Wednesday, December 21, 2011
சுதந்திர மென்பொருள்: இன்டெலின் Broadband ஸ்பீட் டெஸ்ட்!
சுதந்திர மென்பொருள்: இன்டெலின் Broadband ஸ்பீட் டெஸ்ட்!: இந்த வலைப்பூவின் ’மேல்-வலது’ பகுதியில் ஷீரடி சாய் பாபாவின் படம் போட்டு கிளிக் செய்தால், மகாராஷ்ட்ர மாநிலத்தில் உள்ள ஷீரடி பாபா கோவிலிலிருந்...
BYTEIT EPISODE 30 2(3) - NDTV HINDU
அன்பு நண்பர்களே,வணக்கம். தமிழுக்காக,தமிழர்களுக்காக, இணையதளம் மற்றும் கணிணி சார்ந்த தொழில்நுட்பங்களை விளக்கமாக அதுவும் சங்கடப்படாமல் சாதாரண எழுதப்படிக்கத் தெரிந்தவர்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் நேரிலும் சரி(ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்-2011 நிகழ்வின்போது நேரில் அவருடன் உரையாடிய அனுபவங்க) சுதந்திர மென்பொருள் வலைத்தளத்திலும் சரி எளிமையாக பதிவிடுகிறார்.அவரது உரையைக் கேளுங்கள்.
நண்பர் பிரபு (சென்னை)-அவர்களைப்போல கோபிசெட்டிபாளையத்தைச்சார்ந்த கிரி அவர்களும்( தற்போது சிங்கப்பூரில் உள்ளார்) பல விசயங்களை எளிய தமிழில் விளக்குகிறார்.இன்னும் பலர் இதுபோல் தமிழில் கணிணி தொழில்நுட்பங்களை வெளிக்கொணர வேண்டும்.என்பதே எனது விருப்பம். என PARAMESDRIVER // THALAVADY
சுதந்திர மென்பொருள்-பிரபு அவர்கள்-பேட்டி காணீர்
அன்பு நண்பர்களே,வணக்கம்.
தமிழுக்காக,தமிழர்களுக்காக, இணையதளம் மற்றும் கணிணி சார்ந்த தொழில்நுட்பங்களை விளக்கமாக அதுவும் சங்கடப்படாமல், சாதாரண எழுதப்படிக்கத் தெரிந்தவர்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் நேரிலும் சரி(ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்-2011 நிகழ்வின்போது நேரில் அவருடன் உரையாடிய அனுபவங்க) சுதந்திர மென்பொருள் வலைத்தளத்திலும் சரி எளிமையாக பதிவிடுகிறார்.அவரது உரையைக் கேளுங்கள்.
( BYTEIT EPISODE 30 2(3) - NDTV HINDU-அடுத்த வலைப்பதிவில் காண்க)
நண்பர் பிரபு (சென்னை)-அவர்களைப்போல கோபிசெட்டிபாளையத்தைச்சார்ந்த கிரி அவர்களும் பல விசயங்களை எளிய தமிழில் விளக்குகிறார்.இன்னும் பலர் இதுபோல் தமிழில் கணிணி தொழில்நுட்பங்களை வெளிக்கொணர வேண்டும்.என்பதே எனது விருப்பம். என PARAMESDRIVER // THALAVADY
Sunday, December 18, 2011
ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்-2011
அன்பு நண்பர்களே,வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்! ஆமாங்க,இன்றைக்கு காலை ஈரோடு பழையபாளையம் ரோட்டரி சி.டி.ஹாலில் சரியாக 9-30 மணிக்கு சென்றபோது கூட்டம் கூட்டமாக ஆனந்தக்களிப்புடன் ஆங்காங்கு குழுமியிருந்த வலைப்பதிவர்கள் படையினைக்கண்டவுடன் எனக்கு சந்தோசம் தாங்க முடியலைங்க! ஈரோடு மாவட்டம் மட்டுமல்லங்க, தமிழகம் முழுவதும் இருந்து எழுத்தாளர்,திரைப்பட இயக்குனர்,வலைப்பதிவர்கள்,முகநூல் பதிவர்கள்,ட்விட்டர் பதிவர்கள் என பட்டாளம் பட்டாளமாக, குழுமம் குழுமமாக அடடா! என்னவென்று சொல்வது? சரி இதற்கு மேல் எனக்கு பதிவிடவும் தெரியலை? பிறகு யோசனை செய்து பதிவிடுகிறேன். இப்போதைக்கு படங்கள் பற்றி!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!??!!?
முதலில் சமையல்.ஏனுங்க! காலை சிற்றுண்டி,மதியம் சாப்பாடுஅசைவம்,சைவம் என வகைவகையான சாப்பாடு .நானும் விட்டேனா! வயிறுமுட்ட ஒருபிடி பிடிச்சுட்டுத்தான் மறுவேலை பார்த்தேனுங்க. உண்மையிலேயே சமையல்காரருக்கு அனைவரின் சார்பாக வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!!வாழ்த்துக்கள்!!!
அடுத்து சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த மரியாதைக்குரிய ஸ்டாலின் குணசேகரன் அவர்கள்!இந்த வருடம் மக்கள்சிந்தனைப்பேரவை நடத்திய புத்தத்திருவிழாவில் நானே ஆயிரத்து இருநூறு ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கினேங்க! கண்டவர்கள் எல்லாம் வந்து வாசிக்கவே புத்தகத்திருவிழா! என்ன பெருந்தன்மை பாருங்க.அதற்காகவே அவர்களை ஊக்குவிக்க நான் புத்தகம் வாங்கினேங்க.(இவரு நடத்திய புத்தகத்திருவிழாவில் இதுவரை சிறிதும் இலாபம் என்பதே இல்லை.அதுவும் இலட்சக்கணக்கில் நஷ்டபடுவதாகவும் தகவலுங்க! இவரது குறிக்கோள் ஈரோடு மாவட்ட மக்கள் வாசிப்புத்திறனை மேம்படுத்த வேண்டும் என்ற சமூக நல சிந்தனைங்க!)
அந்த மாமனிதர் உரையாற்றியபோது எடுத்த படங்க! கீழே,
அடுத்து ''கூகுள் ''ஆண்டவரைப்போல (என்னைப்போல சாதாரண எழுதப்படிக்கத்தெரிந்தவர்கள் கூட புகைப்படக்கலையில் ஆர்வம் மேலிடும் அளவுக்கு) தமிழ் ஆர்வலர்களுக்கு கிடைத்த ஆண்டவருங்க,இந்த ''கருவாயன்'' !?!என்ற புனைப்பெயரில் வலம் வரும் திரு; சுரேஷ்பாபு !....இவரு சத்தியமாக கருப்பு இல்லைங்க! இவரது குழுமத்தின் PHOTOGRAPHY.IN.TAMIL வலைப்பக்கம் சென்று பாருங்க! நீங்களும் புகைப்பட நிபுணர்தான். தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தேனியைச் சேர்ந்த நண்பர் ஒருவர் எனது தகவல் வழி P.I.T. அதாவது தமிழில் புகைப்படக்கலை என்ற வலைப்பக்கம் சென்று பயனடைந்து இன்று தேனி மாவட்டத்தில் புகைப்பட நிபுணராக விளங்கி வருகிறார்.இந்த தகவலை கடந்த 24& 25 மற்றும் 26ந்தேதிகளில் 19-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாடு சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றபோது வருகை தந்தவர் என்னிடம் சொன்னாருங்க.மரியாதைக்குரிய நண்பர் சுரேஷ்பாபு அவர்களை நேரில் கண்டு உரையாடி மகிழ்ந்தேனுங்க! அந்த சுரேஷ் பாபு தாங்க கீழே உள்ள படம்.(கட்டம் போட்ட சர்ட் அணிந்தவர்)
அடுத்து திருப்பூர் வலைப்பதிவர்கள் சங்கமம் சார்ந்த நண்பர் பட்டாளங்க! நீங்க கீழே காண்பது,
அடுத்து சென்னையைச் சேர்ந்த நண்பர் மரியாதைக்குரிய பிரபு அவர்கள் , இவரிடம் மென்பொருள் பற்றிய மற்றும் கணிணி சார்ந்த உபயோகமுள்ள பல வலைத்தள முகவரிகள் கேட்டறிந்தேனுங்க.அவருதாங்க கீழே காணும் படம்.
நன்றி!
PARAMES DRIVER //
TNSFTHALAVADY.BLOGSPOT.COM
லேபிள்கள்:
ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்-2011
Tuesday, November 22, 2011
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்(2)-ஈரோடு மாவட்டம்.
25-11-2011 வெள்ளிக்கிழமை
மதியம் 2-00 மணி
ஆசிரியர்களுக்கான சிறப்பு கருத்தரங்கம்
தலைமை; திரு.S. சுப்பிரமணியன் அவர்கள்
மாநில செயலாளர்,
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
முன்னிலை ; திரு.N. நடராஜன் அவர்கள்
மாவட்ட செயற்குழு,
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
வரவேற்புரை; திருமதி.G.நளினா அவர்கள்
மாவட்ட துணைத் தலைவர்,
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
கருத்துரை;திரு.பொன்.குமார்
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்,
அனைவருக்கும் கல்வி இயக்கம்,
ஈரோடு.
நன்றியுரை; திரு. B. லியோ
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் NCSC
முக்கிய நிகழ்வுகள்
24-11-2011 வியாழன்
காலை 10-00 மணி முதல் 12-00 மணி -
ஆய்வறிக்கைகள் பதிவு
மாலை 4-00மணி முதல் 5-00மணி -
மாநாட்டு நினைவாக மரக்கன்று நடுதல்
இரவு 6-00 மணி முதல் 8-00மணி -
விஞ்ஞானிகள் முதல் சந்திப்பு.
25-11-2011 வெள்ளி
காலை 9-00மணி முதல் 12-00மணி -
ஆய்வறிக்கைகள் சமர்ப்பித்தல்
மற்றும் வாய்மொழி தேர்வு
காலை 9-00 மணி முதல் 12-00மணி -
ஆசிரியர்களுக்கான திரைப்படங்கள்
மாலை 2-00 மணி முதல் 5-00 மணி -
குழந்தைகளின் செயல்திறன் வளர்க்க
இணை அமர்வுகள்
மாலை 5-00மணி முதல் 7-00மணி -
விஞ்ஞானிகள் இரண்டாம் சந்திப்பு.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-ஈரோடு மாவட்டம்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-மாநில மையம்-அழைப்பிதழ்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
மாநில மையம்.
19-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாடு
அழைப்பிதழ்.
நாள்; 24,25,26 நவம்பர்-2011
இடம்; பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி,
சத்தியமங்கலம் - 638402
ஈரோடு மாவட்டம்.
அன்புடையீர்,
வணக்கம். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஓர் மக்கள் இயக்கம். கல்வி,அறிவியல் பரப்புதல்,சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி ஆகிய துறைகளில் செயல்பட்டு வரும் அமைப்பு. மாணவர்களின் படைப்பாற்றல் திறனை மேம்படுத்தும் பொருட்டு, தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு வருடந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.இம்மாநாட்டை தேசிய அறிவியல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழு (NCSTC - Network ) தேசிய அளவில் ஒருங்கிணைக்கிறது. தமிழ்நாட்டில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒருங்கிணைக்கிறது. மத்திய அரசின் அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை உதவி செய்கிறது.இம்மாநாட்டின் மையக்கருப்பொருளாக ''நிலவளம்; வளத்துக்காக பயன்படுத்துவோம்,வருங்காலத்துக்காகவும் பாதுகாப்போம்.'' என்ற தலைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான மாநில மாநாட்டை சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக்கல்லூரி நடத்திக்கொடுக்க அன்புடன் இசைந்துள்ளது. தாங்கள் இம்மாநில மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
இவண்;
மாநில மாநாட்டு வரவேற்புக்குழு மற்றும்
பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக்கல்லூரி.**************+++++++++++***************
துவக்க விழா
24-11-2011 வியாழக்கிழமை மாலை 02-00 மணி
தலைமை ; Dr.N. மணி
மாநிலத்தலைவர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
முன்னிலை; Dr.S.K.சுந்தரராமன், அவர்கள்
இயக்குநர்,பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக்கல்லூரி
வரவேற்புரை; திரு.R.மணி அவர்கள்
மாநில வரவேற்புக்குழு செயலாளர் அவர்கள்.
அறிவியல் பரப்புதலில்
அறிவியல் இயக்கம் ;திரு.M.S.ஸ்டீபன் நாதன்
பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.
அறிவியல் கல்வியும்
அறிவியல் மாநாடும் ; திரு.N. மாதவன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,NCSC
கருப்பொருள் அறிமுகம் ;பேரா.S. மோகனா,அவர்கள்
கல்விக்குழு ஒருங்கிணைப்பாளர்,NCSC
துவக்கவுரை ; S.பன்னீர் செல்வம் IPS அவர்கள்
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்,ஈரோடு
வாழ்த்துரை ; Dr.A.சண்முகம் அவர்கள்
முதல்வர்,பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக்கல்லூரி
திரு.C. இராமலிங்கம் அவர்கள்
இணை செயலர்,NCSTC - Network
திரு.V.குமார் அவர்கள்
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்,ஈரோடு.
திருமதி.M.இராதா,
மாநிலப் பொருளாளர்,
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
நன்றியுரை; திரு;R.M.சுப்பிரமணியம் அவர்கள்
மாவட்ட பயிற்சி ஒருங்கிணைப்பாளர், NCSC
25-11-2011 வெள்ளிக்கிழமை
மதியம் 2-00 மணி
ஆசிரியர்களுக்கான சிறப்பு கருத்தரங்கம்
தலைமை; திரு.S. சுப்பிரமணியன் அவர்கள்
மாநில செயலாளர்,
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
முன்னிலை ; திரு.N. நடராஜன் அவர்கள்
மாவட்ட செயற்குழு,
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
வரவேற்புரை; திருமதி.G.நளினா அவர்கள்
மாவட்ட துணைத் தலைவர்,
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
கருத்துரை;திரு.பொன்.குமார்
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்,
அனைவருக்கும் கல்வி இயக்கம்,
ஈரோடு.
நன்றியுரை; திரு. B. லியோ
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் NCSC
முக்கிய நிகழ்வுகள்
24-11-2011 வியாழன்
காலை 10-00 மணி முதல் 12-00 மணி -
ஆய்வறிக்கைகள் பதிவு
மாலை 4-00மணி முதல் 5-00மணி -
மாநாட்டு நினைவாக மரக்கன்று நடுதல்
இரவு 6-00 மணி முதல் 8-00மணி -
விஞ்ஞானிகள் முதல் சந்திப்பு.
25-11-2011 வெள்ளி
காலை 9-00மணி முதல் 12-00மணி -
ஆய்வறிக்கைகள் சமர்ப்பித்தல்
மற்றும் வாய்மொழி தேர்வு
காலை 9-00 மணி முதல் 12-00மணி -
ஆசிரியர்களுக்கான திரைப்படங்கள்
மாலை 2-00 மணி முதல் 5-00 மணி -
குழந்தைகளின் செயல்திறன் வளர்க்க
இணை அமர்வுகள்
மாலை 5-00மணி முதல் 7-00மணி -
விஞ்ஞானிகள் இரண்டாம் சந்திப்பு.
நிறைவு விழா
26-11-2011 சனிக்கிழமை
காலை 10-00 மணி
தலைமை; திரு.S.T.பாலகிருஷ்ணன் அவர்கள்
மாநிலத் துணைத் தலைவர்
முன்னிலை ; Dr.A.M.நடராஜன் அவர்கள்
முதன்மை செயல் அலுவலர்,
பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி
வரவேற்புரை; திரு.V.உமா சங்கர் அவர்கள்
மாவட்ட தலைவர்,
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
மாநாட்டு ஆய்வறிக்கை ; திரு.K.காத்தவராயன்,
மாநில செயலாக்கக்குழு,NCSC
வாழ்த்துரை ; திரு;K.முரளி,அவர்கள்,
திட்ட மேலாளர்,
எய்டு எட் அக்சன்.
திரு. கருப்புசாமி,அவர்கள்
இயக்குநர் -
ரீடு
அகில இந்திய மாநாடு
குழுக்கள் அறிவித்தல் ; திரு.C.வெங்கடேசன்
மாநில செயற்குழு உறுப்பினர்
திரு.D.உதயன்
வடக்கு மண்டல ஒருங்கிணைப்பாளர்,NCSC
திரு. S.கணபதி
தெற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர்-NCSC
Dr.V.சுகுமாரன்
கிழக்கு மண்டல ஒருங்கிணைப்பாளர்-NCSC
திரு.S.சேதுராமன்
மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர்-NCSC
பரிசளித்து நிறைவுரை ; Dr.P.முருகேச பூபதி
துணை வேந்தர்,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்,
கோவை
நன்றியுரை ; திரு.V.வைரமுத்து
மாவட்ட செயற்குழு,
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.
------------------------------------------------------------------------------------------------------------- குறிப்பு ;-குழந்தைகளுக்கான அறிவியல் மாத இதழ்
(1) துளிர் (தமிழில்)
(2) ஜந்தர்-மந்தர் (இருமாத ஆங்கில இதழ்)
வாங்கிப் படியுங்கள்.
அனைவரும் அறிவியல் இயக்கத்தில் இணைந்து புதுமைகளைப் புகுத்துவோம். தொழில்நுட்பங்களை வளர்ப்போம்.
என
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-
ஈரோடு மாவட்டம். ===================================================================
| | பதிவேற்றம் ; PARAMESDRIVER // THALAVADI ||
====================================================================
19-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு-2011
அன்பு நண்பர்களே,வணக்கம்.
Subscribe to:
Posts (Atom)