அன்பு நண்பர்களே,
paramesdriver.blogspot.com வலைப்பதிவிற்கு தங்களை வணங்கி வரவேற்கிறேன்.
நம்ம ஊர் கல்லூரியாம்
கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மரியாதைக்குரிய Dr.R .செல்லப்பன்,M.B.A.,M.Com.,M.Phil.,D.L.L.,Ph.D., அவர்களுக்கு
கல்வி மற்றும் மேலாண்மைக்கான பன்னாட்டு நிறுவனம் - சார்பில்
சிறந்த கல்லூரி முதல்வருக்கான விருதினை வழங்கி கௌரவித்துள்ளது.
சிறந்த கல்லூரி முதல்வருக்கான விருது பெறும் அளவு நமது பகுதி கல்லூரியாம்
கோபி கலை & அறிவியல் கல்லூரியின் செயல்பாடு குறித்து கிராமப் பகுதியைச் சேர்ந்த நாமெல்லாம் பெருமைப்பட வேண்டிய விசயமாகும்.மரியாதைக்குரிய முதல்வர் அவர்களின் கனிவுடன் கூடிய கண்டிப்பு மற்றும் நம்மைப் போன்ற
பெற்றோர்களிடம் அது கிராமவாசியாயினும் அணுகும் முறை சிறப்பானது.என்பது நாமெல்லாரும் அறிந்த விசயம்தான்.
சரியான கல்லூரியைத் தேர்வு செய்துள்ள கல்வி மற்றும் மேலாண்மைக்கான பன்னாட்டு நிறுவனத்திற்கு தேனீக்கள் சமூக சேவை அமைப்பின் - சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மரியாதைக்குரிய கல்லூரி முதல்வர் அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.அவர் தம் கல்விப் பணி இந்த சமூக முன்னேற்றத்திற்கும், நாட்டின் நலனுக்கும் பயன்படும் வகையில் மேலும், மேலும் சிறக்க ''தேனீக்கள் சமூக சேவை'' சார்பாக வாழ்த்துகிறோம்!
மரியாதைக்குரிய முதல்வர் அவர்களின் செயல்பாடுகளில் சில;-
பெற்றோர் சங்கத்தின் வாயிலாகவும் சரி,தனிப்பட்ட முறையிலும் சரி அடிக்கடி கல்லூரி வர வேண்டும் கல்லூரி நடவடிக்கைகள் குறித்து அறிந்து செல்ல வேண்டும் என பெற்றோர்களை வலியுறுத்துவது,
கல்லூரியின் செயல்பாடு குறித்து , குறைகள் மற்றும் மாணவ,மாணவியர் முன்னேற்றம்குறித்து பெற்றோர்களிடமே கருத்துக்கள் கேட்டறிவது. பெற்றோரிடமே கலந்துரையாடல் செய்வது.மேலும்
பெற்றோர்கள் அடிக்கடி கல்லூரி வந்து சென்றால்தான் மாணவர்களும் (விளையாட்டுப் பருவமாதலால்) கட்டுப்பாடாக செயல்படுவார்கள்.எனவும்,
கல்லூரி பேராசிரியர்கள் உட்பட எங்களுக்கும் சிறப்பாகச் செயல்பட ஊக்கமளிக்கக்கூடியதாக இருக்கும். எனவும்
கல்வியறிவில்லாத மற்றும் கிராமப் பகுதியைச் சார்ந்த பெற்றோர்களுக்கும் உற்சாகமூட்டுவது,நம்பிக்கையூட்டுவது,தைரியமூட்டுவது போன்ற செயல்முறைகள் எல்லாம் வரவேற்கத்தக்கவை......
.பெற்றோர் சங்கத்தினைக் கூட்ட வேண்டும் எனப் போராட்டங்கள் நடத்தி வரும் இக்கால கட்டத்தில்
பெற்றோர்கள் அடிக்கடி வருகை தந்து நெருக்கடிகள் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுப் பெறுவதில் இவருக்கு நிகர் இவரே! எனலாம்.
இந்த நிகழ்வுகளெல்லாம் இக்கல்லூரியில் பயில்பவருக்கும் இக் கல்லூரியில் தொடர்புடைய பெற்றோர்களுக்கு நன்றாகத் தெரியும்.
அதே சமயத்தில் பேராசிரியப் பெருமக்களையும் ஊக்கப்படுத்தி மாணவர்களுக்கு சிறப்பான கல்வியினை கொடுக்க வைத்து
மிகுந்த ஆர்வமாக,சிறந்த கல்லூரியாக செயல்படுத்துவதில் கல்லூரி முதல்வர் அவர்கள் உறுதியாக இருப்பதைக் காணும்போது நமக்கும் பாராட்டி வணங்கத் தோன்றும்.
ஆச்சரியமாக இருந்தால் நீங்களும் ஒரு முறை கோபி கலை &அறிவியல் கல்லூரிக்குச் சென்று பாருங்கள்! மரியாதைக்குரிய கல்லூரி முதல்வர் அவர்களை நேரில் சந்தியுங்கள்!! உண்மை நிலை அறிந்து கொள்ளுங்கள்.என paramesdriver.blogspot.com // Sathy & Thalavadi
No comments:
Post a Comment