Tuesday, July 19, 2011

27) NHM - WRITER -பயன்படுத்த எளிது.



.
அன்பு நண்பர்களே,
                       paramesdriver.blogspot.com வலைப்பதிவிற்கு தங்களை வணங்கி வரவேற்கிறேன்.

     NHM Writer -மென்பொருள் வைத்து  கணினியில் தமிழில் தட்டச்சு செய்வது எளிது 
   தமிழ் தட்டச்சு தெரிந்தவர்கள் / தெரியாதவர்கள் கூட NHM Writer மென்பொருள்  மூலம் எளிதாக தட்டச்சு செய்ய முடியும்.
           NHM Writer மென்பொருள்  Assamese, Bengali, Gujarati, Hindi, Kannadam, Malayalam, Marathi, Punjabi, Tamil ,Telugu என 10க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் தட்டச்சு செய்ய வகைசெய்கின்றது.
      Google Chrome, Firefox, Safari, Internet Explorer, Opera, என பல விதமான பிரவுஸர்களில் எளிதாக தட்டச்சு செய்ய உதவி புரிகின்றது.  
      Window Live Writer, Outlook, Notepad, MS-Word, MS-Excel, MS-Powerpoint என MS-Office மென்பொருள்களுடன்  சேர்ந்து எளிதாக வேலை செய்கின்றது.
     

  1. ஆங்கிலத்தில் amma என்று தட்டச்சு செய்தால் அதை திரையில் அம்மா என்று தமிழில் பார்க்கும் வசதி.
  2. ஒன்றுக்கும் மேற்பட்ட தமிழ் தட்டச்சு விசைப்பலகை பயன்படுத்த முடியும்.

NHM Writer என்ற மென்பொருளை nhm.writer  இணையத்தளத்தில் இருந்து டவுன்லோட் செய்யவும்.

உங்கள் கணினியில் டவுன்லோட் செய்த கோப்புவை (File) இன்ஸ்டால் செய்ய (NHMWriterSetup1511.exe) என்ற கோப்புவை இரண்டு முறை கிளிக் செய்து ரன் செய்யவும்.
பின்னர் கீழ் தரப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.
1)= (Step 1) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
2)=  (Step 2)  இதில் I accept the agreement என்று தேர்வு செய்து பின்னர் Next என்ற     பட்டனை கிளிக் செய்யவும்.
 
3)=  (Step 3) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
4)=  (Step 4)  இதில் தமிழ் மொழியை தேர்வு செய்து பின்னர் Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
5)=   (Step 5) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
6 )= (Step 6) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்
இப்போது  மென்பொருள் கணினியில் இன்ஸ்டால் செய்யப்படும்.


         paramesdriver.blogspot.com /  Sathy & Thalavadi )
         
           NHM Writer யை எவ்வாறு பயன்படுத்துவது?
    NHM Writer பயன்படுத்த கணினியின் கீழ் பகுதியில் உள்ள Toolbar -ன் வலது மூலையில் BELL அதாவது மணி- போன்ற ஓர் குறியீடு (Icon) தெரிந்தால் 
       NHM Writer தற்போது இயங்கி கொண்டுள்ளது என்று அர்த்தம்இதன் மூலம் NHM Writer ரை நீங்கள் பயன்படுத்த முடியும்
     
      தமிழ் தட்டச்சு பலகையை எவ்வாறு தேர்வு செய்வது?
     முன்பே கூறியது போல் நீங்கள் விரும்பும் தமிழ் தட்டச்சு பலகையை தேர்வு செய்ய மேற் சொன்ன (BELL)- மணி போன்ற ஓர் குறியீட்டில் (Icon)  உங்கள் மவுசை வைத்து இடது (Left) பட்டனை கிளிக் செய்தால், திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும்.  
     அதில் நீங்கள் விரும்பும் தமிழ் விசைப் பலகையை தேர்வு செய்யவும்.


              மேலும் எளிதாக  தேர்வு செய்ய
       
        1) TAMIL -99             தேர்வு செய்ய Alt Key  +1அழுத்தவும்,
        2)  PHONETIC -         தேர்வு  செய்ய Alt Key  +2 அழுத்தவும்,
        3)TYPEWRITER -      தேர்வு  செய்ய Alt Key  +3  அழுத்தவும்,
        4)  BAMINI -             தேர்வு  செய்ய  Alt Key  +4 அழுத்தவும்,
    5)  INSCRIPT -    தேர்வு செய்ய  Alt Key +5 அழுத்தவும்.
  
            இவ்வாறு விரும்பிய விசைப் பலகையைத் தேர்வு செய்த பின்னர்  நீங்கள் தமிழில் தட்டச்சு செய்யமுடியும்.
    
      தமிழ் மொழி தட்டச்சு செய்வதிலிருந்து ஆங்கில மொழி தட்டச்சு பலகைக்கு மாற்ற, Alt Key + 0 என்ற எண்ணைச்  சேர்த்து அழுத்தினால் போதும்.இவ்வாறாக தமிழ் மற்றும் ஆங்கிலம் என மாறி, மாறி தட்டச்சு செய்யலாம்.
  
         செட்டிங்கை + மாற்ற! 

      NHM Writer செட்டிங்கை மாற்ற மேற் சொன்ன மணி போன்ற ஓர் குறியீட்டில் (Icon) உங்கள் மவுசை வைத்து வலது (Right) பட்டனை கிளிக் செய்தால் திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும்.
       அதில் செட்டிங் என்ற மெனுவை கிளிக் செய்யவும். பின்னர் கீழ் உள்ள திரைவிளக்கப்படம் தெரியும்
         அதில் நீங்கள் உங்கள் தட்டச்சு பலகைக்கு மாற்ற உதவும் Alt Key மற்றும் எண்ணை மாற்ற விரும்பினால் மாற்றிக்கொள்ளலாம்.
   
    தமிழ் ,99 விசைப் பலகையை எவ்வாறு அறிந்து கொள்வது?

        முதன் முதலில் தமிழில் தட்டச்சு செய்ய எந்தெந்த தமிழ் எழுத்து, தட்டச்சு பலகையில் எந்தெந்த பொத்தானில் உள்ளது? என்பதை அறிவது அவசியம்.
ஆகவே தான் உங்களுக்கு உதவியாக நீங்கள் தட்டச்சு செய்யும் போது உங்கள் கண் முன் 
                    1.   தமிழ்,99 விசைப் பலகை, 
          2.  தமிங்கில விசைப் பலகை,
          3.  பாமினி விசைப் பலகை, 
                     4.  தட்டச்சு பலகை 
      என அனைத்து முறைகளின்  விளக்கப்படம் கொண்டுவர NHM Writer உதவி புரிகின்றது.
       அதற்கு நீங்கள், மேற் சொன்ன மணி போன்ற குறியீட்டை (Icon) உங்கள் மவுசை வைத்து வலது (Right) பட்டனை கிளிக் செய்தால் போதும். திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு (Menu) தெரியும்.
   
     அதில் On-Screen Keyboard என்ற மெனுவை கிளிக் செய்யவும். பின்னர் கீழ் உள்ள திரைவிளக்கப்படம் உங்கள் திரையில் தெரிந்து கொண்டே இருக்கும்
    நீங்கள் இதை வைத்து தட்டச்சு செய்யும் எழுத்து எங்கு உள்ளது என்பதை எளிதில் பார்த்து தட்டச்சு செய்ய முடியும்.


  1)  சிலர் TYPEWRITING முறை அதாவது Bamini தட்டச்சு முறை பற்றி கேட்கின்றனர்.காரணம் பழையமுறை அதிகம் புழக்கத்தில் உள்ளது.பெரும்பாலானவர்கள் பழகிக்கொண்டது. ஆனால் ''தமிழ் '99'' மிக எளிதானது.இந்த ''தமிழ்'99'' முறை -புதியமுறை இன்னும்  அதிகம் பயனுக்கு வரவில்லை.அதே சமயம் தமிழக அரசு பரிந்துரை செய்வது இந்த தமிழ்'99 முறைதான்.(நான் பயன்படுத்துவது தமிழ்'99 முறைதான்.)
  
   2) யா,ய்,யூ,யி,யீ போன்ற எழுத்துக்களை எவ்வாறு தட்டச்சு முறையில் அதாவது  பாமினி  முறையில் தட்டச்சு செய்வது? என்று கேட்பவர்களுக்கு
      எனக்கு தெரிந்தவரை தமிழில் தட்டச்சு செய்பவர்கள் ஆரம்பத்தில் பிரச்சினையாகக் கருதுவது மேற் குறிப்பிட்ட தமிழ் எழுத்துக்களைத் தான்.        
         அவற்றைத் தட்டச்சு செய்ய NHM Writer, Key Preview என்ற எளிய வழியை ஏற்படுத்தி உள்ளது
       Key Preview என்ற திரையைப் பார்க்க மேற் சொன்ன மணி போன்ற குறியீட்டை (Icon) உங்கள் மவுசை வைத்து வலது (Right) பட்டனை கிளிக் செய்தால் திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும்.
    அதில் Key Preview என்ற மெனுவை கிளிக் செய்யவும். பின்னர் கீழ் உள்ள திரைவிளக்கப்படம் உங்கள் திரையில் தெரிந்து கொண்டே இருக்கும்.
  
     உதாரணமாக    நீங்கள் a என்ற ஆங்கில எழுத்தை தட்டச்சு செய்தால் அதற்குஎன்ற தழிழ் எழுத்து உங்கள் திரையில் விழும். நீங்கள் அந்தஎன்ற தமிழ் எழுத்தைய்என்றோ, அல்லதுயாஎன்றோ மாற்ற விரும்பினால் "a;" அல்லது ah என்று தட்டச்சு செய்ய வேண்டும். உங்களுக்கு உதவியாக  திரைவிளக்கப்படம் உங்கள் திரையில் தெரிந்து கொண்டே இருக்கும்.
     நீங்கள் இதைப் பார்த்து, எந்த ஆங்கில எழுத்தைத் தட்டச்சு செய்தால் என்ன தமிழ் எழுத்து வரும் என்பதை நன்றாக அறிந்து செய்ய முடியும்
 மேலும் தமிழ் தட்டச்சுமுறை பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ள எனது தமிழ் -99 தட்டச்சு முறை மற்றும் தமிழில் தட்டச்சு முறை ஒரு ஒப்பீடு என்னும் முந்தைய பதிவுகளைப் பார்க்கவும்.
  paramesdriver.blogspot.com Sathy & Thalavadi

Friday, July 15, 2011

26) நூலகம் பேசுது-கோபி கலை & அறிவியல் கல்லூரி

                      + நூலகம் பேசுது+
    நூலகத் தந்தை; Dr.Shiyali Ramamrita Ranganathan (09AUG1892 -27SEP1972)
        



     1) என்னைத் தேடி நீ வந்தால்!, உன்னைத்தேடிஉலகம் வரும்!!    
    2)  கற்றோர் கற்கின்ற அறிவகம்!, கரங்கூப்பி வரவேற்கும் அன்பகம்!!
     3) அறிவுப் பசிக்கு விருந்தகம்! அறியாமைப் பிணிக்கு மருந்தகம்!!
    4) அறிவால் உயர்ந்து அரியாசனம் அமர்வோம்! நூலகம் நமக்கு ஓய்வு நேர உலகம்!!
    5)  புத்தகத்தில் உலகத்தைப் படிப்போம்! உலகத்தையே புத்தகமாகப் படிப்போம்!!
     6) வாசிப்போம்! மாத்தி யோசிப்போம்!!
         7)ஒரு தீக்குச்சியில் ஒளிந்திருக்கும் நெருப்பு என்னும் அபரிமிதமான ஆற்றலைப் போல் உன்னுள் ஒளிந்திருக்கிறது ஓராயிரம் ஆற்றல்!?! என்னைப்  பயன்படுத்தினால்! சிறு நெருப்பாற்றலால் அறையில் பரவும் வெளிச்சத்தைப் போல் பிரகாசிக்கும் உனது ஆற்றல்!!
     8)  திட்டமிடலும், நேர நிர்வாகமும் அவசியம்! குறிப்பெடுக்கக் கற்றுக்கொள்!!
  9) தன்னம்பிக்கை!, குறிக்கோள்!!, திறமை!!! இவையே  தகுதி ஆகும்.  
 
             நூலக வளங்களும்-வழங்கப்படும் சேவைகளும்
             கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி-கோபி


   அன்பு நண்பர்களே,
             paramesdriver.blogspot.com வலைப்பதிவிற்கு தங்களை வணங்கி வரவேற்கிறேன்.
        நம்ம ஊர்க் கல்லூரியான கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின்நூலகம் பற்றி சிறிது அறிந்து கொள்வோம்.
                 இது பாரதியார் பல்கலைக் கழகத்திலேயே சிறந்த இரண்டாவது நூலகம் ஆகும்.
              இந்த நூலகத்திற்கு Dr.K.S. JANAKARATHINAM MEMORIAL LIBRARY என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
          1) நூலகம் பரப்பளவு =  34,225 சதுர அடி ( கலைப் பிரிவு , அறிவியல் பிரிவு, கணிணிப் பிரிவு, பத்திரிக்கைகள் பிரிவு, ஆராய்ச்சிப் பிரிவு,சிவில் சர்வீஸ் , டி.என்.பி.எஸ்.சி., யூ.பி.எஸ்.சி. போன்ற போட்டித் தேர்வுகளுக்குத் தயார்படுத்திக்கொள்ள என்றே தனிப் பிரிவு ,பழைய கேள்வித்தாள்கள் சேகரிக்கப்பட்ட பிரிவு,பழைய பத்திரிக்கைகள்+ சஞ்சிகைகள் சேகரிக்கப்பட்ட பிரிவு ,முனைவர் பட்டம் பெற்ற மாணவர்கள்  சமர்ப்பித்துள்ள ஆராய்ச்சிக் கட்டுரைகள் சேகரித்து வைத்துள்ள பிரிவு 

           என (256 பீரோக்கள்) ஏழு அறைகளில்  பாதுகாக்கப்பட்டு வருவதும், தேவைப்படும் மாணவர்களுக்கு உடனடியாக எடுத்துக் கொடுப்பதும் இக் கல்லூரியின் தனிச் சிறப்பு ஆகும்.)
   
        2)  இக் கல்லூரி மாணவர்களால் உருவாக்கப்பட்ட  மென்பொருள் -நூலகம் எனப் பெயரிடப்பட்டு அதன்( NOOLAGAM-SOFTWARE )மூலம் இந்த நூலகத்தின் அனைத்துக் கணினிகளும் செயல்படுகின்றன. மற்றும்


      3)  அ) கையகப்படுத்துதல் -(Acquisition )
  ஆ)தகவல் சேகரிப்பு _ (Data base )
   இ) புத்தகங்களை சுழற்சி முறையில் வழங்கல் -( Circulation)
   ஈ) தேடல் - (Book Search)
  என நான்கு வகைகளில் ( Management )நிர்வகிக்கப்படுகிறது
        4)  மாணவர்களுக்கு புத்தகம் கொடுக்க மற்றும் திருப்பி வாங்க -  குறியீடு படிப்பி  என்னும் பார்கோடு (Bar coding System) முறையில்செயல்படுகிறது.
      5) இருக்கைகள்  அளவு = 700  (மாணவர்கள் அமர்ந்து படிக்க) எண்ணிக்கை (READING ROOM SEATING CAPACITY = 700 )
       6)வேலை நேரம் =  காலை 09.00மணி  முதல் மாலை 06.00மணிவரை
           (எந்நேரமும் நூலகத்தைப் பயன்படுத்த அனுமதி உண்டு )
        7)இருப்பில் உள்ள புத்தகங்கள் எண்ணிக்கை =  56,624  புத்தகங்கள் ஆகும்.  Number of Volumes = 45,681  இவை தவிர
         8)  ஒவ்வொரு துறைகளிலும் புத்தகங்கள் தனித்தனியாக ஆயிரக் கணக்கில் உள்ளன.
        9) REFERANCE SECTION - ல் விலை உயர்ந்த மற்றும் அரியவகை புத்தகங்கள் 4,000 எண்ணிக்கையில் உள்ளன.
       10)  பத்திரிக்கைகள்,சஞ்சிகைகள் ,செய்திக்குறிப்புகள்-   நடப்புகள் SHELF-ன் முன்பகுதியில் காணத்தக்கவகையிலும், பழையவைகள் SHELF-ன் உள்பகுதியில்(Trolley) இலகுவாக  எடுக்கும் வகையிலும்  அலமாரிகள்  (DISPLAY- RACK's ) -கள் அமைக்கப்பட்டுள்ளன.
         11)     மற்றும் BLIS  ;  MLIS மாணவர்களுக்கான செய்முறை வகுப்புக்குப் பயன்படும் அரியவகை கேட்லாக் புத்தகமும் (மதிப்பு ரூபாய்  =  35,000- 00) உள்ளது.   
       12)     நூலகத்தினை அதிகமாகப் பயன்படுத்தும் மாணவர்களில் ஒவ்வொரு வருடமும் இளங்கலை மாணவர்கள் பத்து நபர்கள் மற்றும் முதுகலை மாணவர்கள் பத்து நபர்கள் வீதம் தேர்வு செய்து அவர்களுக்கு சிறப்பாக நூலகத்தைப் பயன்படுத்தியமைக்கான சிறப்பு விருது ( BEST USER AWARD ) வழங்கப்படுகிறது.
  
       13)   நூலகத் துறை சார்பாக  04-09-2009-ல் " CHANGE MANAGEMENT IN LIBRARY AND INFORMATION SERVICES " -என்னும் தலைப்பில் மாநில அளவிலான ஆராய்ச்சி மாநாடு மற்றும் 
      23-ந்தேதி மற்றும் 24-09 -2010 -ல் "INFORMATION AND COMMUNICATION TECHNOLOGY ( I.C.T ) IN LIBRARY SERVICE ; A GLOBAL SCENARIO " - என்னும் தலைப்பில் தேசிய அளவிலானஆராய்ச்சி மாநாடுஆக இரண்டு மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன. 


   .சென்னை,பெங்களூரு,மைசூரு,திருச்சி,கோவை,கரூர்,ஈரோடு,நாமக்கல்  உட்பட பல்வேறு ஊர்களிலிருந்தும் நூற்றுக்கணக்கான நூலகங்கள் , உதவி நூலகங்கள்,மாணவர்கள் கலந்து கொண்டு ஆராய்ச்சிக் கட்டுரைத் தொகுப்புகளைத் தாக்கல் செய்து  பல்வேறு அமர்வுகளாக மாநாடு (SEMINAR )நடத்தப்பட்டுள்ளன. 


  14) அதேபோல் 31 -01 2009 - ல் " MODERN LIBRARY MANAGEMENT " என்னும் தலைப்பில் மாநில அளவிலான SYMPOSIUM ( நூலகத்தைப் பற்றி பல நூலகர்கள் ; மாணவர்களால்  எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு ) -நடத்தப்பட்டுள்ளது.
                 
    
    15)   இந்த நூலகம் பற்றி MLIS மாணவர்கள் இருவர் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதி உள்ளனர்.
    
      5) நூலக அலுவலர்கள் விபரம்;
       
        நூலகப் பொறுப்பாளர் =  ஒருவர்
        உதவி நூலகர்கள்  =  மூன்று நபர்கள்
       நூலக உதவியாளர் = ஒருவர்
      கணினியியலர் =  ஒருவர்
      எழுத்தர்                 =  ஒருவர்
      துப்புரவாளர்  =  ஒருவர்
  




7) புத்தக இருப்பு 15-07-2011-ன் நிலவரப்படி
    1) பொது மேலாண்மைத் துறை =9435 புத்தகங்கள்,
    2) கணினி அறிவியல் துறை      = 9318 புத்தகங்கள்,
    3) பொருளாதாரம் துறை             =  6693 புத்தகங்கள்,
     4)ஆங்கிலம் துறை                        =  5059 புத்தகங்கள்,
    5)  இயற்பியல் துறை                    =  4458 புத்தகங்கள்,
   6) கணிதம் துறை                             =  4310 புத்தகங்கள்,
   7) வேதியியல் துறை                      =2445 புத்தகங்கள்,
   8) தாவரவியல் துறை                  = 2184 புத்தகங்கள்,
   9) வரலாறு துறை                           = 1804 புத்தகங்கள்,
  10)  தமிழ்த் துறை                             = 1967 புத்தகங்கள்,
  11)  அரசியல் துறை                        = 1069 புத்தகங்கள்,
  12) உளவியல் துறை                     =0 911 புத்தகங்கள்,
 13) விலங்கியல் துறை                 =0899 புத்தகங்கள்.












என 56,624 புத்தகங்கள்  நூலகத்தில் மட்டும் உள்ளன.
இவை தவிர புத்தக வங்கி என்று தனிப் பிரிவு ஒன்று உள்ளது.இந்த புத்தக வங்கியில் உள்ள புத்தகங்கள் நன்கு படிக்கும் மாணவ,மாணவியருக்கும் மற்றும் ஏழ்மையில் உள்ளவர்களுக்கும் ஆண்டு முழுவதும் வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. மற்ற மாணவர்களுக்கு பதினைந்து நாட்கள் காலக்கெடு வைத்து அனுமதிக்கப்படுகிறது.
  




  முக்கியமாக சி.டி. நூலகமும் 2300 சி.டி. களுடன் சோதனைக்கான கணினியுடன் உள்ளது. இதில் NATIONAL GEOGRAPHIC-சி.டி.கள்  1888-ம் ஆண்டு முதல் வைத்து மாணவர் நலனுக்காகப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது.
  
     பொது அறிவுக்கான புத்தகங்கள் GENERAL STUDIES, MANORAMA YEAR BOOK -1970-ம் ஆண்டு முதல் இன்று வரையிலான புத்தகங்கள், மற்றும் BANKING, UPSC, TNPSC, MAT, SAT, SLET, NET, GATE, GMAT, TOFEL, MBA, MCA,  போன்ற போட்டித் தேர்வுக்கான புத்தகங்களும் அதிக அளவில் உள்ளன.

    


        தினசரிப் பத்திரிக்கைகள் (Journals),
      வார,இருவார,மாத,வருடப் பத்திரிக்கைகள்  (Magazines),
      செய்திக் குறிப்புகள் (Bulletin), ஆகியன 
     பன்னிரண்டு துறைகளுக்கும் சேர்ந்து  
     தேசிய அளவில்(National) = 130 பத்திரிக்கைகளும்,
    சர்வதேச அளவில் (International) = 13 பத்திரிக்கைகளும் இந்த நூலகத்திற்கு தருவிக்கப்பட்டு வழங்கப்படுவதுடன் , 
   1968-ம் ஆண்டு முதல் இன்று வரை சிறப்பான முறையில் கட்டு இடப்பட்டு (Binding) பாதுகாக்கப்பட்டு வருவது  
   இக் கல்லூரி நூலகத்தின் தனிச் சிறப்பு ஆகும்.
  
      LIBRARY NET WORKING  ; FUNCTIONING WITH 33 SYSTEMS = 1:1                                                                  1MB / SECOND


   
    






























புத்தகங்கள் தேடுவதற்கென்றே Searching Division-ல் ஆறு கணினிகள் இயக்கத்தில் உள்ளன.இங்கு    TO DAY 's Arrival என உள்ள  Searching Terminal -ல்  BOOK- Search / CD - Search / Book User List / Project Search பல பிரிவுகள் தேடும் பணிகளைச் செய்கின்றன. 
   BOOK SEARCH - பிரிவில் Book Title / Auther Name / Publisher Name / Subject code / Sub Title / Total Details -இவ்வாறு
         1)  எந்தத் துறை சார்ந்த புத்தகமாக இருந்தாலும்,
        2)   எந்த ஆசிரியர் எழுதியதாக இருந்தாலும்,
        3) எந்த பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டிருந்தாலும்,
        4) சர்வதேச அளவில் எழுதியதாக இருந்தாலும் ,
        5) தேடப்பட்ட குறிப்பிட்ட புத்தகம் எந்த அறையில் ,
            எந்த அலமாரியில் உள்ளது, 
          எந்த வரிசையில் உள்ளது, 
           எந்த இடத்தில்  உள்ளது,
           எத்தனையாவது எண்ணிக்கையில் உள்ளது . அல்லது
           எந்த மாணவரிடத்தில்,
          எடுத்துச் சென்ற தேதி மற்றும்
          திருப்பிக் கொடுக்கும் தேதி பற்றிய விபரம் நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ளும் விதத்தில்-
      ON LINE PUBLIC ACCESS CATALOGUE                         என்னும்  OPAC - SYSTEM      மிக நன்று!








     உதாரணமாக 
        ஜாவா பற்றிய புத்தகம் மட்டும் எத்தனை உள்ளன? என்று தெரிந்து கொள்ளலாம்.
   அல்லது பால குமாரன் ஆசிரியர் எழுதிய ஜாவா பற்றிய புத்தகம் எத்தனை உள்ளன?.என்று தெரிந்து கொள்ளலாம்.
        அல்லது பாலகுமாரன் ஆசிரியர் எழுதிய புத்தகங்கள் எத்தனை உள்ளன?.
     என்ற விபரங்கள் எல்லாம் நொடிப்பொழுதில் அறிந்து கொள்ளலாம். 
    இது போன்ற அனைத்து துறைகளின் புத்தகங்களின் நிலை பற்றிய விபரங்கள் எளிதாகத் தெரிந்து கொள்ளலாம்.






  


       புத்தகம் பைண்டிங் செய்யும் இந்த இயந்திரத்தின் மூலம் பழுதாகும் புத்தகங்களை உடனுக்குடன் சரி செய்து அலமாரியில் உரிய இடத்தில் ஒழுங்காக அடுக்கிவிடுவதால்  புத்தகம் தேடும் மாணவர்களுக்கு எவ்வித சிரமும் இல்லாமல் பயன்படுத்த முடிகிறது.அதற்காகவே  கல்லூரி நிர்வாகத்திற்கு   நன்றி சொல்ல வேண்டும்.


        கடந்த பதினைந்து ஆண்டுகளாக நடந்த SEMESTER தேர்வுகளின் அனைத்து துறைகளின் கேள்வித்தாள்கள் சேகரிக்கப்பட்டு BINDING செய்யப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
       தொல் பொருள் அருங்காட்சியகமும் உள்ளது.
       மருத்துவம் (medical) மற்றும் பொறியியல் (engineering)  சார்ந்த புத்தகங்களும் அதிக அளவில் வைக்கப்பட்டு உள்ளன.மருத்துவத் தாவரங்கள் பற்றிய புத்தகங்களும் உள்ளன.
paramesdriver.blogspot.com // Sathy&Thalavadi
     

Thursday, July 14, 2011

25)அனைவருக்கும் கல்வி இயக்கம்.

       

அன்பு நண்பர்களே,
      paramesdriver.blogspot.com வலைப்பதிவிற்கு தங்களை வணங்கி வரவேற்கிறேன்.

      பெண் குழந்தைகளுக்கான இலவசக் கல்வி
      KGPV-உண்டு உறைவிடப் பள்ளி  ( பெண் குழந்தைகள் மட்டும் )
      தொட்ட காஜனூர் - தாளவாடி ( டிவைன் வித்யாலயா மெட்ரிக் பள்ளி அருகில்) -சத்தியமங்கலம் வட்டம் - ஈரோடு மாவட்டம்.



                
           அனைவருக்கும் கல்வி இயக்கம்-ஈரோடு மாவட்டம் சார்பாக அனைவரும் கல்வி கற்க வேண்டும்.குறிப்பாக பெண்கள் அனைவரும் கல்வி கற்க வேண்டும் .அனைவரும் முன்னேற்றம் அடைய வேண்டும். என்ற சீரிய நோக்கில்,

       பள்ளி செல்லா இடைநின்ற 10வயது முதல் 14 வயது வரை உள்ள  பெண்குழந்தைகளுக்கான இலவசக் கல்வி

          K.G.P.V. அதாவது ''கஸ்தூரிபா காந்தி பால்யா வித்யாலயா'' உண்டு       உறைவிடப் பள்ளி.

      தாளவாடியில்  இந்த வருடம் ஆரம்பிக்கப் பட்டு மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

       இந்தப் பள்ளியில் சாதி,மதம் ,இனம்,மொழி வேறுபாடின்றி ஒன்றாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரை இடையில் நின்ற பெண்குழந்தைகளுக்கு         


        பட்டப்படிப்புடன் கல்வியியல் படிப்பு முடித்த அனுபவமிக்க பெண் ஆசிரியைகளால் கீழ்கண்டவாறு கற்பிக்கப்படுகின்றன.
 
      1) கல்வி

      2)கம்ப்யூட்டர்

      3)கைத்தொழில்

      4)இசை

     5)கராத்தே

       6)யோகா

     7)நடனம்,  ஆகியன

      இலவசமாகக் கற்றுக்கொடுக்கப் படுகின்றன.

     8) இப்பள்ளியில் சேரும் மாணவியர் ஒவ்வொருவருக்கும் மாதாமாதம் அஞ்சலக சேமிப்பில்  (ரூ;50/-) ரூபாய் ஐம்பது வீதம் சேமிப்பாகப் போடப்படுகிறது.

    9)இலவச இன்சூரன்ஸ் செய்யப்படுகிறது.
   
     10)மாதந்தோறும் பெண் டாக்டர்( M.D.) அவர்களைக் கொண்டு  இலவச மருத்துவப் பரிசோதனையும் அனைத்து பெண்குழந்தைகளுக்கும் செய்யப்படுகிறது.

     11) இலவசச்சீருடைகள் மற்றும் காலணிகள் வழங்கப்படுகின்றன.

      12)தங்கும் இடம்(பள்ளி) பாதுகாப்பானது.
     
       13) சாப்பாடு சன்ன ரக அரிசி மற்றும் சத்துள்ள காய்கறிகள்,கீரைகள்,முட்டை , ஹார்லிக்ஸ்,பூஸ்ட், பட்டாணி, சுண்டல்,என சத்துள்ள உணவுகளாக வழங்கப்படுகின்றன.

      இவையனைத்தும் பத்து வயது முதல் பதினான்கு வயதுக்குட்பட்ட ஒன்று முதல் ஏழாம் வகுப்புவரை படிக்க இயலாமல் இடையில் நின்ற பெண்குழந்தைகளுக்கு மட்டும்.

       இந்தப் பள்ளி மத்திய மற்றும் மாநில அரசின் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் நிதியில் இலவசமாகக் கற்பிக்கப்படுகின்றன.

      படிக்க இயலாமல் தவறவிட்ட பெண்குழந்தைகள் இவ் வாய்ப்பினை நழுவ விடாதீர்.இந்த வாய்ப்பினை அனைவரும் அறியச் செய்வீர்.

      paramesdriver.blogspot.com // Sathy & Thalavadi

Friday, June 17, 2011

(24)ஈரோடு மாவட்ட ஆட்சியர்- சமூகப் பணி

             மாவட்ட ஆட்சியரின் சமூக நற்பணி

        அன்பு நண்பர்களே.
          paramesdriver.blogspot.com வலைப்பதிவிற்கு தங்களை வணங்கி வரவேற்கிறேன்.
             நமது மாவட்டமாம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அவர்கள் அரசுப் பள்ளிகளின் தரம்   தனியார் பள்ளிகளின் பள்ளிகளின் தரத்தை விட எவ்விதத்திலும் குறைந்துவிட வில்லை என்ற நிரூபணத்திற்காகவே

      (தனியார் பள்ளிகளில் தகுதிக்கும் மீறி அலைந்து திரிந்து கடன் வாங்கி வீண்  செலவு செய்யும் நம் போன்ற நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பத்தினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே என்று கூடக்கருதலாம்)
    
               தமது குழந்தையை ஈரோடு குமலன் குட்டை ஊராட்சி ஒன்றியதொடக்கப்       பள்ளியில் சேர்த்து! அரசுப்பள்ளிகளின் ஆசிரியர்களின் சேவைக்கு புதுமையான நற்சான்று வழங்கி இமாலயச் சாதனை புரிந்துவிட்டார்.
          அதற்காக மரியாதைக்குரிய ஈரோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் அய்யா அவர்களின் துணைவியார் மருத்துவர் அவர்களுக்கும்

                  ஈரோடு மாவட்ட பொதுமக்கள் சார்பாகவும்,

                           கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி பெற்றோர் சங்கத்தின் சார்பாகவும்,

                   தேனீக்கள் சமூக சேவை அமைப்பின்(தாளவாடி & சத்தியமங்கலம்) சார்பாகவும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
              
          அய்யா அவர்களது இந்த மகத்தான சேவையானது அனைத்து தரப்பு மக்களுக்கும் முன்னுதாரணமாக அமைந்துள்ளது மட்டுமின்றி

                  அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கும்,கல்வி அதிகாரிகளுக்கும் அவர்கள் பணி சிறப்பாகத் தொடர ஊக்க மருந்தாக அமைந்துள்ளது எனலாம்.
          
                    இலவசம் என்றாலே  அதன் சிறப்புகள் மற்றும் முக்கியத்துவம் பற்றி சிந்திக்காமல் ஏளனம் செய்பவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளது எனலாம்.
                        இதே முறையை சமூதாய உணர்வுள்ள அனைத்து அரசு அதிகாரிகளும் பின்பற்ற வேண்டும்.
                
               அனைத்துப்பகுதிகளிலும் பணியாற்றும் குறிப்பாக கிராமப்பகுதி மற்றும் மலைப்பகுதிகளில் பணி புரியும் அரசுப் பள்ளி ஆசிரியர்களும் கடமை உணர்ந்து
          ''ஆசிரியர் பணி அறப்பணி; அதற்கே உன்னை அர்ப்பணி'' 
  
          என்ற கூற்றுக்கேற்ப கடமை உணர்ந்து சமூக முன்னேற்றத்திற்காகப் பாடுபட வேண்டும், என்பதே அனைவரின் எதிர்பார்ப்பார்ப்பாகும்.
                
                   மரியாதைக்குரிய ஆட்சியர் அவர்கள் இன்னும் ஒருபடி மேலே சென்று தம் மகளுக்கு மதிய உணவும், இலவச சீருடையும் வழங்குமாறு பள்ளி  தலைமை ஆசிரியரிடம் விண்ணப்பித்திருக்கும்! அவரது சமூகப் பார்வை

              ''பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'' 

                 என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாய்மொழிக்கு ஏற்ப சாதி,மத,இன வேறுபாடின்றி அனைவரும் மனிதகுலமே, என இந்த சமூகத்திற்கே வழிகாட்டிவிட்டார்.

                அதைவிட முக்கியமாக ஆட்சிப்பணி புரியும் அய்யா அவர்களும், அரசு மருத்துவ மனையில் மருத்துவப் பணி புரியும் அவரது துணைவியார் அவர்களும் படித்த சிறந்த பண்பாளர்கள் என்பதனையும்,அவர்களது முற்போக்கான சிந்தனைக்கேற்ப சமூகப்பணி சிறப்பாகச் செய்பவர்கள் என்பதனையும் இதன் மூலம் அனைவரும்உணரச் செய்து விட்டனர்.

                               அனைத்து தரப்பு அரசு துறை அதிகாரிகளும், அலுவலர்களும், ,பணியாளர்களும் அவரவர் பணிக்கேற்ப கடமையுணர்ந்து தம்மால் இயன்றவரை சமூகப் பணி சிறப்பாக ஆற்ற வேண்டும்.

            (குறைந்தது வறுமையில் வாடும் ஏழை மக்களிடம் கையூட்டுப் பெறுவதையாவது தவிர்த்து 
         அவர்கள் வரிப்பணத்தில்தான்  கை நிறையச் சம்பளமாகப் பெறுகிறோம் என்பதனை உணர்ந்தாவது 
            தம் கடமையைச் செய்ய வேண்டும்)

               ஈரோடு மாவட்ட  ஆட்சியர் மரியாதைக்குரிய ஆனந்தக்குமார் அவர்களைப் போல அனைவரின் எண்ணங்களும், செயல்களும் அமையுமேயானால்
             
               நமது நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் மரியாதைக்குரிய    டாக்டர்;அப்துல் கலாம் அவர்களின் ''வல்லரசுநாடு'' எனும்  இந்தியாவின் கனவு நனவாகும் தூரம் மிக தொலைவில் இல்லை எனலாம்.
                   
                        வெற்றியும் பெறலாம்.
                 
           சமூக சீர்திருத்தவாதி தந்தை  பெரியார் பிறந்த மண்ணுக்கு மேலும் பெருமை சேர்த்த நமது ஆட்சித்தலைவர் அவர்களுக்கு மீண்டும் மீண்டும் வாழ்த்துகிறோம்,வணங்குகிறோம்..என....
  
                 parameswaran.c
   Driver / Tamilnadu Transport Corporation / Thalavadi-Branch / Erode - Division

Monday, June 13, 2011

(23)GOBI ARTS & SCIENCE COLLEGE -counselling

அன்பு நண்பர்களே,வணக்கம்.
                நம்ம ஊர்க் கல்லூரியாம் கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 
            பொறியியல் கல்லூரிகளைப் போல,மருத்துவக் கல்லூரிகளைப் போல கலந்தாய்வு முறையில்
             தமிழகத்திலேயே முதல் முறையாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கலந்தாய்வு மூலம் நேரடிச்சேர்க்கை முறை ஆரம்பிக்கப்பட்டு அதனடிப்படையில் இந்த ஆண்டும் (COUNSELLING)  எனப்படும் கலந்தாய்வு முறையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது.
      பி.எஸ்.சி.கணிதம்.,இயற்பியல்.,வேதியியல்.,தாவரவியல்.,கணிப்பொறியியல்.,ஆகிய பாடப்பிரிவுகளுக்கு 28-05-2011 சனிக்கிழமையும்  ,                                                                 பி.ஏ.பொருளாதாரம்.,வணிகவியல் மேலாண்மைத்துறை பாடப்பிரிவுகளுக்கு 29-05-2011 ஞாயிற்றுக்கிழமையும் நடைபெற்ற நேரடிச் சேர்க்கைக்கான கலந்தாய்வில் ஏராளமான மாணவ,மாணவியர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
                 Parameswaran.c /      Honey Bees Social Organization  /  Thalavadi &Sathy

(22) பழங்குடி மக்கள்

                                பழங்குடி மக்கள்
       
அன்பு நண்பர்களே,வணக்கம்.  பாரம்பரியத்திற்கும்,வரலாற்றிற்கும்,பண்பாட்டிற்கும் உலகத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்குவது இந்திய தேசம்.
                பல்வேறு இனத்தைச் சார்ந்த மக்கள் பலவகையான பண்பாடு,கலாச்சாரக்கூறுகளைக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
               அவர்களில் பழங்குடி இன மக்களும் அவர்களுக்கே உரிய தனித்துவமான கலாச்சாரம்,அடையாளம்,மொழி,இயற்கையோடு இணைந்த பழக்க வழக்கங்கள் ஆகியவற்றைப் பாரம்பரியமாகப் பின்பற்றி வாழ்ந்து வந்துள்ளனர். இன்றைய சூழலில்

(21)GOBI ARTS & SCIENCE COLLEGE- GOBI CHETTI PALAYAM.

                               தமிழகத்திலேயே முதல் கல்லூரி
                                          மற்றும் சிறந்த கல்லூரி
                                ====================================

        அன்பு நண்பர்களே, வணக்கம்.

                       நம்ம ஊர் கல்லூரியாம் கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று (13-06-2011) முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அறிமுக வகுப்பு நடைபெற்றது.
                  காலை 08-00 மணி முதலே மாணவ,மாணவியர்கள் அவரவர் பெற்றோருடன் வருகை தர கல்லூரி வளாகம் சுமார் இரண்டாயிரம் பேருடன்  திருவிழாக் கோலம் பூண்டிருந்தது.
                அனைவரும்K.M.R.MAHAL-ல் குழுமியிருக்க  காலை 10-00மணிக்கு மரியாதைக்குரிய தலைவர்P.கருப்பணன்.B.A.B.L. அவர்கள் முதலாக வாழ்த்துரை வழங்கினார்கள்.
     அய்யா அவர்களது வாழ்த்துரையில் மாணவ,மாணவியர் அனைவரும் பல்வேறு ஊர்களிலிருந்தும்,பல்வேறு பள்ளிகளிலிருந்தும் வருகை தந்துள்ளீர்கள்.
          இக்கல்லூரி மற்ற கல்லூரிகளை விட மாறுபட்ட கல்லூரி.
         கோபி வட்டாரத்தில் உள்ள கிராமப்பகுதி மாணவருக்காக 11-07-1967- ல் ஆரம்பிக்கப்பட்டு  பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு சோதனைகளை எல்லாம் சாதனைகளாக்கி பல வளர்ச்சிகளைக் கண்டு இன்று சிறந்த கல்லூரியாக உருவாகி உள்ளது.
          இங்கு முதலில் ஒழுக்கம் அடுத்ததே கல்வி என கடைப்பிடிக்கப்படுகிறது.             
              முதலில் பெற்றோருக்கு மதிப்புக்கொடுங்கள். அடுத்து பெரியோர்களுக்கும்,ஆசிரியப் பெருமக்களையும் மதித்து நடந்தால் அதுவே கல்வியில் பாதி நிலை தாண்டியமைக்கு சமம்.                                        
          எனவே அனைவரும் நம்ம கிராமச் சூழலுக்கேற்றவாறு ஒழுக்கத்துடன் கல்வியையும் கற்று நீங்களும் முன்னேற வேண்டும், இந்த சமூகத்திற்கும் நல்ல பணியாற்ற வேண்டும்.  என்று உரையாற்றினார்.

          அடுத்து மரியாதைக்குரிய செயலர் மற்றும் தாளாளர் K.M..நடராஜன்.B.A.B.L.,.அவர்கள் தமது வாழ்த்துரையில்      
            கிராமப்பகுதியிலிருந்து வருகை தந்துள்ள அனைத்து மாணவச் செல்வங்கள் மற்றும் அவர்தம் பெற்றோர்கள் அனைவருக்கும் முதல் வணக்கம்.
             இக்கல்லூரி 46 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மிகச்சிறப்பான கல்லூரி
          .கிராமப்பகுதியைச் சார்ந்த ஏழைக் குடும்பத்தைச் சார்ந்த மாணவ,மாணவியரும் உயர் கல்வி பெற்று முன்னேற்றமடையும் பொருட்டு             கடந்த 43 ஆண்டுகளாக மிகக்குறைவான கட்டணத்தில் சிறப்பான உயர் கல்வியினை இங்குள்ள பேராசிரியப் பெருமக்கள் அன்புடனும் அதே சமயத்தில் நட்புடனும் ஒழுக்கம் நிறைந்த கல்வியினைக் கற்றுக் கொடுக்கின்றனர்.

          இந்த அரிய வாய்ப்பினை அனைத்து மாணவ,மாணவியரும் பயன்படுத்திக் கொண்டு தமது வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பதோடு இந்த நாட்டின் முன்னேற்றத்திற்கும் சமூக சேவை அக்கறையோடு பாடுபட வேண்டும்.
          இக்கல்லூரியில் குற்றம் குறை இருந்தால் பெற்றோர்களாகிய நீங்கள் அவசியம் எங்களிடமோ அல்லது முதல்வரிடமோ இக்கல்லூரி சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருப்பினும் அவர்களிடம் சொல்லுங்கள்.
         கண்டிப்பாக குறைகள் களைந்தெறிய எந்நேரமும் இந்தக் கல்லூரி நிர்வாகம் தயாராக உள்ளது. என்று உரையாற்றினார்.

          அடுத்து உரையாற்றிய மரியாதைக்குரிய முதல்வர் DR.R..செல்லப்பன்.M.B.A.,M.COM.,M.PHIL.,D.L.L.P.hD,அவர்கள் தமது உரையில்   
           1987-ல் தன்னாட்சி அனுமதி பெற்ற இக்கல்லூரியில் நடத்தப்படும் அனைத்து தேர்வுத்தாள்களையும் பிற மாவட்டங்களைச் சார்ந்த கல்லூரிப் பேராசிரியர்கள்தான் திருத்துவார்கள்.
          இன்னும் பல கட்டுப்பாடுகளைக் கொண்டது இக்கல்லூரி.
           எனவே இங்கு முறைப்படி அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு சரியாக நடைபெற்று வருகிறது.
           கடந்த ஆண்டு சிறந்த கல்லூரிக்கான முதல்வர் விருது எனக்குக்கொடுத்து கௌரவித்தது கல்வி மற்றும் மேலாண்மைக்கான பன்னாட்டு நிறுவனம்.

         அந்த விருது இங்கு சிறந்த முறையில் பணியாற்றிய அனைத்து பேராசிரியர்களின் ஒத்துழைப்பாலும் பிற அலுவலகப் பணியாளர்கள் மற்றும் இங்கு கல்வி கற்கும் அனைத்து மாணவச்செல்வங்களின் ஒத்துழைப்பாலும்தான் கிடைத்தது.

          எனவே, அவ்விருதினை இக்கல்லூரிக்கே ஒப்படைக்கிறேன் என்றார்.
        பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளுக்கு நடைபெறுவதைப் போல்
       கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இங்கு மட்டுமே கலந்தாய்வு  முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்
        .மேலும் இக்கல்லூரியில் மின் வெட்டு என்பதே கிடையாது என்ற வகையில் ஜெனரேட்டர் இயக்கப்படுகிறது.எனவே கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற பாடங்களுக்கு  மின் வெட்டுப் பிரச்சினையே கிடையாது.என்றார்.
            இங்கு உள் கட்டமைப்பு வசதிகள் மிகச் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளன.
         உணவு விடுதி  ஒரே சமயத்தில் 250 பேர் அமர்ந்து உணவருந்தும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
        தரமான சுகாதாரமான உணவு குறைந்த விலையில் தரப்படுகிறது.கிராமச் சூழலுக்கேற்றவாறு கலாச்சார சீர்கேடு ஏற்படாவண்ணம் ஒழுக்கத்திற்கும்,பண்பாட்டிற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
         எனவே உடை அணிவதில் மிகவும் கட்டுப்பாடு கடைப்பிடிக்கப்படுகிறது.
         ஆண்கள் பேண்ட் மற்றும் சர்ட் மட்டுமே நாகரிகமாக அணிந்து வர வேண்டும்.
        பெண்கள் சுடிதார்-துப்பட்டா அல்லது சேலை அல்லது பாவாடை தாவணி மட்டுமே அணிந்து வர வேண்டும் . என்றார்.
       எக்காரணம் கொண்டும் மொபைல் போன் அனுமதி இக்கல்லூரி வளாகத்தினுள் இல்லை
         ,மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
      இதற்கு பெற்றோர்களாகிய நீங்கள் முழு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும் என்றார்.
        இக்கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவ,மாணவியரின் வருகைப்பதிவேடு, தேர்வு மதிப்பெண் விபரம் அன்றாடம் பெற்றோர்களின் மொபைல் போன் நெம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
      எனவே முடிந்தவரை ஒரே எண்ணைப் பயன்படுத்துங்கள்,அல்லது மாற்றப்பட்ட எண்ணை அவ்வப்போது கல்லூரிக்கு பெற்றோர்களாகிய நீங்கள் நேரடியாகத் தெரியப்படுத்துங்கள்,
     மேலும் அடிக்கடி கல்லூரிக்கு வருகை தந்து மாணவர்களின் செயல்பாடுகளைக் கேட்டறிந்தும் , இக்கல்லூரி செயல்பாடுகளைக் கேட்டறிந்தும் குறைகள் இருந்தால் தெரியப்படுத்தி நிர்வாகம் செம்மைபட உதவுங்கள் என்றார்.
                   பெற்றோர்கள் சாதி,மத வேறுபாடின்றி தாழ்வு மனப்பான்மை கொள்ளாமல் அடிக்கடி உரிமையோடு முதல்வரிடம் அணுகி மாணவர்களின் முன்னேற்றம் குறித்து விபரம் அறிந்து கொள்ளலாம். அதற்காக தாம் எப்போதும் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
             வன்பகடி எனப்படும் ராக்கிங்  இக்கல்லூரியில் நடைபெறுவதுமுழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
            எனவே முதலாம் ஆண்டு மாணவர்கள் எவ்வித பயமும் இன்றி நடமாடலாம் என்றும் மீறி யாராவது உடலையோ,மனதையோ சிறிதளவும் புண்படும்படி நடந்து கொள்வதாக உணர்ந்தால்
        உடனடியாக ஆங்காங்கு வைக்கப்பட்டுள்ள புகார்ப்பெட்டிகளில் அல்லது முதல்வர் அல்லது கல்லூரி பேராசிரியர்கள் அல்லது காவல்துறை அல்லது பெற்றோர் சங்க நிர்வாகிகள் என ஆங்காங்கு ஒட்ட வைத்துள்ள நோட்டீஸ்களில் கண்டுள்ள நபர்களின் மொபைல் எண்களுக்குத் தொடர்பு கொண்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
          அதேபோல் அரசுப் பேருந்துகளுக்கு இலவசப் பயண அட்டை கல்லூரி வளாகத்தினுள்ளேயே பெற்றுத்தரப்படுவதாலும்
         அனைத்துப் பேருந்துகளும் கல்லூரிக்குள்ளேயே வந்து செல்வதாலும் அனைவரும் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு
              இரு சக்கர வாகனப் பயணத்தினை முற்றாகத் தவிர்த்து படிப்பில் நன்கு ஈடுபாடு காட்டவேண்டும் என்றார்.
            அதேபோல் பேருந்தில் படிக்கட்டுப் பயணத்தினை முழுமையாகத் தவிர்த்து பாதுகாப்பான பயணத்தினை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
           இங்குள்ள நூலகம் மற்ற கல்லூரிகளை விட மிகச்சிறந்த முறையில் மிக அதிக எண்ணிக்கையில் புத்தகங்களும், அன்றாட உலக நடப்புகளை அறிந்து கொள்ளவும் ,பொது அறிவினை வளர்க்கும் விதமாக நூலகத்திற்கு அனைத்து தினசரி செய்தித்தாள்கள் மற்றும் வாராந்திர, மாதாந்திர  பத்திரிக்கைகள் வாங்கப்பட்டு வருகின்றன.
              அதேபோல கடந்த ஆண்டுகளின் அனைத்து பத்திரிக்கைகளும் பாதுகாக்கப்பட்டு வருவதால் கடந்த கால செய்திகளை உடனடியாகப் பெற்றுக்கொள்ளவும் முடியும்.
           வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக் கொள்வது மாணவர்களுடைய பொறுப்பாகும்.என்றார்.
             உதவித்தொகை அரசு,மற்றும் கல்லூரி நிர்வாகம் மற்றும் பெற்றோர் சங்கம் மற்றும் முன்னாள் மாணவர் சங்கம் என பல தரப்பு களிலிருந்து  250க்கும் அதிகமான மாணவர்களுக்கு இலவசக் கல்வி வருடா வருடம் வழங்கப் பட்டு வருகிறது.
            எனவே அந்தச் சலுகையினையும் பெற மாணவர்கள் முயற்சி செய்து அதிக மதிப்பெண்கள் பெற்று பெற்றோர்களது நிதிச் சுமையினைக் குறைக்க வேண்டும் .என்றார்  ........        

         paramesdriver.blogspot.com