விஞ்ஞானிகள் இருவர்! பெர்கெலி காலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய ரசாயன விஞ்ஞானிகள் கெலென் ஸீபோர்க், எட்வின் மெக்மில்லன் [Edwin McMillan]  


       இருவரும் இணைந்தே யுரேனியத் தொடர் மூலகங்களை [Transuranium Elements] 'சுழல் விரைவாக்கியில்' [Cyclotron] ஆராய்ந்து வந்தனர். மெக்மில்லன் முதலில் யுரேனியம்238 மூலகக் குறியை நியூட்ரான் கணைகளால் தாக்கிய போது, ஒரு புதிய சேய்மூலகம் [Daughter Element] உண்டானது. அணு எண் 93 [Atomic Number 93] கொண்ட அப்புதிய மூலகத்திற்கு 'நெப்டியூனியம்' [Neptunium (Np)] பெயரிட்டார், மெக்மில்லன்.


      சூரிய மண்டலத்தில் 'யுரானஸ்' கோளுக்கு அப்பால் சுற்றும் 'நெப்டியூன்' கோளின் பெயரை அதற்குத் தேர்ந்தெடுத்தார், மெக்மில்லன்!


92[யுரேனியம்]238 + 0[நியூட்ரான்]1 ->92[யுரேனியம்]239 + காமாக் கதிர்கள்


92[யுரேனியம்]239 - 1[பீட்டா துகள்]0 ->93[நெப்டியூனியம்]239





          Lawrence, Seaborg & Oppenheimer




ஸீபோர்க் குழுவினர் [Glenn Seaborg, Joseph Kennedy, Arthur Wahl] 1940- இல் தொடர்ந்து நெப்டியூனியத்தை ஆராய்ந்தனர்.


      அது அடுத்து ஒரு பீட்டாத் துகளை வெளியேற்றி மற்றுமொரு புதிய சேய்மூலகத்தை ஈன்றது!


      மேலும் பெர்கெலியில் உள்ள 60 அங்குல 'சுழல் விரைவாக்கி' இயந்திரத்தில், யுரேனியம்238 மூலகத்தைக் குறியாக வைத்து, டியூட்ரான்களால் [Deuterons] தாக்கிய போது, அப்புதிய மூலகத்தின் ஏகமூலம் [Isotope] உண்டானது!


          டியூட்ரான் என்பது கன ஹைடிரஜன் [Heavy Hydrogen-Deuterium]. ஏகமூலங்கள் [Isotopes] என்றால் ஒரே புரோட்டான் எண்ணிக்கை கொண்டு [Atomic Numbers] வெவ்வேறு பளு எண்ணிக்கை [Mass Numbers] யுள்ள மூலகங்கள்.
        ஒரு மூலகத்தின் ஏகமூலங்கள் அனைத்தும் மூலக அணி அட்டவணையில் ஒரே இடத்தைப் பெறுபவை. ['Iso' 'tope' means Same Place].


93[நெப்டியூனியம்]239 - 1[பீட்டா துகள்]0 ->94[புளுடோனியம்]239


92[யுரேனியம்]238 + 1[கன ஹைடிரஜன்]2 ->93[நெப்டியூனியம்]238 + 0நியூட்ரான்]2


93[நெப்டியூனியம்]238 - 1[பீட்டா]0 ->94[புளுடோனியம்]238


94[புளுடோனியம்]239 இன் ஏகமூலம், 94[புளுடோனியம்]238.


ஸீபோர்க் புது மூலகத்துக்கு நெப்டியூனுக்கு அப்பால் சூரிய மண்டலத்தில் சுற்றும் கோள் 'புளுடோவின்' பெயரைத் தீர்மானித்து, 'புளுடோனியம்' [Plutonium (Pu)] என்று பெயர் வைத்தார்!


       அதைப் பின் தொடர்ந்து, 1944 இல் ஸீபோர்க் குழுவினர் புளுடோனியத்தை ஆல்ஃபா கணைகளால் தாக்கி, அணு எண் 95 உடைய அடுத்த புது மூலகத்தை ஆக்கினர். அதற்கு 'அமெரிகியம் ' [Americium (Am)] என்று பெயரிட்டனர். அணு எண் 96 உடைய புது உலோகம் 'கியூரியம்' [Curium (Cm)] என்று மேரி கியூரி நினைவாகப் பெயரிடப் பட்டது.


         1950 இல் ஆல்ஃபா கணைகளை அமெரிக்கியம் மீது ஏவி, அணு எண் 97 கொண்ட புது உலோகம் 'பெர்கெலியம்' [Berkelium (Bk)] உண்டாக்கப் பட்டது. சுழல்வீச்சு யந்திரத்தில் கியூரியத்தை ஆல்ஃபா கணைகளால் தாக்கி, அணு எண் 98 பெற்ற 'காலிஃபோரினியம்' [Californium (Cf)] உண்டானது.







         1952 இல் பசிபிக் கடலில் உள்ள எனிவெடாக் [Eniwetok] தீவில் அமெரிக்கா சோதனை செய்த முதல் வெப்ப அணுக்கரு ஆயுத [Thermo Nuclear Weapon 'ஹைடிரஜன் குண்டு'] வெடிப்பில் சிதறிய கதிரியக்க பிளவுத் துணுக்குகளில் [Fission Products], அணு எண்கள் 99, 100 கொண்ட மூலகங்கள் காணப் பட்டன!


      ஸீபோர்க் குழுவினர் அவற்றைப் பெர்கெலியில் தனியாகச் செய்து காட்டினர்! அணு எண் 99 உடைய மூலகம் ஐன்ஸ்டைன் நினைவாக 'ஐன்ஸ்டைனியம்' [Einsteinium (Es)] எனப் பெயரிடப் பட்டது!


      முதல் அணுக்கருத் தொடரியக்கம் நிகழ்த்திய என்ரிகோ ஃபெர்மி நினைவாக, அணு எண் 100 உள்ள உலோகம் 'ஃபெர்மியம்' [Fermium (Fm)] என்று அழைக்கப் பட்டது.







               Half-Lives of Transuranium
                    Elements










        அடுத்து ஆல்ஃபா துகள்களை ஐன்ஸ்டைனியம் மீது தாக்கி அணு எண் 101 கொண்ட புது உலோகம் 1955 இல் படைக்கப் பட்டது. ரஷ்ய ரசாயன விஞ்ஞானி மென்டிலீஃப் [Mendeleef (1834-1907)] நினைவாக, அது 'மென்டிலிவியம்' [Mendelevium (Md)] என்று பெயரிடப் பட்டது!.


         மென்டிலீஃப் மூலக அணிக் கோட்பாடை [Periodic Law] உருவாக்கி, ஒழுங்கு படுத்தி அணி அட்டவணையை 1869 இல் [Periodic Table] அமைத்தவர்.


         1958 இல் 'நேர்போக்கு விரைவாக்கியில்' [Linear Accerator] கியூரியத்தைக் கரி மின்னிகளால் [Cabon Ions] தாக்கி அணு எண் 102 உள்ள மூலகம், ஆல்ஃபிரட் நோபெல் நினைவாக 'நொபெலியம்' [Nobelium (No)] என்று பெயர் வைக்கப் பட்டது!
 





     Fissile Experiment Assembly




         ஸீபோர்க் யுரேனியத்தொடர் உலோகங்களின் [Transuranium Metals] 'அரை ஆயுட்கள்' [Half Lives] ஓர் ஒழுங்குச் சீர் முறையில் குறைவதைக் [Progressively Shorter] கண்டார்!


       'அரை ஆயுள் ' என்பது கதிரியக்க மூலகம் ஒன்று கதிர்வீசித் தேயும் போது பாதி எடையாக மாறும் காலத்தைக் குறிக்கிறது.


       புளுடோனியம் 239 இன் அரை ஆயுள் 24,360 ஆண்டுகள். அமெரிகியத்தின் அரை ஆயுள் 7370 ஆண்டுகள்! காலிஃபோர்னியத்தின் அரை ஆயுள் 800 ஆண்டுகள்! கியூரியத்தின் அரை ஆயுள் 18 ஆண்டுகள்! மென்டிலிவியம் மூலகத்தின் அரை ஆயுள் 60 நாட்கள்! ஃபெர்மியத்தின் அரை ஆயுள் 3 மணி நேரங்கள்! நொபெலியத்தின் அரை ஆயுள் 3 விநாடிகள்! ஸீபோர்கியம் என்று பெயரிடப் பட்ட அணு எண் 106 கொண்ட உன்னில்ஹெக்ஸியத்தின் அரை ஆயுள் 1 விநாடிக்கும் குறைந்தது!


      அணு ஆயுதத் தயாரிப்பில் ஸீபோர்க்கின் முக்கிய பங்கு


        இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்த சமயத்தில் கெலென் ஸீபோர்க், சிகாகோ பல்கலைக் கழகத்தின் உலோக ஆராய்ச்சிக் கூடத்தில் 1942 முதல் 1946 வரை, மன்ஹாட்டன் அணு ஆயுதத் தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டார். ரசாயனக் கூடத்தில் 1941 இல் புளுடோனியத்தைக் கண்டு பிடித்த போது, மிக மிகச் சிறிய அளவைத்தான் அவர் கையாண்டார்.


    ஆனால் ,அணு ஆயுதத்திற்கு கிலோ கிராம் கணக்கில் புளுடோனியம் தேவைப் பட்டதால், தனி அணு உலை ஒன்று அமைக்கப் பட்டுப் புளுடோனியம் தயாரிக்கப் பட்டது!





     Relative Energy Requirement of Fissile
        Materials




         ஹெலென் ஸீபோர்க்கின் ரசாயனக் குரு நோபெல் பரிசு பெற்ற ஜெர்மன் விஞ்ஞானி ஆட்டோ ஹான் [Otto Hahn]! ஆட்டோ ஹான் யுரேனிய அணுவைப் பிளந்ததாக முதலில் உலகுக்கு அறிமுகமானவர்! அவரே இருபதாம் நூற்றாண்டில் 'கதிர்வீச்சு ரசாயனப் பிதா' [Father of Radiochemistry] வென்று போற்றப் படுபவர்!


            யுரேனியத்தொடர் மூலகங்களின் [Transuranium Elements] இயக்கங்களில் விளைந்த சிக்கலான கதிரியக்க மூலக்கூறுகளைப் [Molecules] பிரித்தெடுப்பதில் அவர் மிகவும் சாமர்த்திய மானவர்!


     ஆட்டோ ஹானின் ரசாயன முறைகளைப் பின்பற்றிதான், ஸீபோர்க் தூய்மையான புளுடோனியத்தைப் பிரித்தெடுத்தார்!


        யுரேனியத்தின் திணிவு [Density] 18.7 gm/c.c., புளுடோனியத்தின் திணிவு 19.8 gm/c.c. [ஒப்பு நோக்க இரும்பின் திணிவு 7.9 gm/c.c].


         யுரேனியம் 235 மூலகத்தைப் 'பரவும் வாயு முறையில்' [Gaseous Diffusion Process] தனித்தெடுப்பதை விட, ரசாயன முறையில் புளுடோனியம் 239 மூலகத்தைப் பிரிப்பது எளியது!


       சம எடையுள்ள புளுடோனியம் 239, யுரேனியம்235 இரண்டையும் நியூட்ரான் கணைகளால் பிளந்தால், புளுடோனியமே அதிக அளவு வெப்ப சக்தியை வெளியிடுகிறது!


         காரணம், புளுடோனியம் 239 மூலகத்தின் பிளவு முகப்பரப்பு [Fission Cross Section], யுரேனியம் 235 இன் முகப்பரப்பை விட 28% மிகையானது!








         பிளவு முகப்பரப்பு என்றால் நியூட்டிரான் கணைகள் குறிமூலகம் ஒன்றைத் [யுரேனியம் 235 அல்லது புளுடோனியம் 239] தாக்கி அணுப்பிளவு நிகழ்த்தும் ஓர் எதிர்பார்ப்பு அளவைக் [Prabability of Fission] குறிக்கிறது.


          யுரேனியம் 235 மூலகத்திற்குப் பிளவு முகப்பரப்பு 580 பார்ன்ஸ் [580 barns] என்றால், புளுடோனிய [Pu239] உலோகத்துக்கு 740 பார்ன்ஸ் [740 barns]! அதாவது சிறிதளவு புளுடோனிய உலோகத்தால் பூரணத் தொடரியக்கம் [Critical Chain Reaction] நிகழ்த்த முடியும்!


        சிகாகோ பலகலைக் கழகத்திற்கு ஸீபோர்க் அவரது 30 ஆவது பிறந்த நாளன்று [1942 ஏப்ரல் 19] வந்து சேர்ந்தார்.


         டிசம்பர் 2 ஆம் தேதியில் என்ரிகோ ஃபெர்மி முதல் யுரேனிய அணு உலையில் அணுக்கருத் தொடரியக்கத்தை [Nuclear Chain Reaction] நிகழ்த்திக்குக் காட்டிய பின், பிளவுப் பண்டங்களைப் பிரித்துப் புளுடோனியத்தைத் தனித்தெடுப்பது, ஸீபோர்க்கின் பொறுப்பானது!


        அணு உலைகளிலும், சுழல்வீச்சு இயந்திரங்களிலும், இரவு பகலாய் யுரேனியத்தை நியூட்ரான்களால் தாக்கித் தேவையான புளுடோனியம் 'ஃபாட் மான்' அணுகுண்டு தயாரானது!





                                     Nobel Prize Winners
                                  Seaborg & McMillan




       நியூமெக்ஸிகோ லாஸ் அலமாஸில் 1945 ஜூன் 11 ஆம் தேதி அணு ஆயுதங்கள் தயாராக இருந்த தருவாயில், உடன் பணி செய்த விஞ்ஞானி ஜேம்ஸ் ஃபிராங்க் [James Franck (1882-1964)] குழுவினருடன் தானும் சேர்ந்து, ஜப்பானில் அணுகுண்டு போடப் போவதைத் தடுக்க ஸீபோர்க் முயன்றார்!

         1925 இல் நோபெல் பெற்ற ஜேம்ஸ் ஃபிராங்க், பயங்கர அணுகுண்டைப் பற்றி ஜப்பானியருக்கு முன்னறிவிப்பாக எச்சரிக்கை விடாமல், அவர்கள் மீது வீசக் கூடாது என்று கருதினார்! 

       அக்கருத்தை வலுயுறுத்த 'ஃபிராங்க் விண்ணப்பம்' என்ற வேண்டுகோள் ஒன்றை எழுதி, ஸீபோர்க் உட்பட பலரது கையெழுத்துக்களுடன் அமெரிக்க யுத்தச் செயலாளர், ஸ்டைமனுக்கு [Secretary of War, Stimon] அனுப்பினார்!

விண்ணப்பத்தின் அறிவிப்பு இதுதான்: 'முன்னெச்சரிக்கை எதுவு மின்றி ஜப்பான் மீது அணு ஆயுதங்களைப் போடுவது, நியாய மற்றது என்று நாங்கள் நம்புகிறோம்!
   
  மனித இனத்தின் மீது கருணை எதுவு மின்றி கண்மூடித்தன மாக அமெரிக்கா முதன் முதலாக அணுகுண்டை வீசினால், உலக மாந்தரின் ஆதரவை இழக்க நேரிடும்! 

அப்புறம் அணு ஆயுதப் பெருக்கத்துக்கு அது வழி வகுக்கும்! அடுத்து அகில நாடுகளின் அணு ஆயுதக் கட்டுப்பாடுக்கு அமெரிக்கா உடன்பட வேண்டிய திருக்கும்! மனிதரற்ற ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து, 

அங்கே அணுகுண்டை வெடித்துக் காட்டி ஜப்பானுக்கு முன்பாகவே எச்சரிக்கை செய்தால், பலனுள்ள சேதார மற்ற, வெற்றிகரமான சமாதானத்தைச் சாதிக்க முடியும்' 






                         Nagasaki Bombing




       யுத்தச் செயலாளரோ, அல்லது ஜனாதிபதி ட்ரூமனோ அந்த முக்கிய விண்ணப்பத்தைப் படித்ததாக அறியப் படவில்லை! அவ்வாண்டு ஜூலை முதல் தேதியே, ஜப்பானில் அணுகுண்டு வீச்சு முடிவும், போடப் போகும் இடங்களும் தீர்மானமாகி விட்டன என்பது பின்னால் தெரிய வந்தது!

      ஜேம்ஸ் ஃபிராங்க், கெலென் ஸீபோர்க் குழுவினர் பெரும் ஏமாற்றம் அடைந்தாலும், ஜப்பானில் அணு ஆயுதங்கள் விளைவிக்கப் போகும் கோரச் சேதங்களைத் தடுக்க முற்பட்டோம் என்று மன ஆறுதல் அடைந்தனர்!


கெலென் ஸீபோர்க் பெற்ற பெரும் பரிசுகள்


      அமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னடி ஸீபோர்க்கை 1961 இல் அமெரிக்க அணுசக்திப் பேரவைக்கு அதிபதி [Chairman, Atomic Energy Commission] ஆக்கினார்! ஸீபோர்க் அப்பதவியில் பத்து வருடங்கள் [1961-1971] பணி யாற்றினார்.


     அவர் காலத்தில்தான் ஆக்க வினைகளுக்கு அணுசக்தியைப் பயன்படுத்த அமெரிக்காவில் அணு மின்சக்தித் தொழிற் திட்டங்கள் பல முளைத்தெழுந்து, நூற்றுக் கணக்கான அமெரிக்க அணுசக்தி நிலையங்கள் அமெரிக்காவிலும், அகில நாடுகளிலும் நிறுவனம் ஆகி வேரூன்றின!







          ஸீபோர்க் 1951 இல் ரசாயனத்துக்கு நோபெல் பரிசு பெற்றார். 1959 இல் அமெரிக்காவின் மதிப்புயர்ந்த 'என்ரிகோ ஃபெர்மிப் பரிசு' [Enrico Fermi Award] ஸீபோர்க்கு அளிக்கப் பட்டது.


     மற்றும் ஸீபோர்க் 1948 இல் அமெரிக்க சுவீடிஷ் எஞ்சினியர்கள் அளித்த 'ஜான் எரிக்ஸன் தங்கப் பதக்கம்', அமெரிக்க ரசாயனக் குழுவினரின் 'நிகோலஸ் பதக்கம்',


     1957 இல் அமெரிக்க ரசாயனத் தொழிற்துறைகளின் 'பெர்கின் பதக்கம்' 1963 இல் ஃபிலடல்ஃபியா ஃபிராங்கலின் ஆய்வுக்கூடம் அளித்த 'ஃபிராங்கலின் பதக்கம்' ஆகியவற்றையும் பெற்றார்!


1994 ஆம் ஆண்டில் ஸீபோர்க் முன்பு [1940-1955] செயற்கை முறையில் ஆக்கிய உன்னில்ஹெக்ஸியம் [Unnilhexium(106)] மூலகம் அவரது பெயரில் 'ஸீபோர்கியம்' [Seaborgium (SG)] என்று பெயரிடப் பட்டது !









பூமிக்கு கீழே மிக்ப்பெரிய அணு சோதனை உலகம் அழியுமென்று பீதி வேண்டாம்-விஞ்ஞானிகள் !








     ஜெனீவாவுக்கு அருகே பிரான்ஸ்-சுவிஸ் எல்லையில் ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம் (CERN) அமைத்துள்ள Large Hadron Collider (LHC) சோதனை மையம் இது. பிரான்சு-சுவிட்சர்லாந்து நாடுகளின் எல்லைப்பகுதியில் 300 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 
        நீள்வட்ட வடிவில் உள்ள அந்த நிலையத்தில் 85 நாடுகளைச் சேர்ந்த 7 ஆயிரம் அணு விஞ்ஞானிகள் (இயற்பியலாளர்கள்) பணியாற்றி வருகின்றனர். ஆராய்ச்சி நிலையத்தின் ஒரு முனைக்கும் அடுத்த முனைக்கும் இடையிலான தூரம் மட்டும் 27 கி.மீ.
      கடந்த 1994-ம் ஆண்டு தொடங்கிய இந்த ஆராய்ச்சி திட்டத்தின் மொத்த செலவுத்தொகை ரூ.36 ஆயிரம் கோடி (8 பில்லியன் டாலர்). பெரிய தூண் போன்ற அளவில் உள்ள இரண்டு அணுக்களை மணிக்கு ஆயிரத்து 600 கி.மீ. வேகத்தில் மோதச்செய்து ஆராய்ச்சி நிலையத்துக்குள் பிரளயம் ஏற்படுத்துவதே இந்த ஆராய்ச்சியின் முக்கியப்பணி.
       இதன் மூலம் ஏராளமான அணுக்கள் தோன்றி பரிணாம வளர்ச்சியின் முதல் கட்டம் உருவாகும். அதன் தொடர்ச்சியாக பெரிய உயிரினங்கள் எப்படி தோன்றுகின்றன என்று ஆராய்வதே இதன் நோக்கம். 


அதாவது பூமிக்கு அடியில் மிகப்பெரிய அளவிலான அணுகுண்டு சோதனை நடத்தப்பட இருக்கிறது.
      அணுக்களை மோதச்செய்யும் இந்த சோதனையால் நிலத்துக்கு மேலேயும் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


     இந்த சோதனையின் விளைவாக உலகமே அழிந்து விடும் என்றும் அச்சம் தெரிவித்து வருகின்றனர். எனவே ரூ.36 ஆயிரம் கோடியை செலவு செய்து ரிஸ்க்கான ஆராய்ச்சி செய்வதை கைவிடுங்கள்என்று எஸ்.எம்.எஸ். இ-மெயில் மூலமாக கோரிக்கை விடுத்தனர். ஆனால் விஞ்ஞானிகள் மறுத்து விட்டனர்.




     இது குறித்து விஞ்ஞானிகள் கூறுகையில் ´செப்டம்பர் 10 அன்று பூமிக்கு கீழே அணு சோதனை நடத்துவதால் பேரழிவு ஏற்படாது. இதன் விளைவாக உலகம் அழிந்து விடும் என்ற கருத்தை யாரும் நம்ப தேவையில்லை. ஆராய்ச்சி நிலையத்தில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.




     இதை 2003-ம் ஆண்டிலேயே விஞ்ஞானிகள் குழு உறுதி செய்துள்ளது. சுருக்கமாக கூறினால் இந்த ஆராய்ச்சியால் மனித குலத்துக்கு ஏராளமான பயன்களே ஏற்படும். புற்று நோய் போன்ற சில முக்கிய வியாதிகளுக்கு மருந்துகளை கண்டு பிடிக்கலாம். வேறு சில கதிரியக்க பயன்களையும் பெற முடியும்என்கின்றனர்




         அண்டம் -UNIVERSE


     நமது அண்டத்தில் (Universe) ஏராளமான மண்டலங்கள், அதாவது 


  கேலக்ஸிகள் (Galaxies) உள்ளன. நமது சூரியன், பூமி, கோள்கள் உள்ளிட்ட 


 சூரிய குடும்பம் இருக்கும் மண்டலத்தின் பெயர் Milky way Galaxy  


       (பால்வெளி மண்டலம்).




         
பல பில்லியன் சூரிய குடும்பங்கள் சேர்ந்தது ஒரு கேலக்சி. பல பில்லியன் 

கேலக்சிகள் சேர்ந்தது தான் யுனிவர்ஸ். இந்த யுனிவர்ஸ் தொடர்ந்து 

விரிவடைந்து கொண்டே போகிறது என்பது தான் மிக இன்ட்ரஸ்டிங்கான 

விஷயம்.


     


ஒரு சிறிய நிலக்கடலை சைசில் இருந்த யுனிவர்ஸ், Big bangல் வெடித்துச் 


  சிதறி விரிவடைய ஆரம்பித்தது.. விரிவடையும்போது அதற்குள் 


    உருவானவை தான் பூமி, கோள்கள், நிலாக்கள், எரிகற்கள், சூரியன்கள் 


   ஆகியவற்றை உள்ளடக்கிய கேலக்சிகள்.

இன்னும் விரிந்து கொண்டே இருக்கும் அண்டத்தில் மேலும் மேலும் 



  ஏராளமான கேலக்சிகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. கூடவே 
பிளாக் ஹோல்களும்.இந்த பிளாக் ஹோல்கள் ஒளி-ஒலியை மட்டுமல்ல,  


சூரியன்களைக் கூட விழுங்கி ஏப்பம் விடும் சக்தி கொண்டவை.


      ஒளி-ஒலி உள்பட.பிளாக் ஹோல் நேரத்தையும் கூட விழுங்கிவிடும்.. இது அதீதமான டெக்னி்க்கல் 


சமாச்சாரம். மண்டையை ரொம்பவே குழப்பிக் கொள்ள வேண்டாம். மிகவும் 


ஆர்வம் இருந்தால் ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்சின் 'The brief history of Time' வாங்கிப் படியுங்கள்)

     கிட்டத்தட்ட 15 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஒரு மாபெரும் வெடிப்பில் இருந்து தான் (Big Bang) பூமி உள்பட Universe தோன்றியது என கருதப்படுகிறது
Big bang theory -சொல்கிறபடி உலகம் எப்படி உருவானது என்பதை கொஞ்சம் பிராக்டிலாக சோதனை செய்து பார்க்கப் போகிறார்கள் விஞ்ஞானிகள்.

   புரோட்டான், நியூட்ரான், எலெக்ட்ரான் ஆகிய 'சப் அடாமிக்' கூறுகளைக் 

கொண்டது தான் ஒரு அணு. குவார்க், பெர்மியான், குளுயான்ஸ் 

ஆகியவற்றால் ஆனது தான் ஒரு புரோட்டான்.

       
ஆக, LHCல்   வைத்து அதிவேகத்தில் புரோட்டான்களை 



   'கொத்து புரோட்டோ'   போடும்போது குவார்க், பெர்மியான், குளுயான்ஸ், மின்  


 காந்த கதிர்வீச்சு வெப்பம் என புரோட்டான்கள் சிதறும்.

        
மேலும் Higgs Boson என்று ஒரு சமாச்சாரம். இப்படி ஒரு சப்-அடாமிக் 



பார்ட்டிகிள்  இருப்பதாக தியரியில் சொல்கிறார்கள். ஆனால், அதை யாரும் 


 நிரூபித்ததில்லை. இதனால் இதை விஞ்ஞானிகள் 'கடவுளின் அணுத் துகள்


(God's particle) என்கிறார்கள். அப்படி ஒன்று இருந்தால் இந்தச் சோதனை 


வெளியில் கொண்டு வரலாம் என்கிறார்கள்.

    

                 Large Hadron Collider-LHC


   கிட்டத்தட்ட 300 அடி ஆழத்தில் 27 கி.மீ. தூரத்துக்கு வட்டமான சுரங்கம் அமைத்து அதற்குள் சப் அடாமிக் பார்ட்டிகிள்ஸ் (புரோட்டான், நியூட்ரான்) மோதிக் கொள்ளும் Large Hadron Collider-LHC என்ற வட்ட வடிவ பைப்பை அதற்குள் அமைத்திருக்கிறார்கள். இதற்காக 5.8 பில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளன ஐரோப்பிய நாடுகள். கிட்டத்தட்ட 5,000 விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சி இது.


கனரக இரும்பினால் செய்யப்பட்டு ரீ-இன்போர்ஸ்ட் சிமெண்ட் மற்றும் ஏகப்பட்ட ரசாயன, அணு கதிர்வீச்சை தாக்குப்பிடிக்கும் பாதுகாப்பு பூச்சுக்கள் கொண்டது இந்த கொல்லாய்டர்.


இது அணுக்களை பிளக்க உதவும் வழக்கமான சைக்ளோட்ரான் மாதிரி தான். ஆனால், இதில் விஷேசம் என்னவென்றால் இதன் வேகம். இதுவரை உலகில் கட்டப்பட்ட சைக்ளோட்ரான்களை விட இது 7 மடங்கு அதிக சக்தி கொண்டது.


1,800 'சூப்பர் கண்டக்டிங்' காந்தங்கள் புரோட்டான்களை ஒளியின் வேகத்தில் இந்த 27 கி.மீ. வளையத்தில் சுற்றவிடவுள்ளன. LHC தன் முழு வேகத்தை அடைந்தவுடன் புரோட்டான்களையும் நியூட்ரான்களையும் வினாடிக்கு 600 மில்லியன் முறை நேருக்கு நேர் மோத விடப் போகிறார்கள்.


அப்போது புரோட்டான்களி்ல் 7 டிரில்லியன் எலெக்ட்ரான் வோல்ட்ஸ் அளவுக்கு 'சக்தி' உருவாகும். அப்போது ஏற்படும் 'சப் அடாமிக் லெவல்' மாற்றங்களை இந்த 27 கி.மீ. வட்டத்தில் பொறுத்தப்பட்டு்ள்ள ஆயிரக்கணக்கான சென்சார்கள் கிரகித்து அந்த விவரங்களை சூப்பர் கம்ப்யூட்டர்களில் (Feed) பதிவு செய்யவுள்ளன.


கிட்டத்தட்ட 15 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஒரு மாபெரும் வெடிப்பில் இருந்து தான் (Big Bang) பூமி உள்பட Universe தோன்றியது என கருதப்படுகிறது. அப்போது இருந்த சூழலை இந்த 27 கி.மீ. வட்டத்தில் உருவாக்கிப் பார்க்கப் போகிறார்கள்.


இந்த வளையத்தில் புரோட்டான்கள் என்ன வேகத்தி்ல் சுற்றி வரப் போகின்றன என்பதை இப்படி ஈசியாக சொல்லாம்... ஒரு வினாடியில் இந்த 27 கி.மீ. தூரத்தை புரோட்டான் 11,245 முறை சுற்றி வரும்.


இந்த அளவுக்கு வேகம் பிடித்த புரோட்டான்களை அப்படியே நேருக்கு நேர் மோத விடப் போகிறார்கள். இப்போது புரிகிறதா.. உள்ளே என்ன நடக்கப் போகிறது என்பது.




        Higgs Boson! கடவுளே!
ஜெனீவா: உலகம் உள்ளிட்ட பிரபஞ்சத்தின் அனைத்துப் பொருட்களும் உருவாகக் காரணமாக இருந்ததாகக் கருதப்படும் Big Bang எனப்படும் மாபெரும் வெடிப்பின்போது என்ன நடந்திருக்கும் என்பது குறித்த சோதனையில் ''செப்டெம்பர் பத்தாம் தேதி'' மிக முக்கியமான நாள்.

ஜெனீவாவுக்கு அருகே பிரான்ஸ்-சுவிஸ் எல்லையில் ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம் (CERN) அமைத்துள்ள Large Hadron Collider (LHC) சோதனை மையத்தில் புரோட்டான்களின் 'அதிவேக அடிதடி' ஆரம்பமாகியுள்ளது.

பல டிரில்லியன் புரோட்டான்களை 7 TeV      (7 டெரா எலெக்ட்ரோ வோல்ட்ஸ்) வேகத்தில் மோதவிட்டால் என்ன நடக்கும் என்பதை சோதிக்கவே இந்த மையம் அமைக்கப்பட்டது.

அதாவது 27 கி.மீ. தூர வட்டப் பாதையில், (உள்ளே எந்த வாயுக்களும் இல்லாத ஒரு வெற்றுப் பாதை இது. உள்ளே உள்ள அழுத்தம் நிலவில் உள்ள அழுத்தத்தில் 10ல் 1 பங்கு தான்), இரு புரோட்டான் கதிர்களை எதிரெதிர் திசையில் வினாடிக்கு 7 டெரா எலெக்ட்ரோ வோல்ட்ஸ் வேகத்தில் மோதவிட்டுள்ளனர்.

இன்னும் எளிதாகச் சொல்ல வேண்டுமானால் இந்த 27 கி.மீ. பாதையை புரோட்டான் கதிர்கள் வினாடிக்கு 11,245 முறை சுற்றி வந்து ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ள ஆரம்பித்துள்ளன.

இதன்மூலம் இந்தக் கதிர்களில் உள்ள புரோட்டான்கள் வினாடிக்கு 600 மில்லியன் முறை மோதிக் கொள்ள ஆரம்பித்துள்ளன. ஒளியின் வேகத்தில் 99.99% அளவுக்கு அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடி மோதி சிதற ஆரம்பித்துள்ளன.

கிட்டத்தட்ட 10 ஆண்டு காலமாக உருவாக்கப்பட்டு வந்த இந்த Large Hadron Collider பல்வேறு தடைகள், கோளாறுகளை எல்லாம் தாண்டி நேற்றுத்தான் தனது முழு வேகமான 7 டெரா எலெக்ட்ரோ வோல்ட்ஸை எட்டியுள்ளது.

இந்த 27 கி.மீ LHCயை உலகின் மிகப் பெரிய பிரிட்ஜ் என்றும் சொல்லலாம். காரணம், அதன் உள் வெப்பநிலை -271.3°C. ஹீலியம் வாயுவைக் கொண்டு கிரையோஜெனிக் சிஸ்டத்தை பயன்படுத்தி இந்த குளிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

எதற்கு இவ்வளவு குளி்ர்ச்சி என்கிறீர்களா?.. புரோட்டான்கள் மோதும்போது உள்ளே சூரியனின் வெப்பத்தை விட 1,00,000 மடங்கு வெப்பம் உருவாகும். அதை குளிர்விக்கவே இத்தனை ஜாக்கிரதை.

புரோட்டான் கதிர்களை இந்த வேகத்தில் ஓட வைக்க 9,300 மின் காந்தங்களைத் தான் பயன்படுத்துகின்றனர். மின்சாரம் பாய்வதால் காந்தங்கள் சூடு பிடித்துவிடாமல் இருக்க அவை குளிரூட்டப்பட்டே பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த காந்தங்களின் வெப்ப நிலை -193.2°C.

இந்த சோதனையையே ஏன் இந்த வெட்டி வேலை என்று சிலர் கேட்கலாம்.


காரணம் இருக்கிறது.. இந்த பிரபஞ்சம், அண்ட சராசரங்கள் உருவானது என்பதை கண்டறியும் முயற்சி தான் இந்த சோதனை.

ஒரு அணு என்பது புரோட்டான், நியூட்ரான், எலெக்ட்ரான் ஆகிய துகள்களைக் கொண்டது. இதில் ஒரு புரோட்டான் என்பது குவார்க், பெர்மியான், குளுயான்ஸ் ஆகியவற்றால் ஆனது.

இதைத் தவிர Higgs Boson என்றொரு துகளும் இருப்பதாகக் கருதப்படுகிறது.

இந்த LHCல் வைத்து அதிவேகத்தில் புரோட்டான்களை உடைத்து சிதறடித்தால் குவார்க், பெர்மியான், குளுயான்ஸ், மின் காந்த கதிர்வீச்சு, வெப்பம் என்று புரோட்டான்கள் சிதறும். அப்படியே Higgs Boson துகளும் நம் கண்களுக்குத் தட்டுப்பட்டுவிடும் என்று நம்பித்தான் இந்த சோதனையை நடத்துகிறார்கள்.

இந்த Higgs Boson இதுவரை எந்த அறிவியல் சோதனைகளிலும் சிக்காத ஒன்று. இதனால் இதை 'கடவுளின் அணுத் துகள்' (God's particle) என்கிறார்கள்.
  
MATTER & DARK MATTER ஒரு கண்ணோட்டம்.

வைரஸ் முதல் நட்சத்திரம் வரை இந்த பிரபரஞ்சத்தில் உள்ள அனைத்துமே நமக்குத் தெரிந்த அணுத் துகள்களால் ஆனவை. இதைத் தான் matter என்கிறது இயற்பியல். ஆனால், நமக்குத் தெரிந்த matter வெறும் 4 சதவீதம் தானாம். நமக்குத் தெரியாத 'dark matter' தான் மிச்சமுள்ள 96 சதவீத பிரபஞ்சத்தையே அடைத்திருக்கிறது அல்லது உருவாக்கியிருக்கிறது.

அது என்ன என்பதை அறிய பிரபஞ்சத்துக்குள் போய் பார்க்க வேண்டியதில்லை.. அணுவைக் குடைந்து.. அதனுள் உள்ள சிறிய துகளையும் குடைந்து பார்த்தால் முடியும் என்று நம்பி இந்த சோதனை நடத்தப்படுகிறது.

இந்த LHCல் வைத்து புரோட்டான்களை உடைக்கும் சோதனை ஆரம்பித்தது 2008ம் ஆண்டு இறுதியில். ஆனால், இந்த சோதனை ஆரம்பித்த சில வாரங்களிலேயே அந்த எந்திரத்தில் ஏராளமான கோளாறுகள். அதையெல்லாம் சரி செய்யவே 1 வருடம் ஆகிவிட்டது. இதையடுத்து இந்த ஆண்டு துவக்கத்தில் தான் LHC மீண்டும் இயங்க ஆரம்பித்தது. நேற்று தனது முழு வேகத்தை எட்டிப் பிடித்தது.

இது பல்லாண்டுகள் நீடிக்கும் சோதனை.. இது கடவுளின் அணுத் துகளை வெளியே கொண்டு வரலாம் அல்லது நாம் சற்றும் எதிர்பார்க்காத ஏதாவது ஒன்றையும் வெளிக் கொண்டு வரலாம் என்கிறார்கள். 

    Paramesdriver.blogspot.com -Sathy & Thalavadi

Friday, August 5, 2011

32)தங்கம் ஓடி வந்த பாதை - இதுவும் கடந்து போகும்.



       உடைமையும் வறுமையும் ஓர்வழி நில்லா! அதேபோல்,
            தங்கத்தின் விலையும்  ஓர்வழி நில்லா!!
 



       அன்பு நண்பர்களே,வணக்கம்.
         அனைத்து தரப்பு  மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ள தங்கத்தின் விலை நாளுக்கு நாள் வரலாறு காணாத அளவுக்கு விலை ஏறிக் கொண்டேபோகிறது.

   அந்த தங்கத்தின் விலை பவுன் ஒன்றுக்கு
     1930-ம் ஆண்டு  =   ரூபாய் 14 -  00மட்டுமே! ஆனால் இன்று, அதாவது 05-08-2011-ந் தேதி நிலவரப்படி ரூபாய் 18,420-00 ஆகும்.       


              தங்கம் விலை ஒரு கண்ணோட்டம்..


       வருடம்          --------           விலை விபரம் ஒரு பவுன்
          1930                  --------        ரூபாய்=14மட்டும்
       1935                  --------         ரூ =24
       1940                ------------     ரூ =28
       1945         -------------------   ரூ=49
       1950     -----------------------  ரூ =79
       1955     ----------------------  ரூ = 63
       1960    -------------------       ரூ =  88
       1965   ------------------          ரூ = 56
       1970  ----------------------     ரூ =147
       1975     ----------------------  ரூ = 432
       1980    -----------------------  ரூ = 1064
       1982    -------------------       ரூ =1280
       1983   ---------------------     ரூ =1320
       1984   --------------------      ரூ  =1420
       1985  -----------------------   ரூ  =1544
       1986  ----------------------     ரூ =1776
       1987   -----------------------  ரூ =1880
       1988  -----------------------   ரூ =2400
       1989 -----------------------    ரூ =2336
       1990 -----------------------     ரூ=2520
       1991  -----------------------   ரூ =2720
       1992  -----------------------   ரூ =3700
       1993   ------------------------ ரூ =3000
       1994  ------------------------- ரூ =3560
       1995 -------------------------- ரூ =3600
       1996 -------------------------   ரூ =4040
       1997  -------------------------  ரூ = 3680
       1998 -----------------------      ரூ =3320
       1999 ----------------------       ரூ =3440
       2000   -----------------------    ரூ=3480
       2001  -----------------------     ரூ= 3520
       2002  -------------------------   ரூ =4040
       2003 --------------------------  ரூ = 4400
       2005 ------------------------    ரூ =4640
       2006  ---------------------       ரூ  = 7680
       2007 ---------------------        ரூ  = 7600
      2008  ----------------------      ரூ =9200
      2009   ஜனவரி---------      ரூ  =10400
      2009பிப்ரவரி -----------    ரூ =11840
      2009 மார்ச்  -------------     ரூ = 11480
      2009 ஏப்ரல் ------------     ரூ =10944
     2010 --------------------           ரூ = 12500
     2011-ஆகஸ்ட் மாதம்05ந்தேதி 
    அன்று  ரூ = 18220-00 
       2011 ஆகஸ்டு 20ந்தேதி ரூ=21,420 - 00
   தகவல்==

 ''ஸ்ரீமகேந்திரா ஜூவல்லர்ஸ்'' உரிமையாளர்  திரு; மகேந்திரன், அவர்கள்.     சத்தியமங்கலம் ...





paramesdriver.blogspot.com /   konguthendral.blogspot.com

31)ஈரோடு புத்தகத் திருவிழா-2011

அன்பு நண்பர்களே, 
paramesdriver.blogspot.com வலைப்பதிவிற்கு தங்களை வணங்கி வரவேற்கிறேன்.


 மக்கள் சிந்தனைப் பேரவை-ஈரோடு

வ.உ.சி. பூங்காவில் நுழைவு வாயில்




கண்காட்சியினைக்காண பள்ளிக்குழந்தைகளின் ஆர்வம்







































                    தினசரி நடக்கும் கலைநிகழ்ச்சிப்பட்டியல் விவரம்.






                  தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தொண்டர்கள் (ஆசிரியர் மற்றும் மாணவர்)

       நம்ம ஈரோடு மாநகரில் மக்கள் சிந்தனைப் பேரவை சார்பாக ஏழாம் ஆண்டு புத்தகத்திருவிழா வ.உ.சி. பூங்கா மைதானத்தில் தற்போது  நடைபெறுகிறது.  இந்த புத்தகத் திருவிழா-2011 கண்காட்சியில் பெயருக்கேற்றவாறு  ,புத்தகக் கடைகள் 200-க்கும் அதிகமாக நிறுவப்பட்டு ,புத்தகங்களும் மிக அதிக எண்ணிக்கையில் பல அரிய வகைப் புத்தகங்கள்,தொழில் நுட்பப் புத்தகங்கள்,மேலாண்மை நிர்வாகத்திற்கான புத்தகங்கள்,அறிவியல் ,புவியியல்,வரலாறு,அரசியல்,கணினி சம்பந்தமான புத்தகங்கள்,சுய முன்னேற்றத்திற்கான புத்தகங்கள்,பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான பாட சம்பந்தமான புத்தகங்கள்,போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள், என பல ஆயிரக் கணக்கில் குவிக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளன.





                                மக்கள் சிந்தனைப்பேரவைத் தொண்டர்கள்


                தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாகவும் புத்தக அரங்கு அமைக்கப்பட்டு உள்ளது. மக்கள் சிந்தனைப் பேரவைத் தன்னார்வத் தொண்டர்கள் ஆங்காங்கு சுறு சுறுப்பாக இயங்கி பார்வையாளர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருவது மிகவும் பாராட்டுக்கு உரியதாகும்.





        இது போன்ற அரியவகை கண்காட்சிகளுக்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,மாணவியர்,கல்வியாளர்கள்,அவசியம் கலந்து அறிவுச்செல்வங்களை அள்ளிச்செல்ல வேண்டும்.மேலும் அதிக அளவில் வருகையாகும்போது இக்கண்காட்சியை நடத்தும் மரியாதைக்குரிய மக்கள்சிந்தனைப் பேரவை நண்பர்களுக்கு ஊக்கம் கொடுத்ததுபோலவும் இருக்கும்.
 paramesdriver.blogspot.com //Sathy & Thalavadi
                                                                                                                               

Sunday, July 31, 2011

30)கல்விக்கான ஒரு அமைதி இயக்கம்.

                                     


 அன்பு நண்பர்களே, 
       paramesdriver.blogspot.com !வலைப்பதிவிற்கு தங்களை வணங்கி வரவேற்கிறேன்.
                                                கல்வி உதவி



      நம்ம ஊராம் சத்தியமங்கலத்தில் 31-07-2011 இன்று கல்விப் பணிக்கான அமைதி இயக்கமாம் G.G.T. என்னும் தங்கத்தைப் போல் மினுமினுக்கும் குழு (அல்லது) பிரகாசிக்கும் குழுவின் இன்றைய ஆண்டின் இலக்கு என்னும் MILE STONE-2011- வின் கிராமப் பகுதியைச் சார்ந்த 25 மாணவர்களுக்கு கல்வி உதவி மற்றும் வழிகாட்டுதல் விழா அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளியில் நடைபெற்றது.

         அனைவருக்கும் வாழ்வாதாரத்திற்கான பயனுள்ள கல்வி என்னும் இந்த சமூக வளர்ச்சிக்கான  நல்விழாவிற்கு 
   மரியாதைக்குரிய (1) திரு;பிரபுசாரி (HR-HEAD / C.T.S-COIMBATORE) மற்றும் (2) திரு;ஆனைக்கொம்பு ஸ்ரீராம் (ROTARY CLUB OF SATHY ) ஆகிய ஆன்றோர்கள் முன்னிலை வகிக்க,

       மரியாதைக்குரிய தலைமை ஆசிரியர் திரு;சாமியப்பன் அவர்கள்-அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளி , சத்தி,
         மற்றும் பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரி பேராசிரியர் மரியாதைக்குரிய திரு; சங்கர் மற்றும்,
         தொட்டம்பாளையம் அரசு மேனிலைப்பள்ளி மரியாதைக்குரிய தலைமை ஆசிரியர் மற்றும்,
     பல கல்வியாளர்களும் ,சான்றோர்களும்,தொழில் நுட்ப வல்லுனர்களும் கலந்து கொண்டு GLITTERING GOLDEN TEAM-சமூகசேவையாளர்களைப் பாராட்டியும்,

      The Glittering Golden Team-Mile Stone-2011 - என்னும் இந்த ஆண்டு இலக்கான

     (1)    பொறியியல் கல்லூரி , 
     (2)  கலை & அறிவியல் கல்லூரி , மற்றும்    
     (3)  பள்ளிகளில் பயிலும் 

     கிராமப் பகுதி 25 மாணவ,மாணவியருக்கு கல்வி உதவித் தொகைகளை வழங்கியும்,
      அவர்களுக்கான வழிகாட்டுதல்களுக்கான தகுந்த அறிவுரைகளை வழங்கியும் உரையாற்றி இவ்விழாவினைச் சிறப்பித்தனர். 

      சத்தியமங்கலப் பகுதியைச் சார்ந்த மற்றும்
     மலைப்பகுதியான ஆசனூர் பகுதியைச் சார்ந்த
     பொது மக்கள் கலந்து கொண்டு விழாவிற்குப் பெருமை சேர்த்தனர்.
    
     சாதி,மத,மொழி,இன,பாலியல் வேறுபாடின்றி  இந்த மனித சமூகத்திற்காகப் பயனுள்ள சமூக சேவை செய்யும்   G.G.T.தன்னார்வலர்களை நாமும் மனதாரப் பாராட்டுவோம்.
    paramesdriver.blogspot.com `நன்றி!

Sunday, July 24, 2011

29) தூக்கம் போச்சு!

       
          தூக்கம் வராமைக்குக் காரணங்களும்-தீர்வுகளும்.



         பரபரப்பான வாழ்க்கை முறையில் சிக்கி தவிக்கும் மனமும், உடலும் பாதிப்புக்குள்ளாகும் போது சில அறிகுறிகளை காட்டுகிறது. அதில் ஒன்று தான் தூக்கமின்மை. 
         . ‘டென்ஷன் காரணமாக எந்த வயதிலும் தூக்கமின்மை பிரச்னை தாக்குகிறது. தூக்கமே வராமல் இருத்தல், ஆழமான தூக்கமின்றி இடையில் பலமுறை எழுவது, தூக்கத்தில் இருந்து விழித்த பின் மீண்டும் தூக்கம் வர அதிக நேரம் பிடித்தல்.. என பலருக்கு நிம்மதியான தூக்கம் என்பது கனவாகி வருகிறது.

அடிக்கடியோ அல்லது நீண்ட நாட்களுக்கோ இத்தொல்லை இருக்கிறது. வேலை காரணமாக மன அழுத்தம், உடல் நலம் மற்றும் குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகள் ஆகியவற்றால் தூக்கம் பறி போய் விடுகிறது.
      மனச்சோர்வு, மூளையைத் தூண்டும் மருந்துகள், மது, புதிய சூழல், நீண்ட நாட்களுக்கு தூக்க மாத்திரை உட்கொள்வது, நாள்பட்ட நோய் போன்ற காரணங்களாலும் வரலாம். 
      இப்பிரச்னையால் நாள் முழுவதும் பாழாகி போகும். அதுவே டென்ஷனை உருவாக்கும். மூளையிலும் ரசாயன மாற்றங்களை ஏற்படுத்தும்.

     தூக்கமின்மையால் தவிப்பவர்கள் தாங்கள் பாதிப்புக்குள்ளாவதோடு, சுற்றியிருப்பவர்களையும் டென்ஷனாக்கி விடுவார்கள்.
     இதற்கு சரியான சிகிச்சை அவசியம். உடல், மனம், சூழல் இந்த மூன்றில் எதில் பிரச்னை இருந்தாலும் தூக்கமின்மை வரலாம். 
    உடலில் என்றால் அதற்கான காரணத்தை கண்டறிந்து மருத்துவ சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்.
     மனம் என்றால் மனநல மருத்துவரின் ஆலோசனைப்படி தீர்வு காண வேண்டும். 
     சூழலை மாற்றுவதன் மூலமும் தூக்கத்தை திரும்ப பெற முடியும்.
 
         நல்ல தூக்கத்துக்கு சில வழிமுறைகளை கையாளலாம்.

      தினமும் குறிப்பிட்ட நேரத்துக்கு தூங்கச் செல்வது அவசியம். மதியம் மற்றும் மாலை நேரங்களில் குட்டித் தூக்கம் வேண்டவே வேண்டாம். படுக்கைக்கு செல்வதற்கு முன்பு சின்ன வாக்கிங், குட்டிக் குளியல் எடுக்கலாம்.
  இதனால் மனம், உடல் ரிலாக்ஸ் ஆகும். தூக்கமும் நன்றாக வரும். தூங்க செல்லும் போது தளர்வான உடை, முடியை இறுக்கமின்றி வைத்து கொள்ளலாம். 
     அதோடு மனதில் உள்ள கவலைகளுக்கு குட்பை சொல்வது அவசியம்.படுக்கையில் இருந்து கொண்டு அலுவலக வேலைகளை செய்ய வேண்டாம். 
     தூங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக வெதுவெதுப்பான தண்ணீரில் கால்களை வைத்திருப்பது ஒரு டெக்னிக்.

        படுக்கும் முன் மது, புகையிலை, பாக்கு போன்ற போதை வஸ்துகளை பயன்படுத்துவது மிகமிகத் தவறு. 
       சூடான பால் ஒரு டம்ளர் குடிப்பது நல்லது.
படுக்கை அறை மித வெளிச்சத்துடன் இருக்க வேண்டும்.
      இரவு 1 மணி வரை கம்ப்யூட்டர், செல்போனே கதியென்று கிடக்கும் பழக்கத்தை மாற்றுவது நல்லது. 
     வீட்டில் சின்ன சின்ன பிரச்னைகள் இருந்தால் மனம் விட்டு பேசுவதன் மூலம் சூழலை இனிதாக்கிக் கொள்ளலாம்.

       ஆழ்ந்து மூச்சை இழுத்து விடுவது, தியானம் நல்ல உறக்கத்துக்கு வழிவகுக்கும். இவ்வளவு முன்னேற்பாடுகளுக்கு பின்னரும் தூக்கம் வராமல் புரள நேர்ந்தால் கஷ்டப்பட்டு தூங்க முயற்சிக்க வேண்டாம். 
     தூக்கம் வரும் வரை காத்திருக்கவும். எழும் போது வழக்கமான நேரத்தில் எழுந்து விடவும். 
      எந்த முயற்சியும் பலனளிக்காமல் போய் தூக்கமே வரவில்லையென்றால் கண்டிப்பாக மருத்துவரை அணுகி சரியான காரணத்தை கண்டறிந்து சிகிச்சை எடுப்பது அவசியம்‘

                     RECIPE = மருந்து முறை

லெட்டூஸ் சாலட்: லெட்டூஸ் கீரையை அரிந்து கொள்ளவும். வெள்ளரி மற்றும் பெரிய வெங்காயம் ஆகியவற்றையும் சாலடுக்கு தகுந்தாற் போல் வெட்டிக் கொள்ளவும். இதில் எலுமிச்சை ஜூஸ் சிறிதளவு, உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து சாலட் தயாரித்து சாப்பிடலாம். இதன் மூலம் மன இறுக்கம் தளர்ந்து இனிய தூக்கம் கிடைக்கும்.
புரூட் ஹனி: திராட்சை, மாதுளை, அன்னாசி, ஆப்பிள் என உங்களுக்கு பிடித்த பழவகைகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, அதில் தேன் கலந்து சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு போதுமான இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் சி கிடைக்கிறது.
      இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பகல் நேரங்களில் சரியாக சாப்பிடாமல் இருந்திருந்தால் கூட இந்த ஹனி புரூட் மிக்ஸ் மூலம் தேவையான சக்தியை பெறலாம்.

ஓட்ஸ் மீல்: அரை கப் பால் எடுத்து சுண்ட காய்ச்சவும். பால் நன்கு கொதித்ததும், அதில் கொஞ்சம் ஓட்ஸ் சேர்க்கவும். ஓட்ஸ் வெந்து கொஞ்சம் கெட்டிப் பதத்துக்கு வரும். அதில் ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பழங்களை வெட்டிப் போட்டு தேன் சேர்த்து சாப்பிடவும். எளிதில் ஜீரணமாகி நல்ல தூக்கத்துக்கு வழிவகுக்கும்.
 
     மின்ட் சப்பாத்தி: வழக்கமான சப்பாத்திக்கு பதிலாக புதினா மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து சப்பாத்தி மாவு பிசைந்து சப்பாத்தி தயாரிக்கலாம்.
     இது நல்ல மணத்துடன், புதிய சுவையோடு இருக்கும். கோதுமை மாவில் இருந்து நார்ச்சத்து மற்றும் புதினா, கொத்தமல்லியில் இருந்து உடலுக்கு குளிர்ச்சியும் கிடைக்கும்.

          DIET = வழக்கமாக சாப்பிட வேண்டியவை

             பலருக்கும் அலுவலக டென்ஷனை வீடுவரை இழுத்து வருவதே தூக்கத்துக்கு எதிரியாக மாறுகிறது. அலுவலகத்தையும் வீட்டுச் சூழலையும் தனித்தன்மையுடன் சமாளிக்க தெரிந்தவர்களுக்கு இந்த தொல்லை இருப்பதில்லை. 
       தூக்கத்தில் சிறிய பிரச்னை இருந்தால், உணவின் மூலம் சரி செய்து கொள்ளலாம். 
        இரவு படுக்க செல்வதற்கு ஒரு மணி நேரம் முன்பே இரவு உணவை முடித்துக் கொள்ள வேண்டும். 
        நார்ச்சத்து நிறைந்த உணவுகள் அவசியம். பிரவுன் ரைஸ் அரிசியை வேக வைத்து உணவுடன் 50 கிராம் சேர்த்துக் கொள்ளலாம்.
        வைட்டமின் பி சத்துள்ள பருப்பு வகைகள் நரம்புகள் ரிலாக்ஸ் ஆக உதவும். தூங்குவதற்கு முன்பு சூடான பால் மற்றும் ஒரு வாழைப்பழம் சாப்பிடலாம். 
        தேன், ஓட்ஸ் மீல்ஸ், முழு கோதுமையால் செய்யப்பட்ட ரொட்டி இரவு உணவுக்கு ஏற்றது. 
         தேன் சாப்பிடுவதால் மன இறுக்கம் தளர்வடையும். அதிக கலோரி உள்ள உணவுகளை தவிர்க்கவும். 
           காபி கண்டிப்பாக வேண்டாம். தூக்க மாத்திரை சாப்பிடும் வழக்கத்தை கண்டிப்பாக விட்டு விட வேண்டும்.
         இரவில் கீரை வகைகள் மற்றும் அதிக காரமான உணவுகளை தவிர்ப்பது தொல்லை இல்லா தூக்கத்துக்கு வழிவகுக்கும் .

                     பாட்டி வைத்தியம்

        வேப்பிலையை வறுத்து தலைக்கு வைத்து தூங்கினால் நன்றாக தூக்கம் வரும்.

         இரவில் வயிற்றில் ஏற்படும் உப்புசத்தால் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் உடனடியாக வெந்தயக்கீரை, நிலவாரை இலை இரண்டையும் சம அளவில் எடுத்து அதில் ஓமம் சேர்த்து அரைத்து சாப்பிடலாம்.

               வெண்தாமரை இலையுடன் மஞ்சள் தூள் சிறிதளவு சேர்த்து கஷாயம் காய்ச்சிக் குடித்தால் நன்றாக தூக்கம் வரும்.

            அதிகாலையில் கொஞ்சம் வல்லாரைக் கீரையை மென்று தின்ன வேண்டும். அடுத்து அரை மணி நேரத்துக்கு வேறு எதுவும் சாப்பிடக் கூடாது. இதன் மூலம் மனம் சார்ந்த நோய்கள் குணமாகும். இரவில் நன்றாக தூங்கலாம்.

           லெட்டூஸ் கீரையை பொடியாக நறுக்கி தயிர் மற்றும் வெங்காயத்துடன் சேர்த்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.

                ரோஜாப்பூ, வெள்ளை மிளகு, சுக்கு ஆகியவற்றில் தலா 50 கிராம் எடுத்து அரைத்துக் கொள்ளவும். இதனை காலை மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் நன்றாகத் தூக்கம் வரும்.

           முக்குளிக் கீரையை சூப் செய்து மாலை நேரத்தில் சாப்பிடலாம்.

           மாம்பழச் சாறுடன் பால் கலந்து சர்க்கரை சேர்க்காமல் குடித்தால் ஆழ்ந்த தூக்கம் நிச்சயம்.

             மருதாணி பூக்களை தலையணையின் கீழே வைத்து படுத்தால் நன்றாகத் தூக்கம் வரும்.

             மணலிக்கீரை, துளசி, வில்வம் மூன்றையும் சம அளவு எடுத்து உலர்த்திப் பொடியாக்கி தினமும் இரவு நேரத்தில் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டால் நன்றாக தூங்கலாம்.

28)கண்கள்- நோய் பாதுகாக்க

         
                  கண்கள் = கவனியுங்கள்
 


          கண்கள் மிகவும் மென்மையானவை. கண்களை சுற்றி 12 தசைகள் இயங்குகின்றன.
      இவற்றில் ஏதாவது ஒன்றில் பாதிப்பு ஏற்பட்டால்கூட கண்நோய் வருகிறது.
      இதனால் கண்கள் கனமாக தோன்றுவதுடன் விரைவில் சோர்வடையும். பார்வை மங்குவதற்கும் வாய்ப்புள்ளது. ஓவியம், எம்பிராய்டரி போன்ற நுட்பமான வேலை செய்பவர்களுக்கு அஸ்தனோபியா என்ற தொந்தரவு வரும். 
       தொடர்ந்து டிவி, சினிமா பார்த்தால் கண்கள் சோர்வடையும். கண்களில் வலி இருக்கும். இமைகள் கனமாக இருக்கும். தலைவலியும் வரும்.

         மேலும் தொடர்ந்து படிக்கும் போது கண் மங்கலாக தோன்றும். நீண்ட நேரம் இரவில் விழித்து டிவி பார்ப்பதாலும் கண் பாதிப்பு ஏற்படும்.
      இதனால் கண்ணின் கருவிழி மற்றும் ஜவ்வு, கண் இமைகளின் உட்பகுதி விளிம்பு ஆகியவற்றில் சிலநோய் அறிகுறிகள் தென்படும். கண் சிவத்தல், கண்ணில் தூசு விழுந்தது போன்ற உறுத்தல், இமைகள் வீங்குதல், கண் கூசுதல், கண்களில் நீர் வடிதல் போன்றவை    ஏற்படலாம்.     

          சிலருக்கு கண்கள் எப்போதுமே சிவப்பாக காணப்படும். மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கு பொதுவாக ரத்தக் குழாய்கள் விரிவடையும்.

     அதே போன்று கண்ணின் வெண்விழி ஜவ்விலும் உள்ள ரத்தக் குழாய்கள் விரிவடைந்து சிவப்பாக தோன்றும்.

       ரத்தத்தில் ஆல்கஹால் அளவு குறைந்தால் கண்கள் வெண்மை நிறத்துக்கு மாறிவிடும். 
       மதுப்பழக்கம் இல்லாத சிலருக்கும் ரத்தக்குழாய் தடிமனால் கண்கள் சிவப்பாக தோன்றலாம்.
       இதனை குளிர்க்கண்ணாடி அணிந்து சமாளிக்கலாம். கண் சிவந்து வலியும் இருந்தால் கண்ணில் புண் அல்லது கண் நீர் அழுத்தம் காரணமாக இருக்கலாம்.
        இது போன்ற பிரச்சினை உள்ளவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுக்க வேண்டும்.

        வெண்விழியில் உள்ள ஜவ்வில் வைரஸ், பாக்டீரியா தொற்று, அலர்ஜி மற்றும் கண்கள் உலர்ந்து போதல், ரசாயன பொருட்களால் ஏற்படும் ஒவ்வாமை, தூசு விழுதல் ஆகிய காரணங்களாலும் கண்கள் வீங்கி சிவப்பாக மாற வாய்ப்புள்ளது.

       எனவே கண்ணில் சிறிய பிரச்சினை இருந்தாலும் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம். 
       சுயமருத்துவம் செய்வது தவறாகும். 

        இருசக்கர வாகனத்தில் கண்ணாடி இல்லாமல் செல்லுதல், கம்ப்யூட்டர் திரையை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருத்தல், 
     கண்நோய் மற்றும் டென்ஷன் காரணமாகவும் கண்ணில் நீர்வடியும்.

        இதில் இரண்டு வகை உண்டு.

    கண் உறுத்தல், புண், அடிபடுதல், மனச்சோர்வு ஆகியவற்றால் ஏற்படுவது ஒருவகை. 
     இன்னொரு காரணம் எபிபோரா. கண்ணீர் வெளியேறும் பாதைகளில் உள்ள அடைப்புகளினால் கண்ணில் நீர்வடியும். 
    இது போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டால் கண் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். 
      உடனடி சிகிச்சையின் மூலம் பார்வை இழத்தல் உள்ளிட்ட பிரச்சினைகளை தவிர்க்கலாம் .

          பாதுகாப்பு முறை: குறிப்பிட்ட இடைவெளியில் கண் பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் பிரச்சினைகளை துவக்கத்தில் கண்டறிந்து சரி செய்யலாம். 

       நாள்பட்ட சர்க்கரை மற்றும் மிகை ரத்த அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள் நோயை கட்டுக்குள் வைப்பது அவசியம்.
       கண்ணில் ஏற்படும் நோய் தொற்று அறிகுறிகளை உடனே அறிவதும் முக்கியம்.
       திடீர் பார்வையிழப்பு, தெளிவற்ற பார்வை, கண்களில் ஒளி வீசுதல், கறுப்புப் புள்ளிகளின் தோற்றம் போன்றவை கண் அழுத்த நோய் அல்லது மூளை பாதிப்பின் விளைவாக இருக்க வாய்ப்புள்ளது.

    சூரிய ஒளியின் புற ஊதாக் கதிர்களில் இருந்து கண்களை பாதுகாக்க கண்ணாடி அணியலாம்.

     வைட்டமின் ‘ஏ, மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்த கேரட் போன்ற உணவுகளை சாப்பிட வேண்டும்.
     சரியான கண்ணாடியை அணிவதன் மூலம் பார்வை திறனை சரி செய்து கொள்ளலாம். 
     குறைந்த வெளிச்சத்தில் படிப்பதை தவிர்க்கவும். கண்ணில் நீர் வடிந்தால், கண்களை கசக்கக் கூடாது.
      கண்களை மூடிய நிலையில் 10 நிமிடத்துக்கு சூடான ஒத்தடம் கொடுக்கலாம்.

       சிவந்த கண்கள் பிரச்சினை உள்ளவர்கள் வெந்நீரில் துணியை நனைத்து பிழிந்து ஒத்தடம் கொடுக்கலாம். கண் நோய் ஏற்பட்டால் கைகளை அடிக்கடி கழுவவும். 

      வீட்டில் ஒவ்வொருவருக்கும் தனித்தனி உபயோகிக்கவும். கண் அழகு சாதனப் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
       தலையணை உறையை தினமும் மாற்றவும். இது போன்ற நடைமுறைகளைக் கடைபிடிப்பதன் மூலம் கண் நோயால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கலாம்.

         RECIPE=மருந்து முறை

           சிறுகீரை கூட்டு:       

      பாசிப்பருப்பு 50 கிராம் அளவுக்கு வேகவைத்து எடுத்து கொள்ளவும். சிறுகீரை ஒரு கட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும். 
     சின்ன வெங்காயம் ஒரு கப், பூண்டு ஐந்து பல், புளிக்கரைசல் சிறிதளவு எடுத்து கொள்ளவும். 
       வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை, வறமிளகாய் சேர்த்து தாளிக்கவும். பூண்டு, சின்ன வெங்காயம் மற்றும் சீரகம் சேர்த்து வதக்கவும். 
       பின்னர் சிறுகீரை சேர்த்து வெந்த பின் பாசிப்பருப்பு வேக வைத்தது மற்றும் புளிக்கரைசல் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும். தேவையான உப்பு மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்.

மிக்சட் புரூட் ஜூஸ்:

     ஆப்பிள் அரை கப், வாழைப்பழம் அரை கப், கருப்பு திராட்சை அரை கப், முலாம்பழம் அரை கப். பழங்களை மிக்சியில் அடித்து வடிகட்டிக் கொள்ளவும்.
     மீண்டும் மிக்சியில் சர்க்கரையை பொடியாக்கி பின்னர் பால் மற்றும் பழச்சாறு சேர்த்து அடித்துக் கொள்ளவும். 
      இந்த மிக்சட் புரூட் ஜூசில் போதுமான அளவு வைட்டமின் ஏ சத்து உள்ளது.

குச்சிக் கிழங்கு வடை: 

      குச்சிக் கிழங்கை தோல் சீவி கிரைண்டரில் மாவு போல் அரைத்துக் கொள்ளவும்.
     கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு இரண்டையும் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பொட்டுக் கடலையைப் பொடியாக்கிக் கொள்ளவும். 
      சீரகம், சோம்பு, வறமிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லித்  தழை ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும்.
        ஊற வைத்த பருப்பு வகைகளை கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். இதில் பொட்டுக் கடலைத் தூள் மற்றும் சீரகம் உள்ளிட்ட பொருட்களைக் கலந்து, அரைத்து வைத்த குச்சிக் கிழங்கு மாவையும் சேர்த்து வடை பதத்துக்கு பிசையவும். 
     தேவையான அளவு உப்பு சேர்க்கவும். தோசைக் கல்லில் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்க வேண்டும். எண்ணெய் குறைவாக சேர்க்கவும்.

           DIET= வழக்கமாக சாப்பிட வேண்டியவை

         வழக்கமாக கண் பிரச்னையானது தலைவலி, ஒற்றைத் தலைவலி, கிருமித் தொற்று ஆகியவற்றால் வரும்  உடல் உஷ்ணம் அதிகம் உள்ளவர்கள், வயதானவர்கள், கண்ணில் அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு  இதற்கான வாய்ப்பு அதிகம். 

      இவர்கள் தூசு, புகை உள்ள இடங்களை தவிர்க்க வேண்டும். அதிக வெளிச்சம், அதிக இருட்டு தவிர்க்கவும். 
       நீண்ட நாள் பிரச்னை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி சொட்டு மருந்து உபயோகிக்கலாம். 
       கண்நோய் தாக்குதல் உள்ள சமயத்தில் வைட்டமின் ஏ சத்து உணவுகள் அதிகம் எடுத்துக் கொள்வதன் மூலம் விரைவில் குணமடைய வாய்ப்புள்ளது.

        வைட்டமின் ஏ சத்து அனைத்து வகையான பச்சைக் கீரைகள், வாழைப்பழம், மாம்பழம், கேரட், காலிபிளவர், முட்டைக்கோஸ், மீன் மாத்திரை, பழ வகைகளிலும் உள்ளது. 

       தினமும் கட்டாயம் உணவில் கீரை இருக்க வேண்டும். ஒரு நாளைக்கு மூன்று வகையான பழச்சாறு அருந்த வேண்டும். மூன்று லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். கொழுப்பு உணவுகளை கட்டாயம் தவிர்க்கவும்.

       அசைவம் மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்ப்பதும் நல்லது. தினமும் அரை மணி நேரம் வாக்கிங் அவசியம். 

        உணவில் சாதத்தின் அளவை விட காய்கறிகளின் அளவு அதிகம்இருக்க வேண்டும்.
        டீ, காபிக்கு பதிலாக பால் சாப்பிடலாம். இந்த உணவு முறையை கடைபிடித்தால் கண் நோய்கள் உடனடியாக சரியாகிவிடும்.

      பாட்டி வைத்தியம்

        கண்ணில் நீர் வடிதல் பிரச்னை உள்ளவர்கள் வேளைக்கீரை, இஞ்சி, மிளகு, வெல்லம் அனைத்தையும் சம அளவில் எடுத்து அரைத்து அதிகாலையில் 15 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் குணமாகும்.

       வேப்பிலை, சுக்கு, இந்துப்பு மூன்றையும் ஒன்றாக சேர்த்து அரைத்து சூடுபடுத்தி கண்கள் மீது வைத்து கட்டிக் கொண்டால் கண்வலி மற்றும் கண் அரிப்பு குணமாகும்.

        பூண்டு, சீரகம், இஞ்சி ஒவ்வொன்றிலும் ஐந்து கிராம் அளவுக்கு எடுத்து இடித்து பனைவெல்லம் சேர்த்து கஷாயம் காய்ச்சி குடித்தால் தலைவலி, தலைபாரம் குணமாகும். கண்ணில் நீர்வடிதல் பிரச் னைக்கும் தீர்வு காணலாம்.

          உடல் சூட்டின் காரணமாக கண்களில் பிரச்னை ஏற்படுபவர்கள் வெந்தயக் கீரையுடன் பூண்டு, உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து சாப்பிடுவதால் உடல் சூடு குறையும்.

               வில்வ இலையைப் பொடி செய்து வெந்தயம் கலந்து சாப்பிட்டால் கண் பார்வை தெளிவாக இருக்கும்.

        இரவில் தினமும் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிடுவதன் மூலம் கண்ணில் நோய்த்தொற்று ஏற்படுவதை தடுக்கலாம்.

          லெட்டூஸ் கீரையை அரை வேக்காட்டில் வேகவைத்துச் சாப்பிட்டால் கண் நோய் குணமாகும்.

             முருங்கைக் கீரையை நீர் சேர்க்காமல் அவித்து கண்கள் மீது வைத்து கட்டிக் கொண்டால் கண் நோய்கள் குணமாகும்.

         மருதாணி இலையை அரைத்து கண்கள் மீது வைத்து கட்டிக் கொண்டால் கண்களில் நீர்வடிவது நிற்கும்.