Sunday, August 28, 2016

வாட்ஸ் அப் பயன்படுத்துபவர்களுக்கு ...

#வாட்ஸ்அப்_பயன்படுத்தும்_நண்பர்களின்_கவனத்திற்கும் !
வாட்ஸ்அப் நாம் install செய்யும் போது Agree terms and conditions என்பதை கிளிக் செய்தால் தான் நாம் மேலும் தொடர முடியும். அன்மையில் புதிய வாட்ஸ்அப் டவுன்லோடு செய்து அதன் TERM AND CONDITIONS ஒப்புக்கொண்டிருந்தால், அது தானாகவே Facebook உடன் இனைக்கப்படுகிறது. நமது தகவல்களும் கடத்தப்பட வாய்ப்புள்ளது. எனவே இதனை தடுக்க......
வாட்ஸ்அப் settings போய் accountsல் share my info என்பதற்கு அருகில் இருக்கும் டிக் uncheck செய்யவும்.
இது நம் தனிநபர் தகவல்கள் களவு போகாமல் காக்கும்.
#நன்றி

Saturday, August 6, 2016

ஓட்டுநரின் நிலை

எங்க பொளப்பு இப்படி தாங்க
போகுது...
ஓட்டுனர்(டிரைவர்)
நெத்தியில பொட்டு,
கழுத்துல நீளமான துண்டு,
அனைவரையும் கவர
கோல்டுல செயினு,
தப்பு னு தெரிஞ்சும் காக்கிசட்டை
போடாமல் வண்டியை ஓட்டுவது,
காக்கிசட்டை போட்டுருந்தாலும்
எங்க மீது பொய் வழக்கு போடும்
போஸீஸ்,
எங்க உயிரை பெரிதும் மதிக்காமல்
எங்களை நம்பி வந்தவர்களை
பாதுகாப்பாக இறக்குவது,
வழியில் எத்தனை விபத்துகளை
பார்த்தாலும்,
நாம் இந்த தொழிலை விட்டு போக கூடாது ன்னு என்னுவது,
பயணத்தில் தூக்கம் வராமல்
இருக்க,
தவறு என்று தெரிந்தும் போதை பொருள் பயன் படுத்துவது,
மணிக்கு ஒரு முறை இரவில்
டீ குடிப்பது,
வெளியில் எப்படி இருந்தாலும்
ஓட்டுனர் சீட்டில் உக்கந்த உடன்
தனக்கென ஒரு பாணியை வகுத்து கொள்வது (கெத்து)..
யாதர்த்தமான பார்வையில்
அனைவரையும் கவருவது,
வழியில் எந்த ஒரு பிரச்சனை
என்றாலும் தானாக தீர்த்துக்கொள்வது..
ஆயிரம் வழக்குகள் எங்க மீது
இருந்தாலும் அசால்ட்டாக
இருப்பது,
ஒரு பொருளை எங்களை நம்பி
ஏத்தி விட்டால் தான் பொருள் போல் மதித்து பாதுகாப்பாக
கொண்டு சேர்ப்பது,
சம்பளம் கட்டுதோ இல்லையோ
இந்த தொழிலை விட கூடாது
என்று நினைப்பது,
நாங்கள் வீட்டை விட்டு சென்றால் வீட்டுக்கு வந்தால் தான்
நாம் என இருந்தாலும்,
இதை ஏற்று நம்மளை
இத்தொழிலுக்கு அனுப்புவது
தாய் தந்தையின் ‪#‎நம்பிக்கையே‬...

Monday, August 1, 2016

பசி இருந்தால் புசிக்கலாம்.

ஒரு நாட்டில் ஒரு இளவரசன் இருந்தான். அவன் சிறந்த போர் வீரன். அவனுடைய வாள் வீச்சிற்கு அந்த நாடே ஈடு கொடுக்க முடியாது. அந்த அளவிற்குச் சிறந்த வீரன்.
அவன் ஒருமுறை அரண்மனையில் வாள் வீசி பயிற்சி செய்துக் கொண்டிருக்கையில், ஒரு எலி குறுக்கே ஓடியது. உடனே அதன் மீது வாளை வீசினான். அந்த எலி லாவகமாக தப்பித்துச் சென்றது. பிறகு மீண்டும் அதனைத் துரத்தி வாளை வீசினான், மீண்டும் தப்பித்து வளைக்குள் புகுந்துகொண்டது. உடனே மனம் உடைந்து போனான்.
அப்போது வந்த அரசர் "ஏன் சோகமாக இருக்கிறாய்?" என கேட்க "இந்த நாடே எனது வாள் வீசும் திறமைக்கு ஈடு கொடுக்க முடியாது போது, இந்த சாதாரண எலியை என்னால் கொல்ல முடியவில்லையே!" என விவரித்தான் இளவரசன்.
மன்னர் சிரித்துவிட்டு "எலியைக் கொள்ள வாள் பயிற்சி எதற்கு? அரண்மனைப் பூனையைக் கொண்டு வந்தாலே போதுமே!" என்றார்.உடனே அரண்மனை பூனை வரவழைக்கப்பட்டது.
அந்தப் பூனையும் எலியை வேட்டையாட முயன்றது. ஆனாலும் அந்த எலி எளிதாக அதனிடம் இருந்து தப்பித்து, தப்பித்துச் சென்றது. மீண்டும் இளவரசருடன் அரசரும் சோகமானார். அப்போது மந்திரி வந்தார். "என்ன அரசே..நீங்களும் இளவரசரும் சோகமாக இருக்கிறீர்கள்?" என்றார்.
அதற்கு அரசர் நடந்ததை கூறினார். "நம் நாட்டு பூனைகள் எதற்கு லாயக்கு...? ஜப்பான், பாரசீகம் போன்ற நாடுகளில் உள்ள பூனைகள் புலி உயரம் உள்ளன. எனவே அங்கிருந்து வரவழைப்போம்" என்றார் மந்திரி. அதேபோல் அவ் நாடுகளில் இருந்து பூனைகள் வரவழைக்கப்பட்டன.
ஆனால் அவற்றிடமிருந்தும் அந்த எலி சாமர்த்தியமாகத் தப்பித்துச் சென்று வளைக்குள் புகுந்தது. எலிக்கு இவ்வளவு திறமையா! என அனைவரும் வியந்து கொண்டிருக்கையில், அங்கே இருந்த அரண்மனைக் காவலன் "இளவரசே! இந்த எலிக்குப் போய் ஜப்பான், பாரசீகப் பூனையெல்லாம் எதுக்கு? எங்க வீட்டுப் பூனையே போதும்" என்றான். மன்னருக்கு நப்பிக்கை ஏற்படவில்லை. "என்ன.. அரண்மனையில் வளர்ந்து வரும் பூனையால் முடியாதது சாதாரண பூனையால் முடியுமா?" என்றார்.
உடனே இளவரசர் மறித்து "சரி...எடுத்து வா உனது பூனையை" என்றார். வீட்டிற்குச் சென்று தனது பூனையைக் கொண்டு வந்தான் காவலன். அந்தப் பூனை அந்த எலியை ஒரே தாவலில் "லபக்" என்று கவ்விச்சென்றது. இதனைப் பார்த்த இளவரசருக்குப் பெருத்த ஆச்சரியம். "என்ன இது அதியசம்!
ஜப்பான்,பாரசீக, அரண்மனையில் வளர்ந்த பூனைகளிடம் இல்லாத திறமை எப்படி இந்தச் சாதாரண பூனைக்கு ஏற்பட்டது? எப்படி சாத்தியம்? என்ன பயிற்சி கொடுத்துப் பூனையை வளர்க்கிறீர்கள்?" என்று வியந்தவாறே கேள்விகளை கேட்க தொடங்கினார்.
அதற்குக் காவலாளி *"பெரிதாக என் பூனைக்குத் திறமையோ, பயிற்சிகளோ எதுவும் இல்லை இளவரசே... என் பூனைக்கு ரொம்பப் பசி அவ்வளவுதான்" என்றான்.*
உடனே இளவரசருக்கு "சுரீர்" என்றது. அரண்மனைக்குள் பூனைகள் நன்கு தின்று கொழுத்திருப்பதால் அவற்றுக்கு பசி என்பதே என்னவெற்று தெரிய வாய்பில்லை, எனவே அவற்றால் எலியை எப்படி பிடிக்கமுடியும்?.
ஆக எந்த ஒரு வேலையையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்க வேண்டுமென்றாள், முதலில் அதனைப் பற்றிய பசி அல்லது தேவை இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தக் காரியத்தை கச்சிதமாக செய்து முடிக்க முடியும்.

Thursday, July 21, 2016

நீதிமன்றத்தில் பயன்படுத்தும் ஆங்கிலச்சொற்களின் தமிழாக்கம்.


மரியாதைக்குரியவர்களே,
வணக்கம். பரமேஸ் டிரைவர் பதிவிடுவது.
நீதிமன்றத்தில் பயன்படுத்தும் ஆங்கில வார்த்தையின் தமிழ் ஆக்கம் இதோ தங்களது கவனத்திற்காக..உதவிய முகநூல் நண்பர் அருண்குமார் அவர்களுக்கு நன்றிங்க.
>உயர்நீதிமன்றம் - High Court
நீதித்துறை நடுவர் நீதிமன்றம் - Judicial Magistrate Court
மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் - District Munsif Court
தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் - Chief Judicial Magistrate Court
சிறப்பு நீதித்துறை நடுவர் நீதிமன்றம் - Special Judicial Magistrate Court
அமர்வு நீதிமன்றம் - Sessions Court
உரிமையியல் வழக்குகள் - Civil Cases
குற்றவியல் வழக்குகள் - Criminal Cases
எதிர்வாதி / எதிர்மனுதாரர் / பிரதிவாதி - Defendant
வாதி / மனுதாரர் /புகார்தாரர் - Plaintiff / Complainant /Petitioner
குற்றஞ்சாட்டப்பட்டவர் - Accused
பாதிக்கப்பட்ட தரப்பு - Adverse Party
கட்சிக்காரர் - Client
சங்கதி - Fact
மறு விசாரனை - Re Examination
ஆபத்தான கேள்வி - Risky Question
தடாலடி பதில் - Fatal Reply
குறுக்கு விசாரனை - Cross Examination
உண்மை உறுதிமொழி ஆவணம் - Affidavit
குற்றவாளி - Offender
குற்றச்சாட்டு - Charge
மெய்ப்பிப்பு - Proof
சொத்து - Property
குற்றம் - Offense
கட்டைவிரல் ரேகைப்பதிவு - Thumb Impression
திருட்டு வழக்கு - Theft Case
திருட்டுப் பொருள் - Stolen Property
பைத்தியம் - Insanity
சான்றொப்பம் - Attestation
சச்சரவு - Affray
தீர்ப்பு - Sentence
அவசரத்தன்மை மனு - Emergent Petition
கீழமை நீதிமன்றம் - Lower court
பரிகாரம் - Remedy
உறுத்துக் கட்டளை - Injection Order
நிரந்தர உறுத்துக் கட்டளை - Permanent Injection Order
வழக்கின் மதிப்பு - Suit Valuation
வழக்குரை - Plaint
வழக்குரையில் திருத்தம் - Amendment in Plaint
பண வழக்கு - Money Suit
அவதூறு வழக்கு - Defamation Suit
வறியவர் வழக்கு - Pauper Suit
எதிர்வுரை - Counter
எழுவினாக்கள் (சிக்கல்) - Issues
மேல்முறையீடு -Appeal
வரைமொழி வாதுரை - Written Argument
குற்றப்பத்திரிக்கை - Charge Sheet
தற்காலிக நிறுத்த மனு - Caveat petition
கோருரிமை மனு - Claim Petition
தடை நீக்கம் - Removal of obstruction
வழக்கில் சமரசம் செய்து கொள்ளல் - Compromise of suit
எதிர் மேல்முறையீடு - Cross Appeal
எதிர் மறுப்பு - Cross-objection
வறியவர்களால் தொடுக்கப்படும் வழக்குகள் - Suits by Indigent Persons
நீதிமன்றக் காப்பாளர் - Court Guardian
ஒத்தி வைத்தல் - Adjournment
சாட்சி - Witness

Tuesday, April 5, 2016

சாலையில் கவனம் சகலருக்கும் அவசியம்.





சிந்தியுங்க!
                     சைக்கிள் ஓட்டி குறுக்கிடாமல் இருந்திருந்தால் இரண்டு நிமிடத்தில் நாங்கள் செல்லவேண்டிய இடத்திற்கு சென்று அடைந்திருப்போம்.இந்த விபத்தே நடந்திருக்காது.

09 மார்ச் 2016 தேதியன்று கோபிசெட்டிபாளையத்தில்  பயணிகள் ஆட்டோவில் பயணித்தபோது சந்தித்த விபத்து.....



 
 மறுநாள் தினத்தந்தி மற்றும் தினகரன் நாளிதழ்களில்  வெளிவந்த செய்தி.
 
மரியாதைக்குரியவர்களே,
                 அனைவருக்கும் வணக்கம். 
           கடந்த 2016 மார்ச் 6 ந்தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை கோபி அருகிலுள்ள பவளமலை அருள்மிகு முத்துக்குமார சுவாமி திருக்கோயில் திருமண மண்டபத்தில் நடைபெற்ற எனது உறவினர் இல்ல திருமண விழாவிற்காக அன்றை அதிகாலை5.45 மணிக்கு கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்திலிருந்து TN59/ 0304 எண்ணிட்ட பயணிகள் ஆட்டோவில் என் உறவினர் லோகநாதன்,சரஸ்வதி ஆகியோருடன் பயணித்தபோது கோபி - பாரியூர் நஞ்சகவுண்டம்பாளையம் பிரிவு கறிக்கடை அருகில் சைக்கிளுடன் மோதி ஆட்டோ கவிழ்ந்து உருண்டதில் எனக்கு தலையில் ஆட்டோவின் இரும்பு பட்டா குத்தி வெட்டுக்காயமும்,இடுப்பில் மொக்கை அடியும்,காலிலும் கையிலும் சிராய்ப்புக்காயமும்,லோகநாதனுக்கு நெற்றியிலும் கையிலும் சிராய்ப்பு மற்றும் மொக்கை அடியும்,சரஸ்வதிக்கு தோள்பட்டையின் இரு பக்கமும் உள்ள முன் காரை எலும்புகளும் உடைந்தும் ,ஆட்டோ ஓட்டுநருக்கு காலில் அடியும்,சைக்கிள் ஓட்டிவந்தவருக்கு தோள்பட்டை அடிபட்டும் மோசமான விபத்து ஏற்பட்டுவிட்டது.தகவலறிந்த உடனே கோபி பேருந்துநிலைய ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் விரைந்து வந்து எங்களை மீட்டு கோபி அபி மருத்துவமனையில் சேர்த்தனர்.சைக்கிள் ஓட்டியை அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் மீட்டு ஈரோடு மருத்துவமனைக்கு கொண்டு சென்றது.
 


சரி...
        விபத்துக்கு காரணம் என்ன? என்பதை அறிவோம்.
நாங்கள் பயணித்த ஆட்டோ ஓட்டுநரின் எதிர்பார்ப்பில்லா இயக்கமும்,எதிரில் வந்த மற்ற வாகனங்களின் டிம் செய்யாத பிரகாசமான ஹெட்லைட் வெளிச்சமும்,சாலைவிதி அறியாத சைக்கிளோட்டியின் சாலையில் குறுக்கிட்டதும்தான்! மிக எளிதான சாலைப்பயணத்தை மிக மோசமான விபத்துக்கு ஆளாக்கிவிட்டன.
(1)ஆட்டோ ஓட்டுநர் எதிரில் வந்த வாகனங்களின் ஹெட்லைட் வெளிச்சத்தால் கண் கூச்சமடைந்தபோது பாதையின் தன்மை தெரியாத சூழலில் ஆட்டோவின் வேகத்தை குறைத்து தற்காப்புடன் ஓட்டத் தவறியது.
(வேகத்தை குறைத்தோ அல்லது நிறுத்தியோ இருந்தால் விபத்து ஏற்பட்டிருக்காது).
(2)எதிரில் வந்த வாகனங்கள் பிற வாகன ஓட்டிகளுக்கு கண் கூச்சத்தை ஏற்படுத்தும் ஹெட்லைட்களின் வெளிச்சத்தை தாழ்த்தாமல் பிரகாசமான வெளிச்சத்துடன் ஓட்டியது.
(இரவு நேர இயக்கத்தில் வாகன ஓட்டிகள் எதிரில் வரும் வாகன ஓட்டிக்கு கண் கூசும் பிரகாசமான வெளிச்சத்தை தாழ்த்தி இயக்கியிருந்தால் விபத்து ஏற்பட்டிருக்காது.)
(3)சாலையைக் கடக்க முயன்ற சைக்கிள் ஓட்டி பொதுச்சாலையில் போக்குவரத்து வாகனங்கள் கடந்த பிறகும்  வாகனங்களின் போக்குவரத்து தொடர்கிறதா? என கவனிக்கத் தவறியது. 

(வாகனங்கள் கடந்தவுடன் சாலையில் தொடர்ந்து  வாகனங்கள் போக்குவரத்து செய்கின்றனவா?என இரு புறமும் கவனித்து சாலையை கடந்திருந்தால் விபத்து ஏற்பட்டிருக்காது.)

           இது போன்ற காரணங்களால் ஆட்டோ ஓட்டுநர் மிக குறைந்த இடைவெளியில் கண்ட சைக்கிள் மீது மோதாமல் இருக்க தான் சென்ற வேகத்திலேயே வலது பக்கமாக திருப்பியும்
 
                   சைக்கிள் மீது மோதி ஆட்டோ உருண்டு கவிழ்ந்து மிக மோசமான விபத்தை ஏற்பட்டது. 
 
        இதனால் எங்கள் உறவினர் இல்லத்திருமண விழாவில் கலந்துகொள்ள இயலாமல் போனதுடன், பணிக்கு செல்லமுடியாமலும்,உடல்வலி,மன வேதனை,எனக்கு தலைக்காயம் மற்றும் தலையில் மொக்கை அடி,இடுப்பில் மொக்கை அடி,வலது கை ஆட்டோவின் அடியில் சிக்கி மொக்க அடி இவ்வாறாக அடிபட்ட நான் முதலில்  கோபி அபி Ortho மருத்துவமனை, பிறகு பவானி லோகநாதன் Ortho மருத்துவமனை,சத்தி பேருந்து நிலையம் எதிரிலுள்ள செல்வக்குமார் Ortho மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சை ஒரு மாதகாலமாகப் பெற்றும் இதனால் காலவிரயம்,செலவுகளால் பொருளாதாரம் இழப்பு,எனது குடும்பத்தார் உட்பட உறவினர்கள் அனைவருக்கும் நேர இழப்பும்,வேதனையும் ஏற்பட்டுள்ளன.சமூகப்பணியும் தடைபட்டு விட்டன.
  என் உறவினருக்கு இருபக்க தோள்பட்டை காரை எழும்புகளும் உடைந்து எலும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கைகளை அசைக்கமுடியாமல் படுக்கை நோயாளியாக இருந்து வருகிறார். அடிபட்ட சைக்கிளோட்டி இறந்துவிட்டதாக தகவல்.


               நாங்கள் பயணித்தது பயணிகள் ஆட்டோ அதுவும் பயணிகளான நாங்கள் மூன்று பேர் மட்டுமே.நேரான பொதுச்சாலையில் அதிகாலையில் 5.45மணியளவில் போக்குவரத்து நெரிசலே இல்லாத நேரத்தில் பயணிக்கும்போது  அதுவும் பயணிக்கவேண்டிய  இரண்டு கிலோமீட்டர் மொத்த தூரத்திற்கு பொதுவாக அனைவரும் செல்லும் வேகத்தில் ஆட்டோவும் சென்றது இயல்பானதுதாங்க.சைக்கிள் ஓட்டி குறுக்கிடாமல் இருந்திருந்தால் இரண்டு நிமிடத்தில் நாங்கள் செல்லவேண்டிய இடத்திற்கு சென்று அடைந்திருப்போம்.இந்த விபத்தே நடந்திருக்காது.

  கணப்பொழுதில் சைக்கிள்மீது மோதி ஆட்டோ கவிழ்ந்து இடது பக்கத்திலிருந்து வலது பக்கம் அமைந்திருந்த கறிக்கடை பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஒரு டி.வி.எஸ் மோட்டார் சைக்கிள் மீதும் மோதி ?!?!?!?!??!?!??!?!!?........மிக மோசமான விபத்தாக நிகழ்ந்தது.எங்களுக்கு உதவி செய்த  அந்த கறிக்கடை உரிமையாளர் (ஞாயிற்றுக்கிழமையல்லவா!) மற்றும்  கறிக்கடையில் நின்றுகொண்டிருந்தவர்களுக்குத்தாங்க தெரியும் அந்த விபத்தின் கொடுமை பற்றி.......
 
 
2016எப்ரல் 6 ந் தேதி இன்று உடல் தேறியுள்ளதால் பணிக்கு செல்கிறேன்.
 
இந்த விபத்து பற்றி கேள்விப்பட்டு என் மீது அக்கறைகொண்டுமுகநூல் தளத்திலும்,தொலைபேசியிலும்,நேரிலும் உடல் நலம் விசாரித்தும்,நான் பூரண நலமடையவேண்டி பிரார்த்தனை செய்தும் எனக்காக தங்கள் நேரத்தையும்,எண்ணங்களையும்,நோக்கங்களையும் செலவிட்ட அனைத்து ஆசிரியப்பெருமக்களுக்கும்,மாணவர்களுக்கும், முகநூல் நண்பர்களுக்கும்,சமூக ஆர்வலர்களுக்கும்,என் வாழ்நாள் நன்றிங்க...
என்றும் சமூக நலப்பணியில்,
 அன்பன், 
C.பரமேஸ்வரன், 9585600733  paramesdriver@gmail.com
அரசுப்பேருந்து ஓட்டுநர், 
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்,
தாளவாடி கிளை,
 ஈரோடு மண்டலம்.