மாவட்ட ஆட்சியரின் சமூக நற்பணி
அன்பு நண்பர்களே.
paramesdriver.blogspot.com வலைப்பதிவிற்கு தங்களை வணங்கி வரவேற்கிறேன்.
நமது மாவட்டமாம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அவர்கள் அரசுப் பள்ளிகளின் தரம் தனியார் பள்ளிகளின் பள்ளிகளின் தரத்தை விட எவ்விதத்திலும் குறைந்துவிட வில்லை என்ற நிரூபணத்திற்காகவே
(தனியார் பள்ளிகளில் தகுதிக்கும் மீறி அலைந்து திரிந்து கடன் வாங்கி வீண் செலவு செய்யும் நம் போன்ற நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பத்தினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே என்று கூடக்கருதலாம்)
தமது குழந்தையை ஈரோடு குமலன் குட்டை ஊராட்சி ஒன்றியதொடக்கப் பள்ளியில் சேர்த்து! அரசுப்பள்ளிகளின் ஆசிரியர்களின் சேவைக்கு புதுமையான நற்சான்று வழங்கி இமாலயச் சாதனை புரிந்துவிட்டார்.
அதற்காக மரியாதைக்குரிய ஈரோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் அய்யா அவர்களின் துணைவியார் மருத்துவர் அவர்களுக்கும்
ஈரோடு மாவட்ட பொதுமக்கள் சார்பாகவும்,
கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி பெற்றோர் சங்கத்தின் சார்பாகவும்,
தேனீக்கள் சமூக சேவை அமைப்பின்(தாளவாடி & சத்தியமங்கலம்) சார்பாகவும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
அய்யா அவர்களது இந்த மகத்தான சேவையானது அனைத்து தரப்பு மக்களுக்கும் முன்னுதாரணமாக அமைந்துள்ளது மட்டுமின்றி
அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கும்,கல்வி அதிகாரிகளுக்கும் அவர்கள் பணி சிறப்பாகத் தொடர ஊக்க மருந்தாக அமைந்துள்ளது எனலாம்.
இலவசம் என்றாலே அதன் சிறப்புகள் மற்றும் முக்கியத்துவம் பற்றி சிந்திக்காமல் ஏளனம் செய்பவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளது எனலாம்.
இதே முறையை சமூதாய உணர்வுள்ள அனைத்து அரசு அதிகாரிகளும் பின்பற்ற வேண்டும்.
அனைத்துப்பகுதிகளிலும் பணியாற்றும் குறிப்பாக கிராமப்பகுதி மற்றும் மலைப்பகுதிகளில் பணி புரியும் அரசுப் பள்ளி ஆசிரியர்களும் கடமை உணர்ந்து
''ஆசிரியர் பணி அறப்பணி; அதற்கே உன்னை அர்ப்பணி''
என்ற கூற்றுக்கேற்ப கடமை உணர்ந்து சமூக முன்னேற்றத்திற்காகப் பாடுபட வேண்டும், என்பதே அனைவரின் எதிர்பார்ப்பார்ப்பாகும்.
மரியாதைக்குரிய ஆட்சியர் அவர்கள் இன்னும் ஒருபடி மேலே சென்று தம் மகளுக்கு மதிய உணவும், இலவச சீருடையும் வழங்குமாறு பள்ளி தலைமை ஆசிரியரிடம் விண்ணப்பித்திருக்கும்! அவரது சமூகப் பார்வை
''பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்''
என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாய்மொழிக்கு ஏற்ப சாதி,மத,இன வேறுபாடின்றி அனைவரும் மனிதகுலமே, என இந்த சமூகத்திற்கே வழிகாட்டிவிட்டார்.
அதைவிட முக்கியமாக ஆட்சிப்பணி புரியும் அய்யா அவர்களும், அரசு மருத்துவ மனையில் மருத்துவப் பணி புரியும் அவரது துணைவியார் அவர்களும் படித்த சிறந்த பண்பாளர்கள் என்பதனையும்,அவர்களது முற்போக்கான சிந்தனைக்கேற்ப சமூகப்பணி சிறப்பாகச் செய்பவர்கள் என்பதனையும் இதன் மூலம் அனைவரும்உணரச் செய்து விட்டனர்.
அனைத்து தரப்பு அரசு துறை அதிகாரிகளும், அலுவலர்களும், ,பணியாளர்களும் அவரவர் பணிக்கேற்ப கடமையுணர்ந்து தம்மால் இயன்றவரை சமூகப் பணி சிறப்பாக ஆற்ற வேண்டும்.
(குறைந்தது வறுமையில் வாடும் ஏழை மக்களிடம் கையூட்டுப் பெறுவதையாவது தவிர்த்து
அவர்கள் வரிப்பணத்தில்தான் கை நிறையச் சம்பளமாகப் பெறுகிறோம் என்பதனை உணர்ந்தாவது
தம் கடமையைச் செய்ய வேண்டும்)
ஈரோடு மாவட்ட ஆட்சியர் மரியாதைக்குரிய ஆனந்தக்குமார் அவர்களைப் போல அனைவரின் எண்ணங்களும், செயல்களும் அமையுமேயானால்
நமது நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் மரியாதைக்குரிய டாக்டர்;அப்துல் கலாம் அவர்களின் ''வல்லரசுநாடு'' எனும் இந்தியாவின் கனவு நனவாகும் தூரம் மிக தொலைவில் இல்லை எனலாம்.
வெற்றியும் பெறலாம்.
சமூக சீர்திருத்தவாதி தந்தை பெரியார் பிறந்த மண்ணுக்கு மேலும் பெருமை சேர்த்த நமது ஆட்சித்தலைவர் அவர்களுக்கு மீண்டும் மீண்டும் வாழ்த்துகிறோம்,வணங்குகிறோம்..என....
parameswaran.c
Driver / Tamilnadu Transport Corporation / Thalavadi-Branch / Erode - Division
No comments:
Post a Comment