Wednesday, April 15, 2015

குடும்ப உறவு...

மரியாதைக்குரியவர்களே,
         வணக்கம். இதுதாங்க நமது குடும்ப உறவு...

நீ அழுத போது உன்னை தரதரவென்று இழுத்துப் போய் பள்ளிக் கூடத்தில் சேர்த்தேன் படித்து பெரிய ஆளாக
வர வேண்டும் என்ற எண்ணத்தில்

இன்று நான் அழுகிறேன் என்னை இழுத்துப் போய்
முதியோர் இல்லத்தில் சேர்க்கிறாயே
அங்கே நான் எதை படிக்க வேண்டுமென்று

பத்துமாதம் உன்னை வயிற்றில் சுமந்தபோது பாரமாக
நான் நினைக்கவில்லை..
உன் பத்தினி வந்ததும் உன் வீட்டில் நான் ஒரு ஓரமாக
இருப்பதையே நீ பாரமாக நினைக்கிறாயே

நீ ஓடி ஓடி விளையாடிய போது நீ செல்லும் இடமெல்லாம்
உன் பின்னாலே வந்து உனக்கு சோறு ஊட்டி
உன் வயிறு நிறைந்ததில் என் வயிறும் மனமும் நிறைந்தது...
எனக்கு வயிறாற உணவு வேண்டாம்..
ஒரு வேளையானலும் உன் வீட்டு சோறு போதும்...

உன் வருங்காலத்திற்காக உன்னை பெற்று வளர்த்து
படிக்க வைத்து,கல்யாணம் முடித்து
நீ வாழ்வதற்காக உன்னை ஆளாக்கினேன்....
என் எதிர்காலத்திற்காக நான் சாவதற்கு என்னை நீ
பார்த்துக் கொள்ளக் கூட மறுக்கிறாய்....

பிள்ளையேப் பெறாமல் இருந்திருந்தால் மலடியாகிருப்பேன் யாருமே இல்லாதிருந்தால்
அனாதையாகிருப்பேன்...
பிள்ளைகளைப் பெற்றும் இன்று நான் முதியோர் இல்லத்தில்....

நான் மலடியா...
நான் அனாதையா...
தாயின் ஏக்கம்....
------------------------------------------------நன்றி யாரோ ஒருவன் !

Thursday, March 19, 2015

அருள்மிகு பண்ணாரி அம்மன் கோவில் திருவிழா -2015

 மரியாதைக்குரியவர்களே,
         வணக்கம்.பரமேஸ் டிரைவர் வலைப்பக்கத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். நம்ம பண்ணாரி அம்மன் கோவில் திருவிழா- வருகிற 2015ஏப்ரல் 6ஆம் தேதி முதல் ஏப்ரல் 13 ஆம் தேதி வரை

 

Wednesday, March 18, 2015

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.பற்பசையில் நிக்கோட்டின் உள்ளது.
" உங்க டூத்பேஸ்ட் " - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்..!

அதுல நிக்கோடின் இருக்குன்னு


DISPAR ( Delhi Institute of Pharmaceutical Sciences & Research )
நிறைய இந்திய டூத்பேஸ்ட்ல நிக்கோடின்
இருக்குன்னு கண்டுபிடிச்சி இருக்காங்க..

( நிக்கோடின் கேன்சரை உண்டாக்கும் )
Colgate, Vicco, Dabur, Himalaya இப்படி 24 Brands எடுத்து சோதனை பண்ணினதுல 7 Brands-ல நிக்கோடின் கலந்து இருக்கறது கண்டுபிடிக்கப்ப­ட்டு இருக்கு..
ஒரு சிகரெட்லயே 2mg தான் நிக்கோடின் இருக்காம். ஆனா Colgate Herbal-ல அதிகபட்சமா 18mg /gm நிக்கோடின் இருக்காம்..
அப்ப நாம ஒரு தடவை இந்த பேஸ்ட்ல பல்லு விளக்கினா... அது 9 சிகரெட் குடிச்சதுக்கு சமம்..
இந்த ஆராய்ச்சி முடிவு 2011-லயே வந்திருச்சி,

Thursday, February 12, 2015

திருமணப்பொருத்தம்

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.
 திருமண பொருத்தம்
"திருமணம் ஆயிரம் காலத்து பயிர்", "திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.",  
             இவை திருமணத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பழமொழிகள் ஆகும்.
                  திருமணம் ஒருவருடைய வாழ்வில் திருப்பு முனையாக கருதப்படுகிறது. பல்வேறு நலங்களையும் வளங்களையும் தரக்கூடிய திருமணத்தை பற்றி ஆண் மற்றும் பெண்ணுக்கு பல்வேறு எதிர்பார்ப்புகள் உள்ளன. 
 முன்பின் தெரியாத ஒருவரை மணக்கும் போது அவர் நமக்கு பொருத்தமானவராக இருப்பாரா என்று எப்படி அறிவது?. இதற்குத்தான் ஜோதிடம் உதவுகிறது. 
                 ஆண், பெண் இருவருக்கும் உள்ள மன பொருத்தம், உடல் பொருத்தம் இவற்றை அறிந்து இருவரையும் வாழ்க்கை பயணத்தில் சேர்க்கலாமா? வேண்டாமா? என முடிவெடுக்க உதவுவதே ஜோதிடமாகும்.
         எட்டு வகையான திருமணங்கள் மனுஸ்மிருதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
             அவை தெய்வ விவாகம், பிரம்ம விவாகம், அரிஸ விவாகம், ப்ரஜபடிய விவாகம், அசுர விவாகம், கந்தர்வ விவாகம், ராக்ஷச விவாகம் மற்றும் பிசாச விவாகம் என்பனவாகும்.சாதாரணமாக arranged marriage என்பது ப்ரஜபடிய விவாகமாகும்.
                      ஜாதகத்தின் மூலம் இருவரின் ஆயுள், உடல் நிலை, மன நிலை, குழந்தை பெறும் திறன், விட்டுகொடுக்கும் தன்மை, பாலியல் ஈடுபாடு இவற்றை அறிந்து தகுந்தவர்களை ஜோடி சேர்க்க முடிகிறது.
                     ஜாதகத்தின் இரண்டாம் வீடடை ஆராய்வதன் மூலம் குடும்ப வாழ்க்கை பற்றியும், நான்காம் வீட்டின் மூலம் வீடு, வாகனம் மற்றும் தாயார் பற்றியும் , ஐந்தாம் வீட்டின் மூலம் குழந்தை செல்வத்தை பற்றியும், ஏழாம் வீட்டின் மூலம் வாழ்க்கை துணையை பற்றியும் எட்டாம் வீட்டின் மூலம் ஆயுள் பற்றியும் அறிந்து கொள்ள முடிகிறது. 
                    அத்துடன் இராசி, நட்சத்திர அடிப்படையில் பத்து பொருத்தங்கள் பார்க்கப்படுகிறது. மேலும் செவ்வாய் தோஷம், சர்ப்ப தோஷம், பாவ கிரக தோஷம் இவற்றையும் பார்க்க வேண்டும். 
          ஒரு ஜாதகத்தில் தோஷம் இருப்பின் மற்ற ஜாதகத்திலும் அது போன்ற தோஷம் இருக்க வேண்டும்.
                ஜாதகத்தில் தசா சந்தி இருக்க கூடாது. தாச சந்தி என்பது இருவருக்கும் ஒரே சமயத்தில் ஒரு தசை முடிந்து அடுத்த தசை ஆரம்பமாவதாகும். 6 மாத கால இடைவெளிக்குள் இருவது ஜாதகத்திலும் தசை மாற்றம் ஏற்படுவது நல்லதல்ல. இத்தகைய ஜாதகங்களை சேர்க்க கூடாது. 
              அதே போல் சம தசை என்பது ஆண் பெண் இருவருக்கும் ஒரே கிரகத்தின் தசை நடைபெறுவதாகவும். உதாரணமாக இருவருக்கும் சனி தசை நடைபெற்று சனி இருவருக்கும் ஜாதகத்தில் சரியாக அமையாமல் தீய பலன் தருவதாக இருந்தால் திருமணம் தவிர்க்கப்பட வேண்டும்.

அயனாம்சம்

மரியாதைக்குரியவர்களே,
                  வணக்கம்.இந்தப்பதிவில் அயனாம்சம் பற்றி காண்போம்.
                 அயனாம்சம்
                   ஜோதிடம் என்பது கடினமான கணக்கீடுகளையும் வானவியல் கோட்பாடுகளையும் உள்ளடக்கியது. ஜோதிட அடிப்படையை புரிந்துகொள்ள வானவியல் அடிப்படைகளை ஓரளவு புரிந்துகொள்வது அவசியம். பூமி தன்னை தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி சுற்றிவருவதை நாம் அறிவோம். 
          இதை பூமியிலிருந்து பார்க்கும்போது சூரியன் பூமியை சுற்றி வருவது போல் தோன்றும். இந்த சூரியனின் வட்டப்பாதையே ecliptic எனப்படுகிறது. பூமியை சுற்றி கிழக்கு மேற்காக செல்லும் கற்பனை கோடுகளுக்கு அட்ச ரேகை (latitude) என்று பெயர். 
 இதில் பூமியை வடக்கு தெற்காக இரண்டாக பிரிக்கும் கோடு பூமத்திய (equator) ரேகையாகும். 
          இது 0 பாகை latitude ல் அமைந்துள்ளது. இதற்கு வடக்கில் அமைந்துள்ள இடங்கள் north latitude எனப்படும். இது 90 பாகை வரை (வட துருவம் வரை) உள்ளது. தெற்கில் அமைந்துள்ள இடங்கள் south latitude எனப்படும். இது 90 பாகை வரை தெற்கே உள்ளது.

                பூமியை சுற்றி வடக்கு தெற்காக மேலும் கீழுமாக செல்லும் கற்பனை கோடுகள் தீர்க்க ரேகை (longitude) எனப்படும். இதில் லண்டனில் உள்ள கிரீன்விச் அருகில் செல்லும் கோடு prime meridian எனப்படும். இது 0 பாகை அளவுள்ளது. இதிலிருந்த கிழக்கே உள்ள பகுதிகள் east longitude எனப்படும்.மேற்கே உள்ள பகுதிகள் west longitude எனப்படும். இந்த அட்ச ரேகை தீர்க்க ரேகை அமைப்பு பூமியில் ஒரு குறிப்பிட்ட இடத்தை அடையாளம் காண உதவுகிறது. 

              வான மண்டலத்தில் equator ன் நீட்சி (extension) celestial equator எனப்படும். பூமியிலிருந்து நட்சத்திர மண்டலம் வரை இதை கற்பனை செய்து கொள்ள வேண்டும். அது போல் celestial longitude உள்ளது.
zodiac எனப்படும் ராசி மண்டலம் மேஷம் (Aries) முதல் மீனம் (Pisces) வரை 12 ராசிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 

               பூமி தன் அச்சில் சுமார் 23.5 பாகை சாய்வாக சுற்றி வருகிறது. எனவே ecliptic எனப்படும் சூரியனின் சுற்று பாதை celestial equator க்கு 23.5 பாகையில் சாய்ந்துள்ளது. இந்த ecliptic, celestial equator ஐ சந்திக்கும் இடமே equinox எனப்படும். இது இரண்டு இடங்களில் ஏற்படுகிறது. சூரியன் equoator ஐ தெற்கிலிருந்து வடக்காக கடக்கும்போது ஒருமுறை. இது vernal equinox எனப்படும். இது மார்ச் 21 ல் ஏற்படும். இந்த நாளில் சூரியன் நிலநடுகோட்டிற்கு நேர் மேலே வருகிறது. இந்த நாளில் இரவு பகல் சமமாக இருக்கும். வடக்கிலிருந்து தெற்காக கடக்கும்போது autumnal equinox எனப்படும். இது செப்டம்பர் 22 ல் ஏற்படும். இந்த vernal equinox ஏற்படும் இடமே ராசி மண்டலத்தில் 0 பாகையாகும். இதுவே மேஷ ராசியின் தொடக்கம் ஆகும். 
                  பூமி தன் அச்சில் சுழல்வதை அறிவோம். அனால் இந்த அச்சும் குறிப்பிட்ட வேகத்தில் சுழல்கிறது. இந்த அச்சு 72 வருடத்தில் 1 பாகை அளவு நகர்கிறது. அதாவது வருடத்திற்கு 50. 3 விகலை அளவு முன்னோக்கி நகர்கிறது (1/60 பாகை ஒரு கலை, 1/60 கலை ஒரு விகலை ஆகும்). எனவே சுமார் 25800 வருடங்களில் 360 பாகை சுழன்று மீண்டும் பழைய இடத்திற்கு வருகிறது. இந்த மேற்கு நோக்கிய நகர்வு காரணமாக vernal equinox நிகழ்வு முன்கூட்டியே நிகழ்ந்துவிடுகிறது. ஆனால் 0 பாகை மேஷம் வானில் நிலையாக உள்ள நட்சத்திர அடிப்படையில் கணிக்கப்படுகிறது. 
                  சூரியன் முழு சுழற்சியை முடித்துமீண்டும் குறிப்பிட்ட நட்சத்திரத்தின் அருகில் வருவதே sideral year எனப்படும் நட்சத்திர அடிப்படையிலான வருடமாகும். ஒரு vernal euinox க்கும் அடுத்த vernal equinox க்கும் இடைபட்ட காலம் tropical year எனப்படும். இந்த tropical year, sidereal year ஐ விட 20 நிமிடங்கள் குறைவு. வருடத்திற்கு 20 நிமிடம் என்பது 25800 வருடங்களில் 1 வருடத்தை எட்டும். எனவே இந்த vernal equinox 25800 வருடங்களில் ஒரு முழு சுற்று சுற்றி மீண்டும் 0 பாகை மேஷம் க்கு வந்துவிடுகிறது. இந்த முன்னோக்கிய நகர்வே precession of equinox எனப்படும்.
ayanamsa precession of equinox

அயனாம்சம்

இந்த 50.3 விகலை முன்னோக்கிய நகர்வினால் ஒரிஜினல் மேஷம் வர மேலும் வருடத்திற்கு 50.3 பாகை சூரியன் நகர வேண்டும். கி.பி 293 ல் sideral zodiac மற்றும் tropical zodiac ஒரே இடத்தில் இருந்தன. எனவே கி.பி 293 ல் அயனாம்சம் 0 பாகை. தற்போது கி.பி 2013 ல் அயனாம்சம்: (2013-293)=1720*50.3=86516 விகலை. 86516/60=1441.9333 கலை 1441.9333/60=24.03222 பாகை. இந்திய ஜோதிடத்திற்கும் மேற்கத்திய ஜோதிடத்திற்கும் உள்ள முக்கிய வேறுபாடுகளில் ஒன்று இந்த அயனாம்சம். மேற்கத்திய ஜோதிடத்தில் அயனாம்சம் இல்லை. அது நகரும் zodiac ஐ பின்பற்றுகிறது. அதாவது எப்போது vernal equinox ஏற்படுகிறதோ அதுதான் 0 பாகை மேஷம். அனால் இந்திய ஜோதிடம் அயனாம்சத்தை கணக்கில் எடுத்துகொண்டு அந்த வித்தியாசத்தை கழிக்கிறது. இந்திய ஜோதிடத்தில் கிரக நிலைகள் Nirayana longitude (அயனம் இல்லாத) எனப்படுகிறது. மேற்கத்திய முறையில் Sayana longitude எனப்படுகிறது.
இந்த அயனாம்ச அளவில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. வெவ்வேறு நிபுணர்கள் கணித்த அயனாம்சத்தில் சிறிது வேறுபாடு உள்ளது. இதில் பெரும்பாலானோர் ஏற்று கொள்வது லகிரி அயனாம்சம் எனப்படும் திருக்கணித முறையாகும். இது அறிவியல்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டதாகும்.

இராசி,லக்னம்,நட்சத்திரம்,கிரகம்,சிறு குறிப்பு...

மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.இந்தப் பதிவில் இராசி மண்டலம் பற்றிக் காண்போம்.
 இராசி மண்டலம்
ஜாதகத்தில் 12 ராசி கட்டங்கள் இருப்பதை அறிவோம். இது வான மண்டலத்தில் பூமியை சுற்றியுள்ள zodiac எனப்படும் இராசி மண்டலமாகும். 360 பாகை சுற்றளவுள்ள இந்த இராசி மண்டலம் 30 பாகை அளவுள்ள 12 இராசிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் Aries எனப்படும் மேஷம் 0 பாகையில் ஆரம்பமாகும் முதல் இராசியாகும். Pisces எனப்படும் மீனம் 330 பாகையில் ஆரம்பித்து 360 பாகையில் முடியும் கடைசி இராசியாகும்.
மேற்கண்ட படத்தில் பூமியை சுற்றியுள்ள ராசி மண்டலம் மற்றும் 12 ராசிகளை அறிகிறோம். பூமியிலிருந்து பார்க்கும்போது சூரியன் பூமியை சுற்றி வருவதாக தோன்றும். இந்த சுற்று பாதை ecliptic எனப்படுகிறது. இந்த ecliptic ராசி மண்டலத்தின் மையபகுதியில் செல்கிறது. இராசி மண்டலம் இதற்கு மேல் 9 பாகையும் கீழ் 9 பாகையும் வியாபித்துள்ளது. இந்த பகுதிக்குள் தான் புதன், சுக்கிரன், செவ்வாய், வியாழன், சனி முதலான கிரகங்கள் காணபடுகின்றன.
ஜாதகத்தில் எவ்வாறு கிரகங்கள் குறிக்கப்படுகின்றன? ஒருவர் பிறக்கும்போது ராசி மண்டலத்தில் உள்ள கிரகங்களே கட்டத்தில் குறிக்கப்படுகிறது. பூமியிலிருந்து பார்க்கும்போது கிரகங்கள் எந்த ராசியில் உள்ளதோ அதுவே ஜாதகத்தில் கிரகத்தின் நிலையாகும். ஜோதிடப்படி ஒவ்வொரு ராசிக்கும் ஒரு ஆட்சி கிரகம், பாலினம், ஜாதி, குணம், திசை உள்ளது. அவற்றை கீழ்கண்ட அட்டவணையில் காண்போம்.
<
எண்ராசிSignஅதிபதிதிசைகுணம்ஜாதிபாலினம்உடல் பாகம்
1மேஷம்Ariesசெவ்வாய்கிழக்குநெருப்பு, சரம்க்ஷத்ரியஆண்தலை
2ரிஷபம்Taurusவெள்ளிதெற்குமண், ஸ்திரம்வைஷ்யபெண்முகம்
3மிதுனம்Geminiபுதன்மேற்குகாற்று, உபயம்சூத்திரஆண்தோள்
4கடகம்Cancerசந்திரன்வடக்குநீர்,சரம்பிராமணபெண்மார்பு
5>சிம்மம்Leoசூரியன்கிழக்குநெருப்பு,ஸ்திரம்க்ஷத்ரியஆண்இருதயம்,வயிறு
6கன்னிVirgoபுதன்தெற்க்குநிலம்,உபயம்வைஷ்யபெண்அடிவயிறு
7துலாம்Libraவெள்ளிமேற்குகாற்று,சரம்சூத்திரர்ஆண்அடிவயிறு
8விருச்சிகம்Scorpioசெவ்வாய்வடக்குநீர்,ஸ்திரம்பிராமணபெண்பாலுறுப்பு
9தனுசுSagittariusவியாழன் கிழக்குநெருப்பு,உபயஷத்ரியஆண்தொடை
10மகரம்Capricornசனிதெற்குநிலம்,சரம்க்ஷத்ரியபெண்முழங்கால்
11கும்பம்Aquariusசனிமேற்குகாற்று,ஸ்திரம்சூத்திரர்ஆண்கால்கள்
12மீனம்Piscesவியாழன்வடக்குநீர்,உபயம்பிராமணபெண்பாதம்
இதில் குணம் என்னும் காலத்திற்கு கீழ் வரும் சரம், ஸ்திரம், உபயம் முறையே சர ராசி (Movable sign), ஸ்திர ராசி (Fixed sign), உபய ராசி (common sign) ஆகியவற்றை குறிக்கும்.
பூமி தன்னை தானே சுற்றிகொள்வதால் 24 மணி நேரத்தில் ராசி மண்டலத்தை முழுவதும் சுற்றிவிடுகிறது. ஒவ்வொரு ராசியும் கிழக்கே உதயமாகி மேற்கே மறைவதுபோல் தோன்றும். ஒரு ராசி சுமார் 2 மணி நேரம் உதயமாகும். ஜாதகத்தில் லக்னம் என்பது ஒருவர் பிறக்கும்போது கீழ்வானில் (Eastern horizon) உதயமாகும் ராசியாகும். லக்னம் என்பதே முதல் வீடாக ஜாதகத்தில் குறிக்கப்படுகிறது.
ஒருவர் பிறக்கும்போது சந்திரன் இருக்கும் ராசியே ஜன்ம ராசியாகும். சந்திரன் இருக்கும் நட்சத்திரமே ஜன்ம நட்சத்திரமாகும்.

ஜாதகத்தில் வீடுகள்

மரியாதைக்குரியவர்களே,
            வணக்கம்.தங்களை இனிதே வரவேற்கிறேன்.
           ஜாதகத்திலுள்ள வீடுகள் பற்றி இந்தப்பதிவில் காண்போம்.
 ஜாதகத்தில் வீடுகள்
ஜாதகத்தில் முக்கியமானவை
 ராசி சக்கரம், நவாம்ச சக்கரம் மற்றும் பாவ சக்கரம்  
ஆகியனவாகும்.
 இதில் ராசி சக்கரம் அடிப்படையானது.
          இதை வைத்தே பெரும்பாலான பலன்கள் கணிக்கப்படுகின்றன. இதில் லக்கினம் முதல் வீடாக கருதப்படுகிறது.
 நவாம்சம் என்பது ராசியை ஒன்பதாக பிரிப்பதாகும். பாவ சக்கரம் என்பது துல்லியமான கணக்கீடாகும்.  
           இதில் ஒரு வீடு என்பது ஒரு முழு ராசி அல்ல. ஒன்றுக்கு மேற்பட்ட ராசிகளில் ஒரு பாவம் வியாபித்திருக்கலாம். ராசியில் ஒரு வீட்டில் இருக்கும் கிரகம் பாவத்தில் வேறு வீட்டில் இருக்கலாம். பாவக சக்கரம் கணிக்க பாவ ஸ்புடங்கள் கணிக்க வேண்டும். இதற்கு லக்கினம் எனப்படும் Ascendant, அதற்கு நேர் எதிரே இருக்கும் Descendant பத்தாம் வீடு எனப்படும் Midheaven அதற்கு நேர் எதிரே இருக்கும் நான்காம் வீடு எனப்படும் Nadir இவற்றை கணிக்க வேண்டும். இதற்கு நிறைந்த கணித அறிவும் table of bhavas மற்றும் ephemeris தேவைப்படும். ஆனால் இதெல்லாம் கணிப்பொறி காலத்திற்கு முன். இப்பொழுது கணிணியில் பிறந்த தேதி, நேரம் மற்றும் இடம் இவற்றை உள்ளீடு செய்தால் சில செய்து வினாடிகளில் அனைத்து கணக்கீடுகளையும் செய்து கணினி நமக்கு தருகிறது. பல மணி நேரங்களில் செய்ய வேண்டிய கணக்குகள் சில வினாடிகளில் முடிக்கப்படுகிறது! எனவே ராசி சக்கரம் என்பது தோராயமான பாவ சக்கரமாகும்.

ஒவ்வொரு பாவத்திற்கும் காரகங்கள்

லக்கின பாவம்

உடல்வாகு, நிறம், கவர்ந்திடும் அழகு, செல்வம், உடலில் உள்ள இரத்தத்தின் தன்மை, அழகிய உள் பாகங்களும் தலைப்பகுதியும், புகழ், வாழ்க்கையில் அனுபவிக்கும் அனைத்து சுகங்களையும், சுப நிகழ்ச்சிகளையும், அதனால் ஏற்படும் மகிழ்ச்சியையும் அனுபவிக்கப் பெறும் ஆயுளையும் குறிக்கும் பாவமாகும். அடித்தளம் பலமாக அமைந்தால்தான் கட்டிடமும் உறுதியாக ஆண்டாண்டு காலத்திற்கு நிலைத்திருக்க இயலும். அதே போன்று லக்னமும் பலமாக அமைந்தால்தான் அனைத்தும் அனுபவிக்கும் யோகத்தை நீண்ட ஆயுளைத் தரும். வாழ்க்கை வசதிகளை அனுபவிக்க செல்வம் இருந்தால் மட்டும் போதாது. அதை அனுபவிக்க உடல் நலமும் தேவைதான். உடல் நலத்தோடு அனுபவிக்க ஆயுளையும் பெற வேண்டும். இதற்கு இலக்கின பாவமும் லக்கினாதிபதியும் பலமாக அமைய வேண்டும்.

இரண்டாம் பாவம்

தனம், குடும்பம், நேத்திரம், கல்வி, வாக்கு, பேசும் திறன், கலைகளை கற்கும் ஆர்வம் (சாஸ்திரம்), மனம், நடை, நவரத்தினங்கள், நிலையான கொள்கை, உணவு, முகம், நாக்கு இவைகளை குறிக்கும். உண்மையே பேசுதல், பொய்யும் சொல்லுதல், முன்கோபம், கண்களில் வலது கண், வஞ்சக நெஞ்சமா, பெருந்தகையாளரா என்பதை தெரிவிக்கும் பாவம். சுவை அறிந்து உண்பதையும் குறிக்கும். முக்கியமாக தனஸ்தானம் எனப்படும்.

மூன்றாம் பாவம்

எதிரியை வெற்றி கொள்ளும் திறமை, வேலையாட்கள், இசை, இசையில் ஆர்வம், அதில் தொழில் அமையும் நிலை, வீரியம், அதாவது ஆண்மை சக்தி, தைரியம், எதையும் துணிவுடன் பயமின்றி செயலாற்றுதல், போகம், உடல் உறவில் தணியாத தாகம், இளைய உடன்பிறப்புகள், காதில் ஏற்படும் நோய், காது கேளாத நிலை, ஆபரணங்கள் அணியும் யோகம், தங்கம், வெள்ளி, வயிர ஆபரணங்களை பெறும் யோகம், உணவு அருந்தும் பாத்திரங்கள், மற்றவர்களிடம் பணியாற்றும் நிலை, அதனால் பெறும் நன்மைகள், இவைகளை குறிக்கும். குறிப்பாக சகோதர ஸ்தானம் எனப்படும்.

நான்காம் பாவம்

உயர் கல்வி, வாகனம் வீட்டில் நடைபெறுகின்ற சுப நிகழ்ச்சிகள், வசிக்கும் வீடு, வியாபாரம், தாய் நலம், தாயின் உறவு, உறவினர்களின் நிலை, அவர்களுடன் ஏற்படும் உறவு, புகழ்பெறும் நிலை, புதையல் கிடைக்கும் யோகம், தாயின் ஒழுக்கம், பால் பால் பொருட்கள், பசு பண்ணை, திருதல தரிசனம், சிறுதூர பிரயாணம், அதனால் ஏற்படும் நன்மை, ஆலோசனை பெரும் வாய்ப்பு, கனவுகள், மருந்துகள், அதிகாரம் செய்யும் தகுதி, இவைகளையும் பொதுவாக வீட்டை பற்றி சுகத்தை பற்றி தெரிவிக்கும் பாவமாகும்.
  • 4 ஆம் பாவத்தையும் புதனின் பலத்தையும் அறிந்து ஒருவரின் கல்வி அதாவது உயர் கல்வி பெறுவதை அறியலாம்.
  • 4 ஆம் பாவத்தையும் சுக்கிரனின் பலத்தையும் அறிந்து கார், பைக் போன்ற வாகனம், ஆபரணம் பெறும் நிலையை அறியலாம்.
  • 4 ஆம் பாவத்தையும் செவ்வாயையும் அறிந்து அவர்களின் பலத்தை பொறுத்து அசையாத சொத்துகள் அதாவது வீடு, நிலம், தோட்டம், பண்ணை வீடுகள் இவற்றை அறியலாம்.
  • 4 ஆம் பாவத்தையும் சந்திரனின் பலத்தையும் அறிந்து தாயின் நிலை, ஆயுள், பாசம் இவற்றை அறியலாம்.
  • 4 ஆம் பாவத்தையும் குருவின் பலத்தையும் அறிந்து வாழ்க்கையில் பெறும் அனைத்து வசதிகளையும், சுகம் பெறும் நிலையையும் புகழ் பெறும் தகுதியையும் அறியலாம்.

ஐந்தாம் பாவம்

மாமன்மார்களின் உறவு, தந்தை வழி உறவுகள், குழந்தை செல்வம் பூர்வ புண்ணியம், சென்ற பிறவியில் பெற்ற நன்மை தீமைகளை அதன் அளவை தெரிவிக்கும் பாவம், தமிழ் மொழியில் தேர்ச்சி, மந்திரங்களை அறியும் திறமை, உயர் கல்வி பெரும் தகுதி, அறிவாற்றல், அனுபவ அறிவு, சொற்பொழிவு செய்யும் திறமை, கதாகாலட்சேபம் செய்யும் திறமை, பெண்களுக்கு கர்ப்பம் தரிக்கும் தகுதி, தாத்தாவின் நிலை, மந்திர உபதேசம், இவற்றை குறிக்கும். குறிப்பாக புத்திர பாவம், பூர்வ புண்ணிய பாவம் எனப்படும்.
  • குருவையும் 5 ஆம் பாவத்தையும் அறிந்து குழந்தை செல்வத்தை அறியலாம்.
  • புதனையும் 5 ஆம் பாவத்தையும் அறிந்து கல்வி பெறும் தகுதி, ஆன்மீக சிந்தனை மந்திரங்கள் கற்பது, உபதேசிப்பது, பிரார்த்தனை செய்வது இவைகளை அறியலாம். சொற்பொலிவாற்றும் தகுதி, கதாகலாட்சேபம் செய்யும் வாய்ப்பு இவைகளை அறியலாம்.

ஆறாம் பாவம்

ஒருவருக்கு ஏற்படும் வியாதி - அதனால் ஏற்படும் பாதிப்பு, பகைவர்களால் ஏற்படும் துன்பம், ஆயுதங்களால் ஏற்படும் ஆபத்து, காயங்கள், தாயின் உறவினர்களுடன் ஏற்படும் வழக்குகள், சண்டையிடுதல் யுத்தம் செய்தல், வீண் வம்பிற்கு செல்லுதல், திருடர்களால் ஆபத்து, பொருட்கள் களவாடப்படுதல், தண்ணீரால் ஆபத்து, பெண்களால் உண்டாகும் வீண் வம்புகள், அதனால் அடையும் துன்பம், பாம்புகளால்-விஷத்தால் ஆபத்து, சந்தேகம், சோம்பேறித்தனம், ஒருவரை தூசித்தல், பாவமான காரியங்களை செய்தல், நோய்,. சிறைபடுதல், உயர் பதவி பெறுதல், கால்நடைகளை பற்றி அறிதல் இவை ஆறாம் பாவம் குறிக்கும் காரகங்களாகும்.

ஏழாம் பாவம்

திருமணத்தைக் குறிக்கும் பாவம். ஆண்களுக்கு மனைவியை பற்றியும், பெண்களுக்கு கணவரை பற்றியும் அறிவிக்கும் பாவம். திருமணம் நடைபெறும் காலம், மனைவி, கணவன், ஆயுள் சுற்றுப்புற சூழ்நிலை, கூட்டு வியாபாரம், திருமணத்தால் ஏற்படும் சுகம், மகிழ்ச்சி, சிற்றின்பம், துணி வியாபாரம், அரசாங்கத்தில் ஏற்படும் கவுரவம், பட்டம், பதவி, சன்மானம், தறி நெய்தல், பவர் லூம், சிறிய பஞ்சு மில், எந்த பொருளையும் வாங்கி விற்கும் கமிஷன் தொழில், தரகர் தொழில் இவற்றை குறிக்கும். களத்திர ஸ்தானம் எனப்படும்.

எட்டாம் பாவம்

ஒருவரது ஆயுளை தெரிவிக்கும் பாவம். யுத்தத்தில் ஆயுதங்களால் காயம் ஏற்படுதல், உயர்வான இடத்தில இருந்து விழுவதால் ஏற்படும் ஆபத்து, மலை மீள் இருந்து விழுதல், நீங்காத வியாதிகளால் ஏற்படும் துன்பம், இடையூறுகள், அவைகளால் ஏற்படும் மனசஞ்சலம், நீங்காத பகையால் ஏற்படும் ஆபத்துகள், வீண் அலைச்சல், செய்ய தகாத காரியங்களை செய்தல், அதனால் ஏற்படும் துயரம், கருத்து மோதல்கள், அஞ்ஞான வாசம், அதிகமாக ஏற்படும் வீண் செலவுகள், மரணம் இவைகளை தெரிவிக்கும் பாவம். இது 10 ஆம் பாவத்திற்கு (ஜீவன பாவம்) 11 ஆம் பாவமாகும் (லாப ஸ்தானம்). இதில் உள்ள கிரகங்களில் தசா புக்தி அந்தரங்களில் தொழில் முறையில் யோகத்தை, லாபத்தை தரும்.

ஒன்பதாம் பாவம்

இந்த பாவம் பாக்கிய ஸ்தானம் எனப்படும். சென்ற பிறவியில் செய்த புண்ணியத்தை அனுபவிக்கும் பாவம். பாவாதி பாவம் என்ற விதிப்படி 5 ஆம் பாவத்திற்கு 5 ஆம் பாவமே 9 ஆம் பாவம். தான தர்மம் செய்யும் குணம், திருகோவில்களை கட்டும் பணியில் ஈடுபடுதல், அவைகளை புணருத்தாரணம் செய்தல், கும்பாபிஷேகம் செய்த போன்ற திருப்பணிகளில் ஈடுபடும் யோகம், ஆன்மீக உணர்வு, அயல்நாடு செல்லும் வாய்ப்பு, அங்கு பெறும் பணி,தொழில்கள், அவைகளால் பெறும் லாப-நஷ்டம், நன்றியுணர்வு இவைகளை தெரிவிக்கும் பாவம். தர்மம் என்பது கேட்டு கொடுப்பது தானம் என்பது கேட்காமல் கொடுப்பது, அறம் என்பதை 32 வகைகளில் செய்யலாம் என கூறியுள்ளார்கள்.
தானத்திலே சிறந்தது அன்னதானமும், கல்வி தானமுமாகும். பசித்தோர்க்கு உணவு கொடுப்பது சிறந்த தானமாகும். ஏழை குழந்தைகளுக்கு கல்வி பெற உதவி செய்வதும் சிறந்த தொண்டாகும். வசதி படைத்தோர் அவரவர் தகுதிக்கேற்ப தானதர்மம் செய்வதை உணர்த்தும் இடமாகும். மனித நேயமுடையவர்களா, ஜீவகருண்ய சீலரா என்பதையும் தெரிவிக்கும் இடம்.

பத்தாம் பாவம்

பணியாற்றுதல், தொழிலால் பெறும் லாபம், அதனால் பெறும் புகழ், உயர் பதவி, அரசாங்க கவுரவம், புகழ், பட்டம், பதவி, அரசியலில் ஈடுபாடு, அதில் பெறும் புகழ், அரசாளும் யோகம், தெய்வ வழிபாடு, உணவில் ஏற்படும் ஆர்வம், சுவை, சுவையான உணவு கடிக்கும் தகுதி, இரவாபுகழ் பெறும் தகுதி இவைகளை உணர்த்தும் பாவம். தொழில் ஸ்தானம், கர்ம ஸ்தானம், ஜீவன ஸ்தானம் எனப்படும்.

பதினோராம் பாவம்

மூத்த உடன்பிறப்புக்களை பற்றியும், சேவை செய்யும் நிலை, இளைய மனைவி (இரண்டாம் திருமணத்தை குறிக்கும்), செய் தொழில், தொழிலி கிடைக்கும் லாபம், பயிர் தொழில், குதிரை, யானை இவைகளை வளர்த்தல், பராமரித்தல், கால்நடை வளர்ப்பு, அறிவாற்றல், மன அமைதி பெறுதல், நண்பர்கள் அமையும் நிலை,அவர்களால் பெறும் நன்மைகள், மாப்பிள்ளை மருமகள் இவர்களால் பெறும் நன்மைகள், லாபங்கள், உதவிகள், வாகன யோகம் இவற்றை குறிக்கும் பாவமாகும். துன்பங்கள், துயர்கள் தீர்ந்திடும் நிலை ஆடை இவைகளையும் குறிக்கும்.

பன்னிரெண்டாம் பாவம்

அந்நிய நாட்டில் அமையும் தொழில், உத்தியோகம், செலவினங்கள், செலவு செய்வதால் ஏற்படும் சுகம், சயன சுகம், விவசாயம், தியாக மனப்பான்மை, யாகம் செய்தல், மறுமையில் கிடைக்கும் பேறு, மனைவி அல்லது கணவர் அமையும் இடம், அனவசிய செலவுகள், சிறைபடுதல், நிம்மதியான தூக்கம், தூக்கமின்மை, இல்லற சுகம், பெண்களுடன் ஏற்படும் தாம்பத்திய சுகம் இவைகளை குறிக்கும். மறுபிறவி மரணத்திற்கு பிந்தைய நிலை இவற்றையும் குறிக்கும். குறிப்பாக விரய பாவம் எனப்படும். ஒவ்வொரு பாவத்திற்கும் அதற்கு 12 ஆம் பாவமே அழிவு பாவமாகும்.