Sunday, July 31, 2011

30)கல்விக்கான ஒரு அமைதி இயக்கம்.

                                     


 அன்பு நண்பர்களே, 
       paramesdriver.blogspot.com !வலைப்பதிவிற்கு தங்களை வணங்கி வரவேற்கிறேன்.
                                                கல்வி உதவி



      நம்ம ஊராம் சத்தியமங்கலத்தில் 31-07-2011 இன்று கல்விப் பணிக்கான அமைதி இயக்கமாம் G.G.T. என்னும் தங்கத்தைப் போல் மினுமினுக்கும் குழு (அல்லது) பிரகாசிக்கும் குழுவின் இன்றைய ஆண்டின் இலக்கு என்னும் MILE STONE-2011- வின் கிராமப் பகுதியைச் சார்ந்த 25 மாணவர்களுக்கு கல்வி உதவி மற்றும் வழிகாட்டுதல் விழா அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளியில் நடைபெற்றது.

         அனைவருக்கும் வாழ்வாதாரத்திற்கான பயனுள்ள கல்வி என்னும் இந்த சமூக வளர்ச்சிக்கான  நல்விழாவிற்கு 
   மரியாதைக்குரிய (1) திரு;பிரபுசாரி (HR-HEAD / C.T.S-COIMBATORE) மற்றும் (2) திரு;ஆனைக்கொம்பு ஸ்ரீராம் (ROTARY CLUB OF SATHY ) ஆகிய ஆன்றோர்கள் முன்னிலை வகிக்க,

       மரியாதைக்குரிய தலைமை ஆசிரியர் திரு;சாமியப்பன் அவர்கள்-அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளி , சத்தி,
         மற்றும் பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரி பேராசிரியர் மரியாதைக்குரிய திரு; சங்கர் மற்றும்,
         தொட்டம்பாளையம் அரசு மேனிலைப்பள்ளி மரியாதைக்குரிய தலைமை ஆசிரியர் மற்றும்,
     பல கல்வியாளர்களும் ,சான்றோர்களும்,தொழில் நுட்ப வல்லுனர்களும் கலந்து கொண்டு GLITTERING GOLDEN TEAM-சமூகசேவையாளர்களைப் பாராட்டியும்,

      The Glittering Golden Team-Mile Stone-2011 - என்னும் இந்த ஆண்டு இலக்கான

     (1)    பொறியியல் கல்லூரி , 
     (2)  கலை & அறிவியல் கல்லூரி , மற்றும்    
     (3)  பள்ளிகளில் பயிலும் 

     கிராமப் பகுதி 25 மாணவ,மாணவியருக்கு கல்வி உதவித் தொகைகளை வழங்கியும்,
      அவர்களுக்கான வழிகாட்டுதல்களுக்கான தகுந்த அறிவுரைகளை வழங்கியும் உரையாற்றி இவ்விழாவினைச் சிறப்பித்தனர். 

      சத்தியமங்கலப் பகுதியைச் சார்ந்த மற்றும்
     மலைப்பகுதியான ஆசனூர் பகுதியைச் சார்ந்த
     பொது மக்கள் கலந்து கொண்டு விழாவிற்குப் பெருமை சேர்த்தனர்.
    
     சாதி,மத,மொழி,இன,பாலியல் வேறுபாடின்றி  இந்த மனித சமூகத்திற்காகப் பயனுள்ள சமூக சேவை செய்யும்   G.G.T.தன்னார்வலர்களை நாமும் மனதாரப் பாராட்டுவோம்.
    paramesdriver.blogspot.com `நன்றி!

No comments:

Post a Comment