மரியாதைக்குரியவர்களே,
வணக்கம். தமிழ் மொழியில் ஒரு சொல்லுக்கு துவக்கத்தில் வரும் எழுத்துக்களைப் பற்றிக் காண்போம்.
மொழி முதல் எழுத்துகள்
வணக்கம். தமிழ் மொழியில் ஒரு சொல்லுக்கு துவக்கத்தில் வரும் எழுத்துக்களைப் பற்றிக் காண்போம்.
மொழி முதல் எழுத்துகள்
ஒரு சொல்லுக்கு முதலில் வரும் எழுத்துகள் பற்றி இந்தப் பாடத்தில் காணலாம். சொல்லுக்கு முதலில் உயிர் எழுத்துகளோ
மெய் எழுத்துகளோ வரும். சொல் என்பதும், மொழி என்பதும்,
பதம் என்பதும் ஒரே பொருள் தரும் சொற்கள் ஆகும். முதலில்
சொல்லுக்கு முதலில் வரும் உயிர் எழுத்துகளைப் பற்றிப்
பார்ப்போம்.
5.2.1 சொல்லுக்கு முதலில் வரும் உயிர் எழுத்துகள்
உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் சொல்லின் முதலில் வரும்.
எடுத்துக்காட்டு:
|
5.2.2 சொல்லுக்கு முதலில் வரும் மெய் எழுத்துகள்
இந்தப்
பாடத்தின் முதல் பகுதியில் உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொற்கள் இயல்பாக
மெய் எழுத்தில் தொடங்குகின்றன என்பது விளக்கப்பட்டது. இப்போது சொல்லின்
முதலில் வரும் மெய் எழுத்துகள் பற்றிக் காணலாம். மெய் எழுத்துகள் உயிர்
எழுத்துகளுடன் சேர்ந்தே சொல்லின் முதலில் வரும் என்று கூறப்பட்டது.
மெய்எழுத்துகள் எந்தெந்த உயிர்எழுத்துகளுடன் சேர்ந்து சொல்லின் முதலில்
வரும் என்றும் பின்வரும் பகுதியில் விளக்கப்படும்.
ஒரு மெய் எழுத்துடன் பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் சேர்ந்து உருவாகும் உயிர்மெய் எழுத்துகளை வருக்க எழுத்துகள் என்று
கூறுவர். எடுத்துக்காட்டாக, க் என்ற மெய் எழுத்துடன் பன்னிரண்டு உயிர்
எழுத்துகளும் சேர்ந்து உருவான க, கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ,
கௌ என்னும் பன்னிரண்டு உயிர்மெய் எழுத்துகளையும் ககர வருக்கம் என்று கூறுவர்.
• க் என்னும் மெய்எழுத்து
ககர மெய் எழுத்து, பன்னிரண்டு உயிர் எழுத்துகளுடன் சேர்ந்தும் சொல்லுக்கு முதலில் வரும்.
|
• ங் என்னும் மெய் எழுத்து
ஙகரம். அ, இ ஆகிய சுட்டு எழுத்துகளுக்குப் பின்னும், யா, எ, ஆகிய வினா எழுத்துகளுக்குப் பின்னும் சொல்லுக்கு முதலில் வரும்.
அங்ஙனம் (அப்படி)
இங்ஙனம் (இப்படி)
எங்ஙனம் (எப்படி)
யாங்ஙனம் (எப்படி)சுட்டு, யா, எகர வினா வழி, அவ்வை
ஒட்டி ஙவ்வும் முதல் ஆகும்மே (106)
என்னும் நன்னூல் நூற்பா, ஙகர எழுத்து மொழிக்கு முதலில் வருவதை விளக்குகிறது.
• ச் என்னும் மெய்எழுத்து
சகரம் பன்னிரண்டு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து
மொழிக்கு முதலில் வரும். ஆனால் பழங்காலத்தில் அ, ஐ, ஒள
என்னும் ழூன்று உயிர் எழுத்துகளுடனும் மொழிக்கு முதலில்
வருவதில்லை. அ என்னும் எழுத்துடன் சேர்ந்து சக்கரம், சங்கு,
சங்கம் முதலான சொற்கள் பழங்காலம் முதலே பயன்படுத்தப் படுகின்றன. ஐ,
ஒள ஆகிய உயிர் எழுத்துகளுடன் சகரம் சேர்ந்துவரும் சொற்கள் தமிழில் இல்லை.
சைகை, சௌக்கியம் முதலான
பிறமொழிச் சொற்களே பயன்படுத்தப்படுகின்றன.
|
• ஞ் என்னும் எழுத்து
ஞகரம் அ, ஆ, எ, ஒ ஆகிய நான்கு உயிர் எழுத்துகளுடன் சேர்ந்து சொல்லுக்கு முதலில் வரும்.
|
அ, ஆ, எ, ஒவ்வொடு ஆகும் ஞம் முதல்(நன்னூல்.105)
(பொருள் : ஞகர மெய் எழுத்து அ, ஆ, எ, ஒ, ஆகிய நான்கு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து சொல்லுக்கு முதலில் வரும்.
)
• த் என்னும் மெய்எழுத்து
தகர மெய் எழுத்து, பன்னிரண்டு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து சொல்லுக்கு முதலில் வரும்.
|
• ந் என்னும் மெய்எழுத்து
நகர மெய் எழுத்து, பன்னிரண்டு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து சொல்லுக்கு முதலில் வரும்.
|
• ப் என்னும் மெய்எழுத்து
பகரமெய் எழுத்து, பன்னிரண்டு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து சொல்லுக்கு முதலில் வரும்.
|
• ம் என்னும் மெய் எழுத்து
மகர மெய் எழுத்து, பன்னிரண்டு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து சொல்லுக்கு முதலில் வரும்.
|
• ய் என்னும் மெய்எழுத்து
யகர மெய்
எழுத்து அ, ஆ, உ, ஊ, ஓ, ஓள ஆகிய ஆறு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து
சொல்லுக்கு முதலில் வரும். யகர மெய் எழுத்து, பழங்காலத்தில் ஆ (ய்+ஆ=யா)
என்னும் எழுத்துடன் மட்டுமே பயன்படுத்தப்பட்டது.
|
அ, ஆ, உ, ஊ, ஓ, ஒள யம் முதல்(நன்னூல். 104)
(பொருள்: அ, ஆ, ஊ, ஓ, ஒள ஆகிய உயிர் எழுத்துகளுடன் சேர்ந்து யகர மெய் சொல்லுக்கு முதலில் வரும்.
)
• வ் என்னும் மெய் எழுத்து
வகர மெய் எழுத்து அ, ஆ, இ, ஈ, எ, ஏ, ஐ, ஒள ஆகிய எட்டு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து சொல்லுக்கு முதலில் வரும்.
|
உ, ஊ, ஒ, ஓ அலவொடு வம் முதல்
(நன்னூல் - 103)
(பொருள்:
வகர மெய் எழுத்து உ, ஊ, ஒ, ஓ ஆகிய நான்கு தவிர மற்ற (அ, ஆ, இ, ஈ, எ, ஏ, ஐ,
ஒள) எட்டு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து சொல்லுக்கு முதலில் வரும்.)
5.2.3 சொல்லுக்கு முதலில் வராத மெய் எழுத்துகள்
க, த, ந, ப,
ம, ச, ஞ, ய, வ, ங என்னும் பத்து மெய் எழுத்துகளும் மொழிக்கு முதலில் வரும்
என்பதை அறிந்தோம். இவை தவிர உள்ள ட, ண, ர, ல, ழ, ள, ற, ன என்னும் எட்டு
மெய் எழுத்துகளும் மொழிக்கு முதலில் வருவதில்லை. ஆனால் இந்த எழுத்துகளைக்
குறிக்கும் போது இவை மொழிக்கு முதலில் வரும்.
‘ட‘ என்னும் எழுத்து, ‘ண‘ என்னும் எழுத்து என்று எழுத்தைக் குறிப்பிடும் போது இவையும் முதலில் வருகின்றன.
தமிழ்மொழி
பேசும் மக்கள் பிறமொழி பேசுகிறவர்களுடன் கலந்து பழகி வாழ்கின்றனர். அவ்வாறு
அவர்களுடன் பழகும்போது பிறமொழிச் சொற்களையும் பயன்படுத்துகிறார்கள்.
அப்படிப் பேச்சுவாக்கில் தமிழ் மொழியில் நுழைந்த பிறமொழிச் சொற்கள் பலவும்
தமிழ்மொழியில் பயன்பாட்டில் உள்ளன. அவற்றையும் தமிழ் மக்கள்
பயன்படுத்துகிறார்கள். அப்படிப்பட்ட பிறமொழிச் சொற்களில் ட, ண, ர, ல, ற
என்னும் ஐந்து மெய்எழுத்துகளும் முதலில் வருகின்றன.
ராமன்
லலிதா
முதலான பிறமொழிப் பெயர்களைத் தமிழில்
பயன்படுத்துகிறோம். இவ்வாறு பிறமொழிப் பெயர்களைத் தமிழ்மொழியில்
பயன்படுத்தும் போது அவற்றைத் தமிழ்மொழியின் இயல்புக்கு ஏற்பவே
காலங்காலமாகப் பயன்படுத்தி வருகிறோம்.
ரகர வருக்க
எழுத்துகளும் லகர வருக்க எழுத்துகளும் தமிழ்மொழியில் சொல்லுக்கு முதலில் வருவதில்லை
என்பதை அறிந்து அவற்றுக்கு முன் ‘இ’ என்னும் எழுத்தைச் சேர்த்து அப்பெயர்களை
எழுதுகிறோம்
|
மேலே ‘இ’ என்னும் எழுத்தைச் சேர்த்தது போல்
‘அ’என்னும் எழுத்தைச் சேர்த்துப் பயன்படுத்துவதும் உண்டு.
ரங்கன் அரங்கன்
இ, அ என்னும் எழுத்துகளைச் சேர்த்துப் பயன்படுத்துவதுபோல்
‘உ’ என்னும் எழுத்தைச் சேர்த்தும் பிறமொழிப் பெயர்களைப் பயன்படுத்துவது உண்டு.
|
இவ்வாறு
பிறமொழியிலிருந்து பெற்றுப் பயன்படுத்தும் சொற்கள் அனைத்தும் பெயர்ச்
சொற்கள் என்பதை நாம் புரிந்துகொள்ளுதல் வேண்டும். அந்தப் பிறமொழிப்
பெயர்களையும் நம் தமிழ் மொழியின் தன்மைக்கு ஏற்பவே அமைத்துப்
பயன்படுத்துகிறோம். பிற மொழிப் பெயர்களைத் தேவை கருதிப் பயன்படுத்துவதைப்
போல் பிறமொழி வினைச் சொற்களையும் பிறசொற்களையும் பயன்படுத்தக் கூடாது.
• ஒலிக்குறிப்புச் சொற்கள்
சில ஒலிக்குறிப்புகளை நாம் நமது அன்றாடப் பேச்சில் பயன்படுத்துகிறோம்.
கோழி கொக்.
. . கொக் என்று கொக்கரிக்கும்
காக்கை கா. . . கா என்று கரையும்
நாய் லொள் . . . லொள் என்று குரைக்கும்
காக்கை கா. . . கா என்று கரையும்
நாய் லொள் . . . லொள் என்று குரைக்கும்
இவற்றில் இடம்பெற்றுள்ள கொக். . . கொக். . ., கா. . .கா. . ., லொள். . . லொள்.
. . என்பவை ஒலிக்குறிப்புச் சொற்கள். இவை போன்று வேறு பல
ஒலிக்குறிப்புகளையும் பயன்படுத்துகிறோம். இத்தகைய ஒலிக்குறிப்புச்
சொற்களில் மொழிக்கு முதலில் வராத எழுத்துகளும் இடம்பெறுவது உண்டு.
மணி டாண். . . .டாண் என்று ஒலித்தது.
பட்டாசு டமார். . . டமார் என்று வெடித்தது.
இவை போன்ற ஒலிக்குறிப்புச் சொற்களைத் தமிழ்மொழியில் இரட்டைக் கிளவி என்று சொல்கிறோம். பட்டாசு டமார். . . டமார் என்று வெடித்தது.
No comments:
Post a Comment