Sunday, July 26, 2015

திருமணத்திற்கு நாள் பார்க்கலாம் வாங்க!....

மரியாதைக்குரியவர்களே,
          வணக்கம்.திருமணத்திற்கு நாள் பார்ப்பது பற்றிய விவரம் அறிந்துகொள்வோம்..

       உயர்ந்தபட்ச சோதனைகளும், வாய்ப்புகளும் சேர்ந்து வருவதே திருமணத்திற்குப்பின் வரும் வாழ்வு. (பெர்னாட்ஷா)

           நல்ல திருமணவாழ்வு அமையப்பெற்ற ஆண் சிறகுடையவன். மாறான திருமணவாழ்வு அமையப்பெற்றவன் விலங்கிடப்பட்டவன். (வில் ரோஜர்ஸ்)

         வாழ்க்கைப் பாதையை மலர்களால் தூவ முடியாவிட்டாலும், குறைந்த பட்சம் சிரிப்புக்களால் தூவுங்கள். வாழ்க்கை இனிமையாகும் (சார்ள்ஸ் டிக்கன்ஸ்)

திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள‍ வேண்டிய விதிகள்
 
1. முதல் விதி
திருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. (மலமாதம் என்பது
இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருவது.)

 
2. இரண்டாவது விதி
சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி தவிர இதர மாதங்களில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

 
3. மூன்றாவது விதி
இயன்றவரை சுக்கில பட்ச காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது என்பது மூன்றாவது விதி.

 
4. நான்காவது விதி
புதன், வியாழன், வெள்ளிபோன்ற சுப ஆதிபத்தியமுடைய கிழமைகள் மிக ஏற்றவை. இதர கிழமைகள் அவ்வளவு உகந்தவை அல்ல.

…ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய சுப லக்கினங்களில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும் என்பது தான்
 
5. ஐந்தாவது விதி
துவிதியை, திரிதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள் தவிர இதர திதிகளை தவிர்ப்பது

 
6. ஆறாவது விதி
முகூர்த்த லக்கினத்துக்கு 7ம் இடம். முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க வேண்டும்.

 
7. ஏழாவது விதி
அக்கினி நட்சத்திரம், மிருத்யூ பஞ்சகம், கசரயோகங்கள் போன்ற காலகட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது.

 
8. எட்டாவது விதி
திருமணத்தின் போது குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் திருமண லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெற்றிருக்கக்கூடாது.

 
9. ஒன்பதாவது விதி
திருமணநாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிகமிக முக்கியமான விதி.

 
10. பத்தாம் விதி.
மணமக்களின் ஜனன நட்சத்திர நாளிலும் 3, 5, 7, 12, 14, 16, 21, 23, 2வதாக வரும் நட்சத்திர தினங்களிலும் திருமணம் நடத்தக்கூடாது.

 
11. பதினொன்றாம் விதி
கடைசியாக மணமக்களின் பிறந்த தேதி அல்லது கிழமைகளிலும் கல்யாணம் பண்ணக்கூடாது.

 

- இவ்வளவு விஷயங்கள் தெரிந்து கொண்டபின் நீங்களே அனைத்து சுபகாரியங்களுக்கும் நல்ல நாள் பார்த்துவிடுவீர்கள் தானே. அவரவர் குலதெய்வத்தை மனதில் வேண்டிக்கொண்டு உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆசியுடன் நல்லதொரு நாளைக்
குறியுங்கள்.

Sunday, July 12, 2015

விடியல் விருது -2015


மரியாதைக்குரியவர்களே,
             வணக்கம். இன்று புன்செய்ப்புளியம்பட்டியில் நடைபெற்ற,''விடியல் விருதுகள்'' வழங்கும் விழாவில் எனக்கு வழங்கிய விருது....தங்களது பார்வைக்காக......








Thursday, July 9, 2015

ஹெல்மெட் அணியலாமா?

மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
    ஹெல்மெட் அணிவது பற்றிய ஃபேஸ்புக் விமர்சனத்திற்கு எனது பதிலுரை தங்களது மேலான கவனத்திற்காக...


    Rajesh Reddy இன் புகைப்படம்.
    Parameswaran Driver, Rajesh Reddy இன் புகைப்படம் ஐப் பகிர்ந்துள்ளார்.
    ஹெல்மெட் அணிவது யாருடைய நலனுக்காக? என சிந்தியுங்க....அவசியம் படியுங்க!..தங்களுடைய மேலான விமர்சனங்களை தெரிவியுங்க...
    அவசியம் படியுங்க,
    ஹெல்மெட் விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்க..அவசியம் தலைக்கவசம் அணியுங்க....
    .சிந்தியுங்க மக்களே,சிந்தியுங்க!!!!.............
    மரியாதைக்குரியவர்களே,
    வணக்கம். தலைக்கவசம் அணியுமாறு சொல்வது நமது உயிர்ப் பாதுகாப்பிற்கு என்பதை மறந்து விட்டு ஏதோ நீதிமன்றத்தின் அதிகாரத்திற்காக? என்பது போல் அல்லவா ஆளாளுக்கு எதிர்மறையான விமர்சனம் செய்யறாங்க!.
    சாலையில் விபத்து என்று நேர்ந்தால் இழப்பீடு கோரி நீதிமன்றம்தாங்க செல்கிறோம்.விசாரிக்கும் நீதிமன்றமானது விபத்துக்காரணம் தலைக்கவசம் அணியாமையால் ஏற்பட்ட தவறே என வழக்கை தள்ளுபடிசெய்து தீர்ப்பளித்தால் என்ன செய்வீர்கள்? இரு சக்கர வாகன ஓட்டிகள் அனைவருக்கும் சாலை பாதுகாப்பு விதிகள் தெரிந்து வைத்துள்ளனரா? என கேட்டறிய வேண்டும்.அடுத்து புதுப்பிக்கும் சாலைகளின் தரத்தைக் கண்காணித்து அரசு ஒதுக்க்கப்படும் நிதியை முழுமையாக செலவழித்து தரமான மூலப்பொருட்களால்தான் சாலைகள் போடப்படுகின்றனவா? இனிமேலாவது ஏற்கனவே போடப்பட்டுள்ள சாலையை பரிசோதனை செய்ய முன்வருவீர்களா? தரமில்லாமல் போட்ட ஒப்பந்ததாரரைக் கண்டித்து உரிய நடவடிக்கை எடுக்க முன் வருவீர்களா? பக்கத்து மாநிலங்களான கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் செல்ல முடியுமா? (அவைகளும் இந்தியாவின் ஒரு பகுதி தானே) நான் அறிந்தவகையில் கர்நாடகாவில் ஆங்காங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் ஆதாரங்களைக்கொண்டு வேகமாக மோட்டார் வாகனங்களில் வேகமாக சென்றாலோ,தலைக்கவசம் அதாங்க ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் பயணித்தாலோ அந்த வாகனத்தின் பதிவு எண்படி உரிமையாளர் முகவரிக்கே தபால்மூலமாக அபராதம் மற்றும் தண்டனைக்கான அறிவிப்பு சென்றுவிடும்.உடனே அபராதத்தை கட்டியே தீர வேண்டும்...இப்போது சொல்லுங்க தமிழ்நாட்டில் நாம் எங்கே இருக்கிறோம்? பக்கத்து மாநிலம் எப்படி சென்றுகொண்டிருக்கிறது?
    அரசியலில் தங்களுக்கு வேண்டாத கட்சியாக இருந்தாலும் பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர்களும் நமது மந்திரிகளே! என்பதை ஏற்றுக்கொள்ளும் நாம் சட்டத்தை எதிர்ப்பது ஏனோ?.
    நுண்ணறிவு ஜீவிகளே உங்களுக்கு ஒரு வேண்டுகோள்.தங்களுடைய ஒற்றுமை மற்றும் அதிகார பலத்தால்,

             மத்திய மோட்டார் வாகன சட்டம்1988-ன் பிரிவு 129 மற்றும்மத்திய மோட்டார் வாகனச்சட்டம்1988 ன்பிரிவு 206 ஐ நீக்கினால் சந்தோசம்தாங்க!...........

      
       இதுபற்றி தங்களுடைய
    கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொள்ள அல்லது ஏற்றுக்கொள்ள தயாராகவே உள்ளேன்.

         இந்த விமர்சனங்களால் சமூகத்திற்கு பயன் அளிக்க வேண்டும் என்பதே எனது பணிவான எண்ணம்..
    என அன்பன்
    C.பரமேஸ்வரன்.(+919585600733)
    paramesdriver@gmail.com
    www.consumerandroad.blogspot.com
    நியாயமான கோரிக்கை தானே நண்பர்களே
  • Parameswaran Driver மரியாதைக்குரிய ராஜ்பிரின்ஸ் அவர்களே,வணக்கம்.தங்களது விருப்பத்திற்கு மிக்க நன்றிங்க!......
  • Parameswaran Driver

    உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...

Wednesday, July 8, 2015

குளியாடா - தாளவாடி - குளியாடா....

தாளவாடி-குளியாடா வழித்தடமும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும்..

மரியாதைக்குரியவர்களே,
           வணக்கம். மலைவாழ் பள்ளி மாணவர்களுக்காக தாளவாடியிலிருந்து குளியாடா இயக்கப்படும் அரசு பேருந்து படும்பாடு.சொல்லி மாளாது.காரணம் வழித்தடத்தின் அவலநிலைதாங்க.கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் அதே சமயம் அப்பகுதி மக்களை நினைத்தால்தாங்க பரிதாபமாக இருக்கிறது.

             மேலே கண்டுள்ள புகைப்படங்கள் 2015ஜூலை 08 ந் தேதி இன்று காலை   அரே பாளையம் ,மாவள்ளம் தாண்டி தேவர் நத்தம் ஊருக்கு முன்னதாக உள்ள சாலைவளைவில்  ஏற்பட்ட சரக்கு வாகனம் ஒன்று விபத்துக்கு ஆளாகியபோது பேருந்து மேற்படி இயக்கமுடியாமல் தடை ஏற்பட்டு நின்றபோது காலை ஏழுமணியளவில் எடுத்த படங்கள். வளைவு நெளிவாகவும் ஏற்ற இறக்கமாகவும் இருக்கும் ஒருவாகன மலைப்பாதையான இந்தச்சாலை   மிகவும் மோசமான நிலையில் பழுது ஏற்பட்டு இருப்பதே காரணமாகும்.
 ஆனால் பேருந்து இயக்கும் கால அட்டவணையோ????குளியாடா தொடங்கி ஆசனூர், தாளவாடி,திகனாரை,பனகஹள்ளி வரை பள்ளி மாணவர்களுக்காக இடைவிடாது ஓட்டவேண்டிய சூழ்நிலை!.....
  ஒருமுறையாவது அந்த சாலையினை சென்று பார்வையிட்டு வாங்க..அரசுப் பேருந்தும் அப்பகுதி மக்களும் படும்பாடு புரியும்..


Sunday, June 28, 2015

Thursday, June 25, 2015

மினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு!

      
மரியாதைக்குரியவர்களே,
         வணக்கம். 
இந்திய அரசியல் சாசனம் கோட்பாடு 35௦......
என்ன சொல்கிறது.?
.
1. உங்கள் கோரிக்கைகை மனுக்களை மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகளிடம் நீங்கள் கொடுக்கலாம்.
.
2. உங்கள் கோரிக்கைகை மனுக்களை மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகளிடம் நீங்கள் உங்கள் தாய் மொழியில் கொடுக்கலாம்.


 சட்டக் கல்லூரியில் சட்டம் படித்தவர்கள் தான் சட்டம் பற்றிப் பேச வேண்டுமா ?
.
அப்படி என்றால் கு.வி.மு.ச. பிரிவு 2 (17 ) தேவை இல்லையே ....
.1. அமைப்பின் முகவரி தொடர்பாக.... நமது அமைப்பின் அலுவலகம் . . . 3/17 பிராமிண் வீதி, கரகம் பாக்கம், . போரூர், சென்னை. . – 6௦௦ 116. ஆகும்.

மினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு!
கேன் வாட்டர், மினரல் வாட்டர் என்று பணத்தைத் தண்ணீராக செலவு செய்யும் காலமிது. ஆனால், ''வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும்,
அருமையான மினரல் வாட்டர் கிடைத்துவிடும். மாசம் நூத்துக் கணக்கான ரூபாய் மிச்சமாகும்!'' என்கிறார் இந்திரகுமார். இதையும் இவரே
பரிசோதித்துப் பார்த்திருக்கிறார்.
''மைசூர்ல இருக்கற அஜய் நினைவு குடிநீர் நிறுவனத்தைச் சேர்ந்தவங்க, செம்புப் பாத்திரத்துல தண்ணியை வெச்சி ஒரு ஆராய்ச்சி நடத்தினாங்க.
அதோட முடிவுல, 'செம்புப் பாத்திரத்தில் 24-மணி நேரம் குடிநீரை வைத்திருந்து பரிசோதித்துப் பார்த்ததில், மனிதர் களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும்
நுண்ணுயிரிகள் எதுவும் அந்த நீரில் இல்லை'னு அந்த நிறுவனம் சொல்லியிருக்கு. இந்தத் தகவல் தெரிஞ்சதிலிருந்து செம்புக் குடத்துல
வெச்சிருந்துதான் தண்ணியைக் குடிக்கிறோம்.
எங்கக் கிணத்துல கிடைக்கறத் தண்ணி, செம்புக் குடத்துக்குப் போனதும் மினரல் வாட்டர் மாதிரி அருமையா மாறிடுது. செம்பு குடம் இல்லனாலும்
பரவாயில்லை. ஒரு கையளவு செப்பு தகட்டை குடத்துக்குள்ள போட்டு வெச்சா கூட உங்க வீட்டுத் தண்ணி தரமானதா மாறிடும். மூணு நாளைக்கு ஒரு
தரம் செம்பு தகட்டை எடுத்துப் பார்த்தா பாசி புடிச்ச மாதிரி இருக்கும். அதெல்லாம் பாக்டீரியாக்கள்தான். தகட்டைச் சுத்தமா கழுவிட்டு திரும்பவும்
குடத்துக்குள்ள போட்டு வைக்கலாம். அந்தக் காலத்துல பல வீடுகள்ல செம்புக்குடம்தான். இன்னிக்கும் சில கிராமங்கள்ல செம்பு குடத்துலதான் தண்ணி
வெச்சி ருந்து குடிக்கறாங்க’’ என்று ஆதாரங்களை எடுத்து வைத்துப்பேசினார்.

நன்றி --- இன்று ஒரு தகவல்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம் தெரியாத உண்மை

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.

                உபயோகமான தகவல்கள் !!!
வாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர், சாலைகளில் இடம் பெற்றவை குறித்து அறிந்திருப்பதில்லை.
* பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம்.
* சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு. அபாயகரமான அல்லதுவாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோ எரியவிட வேண்டும்.
* சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இருக்கும்போது, அனைத்து விளக்குகளையும் எரியவிடக் கூடாது.
* ரோட்டின் நடுவில் கோடுகளை குறிப்பிட்ட இடைவெளியில் விட்டுவிட்டு போட்டிருந்தால், ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச் செல்லலாம் என்று பொருள். அதேசமயம் தொடர்ச்சியான நீண்ட கோடுகளாக போட்டிருந்தால் முந்தக் கூடாது என்று பொருள்.
* ரோட்டின் நடுவில் தொடர்ச்சியாக இரட்டைக் கோடுகள் போட்டிருந்தால், அதை ஒரு தடுப்புச் சுவராக கருதவேண்டும்.
* ஓட்டுனருக்கு 20.5 மீ (67 அடி) தொலைவில் இருந்து வரும் வாகனத்தின் பதிவு எண்ணை படிக்க முடிந்தால், கண்கள் நல்ல பார்வையுடன் உள்ளது என பொருள். எனவே, ஆண்டுக்கு ஒருமுறை ரத்தஅழுத்தம், சர்க்கரை, கண் பரிசோதனை செய்வது நல்லது.
* கனகர வாகனங்களின் பின்புறம் சிவப்பு நிற முக்கோண வடிவச் சின்னம் உள்ளது. இது முற்றிலும் தவறு. மோட்டார் வாகன சட்டப்படி, அது ஒரு எச்சரிக்கை சின்னம். ரோட்டில் ஒரு வாகனம் பழுதாகி நின்றாலோ, அவசர நிலையிலோ அதை வாகனத்தின் பின்புறம் 15 அடி தள்ளிதான் வைக்க வேண்டும்.
* நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனத்திற்கு வசதியாக முகப்பு விளக்குகளை 250 மீ.,க்கு முன்பே “டிம்’ செய்ய வேண்டும்.
* வளைவுகளில் அதிவேகமாக ஓட்டிச் சென்றால் விபத்து நடக்கும். அதற்கு “இன் ஸ்லோ-அவுட் பாஸ்ட்’ என்ற முறையில் செல்ல வேண்டும். அதாவது, மைய ஈர்ப்பு விசை, விலக்கு விசைகளின் அடிப்படையில், வளைவுகளில் நுழையும்போது மெதுவாகவும், பின் ஆக்ஸிலேட்டரை லேசாக அழுத்தியும் செல்ல வேண்டும். ஆனால் பலர் வேகமாகவே நுழைந்து பிரேக் அடித்து திரும்புகின்றனர். இதனால் வாகனம் கவிழ்ந்துவிடும்.
* கார்களில் செல்வோர் “சீட் பெல்ட்’ அணியும்போது
சட்டைப் பையில் போன், பேனா, சில்லரை காசுகள் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். பெண்கள் அதிக நகை அணிந்திருக்கக் கூடாது. அசம்பாவிதம் நேரிட்டால் அந்த பொருட்களே பயணிக்கு எமனாக மாறிவிடும்.
* நான்கு வழிச் சாலையின் நடுவே மீடியனில் அரளி செடிகளையே வைத்துள்ளனர். காரணம் எதிரே வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு ஒளியில் இருந்து கண்களை பாதுகாக்கும். வறட்சியையும் தாங்கும் இச்செடிகளின் வேர்கள் அதிகம் வெளிவராது.
இது வாகனங்களின் கார்பன் டை ஆக்சைடை அதிகம் “அப்சர்வ்’செய்கிறது. விலங்குகளும் இவற்றை உண்பதில்லை.
* நமக்கு அவசர அழைப்பு எண் 108 என்பது தெரியும். மற்றுமொரு எண் 112 என்பது பலருக்கு தெரியாது. மொபைல் போன் “சிக்னல்’ இல்லாத இடங்களிலும், மொபைலின் “கீ லாக்’ செய்யப்பட்ட நிலையிலும், ஏன் “சிம்கார்டு’ இல்லாத நிலையிலும்கூட இந்த எண்ணை அவசர உதவிக்கு பயன்படுத்தலாம்.
மொத்தத்தில் விவேகமான வேகமே விபத்துக்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்.