அன்பு நண்பர்களே,
paramesdriver.blogspot.com வலைப்பதிவிற்கு வருகை தந்துள்ள தங்களை வணங்கி வரவேற்கிறேன்.
TAMIL "99 பயன்படுத்துங்கள்.இம்முறை எளிமையானது.
தமிழ்'99 விசைப் பலகையில் எழுத இந்தப் பதிவில் உள்ள,
''இணைய எழுதி'' என்னும் பொத்தானை அழுத்தவும்.
''இணைய எழுதி'' என்னும் பொத்தானை அழுத்தவும்.
பிறகு திரையில் தோன்றும் விசைப் பலகையில் உள்ள பட்டன்களில் எழுத்துக்களைக் கிளிக் செய்தால் அதிலுள்ள மானிட்டரில் எழுத்துக்கள் தானாக பதிவாகும். பிறகு அதனை காப்பி எடுத்து அல்லது வெட்டி எடுத்து தேவையான பகுதியில் ஒட்டிக்கொள்ளலாம்.
ஆனால் இம்முறையை ஆரம்ப காலத்தில் மட்டும் அதாவது புதியவர்கள் மட்டும் பயன்படுத்துங்கள்.
விரைவில் தட்டச்சு செய்து பழகியபிறகு தமிழ் 99 விசைப்பலகையின் உதவியால் மட்டுமே தட்டச்சு செய்யுங்கள் .
அதாவது டிரைவர் பணி செய்யும் நானே இரண்டு நாட்களில் தட்டச்சு செய்யப் பழகி விட்டேன். நன்றி!
இங்கு கீழேஉள்ள ''இணைய எழுதி'' என்னும் சதுர கட்டம் கட்டியுள்ள பெட்டியை ஒரு கிளிக் மட்டும் செய்யுங்கள்.இதில் உங்களது விருப்பம் போல விளையாடுங்கள்.பயப்பட வேண்டியதில்லைங்க!.
மேலே உள்ள சதுர கட்டம் போட்ட பெட்டியில் உள்ள ''இணைய எழுதி'' என்னும் இடத்தில் கிளிக் செய்து பயன்படுத்தி இருப்பீர். இந்த முறை உலக அளவில் கணினியில் ஒருமித்த கீ போர்டை பயன்படுத்த 1999-ம் ஆண்டு பிப்ரவரி 8-ந் தேதி சென்னையில் நடந்த இரண்டாம் உலகத் தமிழ் இணைய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
தமிழறிஞர்கள் ஆலோசனைக்கேற்ப 1999-ல் தமிழக அரசு- TAMIL'99 போர்டு முறையை அனைவரும் பயன்படுத்த அரசாணையும் பிறப்பித்தது.
தற்போது அனைத்து அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தட்டச்சு செய்யும் போது இந்த விசைப் பலகையின் நன்மைகள் பின்வருமாறு;-------
1) உயிர்க் குறில் எழுத்துக்கள் இடது புறம் நடுவரிசையிலும் (அ,இ,உ,எ-A,S,D,G )
2)உயிர் நெடில் எழுத்துக்கள் இடது புறம் மேல் வரிசையிலும்( ஆ,ஈ,ஊ,ஐ,ஏ-Q,W,E,T,R )
3) ஒ,ஓ,ஔ இந்த எழுத்துக்கள் அதிகம் பயன் படாத காரணத்தால் இவைகளை இடது புறம் கீழ் வரிசையிலும் (ஔ,ஓ,ஒ-Z,X,C,V,B )
4)அதிகம் பயன்படுத்தும் க,ப,ம,த எழுத்துக்கள் வலது புறம் நடு வரிசையிலும் (ய,ந,த,ம,ப,க -' , ; ,;L,K,J,H )
5)அடிக்கடி ஒன்றாக வரும் எழுத்துக்களான ஞ்ச-],[,ண்ட-P,O,ந்த-;,L,ங்க-B,H,ம்ப-K,J,ன்ற-I,U,போன்ற எழுத்துக்கள் அருகருகே இருக்குமாறும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இவைகளுக்கும், மற்றும் ச்ச,ண்ண,ட்ட,ன்ன,ற்ற,ள்ள,ய்ய,ந்ந,த்த,ம்ம,ப்ப,க்க,ர்ர,ல்ல,ழ்ழ,ங்ங,,வ்வ போன்ற இரட்டை எழுத்துக்கள் தட்டச்ச
புள்ளி வைப்பதற்கென கூடுதலாக விசைகள் அழுத்த வேண்டியதில்லை.முயன்று பாருங்கள். பயிற்சி செய்து பாருங்கள். ஒவ்வொரு பட்டனாக,எழுத்தாக அழுத்திப் பாருங்கள்.அதனை ''காப்பி''
எடுத்துப்பாருங்கள். அடுத்த இடத்தில் ''பேஸ்ட்''செய்து பாருங்கள். அதற்கு மேலும் முடியவில்லையா? எனக்கு நேரமும் இடமும் ஒதுக்குங்கள்.ஐந்து நிமிட வேலை! அப்புறம் பாருங்கள்.ஒரு இரண்டு வார்த்தையாவது தட்டச்சிப் பாருங்கள்.
அல்லது
இந்த வலைப்பக்கத்தில் வலது புறம் உள்ள TNSF-LOGO விற்கு கீழுள்ள, அல்லது BLOG Archive என்னும் கட்டத்திற்கு மேலே உள்ள
'' W3 தமிழ்'99விசைப்பலகை''
என்னும் கட்டத்தினுள் ''மவுஸால்'' அதாங்க! அம்புக்குறியால் கீ போர்டு படத்தைத் தொடுங்கள்.அம்புக்குறி, ''கை'' வடிவமாக மாறினால் உடனே அழுத்துங்கள்.தமிழ்'99 கீபோர்டு மானிட்டர் தோன்றும்.இதிலும் தட்டச்சி விளையாடுங்கள். நன்றிங்க!.
பரமேஸ்வரன்.சி,

அரசுப் பேருந்து ஓட்டுனர்,
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்-கோவை கோட்டம்,
தாளவாடி கிளை - ஈரோடு மண்டலம்.
No comments:
Post a Comment