Monday, May 19, 2014

"ஜன கன மண' & "வந்தேமாதரம்'

மரியாதைக்குரியவர்களே,
                             வணக்கம். 
                            ஜன கண மன...  நமது இந்திய நாட்டுப் பண் ஆகும்
         இப்பாடலை  52 விநாடிகளுக்குள் பாடி முடிக்க வேண்டும்.

1911-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதிதான் முதன்முதலாக கல்கத்தா நகரில் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு நடக்கும்போது  "ஜன கன மண' பாடல் பாடப்பட்டது.தாகூரின் உறவினரான சரளாதேவி சௌதுராணி இந்தப் பாடலைப் பாடினார்.
1950-ம் ஆண்டு ஜனவரியில்தான் "ஜன கன மண' இந்தியாவின் தேசிய கீதமாகவும் "வந்தேமாதரம்' தேசியப் பாடலாகவும் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் இராஜேந்திர பிரசாத்தால் அறிவிக்கப்பட்டது.

ஜன கண மன அதிநாயக ஜெய ஹே பாரத பாக்ய விதாதா. பஞ்சாப சிந்து குஜராத்த மராட்டா திராவிட உத்கல வங்கா. விந்திய இமாச்சல யமுனா கங்கா உச்சல ஜலதி தரங்கா. தவ ஷுப நாமே ஜாகே, தவ ஷுப ஆஷிஷ மாகே, காஹே தவ ஜெய காதா. ஜன கண மங்கள தாயக ஜெயஹே பாரத பாக்ய விதாதா. ஜெய ஹே, ஜெய ஹே, ஜெய ஹே, ஜெய ஜெய ஜெய, ஜெய ஹே.


தமிழக அரசின் அதிகாரப்பூர்வ மொழி பெயர்ப்பான இது அரசு பாடநூல்களில் பயன்படுத்தப்படுகின்றது:
இந்தியத் தாயே! மக்களின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற
நீயே எல்லாருடைய மனத்திலும் ஆட்சி செய்கிறாய்.
நின் திருப்பெயர் பஞ்சாபையும், சிந்துவையும், கூர்ச்சரத்தையும்
மராட்டியத்தையும், திராவிடத்தையும், ஒரிசாவையும்.
வங்காளத்தையும், உள்ளக் கிளர்ச்சி அடையச் செய்கிறது.
நின் திருப்பெயர் விந்திய, இமய மலைத் தொடர்களில்
எதிரொ லிக்கிறது; யமுனை, கங்கை ஆறுகளின்
இன்னொலியில் ஒன்றுகிறது; இந்தியக் கடலலைகளால்
வணங்கப்படுகிறது.
அவை நின்னருளை வேண்டுகின்றன; நின் புகழைப் பரவுகின்றன.
இந்தியாவின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற தாயே. உனக்கு
வெற்றி! வெற்றி! வெற்றி!

No comments:

Post a Comment